மருத்துவமனையின் அந்தத் தனி அறை, மருந்துகள் மற்றும் கிருமிநாசினிகளின் நெடியோடு நிசப்தத்தில் உறைந்திருந்தது.
வெள்ளை நிறச் சுவர்களை வெறித்துப் பார்த்தபடி, மெதுவாய் தன் இமைகளை அசைத்துக் கண் விழித்தான் அருண். கண்கள் இன்னும் முழுமையாகத் திறக்க மறுத்தன. மூளையின் நரம்புகள் ஏதோ ஒரு கனமான சுமையைத் தாங்குவது போல் பாரமாய் இருந்தன. ரத்தத்தில் கலந்திருந்த போதை மருந்துகளின் வீரியத்தைக் குறைக்க அளிக்கப்பட்ட சிகிச்சையின் விளைவாக, உடல் ஒருவித தளர்ச்சியில் இருந்தது. அவன் நெற்றியில் இருந்த அந்தச் சிறிய காயத்தின் மீது ஒட்டப்பட்டிருந்த வெள்ளை நிற பேண்டேஜ், அவனுக்குப் பெரும் பாரமாகத் தெரிந்தது.
கஷ்டப்பட்டு ஒருவாறு கண்களை முழுமையாகத் திறந்தவன், எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த உருவத்தைக் கண்டு சலனமடைந்தான். தன் கையில் இருந்த மொபைல் போனில் எதையோ ஆழ்ந்து கவனித்தபடி, அவன் விழித்ததை அறியாமல் அமர்ந்திருந்தாள்.
”இவ எதுக்கு இங்க உக்காந்து இருக்கா?” என்று அவன் மனம் கேள்விகளை அடுக்கத் தொடங்கியது. அவளைப் பார்த்த அந்த நொடியில், தான் எப்படி இங்கே வந்தோம் என்ற முந்தைய நினைவுகள் மங்கலாக வந்து போயின.
அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை, ஆனால் அவன் விழித்திருப்பதை உணர்ந்து கொண்டாள். “என்ன அருண் சார்… போதை தெளிஞ்சிடுச்சா?” என்று அதிகாரத் தோரணையும், மெல்லிய கிண்டலும் கலந்த குரலில் கேட்டாள்.
அருண் ஏதோ சொல்ல முற்படுவதற்குள், அவளே தொடர்ந்தாள். “என்னை அடையாளம் தெரியலையோ? என் பெயர் நந்தினி. ஆதி சார் ஆபீஸ்லதான் வேலை செய்கிறேன்…” என்றாள், ஒரு புதிய மனிதனை அறிமுகம் செய்வது போன்ற நக்கலுடன்.
அருண் எரிச்சலுடன் தன் தலையை மெல்ல அசைத்தான். “அதான் தினமும் பார்க்கிறேனே… நீ என்ன இங்க? நான் எப்படி இங்க வந்தேன்?” என்று தன் குழப்பத்தை வார்த்தைகளாக்கினான்.
நந்தினி சற்றும் தாமதிக்காமல் இருக்கையை விட்டு எழுந்தாள். கைகளை மார்புக்குக் குறுக்கே கட்டிக்கொண்டு, அவனைப் பார்க்கவே அருவருப்பது போல் ஒரு பார்வை பார்த்தாள். “முதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கோங்க… நீ, வா, போ-னு ஒருமையில பேசுற வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க. நந்தினினு மரியாதை கொடுத்துக் கூப்பிடுங்க. அப்பதான் நான் பதில் சொல்லுவேன். கிவ் ரெஸ்பெக்ட் அண்ட் டேக் ரெஸ்பெக்ட்!” என்று அழுத்தமாகச் சொன்னாள்.
( ஆஹான்… அவன் போதையில் இருக்கும் போது நீ ரொம்ப ரெஸ்பெக்ட்டா எழுப்பனம்மா… 😂😂)
அருண் மனதுக்குள், “கெரகம்… இது வேறயா?” என்று நொந்து கொண்டான். வேறு வழியின்றி, “சரி… சொல்லுங்க மிஸ். நந்தினி. நான் எப்படி இங்கே வந்தேன்?” என்றான்.
“நீங்க ஃபுல் போதைல கார் ஓட்டிட்டு வந்து, நேரா என்னோட ஸ்கூட்டியில இடிக்கப் பார்த்தீங்க. என் நல்ல நேரம், கடவுள் புண்ணியத்துல கார் தடம் மாறிப் போய் அந்தப் பெரிய மரத்துல மோதி நின்னுடுச்சு. இல்லனா இந்நேரம் எத்தனை பேரை காவு வாங்கியிருப்பீங்கன்னு யாருக்கும் தெரியாது. சாகணும்னு முடிவு பண்ணிட்டாத் தனியாப் போகணும் சார், என்ன மாதிரி அப்பாவிகளை எல்லாம் கூட்டிட்டுப் போகக் கூடாது.”
அவள் மூச்சு விடாமல் பேசினாள். “கடைசில நான்தான் பாவம் பார்த்து, உங்க முகத்துல தண்ணி அடிச்சு விட்டு எழுப்பி, கஷ்டப்பட்டு ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டு வந்து சேர்த்தேன். டாக்டர் செக் பண்ணிட்டு என்ன சொன்னாங்க தெரியுமா? ரெண்டு மூணு நாளா நீங்க சரியாச் சாப்பிடல போல, பிபி (BP) ரொம்ப லோ ஆகிடுச்சு. அப்படியே விட்டிருந்தா கோமா ஸ்டேஜுக்குக் கூடப் போக வாய்ப்பு இருக்குனு சொன்னாங்க!” என்று கண்களை உருட்டி அவனைப் பயமுறுத்தினாள்.
அவள் சொன்ன அந்தப் பயங்கரமான வார்த்தைகளைக் கேட்ட அருண், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், “அப்படிப் போயிருந்தா கூட நிம்மதிதான்… உன்கிட்ட எல்லாம் இந்த மாதிரி பேச்சையும் அட்வைஸையும் வாங்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது பாரு,” என்றான் சலிப்பின் உச்சமாய்.
நந்தினிக்குக் கோபம் தலைக்கேறியது. “உங்களைக் காப்பாத்துனதுக்குத் தேங்க்ஸ் சொல்லாட்டி கூடப் பரவாயில்லை, இப்படி ரொம்பச் சலிச்சுக்கிறீங்க!” என்று தன் முகத்தை இடவலமாய் ஆட்டி தன் ஆற்றாமையைக் காட்டினாள்.
பேசும் போது தன் தாடைப் பகுதியும் கன்னமும் ஏதோ மிளகாய் தேய்த்தது போல் எரிவதை அருண் உணர்ந்தான். “என் கன்னம் ஏன் இப்படி எரியுது?” என்று முணுமுணுத்தவன், தன் மொபைலை எடுத்து முன்பக்கக் கேமராவை ஆன் செய்தான். இரண்டு கன்னங்களும் சிவந்து தடித்துப் போய் இருந்தன. விபத்தில் நெற்றியில் அல்லவா அடிபட்டது, கன்னத்தில் எப்படி இப்படி வீக்கம் வந்தது என்று அவன் தீவிர யோசனையில் ஆழ்ந்தான்.
அய்யய்யோ என்ன சுத்தி சுத்தி பார்க்கிறான்… அரஞ்சத கண்டுபிடிச்சுருவானோ… எதுக்கும் குழப்பி விடுவோம்… நிலைமையைச் சமாளிக்க, ஒரு அப்பாவியான முகபாவனையை வரவழைத்துக்கொண்டாள். “அது வந்து சார்… உங்களைக் காருக்குள்ள இருந்து காப்பாத்தித் தூக்கும்போது, அங்க இருந்த மரக்கிளை உங்க கன்னத்துல பட்டு அப்படிப் புண்ணாகிடுச்சு போல. ரொம்ப எரியுதா? டாக்டர் கிட்ட சொல்லலாமா?” என்று ஒரு நடிப்புடன் கேட்டாள்.
ம்ம்ம்… சொல்லணும்… ஆக்சிடென்ட்ல அடிபட்டதை விட இதுதான் பயங்கரமா வலிக்குது… என்று தாடையை தடவியப்படியே கூறினான் அருண்.
அய்யய்யோ கொஞ்சம் உணர்ச்சிவசம் பட்டு அடி வெளுத்துட்டோம் போலயே… என்று திருட்டு முழி முழித்தாள்.
எதுக்காக இப்படி பண்ணீங்க சார்… என்றாள்…
எதைக் கேட்கிறாய் என்பதைப் போல் இருப்புருவதையும் உயர்த்தி அவளைப் பார்த்தான்…
இந்த ஆட்டிட்யூட் மயி*க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.. என்று மனதில் நினைத்தவள்.
“எனக்குத் தெரியும், இது தெரியாமல் நடந்த ஆக்சிடென்ட் இல்லை. தெரிஞ்சே சாகணும்னு முடிவு எடுத்துதான் காரைக் கொண்டு போய் மரத்துல விட்டீங்க… சரியா?” என்று அவள் குரலை உயர்த்தி அழுத்தமாகக் கேட்டாள்.
பக்கமாய் திரும்பிய படி அவள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டவன் இந்த வார்த்தையை கேட்டதும் அவள் பக்கமாய் முகத்தை திரும்பி பார்த்துவிட்டு பழையபடி பக்கவாட்டில் திரும்பிக் கொண்டான்…
திமிரு… கொழுப்பு உடம்பெல்லாம்… என்று பல்லை கடித்து கொண்டு கருவிக் கொண்டாள்.
இப்போ என்ன ஆகிடுச்சு… பொண்டாட்டி ஏமாத்திட்டா… குழந்தை இப்ப உங்க கூட இல்ல அவ்வளவு தானே.. அதுக்காக சாகுற முடிவு வரைக்கும் போவீங்களா? என்றாள்…
அவள் பேச பேச எரிச்சல் அடைந்தவன்… இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்? யார் சொன்னா? என்ன? என்ன வேவு பாக்குறியா… என்றான்.
(பெண்கள் ஒருத்தரை பற்றி தெரிந்து கொள்ள முடிவெடுத்து விட்டால் ஏழுமலை ஏழு கடல் தாண்டி கூண்டுக்குள் இருக்கும் ஒரு உயிரையும் கண்டுபிடித்து தெரிந்து கொள்வார்கள் என்பதை பாவம் பையன் அறியாவிட்டான் போலும்…)
வாழ்க்கையில… என்று அவள் ஏதோ கூற வர..
மரியாதையா உன்னோட அட்வைஸ் மயிரை தூக்கிட்டு ஓடிரு… இருக்கிற கடுப்புல என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது என்றான் அருண்.
மரியாதை இன்றி வரும் வார்த்தைகளை கவனித்தவள்.. இவனுக்கு எல்லாம் இவ்வளவு நேரம் மரியாதை கொடுத்ததே தப்பு என்று மனதில் எண்ணிக் கொண்டாள்…
அதானே… அறிவுரை சொல்லி திருத்துற மனுஷனா நீ… பட்டே திருந்த மாட்ட… விஷ ஜந்து.. உன்னை எல்லாம் மருந்து அடிச்சு கொல்லணும்டா என்று உதட்டசைவில் முணுமுணுத்தாள்…
என்னடி வாய்க்குள்ள முணுமுணுக்கிற… தைரியமான பொம்பளையா இருந்தா வாயை திறந்து சொல்லுடி என்றான் அதட்டலாய்…
குழாயடி சண்டை போல் அவன் சொல்லிய பாவனையில் சிரிப்பு வந்துவிட்டது பெண்ணவளுக்கு…
உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா… என்ற தோரணையில் பார்த்துவிட்டு…
விக்ரம் சார் கிட்ட இன்ஃபார்ம் பண்ணிட்டேன் கொஞ்ச நேரத்துல வந்துருவாரு நான் கிளம்புறேன் என்றாள் நந்தினி.
கதவு வரை சென்றவள் பின் மனது கேட்காமல் திரும்பி… நான் சொன்னா நீ மயிருக்கு கூட மதிக்க மாட்டேன்னு எனக்கு தெரியும் இருந்தாலும் சொல்லாம என்னால போக முடியல… வாழ்க்கையில எல்லாமே முடிஞ்சு போச்சு… தொலைஞ்சு போச்சுனு… கடைசி துளி நம்பிக்கையை இழந்து நாம் உட்காரும்போது கண்டிப்பா கடவுள் நமக்கு ஒரு வழி காட்டுவார்… நம்பு… லைஃப்ல நீ ரொம்ப நல்லா இருப்ப…
சொல்ல வந்ததை சொல்லிட்டேல மூடிட்டு கிளம்பு… என்றான்…
நீ எல்லாம் இந்த ஜென்மத்துல திருந்த மாட்ட டா… என்னமோ பண்ணு…
இப்ப நீ இழந்திருக்கிறது உன் வாழ்க்கையோட ஒரு பகுதிதான் மொத்த வாழ்க்கையும் இல்லை… எதையாவது நினைச்சு உனக்குள்ள நீயே குழப்பிக்காம… யார்கிட்டயாவது மனசு விட்டு பேசிட்டு நடந்ததை தூக்கி போட்டு போய் உன் அடுத்த கட்ட வேலையை பாரு… டேக் கேர்.. என்று கூறிவிட்டு, அவன் கை பக்கத்தில் இருந்த அவனது போனை எடுத்தவள்.. பேட்டன் போட்டு அன்லாக் செய்தாள்…
இன்னுமா என்னோட பேட்டர்னை ஞாபகம் வச்சு இருக்கா… என்று மனதிற்குள் நினைத்தான்..
நீ போடுற A பேட்டன ஞாபக வச்சுக்கணும்னு அவசியம் இல்ல… என்று அவன் எண்ணத்திற்கு பதில் சொன்னவள்… என்னோட நம்பர இதுல சேவ் பண்ணி இருக்கேன்…
உனக்கு ஏதாவது பேசணும் போல இருந்தா கண்டிப்பா எனக்கு கூப்பிடு.. ஆல்வேஸ் அம் அவைலபிள்… என்றவள் கிளம்ப போக…
நீ எல்லாம் பார்த்து பரிதாபப்படுற அளவுக்கு என் நிலைமை ஆயிடுச்சில்ல… என் வாழ்க்கைய பார்த்து உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குமே…
இல்ல… என்று மறுத்து, நந்தினி ஏதோ கூற வர.. பேசாதே நிறுத்து என்று தன் கையால் நிறுத்தினான்.
விரக்தியான புன்னகையை இதழ்களில் தவழ விட்டவன்…
உண்மையிலேயே நீ பத்தினி தாண்டி.. நீ விட்ட சாபம் என் வாழ்க்கையில் பலிச்சிடுச்சு… என்ன மாதிரி ஒரு பி* கிட்ட நான் மாட்டி சீரழிந்து போய் தான் நிக்கிறேன் போதுமா… உன் முன்னாடி நான் தோற்று போய் நிற்கிறேன்… அத பாத்து உனக்கு சந்தோசம் தானே… நீ சொன்னது நடந்துருச்சு நிம்மதியா போய் தூங்கு என்றான் அருண்.
அமைதியாய் தரையை பார்த்து படி நின்று இருந்தாள் நந்தினி.
உன் முகத்துக்கு நேரா உன்ன பாக்க முடியாம தானே மூஞ்சிய திருப்பி உக்காந்து இருக்கேன் அப்புறம் ஏண்டி வந்து என்னை வம்பு இழுக்கிற… எற்க்கனவே மனசு அளவுல நொந்து போய் இருக்கிற என்னை மேலும் பேசி நோகடிக்க போறியா… என்றான் விரக்தியாய்…
அப்போது நந்தினியின் இதழ்களில் ஒரு கசப்பான புன்னகை அரும்பியது.
என்னோட சாபம் மட்டும் இல்ல அருண், உன்னோட சாபம் கூட பலிச்சிடுச்சு… என்றாள் தரையை பார்த்த படி வெகு நிதானமாய்..
மெல்ல தன் தலையை திருப்பி அவள் முகத்தைப் பார்த்தான்…
“உன்ன மாதிரியே ஒரு சந்தேக பேய் கிட்ட மாட்டி , நீ நாசமா தாண்டி போவ”ன்னு சாபம் விட்டியே… அப்படி ஒருத்தன் கிட்ட மாட்டி வாழ்க்கையை நாச பண்ணிட்டு தாண்டா நிக்கிறேன்… என்றாள் கண்களில் கண்ணீர் தழும்ப…
இவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா…இது என்ன புது கதையா இருக்கு என்பது போல் அவளை பார்த்து வைக்க…
எஸ்.. ஐ அம் எ டிவோர்சி… என்றாள் பெருமூச்சுடன்…
இருவரும் இரு துருவங்களில் நின்று தங்கள் காயங்களை ஒருவருக்கொருவர் காட்டி நின்ற அந்த நிமிடம், அந்த மருத்துவமனை அறையில் ஒரு மௌனம் நிலவியது.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️