அசுரன் 128..
புயல் வேகத்தில் வீட்டின்னுள் நுழைந்தவன்… மனையாளை கரகம் சுற்றி கட்டி அணைத்து முத்தமிட வேண்டி வீடு எங்கும் தேட… படுக்கையில் அமைதியாய் படுத்திருந்தாள் மலர்..
மெல்ல நான்கு காலில் மெத்தையில் தவழ்ந்து அவள் அருகே சென்று படுத்தவன்… அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்…
உச்சந்தலையில் முத்தம் வைத்தபடியே… என்ன ஓடி வந்து கட்டிபுடிச்சுப்பன்னு பார்த்தேன் என்ன இங்க வந்து படுத்திருக்க…
தல சுத்துதுங்க…
மெல்லிய புன்னகை… முகம் எல்லாம் பூரிப்பு அவனுக்கு…
நேர்ல வந்து இருக்கேன் முகத்தை பார்த்து சொல்லுடி ..
ம்ஹும்… கூச்சமா இருக்கு…
என்னோட முகத்தைப் பாரு… என்று அவளது தாடையை பிடித்து நிமிர்த்த… கண்ணை மூடி இருந்தாள்…
கண்ண தொறடி… என்ன பாரு.. என்று தாடையை ஒற்றைக் கையால் பிடித்து குலுக்க …
மெல்ல கண்ணை திறந்தாள்…
இப்ப சொல்லு என்ன விஷயம்… என்னென்னமோ மெசேஜ் அனுப்பி இருந்த எனக்கு ஒன்னும் புரியல என்றான்.. மாயக்காரன்…
தன் வாயால் கேட்க நினைக்கிறான் என்று புரிந்து கொண்டாள்…
அவன் இரு கைகளுக்கும் நடுவே நகர்ந்து படுத்தவள் அவனின் ஒரு கையை எடுத்து அவளது வயிற்றில் வைத்துக் கொண்டாள்… உணர்வுப்பூர்வமாய் தெரிந்தான் ஆதி…
அப்பாவா ஆன பின்னாடி ரொம்ப அழகா ஆயிட்டீங்க என்றாள்… அவனது முகத்தை பார்த்தபடி… தலையணையின் கீழ் இருந்த இரட்டை கோடுடன் கூடிய பிரக்னன்சி கிட்ட எடுத்து அவனிடம் நீட்டினாள்…
அதை கையில் வாங்கி பார்த்தவன்… உணர்ச்சி கொந்தளிப்பில் அவளை இறுக கட்டிக் கொண்டான்… அவனை ஆசுவாசப்படுத்தும் நோக்குடன் முதுகை மெதுவாய் தடவி கொடுத்தாள்… பிடரியை வருடிவிட்டாள்…
தேங்க்ஸ் டி என்றான்…
எதுக்கு?…
எனக்கு ஒரு குடும்பத்தை கொடுத்ததற்கு… அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை.. நீண்ட அணைப்பு.. அவன் இதழ் படும் இடத்தில் முத்தம்…
உணர்வுகள் மட்டுப்பட்ட பின்… அவளை விடுத்து… இதழில் ஓர் ஆழ்ந்த முத்தம்… தன் மனையாள் தந்த பரிசுக்காக…
பின் நகர்ந்து சென்று… சேலை விலக்கி, வயிற்றில் மென் முத்தங்கள்… கூச்சத்துடன் நெளிந்து கொண்டே இருந்தாள் பாவை…
இத்தனை நாள் பார்த்தவுடன் அவனை போதை ஏற்றும் நாபி குழி இன்று ஏனோ தாய்மை உணர்வை ஏற்றது…
ஹாஸ்பிடல் போலாமா என்றான்…
முகத்தை திருப்பிக் கொண்டு பதில் எதுவும் சொல்லவில்லை…
என்னடி ரொம்ப முடியலையா…
வந்த முதல் நாளே எனக்கு மட்டும் ஒரு முத்தம் உங்க குழந்தைக்கு மட்டும் இத்தனை முத்தம்… வெளியில வந்த பின்னாடி என்ன எல்லாம் ஞாபகம் வச்சுருப்பீங்கலானு எனக்கு தெரியல… என்றாள் செல்ல கோபத்துடன்…
ஹா ஹா… என்று வாய்விட்டு சிரித்தவன்… குட்டி மேல ஆசை வர்றதுக்கு காரணமே அது உன்கிட்ட இருந்து வர்றதுனால தாண்டி… என்றான்.. சுருங்கிய மூக்கை கடித்த படி…
கர்ப்பத்தை உறுதி செய்த பின் மருத்துவர் சைலஜா விற்கு முன் இருவரும் அமர்ந்திருந்தனர்..
எப்படி கவனித்துக் கொள்ள வேண்டும் என்ன சாப்பாடு கொடுக்க வேண்டும் என்று ஆயிரம் கேள்விகளை இத்தனை நாள் எங்கே ஒளித்து வைத்திருந்தான் என்று தெரியவில்லை பதில் சொல்லி களைத்தார் மருத்துவர்…
என்ன வகையான உடை அணியலாம் என்ற கேள்வி வரை பொருத்தவர்…. என்ன நிறத்தில் அணிய வேண்டும் என்று கேட்டவுடன் பொங்கி விட்டார்… ஆதி திஸ் இஸ் டூ மச்… “உயிர வாங்காம எந்திரிச்சு வெளிய போடா என்று திட்டாமல்”… ப்ளீஸ் ஆதி கெளம்பு என்று மரியாதையாக அனுப்பி வைக்க..
வெளியே சென்றவன் திரும்பி உள்ளே வந்து… கணவன் மனைவி ஒன்னா இருக்கலாமா? குழந்தைக்கு எதுவும் பிரச்சனை இல்லையே என்று அவன் கிசுகிசுக்க…
அவனின் டார்ச்சர் தாங்க முடியாமல்… பத்து மாசத்துக்கு அவ கிட்டயே நீ போகக் கூடாது போதுமா என்றார் சைலஜா…
ஐயோ… எனக்கு இன்னொரு சந்தேகம்… கட்… என்று அடுத்த கேள்வியை எடுக்க…. மலர்!.. என்று மருத்துவர் கத்த… வெளியே இருந்து உள்ளே வந்தவள் அவனின் கையைப் பிடித்து தரத் தரவென இழுத்து வந்தாள்…
ஏய் பொறுடி எனக்கு இன்னும் கொஞ்சம் கேள்வி இருக்கு அதுக்குள்ள எதுக்கு இழுத்துட்டு வர…
போதும் தேவா… அவங்களே டென்ஷன் ஆயிட்டாங்க…
நாம வேணா வேற ஹாஸ்பிடல் போய் பார்ப்போமா… என்று அவன் கேட்க உங்களுக்கு எந்த கேள்வினாலும் என்கிட்ட கேளுங்க எனக்கு பதில் தெரியும் என்று கூறிவிட்டு அவள் நடக்க ஆரம்பித்தாள்…
ஏய் மெதுவா நட டி… என்று கத்தியபடியே அவளை காரில் ஏற்றி வீட்டுக்கு வர… அன்றிலிருந்து தனது அட்டகாசத்தை ஆரம்பித்தான்… வீட்டில் சாரதாம்மா மலரை பார்த்துக்கொள்ள நியமிக்கப்பட்டார்… அது இல்லாமல் சமையலுக்கும், வீட்டை சுத்தம் செய்ய வேலைக்காரர்கள் நியமிக்கப்பட்டார்கள்…
படுத்திருக்கும் அவளின் பக்கத்தில்… அமர்ந்து இதமாய் தோலை தட்டிக் கொடுத்தபடி எதையோ யோசித்துக் கொண்டே இருந்தவன்…
சிட்டு எப்ப-டி வாந்தி எடுப்ப… என்றான்…
விசித்திரமான கேள்வியை கேட்டு விழுக்கென்று என்று நிமிர்ந்து பார்த்தாள்..
நீ வாந்தி எடுத்தா கையில புடிக்கலாம்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன் டி… என்று இருக்கையையும் சேர்த்து அவள் முகத்திற்கு முன் காமிக்க…
குபீர் என்று சிரிப்பு வந்து விட்டது அவளுக்கு… எந்த படத்துல பார்த்தீங்க?… என்றாள்… வாயில் கை வைத்து சிரித்தபடி…
நிறைய படத்துல பார்த்தேன் டி… மாங்கா கேட்டாங்க, வாந்தி எடுத்தா கையில புடிச்சாங்க… ஒரு படத்துல பட்டாம்பூச்சி கூட கேட்டாங்க.. நீ என்னடி ஒன்னுமே கேட்க மாட்டேங்குற… என்றான் முகத்தை ஏமாற்றமாய் வைத்துக்கொண்டு…
அவன் கொஞ்சம் முகத்தை இருக்கையால் சுற்றி திருஷ்டி கழித்தவள்.. ஒற்றை கையால் அவன் உதட்டை அள்ளி முத்தமிட்டு… அதுக்கெல்லாம் இன்னும் கொஞ்ச காலம் ஆகும்… இப்போ உங்க குட்டி ரொம்ப குட்டி… என்றாள்…
சமையல்காரர்கள் இருந்தாலும் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு செய்து கொடுப்பது அவனே… விஷயம் அறிந்து வாசுகி, மலரை நேரில் சந்திக்க வர…
தம்பி நீங்க அவளை பார்த்துட்டு ரொம்ப கஷ்டப்படுறீங்க நான் வேணா ஊருக்கு கூட்டிட்டு போயிடட்டுமா என்று கேட்க தலையில் இடி இறங்கியது போல் ஆனது…
அவனின் முக அதிர்வை பார்த்து… வடிவேலின் முகம் ஞாபகம் வர மலருக்கே அடக்க முடியாமல் சிரிப்பு தான் வந்தது…
ஏதேதோ பேசி பத்து நாள் இருக்க வந்த வாசுகி இரு நாளில் ஊருக்கு திரும்பி அனுப்பி விட்டான்…
வாந்தி எடுக்கும் பருவமும் வந்தது… ஆதியின் கண்ணில் ரத்த கண்ணீரும் வந்தது… என்னடி இப்படி கிறங்கி போயிட்ட.. டார்க் சர்க்கில் எல்லாம் வருது… ஒருவேளை நான்தான் உன்னை நல்ல கவனிச்சுக்கலையோ… நீ வேணா உங்க அம்மா வீட்டுக்கு போறியா… என்று உட்கார்ந்து படி அவளை தன் மடியில் படுக்க வைத்து தொடர் வாந்தியால் புண்ணாகி எரியும் நெஞ்சை தடவி கொடுத்துக்கொண்டே அவள் தலைமாட்டில் உட்கார்ந்து புலம்ப…
எங்க அம்மா வீட்ல கூப்பிட்ட உடனே விட்டுடு தான் மறுவேலை பாப்பாரு என்று முனுமுனுத்தவள்…
இது நார்மல் தான் தேவா… சரி ஆகிடும்.. பயப்படாதீங்க… என்று தனது சோர்வை மறைத்துக் கொண்டு அவனுக்கு சமாதானம் சொல்லி ஓய்வாள்…
மருத்துவரின் தூக்கம் மலை ஏறியது… ஒவ்வொரு வாந்திக்கும் ஒவ்வொரு முறை கால் போனது… மலருடன் சேர்ந்து மருத்துவரும் சோர்ந்து போனார்…
ஸ்… ப்பா… விடுங்கடா… சுகர் பேசண்ட்டுடா நானு… என்னும் நிலைமை…
வாந்தி மட்டு பட்டு வயிறு பெரிதாகியது… தொட்டுப் பார்த்து கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்து… முகர்ந்து பார்த்து… அவன் படுத்தும் பாட்டில் தலையில் நான்கு கொட்டு வைத்து அனுப்ப தோன்றுகிறது… மலருக்கு…
கைநிறைய கண்ணாடி வளையலுடன்… கொஞ்சம் மேடிட்ட வயிற்றின் மேல் ஒற்றை கை வைத்து… பொறுமையாய் அவள் நடந்து வருவதை பார்ப்பதற்கே… தேவனுக்கு இருகண் போதவில்லை… அவன் நீண்ட கால்களுக்கு, அவள் பத்து எட்டு வைத்தால் அதை ஒரு ஏட்டில் இவன் கடந்து விடுவான்… இருந்தும் மனைவியின் கை பிடித்து மற்றொரு தோளில் மருத்துவ குறிப்புகள் அடங்கிய ஹேண்ட்பேக்கை மாட்டிக் கொண்டு… சிறு சிறு எட்டுகளாய் வைத்து அவளுடன் தான் ஏதாவது பேசியபடி பொறுமையாய் நடந்து வருவான்…
உக்கிரகாளியாய் உட்கார்ந்து இருந்தாள்… மூக்கில் புஸ் புஸ் என்று சூடான மூச்சுக்காற்று வந்து கொண்டிருந்தது…
அது என்ன எப்ப பாரு வயித்திலேயே கிஸ் பண்றீங்க… என் மேல பாசம் குறைஞ்சிடுச்சு… ஆசையும் குறைஞ்சிடுச்சு… இதுக்கு மேல நான் உங்களுக்கு தேவை இல்லை… என்று தழுதழுத்த குரலில் கூறிவிட்டு முகத்தை திருப்பி கொண்டாள்…
என்னவாம்… மலருக்கு…
காலையில் முகம் எங்கும் கணவன் முத்தமிட்டான்… தன்னை மறந்து அவன் இதழில் முத்தமிட போனவளை… இடையில் கை வைத்து தடுத்து விட்டான்…
வந்தது கோபம்… தான் வழிய வந்து கொடுத்த முத்தத்தை எப்படி தடுக்கலாம்… ஒரு வரி முத்தம் கேட்டால் இதழில் ஒரு நாவல் எழுதுபவன்… இப்பொழுதெல்லாம் முத்தமே கொடுப்பதில்லையாம்…
பின்னே கோவம் வராமல் என்ன செய்யும்… அதுவும் பிரக்னன்சி ஹார்மோன்கள் தலைவனை தானே முதலில் தேடுகின்றன… ஜூஸ் குடிக்க மாட்டேன் என்று தர்க்கம் செய்து கொண்டிருக்கிறாள்…
தலைவனின் பாடோ திண்டாட்டம்…
அன்று மருத்துவர் கோபத்தில் கூறியதை உண்மை என்று நம்பியவன்… இரண்டு மூன்று மாதங்களாக துணைவியின் இணை இல்லாமல் முறுக்கேறி இருக்கும் நரம்புகளை ஒற்றை முத்தத்தில் விழித்துக் கொள்ள வைக்க விரும்பவில்லை அவன்… அதனால் இதமான அணைப்பு.. மென் முத்தம்… கழுத்து வளைவில் தூக்கம் என ஹைக்கூ கவிதை போல் வாழ்ந்து வருகிறான்… தலைவியோ தன்மேல் காதல் குறைந்து விட்டது என ஒரே கூப்பாடு… ஊரைக் கூட்டி பஞ்சாயத்து மட்டும்தான் வைக்கவில்லை…
என்னென்னவோ கவர்ச்சி வித்தைகளை காட்டி பார்த்தும்… மன்னவன் மயங்காததால்… ஜூஸ் குடிக்காமல் தர்க்கம் செய்து கொண்டிருக்கிறாள்…
மற்ற நேரங்களில் உதட்டு சுழிப்புக்கும், ஒற்றைக் கடைக்கண் பார்வைக்கும், சொக்கி விழுபவன்… மனைவிக்கும் குழந்தைக்கும் ஆகாது என்று தெரிந்த பின் கிட்டே வருவானா?… கையில் எடுத்தான் விஸ்வாமித்திரர் அவதாரத்தை…
ஆனால் இன்றோ அவளின் பிடிவாத குணத்தை கண்டு..வேறு வலியில்லாமல் தன் தடித்த உதட்டை அவளின் பொறுப்பில் சிறிது நேரம் ஒப்படைக்க.. வெயில் காலத்தில் போடப்படும் ஆழ்துளை கிணறு போல் அடி ஆழம் வரை உதட்டை உறிஞ்சி எடுத்தவள்… கொஞ்சமும் பொறுமை இல்லாமல் உதடு எங்கும் பல் தடம். பூனைக்குட்டி பிராண்டியது போல் கடித்து வைத்திருந்தாள்…
“மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி”
ஸ்… ஆ.. என.. உதட்டை விரலால் இழுத்து காயங்களை கீழ்கண்ணால் அவன் குனிந்து பார்த்துக் கொண்டிருக்க…
ஒன்னும் தெரியாத குழந்தை போல்… மலங்க விழித்த படி கையில் ஜூசை வாங்கி மடக்கு மடக்கு என்று இதழ் பதித்து குடித்துக் கொண்டு இருந்தாள்…
இரண்டு கைகளையும் வயிற்றின் மகவையின் அசைவுக்காக காத்துக் கொண்டு இருந்தான்…
காத்திருப்புக்கு பரிசு ஒரு உதை…
இறக்கை இல்லாமல் வானத்தில் பறப்பது போல் உணர்ந்தவன்.. மீண்டும் கை வைத்து காத்திருக்க.. சீரான இடைவேளையில் மீண்டும் ஒரு உதை…
இப்ப நீங்க ரெண்டு பேரும் என்கிட்ட உதை வாங்க போறீங்க… காலையில உங்க ரெண்டு பேருக்கு வேற வேலை இல்லையா… என் வயிற பார்த்தா உங்களுக்கு புட்பால் கிரவுண்ட் மாதிரி தெரியுதா உதைத்து விளையாடுறதுக்கு…
தேவா உங்களுக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகலையா? கிளம்புங்க என்று அவள் அதட்ட…
சரிடா குட்டி நாம ரெண்டு பேரும் சாயங்காலம் வந்து விளையாடுவோம்… உங்க அம்மா ரொம்ப தான் சிலுத்துக்கு ரா… என்று கூறிவிட்டு… காதல் மனைவிக்கு வேண்டும் மட்டும் முத்தங்கள் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்றான்…
ஏழாம் மாதம் வளைகாப்பு வைக்க திட்டமிட்டு இருந்தார்கள்..
வளைகாப்புக்கு யார் யாரை அழைக்கலாம் என்று திட்டமிட்டு கொண்டு இருந்தாள் மலர்…
வளைகாப்புக்கு பின் தன் மனைவியை தன்னுடன் எப்படி இருக்க வைப்பது என்று திட்டமிட்டு கொண்டு இருந்தான் ஒருத்தன்.
எதிர்பார்த்த வளைகாப்பு நாளும் வந்தது..
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️