அசுரன் 109

அசுரன் 109 

 

அக்கா… அக்கா… என வீடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டு இருந்தாள் கவி…

 

அவள் வந்து வீட்டில் பக்கவாட்டில் பார்க்க… இருவரும் வியர்த்து விறுவிறுத்து சமத்து பிள்ளையாய் அமர்ந்திருந்தார்கள்… 

 

அக்கா,மாமா என்ன இங்க உக்காந்து இருக்கீங்க… அதுவும் இந்த நேரத்துல… முதல்ல எழுந்து உள்ள வாங்க… என்றாள் கவி.

 

நீ போ நான் வரேன் என்றாள் மலர்…

 

ஐயோ அக்கா மல்லிகை பந்தல் பக்கத்துல நைட்டு கருநாகம் வரும்ன்னு சொல்லுவாங்க… அங்க உட்காராதீங்க அது நல்லது இல்ல எழுந்து வாங்க என்று கூறினாள்…

 

அதுவும் சரி தான் … சரியா.. பாம்பு வர்ற நேரம் தான்… நீ வந்து உங்க அக்காவை காப்பாத்திட்ட… கூட்டுப் போ என்றான் கடுப்பாய்.. மலரை ஒரு தினுசாய் பார்த்தபடி.. 

 

இந்த வாடகாத்துல எதுக்கு உங்க ரெண்டு பேருக்கு இப்படி வேர்க்குது…

 

ரெண்டு பேரும் காரசாரமா பேசிக்கிட்டு இருந்தோம் அதனால என்று சமாளித்தாள் மலர்…

 

சரி பேசுனது போதும்..

வாக்கா மாமாக்கு வந்து சாப்பாடு எடுத்து வை…

 

இல்லம்மா நான் ஃபுல்லா சாப்பிட்டேன்… அதுவே போதும்..  என்றான் கடை கண்ணால் மலரை பார்த்தபடி…

 

அக்கா.. வா… வந்து மாமாவுக்கு ஒரு டம்ளர் பால் ஆவது கொடு… என்று அக்கறை உள்ள மச்சினியாய் அவள் கூற…

 

இப்படி எல்லாம் தட்டி கேட்க ஆள் இல்லாம தான் இத்தனை நாள் உன் இஷ்டத்துக்கு இருந்த இப்ப என் மச்சினிச்சிக்கு பதில் சொல்.. என்று மலரை பார்த்து குறும்பு சிரிப்பு சிரித்தான் ஆதி…

 

அவர் சும்மா இருந்தாலும் இவ சும்மா இருக்க மாட்டா போல… என்று மனதில் நினைத்துக் கொண்டவள்…

அதெல்லாம் குடிச்சுட்டு தான் தெம்பா உட்கார்ந்து இருக்காரு என்று மூணு முணுத்து கொண்டே கல் மேடையை விட்டு இறங்கி கவியுடன் நடந்தவள்… பின்னால் திரும்பி சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வாங்க என்றாள்…

 

போ வருகிறேன்… என்று கண்ணால் சொல்லி அனுப்பினான்…

 

வீட்டு வாயிலை அடைந்ததும்… வெளிச்சத்தில் அக்கா ஒரு நிமிஷம் இரு… ஐயோ அக்கா நான் தான் சொன்னேனே..  ஏதோ பூச்சி கடிச்சிருக்கு பாரு உன்னோட கழுத்து தோள்பட்டை கன்னம் எல்லாம் எப்படி சிவந்து இருக்கு..  தடிப்பு தடிப்பா இருக்கு…  என்று அவளை ஆராய்ந்து படி பதட்டமாய் கூறினாள் கவி.

 

உண்மை அறிந்தவளோ திருட்டு முழி முழித்து… அது ஏதோ கொசுக்கடி தான் கவி… பயப்படுறதுக்கு ஒன்னும் இல்ல… எனக்கு அப்பப்ப வந்து உடனே சரியா போயிடும் என்று அப்பட்டமாய் சமாளித்துவிட்டு குடுகுடுவென்று வீட்டினுள் ஓடிவிட்டாள்..  

 

சாப்பாடு எடுத்து வைக்க, மலரை பார்த்து கொண்டே சாப்பிட்டவன்.. 

எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறம் பால் எடுத்துட்டு ரூமுக்கு வா என்றான்…

 

திடுக்கிட்டு விழித்தவள்… குழந்தை இருக்கிறா நைட்டு எப்ப வேணா முழிப்பா பக்கத்துல நான் இல்லன்னா எல்லாரும் என்ன நினைப்பாங்க எல்லாரும் ஊருக்கு போகட்டும். நான் அவங்களோட தான் போய் படுக்க போறேன் குட் நைட் என்றாள் மலர்…

 

நான் சிவனேன் தாண்டி இருந்தேன்… அதை இதை சொல்லி என்னை உசுப்பேத்தி விட்டுட்டு… இப்படி கண்டுக்காம விட்டுட்டு போனா எப்படி..  கொஞ்சம் கருணை காட்டு என்றான் ஆதி… 

 

நாளைக்கு எல்லோரும் ஊருக்கு போயிருவாங்க இன்னைக்கு ஒரு நாள் தானே பொறுத்துக்கோங்க ப்ளீஸ்… என்றாள் கெஞ்சுதலாய்.. 

 

போ… போய் தூங்கு..  கிடைச்ச வரைக்கும் லாபம்னு நினைச்சுக்குறேன்… என்று சலித்துக் கொண்டான்…

 

அடுத்த நாள் இருவரும் அலுவலகம் விடுப்பு எடுத்துவிட்டு குடும்பத்தினரை ஊரை சுற்றி காண்பித்தனர் ஒன்றாய் சேர்ந்து சமைத்து சாப்பிட்டனர்..  பிரபுவின் வாய் ஓயவில்லை… கவியை கலாய்த்து தள்ளினான்… அவன் இருக்கும் இடத்தில் கலகலப்புக்கு பஞ்சமில்லை..  குட்டி பாப்பா வேறு அந்த பக்கம் இந்த பக்கம் கியா மியா என்று ஓடிக்கொண்டிருந்தது..  அடிக்கடி குழந்தையின் பின்னால் ஓடி அதை ஆசையாய் தூக்கி வைத்துக் கொண்டான் ஆதி… மலரை அழைத்து குழந்தையுடன் சேர்த்து செல்பியும் எடுத்துக் கொண்டான்.. 

 

அவனின் செயலை கண்காணித்தவள்… பொம்பள புள்ள நா ரொம்ப புடிக்குமோ?

இவ்வளவு ஆசையா ரித்துவ தூக்கி வச்சு நான் பார்த்ததே இல்லை… என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டாள்…

 

அவ்வப்போது மகள் மருமகனை கண்டு வெக்கப்படுவதும் அவள் உடம்பில் தெரிந்த பல் கடிதங்களும் அவள் சந்தோசமாக வாழ்கிறாள் என்று வாசுகிக்கு புரிய வைத்தது… எப்படியோ பொண்ணு வாழ்க்கை நல்லா இருந்தா சரி என்று அகமகிழ்ந்தார்…

 

பல வருடங்களுக்குப் பின்… வீட்டில் ஆட்கள் நிறைந்திருந்தது மனதுக்கு புத்துணர்வாய்  இருந்தது ஆதிக்கு.. 

 

அன்று மாலையே மலருக்கு என்று கையால் நெய்ய கொடுத்த பட்டுப்புடவை வீடு தேடி வந்தது..  அன்று கவி ஆசைப்பட்ட பட்டுப்புடவையை போட்டோ எடுத்துவிட்டு கவியிடமே கொடுத்து விட்டான் ஆதி..  அந்த போட்டோவை வைத்து மலருக்காக கையினால் சுத்தமான பட்டில் நெய்ய ஆர்டர் கொடுத்து இருந்தான் அது இன்று தான் வீடு தேடி வந்தது… அதைக் கண்டு வாயை பிளந்தாள் கவி.. அதனாலதான் அன்னைக்கு நான் கேட்ட உடனே மாமா விட்டு கொடுத்துட்டாரா… என்று மனதிற்குள்ளேயே அலுத்து கொண்டாள்.

 

புடவையை வாங்கி மலர் கையில் கொடுத்தவன்.. புடிச்சிருக்கா என்றான்… அன்றைக்கு பார்த்த புடவையை விட இது மிக அழகாக இருந்தது..

 

பிடிக்கவில்லை என்று எங்கனம் சொல்வாள்… அன்றைக்கே அந்த சேலை அவள் மனம் கவர்ந்து விட்டது.  அதை எடுத்து ஆதி கவின் கையில் கொடுத்த பொழுது கொஞ்சம் மனம் வாடி தான் போனாள்… ஆனால் இன்று அதைவிட அழகாய் நேர்த்தியாய் அதை உருவாக்கிக் கொடுத்து விட்டானே….  ம்ம்..  அழகா இருக்கு… என்றாள்.

 

நம்மளோட ஸ்பெஷல் டேக்கு(day)..  கட்டிக்கோ… என்றான் மறைமுகமாக…

 

சிரித்தபடி சரி என்று தலையை அசைத்தாள். 

 

அடுத்த நாள் மாலையில் ஊரில் வேலை இருப்பதாக கூறி மூவரும் கிளம்பினார்..  ஆதியும் மலரும் இரண்டு நாள் தங்க சொல்லி வற்புறுத்த..  மற்றொரு நாள் வருவதாக கூறிவிட்டு சென்றனர்..

 

ஆபீஸ்ல சின்ன சின்ன வேலை இருக்கு அதெல்லாம் முடிச்சுட்டு வரேன்… ரெடியா இரு என்று குறிப்பால் உணர்த்திவிட்டு சென்றான் ஆதி…

 

அவனுக்கான உணவுகள் எல்லாம் தயாரித்து வைத்துவிட்டு… தானும் தயாரானாள்..  மன்னவனுக்காக…

 

சிறிது நேரத்தில் அவளுக்கு மெசேஜ் வந்தது… get ரெடி… I will be in 15 minutes.. படித்துப் பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்..  

 

தனக்கு பிடித்த பாடலை ஹம் செய்து கொண்டே….  அவன் வாங்கி கொடுத்த புது பட்டு புடவை அணிந்து குண்டுமல்லி சரங்களை தலையில் சூடி… கண்ணாடி வளையலுடன்… கண்ணுக்கு மையிட்டு குதூகலமாய் ரெடியானாள்  பெண். ஏனோ இன்று இதயம் படபடவென்று அடித்தது…

 

ஆதி வர காலதாமதமானது… பொருத்துப் பார்த்தவள்… ஆதிக்கு போன் செய்தாள்… மூன்றாவது உரை போன் செய்யும்பொழுது… வீட்டின் காலிங் பெல் அடித்தது… ஆதியின் ரிங்டோன் மெலிதாய் வீட்டின் வெளியே கேட்டது..  குதூகலத்தில் தன்னை ஒரு முறை அருகில் இருந்த கண்ணாடியில் சரியாய் பார்த்துவிட்டு… புன்னகை முகமாய் போய் கதவைத் திறந்தாள்…

 

வாசலில் நின்றிருந்தவனை கண்டதும்… முகத்தில் இருந்த மகிழ்ச்சி முற்றிலும் துடைத்தது போல் ஆனது… முகத்தில் குழப்பம் குடி கொண்டது…

 

வாசலில் நின்றிருந்தவனும் அதை கவனித்தான்… அவள் முகத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்…

 

என்னடா நின்னுட்டு இருக்க உள்ள போ என்று கூறிக் கொண்டே காரின் உள்ளே இருந்து சில பொருட்களை போனையும் எடுத்து வந்தான் ஆதி…

 

ஆதியின் குரலைக் கேட்டு, சுயம் தெளிந்தவள்… வாங்க அருண் சார்… என்று அழைத்தாள்… 

 

அருணின் கையைப் பிடித்து வீட்டினுள் அழைத்து வந்தான் ஆதி..  நேரே அவனை தனது அறைக்கு அழைத்து சென்றான்..  மாற்று உடை எடுத்துக் கொடுத்தான்..  அவனை கட்டிலில் படுக்க வைத்து போர்வையை போர்த்தி விட்டவன்… நீ ரெஸ்ட் எடு நான் சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன் என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.. 

 

டைனிங் டேபிளில் யோசனையுடன் உக்காந்து இருந்தாள் மலர்..

தனக்காக தயாராகி இருந்த மனைவியை அப்பொழுதுதான் கவனித்தான்… 

 

அவர்களது படுக்கையறைனுள் சென்றவன் மலரை அழைத்தான்.. 

யோசனையுடன் நடந்து வந்தவளை..  தலை முதல் கால் வரை ரசித்தான்… 

முகத்தில் எந்த உணர்வும் இல்லாமல் அவன் முன்னே வந்து நின்றாள் மலர்… அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்க கொஞ்சம் சங்கடமாய் தான் இருந்தது அவனுக்கு…  ஒற்றை விரலால் தனது நெற்றியை நீவியவன்… சாரி டி… உனக்கு மெசேஜ் அனுப்பிட்டு கார் எடுத்துட்டு கிளம்பின அப்பதான் ஹாஸ்பிடலில் இருந்து எனக்கு போன் வந்துச்சு..  அருண் ஹை ஃபீவர்ல அட்மிட் ஆகி இருக்கிறதா சொன்னாங்க இப்ப பரவாயில்ல நீங்க டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போங்கன்னு சொன்னாங்க… எங்க மூணு பேர்ல யாரு ஹாஸ்பிடல் அட்மிட் ஆனாலும் மீதி ரெண்டு பேத்துக்கு தான் கால் பண்ணுவாங்க… நாங்க அப்படித்தான் சொல்லி வச்சிருக்கோம்.. விக்ரம் இப்போ ஊர்ல இல்ல அவனை நான் தான் வேலையா வெளிநாட்டுக்கு அனுப்பி வச்சிருக்கேன்… ரொம்ப உடம்புக்கு முடியாம இருக்கான் அருண் வீட்டுல பார்த்துக்கறதுக்கு யாரும் இல்ல அதனால தான் நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேன்… உனக்கு அசவுரியமா  இருக்கும்னு எனக்கு தெரியும்… ஆனா என்னோட சூழ்நிலை அப்படி… சாரிடா… என் நிலைமைய  உனக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறது எனக்கு தெரியல சின்ன வயசுல இருந்து எங்களுக்கு எந்த கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் நாங்க தான் பக்கபலமா இருந்து போம்… இதுக்கு முன்னாடி அவனுக்கு உடம்பு சரியில்லைன்னா அவங்க வீட்டுக்கு போயி நான் தங்கி தான் அவன பாத்துப்பேன் ஆனா இப்போ அவங்க வீட்டுக்கு நான் போக முடியாது அதனால தான்….   ஒரு சிறிய இடைவெளி விட்டவன் பின் வேகமாய்..  அவனுக்கு நீ எதுவும் பண்ண வேணாம் அவனுக்கு எல்லா வேலையும் நான் பண்ணிக்கிறேன்… அவன் இந்த வீட்ல இருக்குறதுக்கு மட்டும் நீ பர்மிஷன் கொடுத்தா போதும்… என்று மலரிடம் கெஞ்சுதலாய் கேட்க…

 

என்ன சொல்வாள் அவள்… என் வீடு என் பிரண்டு அப்படித்தான் வருவான்… என்று கூறி இருந்தால் கூட… ஏதாவது மறுத்துக் கூற வாய்ப்புண்டு…

அவளிடம் கெஞ்சுதலாய் அனுமதி கேட்டு நிற்பவனை கண்டால் மனம் இறங்காமல் இருக்க முடியுமா…

 

எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைங்க..  அருண் சார் உடம்பு சரியாக வரைக்கும் இங்கேயே இருக்கட்டும்… நாம பாத்துக்குவோம்.. உங்கள சின்ன வயசுல அவங்க குடும்பம் தானே பார்த்துக்கிட்டாங்க… நம்ம அவங்களுக்கு செய்ய கடமைப்பட்டிருக்கோம்… ஆதியின் நிலைமை உணர்ந்து அவள் பொறுப்பாய் கூற…

 

தேங்க்ஸ் டி..  தேங்க்யூ வெரி மச்.. என்ன சொல்லுவியோ ஏது சொல்வியோனு குழப்பத்திலேயே வந்தேன்… தேங்க்ஸ் டா… மகிழ்ச்சியில் கன்னத்தை இரு கைகளால் பற்றி ஆட்டினான்… 

 

சரி நான் அவனுக்கு ஏதாவது சாப்பிட ரெடி பண்ணி எடுத்துட்டு போறேன்..  நீ வா என கூறிவிட்டு சென்றான்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top