அசுரன் 108

அசுரன் 108

 

ஊரிலிருந்து வந்த அனைவரும் ஆதியின் வீட்டை தான் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்…

 

அக்கா வீடு ரொம்ப நல்லா இருக்கு அக்கா… 

 

தன் மகள் ஒரு நிறைவான வாழ்க்கையை தான் வாழ்கிறாள் என்று..  வாசுகிக்கு பெரும் நிம்மதி..

 

மூன்று பெண்களும் சேர்ந்து சமையல் செய்தனர்… 

 

ஊரில் நடந்த அத்தனை கதைகளையும் வளவளத்தாள் கவி… சிரித்தபடியே கேட்டுக் கொண்டிருந்தாள் மலர்…

 

மாமா பெரிய பணக்காரங்கன்னு சொன்னாங்க நான் வீடு ரொம்ப பெருசா இருக்கும் நினைச்சேன்…

 

இது அவர் மட்டும் தங்குறதுக்காக வாங்கின வீடு கவி…

 

பரம்பரை வீடு தனியா இருக்கு… அங்க எப்பயாவது தான் போயிட்டு வருவாரு… 

 

ஓஹோ… என்று உதட்டைப் பிதுக்கினாள்…

 

அக்கா இன்னைக்கு நீ எங்க கூட தான் வந்து படுக்கணும்… என்று வாசுகி,கவி, குட்டி பாப்பா மலர் நால்வரும் ஒரு அறையில் தங்கி கொண்டனர்…

 

மலரின் குடும்பத்தை, கல்லூரியில் பார்த்து பேசி விட்டு விக்ரமுடன் காரில் அனுப்பி வைத்தான்… அவன் அலுவலக வேளையாக கிளம்பி விட்டான்…

 

அவனைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தாள்…

 

நெடுநேரம் கழித்து வீடு திரும்பினான் ஆதி…

 

வாசலில் தான் காத்துக் கொண்டு இருந்தாள்..  சோர்வாய் காரை விட்டு இறங்கியவனின் முகம் அவளை கண்டதும் கொஞ்சம் தெளிந்தது…

 

அவனை எதிர்பார்த்து தான் உட்கார்ந்து இருக்கிறாள் என்று தெரிந்தும்… என்னடி இங்க உக்காந்து இருக்க..  என்று கேட்க…

 

சும்மா காத்து வாங்கிட்டு இருந்தேன்… 

 

தனது பேண்ட்டை மேலே ஏற்றிவிட்டு கையில் வைத்திருந்த கோட்டை அவளிடம் கொடுத்துவிட்டு வாசல் படியிலேயே அவளுடன் அமர்ந்தான்…

 

பின்னால் திரும்பி வீட்டை ஒரு நோட்டம் விட்டுவிட்டு…

வேகமாய் அவன் அருகே நகர்ந்து வந்து அவனது கைக்குள் கைகோர்த்து தோளில் சாய்ந்து கொண்டாள்… 

 

தனது தோளில் இருந்த அவள் தலையில் முகம் வைத்து உச்சி முகர்ந்தவன்… எல்லாரும் என்ன பண்றாங்க? என்றான்…

 

எல்லாரும் படுத்து இருக்காங்க.. யாரும் தூங்கி இருக்க மாட்டாங்க பேசிகிட்டு இருப்பாங்க… 

 

ம்ம்… “உங்க அம்மா என்ன சொன்னாங்க…” ஆதி மெதுவாகக் கேட்க, அவள் அவன் மார்பில் இன்னும் சாய்ந்து கொண்டாள்.

 

“பட்டம் வாங்குனத பாத்துட்டு ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.. அப்பா இல்லனு ரொம்ப கவலை பட்டாங்க…” என்று சொல்லும்போதே தேன்மலரின் குரல் சற்றே தழுதழுத்தது.

 

ஆதி அவளது கையை மென்மையாக வருடி, “ஏன்… அவங்களுக்கு மட்டும் தான் கவலையா?.. உனக்கு கவலையா இல்லையா… நீ உங்க அப்பாவ மிஸ் பண்ணலயா..” என்று அவள் முகம் பார்க்கத் தவித்தான்.

 

அவளோ கலங்காமல், “எனக்கு கவலையா இல்லப்பா.. நான் தான் எங்க அப்பாவை பார்த்தனே” என்றாள் அமைதியாக. அவளது அமைதி ஆதியை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

“என்ன… உங்க அப்பாவ பாத்தியா எங்க? எப்படி.. அவர் வந்ததா நீயே கற்பனை பண்ணிட்டியா” என்றான் குழப்பத்தோடு.

 

“ம்ஹும்… அவரை நேர்ல பார்த்தேன்..” என்றாள் தீர்க்கமாக. 

 

எங்கடி என்னும் விதமாக அவளது முகத்தை ஆதி திரும்பிப் பார்க்க…

 

அவளும் பொறுமையாய் நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தவள்… பார்த்தேன்..  உணர்ந்தேன்… இந்த கண்ணுல… இந்த முகத்துல.. என்று கூறி ஒரு கணம் நிறுத்தியவள்… ஸ்டேஜ்ல என்ன பாக்குறப்ப அப்படி ஒரு பெருமை… ஏதோ உங்க குழந்தை உங்க கண்ணு முன்னாடி ஜெயிக்கிற மாதிரி… என்று ஆதியின் முகத்தை தனது கைகளால் வருடினாள்… அந்த ஸ்பரிசத்தில் ஆயிரம் கதைகள் இருந்தது.

 

அவளின் நெற்றியை முட்டியவன்..  என்னடி என்ன ஃபீல் பண்ண வைக்கலாம்னு பாக்குறியா.. என்று கேட்க, அவனது குரலில் ஒரு நெகிழ்ச்சி இழையோடியது.

 

இனி தான் வைக்கணுமா?… அதான் கண்ணு வேர்த்தத ஸ்டேஜிலேயே பார்த்தேனே.. என்று அவள் கிண்டலாகச் சொல்ல, ஆதி பிடிபட்டுப் போன திருடனைப் போலச் சிரித்தான்.

 

என்ன ரொம்ப தேடின போல… அப்படி என்னடி நம்பிக்கை… பக்கத்துல இருந்தவங்கள பாக்காம… கடைசி வரைக்கும் கேட்டு வாசலை பார்த்துக்கிட்டே இருந்த…

 

மெலிதாய் சிரித்தவள்… “உன் தேவா கண்டிப்பா வருவான்”ன்னு என் மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு…

ஊருக்கு வரீங்கன்னு ஏன் என்கிட்ட முன்னமே சொல்லல… என்று செல்லமாக அவனது சட்டைப் பொத்தானைக் திருக்கிய படி கேட்டாள்.

 

லாஸ்ட் மினிட்ல தான் டிக்கெட் கன்ஃபார்ம் ஆச்சு… வரேன்னு சொல்லி ஒருவேளை வர முடியலன்னா ரொம்ப ஏமாந்து போவ அதனால தான் சொல்லல…

 

அவன் தோளில் சாய்ந்து அமர… கையை அவள் இடையின் ஊடு விட்டு தன்னுடன் இறுக்கி கொண்டான். 

 

இந்த முகத்தை பார்த்து பத்து நாளாச்சு போன்ல கூட முகத்தை காமிக்க மாட்டேன்னு சொல்லிட்ட இல்ல… அவ்வளவு பிடிவாதம்…  

 

என்னோட நிலைமை உங்களுக்கு சொன்னா புரியாது… நான் ஒரு நாள் உங்களை விட்டுட்டு இதே மாதிரி போறேன்… அப்ப தெரியும் என்னோட நிலைமை உங்களுக்கு… 

 

என்ன விட்டு எங்கடி போவ?..

 

யாருக்கு தெரியும்… ஆனா நீங்க தேடி வர முடியாத இடத்துக்கு போவேன்… 

 

அவள் சொன்னதை கேட்டு சுர்ரென்று கோவம் வந்துவிட்டது… அப்படி ஏதாவது எண்ணம் உன் மனசுல இருந்தா அதை இப்பவே அழிச்சிரு…  சாவடிச்சிடுவேன்… உன்னைய…

 

இப்ப எதுக்கு இவ்ளோ கோபப்படுறீங்க சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன்…

 

விளையாட்டுக்கு எது எது சொல்றதுன்னு ஒரு வெவஸ்தை இல்லையா…

 

சரி..  சாரி…. இனிமேல் இப்படி எல்லாம் பேச மாட்டேன்… என்று தனது தொண்டையைப் இருவிரலால்  பிடித்து படி சாரி கேட்டாள்.. 

 

பேசுறதெல்லாம் பேசிட்டு அப்பாவி மாதிரி மூஞ்சிய வச்சுக்கோ என்றான் எரிச்சலாய்…

 

சற்று விலகி அவனின் முகத்தைப் பார்த்தவள்..  அவன் கோப முகத்தை பார்த்து…

இப்ப எதுக்கு என்னை இப்படி திட்டுறீங்க… என்னை திட்றதுக்காகவே பிளைட் புடிச்சு  கிளம்பி வந்த மாதிரி இருக்கு… என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு…  

 

அவன் எதுவும் பேசவில்லை அமைதியாக இருந்தான்…

 

பின் சிறிது நேரம் அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள்… பேச்சை மாற்றி, இந்த ஹேர் ஸ்டைல் உங்களுக்கு அழகா இருக்கு..  என்றாள்…

 

ரொம்ப முக்கியம்…

 

பாரின் போயிட்டு வந்த உடனே கொஞ்சம் கலர் ஆயிட்டீங்க… முன்ன விட அழகா ஆயிட்டீங்க.. என்றாள் ஒற்றை கண்ணை அடித்தபடி.. 

 

கண்ணு வைக்காதடி…

 

அஹ்… நான் வைக்காம வேற யார் வைக்கிறதாம்… பொண்டாட்டி ரசிக்கனும் தானே அழகா வந்து இறங்கி இருக்கீங்க…

 

யார் சொன்னா… அங்க எனக்கு நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க… அதுல ஒருத்தி தான் இந்த ஹேர் ஸ்டைல் அழகா இருக்குன்னு கட் பண்ண சொன்னா… என்றான்.. இரு கைகளாலும் தனது தலை முடியை வருடியபடி…

 

நம்பி..ட்டோம்..  என்றாள் ஒரு மாதிரி…

 

நம்பாட்டி போ… ஒரு நாள் அங்கேயே ஒருத்தியை பார்த்து கல்யாணம் பண்ணி ரெண்டு புள்ளையோட வந்து இறங்குகிறேன் பாரு… அப்போ நம்புவ…

 

சூ.. ப்பர்… என்றாள்.. மெச்சுதலாய்   கைகளை அசைத்து.. தலையை ஆட்டி.. 

 

என்னடி நக்கலா… 

 

இல்ல எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு… ஹோட்டல் ரூமுக்கு டேட்டிங் னு சொல்லி ஒரு பொண்ணு கூட்டிட்டு போயி… ஒரு கிஸ் கூட குடுக்காம… குடு,குடுன்னு ஓடி வந்துட்டாராம்… அந்தப் பொண்ணே என்கிட்ட வாய் விட்டு சொல்லி புலம்புச்சு…. எனக்கே பாக்க பாவமா இருந்துச்சு…. என்று அவள் கவலைப்படும் பாவனையுடன் நக்கல் செய்ய.. 

 

அது சரி… எல்லாம் என் நேரம்… என்றான் தலையை  அசைத்தபடி…

 

அவனை விட்டு விலகி பூனை குட்டி போல் மெல்ல நகர்ந்தவள்… சற்று தூரம் போய்… தனது சேலையின் முந்தியை உதறி இடுப்பில் சொருகிக்கொண்டு..  இப்ப கூட பொண்டாட்டிய விட்டு ஒரு மாசம் பிரிஞ்சு இருந்தவரு… வாசப்படியில வந்து உட்கார்ந்துட்டு..  வாய பாத்துட்டு இருக்காரு…  இதைத்தான் சந்திரமுகி படத்துல சூப்பர் ஸ்டார் ஒரு டயலாக் சொல்லுவாரு..  

என்று அவள் ஆரம்பித்து தனது நாக்கை கடித்த படி சிரிக்க…

 

அவளின் நக்கல் பாவனையை பார்த்தவன்.. 

அடியே… உன்னை எல்லாம் சும்மா விட்டதே தப்புடி… என்று கூறியபடி அவன் வேகமாய் எழுந்து அவள் அருகே ஓடி வர… 

 

முடிஞ்சா என்ன பிடி எனும் விதமாய் சைகை செய்துவிட்டு ஓடினாள்…

 

ஆதி அவளை விரட்டி பிடிக்க பார்க்க… அவள் செடிகளுக்கு அந்தப் பக்கம் நின்று போக்கு காட்டினாள்… ஆதி இந்த பக்கம் நின்று இருந்தான்..  

 

ஒழுங்கா என் கையில சிக்கிரு… நானா எட்டிப் பிடிச்சேன் வை… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது… உங்க ஊர்ல இருந்து ஆள் வந்த உடனே என்ன பேச்சு பேசுற… 

உன்னை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடியே வேலைய முடிச்சு விட்டுருக்கணும் டி..  தப்பு பண்ணிட்டேன்… அதனாலதான் வாய் கொழுப்பு கூடிருச்சு…  

 

முடிச்சிருக்க வேண்டியதுதானே… யாரு வேணாம்னு சொன்னா.. என்று சீண்டினாள் அவனிடம் தப்பித்து ஓடியபடி…

 

ஏண்டி சொல்ல மாட்ட… முத்தம் கொடுத்த அன்னைக்கு… மிரண்டு போய் என்கிட்ட சத்தியம் வாங்கிட்டு தானே வீட்டுக்குள்ளேயே வந்த..  இன்னைக்கு பேசுவ…

 

நான் தான் அன்னைக்கு சோபால  எடுத்துக்கோங்கனு சொன்னேனே… என்று அவள் கூறவும்..

 

அன்னைக்கு தப்பிச்சிட்ட… இப்ப சிக்குவ பாரு… என்று 

நீண்ட கால்களை உடையவன் எட்டி ஒரே பிடியாய் அவளை பிடிக்கவும்… இருவரும் தடுமாறி மல்லிகை பந்தலின் அடியில் புல்தரையில் கீழே விழுந்து உருண்டனர்… தரையில் சிதறிய மல்லிகை எல்லாம் அவர்கள் மேனியில் ஒட்டிக்கொண்டது…

 

அவள் கீழே விழுக அவள் மேலே ஆதி விழுந்தான் அவள் மேல் முழு பாரத்தையும் போடாமல் இரண்டு கைகளாலும் தாங்கியபடி… 

 

அவன் செய்கையை பார்த்து சிரித்து.. அவனது சட்டை காலரை பிடித்து தன் மேல் இழுத்து போட்டாள்.  

 

ஏய்..  வெயிட்டா இருப்பேன் டி… தாங்க மாட்ட..  என்று கூறியபடியே அவள் மேலே “பொத்” என்று விழுந்தான்…

 

அவன் கழுத்தில் முகம் புதைத்து…  ஆழ்ந்து முகர்ந்தாள்.. 

 

என்னடி பண்ற… கூசுது…

 

ம்ம்…. மணக்குறீங்க… மயக்குறீங்க… என்றாள் மையலான குரலில்…

 

நான் இன்னும் குளிக்க கூட இல்லடி… பிளைட் ஏர்ர அவசரத்துல பெர்ஃப்யூம்  கூட போடல… காலையிலிருந்து செம ஒர்க் வேர்த்து போய் வந்து இருக்கேன்.. 

 

அதனாலதான் மணக்குறீங்க…. கலப்படம் இல்லாத என் புருஷனோட வாசனை செம கிக்கா இருக்கு… என்று கூறியபடி ஆழ்ந்து மூச்சு எடுத்தாள்…  அவன் வாசனையை… சுவாசம் முழுதும் நிரப்பியபடி… கண்ணை மூடி ஒருவித போதை நிலைக்கு உள்ளானாள். 

 

ம்ம்… இருக்கும்… இருக்கும்… என்று பொதுவாய் சொன்னாலும்… அவள் செய்கையை பார்த்து அவன் உடம்பு சிலிர்த்தது… என்பது உண்மைதான்… 

 

அவன் சட்டையை பிடித்திருந்த அவள் கையை மெதுவாய் விலக்கி எடுத்து… இப்ப பேசுடி… என்று பல்லைக் கடித்துக் கூறியவன்..

அவளின் இரண்டு கைகளையும் மேலே தூக்கி ஒரே கையினால் இறுக்கிப் பிடித்தான்… 

 

கீழே விழுந்ததில் அவள் சேலை விலகி… முன்னழகு… அவனை முட்டி நின்றது… அதை வில்லங்கமாய் ஒரு பார்வை பார்த்தவன்…

 

அவன் பார்வையை பார்த்தே… அவனின் எண்ணத்தை  புரிந்து கொண்டவள்…

தேவா வேணாம்… அப்படி பண்ணாதீங்க… வீட்ல கெஸ்ட் இருக்காங்க…

 

என்னடி வேணாம்..  இப்போ சொல்லு சூப்பர் ஸ்டார் என்ன சொல்லுவாரு… 

 

என்ன சொல்லுவாரு..  எனக்கு தெரியாதே… என்றாள் அப்பாவி போல்…

 

இப்ப தெரியும் பாரு… என்று கூறிவிட்டு… அவனுக்கு வாய்க்கு செழிப்பாய் அகப்பட்ட இடங்களில் எல்லாம் பல் தடம் பதிய கடித்து வைத்தான்… 

 

ஐயோ..  தேவா… ப்ளீஸ்… வேணாம் ஐயோ… வலிக்குது… அஹ்…  தேவா… வேணா… கூசுது…

 

அவன் வேலைகளுக்கு நடுவே… தலையை நிமிர்த்தி “பதில் சொல்லுடி விடுறேன்…” என்றான்.

 

சொல்றேன்…  யாமிருக்க பயமேன்னு சொல்லுவாரு… ஐயோ வேணா… ச்சீ… தேவா… ப்ளீஸ்…  என்று கத்திக் கொண்டிருந்தவள்… எப்பொழுது மோன நிலைக்கு சென்றாலோ… மெல்ல கண்களை மூடி… சிணுங்க ஆரம்பித்தாள்….  சிறிய மூச்சுரைப்புடன் தே.. வா… மெல்ல முனங்கலாய் மாறியது… கீழ் உதட்டை மெல்ல கடித்து தனது முணங்களை கட்டுப்படுத்தியவளை… பார்த்தவன்… சிரித்தபடி அவள் உதட்டை அவள் பற்களில் இருந்து விடுவித்து… தனது பற்களால் கவ்விக்கொண்டான்…  நிலவின் மெல்லிய வெளிச்சம் இறங்கி அவர்கள் இருவரையும் போர்த்திக் கொண்டது. வார்த்தைகள் இன்றி மௌனம் மட்டுமே அங்கே காதலைப் பேசிக் கொண்டிருந்தது.

 

பொதுவாகவே அவனது பஞ்சுமிட்டாயை இடைவெளி இன்றி சுவைப்பவன்… இன்று நீண்ட இடைவேளைக்குப் பிறகு கிடைக்கும்… மிட்டாயை விட்டு விடுவானா என்ன..  சப்பி… ருசித்து…  சுவைத்து… உறிஞ்சி… மென்று…. தின்று…  அவன் சொன்னது போல்… பஞ்சு மிட்டாய் தானோ… இளம் ரோஸ் நிறத்தில்… மென்மையாய்…   அவன் வாயில் பட்டதும்.. சக்கரைப்பாகாய் கரைந்து… உருகி… அடி தொண்டை வரை தித்தித்தது… எவ்வளவு சாப்பிட்டாலும்… போதும் என்று மட்டும் சொல்ல தோணவில்லை… 

 

கலாரசிகன் உணர்ந்துதான் பேர் வைத்திருப்பான் போலும்…

 

அவன் மெல்ல அவளிடமிருந்து விலகி, மூச்சிரைக்க அவள் முகம் பார்த்தான். அவளது கண்கள் இன்னும் மூடியே இருந்தன. கலைந்திருந்த கூந்தலும், சிவந்திருந்த முகமும், அந்த நிலவொளியில் அவளை ஒரு தேவதையைப் போலக் காட்டியது.

 

அவன் அவளது காதோரம் குனிந்து, “இப்போ சொல்லுடி… இன்னும் நக்கல் பேசுவியா?” என்று ரகசியக் குரலில் கேட்டான்.

அவள் மெல்லக் கண்கள் திறந்து அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் நக்கலுக்குப் பதில் காதல் மட்டுமே ததும்பி நின்றது. “இப்படித் தண்டனை கிடைக்கணும்னா… நான் இன்னும் நிறைய நக்கல் பேசுவேனே,” என்று அவள் முணுமுணுக்க, ஆதி மீண்டும் ஒருமுறை அவளைத் தன்னோடு அணைத்து ஆழ்ந்து முத்தமிட தொடங்கினான்…

 

வெளியே இரவு காற்று சலசலவென வீச, அந்த மல்லிகைப் பந்தலின் கீழ் ஒரு காதல் காவியம், அவளின் இதழில் மௌனமாக எழுதப்பட்டுக் கொண்டிருந்தது.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top