வீட்டிற்கு வந்த பின் மலரால் கட்டிலை விட்டு இறங்க முடியவில்லை… ஏனோ…
தேவாவின் அலப்பறைகள் ஆரம்பம் ஆகிவிட்டனவோ… இல்லை மித்ரனின் அலப்பறைகள்…
அம்மாவின் மார்பை விட்டு இறங்காமல் பால் குடித்துக் கொண்டே தூங்குவது பகலில்…
எதையோ தீவிரமாக யோசித்த படி கொட்ட கொட்ட விழி விரித்து வேடிக்கை பார்ப்பது இரவில்…. போதாக்குறைக்கு பொழுது போகாமல் அழுது கத்தி துணைக்கு தூங்கிக் கொண்டிருக்கும் இனியனையும், நேத்ரனையும் எழுப்பி விடுவான்…
இரண்டு பேர், மூன்று பேரை வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் திண்டாடினார்கள்…
டயப்பர் மாற்றும் இடைவெளியில் தந்தையின் மேல் உச்சா போனால் தான் மித்ரனுக்கு மனம் நிறைவடைகிறது… “இப்பதாண்டா குளிச்சிட்டு வந்தேன் ” என்றபடி இரண்டு கையால் தூக்கிய படி நிற்பான்…
தொட்டில் ஆட்டியே கைகள் ஓய்ந்தன… இரவு தூக்கம் இன்றி இருவருக்கும் கருவளையம் வந்தது…
தூங்குவதே பெரும்பாடாகி போக.. அப்புறம் எங்கு மத்த சமாச்சாரம் எல்லாம்…
இவன்தான் பிறக்கப் போறான்னு தெரிஞ்சிருந்தா… நான் ஆபரேஷனே பண்ணி இருக்க மாட்டேன் டி… அவன் வாய்விட்டே புலம்ப மலருக்கு தான் சிரிப்பை அடக்க முடியவில்லை…
தடுப்பூசி போட வந்தீங்களா என்று சைலஜா கேட்க… ஏதாவது சத்துஊசி இருந்தா போட்டு விடுங்க எங்களுக்கு, ஒன்னும் சமாளிக்க முடியல எங்களால… என்று தம்பதியினர் புலம்பினர்..
புலம்ப வைத்தான் மித்ரன்…
அலுவலகத்தில் இருந்து வந்தவன், குழந்தைக்கு பசியமர்த்தி கொண்டு இருந்த மனைவியின் பின்னால் சென்று வாசம் பிடித்து, மதிமயங்கி…
பூவாசம்,தேன்வாசம்,
பால் வாசமே….
பெண் வாசம், உன்னோடு கண்டேனடி… என்று மோகனமாய் முணுமுணுத்தப்படியே மலரின் வெற்று முதுகில் முத்தம் பதிக்க…
தந்தையின் குரலை கேட்டதும், தன்னை மறைத்திருந்த முந்தானை சேலையை விலக்கி… நோட்டமிட்ட குட்டி, பால் குடித்தபடியே மலரின் தோள்களில் இருந்த தந்தையின் கையை மெதுவாக எடுத்து விட்டான்…
மலரிடம் கண்களால் மித்ரனின் செயலை கவனிக்க சொன்னான்…. மீண்டும் ஆதி கை வைக்க… மீண்டும் மெதுவாய் அதை தள்ளி விட்டான்…
இடப்பக்கம் இருந்தால் தான் பார்க்கிறான் என்று வலப்பக்கம் நகர்ந்தால்… காம்பை கவ்விக்கொண்டே தலையை மட்டும் நகர்த்தி தந்தையை எட்டி பார்ப்பது…
பின்னால் நகர்ந்தால் கைக்கும், இடுப்புக்கும் இடையில் உள்ள இடைவெளியில் தலையை விட்டு பார்ப்பது… அவனுக்கு பின்னால் வந்த அமர்ந்தால் ஜெல்லி மிட்டாய் இழுப்பது போல் வாயில் இழுத்த படி தலையை அண்ணாந்து பார்ப்பது… மித்ரனுக்கும் தொடையில் ஒரு அடி கிடைக்கும்…
நீங்கதான் ஒரு இடத்துல உட்காருங்களேன் அவன் உங்களை தான் பார்க்கிறான்னு தெரியுதுல்ல அப்புறம் எதுக்கு சுத்தி சுத்தி வர்றீங்க… என்று ஆதிக்கும் திட்டு கிடைக்கும்…
எதுக்குடி என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்குறான்…
என்னடா குட்டி வேணும் என்று ஆதி பக்கத்தில் வந்து கொஞ்சினால்… கடை கண்ணால் ஆதியை பார்த்துக் கொண்டே “த்தோச்” “த்தோச்” என்ற சுவைக்கும் சத்தம் மட்டும் வரும்… உனக்கு இங்கு இனி இடமில்லை என்பது போல்…
அதைப் புரிந்து கொண்ட ஆதி… என்கிட்ட சரசம் பண்றதுக்குனே உங்க ஆத்தா உன்ன பெத்து இருக்காளா… வடிவேல் பாணியில் அவனிடம் கேட்டு வைக்க.. தந்தையின் குரலை கேட்டதும் சிரித்தபடியே அமுது பருகுவான்…
இனியன் ஆதியிடம் அமைதியாய் இருந்து கொள்வான். எப்பொழுதும் சிரித்த முகம் தான்… மித்ரனிடம் அடி வாங்குவதற்கு என்றே பிறந்த உடன் பிறப்பு… ஆனால் மித்ரன் மலரை விட்டு இறங்குவதில்லை… முன்னமே உறங்கிய குட்டிகளை அதிசயமாய் பார்த்துவிட்டு, மனையாள் அருகில் வந்தவன்…
அவனுங்க ரெண்டு பேருக்கே பத்தாது அப்புறம் எங்க எனக்கு கிடைக்க போகுது… ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்துக்கிறேன்டி.. என்று மனைவியிடம் கெஞ்சி சேலை தலைப்பினுள் நுழைந்து, முத்தம் பதிக்க போக… தூங்கிக் கொண்டிருந்த மித்ரனிடம் வீல் என்று அழுகை சத்தம்…
என்னமோ ஏதோ என்று அடித்து பிடித்து வந்து பார்க்க குழந்தை தூங்கிக் கொண்டுதான் இருந்தான் ஆனால் வாயில் இருந்து சத்தம் மட்டும் வந்தது….
கனவுல சாமி வந்து பயமுறுத்தி இருக்கும் போல என்று மலர் சொல்ல..
இவனோட நடவடிக்கையே சரியில்லடி… என்று யோசித்த படியே மலர் கன்னத்தில் முத்தம் பதிக்க முயன்றான்…
தூங்கிக் கொண்டிருந்தவன் உண்மையிலேயே கையை காலை ஆட்டி அழுகவே ஆரம்பித்து விட்டான்…
நான் சொல்லல… எனக்கு வில்லன் இவன்… என்று கூற…
என்ன இது… குழந்தையை போயி வில்லன்… அது இதுன்னு சொல்லிட்டு… உங்களுக்கு கிடைக்கலைனு பொறாமையில சொல்லாதீங்க…
என்று மாராப்பு சேலையை இழுத்து விட்டு கொண்டு உதட்டை சுழித்து சென்று விட்டாள்…
இருப்பினும் சுற்றிலும் குழந்தைகள் இருக்க தன்னிடம் நெருங்க முடியாமல் ஏங்கி தவிக்கும் கணவனை… நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வாரி அணைத்து மோகத்தையும் தாகத்தையும் தீர்த்து வைத்து தான் அனுப்பி வைப்பாள்…
ஆனாலும் ஏக்கம் போகவில்லை மன்னவனுக்கு…
நினைத்த பொழுதெல்லாம் அறுசுவை உணவு உண்டு பழகியவனுக்கு… தொண்ணையில் கொடுக்கும் உணவு போதுமா?… தொண்டைக் குழியே நிரம்பவில்லை அப்புறம் எங்கு வயிறு நிரம்புவது…
ஏங்கி, தவித்து, தன் ஏக்கத்திற்கு காரணமானவனை முறைக்க மட்டும் தான் முடியும்… ஏனோ தந்தையின் முறைப்பை கண்டு பயம் வருவதில்லை குலுங்கி குலுங்கி சிரிப்பு தான் வருகிறது மித்ரனுக்கு…
தேவனுக்கும் பாலாபிஷேகங்கள் நடப்பதுண்டு… முன்போல் பசிக்கு கிடைப்பதில்லை ருசிக்கு கிடைக்கும்…
அப்பனுக்கு மகன் வில்லன் தான் என்று பல செயல்களில் நிரூபித்து விட்டான் மித்ரன்…
தொட்டிலில் படுக்க மாட்டான் இருவருக்கும் இடையில் தான் தூங்குவான்… அதுவும் அவன் அன்னையே இறுக்கி கட்டிக் கொண்டு…
இவர்களைப் பார்த்து ஏக்க மூச்சுவிட்டு பக்கத்தில் படுத்துக்கொள்வான் ஆதி…
முழித்திருக்கும் போது அன்னையின் கையை கூட தொட அனுமதிப்பதில்லை… தூரத்தில்தான் குழந்தை அமர்ந்துள்ளான் என்று… மலரின் மடியில் தலை வைத்து படுத்தால்… எங்கிருந்தாலும் மெல்ல நகர்ந்து வந்து ஏற முடியாத கட்டிலில் இரண்டு தலகாணிகளை போட்டு கஷ்டப்பட்டு ஏறி… தந்தையின் முடியை பிடித்து இழுத்து, அன்னையின் மடியில் வந்து அமர்வான்…
அன்னையின் முகத்தை… முத்தங்களாலேயே நிரப்புவான்… அதுவும் ஆதியை பார்த்துக் கொண்டே… எச்சில் வடிய வாயை திறந்து கவ்வி.. முத்தமிட்டு, அவளின் குண்டு கன்னங்கள் முழுவதும், மித்ரனின் தடங்கள் தான்…
அப்பாவும் உன் அம்மாவுக்கு ஒன்னு கொடுக்கட்டுமா… பேசியபடி முத்தம் வைக்கப் போக… சத்… என்று ஆதியின் முகத்திலேயே அடி விழுந்தது…மித்ரன் கையால்…
அவுச்… வலி பொறுக்காமல் தேய்த்துக் கொண்டே…. ரொம்ப ஓவரா போறீங்க ரெண்டு பேரும் பாத்துக்கங்க… என்று இருவரையும் எச்சரித்து விட்டு செல்வான் ஆதி…
நேத்ரனும் இனியனும் மலரை “ம்மா’ என்று அழைக்க… மித்ரனோ “சித்து” (சிட்டு) என்று அழைத்தான்..
சொல்லி வை அவன் கிட்ட தேவையில்லாம என் லைன்ல கிராஸ் பண்றான்… அப்புறம் நான் பொல்லாதவன் ஆகிடுவேன்… தன் ஒரு வயது மகனுக்கு கடும் எச்சரிக்கை விட்டுக் கொண்டிருந்தான் ஆதி….
தந்தை சிட்டு.. சிட்டு… என்று அழைப்பதை பார்த்து அவனுக்கும் சித்து ஒட்டிக் கொண்டது…
பெண் குழந்தை இல்லை என்ற வருத்தம் சிறிது இருந்தாலும்…. தன் கணவனைப் போல மூன்று நகல்கள் தன்னை சுற்றி வருவதில் மலருக்கு பேரானந்தம்… அதுவும் ஆதியை உறித்து வைத்தார் போல் இருக்கும் மித்ரனின் மேல் அதிக பிரியம்…
இனியனோ பால்குடி மறந்து விட்டான்… மித்ரானோ… ஓடி ஆடி விளையாண்டு விட்டு வந்து, சித்து.. உங்கா… என்று தனது வாயை தொட்டு காண்பிப்பான்…
துரை.. சோறேல்லாம் சாப்பிட மாட்டாராமா… உங்கா தான் வேணுமாமா?… என்று ஆதி கேட்க..
மச்… சும்மா இருங்க… ஏதோ அவன் மட்டும் தான் கேக்குற மாதிரி புள்ளைய குறை சொல்லிக்கிட்டு…
பல்லு முளைச்சா புட்டி பாலு புள்ளைக்கு…
அந்த வகையில் நான் யோகக்காரன் டி.. என்று பாடிய படியே அவளது இடுப்பைக் கிள்ள…
தேவா… என்று அவள் வலியில் சிணுங்க… “சித்து” என்று ஓடி வந்தான் மித்ரன்…
அவ “தேவா”ன்னு கூப்பிட்டது என்ன என்றான் மித்ரனிடம் கடுப்பாக…
இல்லை.. இல்லை… என்று பூம்பூம் மாடு போல் தலை ஆட்டிவிட்டு… நானு… நானு… என்று தனது நெஞ்சில் தட்டியபடி மலரின் மடியில் வந்து அமர்ந்தான் தேவ மித்ரன்…
இதையும் என்கிட்ட இருந்து பறிச்சிட்டானா என்று புலம்புவதை தவிர ஆதியால் வேறு என்ன செய்ய முடியும்…
ஆக மொத்தம் இந்த வீட்டில் மூன்று தேவாக்களை ஏங்க வைத்து ஒரு தேவமித்ரன் மலரின் செல்லபிள்ளை ஆனான்…