அசுரன் 124

அசுரன் 124

 

கண்ணாடியை பார்த்துக் கொண்டு அலுவலகம் கிளம்பி கொண்டு இருந்தான் ஆதி…

 

அவனுடைய மனையாள்… கட்டிலின் அடியில் .. தலகாணியின் அடியில்.. என்று  படுக்கையறையை ஜல்லடை போட்டு தேடிக் கொண்டு இருந்தாள்… 

தேவா!… வீடு முழுக்க தேடிட்டேன் எங்க போச்சுன்னு தெரியல..  நீங்க பாத்தீங்களா… 

 

என்னடி தேடிட்டு இருக்க…

 

தெரியாது போலவே கேக்குறீங்க… இத்தனை நாளா சொல்றேன்  என்னோட தங்க கொலுசை காணோம்..  புதுசு… அதுவும் நீங்க ஆசையா என் காலில் போட்டு விட்டது… எங்க போச்சுன்னு தெரியல.. நானும் வீடு முழுக்க தேடி பாத்துட்டேன் கண்ணுலையே பட மாட்டேங்குது… நீங்க எங்கேயாவது பாத்தீங்களா என்றாள் சிணுங்களாய்.. 

 

எப்பவோ தொலைஞ்சத இப்ப ஏன்டி தேடுற…

 

கிடைக்கிற வரைக்கும் தேடுவேன்… மூஞ்சூர் முகத்தை வைத்துக்கொண்டு சீரியஸாக தேடிக் கொண்டு இருந்தாள்.

 

அவள் முகபாவனை பார்த்தவன் மெல்ல சிரித்தான்..  கொலுசு அறுந்து விழுந்த அன்று அவள் இருந்த மோனநிலையை நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்…

 

என்ன கேட்டா… எனக்கு என்னடி தெரியும்.. ஏதோ நான் எடுத்து கழுத்துல போட்டு இருக்க மாதிரி…. எங்கேயாவது மறந்து வெச்சிருப்ப தேடி பாரு… எங்கேயாவது உன் கண்ணு முன்னாடி தான் இருக்கும் உன் கண்ணுக்கு தெரியல போல… நல்லா தேடு… கிடைக்கலைன்னா விடு புதுசு வாங்கிக்கலாம் என்று கூறினான்… 

 

ம்ஹும்..  எனக்கு அது தான் வேணும்.. அது நீங்க எனக்கு ஆசையா வாங்கி கொடுத்தது… நான்தான் எங்கேயோ அஜாக்கிரதையா மிஸ் பண்ணிட்டேன்..  என்று சோகமாய் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு படுக்கையில் அமர்ந்தாள்.

 

அவள் கூம்பிப்போன முகத்தை பார்த்தவன்… அலமாரியை திறந்து அதில் இருந்து நேற்று வாங்கி வந்த வெள்ளி கொலுசுகளை எடுத்து வந்து..

படுக்கையில் அமர்ந்திருந்த அவளின் கால்களை மெல்ல தன் தொடையில் மேல் ஏற்றி கொலுசுகளை போட்டு விட்டான்…

 

வெள்ளி கொலுசை பார்த்தவள், தங்கம் வாங்கி கொடுத்தா தொலைச்சிடுவேன் அப்படின்னு சொல்லி வெள்ளி வாங்கி கொடுத்து இருக்கீங்களா?..

 

சிறு புன்னகை முகமாய்… இல்லை என்று தலையசைத்தவன்… தன் தொடைமேல் இருந்த அவள் கால்களை மெல்ல மேல் உயர்த்தி தன் தோள் மேல் வைத்தான்…

 

ஐயோ என்ன பண்றீங்க விடுங்க… என்று தன் கால்களை உருவ பார்த்தாள்…

 

அவன் விட்டால் தானே… தன் தோள்களில் மேலிருந்த காலை மெல்ல குலுக்க..  அது “ஜல்” “ஜல்” என்று ஒலி எழுப்பியது… 

 

ம்ம்ம்… சௌண்ட்ஸ் குட்… என்று லயித்துக் கூறினான்…

 

எதுவும் புரியாமல் அவள் முழிக்க… தங்க கொலுசு ஓட சவுண்டு எனக்கு பிடிக்கலடி..  வெள்ளி கொலுசு ஓட சவுண்டு தான் புடிச்சிருக்கு அதுவும் நைட் உன் காலு என் தோலு மேல இருக்கும்போது..  இடைவிடாமல் வர அந்த ஜல் ஜல் சவுண்ட்… கேட்கவே செம கிக்கா இருக்கும்… அதுவும் நீ முனங்கும்போது.. கூட இந்த சவுண்டும் கேட்கும் போது… மழைத்துளி ஓட மண்வாசம் சேர மாதிரி செம்ம ஃபீல்டி…  என்று கண்களை மூடி அவன் தோள்களில் இருந்து காலில் அழுத்தி முத்தம் வைக்க…

 

முத்தத்தில் சிலிர்த்த அவள் மேனி…

அவன் சொன்ன காட்சியை நினைத்து பார்த்த அவளின் முகம் அந்திவானமாய் சிவந்தது… ச்சீ… தேவா காலைல பேசுற பேச்சா இது… போங்க போய் ஆபிஸ் கிளம்புங்க..  என்றாள் வெட்கத்துடன்…

 

அவளின் கன்ன சிவப்பை பார்த்தவனின் உடல் எதிர்வினை புரிய ஆரம்பித்தது… நீ நினைத்து பார்த்த காட்சியை எனக்கு உடனே ரீ-கிரியேட் பண்ணனும்னு தோணுதே… என்று விஷமமாய் கூறிக்கொண்டே… அவன் காலில் கொடுத்த முத்தத்தை மேனியங்கும் தொடர ஆரம்பித்தான்…  

 

தேவா நோ… ஆல்ரெடி லேட்… 

 

நானும் அதைத்தான் சொல்றேன் ஆல்ரெடி லேட்… அடம்பிடிக்காமல் கோ ஆபரேட் பண்ணு.. சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்பலாம்… என்று கூறியபடியே, புயல் வேகத்தில் அவன் அவளை ஆட்கொள்ளத் தொடங்க, அந்த அறையில் ‘ஜல் ஜல்’ என்ற சத்தமும், அவளது மூச்சுக்காற்றின் வேகமும் ஒன்றோடொன்று போட்டியிட்டன. அவனது ஒவ்வொரு அசைவிற்கும் அவளது கால்களில் இருந்த அந்த வெள்ளிச் சலங்கைகள் ஒரு சாட்சியாக ஒலித்துக் கொண்டே இருந்தன. 

 

அவளது கைகள் அவனது தலைமுடியைக் கோதிப் பற்றிக்கொள்ள, அவள் முனங்களுடன் சேர்ந்த கொலுசின் ஓசையை ரசித்து,

​உணர்ச்சிகளின் உச்சத்தைத் தொட்டு,  நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு, மெல்ல மெல்ல அந்த ‘ஜல் ஜல்’ சத்தம்… சிங்கத்தின் உறுமலுடன் அடங்கியது.

 

அறையில் இப்போது அவர்களின் சீரற்ற சுவாசக் காற்று மட்டுமே ரீங்காரமிட்டது. அவள் மேல் இருந்தபடியே, வியர்த்த முகத்துடன்… 

​”இப்போ தெரியுதா… ஏன் தங்கம் வாங்கித் தராம வெள்ளி வாங்கித் தந்தேன்னு?” என்று மூச்சிரைக்க அவளது காதோரம் அவன் கேட்டபடி அவளது பக்கத்தில் சரியப் போக…

 

இவ்வளவு நேரம் வேண்டாதது போலவே தடுத்தவள்… அவனது கழுத்து செயினை பிடித்து இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள்… அப்பொழுதுதான் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள்…

 

அவள் எப்பொழுதும் வருடும் பிளாட்டினம் செயினை காணவில்லை… புதியதை விழி விரித்துப் பார்த்தவள்… கோப மூச்சுடன்…

 

திருட்டு ராஸ்கல்… என்னோட கொலுசு அது… என்று அவனது கழுத்தில் இருந்த தங்கச் செயினை சுட்டி காட்டினாள்…

 

இரண்டு மெல்லிய  கொலுசுகளை இணைத்து ஒரு செயினாய் ஒற்றை முத்து மட்டும் தொங்கும்படி கழுத்தில் அணிந்து இருந்தான்… அவன் நீண்ட கழுத்துக்கும் திண்ணிய மார்புக்கும் அந்த செயின் மிக அழகாகவே இருந்தது…

 

ஏண்டி இத்தனை நாளா கழுத்துல போட்டு இருக்கேன் இன்னைக்கு தான் பாக்குறியா…

 

அடப்பாவி கழுத்துல போட்டுகிட்டே என்ன எதுக்கு தேட விட்டீங்க… 

 

ஒரு ஜாலிக்கு… 

 

கொலுசை எதுக்கு கழுத்துல போட்டு இருக்கீங்க…

 

சும்மா ஒரு ஸ்டைல் என்றான்…

 

ஐய நல்லா இல்ல… என்று முகத்தை சுளித்தாள்..  உண்மையில் இந்த பாவனை எல்லாம் வெளி வேஷம்தான்… தான் காலில் அணிந்து இருந்த கொலுசை, அவன் மார்பில் கண்டவளுக்கு உடம்பு சிலிர்த்தது…  அவளை முன்னிறுத்தி தன் காதல் கணவன் செய்யும் சேட்டைகள் அனைத்தும் அவ்வளவு பிடித்தம்…

 

மெத்தையில் சரிந்து… அவள் முதுகின் இடையே கைவிட்டு தன்னுடன் இறுக்கிக் கொண்டவன்… 

இத கழுத்துல போட்டு இருக்க புடிச்சிருக்கு டி… அந்த முத்து ஒவ்வொரு தடவையும் இடிக்கும் போதும்.. உன்னோட கால் விரல் என் நெஞ்ச வருடுற மாதிரி ஒரு ஃபீல்.. அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது… என்றான் குரலில் மென்மையைக் கூட்டி… அந்த கழுத்தில் தொங்கிய ஒற்றை முத்தை எடுத்து முத்தம் வைத்துக் கொண்டே…

 

ஆனா எனக்கு பிளாட்டினம் செயின் தான் புடிச்சிருந்தது…

 

புடிச்சிருந்தா தா? இல்ல வசதியா இருந்ததா என்னை இழுக்குறதுக்கு?… ஆரம்பிக்கும்போது  வேணாம் வேணாம்னு சொல்றது… முடிக்கும்போது நகர விடாம… செயினை புடிச்சு இழுத்து மேல போட்டு இறுக்கி கட்டி புடிச்சுக்கிறது… என்று அவளை சீண்ட…

 

தேவா… ஷு… என்ற சிணுங்களுடன் அவனது வெற்று மார்பில் “மொத்” என்று ஒரு அடியை போட்டாள்…

 

**********

 

சோகமே உருவாய் இரு கைகளையும் கன்னங்களுக்கு தாங்கி அலுவலகத்தில் அமர்ந்து இருந்தான் விக்ரம்…

 

வந்ததுல இருந்து இப்படியே உட்கார்ந்து இருக்க… என்னடா மச்சான் ஆச்சு ஏதாவது சொன்னா தானே தெரியும்… என்று ஆதி கேட்க..

 

வர வர உன்னோட தங்கச்சியோட பிஹேவியரே சரி இல்லடா.. என்ன ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சிட்டா… 

 

என்னடா பண்ணா? அடிக்கிறாளா? என்றான் அருண்….

 

ம்ம்… அவகிட்ட நான் வாங்காத அடியா… இப்ப எல்லாம் வார்த்தையால அடிக்கிறா மச்சான்… எரிஞ்சு எரிஞ்சு விழுகுறா… ஊர்ல இருக்கிற எல்லா கோவிலுக்கும் போகணும்னு அடம் பிடிக்கிறா..  ஒரு பரிகாரம் விடுவதில்லை… ஓவர் டிப்ரஷன்ல இருக்குறா போல அவளை பார்த்தாலே தெரியுது ஆனா ஹாஸ்பிடல் கூப்பிட்டா வர மாட்டேங்குற… கவுன்சிலிங் போகலாம்னு சொன்னா கண்டமேணிக்கு திட்டுறா… விக்ரமின் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது… இப்படியே போனா எங்க மெண்டல் ஆயிடுவாளோனு எனக்கு பயமா இருக்குடா… 

 

அவளோட இந்த நிலைமையை பார்த்து எனக்கு குழந்தையே வேணாம் நீ மட்டும் போதும் அப்படின்னு ஆறுதல் சொன்னா….

 

ஆரம்பத்திலிருந்து நீ குழந்தை வேணாம்னு சொல்றதுனால தான் நமக்கு குழந்தை பிறக்கல அப்படின்னு சண்டைக்கு வரா…

 

சத்தியமா என்ன பண்றதுன்னு புரியலடா இப்ப எல்லாம் வீட்டுக்கு போகவே புடிக்கல சொல்லப்போனால் அவளை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு இன்னைக்கு என்ன பிரச்சனை பண்ண போறாளோ அப்படின்னு… 

 

டாக்டர்.சைலஜா கிட்ட இத பத்தி ஏதாவது பேசி பார்க்கலாமேடா என்றான் ஆதி.

 

கேட்டு பார்த்தேன் டா… நேரடியா கவுன்சிலிங் போங்க அப்படி இல்லன்னா டிப்ரஷன் டேப்லெட் வாங்கி அவங்களுக்கு தெரியாம கொடுக்க பாருங்க… ஆனா அதுலயும் ஒரு பிரச்சனை இருக்கு ஒருவேளை அவங்களுக்கு தெரியாம நீங்க மாத்திரை கொடுக்கறது அவங்களுக்கு தெரிஞ்சு போனா ரொம்ப டிப்ரஷன் ஆவாங்க…. அதன் பின் எந்த மாதிரி வேணாம் முடிவு எடுக்க வாய்ப்பு இருக்குன்னு சொன்னார்… 

 

இதையெல்லாம் அவளது இடத்தில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டு இருந்த மலருக்கு ஒரு எண்ணம் தோன்ற… நன்றாக யோசித்து அதை நல் வழியில் செயல்படுத்த முடிவெடுத்தாள்…

 

விக்ரம் அண்ணா… உங்களுடைய இந்த பிரச்சனையை நான் சால்வ் பண்ணி தரேன்… எனக்கு என்ன தருவீங்க என்று டீல் பேசினாள்…

 

என்ன சொல்ற மலர் உன்னால இதை சால்வ் பண்ண முடியுமா… 

 

முடியும் என்று மேலும் கீழும் தலையை ஆட்டினாள்..

 

எப்படி?.. என்று கேட்டான் ஆச்சரியமாக…

 

அதை மட்டும் கேட்காதீங்க ஆனா நான் என்ன சொன்னாலும் நீங்க கேக்கணும் அப்படி கேட்டீங்கன்னா உங்களோட இந்த பிரச்சனையை ஒரே நாள்ல நான் சால்வ் பண்ணி கொடுக்கிறேன்..  என்றாள் உறுதியாக. 

 

நிஜமாவா? என்றான் விழி விரித்து.. 

 

ப்ராமிஸ்..  என்று அழுத்தி கூறியவள்… அப்படி சால்வ் பண்ணா எனக்கு என்ன தருவீங்க… என்றாள் இருப்புருவத்தை உயர்த்தி…

 

என்னோட சொத்துல 10% உனக்கு எழுதி வைக்கிறேன்.  என்றான் உடனடியாக.. 

 

வாயை மூடி சிரித்தவள்..  அதெல்லாம் ஒன்னும் வேணாம்… என்ன ஐஸ்கிரீம் ஷாப் கூட்டிட்டு போயி நான் சாப்பிடுற கேக் அண்ட் ஐஸ்கிரீம் எல்லாம் நீங்கதான் பில் பே பண்ணனும்… டீல்… என்று கட்டை விரலை தூக்கி காண்பித்தாள்…

 

டீல்… என்றான் நம்ப முடியாதவனாய்…

 

சரி வாங்க போலாம்..  என்று விக்ரமை அழைக்க.. 

 

எங்க போற மலர்?… என்றான் ஆதி.

 

போயிட்டு வந்து சொல்றோம்.. போற அப்போ எங்க போறன்னு கேட்காதீங்க… ( அதுசரி… என்று தலையை ஆடியவன் ரெண்டு பேரும் போயி ஏதாவது புது பிரச்சினையை இழுத்துட்டு வராம இருந்தா சரி என மனதிற்குள் நினைத்துக் கொண்டான் ) 

 

விக்ரமுடன் நேராக சென்ற இடம் சைலஜா மருத்துவமனை..  விக்ரமை வெளியில் அமர வைத்துவிட்டு அறைக்குள் சென்றவள் டாக்டர் இடம் பேசிவிட்டு ஒரு பைல் ஒன்றை வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள்…

 

வெளியே வந்தவள் நேராக அழைத்தது அகல்யாவை… ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்றும் உடனடியாக காபி ஷாப் வரவேண்டும் என்றும் அகல்யாவிடம் தகவல் தெரிவித்துவிட்டு காபி ஷாப்பில் காத்திருந்தாள்…

 

விக்ரம் காரை ஒரு இடத்தில் பார்க் செய்துவிட்டு காபி ஷாப்பிற்கு எதிரே இருந்த ஹோட்டலில் அமர்ந்து இருந்தான்…

 

அகல்யா வந்து மலரிடம் பேச ஆரம்பிக்க…. இருவரும் ஏதோ காரசாரமாய் விவாதித்துக் கொண்டனர்… கோவமாய்… மென்மையாய்… கவலையாய்… விரத்தியாய்… என பல வித பாவனைகளை முகத்தில் காட்டிக் கொண்டு இருந்தாள் அகல்யா…

 

அவளின் முகத்தை கையில் இருந்த ஐபோன் வழியே ஜூம் செய்து பார்த்தவன்…

 

மலர் என்ன சொல்றான்னு தெரியல அகி இவ்வளவு ரியாக்ஷன் காமிக்கிறா…  ரெண்டும் சேர்ந்து என் வாழ்க்கையில ஏதாவது இடியை இறக்காமல் இருந்தால் சரி… என்று மனதில் எண்ணிக் கொண்டான்… 

 

பரிட்சை தேர்வு முடிவு வரும் மாணவன் போல் கை கால்களை துறுதுறு என்ற ஆட்டிக்கொண்டே எதிர்பார்ப்புடன் அமர்ந்திருக்க…

 

சிறிது நேரத்தில் மலரிடம் இருந்து போன் வந்தது…

 

அண்ணா மிஷன் completed… இனி உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல… அண்ணி உங்ககிட்ட ரொம்ப நல்லபடியா நடந்துக்குவாங்க… நீங்க வீட்டுக்கு போங்க நான் இப்படியே ஆபீஸ் போறேன்… நான் பேசுனது மட்டும் உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி காட்டாதீங்க நீங்க வேற ஒன்னும் பண்ண வேணாம்… நம்ம டீல மறந்துடாதீங்க… பாய் என்று கூறிவிட்டு சென்றாள் மலர்…

 

அவ்வளவுதானா என்பது போல் பார்த்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான் விக்ரம்…

 

அடுத்த நாள் காலையில் அலுவலகத்தில்.. 

 

லா லல லல லா… என்று ரஜினியின் ஸ்டைலில் பாடிய படியே… அதீத மகிழ்ச்சியுடன் இரண்டு கிலோ ஐஸ்கிரீம் கேக்குடன் உள்ளே நுழைந்தான் விக்ரம்.

 

என்னடா ஓவர் பூரிப்பா இருக்க என்று அருண் கேட்க…

 

எங்கடா என் வாழ்க்கைல விளக்கேத்தி வச்ச என்னோட குல தெய்வத்தை..  என்று கேட்டான் விக்ரம்…

 

அரை நாளில் அப்டி என்ன நடந்தது என்று ஆதியும் அருணும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top