அசுரன் 127
அலைகள் உடனே ஓடி விளையாடிக் கொண்டிருந்தாள் நந்தினி…
கரையில் ஒற்றை காலை நீட்டி உட்கார்ந்து கைகளால் மண்ணில் கோலம் போட்டபடி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்…
வைட் சர்ட் அண்ட் ஃபார்மல் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து இருந்தாள்… எப்பொழுதும் எளிமையான மாடல் உடைகளையே அணிபவள்… ஒரு வருட காதலில் ஒரு முறை மட்டுமே சேலை கட்டி பார்த்திருக்கிறான்..
இன்டர் காலேஜ் மீட்…
பலதரப்பட்ட போட்டிகளில் முதன்மை பரிசு வாங்கி அங்கிருந்தவர்களை கவர்ந்தாள்… முக்கியமாக நெருங்கி வரும் ஆண்களை அவள் பார்த்த திமிர் பார்வை… அவளை அடைய சொல்லி அருணின் மனம் வேண்ட… அவளைப் பற்றி விவரங்கள் தெரிந்து கொண்டான்… பக்கத்து காலேஜில் படிக்கும் அவளை.. பஸ் ஸ்டாப்பில் சந்தித்து, பின் தொடர்ந்து பல வித்தைகள் புரிந்து… நட்பாய் பழக ஆரம்பித்து…. காதல் மன்னன், காதலில் கவிழ்த்து விட்டான்…
காதலனின் உண்மை முகம் புரியாமல் ராமன் என்று நினைத்துக் கொண்டு இருந்தாள் அவள்…
ஓவர் பொஸசிவ்… தன் அழகிய காதலன் மீது யார் கண்ணும் பட விடுவதில்லை…
அவளுடன் காதலில் இருக்கும் பொழுது அவளுக்கு உண்மையாய் தான் இருந்தான் அவன்… ஆனால் ரசனைகளுக்கு தடை போட முடியாதே… முன் காதல்களை வைத்து அவளின் சந்தேக கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினான் இவன்…
ஒரு வருட முடிவில் இருவரின் ஈகோவும் வெளியே வர…
அருணின் எண்ணிக்கை அற்ற முன் காதல்களை தெரிந்து… மனம் உடைந்து போனவள்… உன்ன மாதிரி ஒரு பொறுக்கி கிட்ட மாட்டி நீ சீரழிந்து தான்டா நிப்ப என்று அவள் சாபம் விட…
இவளுக்காய் உண்மையாய் நடந்து கொள்ள நினைக்கும் அவனை… தினமும் சந்தேககேள்வியால் வறுதெடுக்கும் கோவத்தில்…
உன்ன மாதிரி ஒரு சந்தேக பேய் கிட்ட மாட்டி, உன் வாழ்க்கை நாசமா தாண்டி போகும் என்று அவன் சாபம் விட… அன்றுமுதல் அவர்களின் காதலும்.. முடிவுக்கு வந்தது…
அருணின் காதல் வாழ்க்கையில் முழுதாய் ஒரு வருடம் காதலில் இருந்தது இவளுடன் தான்…
“அருண் இங்க வா… கடல்ல வந்து காலை வை” என்று அவள் சத்தமிட்டு அழைத்து அருணை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தாள்…
அவன் வரவில்லை என்று மறுத்து தலை அசைக்க…
அவளும் வந்து அருணின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்…
ரிலாக்ஸா இருக்கலாம் தானே பீச்சுக்கு வந்தோம்… இங்கேயும் வந்து மூஞ்சிய தூக்கி வெச்சிருக்க… என்று கைகளில் ஒட்டிய மண்ணை தட்டிக் கொண்டே பேசினாள்…
சரி இப்ப நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு…
மலர லவ் பண்ணியோ?…
இல்லை என்று தலையசைத்தான் அவள் பக்கம் திரும்பவில்லை…
ரதிய?
அதற்கும் இல்லை என்று பதில்…
அப்புறம் யார நெனச்சுடா இப்படி ஒக்காந்து இருக்க…
ஆதியோட லவ்வ பார்த்ததுக்கு பின்னாடி தான் தெரியுது என் வாழ்க்கையில லவ்வுன்னா எனக்கு என்னன்னே தெரியாது போல… ஆக்சுவலா எனக்கு லவ் பண்ணவே தெரியல… என்றான் விரக்தி புன்னகையுடன்…
லூசு மாதிரி பேசாதடா… எல்லாரும் பேட்டன் போட்டா லவ் பண்ண முடியும்… அவங்க அவங்களுக்கு எப்படி பிடிக்குமோ அப்படித்தான் லவ்வ காமிக்க முடியும்… இந்த பார்மட்ல தான் லவ் பண்ணனும் அப்படின்னு இங்க எந்த ரூலும் இல்லை…
பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தான்…
சரி… என்ன விடு உன் லைஃப்ல என்ன ஆச்சு என்றான் அருண்.
வீட்ல தேடி புடிச்சு ஒருத்தன கல்யாணம் பண்ணி வச்சாங்க… என்ன பத்தி, உன்ன பத்தி… எல்லாம் தெரிஞ்சு தான் கல்யாணம் பண்ணான்… சிக்ஸ் மந்த் நல்லா தான் லைஃப் போச்சு… அப்புறம் என்ன கிறுக்கு புடிச்சதோ… டெய்லி சந்தேகம்.. அசிங்க அசிங்கமா கேள்வி.. வீட்ல சொல்லி பார்த்தேன்… இது தான் உன் வாழ்க்கை நீ தான் பாத்துக்கணும்னு சொல்லிட்டாங்க…
ஒரு வருஷம் பொறுத்துக்கிட்டு திருந்துவான் என்று எதிர்பார்த்தேன்… அடிக்க ஆரம்பிச்சான்… இதுக்கு மேல பொறுக்க முடியாதுன்னு விலகி வந்துட்டேன்… லீகலா டிவோர்ஸ் வாங்கிட்டோம்… நிம்மதியா இருக்கோம்…
என்ன பத்தி எதுக்கு சொன்ன… அதுதான் பிரச்சனையோட ஆரம்பப் புள்ளினு நினைக்கிறேன்… என்றான் கடலை பார்த்தபடியே…
அவன், அவனுக்கு இருந்த எல்லா லவ்வ பத்தியும் என்கிட்ட சொன்னான்… நான் பெருந்தன்மையா ஏத்துக்கிட்டேன்… நான் என் சைடு இருந்தா ஒரு லவ் பத்தி தான் அவன் கிட்ட சொன்னேன்… அவனால என்ன ஏத்துக்க முடியல… நான் கெட்ட பொண்ணுனு முடிவு பண்ணிட்டான்… அதனால கொரியர்காரன், கேஸ் போட வர்றவன், ஸ்விக்கி… அப்படின்னு எல்லார் கூடையும் சேர்த்து வச்சு பேசுவான்… அப்புறம் என் அண்ணன் தம்பி கூட சேர்த்து வச்சு பேச ஆரம்பிச்சான்…. பின்னாடி என் குழந்தை கூடையும் சேர்த்து வச்சு பேசுவான் அதனால போடா மயிறுனு தூக்கி போட்டுட்டு வந்துட்டேன்…
எங்க வீட்டுக்கு போகல.. போக தோணல… கையில படிப்பு இருந்துச்சு…
நான்… என்னோட வேலை… என்னோட சேலரி… நிம்மதியா, சுதந்திரமா இருக்கேன்… என்று கைகளை விரித்து கூறினாள்…
அப்பொழுதுதான் கவனித்தாள் அங்கு நீரில் விளையாடும் இளம்பெண்கள் அருணை சைட் அடிப்பதை.. இத்தனை வருஷத்துல இது மட்டும் இன்னும் மாறல என்று நினைத்தவள்…
மச்… அப்படி உன்கிட்ட என்ன தான் இருக்குதோடா.. இந்த பொண்ணுங்க எல்லாம் உன்மேலையே வந்து விழுகுறாங்க… என்று கூறி அங்கிருந்த பெண்களை கண்களால் காண்பிக்க…
பெண்களை நிமிர்ந்து பார்த்தவன்.. மீண்டும் குனிந்து… சின்ன பொண்ணுங்கடி… ஏதோ ஆள் கிடைக்காமல் சைட் அடிக்குது.. என்றான் நிதானமாய்…
பார்டா… இது எப்போ இருந்து… அவ்வளவு நல்லவனா டா நீ… என்றாள் கேலியாய்…
நான் எப்பவுமே எனக்கு உத்தமன் தான் டி… என் கூட பழகுன எந்த பொண்ணையும் நான் போர்ஸ் பண்ணதே இல்ல… பொண்ணுங்க கிட்ட கேட்டேன்… கொடுத்தாங்க… எடுத்துக்கிட்டேன்… எனக்கு இது தப்பா தெரியல.. என்றான்..
ஹாஹ..ஹாஹ… என்று சிரித்தவள்…
ஏண்டி சிரிக்கிற…
எடுத்துகாட்டா ஒரு விஷயம் சொல்றேன் ஆனா கம்பேர் பண்றேன்னு மட்டும் நினைக்காத…
சைத்ரா ஆதிய கூட்டிட்டு போயி எடுத்துக்கோ சொன்னப்ப… முடியாதுன்னு சொல்லிட்டு ஓடி வந்தாரே… எங்க ஆபீஸ் ஃபுல்லா அவரை ஆம்பளையே இல்லன்னு பேசிப்பாங்க… நீ உத்தமன்னா அவரை என்ன சொல்றது… என்றாள்.
வாய்ப்பு கிடைக்காம ஒழுக்கமா இருக்கிறது பெரிய விஷயமே இல்ல அருண்… வாய்ப்பு கிடைச்சும் ஒருத்தன் வாழ்நாள் முழுக்க ஒழுக்கமா இருக்கிறது தான் இங்க விஷயமே… என்றாள்…
புரியுதுடி… வாழ்க்கை செருப்பால அடிச்சு… ஒழுக்கமா இருக்கிறது எவ்வளவு முக்கியம்னு புரிய வச்சிடுச்சிடி…
எனக்கு அப்படி இல்லப்பா என்றாள் கூலாய்…
என்ன என்பது போல் அவளை திரும்பி பார்க்க…
பெல்ட்டால அடிச்சு புரிய வச்சதுடா எனக்கு… என்றாள் சிரித்தபடியே…. இதழ்கள் புன்னகைத்தன ஆனால் கண்கள் ஏனோ கலங்கின…
எதை?
ஒருதங்க நமக்கு உண்மையாய் இருக்கணும்னு நினைக்கும்போது முடிஞ்சு போன கடந்த காலத்தை குத்தி குத்தி காமிக்கிறது… எப்படி ரண வேதனையா இருக்கும்னு… புரிஞ்சது என்றாள்…
பின் ஒரு கணம் அமைதியாய் இருந்தவள்… நிதானமாய் தொடர்ந்தாள்…
ஸ்டில் ஐ பீல் கில்ட்டி… சாரி அருண்… என்றாள்.. கண்கள் கலங்கியபடியே…
ஏய்!… இதுக்கு எதுக்குடி இப்ப அழுகுற அதெல்லாம் நான் மறந்துட்டேன் விடு… என்று கூறி அவள் கழுத்தின் மேல் ஒரு கையை போட்டு தன் தோளுடன் கட்டிக் கொண்டான்…
மன்னிச்சிட்டேன் சொல்லு அப்பதான் மனசு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…
அப்படியெல்லாம் சொல்ல முடியாது…
நீ என் ஒருத்தன் கிட்ட மன்னிப்பு கேட்டா போதும் மனசு நிம்மதியாயிடும்…
நான் எத்தனை பேர் கிட்ட டி போயி மன்னிப்பு கேட்கிறது… கூட துணைக்கு நீயும் இரு… என்றான்.
அடப்பாவி அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி தானடா உன்னை நல்லவன் என்று சொன்னேன்… அதுக்குள்ள வில்லத்தனம் காட்டுற… என்று அவன் முதுகில் ஓங்கி ஒரு அடி போட்டு சிரித்தாள்…
ஸ்… ஆ… வலிக்குதுடி எரும… என்று இருக்கைகளாலும் தட்டு தடுமாறி முதுகை தேய்த்தான்…
சரி இப்ப சொல்லு.. எதுக்கு ஆபீஸ்ல எதையோ பறி கொடுத்த மாதிரி உட்கார்ந்து இருந்த…
மலர் பிரக்னண்டா இருக்கா… இதைக் கேட்டதும் ஆதியோட கண்ணு கலங்குச்சு… அவனோட கல்யாணத்துலையும் தாலி கட்டும்போது கண்ணெல்லாம் கலங்கி இருக்கும்… விக்ரமும் அகல்யா கழுத்தில் தாலி கட்டும்போது கண் கலங்கி நின்னான்… முன்னாடியெல்லாம் யோசிப்பேன் ஹாப்பியா என்ஜாய் பண்ண வேண்டிய நேரத்துல எதுக்கு இவனுங்க அழுகுறானுங்க அப்படின்னு… இப்ப தோணுது… வாழ்க்கையில எத எதையோ தேடி உண்மையான சந்தோஷத்தை மிஸ் பண்ணிட்டோம் அப்படின்னு… அவனுங்களயோட அந்த ஃபீல நான் அனுபவிக்கவே இல்லை இன்னும்.. என்றான் கசந்த புன்னகையுடன்…
இருவரும் எழுந்து காலார நடக்க தொடங்கினார்கள்… கடல் காற்று இருவருக்கும் இதமாய் தெரிந்தது…
ஓ… இது தான் விஷயமா… உங்க அம்மா கிட்ட சொல்லி ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்க டா… அப்புறம் குட்டி பாப்பா வரும்போது உனக்கும் அது மாதிரி கண்ணு கலங்கும் என்றாள் விளையாட்டாய்…
போதும்டா சாமி என்று அவள்புறம் கையெடுத்து கும்பிட்டவன்… ஏற்கனவே எங்க அம்மா பொண்ணு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க… நான் வீட்டு பக்கமே போக கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கேன்… இனிமேல் எல்லாம் கல்யாணம் பண்ணிட்டு ஒருத்தி கூட வாழ்றது நடக்காத காரியம்…
ஏன்டா… பொண்ணுங்கள வெறுக்கிறியா என்ன?..
அத…. எப்படி உன் கிட்ட சொல்றதுன்னு தெரியல… என்று திக்கி திணறியவன்…
சும்மா சொல்லு… என்கிட்ட மறைக்கிறதுக்கு உன் வாழ்க்கைல ஒன்னும் இல்ல… என்றவளை… ஒரு நிமிடம் நிமிர்ந்து பார்த்துவிட்டு… எனக்கு இண்டிமேட்டா இருக்கும்போது கண்டினியூவா வாமிட் வருது… என்னால இன்டிமேட்டா இருக்க முடியல… இத ஒருத்தி கிட்ட சொல்லி அவ என்ன கேவலமா பாத்து காரி துப்பிட்டு போறதுக்கு கடைசி வரைக்கும் நான் கல்யாணமே பண்ணாம இருக்கலாம்… என்றான்.
சரி விடு உனக்குனு ஏதாவது ஒரு இளிச்சவாச்சி கிடைப்பா…
இவ்வளவு வாய் பேசுற நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானடி…
எங்க வீட்ல சம்மதம் வாங்கி கல்யாணம் பண்றது எல்லாம் சின்ன விஷயம் இல்லை.. அதுல எனக்கு விருப்பமும் இல்லை…
நீயேன் உங்க வீட்ல கேக்குற உன்ன கண்டுக்காம விட்டவங்களோட எண்ணத்தை எதுக்கு நீ மதிக்கணும்…
நான் என் வீட்டுல ன்னு சொன்னது என் வீட்ல இருக்க ஒரே ஆளு… என்னோட பையன்..
அருணின் கால்கள் ஒரு நிமிடம் நின்றது…
என்னது குழந்தை இருக்கா… என்றான் அவள் பக்கம் திரும்பி…
ம்ம்ம்… பின்ன ஒரு வருஷம் வாழ்ந்தவன் சும்மாவா இருந்திருப்பான்… என்று புருவங்களை உயர்த்தி காட்டினாள்…
அது சரி… என்று தலையசைத்தவன் நடையை தொடர்ந்தான்….
அவள் பேச்சை தொடர்ந்தாள்…
இனிமேல் புதுசா ஒருத்தனை கல்யாணம் பண்ணி இவன்தான் உன்னோட அப்பான்னு சொல்லி, என் பையனுக்கு அறிமுகப்படுத்தி,… அவன் என்னோட பையன அவனோட குழந்தையா நினைக்கணும்… இதெல்லாம் நடக்கிற காரியமா… இருக்கிற நிம்மதியை கெடுத்துட்டு அலைய சொல்றியா… அப்படியே எவனாவது ஒருத்தன கல்யாணம் பண்ணாலும் எனக்கு ஏதோ வாழ்க்கை பிச்சை போட்ட மாதிரி அவன் நினைப்பான்… இவன மாதிரியே இன்னொருத்தனும் வந்து என்னை சந்தேகப்பட மாட்டான் என்று என்ன நிச்சயம்… அதனால இந்த கல்யாண ஆசை எல்லாம் இல்லை.. என்றாள்…
கார் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்…
ரியலி ஐ ஃபீல் ரிலாக்ஸ்… தேங்க்ஸ் போர் திஸ் மொமெண்ட்… என்றான்… சுற்றுப்புறத்தை ரசித்தப்படியே… இப்போ இவ்வளவு பேசுற நீ… ஏண்டி இத்தனை நாளா என்கிட்ட பேசவே இல்ல…
நீ என்ன பாத்து ஒரு கேவலமா ஒரு லுக்கு விடுவ பாரு… அத பாத்தபின்னாடி எவடா உன் கிட்ட வந்து பேசுவா… இப்போ ரெண்டு குட்டி சுவரும் சேர்ந்து ஒரு ஃப்ரெண்ட்ஷிப் மெய்ண்டைன் பண்ணலாம்னு ஒரு எண்ணம் என்றாள் தோள்களை குலுக்கி….
ஒரு நிமிஷம் உன்ன போய் நல்லவ-னு நினைச்சேன் பாரு… என்று தன் தலையில் அடித்துக் கொண்டான்…
வாய் இந்த காரணம் சொன்னாலும்… உண்மையான காரணம் அவளுக்கு மட்டுமே தெரியும்…
அனைத்தையும் இழந்தது போல் துவண்டு போயிருக்கும் அவனது முகத்தை காண சகிக்கவில்லை அவளுக்கு… இன்றும் யாரும் இல்லாமல் தனிமையில் உட்கார்ந்து ஏதாவது மனதை குழப்பிக் கொண்டிருப்பான் என்று தான் அருகில் வந்து அமர்ந்தாள்…
உடைந்துபோனவளுக்கு… உடைந்து போவதின் வலி புரிகிறது… அவ்வளவே…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️