அசுரன் 107
அடுத்த ஒரு வாரமும் கடந்தது… இந்த வாரம் முடிவில் கணவன் வந்து விடுவான் என்று ஆவலாக காத்துக் கொண்டிருந்த அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது…
இப்பொழுதெல்லாம் அவனால் சரியாக போன் கூட பேச முடிவதில்லை… உள்நாட்டு பிரச்சினை, போர் சூழல் என்று அவனுடைய வேலைகள் இழுத்துக் கொண்டே சென்றன… அவனுடைய கஷ்டத்தை மூளை புரிந்து கொண்டாலும் இதயம் ஏற்க மறுக்கிறது… இதோ ஐந்து நாள் நான்கு நாள் மூன்று நாள் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்தி இறுதியாய் இன்று வந்து விடுவான் என்ற நம்பிக்கையில் இருக்க மீண்டும் ஒரு வாரம் கால தாமதமாகும் என்று சொல்லிவிட்டான்.. அதற்கு மேல் எதுவும் பேசுவதற்கில்லை என்று கோவத்தில் போனை வைத்து விட்டாள்… அவருக்கும் என்ன பாக்கணும்னு ஆசை இருந்தா வரட்டும் இல்லனா அங்கேயே இருக்கட்டும் நம்ம எதுக்கு சும்மா கெஞ்சிக்கிட்டே இருக்கணும் என்று கோபம் வேறு மூக்குக்கு மேல் வந்தது…
அவளின் பட்டமளிப்பு விழாவிற்கும் வரும் சூழ்நிலை இல்லை என்று கூறி விட்டான் விக்ரமிடம் அழைத்துப் போக சொல்லி கூறியிருந்தான்… அவன் அதை சொன்ன நாளிலிருந்து அவனுக்கு வீடியோ கால் பண்ணுவதில்லை… ஆடியோ கால் மட்டுமே அதுவும் அவளாக பண்ணுவதில்லை…
என்னடி புருஷனை மறந்துட்டியா ஒரு போன் கூட பண்ண மாட்டேங்குற…
இல்ல உங்களுக்கு வேலை இருக்கும் எதுக்கு தொந்தரவு பண்ணனும் தான் போன் பண்றது இல்ல… வேலைய முடிச்சுட்டு டைம் இருந்தா என்கிட்ட போன் பேசுங்க… இல்லனா அதுவும் வேணாம்.. என்று விட்டேத்தியாக பதில் கூறுவதில் தெரிந்தது அவளின் கோபம்…
அடுத்த வாரம் கட்டாயம் வந்துருவேன் டி கவர்மெண்ட்ல நிறைய விஷயம் போயிட்டு இருக்குமா… அதனாலதான் லேட் ஆகுது என்று அவன் தன் பக்கம் விளக்கத்தை மற்றொரு முறை கூற…
அது ஒன்னும் பிரச்சனை இல்லங்க… நீங்க எல்லா பிரச்சனையும் முடிச்சிட்டு.. சாவகாசமா வாங்க.. நல்ல டைம் எடுத்து அடுத்த வருஷம் கூட வாங்க… உங்க பொண்டாட்டி ஏன்?னு ஒரு வார்த்தை கேட்க மாட்டா… உங்கள நினைச்சுகிட்டு ஒருத்தி கிறுக்கி மாதிரி சுத்திக்கிட்டு இருக்க போறா…. அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை… நீங்க போய் நிம்மதியா வேலைய பாருங்க… இப்போ நீங்க போன் பேசிக்கிட்டு இருக்க பத்து நிமிஷம் கூட உங்க வாழ்க்கையில வீணாக்காதீங்க… மேக் இட் யூஸ்புல்…
என்று கூறிவிட்டு அவள் கோபத்தில் மூச்சிரைக்க…
அடேங்கப்பா.. பயங்கர கோவத்துல இருப்பா போல… இந்த மூச்சுவாங்குறா… பூனை குட்டி மாதிரி தலைய தலைய ஆட்டுவா… இப்போ இந்த பேச்சு பேசுறா… இப்போ கிளம்பி போனா கூட.. அவளை சமாதானப்படுத்த இன்னும் ஒரு மாசம் ஆகும் போல.. உன் பாடு கொஞ்சம் கஷ்டம் தான் ஆதி… என்று மனதுக்குள் புலம்பி தள்ளினான்…
அவன் மேல் இருந்த எதிர்பார்ப்பு தான் ஏமாற்றமாய் மாறி கோபமாய் உருவெடுத்துள்ளது…. அது அவனுக்கும் புரிகிறது…
அவளை சுற்றி அனைவரும் இருக்கிறார்கள்… ஆனால் அவன் இடத்தை நிரப்ப யாரால் முடியும்… தலைவன் பிரிவால் தலைவி பசலை நோயால் வாடி உடல் இளைத்து துரும்பானாள்..
இப்பொழுதெல்லாம் அவள் ஆடியோ காலிலும் பேசுவதில்லை… அவன் போன் செய்தாலும் நிராகரித்து விட்டு… “வேலையை முடித்துவிட்டு வாருங்கள் நேரில் பேசிக் கொள்ளலாம்”… என்று மெசேஜ் மட்டும் செய்து விடுவாள்..
அதைப் படித்து மனதிற்குள் நொந்து கொள்வான்…
சரியான பிடிவாதக்காரி… கொஞ்சம் கூட இரக்கம் காட்ட மாற்ற…
பட்டமளிப்பு விழா நாளும் வந்தது…
முதல் நாள் இரவு இருந்தே ஒருவேளை.. தனக்கு முன் சர்ப்ரைஸ் ஆக வந்து நிப்பானோ.. என்று எண்ணி முதல் நாள் இரவு இருந்தே அவனை எதிர்பார்க்கத் தொடங்கினாள்… இரவு எல்லாம் தூக்கம் இல்லை.. மன்னவன் நினைப்புதான்…
காலையில் காலிங் பெல் அடித்ததும்… வேகமாய் ஓடிப்போய் கதவை திறந்தாள்… உங்களுக்கு சார் டிரஸ் ஆர்டர் பண்ணி இருந்தாரு மேடம் என்று கொடுத்துவிட்டு போனான் ஒரு பையன்….
அடுத்த சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க… சிட்டாய் பறந்து வந்து கதவை திறந்தாள்…
விக்ரம் நின்றிருந்தான்…
மலரை விழாவிற்கு அழைத்து சென்றான்…
அண்ணா அவர் உங்க கிட்ட ஏதாவது வரேன்னு சொன்னாரா…
இல்லம்மா அடுத்த வாரம் வரேன்னு சொல்லி இருக்கான்.. இன்னும் கொஞ்சம் வேலை முடிய வேண்டியது இருக்கு அப்படின்னு சொன்னான்…
இந்த பதிலை கேட்டதும் முகத்தில் இருந்த ஆர்வம் முழுவதும் வடிந்தது.
ஏன் மலர் உன்கிட்ட எதுவும் சொல்லலையா…
இல்லன்னா அதுதான் என்கிட்டேயும் சொன்னாரு… ஏனோ விம்மி அழவேண்டும் போல் இருந்தது அவளுக்கு..
ஏன் மலர் முகம் ஒரு மாதிரி இருக்கு எதுவும் பிரச்சனையா… விக்ரம் கேட்க..
அதெல்லாம் ஒன்னும் இல்லன்னா.. என்று கூறி தலையசைத்தாள் மலர்…
கல்லூரிக்குள் நுழைந்து விட்டனர்…
முக்கிய அரசியல் பிரமுகர்கள், விஐபிகள், ஆளுநர் அனைவரும் வர இருப்பதால்… கல்லூரிக்குள் கெடுபிடி அதிகம்… இன்னும் சிறிது நேரத்தில் கல்லூரியின் கதவும் மூடப்படும்… அதன் பிறகு யாரும் அனுமதி இல்லை…
வா மலர் உள்ள போலாம் ஏன் கதவையை பார்த்துட்டு இருக்க யாராவது வர வேண்டியது இருக்கா… என்று கேட்க… இல்ல ணா…கொஞ்ச நேரம் இங்க இருப்போம் அதுக்கப்புறம் உள்ள போலாமே… என்று வாயில் கதவை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்…
பின்னாலிருந்து இரண்டு கைகள் வந்து அவள் கண்ணை மூடியது…
முக முழுவதும் புன்னகையாக… எனக்கு தெரியும் நீங்க வருவீங்கன்னு… என்று கூறியபடி கையை விலக்கி விட்டு அவள் ஆர்வமாய் திரும்பி பார்க்க…
சர்ப்ரைஸ்… என்று கவி பிரியா இரண்டு கைகளையும் பிரித்து கத்தினாள்…
ஹே… கவி… நீயா… முகத்தில் இருந்த புன்னகை அப்படியே மங்கியது…
என்ன அக்கா நீயானு? சலிப்பா கேக்குற… நான் வந்தது உனக்கு சந்தோஷம் இல்லையா…
ஏய்.. ச்சீ… ஏதாவது ஒன்னு நீயா நினைச்சுக்கிற.. நீ வந்தது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம்… இப்பொழுதுதான் நார்மல் முகத்திற்கு வந்தாள்… அம்மா நல்லா இருக்காங்களா? பிரபு வந்திருக்காரா? குட்டி பாப்பா என்ன பண்றா? என்று கேள்விகளை அடுக்கினாள்…
அம்மாவும் தான் வந்திருக்காங்க… பிரபுவும் குட்டி பாப்பாவும் வந்து இருக்காங்க எல்லாம் அங்க உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க வா போலாம்… என்று கையைப் பிடித்து இழுக்க..
கொஞ்ச நேரம் பொறு…. இந்த கேட் பூட்டுற வரைக்கும் மட்டும் இங்க இருந்து பாத்துட்டு போயிரலாம்…
ஏன்கா.. யாராவது வரணுமா…
அது… அ… ஒரு ப்ரொபசர் வருவாரு அவருக்காக தான் காத்துகிட்டு இருக்கேன்… கொஞ்ச நேரம் இரு…
மலரின் கண்கள் வாயில் கதவை விட்டு அகலவில்லை…
அனைவரும் ஆடிட்டோரியத்தில் ஒன்று கூடுமாறு அழைப்பு வந்து கொண்டே இருந்தது மைக்கில்….
சரி மலர் நம்ம போலாம் வா என்று விக்ரம் அழைத்து செல்ல பார்க்க.. வாயில் கதவும் மூடும் நேரம்… உள்ளே நுழைந்தது ஒரு ரோல்ஸ் ராயல்ஸ் கார்…
அதைப் பார்த்த பின் அந்த இடத்தை விட்டு நகர்வாளா என்ன… வந்துட்டாரு… அவர் தான் நினைக்கிறேன்… என்று கூறியவரே… அவள் அந்த காரை நோக்கி வேகமாய் நடக்க ஆரம்பிக்க…
மலர் எங்க போற? ஆடிட்டோரியம் இந்த பக்கம்… என்று விக்ரம் கத்த…
அதெல்லாம் அவள் காதில் எங்கு விழுந்தது… கண்கள் முழுவதும் அந்த காரின் மேல் தான்… ஓட்டமும் நடையுமாக.. அந்தக் காரை நெருங்கும் நேரம்… உள்ளே இருந்து ஒரு பூட்ஸ் அணிந்த கால் வெளியே வந்தது… மலருக்கு இதயத்துடிப்பு எகிறியது… தனது கோட்டை சரி செய்தபடியே… ஒரு விஐபி ஒருவர் இறங்கி.. கருப்பு நிற உடை அணிந்த பவுன்சர்களுக்கு மத்தியில்.. அழகாய் நடந்து சென்றார்.. போகும் அவரையே கண்களில் ஏமாற்றம் நிரம்பி பார்த்துக் கொண்டு இருந்தாள் மலர்…
பின்னால் அவளை தொடர்ந்து வந்த விக்ரம்… என்ன மலர் அவரை பார்த்துட்டு இருக்க… உனக்கு தெரிஞ்சவரா என்று கேட்க…
இல்லை என்று தலையசைத்தாள்…
அவர பாக்க தான் இவ்வளவு வேகமா ஓடி வந்தாயா… என்ற வினவ…
இல்லண்ணா… நான் வேற யாரோனு நினைச்சிட்டேன்… என்று தோய்ந்து போன குரலில் கூறியவள்.. இறுதியாய் ஒரு முறை சாத்தியிருந்த வாயில் கதவை பார்த்துவிட்டு… பெருமூச்சுடன்… விக்ரமுடன் இணைந்து நடந்தாள்…
மலரின் மனநிலை புரியாமல்… ஊரிலிருந்து வந்த தன்னிடம் சரியாக கூட பேசவில்லை மலர் என்று… மூஞ்சியை ஒரு பக்கம் தூக்கி வைத்துக் கொண்டாள் கவி…
ஆடிட்டோரியத்தின் உள் வந்தவள்.. தனது முதல் வேலையாக தனது போனை எடுத்து ஏதாவது மெசேஜ் அல்லது கால் வந்து உள்ளதா என்று பார்த்தாள்… சிறிது நேரத்திற்கு முன் ஆதி இடம் இருந்து “சாரி” என்று மெசேஜ் வந்து இருந்தது… அதை ஒரு விரக்தியுடன் படித்துவிட்டு.. அலைபேசியை தன் கைப்பையில் வைத்து விட்டு.. வாசுகி, பிரபு, குட்டி பாப்பா என அனைவரிடமும் நலம் விசாரிக்க ஆரம்பித்தாள்…
தம்பி எங்கம்மா.. என்று வாசுகி விசாரிக்க…
அவர் வெளிநாடு போயிருக்காருமா… அடுத்த வாரம் வந்துருவாரு…
ஆனால் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே மிச்சம் இருக்கும் ஒரு துளி நம்பிக்கையில் அவளுடைய கண்கள் ஆடிட்டோரியத்தின் வாயிலை தொட்டு மீண்டது… ஏனோ அவள் மனம் இந்த நிமிடம் அவன் அருகில் இல்லாததை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது…
சுற்றி இருந்த அனைவரும் ஏதேதோ கேள்விகளைக் கேட்க… பட்டும் படாமல் பதில்களை சொல்லி கொண்டு இருந்தாள் மலர்.
விழா இனிதே ஆரம்பமானது…
கருப்பு நிற அங்கி அணிந்து…
கண்களில் சந்தோஷத்துடன் ஆர்வத்துடனும் மாணவர்கள் தங்களது பட்டங்களை பெற்றுக் கொள்ள…
தாங்கள் வைத்த மொத்த நம்பிக்கையின் உருவமாக தங்களின் பிள்ளைகள் வாங்கும் பட்டங்களை கண்ணில் பெருமிதத்துடனும் ஆனந்தத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் பெற்றவர்கள்..
அங்கு பட்டங்கள் வாங்கும் மாணவர்கள் ஒவ்வொருத்தருக்கும் பின்னும் ஒரு குடும்பத்தின் கனவு ஒரு பரம்பரையின் கனவு ஒரு தலைமுறையின் கனவு என வெவ்வேறு காரணங்கள் நிரம்பி இருந்தது…
மலரை கருப்பு அங்கி தொப்பியுடன் பார்த்த வாசுகி…
உங்க அப்பாவுக்கு இதை பார்க்க கொடுத்து வைக்கலையே மலரு…
அவர்தான் உன்னை படிக்க வச்சு அழகு பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாரு… கடைசி வரைக்கும் அவருக்காக அவர் எதுவுமே பண்ணிக்கல… இந்த நேரத்துல உன் கூட இல்லாம போயிட்டாரே… என்று கண்கள் கலங்க…
நீங்க ஏம்மா அழுகுறீங்க… அப்பா இந்த கூட்டத்தில் இருந்து மலர பாத்துட்டு தான் இருப்பாரு.. என்று விக்ரம் ஆறுதல் கூறினான்…
மிஸ்.தேன்மலர் சந்திரன் என்று அவளுடைய பெயர் வாசிக்கப்பட… நம்பிக்கையாய் எழுந்து சென்று தனக்கான பட்டத்தை பெற்றுக் கொண்டாள்.. விக்ரம், கவி ,பிரபு ஆகியோர் கைதட்டி ஆரவாரம் எழுப்பினர்…. வாசுகி குழந்தையை கையில் வைத்தபடி கண்கள் கலங்கினார்… மலரின் கண்கள் மட்டும் வாயில் கதவின் அருகில் தான் இருந்தது…
பட்டத்தை பெற்றுக் கொண்டு அவள் நகர போக…
ஒரு நிமிஷம் தேன்மலர்.. இறுதி ஆண்டிற்கான… உங்களது ப்ராஜெக்ட்… சிறந்த ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது… அதற்கான பதக்கத்தையும், சான்றிதழையும் சிறப்பு விருந்தினரிடம் பெற்றுச் செல்லுங்கள்… என்று அறிவிக்கப்பட…
கீழே இருந்தவர்கள் மீண்டும் ஆரவாரமாய் கைதட்ட… அவர்களைப் பார்த்து புன்னகைத்தாள் மலர்.
சிறப்பு விருந்தினர் வந்து, பதக்கத்தை அவள் கழுத்தில் அணிவிக்க… பணிவுடன் தலை குனிந்து பெற்றுக் கொண்டாள்…
சான்றிதழை வழங்க…
கூட்டத்தைப் பார்த்தபடி அவள் வாங்க போக…
சான்றிதழ் கைக்கு அகப்படவில்லை…
என்னை நிமிர்ந்து முகத்தை பார்த்தால்தான் சர்டிபிகேட் கொடுப்பேன்… என்று ஒரு குரல் கேட்க…
காடை முட்டை கண்… கோழி முட்டை அளவு விரிந்தது…
அப்பொழுதுதான் எதிரே நின்றிருந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்… சொல்லப்போனால் அந்த குரலை கேட்ட பிறகு தான்… இவ்வளவு நேரமும் அவுட் ஆப் போக்கஸ் இல் இருந்த மொத்த ஆடிட்டோரியமும் போக்கஸ் ஆனது…
வேறு யாராய் இருக்க முடியும்?…
ஆம் அவனே தான்… அவளின் தேவா…
அவள் நினைப்பை பொய்யாக்காமல் வந்து விட்டான்…
அவனைக் கண்டதும், முகம் மலர்ந்து, கண்கள் சிவந்து… அவளால் பேச முடியவில்லை. தொண்டையை ஏதோ அடைக்க, கண்கள் தானாகவே குளமானது. “நீங்க… நீங்க எப்படி? இப்போ…?” என்று அவள் தடுமாறியபோது,
அவளைப் பார்த்து புன்னகை முகமாய் கண்ணை சிமிட்டியவன்… ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல… அழறீங்க.. என்றான்.
கண்ணில் நீர் வழிய… புன்னகையுடன்…உங்க கண்ணு கூட தான் வேர்த்து இருக்கு… என்றாள்…
உங்களோட சான்றிதழ் என்று அவன் நீட்ட… தலை நிமிர்ந்து அவன் கண்ணை பார்த்தபடி… வெற்றிபுன்னகையுடன் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டு… கீழே இறங்கி… தன் அன்னையிடம் காண்பித்து ஆசிர்வாதம் வாங்கியவள்..
வேகமாய் ஓடி சென்று குதுகாலத்தில் கவிஇஇஇ…. என்று தங்கையை கட்டி அணைத்து… கன்னத்தில் முத்தமிட்டு… எப்ப வந்த… எப்டி வந்த… எனக்காக வந்தயா.. தேங்க்ஸ்… என்று மலர் துரு துரு என பேச…
ஆங்… என விழித்தாள் கவி…
என்ன இவ்வளவு நேரம் கழிச்சு என்னை இப்பதான் பாக்குற மாதிரி நடந்துக்குறா… இவ்வளவு நேரம் “உங்களை எல்லாம் யார் வர சொன்னா அப்படிங்கற மாதிரி மூஞ்சிய வச்சிருந்தா ” என்று நடப்பது ஒன்னும் புரியாமல் முழித்தாள்…
கங்ராட்ஸ் டா… என்று வாழ்த்திய விக்ரமின் கையைப் பிடித்து அண்ணா தேங்க்ஸ் அண்ணா என்னை கூட்டிட்டு வந்ததுக்கு… என்று தனது மகிழ்ச்சியை தெரிவிக்க..
குட்டி பாப்பாவை தூக்கி வைத்து முத்தம் மழை பொழிந்தாள்.. ஆனால் கண்கள் என்னமோ அவள் கணவனை தான் சுற்றி வந்தது..
தாடி மீசையை டிரீம் செய்திருந்தான்.. புது ஸ்டைலில் ஹேர் கட் பண்ணி இருந்தான்.. அது அவனை மேலும் வசிகரமாக காட்டியது… நாம தான் ஆள பாக்காம நொந்து போய் இருக்கோம்… அவர் ஜம்முனு சும்மா புது மாப்பிள்ளை மாதிரி இருக்காரு… என்று மனதில் நினைத்துக் கொண்டாள்… “காணாததை கண்ட மாதிரி திங்காத” என்பது போல் அவள் கணவனை கண்களாலேயே “லபக்” என விழுங்கிக் கொண்டாள்… சுற்றி இருக்கும் யாரும் கண்ணுக்கு தெரியவில்லை…
அங்கிருந்த நால்வருக்கும் எதுவும் புரியவில்லை… அரை மணி நேரத்திற்கு முன்னே இருந்த மலருக்கும்.. இப்பொழுது இருக்கும் மலருக்கும்… குறைந்தது 100 வித்தியாசங்கள் கண்டுபிடித்து விடலாம்…
மேலும் சில மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி விட்டு… கீழே இறங்கினான் ஆதி…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️