அசுரன் 137 இறுதி அத்தியாயம்

இங்கோ பாவம் சமையலறையில் தனியே சமைத்துக் கொண்டிருந்தான் ஆதி…

பின்னால் இருந்து இரண்டு கைகள் அவனை சுற்றி வளைத்தது… அவன் இதழ்கள் அழகாய் விரிந்தது…

 

என்ன தனியா நிக்கிறீங்க போல…

 

ம்ம்ம்…. எல்லாரும் அவங்கவங்க வேலையில பிஸி ஆயிட்டானுங்க… என்றான் சிரித்தபடி…

 

வாங்க நாமளும் பிஸியாவோம்… என்று அவன் பின் கழுத்தில் மூக்கால் உரசியபடி கேட்க…

 

கூசுதுடி… என்று சிணுங்கியபடி கழுத்தை நெளித்தவன்… எல்லாரும் உள்ள போயிட்டா குழந்தைகளை யார் பார்த்துக்குறது… அதுவும் உன் இளைய மகன் இங்க தான் எங்கையாவது சுத்திக்கிட்டு இருப்பான்… என்றான் காய்கறிகளை நறுக்கியபடி. 

 

அவன் உங்கள தடுத்த உடனே நீங்க எதுவும் பண்ணாத மாதிரி தான் பேசுவீங்க… என்று கூறிக் கொண்டே.. முதுகில் வியர்வையால் நனைந்த இடங்களை மூக்கால் உரசி வாசம் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்…

தேவனின் வியர்வையில் மட்டும் ஆல்கஹால் கலந்திருக்கும் போலும்… வாசனையே அவளை போதை ஏற்றியது…. கைகள் வேறு அவன் டி-ஷர்டில் உள்ளே சென்று ஏகத்துக்கும் தழுவிக் கொண்டு இருந்தது…. 

 

என்னடி பண்ற… சும்மா ஜிவ்வுனு ஏறுது… அப்புறம் கிச்சன்னு பார்க்க மாட்டேன்…  அவன் கண்ணை மூடி சூடான மூச்சு கலந்து வெளிவந்த சிங்க குரலில்… காந்த தன்மை ஏறியது….

 

உங்களை யார் பாக்க சொன்னா… ஏதோ கிச்சன்ல பண்ணாதது போல தான்… சாக்குப்போக்கு சொல்லக்கூடாது…. வயசாகுதுன்னு உண்மைய சொல்லுங்க… என்று அவள் சீண்டி விட…

 

அடிங்…. யாரைப் பார்த்து டி வயசாகுதுன்னு சொல்ற… என்று கூறிய நிமிடம் அவளை இடுப்புடன் சேர்ந்து தூக்கி சமையல் திட்டில்  உட்கார வைத்திருந்தான்…

 

புள்ளைங்க விளையாண்டுட்டு இருக்காங்களேன்னு பாக்குறேன் இல்ல… நெஞ்சுடன் நெஞ்சு உரசி நெருங்கி வந்து சொன்னான்…

 

இல்லனா… சொல்லுங்க… என்ன பண்ணுவீங்க… என்ன பண்ண முடியும்… என்றாள் கீழ் உதட்டை கடித்த படி… அவனை அடங்க விடுவதாய் இல்லை அவள்…

 

இரண்டு விரல்களால், கடித்த கீழ் உதட்டை பிடித்து இழுத்தவன்… என்ன சீண்டி பார்க்கிற நாலு இதழும் சிவந்து போயிருக்கும்  என்றான்…

 

அதென்ன நாலு?… என்று கேள்வி கேட்டவளுக்கு நிஜமாலுமே அதற்கான பதில் தெரியவில்லை…

 

முறுக்கு போல் நற்கென்று இருக்கும் அவளது காது மடலை பிடித்து இழுத்தவன்… தெரியாத அந்த இரண்டு இதழுக்கு அர்த்தம் சொல்ல… சொல்ல…  உச்சந்தலையில் ஆரம்பித்து உள்ளங்கால் வரை கூசியது பெண்ணவளுக்கு…

 

அவள் நாணி தலைகுனிய, ஒற்றை கையால் நாடியை பிடித்து நிமிர்த்தி.. சிவத்திருந்த அவளிதழை, தன் இதழில் இணை சேர்த்தான்… ஏனோ தேவனின் மலரில் இருந்து மட்டும் தேன் வற்றுவதே இல்லை… சுவைக்க… சுவைக்க… ஊற்றெடுகிறது…. 

 

சித்து…  சித்து… தூக்கு… என்று இரண்டு கைகளையும் தூக்கிய படி, அரை தூக்கத்தில் அனத்தி கொண்டு வந்து நின்றான் மித்ரன்… வாசல் பக்கம் முதுகு தெரியும்படி நின்று இருந்ததால்… தன் தந்தை செய்யும் வேலை குழந்தைக்கு தெரிய வாய்ப்பில்லை…

 

குரலைக் கேட்டதும், வந்துட்டான் வில்லன்… என்று முணுமுணுத்தான் ஆதி.

 

மச்… என்று ஆதியின் தோளை இடித்து விட்டு… அவன் முன் குதித்து இறங்கியவள்… பிள்ளைய தூங்க வச்சுட்டு வரேன்… ரெடியா இருங்க.. என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி கூறிவிட்டு, இடுப்பை கிள்ளிவிட்டு நகர முயன்றவளை நிறுத்தி… அவள் தோளில் இருந்த மகனின் முகத்தை வேறு பக்கமாய் திருப்பி விட்டு… மலரின் கீழ் இதழை..  அழுத்த கவ்வி சுவைத்து விடுவித்தான் தேவன்..

 

மூன்று குடும்பமும், வேலைகளை பகிர்ந்து, சேர்ந்து உண்டு, பேசிக் களித்து விக்ரமின் பல நாள் கனவை நிறைவேற்றினர்… அவர்கள் பேச்சின் முக்கிய தலைப்பு… அடுத்த வாரத்தில் நடக்கவிருக்கும் ராஜேஷின் திருமணம் பற்றியது.

 

அருண், விக்ரம், ஆதி மூவரும்  கடற்கரை மணலில் படுத்தபடி… மதுவின் பிடியில் அந்த நாட்களை நினைத்தபடி…. நிலவை பார்த்துக் கொண்டே.. 

 

“டேய்… என் திவி தெரியுறாடா…” என்று அருண் ஆரம்பிக்க…

 

“எனக்கு என் அகி தெரியுறாடா…”  மச்சான்…

 

“எனக்கு என் சிட்டு தெரியுறாடா.. என்று ரசித்து கூறி கையில் அள்ளி முத்தம் வைத்தான் ஆதி…

 

பூரிப்புடன் தங்கள் காதல் வாழ்க்கையை ரீ-கிரியேட் செய்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள் ஆண்கள்…

 

மச்சான் ஒன்னு கவனிச்சியா டா… இந்தக் கடற்கரைக்கு ஏதோ சக்தி இருக்கு போல… அன்னைக்கு நம்ம சொன்னதெல்லாம் நம்ம வாழ்க்கையில நடந்துருச்சுடா… உனக்கு திவி கிடைச்சுட்டா, உனக்கு என் தங்கச்சியை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன்… எல்லாமே ஒரு மேஜிக் மாதிரி இருக்கு மச்சான்…

என்ன… நம்ம சம்பந்தி தான் ஆக முடில… என்று விக்ரம் சொல்லி கொண்டு இருக்கும் போதே…

 

விக்கி… விக்கி… என்று குரல் வர…

 

மூன்று ஆண்களும் பின்னால் திரும்பி பார்க்க… அகல்யா தான்  நடந்து வந்து கொண்டிருந்தாள்…

 

மண்ணைத் தட்டியப்படியே எழுந்தனர்… விக்ரம் வேகமாய் முன்னே சென்று… என்னடி… என்று கேட்டபடி அகல்யாவிடம் போய் நிக்க…

 

அழுத்திருப்பாள் போலும் முகம் முழுவதும் சிவந்திருந்தது… அந்த நிலவொளியிலும் அது அவனுக்கு தெளிவாய் தெரிய…

 

என்னடா… எதுக்கு அழுகிற… என்று கேட்டு மிரண்டான்… எங்கே மீண்டும் டிப்ரஷனுக்குள் சென்று விடுவாளோ என்று…

 

மெதுவாய் தன்னை சமப்படுத்தி கொண்டவள்… அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க… முகம் அழுது சிவந்திருந்தாலும்… கண்கள் அவனுக்கு பூரிப்பை காட்டின…

 

பொண்ணு வேணுமா? பையன் வேணுமா? என்றாள்..

 

எத்தன தடவ கேப்ப… எனக்கு நீ ம…. என்ற வாக்கியத்தை முடிக்கும் முன்னே… ஒரு கையால் அவனது வாயை மூடியவளிடம் இருந்து 

இரண்டு பிங்க் கோடுகளுடன் கூடிய பிரக்னன்சி கிட் அவனது கையில் வந்து சேர்ந்தது…

 

ஏய்… அகி… நிஜமா வா?… என்று அவன் விழி விரித்து கேட்க… 

 

ம்ம்ம்… என்று சிரிப்புடன் தலை அசைத்தாள்… வேகமாய் அவளை கட்டிக் கொண்டான்… சந்தோஷத்தில் காதுகளும் அடைத்தன… உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை… கண்கள் மட்டும் கலங்கின… உணர்ச்சி பெருக்கில் இருவரின் உடலும் நடுங்கியது…

 

அருணும் ஆதியும் அவர்கள் பக்கத்தில் வர… எதுவும் பேசாமல்… கையில் இருந்த கார்டை அவர்களிடம் காண்பிக்க… 

 

மச்சா….ன்… எங்கள மாமா ஆக்கிட்ட… என்று உரக்க கத்திய படி… விக்ரமை ஆளுக்கு ஒரு பக்கமாய் காட்டிக்கொண்டனர்… அவர்களுக்குமே இது உணர்வுபூர்வமான தருணம்… ஒற்றை தங்கையின் வாழ்வில் இருந்த சோகம் இன்றுடன் நீங்கியது என்று…

 

இரு அண்ணன்களும் இரு பக்கமும் நிற்க… நடுவில் தன்னவனின் நெஞ்சில் புதைந்திருந்தாள் அகல்யா…

 

இவர்கள் சத்தத்தை கேட்டு வெளியே வந்த நந்தினியும், மலரும் இவர்களது சந்தோஷத்தில் பங்கு கொண்டனர்…

 

அருணின் கண்கள் நந்தினியை ஏக்கமாக பார்க்க… அவள் தீயாய் முறைத்துக் கொண்டு நின்று இருந்தாள்…

 

எதுக்கு முறைக்கிறா… என்று புரியாமல் முழித்தபடி நந்தினியின் அருகில் வந்து நிற்க…

 

நான்தான் உன்கிட்ட அர்ஜுன் மட்டும் போதும்னு சொன்னேனே… இப்போ இத நீயே அர்ஜுன் கிட்ட சொல்லு.. எனக் கூறிவிட்டு அவன் கையில் ஒரு பொருளை திணிக்க… இரண்டு கோடுகளுடன் கூடிய பிரக்னன்சி கிட்… 

 

ஏய்… நிஜமாவாடி… என்று முகம் கொள்ளா புன்னகையுடன் கால்களில் துள்ளல்ளுடன் கேட்க…

 

பண்றதையும் பண்ணிட்டு கேக்குறான் பாரு கேள்வி… என்று முறைத்தாள்…

 

ஏய்… சத்தியமா நான் பிளான் பண்ணலடி… யூஸ் பண்ண ப்ராடக்டோட குவாலிட்டி சரி இல்லைன்னு நினைக்கிறேன்… ப்ளேவர் மட்டும் பார்த்துட்டு எக்ஸ்பிரி டேட்  பாக்காம வாங்கிட்டேனோ… என்று யோசித்துக் கொண்டு இருக்கையில்…

 

அவன் தலையில் நங்கு என்று கொட்டி… கட்டிப்பிடிச்சு கிஸ் பண்ண மாட்டியா டா… என்று அவள் கடுப்பாய் கேட்க…

 

உனக்கு இல்லாததா… என்று கூறிவிட்டு அவளை இறுக அணைத்துக் கொண்டான்.. முகம் எங்கும் முத்தம் வைத்தான்…

 

கடவுளே…. கடைசி வரைக்கும் இவன் கிட்ட எல்லாமே நான் கேட்டு தான் வாங்கணும் போல… என்று அவள் சலித்துக் கொள்ள…

 

பொய் சொல்லாதடி… நீ கேட்காம தானே கொடுத்து இருக்கேன் என்று அவள் வயிற்றில் கை வைத்தான் அருண்…

 

துள்ளி கொண்டிருக்கும் அருணை பார்த்து எல்லோரும், அங்க என்னடா நடக்குது… என்பது போல் பார்க்க… சாரி கைஸ்…  சந்தோஷத்துல உங்கள மறந்துட்டேன்… என்று கூறியவன்…

வி ஆர் ஆல்சோ பிரக்னண்ட்… என்று கூறி, ஒலிம்பிக்கில் தங்க மெடல்  வாங்கியவன் போல் தனது கையில் இருந்த கார்டை தூக்கி காண்பித்தான்…

 

ஹோ…ஓ …. என்று அனைவரும் கூச்சலிட்டனர்… 

 

உண்மையில் சந்தோஷத்தில் திளைத்த ஆதி… மலரின் தோளில் கையை போட்டுக் கொண்டு விலகி வந்தவன்… ஒரு குழந்தை வருதுனா குடும்பத்துக்கு எவ்வளவு சந்தோஷம்… கேட்கவே மன நிறைவா இருக்கு… என்று இதயத்தில் கை வைத்து நீவிகொண்டு நண்பர்கள் இருவரையும் திரும்பி பார்க்க… அவர்கள் தத்தம் இணையை கட்டிப்பிடித்து காதலில் மூழ்கி இருந்தார்கள்…

 

அமைதியாய் இருந்த மலரின் பக்கம் திரும்பி…

என்னடி எதுவுமே பேச மாட்டேங்குற என்று மலரை பார்க்க…

 

திரு திருவென விழித்துக் கொண்டு நின்று இருந்தாள்…

அந்தக் கடல் காற்றின் நடுவிலும் அவளுக்கு வியர்த்து இருந்தது…

 

என்னடி…என்ன ஆச்சு… உடம்புக்கு ஏதும் முடியலையா ஏன் இப்படி வேர்க்குது ?… என்று அவன் பயந்து போய் நெற்றியை தொட்டுப் பார்த்து  கேட்க…

 

புதுசா ஒரு குழந்தை வந்தா அந்த குடும்பத்துக்கு சந்தோசம் தானே… என்று மெதுவாய் இழுத்து இழுத்துக் கூறினாள்…

 

ஆமாம்…. அதுக்கு என்ன இப்போ என்று கேட்டவன்… சிறிது யோசனைக்கு பின்… என்ன திரும்ப குழந்தை பெத்துக்கலாமானு கேக்க போறியா… நீயே நினைச்சாலும் அது நடக்காது… இனிமேல் நீ என்னை ஏமாத்தவே முடியாது… என்று அவன் அழுத்தமாய் கூறிக் கொண்டிருக்கும் வேளையில்…

 

ஒற்றை கைக்குள் அழுத்தி மூடி வைத்திருந்த பிரக்னன்சி கிட்டை விரித்து காண்பித்தாள்…

 

அவன் மெதுவாய் எடுத்து பார்க்க இரண்டு கோடுகள் தெளிவாக இருந்தது…

 

அதை தன் பார்வையில் இருந்து நகர்த்தி அவள் முகத்தை பார்க்க… பயத்தில் வெளிரி போய் இருந்தது… திருட்டு முழி முழித்துக் கொண்டு நின்று இருந்தாள். 

 

என்னடி பண்ண கேடி… என்றான் பல்லைக் கடித்த படி…

 

உங்களுக்கு இன்னும் ஆப்ரேஷன் பண்ணல… வெறும் மயக்க மருந்து கொடுத்து படுக்க வெச்சிட்டு போனாங்க… என்று நடுங்கிய குரலில் மெதுவாய் பதுங்கிக் கொண்டே அவள் சொல்ல…

 

அவளை நெருங்கி வந்து, இப்போ எத்தனை மாசம் என்றான்…

 

இரட்டை இலை சின்னம் போல் விரலை தூக்கினாள்…

 

ஒற்றைக் கையால் அவள் தாடையை பிடித்து இழுத்தவன்.. 

இன்னும் எத்தனை புள்ள பெத்துக்கறதுனு முடிவு பண்ணி இருக்க… என்று அவன் பற்களுக்கு இடையே கேட்க…

 

ஒன்று என்று விரலை தூக்கப்போனவள்… அவன் முறைப்பைக் கண்டு… இல்ல அவ்வளவுதான்… என்றாள் தஞ்சாவூர் பொம்மை போல் தலையாட்டி…

 

இவர்களின் இந்த பேச்சு காதல் உரையாடல் போல் மற்றவர்களுக்கு தோன்றியிருக்கும் போலும்…

 

எங்க ஆதி அண்ணா மாறி யாராலயும் காதலிக்க முடியாது… என்று அகல்யா கூற… 

இந்த வார்த்தையை கேட்டதும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் குட்டி கமல் கொடுப்பது போல் அதிர்ச்சி  ரியாக்ஷன் கொடுத்தான் விக்ரம்…

 

நந்தினி அதை ஆம் என்று வழி மொழிந்தாள்… 

 

மனைவியின் வாயில் இந்த வார்த்தையை கேட்டதும் காதில் புகை வந்தது அருணுக்கு… காதல் என்று எதை புரிந்து கொண்டான் என்று தெரியவில்லை… வேகமாய் குரலை உயர்த்தி…

டேய் ஆதி… இந்த தடவை நான் ட்வின்ஸ் இறக்கி…. உனக்கு டப் கொடுக்கிறேன் டா… என்று அருண் கத்த…

 

இதை உடம்புன்னு நினைச்சியா இல்ல பிள்ள பெத்துக்கிற மெஷின்னு நெனச்சியா… திரும்பத் திரும்ப சொல்றேனே… உனக்கு அறிவு இல்லை… கனவுல வந்ததெல்லாம் நிஜத்துல நடக்கணும்னு எந்த கட்டாயமும் இல்லை… என்று அவன் காட்டமாய் திட்டி கொண்டு இருக்க… 

 

அவள் எங்கு அதையெல்லாம் கவனித்தாள்… பாவமாய் தலையை குனிந்த படி மணலில் ஓடிக்கொண்டிருந்த ஒரு குட்டி நண்டு ஒரு குழிக்குள் சென்று வருவதை வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள்…

 

அப்பொழுதுதான் அருண் கத்தினான்…

 

இவன் வேற என்று சலித்தவன்… 

 

என்னடா… வேணும் உனக்கு… என்றான் உரக்க.. 

 

ட்வின்ஸ் பெத்து உன்னை தோக்கடிக்க போறேன்டா… என்றான்…

 

இப்போதைக்கு அது முடியாது… பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என்றவன்… அமைதியாய் இருந்த கூட்டத்தை கண்டு சிரித்தபடி…

வி ஆர் ஆல்சோ பிரகனண்ட்… என்று கூறி அவனது கையில் இருந்த கார்டை தூக்கி காண்பிக்க…

 

இப்பொழுது மொத்த கூட்டமும் ஆ… என்று வாயில் கை வைத்தது…

 

ஸ்கூல் கட்டறதுக்கு இடம் பார்த்துடலாமா மச்சான்… என கேட்க 

 

சீக்கிரம்டா… ஆல்ரெடி 7பேர் ரெடி ஆகிட்டாங்க… என்று ஆதி சொல்ல…

 

திரும்ப ட்வின்ஸ் பிறந்தா.. என்று மலரவள் தலையை சாய்த்து கேட்க…

 

அடிங்… அடங்க மாட்டியாடி நீ..  என்று… இடையுடன் சேர்த்து இழுத்து அணைத்தான்..  

 

அனைவரும் கலைந்து அவரவர்கள் துணையுடன் அறைக்குள் அடைக்கலம் ஆக…

 

தலைக்கு கை கொடுத்து தனியாய் வானத்தை வெறித்து பார்த்தபடி  படுத்திருந்தான் ஆதி… மெல்லமாய் பூனை போல் பதுங்கி வந்து மன்னவனின் தோளில் தலை வைத்து படுத்தாள் மலர்…

 

அவன் கைகள் தானாக இறங்கி அவள் வயிற்றை வருட ஆரம்பித்தது…

 

புன்னகை செய்து கொண்டாள்…

 

அவனது மார்பின் கேசத்தை வருடி கொண்டே… ஒரே ஒரு பாப்பா மட்டும் பெத்துக்கலாம்..  என்றாள்.. 

 

பையன் என்ன… பொண்ணு என்ன… எல்லாம் ஒன்னு தாண்டி… இவனுங்கள வச்சு சமாளிக்க முடியல உன்னால… புதுசா ஒரு குட்டி வந்தா என்ன பண்ணுவ… 

 

அதெல்லாம் சமாளிக்கலாம்…

குட்டியா..  அழகா… அப்படியே.. என்று அவள் ஏதோ சொல்ல வர…

உன்ன மாதிரியா… என்று ஆதி கேட்க..

இல்லை என்று தலையசைத்தாள்… 

பின்ன என்ன மாறியாடி.. 

இல்லை என்று தலையசைத்தாள்… 

பின்ன..

“தேவகி” மாதிரி…

சட்டென்று தலையை தூக்கிய படி குனிந்து தனது மார்பில் படுத்திருந்தவளை, அவன் பார்க்க… அவளும் நிமிர்ந்து பார்த்தாள்…

உன்னை நான் அறிவேன் என்பது போல்.. 

 

ஆம்… சுத்தமான அம்மா பிள்ளை தேவாதித்யன்… மித்ரனை போல்…

மொத்தமாய் ஒரு நாள் இழந்து விட்டு இன்றும் அம்மாவை தேடிக் கொண்டிருக்கும் சவலை பிள்ளை தான்…

 

தன் மனதில் உள்ள ஏக்கம் அவளுக்கு எப்படி தெரியும் என்று யோசித்து கொண்டிருக்கையில்….

சற்று நகர்ந்து மேலே ஏறி… அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள்… தன் மார்பில் அழுத்த புதைத்து கொண்டாள்… அவள் மார்புக்கு நடுவில் அவன் கண்ணீர் ஊர்வலம் போனது… தன்னை விட்டு விலகி விடாதது போல் இறுக்கி அணைத்துக் கொண்டான்… அவனின் கண்ணீர்,  இழந்த அன்னைக்கும், தன் அன்னையை மீட்டெடுத்து கொடுக்கத் துடிக்கும் தன்னவளுக்கும் சமமாய் பிரித்து வழங்கப்பட்டது… 

அவன் உடலின் நடுக்கத்தைக் கண்டு அவள் கண்ணில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. அவளின் கைவிரல்கள் அவன் முதுகை ஆதுவாய் தடவ…  கடல் காற்றும் அவன் கேசத்தை தழுவி ஆறுதல் சொல்லிவிட்டு சென்றது…  இவர்களுக்கு தனிமை கொடுத்து நிலவு மகள் மேகத்திற்குள் மறைந்தாள்… 

அவள் ஆசைகள் அவன் லட்சியம்…

அவன் கனவு அவளின் வாழ்க்கை…

மலரின் வாழ்க்கையை மாற்ற வந்த தேவதை அவளின் “தேவா”..

தேவனின் ஏக்கங்களை தீர்க்க வந்த வரம் அவனின் “மலர்”..

என்றென்றும் சிறப்பாய் மலரும்  இந்த “தேவமலர் “

மக்களை அழ வைப்பவர்கள் அசுரர்கள் என்றால், மலரை அழ வைத்த இவனும் அசுரன் தான்…

காதல் அசுரன்…

வந்தான் அவளுக்காக… 

 

இப்படிக்கு..

வைஷ்ணவி சக்திவேல்❤️❤️

( சக்திபாலா)

                   🙏🙏சுபம் 🙏🙏

என்னுடன் தொடர்ந்து பயணித்த நிறைய நல்ல உள்ளங்களுக்கு நன்றி❤️❤️❤️… 

இறுதியில் உங்களது கருத்துக்களை தெரிவித்து விட்டு சென்றால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்…

❤️ Loading reactions...
6 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top