அசுரன் 136
இரண்டு வருடங்களுக்குப் பின்…
கடற்கரை வீடு…
மூன்று ஆண்களும் சமையலறையில் மிக மும்பரமாக சமையல் வேலை செய்து கொண்டிருக்கும்போது வாய் மட்டும் சும்மா இருக்குமா பேச்சை ஆரம்பித்தான் விக்ரம்.
டேய்… மச்சான்… என்னோட பார்ட்னர் அஜய் கல்யாணத்துக்கு போயிருந்தேன்டா…
செம கிராண்டா பண்ணி இருந்தான்… எனக்கு சர்ப்ரைஸ் என்ன தெரியுமா…
கல்யாண பொண்ணு சைத்ரா…
அதுல என்னடா சர்ப்ரைஸ்… என்றான் ஆதி…
இல்ல நான் கூட நினைச்சேன், ஆதிய அடஞ்ச்சே தீருவேன்… பழிவாங்கிய தீருவேன் அப்படின்னு பின்னாடியே சுத்தும்… செம என்டர்டைன்மென்ட் இருக்குன்னு… பட் அந்த பொண்ணு அப்டியே move on ஆயிடுச்சு….
என்ன விட பெட்டர் சாய்ஸ் அவளுக்கு ஆயிரம் கிடைக்கும்… என் பின்னாடியே சுத்தறதுக்கு ஹீ இஸ் நாட் எ fool.. என்றான் ஆதி.
மச்சான், ரெண்டு வார்த்தை அதிகமா பேசினாலே வாயிலேயே குத்துவ.. உன்ன பத்தி சைத்ரா அவ்வளவு பேசியும் ஒண்ணுமே பண்ணலையே ஏன்?..
ஹா.. ஹா… என சிரித்தவன்… என்ன இருந்தாலும் என்னோட வலிக்கு அவளை பயன்படுத்திக்கனும்னு நினைச்சது தப்பு தானடா… அவளோட பழிவாங்கும் செயலை எனக்கு கொடுத்த தண்டனையா தான் நான் பார்க்கிறேன்… அதுல எனக்கு ஒரு நிம்மதி… தென்… என்ன ஆம்பளையானு கேட்டவங்களுக்கு எல்லாம் திறந்து காமிச்சுட்டு வரணும்னு எந்த அவசியமும் இல்ல… என்று கூறி விக்ரமின் முதுகில் மொத்தென்று ஒரு அடியை வைத்தான்… ஆதி.
ஸ்… ஆ… என்று முதுகை நெளித்தவன்… கல்யாணத்துல
நான் வேற ஒருத்தவங்களையும் பார்த்தேன் ஆனா அதை சொல்லலாமா வேண்டாமான்னு தெரியல என்று கண்களால் அருணை ஜாடை காட்ட…
அவன் ஜாடையை கவனித்த அருண்…
சொல்லுடா… யார பார்த்த… என்றான்.
ரதி யோட அப்பா ஜோஸ், வந்து பேசினார்… ரதி அமெரிக்காவுல ஒருத்தர கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கிறதா சொன்னாரு… இனிமேல் இந்தியா திருப்பி வர்றதுக்கு வாய்ப்பு இல்லை என்று சொன்னாரு…
ஓ… எங்கேயோ நல்லா இருந்தா சரி… என் வாழ்க்கையில இல்லைல அது போதும் எனக்கு… என்று பெருமூச்சுடன் ரதி பற்றிய பேச்சை நிறுத்தினான் அருண்.
( அமெரிக்க காதலனின் போதை ஏற்றும் வார்த்தைகளில் மயங்கி ஆசையாய் திருமணம் செய்து சென்றவள்…. திருமணத்திற்கு பிறகு தெரிந்து கொண்டாள், அவன் ஒரு செ*ஸ் சைக்கோ என்று… எதற்கு அதிகமாய் வாழ்வில் ஆசைப்பட்டாளோ… அதுவே அவள் வாழ்வை நரகமாக்கியது, இவர்கள் பேசி, சிரித்து கொண்டிருக்கும் இந்த வேளையில், உடல் எங்கும் காயத்துடன், பெண்மையிலிருந்து ரத்தம் வழிய கட்டிலின் மேல் அனத்தியபடி படுத்திருந்தாள் ரதி… அவளை நம்பி கருவில் ஜனித்து உயிரை விட்ட கருக்களுக்கு பதில் சொல்லும் காலம் இது )
சரி அத விடு.. நம்ம ராஜமாதாவுக்கு உடம்பு சரியில்லைனு கேள்விப்பட்டேன் நீயும் அகியும் போய் பாத்துட்டு வந்துருக்கலாமே அருண் என்றான் விக்ரம்…
நான் போன வாரம் கூட போன் பண்ணி பேசினேன்டா… சுகர், பிபி கூடி படுத்த படுக்கையா தான் இருக்காங்க… ஆனா இன்னும் கூட குடும்ப கவுரவம், ஸ்டேட்டஸ் பத்தி தான் பேசுறாங்க.. மூஞ்சில அடிச்ச மாதிரி போன வச்சிட்டாங்க… அவங்க திருந்துற மாதிரி இல்ல… அவங்களா மனசு மாறி வரட்டும் பாத்துக்கலாம் இல்லனா கடைசி வரைக்கும் அங்க தனியாவே இருக்கட்டும்… என்றான் அருண்…
ஆண்கள் மூவரும் இங்கு பேசிக் கொண்டிருக்கும் வேளையில்…
மூன்று பெண் வணிக அரசிகளும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதில் பிஸி…
வேலையின் இடையே அகல்யாவை சைட் அடித்துக் கொண்டிருந்த விக்ரம்… மச்சான்… நான் ஒரு நிமிஷம் வரேன் டா.. என்று கூறிவிட்டு அகல்யாவிற்கு கண்களில் ஜாடை காட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தான்…
அறைக்குள்ளே, பின்னால் இருந்து கட்டிக் கொண்டவன்… நீ என்னடி அவங்க கூட சேர்ந்து கிட்ட…
வேற என்ன பண்ண சொல்றீங்க… என்றாள்… அகி.
அவங்க எல்லாம் அங்கிள், ஆன்ட்டி ஆயிட்டாங்க… அவங்க கூட எல்லாம் நம்ம சேர கூடாது.. நம்ம young கப்பிள்ஸ் என்றான் இடையை வருடியபடி…
ஆஹான்… என்று சொல்லி சிரித்தவள் விக்ரமின் புறம் திரும்பி…. அவன் முகத்தைப் பார்த்து.. கடைசி வரைக்கும் நமக்கு குழந்தையே இல்லாம போயிட்டா… என்ன பண்ணுவ விக்கி…
அவளை இதமாய் அணைத்துக் கொண்டவன்.. இதையே எத்தனை தடவை கேப்ப… இந்த ஜென்மத்துல நீ மட்டும் போதும்டி… உன்னை தாண்டி என் வாழ்க்கையில வேற எந்த ஆசையும் இல்லடி…
நிஜமா?… என்று கண் கலங்கியவளை..
சத்யமா… என்று அவள் தலையில் அடித்தான்..
இப்பொழுதெல்லாம் அதிகமாய் குழந்தையைப் பற்றி கவலைப்படுவதில்லை, குழந்தைகளோடு விளையாடும் போது சில நேரங்களில் மனம் சஞ்சலப்படுவதுண்டு….
கண் கலங்கியவளை பார்த்து, திரும்ப ஆரம்பிக்காத… திரும்ப ஒரு fake சர்டிபிகேட் வாங்கிட்டு வர்ற மாதிரி இருக்கும்… என்றான் இரண்டு கண்ணையும் சிமிட்டிய படி புன்னகையுடன்…
அவன் புன்னகை தான் அவள் வாழ்வில் இருக்கும் ஒரே பிடிமானம்…
மெதுவாய் அவன் நெஞ்சிலையே புதைந்தவள்.. முன்னாள் நடந்ததை நினைத்து பார்த்தாள்…
விக்ரமே ஒரு நாள் முன்வந்து, அகி, மலர் கொடுத்த சர்டிபிகேட் போலி,… அவ சொன்னதும் பொய்.. என்று தன் காதல் மனைவியிடம் உண்மையை கூற…
அது எனக்கு அன்னைக்கே தெரியும் விக்கி.. என்றாள் அகல்யா…
விக்ரம், அதிர்ச்சியாகி விழி விரிக்க…
உன் தங்கச்சி கொடுத்த சர்டிபிகேட் ல டாக்டர் கையெழுதே இல்லை… அப்பவே தெரியும் அது போலினு…
ஆனா அவ ஒரு வார்த்தை சொன்னா அது உண்மை…
அண்ணி, குழந்தையை தேடி நீங்க ஓடிக்கிட்டு இருக்கீங்க… உங்கள தேடி அண்ணன் பின்னாடி ஓடி வந்துட்டு இருக்காரு… குழந்தையை தேடுற உங்க வாழ்க்கையில அண்ணனை இழந்துடாதீங்க… உங்க காதலை பார்த்து இப்படி வாழனும்னு நான் ஆசைப்பட்டு இருக்கேன்.. அந்த காதல் இன்னிக்கி கலங்கி நிற்கும் போது என்னால தாங்க முடியல.. என்று மலர் கரகரத்து கூற..
அகல்யா புரிந்து கொண்டாள்…
காலங்கள் கடந்த பின் காதலை இழந்து வருத்தப்பட்டு எந்த பிரயோஜனமும் இல்லை.. நடக்கிறது நடக்கட்டும்… என்று.
இதோ இன்று வரையிலும் குழந்தை இல்லை எனினும் காதலுக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லாமல், நிறைவாக வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்…
குழந்தைகள் தன் மேலே தண்ணியைக் சிந்தி விட… அதை தட்டி விட்டு கொண்டே தங்கள் அறைக்குள் நந்தினி நுழைய போக …
அதைப் பார்த்த நொடி… ஆதி!… ஒரே நிமிஷம் இதோ வந்துடறேன்… என்று கூறி விட்டு… நந்தினியுடன் சேர்ந்தே அறைக்குள் நுழைந்தான் அருண்…
இப்போ எதுக்கு இங்க வர்ற…
இந்த ரூம் ஞாபகம் இருக்கா… என்று அவன் ஹஸ்கி வாய்ஸில் கேட்க…..
அவன் குரல் கேட்காதது போலவே கடந்து சென்றவளின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தி…
அர்ஜுன் இங்க தான் உருவானான்…
இங்க வந்ததுல இருந்து அந்த நாள் ஞாபகமாவே இருக்கு… ரீ-கிரியேட் பண்ணலாமா?… என்றான் மோக குரலில்…
( தங்களது முதல் வருட காதல் தொடங்கிய தினத்தை கொண்டாட லாங் டிரைவ் வந்தவர்கள்… கடலில் குளித்து விளையாடி.. உடை மாற்ற வந்த இந்த அறையில்… உடலையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொண்டனர்.. அடுத்த நாள் தனது காதலியை, நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கலாம் என்று அருண் எண்ணியிருக்க… அன்றே அருணின் முன்னாள் காதலியால் வந்த வினையால் பிரிந்தார்கள்…)
தனக்குள் எழுந்த குறுகுறுப்பை மறைத்துக் கொண்டு…
வெளில குழந்தைகள் இருக்காங்க… ஏதாவது ஏடாகூடமா பண்ணிட்டாத… என்று விலகி போனவளை…
நில்லுடி… என்றவன், மோகமாய்… கழுத்தில் தெரிந்த எலும்பில் ஒரு முத்தம் வைக்க…
மச்… விடு தேவ்…. குரலில் மென்மை கூடி இருந்தது… அத்தி பூத்தார் போல் உதிக்கும் இந்த வார்த்தை வைத்தே தன் மனைவியின் எண்ணத்தை கண்டறிந்தவன்… அலேக்காக தூக்கி சென்றான் குளியல் அறைக்கு…..
இன்று நடந்தது சரி… ஆனால் எப்படி.. சமாதானம் ஆனாள்?… அவளாக எங்கே ஆனாள்… ஆக வைத்தான் கேடி…
அன்று ஆதி மலரின் கருத்தரிப்பு பற்றி கூறிய நாள்…
அகைன் ஆதி அப்பா ஆக போறான்… ட்வின்ஸ்னு சொல்லிருக்காங்க என்றான் நந்தினியிடம்…
ஓகே… என்னோட வாழ்த்துக்கள் சொல்லிடு… என்று சுருக்கமாய் முடித்து கொண்டாள்.
இல்ல… அது… வந்து… அருகில் இருக்கும் கனமான பொருட்களை எல்லாம் முன்னெச்சரிக்கையாக ஒதுங்க வைத்துக் கொண்டே…
அர்ஜுன் மட்டும் தனியா விளையாடுறான்… பாக்க பாவமா இருக்குடி… ஒரு தங்கச்சி பாப்பா இருந்தா சேர்ந்து விளையாடுவான்ல… என்றான்… ஒன்றும் தெரியாத பச்சை பிள்ளையாய் முகத்தை வைத்துக்கொண்டு…
நீ என்ன சொல்லி கல்யாணம் பண்ண மறந்து போச்சா.. அர்ஜுன் மட்டும் போதும் வேற “எதுவும்” வேணாம்னு சொன்ன…
சொன்னது தப்புதான்.. செருப்பால அடி… வாங்கிக்கிறேன்… ஆனா அதையே திரும்பத் திரும்ப சொல்லாத… தலைக்கு மேல் கை எடுத்து கும்பிட்டான்…
எது தப்பு?… என்றாள் அவனை ஏற இறங்க பார்த்தபடி..
அது… ஒரு குழந்தை மட்டும் போதும்னு சொன்னது… என்று ஆள்காட்டி விரலை நீட்டி கூற…
த்து… நீ எல்லாம் திருந்த மாட்டடா… என்று கூறிவிட்டு அவனை விட்டு நகர்ந்தவளை…
வேற என்ன டி சொல்லணும்… என்று முழங்கையை பிடித்து நிறுத்தினான்…
அவன் முகத்தை பார்க்கவும் பாவமாகத்தான் இருக்கிறது நிஜமாகவே அவனுக்கு புரியவில்லை என்ன சொல்வது என்று…
அருணுடன் திருமணமான நாளைலிருந்து அவன் வாயிலிருந்து ஒரு நாளாவது வந்து விடும் என்று நினைத்தவள் இன்று முடிவே செய்து விட்டாள் அவன் வாயிலிருந்து அவள் எதிர்பார்த்த வார்த்தை வராது என்று நெத்தியை அழுத்தி நீவியவள்… ஏண்டா மயிறு.. உனக்கு நான் வேணாம் உன் பையன் மட்டும் வேணும் அப்படித்தானே.. அப்ப அவனோடவே நிறுத்திக்க என்கிட்ட வராத… என்றாள்… கடுப்பாய்…
இப்பொழுது புரிந்தது மரமண்டைக்கு… ஐயோ… திவி… நீ தாண்டி வேணும்… நீ மட்டும் தான் வேணும்… நீ இல்லாம அவன் என்ன வானத்திலிருந்தா குதிச்சான்… என்று கூறிக்கொண்டே கட்டிப் பிடிக்க வந்தவனை தள்ளிவிட்டு…
ஓடிப்போயிரு கிட்ட வந்தேன்னா கொன்றுவேன்… என்று விரல் நீட்டி மிரட்டி விட்டு,
திரும்பி நடக்க போக.. பின்னால் இருந்த அருணை காணவில்லை.. போயிட்டானா பொறுக்கி… பிராடு… என்று திட்டியபடியே நகர போக நகர முடியவில்லை.. கீழே குனிந்து பார்க்க அவள் கால்களை இறுக்க பற்றி கொண்டு படுத்து இருந்தான் அருண்…
ஏய்… என்னடா… பண்ற… எழுந்திரு…
முஹூம்… எனக்கு வேற வழி தெரிலடி… நீ என்னை ஏத்துக்கிட்டா தான் எந்திரிப்பேன்…
நீ தான் திருந்துனவளுக்கு வாழ்க்கை கொடுக்க வந்த வள்ளலாசே… உன்ன என்ன நான் ஏத்துகிறது… என்றாள் குறுநகையுடன்…
நீ எனக்கு வாழ்க்கை பிச்சை போடுனு கேட்க தான் படுத்திருக்கேன்… கருணை காட்டு டி… என்றான் தரை நீச்சல் அடிப்பது போல் காலை ஆட்டியபடி…
ஒன்றும் சொல்லாமல் அவள் நிற்க…
சிறிது நேரத்தில், அவள் இரண்டு காலையும் சேர்த்து அதில் தன் கன்னம் வைத்து படுக்க ஆரம்பித்து விட்டான்… அவனுடைய இம்சை பொறுக்காமல்… சரி ஏத்துக்கிட்டேன் எந்திரி… என்றாள்…
எழுந்தவன்… அவளை அடுத்த வார்த்தை பேசவிடவில்லை… ஆக்கிரமித்தான் இதழை…
அவனின் ஆவேசத்தில், தடுமாறி சோபாவில் விழுந்தவளின் மேல் அவனும் விழுந்தான்…
அவனை தடுக்க பட்… பட்.. என்று அவன் நெஞ்சை அடித்த கைகளை… தன் கை கொண்டு அடக்கினான்…
அடித்த கைகளும் துடித்த கால்களும் அடங்கி போக அவளின் உடல் குழைய… முத்தமிட்டபடி தூக்கி சென்றான் படுக்கையறைக்கு…
கதம்… கதம்…
தான் விழுந்து விழுந்து வாந்தி எடுத்த நிலையை பற்றி அவனும் யோசிக்கவில்லை… அவளும் கேட்கவில்லை… இந்த ஒரு வருட காலத்தில் அனைத்தும் மாறி இருந்தது… கடந்த கால கசப்பான நினைவுகளை இருவரும் நினைக்க தயாராக இல்லை…. இப்பொழுது அவர்கள் கையில் இருக்கும் வாழ்க்கை அவர்கள் கனவு வாழ்க்கை அதை முழுமையாக அனுபவித்து வாழ நினைத்தனர்…
இதோ இன்றும் குளியலறையில் அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்…