அசுரன் 112
வரவேற்பு அறையில் இருந்து ஆதி போட்ட ஒரு பலமான தும்மல், ஜன்னல் கண்ணாடிகளையே அதிர வைத்தது. அடுத்த நொடியே, படுக்கை அறையில் இருந்து மலரின் மெல்லிய தும்மல் “அட்ச்…” எனப் பதிலுக்கு ஒலித்தது. இது ஏதோ தும்மல் போட்டி போலத் தொடர்ந்தது.
இருவரும் ஹாலில் நேருக்கு நேர் சந்தித்தபோது, கண்கள் சிவந்து, மூக்கு நுனி ரத்தமென சிவந்து போயிருந்தது. ஆதி கையில் ஒரு பெரிய கைக்குட்டையை வைத்துக் கொண்டு அவளை முறைத்துப் பார்த்தான்.
அவளோ, “எல்லாம் உங்களால் வந்தது” என்பது போலப் பார்வையைத் திருப்பினாள்.
”நான் அப்பவே சொன்னேன் டி .. மழை வருது வீட்டுக்குள்ள போலாம்னு. இப்போ பாரு, ஆபிஸ்ல முக்கியமான பிரசென்டேஷன் இருக்கு. அங்க போய் மைக் முன்னாடி நின்னு நான் தும்மிட்டே இருந்தா, நம்ம கம்பெனி மானம் என்ன ஆகுறது?” என்று ஆதி மூக்கைத் தேய்த்தபடியே புலம்பினான்.
மலர் லேசாகச் சிரித்துவிட்டு, “ஓ… இப்போ பழியை என் மேல போடுறீங்களா? அஞ்சு நிமிஷம் இருந்துட்டுப் போலாம்னு சொன்னது வேணா… நானா இருக்கலாம். ஆனா, அந்த அஞ்சு நிமிஷத்தை அரை மணி நேரமா ஆக்குனது யாரு..
நான் நெத்தியில மட்டும் தாண்டி கிஸ் பண்ணேன்… நெத்தில மட்டும் தானா அப்படின்னு ஏக்கமா கேட்டது யாரு…
அஹ்ஹ்… அட்ச்…
அ… அது… கேட்டது வேனா நானா இருக்கலாம்… அட்ச்… கன்னத்துல ஒரு முத்தம் கொடுத்துட்டு எழுந்திருக்க வேண்டியதுதானே… அத விட்டுட்டு ‘மழைத் தண்ணியோட சேரும்போது உன் உதடு இன்னும் இனிப்பா இருக்கு’ன்னு பேசி, பேசி, வயிறு முட்ட மழை தண்ணிய குடிச்சது யாரு.. என்ன குடிக்க வச்சது யாரு…
மலரின் வாயால் இந்த வார்த்தையை கேட்டதும்… நேத்து மழையில் நடந்ததை நினைத்து ஆதிக்கு ஒரு வெட்கத்துடன் கூடிய புன்முறுவல் வந்து போனது… தேனுடன் கலந்த மழை தண்ணீர் தித்திக்காமல் இருக்குமா?… குட்டி மூக்கை கர்சிப்பால் துடைத்துக் கொண்டிருந்தவளின்.. இதழை தான் தொட்டு மீண்டது அவன் பார்வை….
இவர்கள் ஒருவருக்கு ஒருவர் வாயாடி கொண்டு இருக்க… அறைக்குள் இருந்து அலுவலகம் கிளம்பி வந்தான் அருண்.
அருண் வருகை அறிந்ததும் இருவரும் கண்ணியவான்களாக இருந்து கொண்டனர்.
காய்ச்சல் வெகுவாக குறைந்து இருந்தது அருணுக்கு..
வீட்டில் இருப்பதை விட வேலையில் கவனம் செலுத்தினால் தேவலாம் என்று இருந்தது மனம்…
அலுவலகம் கிளம்பினார்கள்…
இன்று அருணுக்கு பிடித்த உணவை சமைக்க முடிவு எடுத்து சமைத்தார்கள்… கடந்த இரு தினங்களும் கஞ்சி காரமில்லாத உணவுப் பொருட்கள் சாப்பிட்டதால் இன்று அவனுக்கு பிடித்த உணவை சமைக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது..
டைனிங் டேபிளில் உணவை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தாள் மலர். அருணும், ஆதியும் வந்து அமர்ந்தார்கள்… உணவை பரிமாற ஆரம்பித்தாள்… இன்று ஆதி தன் உடன் மலரையும் அழைத்துச் செல்ல முடிவெடுத்திருந்தான்.. மூவரும் சேர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தார்கள்… அப்பொழுது ஆதிக்கு போன் வர… ஏதோ ஒரு பைலை தேடி… போன் பேசிய படியே அறைக்குள் சென்றான் ஆதி…
உண்டு கொண்டே… அருணுக்கு தேவையானதையும் பரிமாறினாள் மலர்… ஆனால் கண்கள் ஆதியிடம் இருந்தது…
ஆதி வருவது போல் தெரியவில்லை ஏதோ மும்பரமாக பேசிக்கொண்டு இருந்தான்… மலரின் மனம் ஆதியின் அறைக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது. “இந்த மனுஷனுக்குப் பசியே எடுக்காதா? ஒரு நிமிஷம் அமைதியா உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரமில்லாத அளவுக்கு என்ன வேலை?” என்று மனதிற்குள் செல்லமாகத் திட்டிக் கொண்டாள். பொறுத்து பொறுத்து பார்த்தவள்.. “சார் உங்களுக்கு தேவையானதை எடுத்து வச்சு சாப்பிடுங்க இதோ வந்துடறேன்” என்று அருணிடம் கூறிவிட்டு… தனது தட்டில் இருந்த சப்பாத்தியையும் அவனது தட்டிலேயே வைத்து எடுத்து அறைக்குள் வந்தாள்…
தட்டை எடுத்துட்டு எங்க போறா… என்னும் விதமாக அருணின் பார்வை மலரை தான் தொடர்ந்தது…
கபோர்டுக்குள் எதையோ குனிந்து நிமிர்ந்து தேடிக் கொண்டிருந்தான்.. ஆதி.
சாப்பிடுற நேரத்துல எங்க போனீங்க…
அன்னைக்கு ஆடிட்டர் என்கிட்ட ஒரு பைல் கொடுத்தார் எங்க வச்சேன்னு தெரியல… இன்னைக்கு கண்டிப்பா ஆஃபீஸ்க்கு எடுத்துட்டு போகணும்… மீட்டிங் வேற டைம் ஆயிடுச்சு… என்று கூறியபடியே அடிக்கடி கடிகாரத்தை பார்த்துக் கொண்டு பரபரப்பாக தேடி கொண்டு இருந்தான்…
சாப்பிட்டு முடித்த அருணுக்கு ஒரு போன் வர.. அதை எடுத்துக் கொண்டு தோட்டத்து பக்கம் வந்தான்… அங்கிருந்த கல் மேடையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்…
மெதுவாக ஆதியிடம் பேச்சு கொடுத்தபடியே சப்பாத்தியை கிரேவியில் நனைத்து ஊட்ட ஆரம்பித்தாள்…
நீ சாப்பிடுமா… நான் இதை எடுத்துட்டு வந்து சாப்பிடுறேன்…
அருண் என்ன பண்றான் அவனுக்கு என்ன வேணும்னு பாத்து பரிமாறு… என்றான் ஆதி.
தோட்டத்து பக்கம் உட்கார்ந்தவனுக்கு அருண் என்ற தனது பெயரை கேட்டதும் இயல்பாக காதுகள் கூர்மையானது… அவர்களது பேச்சைக் கேட்கத் தொடங்கினான்…
அருண் சார் சாப்டுட்டு கிளம்பிட்டாரு… ஏற்கனவே மீட்டிங்கு லேட் ஆயிடுச்சுன்னு சொல்றீங்க இனி எப்போ சாப்பிடுவீங்க… ”நீங்க பாட்டுக்குத் தேடுங்க… நான் பாட்டுக்கு ஊட்டுறேன்,” என்று ஒரு அதட்டலோடு அவள் நீட்டிய சப்பாத்தியை மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டான். அந்த ஒரு வாய் உணவில் அவள் காட்டிய அக்கறை, அந்த ஃபைலைத் தேடும் எரிச்சலை அப்படியே மறையச் செய்தது.
”ஒரு நாள் சாப்பிடலைன்னா ஒன்னும் ஆயிடாது,” என்று அவன் சொல்ல, மலர் இடுப்பில் கை வைத்துக்கொண்டு முறைத்தாள்.
பேசுற நேரத்துல சாப்பிடலாம் தேவா… தேவா என்ற பெயரை கேட்டதும் கொஞ்சம் நிதானமாகியது சிங்கம்.. அது தெரிந்து தானே கூப்பிட்டாள்… ஏனோ அவள் வாயிலிருந்து வரும் அவனின் பெயருக்கு அப்படி ஒரு மயக்கம் அவனுக்கு..
இரண்டு வாய் வாங்கியதும்… போதும்டி நீ சாப்பிடு…
நான் சாப்பிட்டேன் தேவா… ஒரு சப்பாத்தி கூட முழுசா சாப்பிடல அதுக்குள்ள என்ன போதும்.. உங்கள மூணு நேரமும் சாப்பிட வைக்கிறதுக்குள்ள… எனக்கு தான் கண்ண கட்டுது… இடுப்பில் ஒரு கையை ஊன்றி சலித்துக் கொண்டாள்..
ப்ளீஸ் என் செல்லம் ல… இன்னும் ரெண்டு வாய் மட்டும் வாங்கிக்கோங்க…
அவள் குனிந்து நிமிர்ந்து கபோர்டு இன் மேலே என்று தேடிக் கொண்டிருக்க.. அவளும் அவன் பின்னே வால் பிடித்து திரிந்தாள்…
தேவா இங்கிட்டு திரும்புங்க…
வாய கொஞ்சம் திறங்க தேவா…
தேவா விரலை கடிக்காதீங்க…
இன்னும் ரெண்டு வாய் தான்..
அவசரத்துல அப்படியே முழுங்காதீங்க கொஞ்சம் மென்னு முழுங்குங்க..
போதும்டி ஊட்டிகிட்டே இருக்க…
அவ்வளவுதான் இந்த ஒரு வாய் மட்டும் வாங்கிக்கோங்க…
எனக்கு போதும் நீ சாப்பிடு…
ஐயோ.. என் தேவா குட்டிக்கு தெரியாதா.. கடைசி வாயில தான் சத்து.. அதை சாப்பிட்டால் தான் புஷ்டியாக முடியும்… என்று குழந்தைக்கு கதை சொல்வது போல்… ஏமாற்றி அவன் வாயில் அதை திணிக்க…
அவன் சொன்ன காரணத்தைக் கேட்டு சிரித்தவன்…
வாயில் இருந்த உணவோடு… அவள் தாடையை ஒரு கையால் பிடித்து இழுத்து இதழோடு இதழ் பதித்திருந்தான்… உணவை அவள் வாய்க்கு கடத்தி இருந்தான்…
அவனை முறைத்தபடியே உணவை மென்று முழுங்கியவள்.. புறங்கையால் வாயை துடைத்தாள்…
சேலை முந்தானையால் அவனது வாயையும் துடைத்து விட்டாள்…
கடைசி வாயில தான் சத்துனா.. அப்ப அத நீ தான் டி சாப்பிடணும்… அப்படியாவது அந்த கன்னம் ரெண்டும் புஸ்னு ஆகுதான்னு பாப்போம்.. என்றான். கைகளால் அவள் கன்னத்தை கிள்ளி கண் சிமிட்டியபடி…
தோட்டத்து பக்கம் உட்கார்ந்து இருந்தவனின் நினைவுகளோ… அவளின் தேவா என்ற செல்ல அழைப்பிலேயே உறைந்து நின்றது…
ஏதோ அருண் விளிந்ததற்கு “சரிங்க” என்று பதில் அளித்த மலரை…
உங்க ஊர்ல இப்படித்தான் மரியாதை இல்லாம கூப்பிடுவாங்களா…
கால் மீ சார்… என்று அதட்டியது ஞாபகம் வந்தது.. ஏனோ நினைக்க கூடாது என்று கட்டுப்படுத்தினாலும்.. மனம் சொல் பேச்சு கேட்பதில்லை… அதுதான் அவளை வேலைக்காரி என்று முதலில் உணர வைத்த செயல்…
மனதுக்குள் நொந்து கொண்டவன்…
மனசுக்குள்ள பெரிய மயிறுன்னு நெனப்பு… இவனை “சார்” என்று தான் கூப்பிடனுமாம்.. நீ அன்னைக்கு ஆரம்பிச்சது தாண்டா இன்னைக்கு உன்னை இங்க கொண்டு வந்து நிக்க வச்சிருக்கு… ***** &%#@#@ என்று பலவாறு கெட்ட வார்த்தைகளால் தன்னைத்தானே அர்ச்சித்துக் கொண்டான்…
மூவரும் ஒன்றாகவே காரில் வந்து அலுவலக வேலைகளை தொடர்ந்தனர்…. பல நாட்களுக்குப் பின் அலுவலகம் வருவதால் வேலை மூச்சு அடைத்தது ஆதிக்கு….
தனக்கு வெளியில் வேலை இருப்பதாக அருண் முன்னமே அலுவலகத்திலிருந்து கிளம்பி விட்டான்..
வேலைய முடிச்சுட்டு நேரா நம்ம வீட்டுக்கு வந்துடுடா… நாளைக்கு உன் வீட்டுக்கு போய் இருக்கலாம்… என்று அக்கறையாய் வற்புறுத்த… முதலில் வேண்டாம் என்றவன்.. பின் ஆதியின் அன்பு தொல்லையில் சரி என தலையசைத்து விட்டு எதுவும் கூறாமல் சென்றான்..
ஆதிக்கு அலுவலகத்தில் வேலை இருக்கவே…
மலரை காரில் வீட்டுக்கு அனுப்பி வைத்தான்.. நீ கிளம்புடி நான் வரேன் கொஞ்சம் லேட் ஆகும் நீ சாப்பிட்டு தூங்கு என்று கூறி அனுப்பி வைத்தான்..
காரில் சிறிது தூரம் சென்று இருப்பாள் மலர்… பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது… ஓரிடத்தில் கார் பழுதாகி நிற்கவே… டிரைவர் முன்னே வந்து காரை தனக்கு தெரிந்த அளவு சரி செய்ய பார்க்க அது வேலை செய்யவில்லை…
ஆதிக்கு அழைக்கலாம் என்று போன் செய்ய பார்க்க போனில் சிக்னல் இல்லை… போனை தட்டி தட்டி மேலே உயர்த்தி காருக்குள்ளையே சிக்னல் இருக்கும் இடத்தை தேடிக் கொண்டிருந்தால்… பின் அது வேலைக்காகாது என்று கதவை திறந்து கொண்டு குடையை பிடித்து வெளியே வர..
அவளை மறித்து ஒரு கார் வந்து நின்றது… காருக்குள் எட்டிப் பார்க்க..
அருண் தான் இருந்தான்… “என்ன இங்க நிக்கிற..”
அது வந்து சார்… கார் ஏதோ ரிப்பேர் ஆயிடுச்சு.. ஸ்டார்ட் ஆகல என்றாள்…
சரி வண்டியில ஏறு நான் வீட்டுக்கு தான் போறேன் டிரைவர் வண்டி எடுத்துட்டு வந்துருவாரு என்றான் அருண்..
சார்.. அது வந்து… என்று அவள் தயங்க….
வேகமாய் ஹார்ன் அடித்தான் அருண்…
தனது போனை பார்க்க அப்பொழுதும் சிக்னல் கிடைக்கவில்லை… எப்படியும் கேப் பண்ண முடியாது… இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் ஆதியும் வந்து அழைத்துச் செல்ல முடியாது… அதனால் அருணின் காரில் பயணிக்க முடிவு செய்தாள்… நேரே டிரைவரின் பக்கம் திரும்பி அண்ணா.. நான் அருண்சார் கூட வீட்டுக்கு போயிட்டேன்னு கொஞ்சம் ஆதி சார் கிட்ட இன்பார்ம் பண்ணிடுங்க.. என்னோட போன்ல சிக்னல் இல்ல.. கொஞ்சம் மறக்காம சொல்லிடுங்க அண்ணா.. என்று கூறிவிட்டு…
அருணின் காரில் ஏறிக்கொண்டாள்… கார் புறப்பட்டு சென்றது.. டிரைவரும் போகும் காரை தான் பார்த்தார்…
நடுநிசியில் வீடு வந்து சேர்ந்தான் ஆதி…
வீடு இருளில் மூழ்கியிருந்தது… காலிங் பெல் அடித்தான்… கதவு திறக்கப்படவில்லை… மணி அண்ணா சில தினங்கள் ஊருக்கு சென்று இருப்பதால் கேட்டில் ஆள் இல்லை. இருள் சூழ்ந்த வீட்டை பார்த்து ஆதிக்கு மனம் என்னவோ போல் இருந்தது… தன்னிடமிருந்து சாவி கொண்டு கதவைத் திறந்து உள்ளேன் நுழைந்தான்… வீட்டில் யாரும் இல்லை..
உடனே மலருக்கு போனில் அழைத்தான்.. போன் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பதாக கூறியது…
அருண் தான் மலரை அழைத்துச் சென்றான் என்று டிரைவர் போன் பண்ணி கூறியிருந்தார்… அருணுக்கு அழைத்தான்… போன் ஸ்விட்ச் ஆஃப்… ஏதோ தவறாகப்பட்டது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️