அசுரன் 111

அசுரன் 111

 

நண்பனை முகத்தை ஆழ்ந்த ஒரு கணம் பார்த்தவன்..  ஆரம்ப காலங்களில் ஆதியிடம் இருந்த இறுக்கம், இப்பொழுது அவன் முகத்தில் இருப்பது இல்லை… தனக்காக எதுவும் செய்வான் நண்பன் என்று அவனுக்கு தெரியும்..  இதனால் வரையிலும் அப்படித்தான்..  அதனால்தான் அன்று ஆதியையும் மலரையும் ஒன்றாக பார்க்க அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை… வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசி திட்டி விட்டு சென்றான்.. இப்பொழுதும் தான் கேட்டவுடன் நொடிப்பொழுதும் யோசிக்காமல் தன் தலையில் சத்தியம் செய்த நண்பனின் அன்பை என்னவென்று சொல்ல… நிம்மதியாய் இருக்கும் ஆதியின் முகம் கண்டு அவனது வாழ்க்கையில் பூரணமாய் இருக்கிறான் என்று புரிந்து கொண்டான்…  

 

ஐ நீட் டிவோர்ஸ்… 

 

என்னடா சொல்ற… 

 

எனக்கு ரதி கிட்ட இருந்து விவாகரத்து வேணும்டா… ரித்து என் கைய விட்டு போக கூடாது… என்னோட பிசினஸ் பாதிக்கக் கூடாது.. இத எந்த மாதிரி கொண்டு போறதுன்னு எனக்கு தெரியல… ரதி என்ன என்னமோ சொல்றா… சொல்லப்போனா என்ன மிரட்டி வச்சிருக்கா..  அதுக்கு ரித்துவ யூஸ் பண்ணிக்கிறா… எனக்கு எப்படியாவது அவ கிட்ட இருந்து விடுதலை வாங்கி கொடு என்று இரு கையை மேலே தூக்கி கும்பிடு போட்டான்…

 

ஊப்ப்… அவ்வளவுதானா..  ஏண்டா பொண்டாட்டி கிட்ட இருந்து விவாகரத்து வாங்குறதுக்கா இந்த அழுகை அழுத… நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்து போயிட்டேன்…

விடு பாத்துக்கலாம்…  நீ ரதி கிட்ட விவாகரத்து கேட்டு பார்த்தியா என்ன சொன்னா.. 

 

அது… அது வந்து… அவள் கூறிய ஒப்பந்தத்தை பற்றி பேச அருண் தயங்க.. 

 

தேவா..  தேவா… வாங்க சாப்பிடலாம்…

 

ஒரு நிமிஷம் பொறுடா வந்துடறேன் கூறிவிட்டு அறையின் வெளியே எட்டிப் பார்த்து…

 

நீ சாப்பிடுமா… நான் அவன் கிட்ட பேசிகிட்டு இருக்கேன்.  

 

டைம் லேட் ஆயிடுச்சு… சாப்பிட்டு போய் எவ்வளவு நேரம் வேணா பேசுங்க உங்களை யாரும் வேணாம்னு சொல்ல போறது… உடம்புக்கு முடியாதவங்களுக்கு மாத்திரை கொடுத்து தூங்க விடுறீங்களா… நாளைக்கு பேச கூடாதா… கட்டாயம் இப்பவே பேசி ஆகணுமா… அப்புறம் பகல் ஃபுல்லா என்ன தான் பண்ண போறீங்க… என்று மலர் பேசிக் கொண்டே போக..

 

ஆதி, ஊப்ப்….  என்று ஊதியப்படி தலையைக் குலுக்கி..  மெதுவாக அருணின் அறை பக்கம் திரும்பி பார்க்க…

 

நான் தூங்கிட்டேன் ஆதி எதுனாலும் காலைல பேசிக்கலாம் என்று போர்வையை  இழுத்து போத்தி படுத்து விட்டான்…. அருண்.

 

இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் இருவருக்குமே புதிது..  மெலிதாய் சிரித்துக் கொண்டார்கள்…

 

காலையில்… ஆதி அலுவலகத்திற்கு செல்லவில்லை… மலர் செல்கிறேன் என்று சொன்னவளையும் விடவில்லை… உன் கூட இல்லைன்னு சொல்லி தானே என் கூட பேச மாட்டேன்னு சொன்ன..  இப்ப பேசு… எனும்படி அவளை கைக்குள்ளையே வைத்துக் கொண்டான்..

 

இருவரும் சேர்ந்து சமையல் செய்தனர்… அருணுக்கு தனியாக காரம் குறைவாக உள்ள உணவுகளை தயாரித்து ஆதி சென்று கொடுத்து சாப்பிடும் வரை உடனிருந்து வந்தான்… இருவரும் சேர்ந்து உணவருந்தினர் வீட்டை சுத்தம் செய்தனர் தோட்டத்தை ஒழுங்கு படுத்தினர்….

 

அறையை விட்டு வெளியே வர அருணுக்கும் சங்கடமாய் இருந்ததால்  அறைக்கு உள்ள தான் இருந்தான்…

 

தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த மாலை வேளையில், ஆதியின் கவனம் முழுவதும் செடிகளின் மேல் இருந்தது. ஆனால் மலரின் கவனமோ, அந்தத் தோட்டத்தின் அழகை விட, மாடி வீட்டில் இருந்து ஆதியையே நோட்டமிட்டுக் கொண்டிருந்த அந்த இளம் பெண்களின் மேல் இருந்தது. அவள் சுற்றும் முற்றும் பார்த்தாள்; ஆதியின் ஒவ்வொரு அசைவையும் அவர்கள் ரசித்துக் கொண்டிருப்பது அவளுக்கு தெரிந்தது.

 

அவள் நெஞ்சுக்குள் பொறாமைத் தீ பற்றிக்கொண்டது. விறுவிறுவென ஆதியின் அருகில் சென்றவள், “உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சுன்னு இவங்களுக்கு எல்லாம் தெரியுமா தெரியாதா? இப்படி சைட் அடிக்கிறாங்க!” என்றாள், வயிறு எரியும் உணர்வை மறைக்க முடியாமல்.

 

ஆதி கையில் இருந்த பைப்பை மாற்றியபடி, அசால்ட்டாக அவளைப் பார்த்து, “அது எப்படிடி அவர்களுக்கு எல்லாம் தெரியும்? நம்ம என்ன ஊருக்கே சொல்லியா ரிசப்ஷன் வச்சோம்?” என்றான் ஒரு விதக் கேலியுடன்.

 

மலருக்கு கோபம் இன்னும் அதிகமானது. “அது சரி! ஆனா கூட ஒரு பொண்ணு இருக்கேனே… அப்பயாவது உங்களுக்கு ஒரு பார்ட்னர் இருக்காங்கன்னு அந்த அறிவாளிங்களுக்குத் தெரிய வேண்டாமா?” என வினவினாள்.

 

ஆதி இப்போது ஒரு நமட்டுச் சிரிப்பை உதிர்த்தான். “ஒருவேளை நம்ம ரெண்டு பேரையும் பார்த்தா பிரண்ட்ஸ்னு நினைச்சிருப்பாங்க… இல்ல ரூம் மேட்ஸா இருப்போம்னு நினைச்சிருப்பாங்க. சொல்லப்போனால், நம்ம ஆரம்பத்துல அப்படித்தானே இருந்தோம்? ஏன்… இப்பயும் அப்படித்தானே இருக்கோம்!” என்று அவன் வம்பிழுக்க…

 

“அதனால…” என ஒரு புருவத்தை உயர்த்தி மலர் எகிறினாள்.

 

“அதனால… சிங்கிளா இருக்கிற பையனை சைட் அடிக்க இந்த உலகத்துல எல்லா பொண்ணுங்களுக்கும் உரிமை இருக்கே!” என்று பெருமையாகத் தன் தோள்களை உயர்த்தி ‘கெத்து’ காட்டினான் ஆதி.

 

மனைவி முன்னாலேயே தன்னை ‘சிங்கிள்’ என்று அவன் பிரகடனப்படுத்திய அந்த நொடி, மலருக்குப் பொத்துக் கொண்டு வந்தது. ஆத்திரத்தில் அவளுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. அவனை முறைத்த முறைப்பில் அங்கிருந்த செடிகளே வாடிவிடும் போலிருந்தது. சட்டென்று தன் சேலையின் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிக் கொண்டு போர்க்களத்திற்குத் தயாரானாள்.

 

“சோ… அப்ப நம்ம இந்த உலகத்துக்கு ஒரு அதிகாரப்பூர்வமான அனௌன்ஸ்மென்ட் பண்ணி விடலாமா?” என்றாள், குரலில் ஒரு வில்லத்தனம் மின்ன.

 

ஆதி குழப்பத்துடன், “அது எப்படி?” என வினவினான்.

 

“Take a deep breath…” என்று அவள் விஷமமாகச் சொல்லவும், 

 

தண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ஆதி திடுக்கிட்டுப் போனான். 

 

அவள் செய்ய போகும் விபரீதம் என்ன என்பது அவன் உள்மனதிற்குப் புரிந்தது. “ஏய்… என்னடி பண்ணப்போற?”

 

“பண்ணும்போது தெரியும், பாருங்களேன்!”

 

“வேணாம் மலர்… கிட்ட வராத! வயசுப் பொண்ணுங்க எல்லாம் மேல இருந்து பார்த்துட்டு இருக்காங்க!” என அவன் எச்சரிக்க,

 

மலரோ விடாப்பிடியாக, “நான் பண்ணப் போறதே அவங்க பார்க்கணும்ங்கிறதுக்காகத் தான்!” என நெருங்கினாள்.

 

“வேணாம்டி… என் இமேஜ் ஸ்பாயில் ஆயிடும்!” என ஆதி பதற,

 

மலர் இப்போது பழைய காலத்து வில்லன் ‘நம்பியார்’ பாணியில் கைகளைத் தேய்த்தபடி, “ஹா ஹா… அதுதான் எனக்கு வேணும்!” எனச் சிரித்தாள்.

 

நிலைமை கைமீறிப் போவதை உணர்ந்த ஆதி, “ரெடி ஜூட்… ஓடுடா ஆதி!” என்று கத்திக் கொண்டே கையில் இருந்த பைப்பைத் தூக்கிப் போட்டுவிட்டு வீட்டிற்குள் ஓட்டம் பிடித்தான். 

 

ஆனால், அவன் வாசலுக்குள் நுழையும் முன்னே, மலர் மின்னல் வேகத்தில் குறுக்கே வந்து, கைகளை விரித்து அணை போட்டுத் தடுத்துவிட்டாள்.

 

“மாட்னியா மவனே! இன்னைக்கு உன்னோட இந்த ‘சிங்கிள்’ இமேஜை நான் சிதைக்கல… என் பேரு தேன்மலர் இல்லை!” எனச் சவால் விட.

 

ஆதி , நடிப்பைப் போடத் தொடங்கினான். “இங்க பாரு மலர்… அவங்க சைட் அடிக்கிறதுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இப்படிப் பப்ளிக்ல வச்சு நீ ஏதாவது பண்ணுனா, சுத்தி இருக்கிறவங்க என்னைப் பார்த்து என்ன நினைப்பாங்க? இத்தனை நாள் நான் காட்டி காப்பாத்தி வச்ச என் கண்ணியம் என்ன ஆகுறது?”

 

மலருக்குச் சிரிப்புதான் வந்தது. “இல்ல… எனக்கு ஒரு விஷயம் புரியல… சாரோட கண்ணியத்தைப் பார்த்துட்டு இப்போ யாரு பொண்ணு கொடுக்கப் போறாங்களாம்?” என்றாள் நக்கலாக.

 

“ஒருவேளை கொடுக்கலாம், யாருக்குத் தெரியும்?” என்று ஆதி தன் ‘ஆம்-கட்’ பனியனை ஸ்டைலாகச் சரி செய்து கொள்ள…

 

“ஓஹோ… அவ்வளவு நல்லவரா நீங்க? அப்போ எதுக்கு அன்னைக்கு பார்ட்டில என்னை கிஸ் பண்ணீங்க?” என மலர் பழைய கணக்கைத் தோண்டினாள்.

 

ஆதி திணறிப் போய், “அ… அது வேற… அது செலிப்ரேஷன் மோடு! இது வீடு!” என்று மழுப்பினான்.

 

அவள் அவனை இரு கைகளாலும் இறுக்கிப் பிடிக்க வர, அவன் நழுவிப் போக்குக் காட்டி மீண்டும் ஓடினான். “வெளியே எதுவும் பண்ண மாட்டீங்களா? அப்போ ரெண்டு நாளைக்கு முன்னாடி மல்லிகைப் பந்தல் கிட்ட என்ன பண்ணீங்க?” என அவள் துரத்த…

 

“எல்லாமே தான் பண்ணேன்!” என்று குறும்புச் சிரிப்புடன் கத்தியபடி, அவன் மீண்டும் அதே மல்லிகைப் பந்தல் அருகே வந்து நின்றான்.

 

என் தங்கச்சி கேட்டதுக்கு டபுள் மீனிங்ல பதில் சொல்றீங்க… சின்ன பொண்ணு அவ… அவளும் பேசிக் கொண்டே அவனை பின் தொடர்ந்தாள்…

 

ஆதி ஓடிக்கொண்டே சிரித்தான். “அவளுக்குக் குழந்தையே இருக்குடி… நீ தான் இப்போ சின்னப் பொண்ணு மாதிரி என்கிட்ட வம்பிழுத்துட்டு இருக்க!” என்று கேலியாகக் கூறியபடியே தோட்டத்துப் பாதையில் மின்னல் வேகத்தில் ஓடினான்.

 

​மலரும் விடாமல் அவனைத் துரத்தினாள். ஆனால், எதிர்பாராத ஒரு நொடியில் ஆதி திடீரென்று சட்டென்று திரும்பி, பின்னால் ஓடி வந்த அவளது கையைப் பற்றித் தன் பக்கம் இழுத்தான். அந்த வேகத்தில் நிலைதடுமாறிய இருவருமே அருகில் இருந்த பச்சைப்புல் தரையில் சரிந்தனர்.

 

ஆதியின் மேல் மலர்.. மலரின் மேல் மல்லிகை… 

 

ஒரு பக்கம் சுவர் மறைத்திருக்க மற்றொரு பக்கம் புதர் மறைத்திருக்க… மேலே மல்லிகை பந்தல் மறைத்திருந்தது அவர்களை…

 

சிறிது நேரம் இருவருமே மூச்சிறைக்க ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இப்ப சொல்லுடி என்ன பண்ண போற…

 

சரியான கேடி நீங்க..  அங்க எல்லாருக்கும் முன்னாடியும் நான் கிஸ் பண்ணிடுவேன்னு புதருக்குள்ள கூட்டிட்டு வந்து மறைச்சு வச்சுக்கிட்டீங்க… என்று அவனது மார்பிலேயே இரண்டு அடி போட்டாள்… 

 

தங்கப்பதக்கம் கொடுப்பது போல் நெஞ்சை நிமிர்த்திய அடிகளை வாங்கிக் கொண்டவன்.. 

அங்க கிஸ் தாண்டி பண்ண முடியும்..  இங்க தான் எல்….  ஏதோ சொல்ல வந்தவனை கைகளினால் வாயை மூடினால்…

 

ம்ஹும்..  அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன் என்னைய விடுங்க… எனக்கு வேலை இருக்கு என்று.. அவன் நெஞ்சில் கை வைத்து எழ முயன்றாள்.. 

 

அதற்கு அவன் விட வேண்டுமே…. அவளை அப்படியே இறுக அணைத்துக் கொண்டான்..  எங்கடி போற… ஒன்னும் பண்ண மாட்டேன்டி.. கொஞ்ச நேரம் அப்படியே இரு என்று கூறி…. அவள் தலையை கோதியப்படியே நெஞ்சோடு இதமாய் அணைத்தபடி படுத்திருந்தான்.. ஒரு கை அவளது இடையுடன் சேர்ந்து அணைத்திருக்க… கால்கள் கூட அவளை சேர்த்து அணைத்து இருந்தது… ஒரு சில நாட்களில் அவளின் நினைவில் இங்குதான் தலைக்கு கை கொடுத்து வானத்தை வெறித்தபடி படுத்திருப்பான்…  இதோ இன்று அதே இடத்தில் அவளுடன் இணைந்து படுத்திருப்பது வாழ்க்கையில் அனைத்தையும் அடைந்து விட்டது போல் ஒரு நிறைவு…

 

மரத்தின் அடியில் மல்லிகை பந்தல்… உதிர்ந்த பூக்களுக்கு நடுவே தலைவன் தலைவி, சுற்றிலும் பூக்கள் வாசம்… மெல்ல வீசிய தென்றல் காற்று..  இதமாய் இருந்தது மனதிற்கு…  இவர்கள் இருவரையும் பார்த்து, குருவிகள் தங்கள் குஞ்சுகளைக் கூட்டுக்குள் அடைத்தன… காற்றின் ஈரப்பதம் அதிகரித்தது…. இதை மேலும் அழகாக எண்ணியதோ என்னமோ இயற்கை… மெல்லிய சாரல் ஆரம்பித்தது… 

 

மழை வருது வா வீட்டுக்குள்ள போலாம்… என்று தலைவன் கூற…

 

இப்பொழுது மறுப்பது தலைவியின் முறை..  ம்ஹும்..  அப்படியே கொஞ்ச நேரம் இருப்போம் என்று இறுக அணைத்துக் கொண்டாள்..  

 

மழையின் சத்தம் காதுகளை அடைக்க, மலர் அவனது இதயத் துடிப்பை மட்டும் கவனித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சீரான துடிப்பு அவளுக்கு ஒரு சொல்ல முடியாத உணர்வை கொடுத்தது. “ஏய்… நனைஞ்சுட்டே இருந்தா காய்ச்சல் வரும்டி,” என்று ஆதி மெல்ல அவள் காதோரம் சொல்ல, அவள் இன்னும் அவனது ஆடையைத் தன் கைகளால் சுருட்டிப் பிடித்துக் கொண்டு, “வந்தா மாத்திரை போட்டுக்கலாம் ” என்று அவன் மார்பில் புதைத்து கொண்டாள் .

 

மழை சற்று அதிகமாகி இருவரும் தொப்பலாய் நனைய..   அவன் மார்பில் சாய்ந்து இருந்த தலையை நிமிர்த்தி ஆதியை பார்த்தாள் மலர்..  அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்… மல்லிகைப் பந்தலில் இருந்து மழைநீருடன் சேர்ந்து உதிர்ந்த பூக்கள், இப்போது அவர்கள் இருவரையும் சுற்றி ஒரு மெத்தையாய் விரிந்திருந்தது. காற்றில் கலந்திருந்த அந்த மண் வாசனையும், மல்லிகை மணமும், மழையின் ஈரமும் சேர்ந்து அந்த இடத்தை ஒரு சொர்க்கமாக மாற்றியிருந்தது. ஆதி மெல்ல அவள் நெற்றியில் தன் உதடுகளைப் பதிக்க, மலர் கண்கள் மூடி அந்தத் தருணத்தை தன் ஆன்மாவுக்குள் கடத்தினாள்…  மழைத்துளியுடன் கூடிய மன்னவனின் முத்தம்.

 

இங்கு நடந்தது அனைத்தையும் ஜன்னல் ஓரத்தில் நின்று அருண் பார்த்துக் கொண்டுதான் இருந்தான் அவர்கள் புதரில் மறையும் வரை.. 

ஏன் என்று தெரியவில்லை இதயம் கனத்தது… ஏக்கத்துடன், பொறாமையும் எழுந்தது உண்மை…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top