அசுரன் 19
அறையின் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் மலர்.
கூப்பிட்டு விட்டா.. வர்றதுக்கு இவ்வளவு நேரமா? என்று கேட்டாள். ரதி.
அது… இப்பதான் வந்து சொன்னாங்க மேடம்…
சரி வா… வந்து இந்த ஜடை எல்லாம் அவுத்துவிடு….
ரதியின் இடைவரை தாண்டிய ஜடையில் இருந்து சவுரியை அவுக்க அவள்
தோள்பட்டை வரை இருந்தது அவளுடைய உண்மையான முடி…
இந்த கலர் புடவை கட்டப் போறேன்… நல்லா இருக்கா… அருணுக்கு
பிடிக்குமா… என்று கேட்டாள் ரதி.
மலர் அமைதியாக இருக்க..
ஆமா அருணுக்கு புடிச்ச கலர் என்ன என்று கேட்டாள் ரதி.
தெரியாது மேடம்..
Skyblue..
அவனுக்கு என்ன ஃபிளேவர்ஸ் பிடிக்கும்..
தெரியாது மேடம்..
பிஸ்தா..
என்ன எது கேட்டாலும் தெரியாதுன்னு சொல்ற அப்ப இத்தனை
மாசமா…என்னதான் குடும்பம் நடத்துன… என்று போட்டு வாங்கினாள்
ரதி.
நான் இந்த வீட்டு வேலைக்காரி மட்டும்தான் மேடம், சாருக்கும் எனக்கும்
வேற எந்த சம்பந்தமும் இல்லை…. நானும் அவரும் அதிகபட்சம் இரண்டு
வார்த்தைக்கு மேல் பேசிக்கொண்டேதே இல்லை… என்றாள் மலர்.
அப்ப உங்களுக்குள்ள இந்த ஃபர்ஸ்ட் நைட் எல்லாம் நடக்கலையா என்று
கேட்டாள் ரதி.
அவள் கேட்கும் கேள்விகள் அனைத்தும் மலருக்கு சங்கடத்தை
தோற்றுவித்தது..
“இல்ல மேடம் நடக்கல”
வேற ஏதாவது வேலை இருந்தா சொல்லுங்க…. இல்லாட்டி நான் கீழே
போகட்டுமா… சமையல் அறையில் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு
என்று நகர முற்பட்டாள் மலர்.
பொறு… பொறு… போலாம்… அதுக்குள்ள உனக்கு என்ன அவசரம் என்று
அவளை இருக்க வைத்தாள் ரதி.
அருண் பல நேரம் ஃபுல் போதையில் வருவானே அப்பகூட உன்ன
கண்டுக்கலையா… என்று கேட்டாள்..
மேடம் ப்ளீஸ்… வேற ஏதாவது பேசுங்க…
சும்மாவே அருண் அந்த விஷயத்துல ரொம்ப ஹார்ஷா நடந்துபான்
இன்னைக்கு ஃபஸ்ட் நைட் வேற… என்ன பண்ணப் போறானோ.. என்று
வெட்கப்பட்டுக் கொண்டே கூறி மலரை வெறுப்பேற்ற நினைத்தாள் ரதி.
இந்த பேச்சைக் கேட்டு அருவருப்பாய் முகத்தை சுழித்து கொண்டாள்
மலர்.
ஸ்மார்ட் ஆன பையன்… பணக்கார பையன்…. உன் கழுத்துல தாலி வேற
கட்டி இருக்கான்… நீ ஒரு நாள் கூடவா ஆசைப்படவே இல்ல அவன் மேல…
என்று கேட்டாள்.
மலர் அமைதியாக இருக்க..
இதுக்கு முன்னால ஆசைப்பட்டிருந்தாலும்… சரி படாட்டினாலும் சரி…
இனிமேல் அருண் என்னோட புருஷன்… இதுக்கு மேல அவனை
நெருங்கவோ, நினைக்கவோ அவன் மேல ஆசைப்படவோ நீ கூடாது.
வேலைக்காரியா…வேலைக்காரி இடத்துல மட்டும் தான் நீ இருக்கணும்…
புரிஞ்சுதா.. இல்லன்னா என்னை நீ வேற மாதிரி பார்ப்ப என்றாள் ரதி.
சரிங்க மேடம்…
நீயும் பார்க்க ஆள் நல்லாத்தான் இருக்க… என்று கூறி அவள் பின்னால்
ஒரு தட்டு தட்ட…
“மேடம் ப்ளீஸ் என்னை விடுங்கள்” என்று சங்கோஜமாய் நெளிந்தாள்
மலர்…
என்ன பேசுறதுக்கே இந்த நெளிவு… நெளிக்கிற ஆர் யூ வெர்ஜின்.. என்று
கேட்டாள் ரதி..
பதில் சொல்ல விரும்பவில்லை மலர்.
நீயும் வாழ்க்கை முழுதும் இப்படியே இருக்க முடியாது பேசாம நீயும்
உனக்கேத்த ஒரு வேலைக்காரனா பார்த்து…. என்று அவள் காதுக்குள்
எதையோ கிசுகிசுக்க….
விலுக்கென்று நிமிர்ந்து பார்த்த மலர்… குடுகுடுவென்று அந்த அறையை
விட்டு ஓடி சென்று தனது அறைக்குள் புகுந்து கொண்டாள்.
*****************
அலங்காரம் முடிந்தவுடன் ரதியை முதலிரவு அறைக்குள் அழைத்துச்
செல்லவதற்காக அகல்யாவும் சில உறவுக்கார பெண்மணிகளும் அந்த
அறைக்குள் நுழைந்தனர்.
அழகா இருக்கடி அம்மா… என்று ஒரு வயதான பெண்மணி சுத்தி
போட… இன்னும் பத்து மாசத்துல புள்ள வரணும் சாமர்த்தியமா
நடந்துக்க… என்று அந்த வயதில் மூத்த பெண்மணி அறிவுரைகள்
வழங்க…
கலகலவென சிரித்த ரதி…
இன்னும் ஆறு மாசத்துல பெத்துக்கொடுக்கிறேன் பாட்டி சந்தோசமா…
என்று கேட்டாள்…
அடியாத்தி என்னடி சொல்ற இவ… என்று அந்த பாட்டி அதிர்ச்சியாகி
வாயில் கைவைத்து முழிக்க..
அகல்யாவும், மற்ற பெண்களும் சிரிக்க…
அவ புள்ள பெக்குறது இருக்கட்டும்… அகல்யா, நீ எப்ப பெத்து கொடுக்க
போற உனக்கும் கல்யாணம் ஆகி ரெண்டு வருஷத்துக்கு கிட்ட ஆகுமே
என்று அந்த பாட்டி கேட்க…
இந்த பாட்டிக்கு மக்கள் தொகையை பெருக்கறதுக்கு… ஐடியா
கொடுக்கிறது தான் வேலையே போல.. என்று எல்லோரும் கேலி பேசி
சிரித்துக்கொண்டனர்…
ஆனாலும் அகல்யாவின் மனதிற்குள் ஒரு சிறு சஞ்சலம் ஏற்பட்டது
உண்மைதான்…
ரதியை அருண் அறையில் விட்டு விட்டு தனது அறைக்கு திரும்பினாள்
அகல்யா.
அங்கு கொஞ்சம் மல்லிகை பூவை தனது கையில் சுற்றிக்கொண்டு
கொஞ்சம் மல்லிகை பூவை கையில் பிடித்து பெட்டில் மேல் உதறிக்
கொண்டு பாட்டு பாடி கொண்டு இருந்தான் விக்ரம்…
வாடி வாடி அடாவடி க்யூட் பொண்டாட்டி….
நான் தாங்க மாட்டேன் தூங்க மாட்டேன் நீ இல்லாட்டி…
அறை கதவை தாழிட்டு விட்டு அதில் சாய்ந்து கையைக் கட்டிக் கொண்டு
அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அகல்யா.
என்ன சார்… ஏற்பாடு எல்லாம் பயங்கரமா இருக்கு… என்று கேட்டாள்…
ஆமா இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்ல.. என்று சொன்னான் விக்ரம்…
யாருக்கு…
துணை மாப்பிள்ளைக்கு…
யாரு சொன்னா..
யாரு சொல்லணும் நானா ஃபிக்ஸ் பண்ணிக்கிட்டேன்.. என்ற கண்களை
சிமிட்டிய படி…
இந்தா நான் பட்டு வேட்டி சட்டையில் இருக்கேன்… நீ பட்டு சேலையில
இருக்க… கட்டில்ல பூ இருக்கு வேற என்ன வேணும்… பால் மட்டும்
மிஸ்ஸிங்… இட்ஸ் ஓகே… அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். வா.. வா.. நல்ல
நேரம் முடியறதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணி விடுவோம்… என்றான்
கண்ணடித்தபடி.. அவள் கைகளை பற்றி இழுத்து வந்தான்…
பொண்ணுக்கு மூடு இல்லையே என்றாள்…
அதப்பத்தி உனக்கு என்னமா.. கவலை… நீ கிட்ட மட்டும் வா… எப்படி மூட்
வர வைக்கிறேன் மட்டும் பாரு… என்றான்…அவள் இடையில் இரு
கைகளை கோர்த்து அணைத்தவரே…
உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு வந்த விக்கி… என்றாள் தனது
இருகைகளையும் அவன் நெஞ்சில் பதித்து தள்ளியவாரே….
மாமா மடியில வந்து உட்கார்ந்து பேசு நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்
என்றான்…
விளையாடாதீங்க விக்கி…
நாம எப்போ குழந்தை பெத்துக்க போறோம் என்றாள் அகல்யா…
இன்னைக்கு கடுமையா உழைக்கிறோம் அடுத்த பத்தாவது மாசம்
பெத்துக்குறோம் ஓகேவா.. என்றான் அவள் கழுத்து வளைவில்
இதழினால் இம்சை செய்து கொண்டே..
இதழில் மென் புன்னகையுடன் அவனை பொய் கோபமாய் முறைத்தவள்..
அப்போ இத்தனை நாள் ஹார்ட் வொர்க் பண்ணீங்களே… அதுக்கு பலன்
எங்க போச்சு.. என்று கேட்டாள்..
அப்போ எல்லாம் சரியா ப்ரிப்பேர் பண்ணாம விட்டுருப்பேன் டி… டுடே
ஃபுல்லா ப்ரிப்பேர் பண்ணி இருக்கேன்.. டுடே என்னோட ஒர்க்க பாத்துட்டு
நீயே சொல்லு…. என்றான். இந்த வீடியோவ தான் ரெஃபரண்ட்ஸா
எடுத்துக்கிட்டேன்… என்று அவன் ஒரு வீடியோவை காண்பிக்க…
ச்சீ.. பொறுக்கி… போடா… என்று அகல்யா வெக்கப்பட்டு சிணுங்க…
அதுக்கப்புறம் எங்கே அகல்யா பேசுவது.. வெட்க சத்தமும், முனங்கல்
சத்தமும், முத்த சத்தமும், அந்த அறையை நிறைத்தது…
கூடல் முடிந்து அகல்யாவை தனது மார்பின் மீதும் போட்டு அவள்
தலையை தடவி கொடுத்து கொண்டு இருந்தான் விக்ரம்…
“விக்கி எனக்கு பாப்பா வேணும்” என்று கேட்டாள் அகல்யா..
அவன் மென் புன்னகையுடன் எனக்கும் வேணும் டி… நிறைய குழந்தைகள்
வேணும் நம்மள சுத்தி நிறைய பேரு இருக்கணும்…
நம்ம ஏன் ஒரு டாக்டரை கன்சல்ட் பண்ண கூடாது. என்று கேட்டாள்
அகல்யா…
.. பண்ணலாம்.. ம்மா..
எங்களுடைய பிரண்ட் ரிஷி ஓட வைஃப் ஷைலஜா ஃகைநோவா
இருக்காங்க… அப்பாயிண்ட்மெண்ட் வாங்குறேன்… அவங்கள போய்
பாக்கலாம் என்றான்.
நமக்கு ஏன் விக்கி இவ்வளவு நாளா குழந்தை நிக்கல…
ஒருவேளை எனக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ? என்றாள் அகல்யா..
கடவுள் கொடுக்கும்போது கொடுப்பார் மா… அதுக்கு இடையில நீயே
ஏதாவது நெனச்சு உன் மனச போட்டு குழப்பிக்காத என்றான்.
ஒருவேளை எனக்கு ஏதாவது பிரச்சனை இருந்தாஆஆ …. இன்று அவள்
வார்த்தைகளை முடிக்காமல் இழுக்க…
பிரச்சனை இருந்தா…. சொல்லுடி… என்ன மென்னு முழுங்குற… விக்ரமின்
குரல் மாறியது..
என்ன விட்டுக் கொடுத்துவிட மாட்டீங்களே விக்கி என்றாள்… அகல்யா
கண்கள் கலங்க..
அவள் தலையை தடவுவதை நிறுத்திவிட்டு கீழே குனிந்து அவள் முகத்தை
பார்த்தான் விக்ரம், அவளும் கழுத்தை நிமிர்த்தி மேலே அவன் முகத்தைப்
பார்த்தாள்…
கண்கள் கலங்கியத்தை பார்த்து மனமுடைந்தான். என்னடி என்ன பாத்தா
உனக்கு எப்படி தெரியுது… நானாடி இப்ப உன்கிட்ட புள்ள வேணும்னு
கேட்டேன்… எனக்கு பிள்ளையும் வேணாம்…. ஒரு மயிரும் வேணாம்…
எனக்கு நீ மட்டும் போதும்.. இந்த வாழ்க்கை முழுக்க நீ மட்டும் போதும்
புரியுதா… என்றான். அந்த மட்டும் என்ற வார்த்தையில் அழுத்தத்தை
கூட்டி கோப குரலில்…
அவளுக்குத் தெரிந்த இத்தனை வருடத்தில் இந்த கோப குரலை அவள்
இன்று தான் கேட்கிறாள்.. மிரட்சியுடன் அவனைப் பார்த்துக் கொண்டே
சரி… என தலையசைத்தாள் அகல்யா..
ஒருவேளை எனக்கு ஏதாவது பிரச்சனை இருந்துச்சுன்னா.. நீ இன்னொரு
வாழ்க்கையை தேடி போகலாம் அகல்யா.. காலம் ஃபுல்லா நீ என் கூட
இருக்கணும்னு அவசியம் இல்ல… என்று கூறிவிட்டு போர்வையை
இழுத்துப் போர்த்தி அவளுக்கு எதிர்ப்புறமாக திரும்பி முதுகை
காட்டி படுத்து கொண்டான் விக்ரம்.
அகல்யாவிற்கு அவனது மனநிலை புரிந்தது… தன்னுடைய வார்த்தை
அவனை காயப்படுத்தி விட்டது என்று நன்றாக புரிந்து கொண்டாள்.
சாரிப்பா… இனிமேல் இப்படி எல்லாம் பேசமாட்டேன்… என்று
சொல்லிக்கொண்டே அவனது முதுகில் தனது கன்னத்தைப் பதித்து
அவன் இடுப்பை சுற்றி தனது கைகளை போட்டு அணைத்தபடி படுத்துக்
கொண்டாள் அகல்யா.
அவளை அவனும் உணர்ந்தான்.. ஆனால் கோபத்தை விட்டு வர
மனமில்லை..
என்னை பார்த்து இப்படி கேட்க இவளுக்கு எப்படி மனம் வந்தது என்ற
கோபம். ஏனென்றால் அவனை பொறுத்தவரையில் அவள்தான் அவனது
உலகமே..
*********-*********
அழகு பதுமையாக தன்னை அலங்கரித்துக் கொண்டு அறைக்குள்
நுழைந்தாள் ரதி.
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு… என்று
ஆனந்தமாய் மனதிற்குள் பாட்டு பாடி கொண்டு படுக்கையில்
அமர்ந்திருந்தான் அருண்.
தேங்க்ஸ் பேபி நீ சொன்ன மாதிரியே இந்த கல்யாணத்தை சீக்கிரமா
நடத்தி முடிச்சிட்ட… உன்கிட்ட எனக்கு பிடிச்சதே இந்த ஆட்டிட்யூட் தான்..
என்றான் அருண் ரதியிடம்..
நான் நினைச்சத எப்படியாவது அடைந்து விடுவேன் அருண்… அது
என்னோட சின்ன வயசுல இருந்தே பழக்கம்… என்றாள் ரதி.
அப்படியே எங்க அம்மா மாதிரியே யோசிக்கிற என்று கன்னத்தைப்
பிடித்து கிள்ளி கொஞ்சினான் அருண்.
“ரதி வெட்கப்பட்டு தலை குனிந்தால்” அப்படி சொன்னா இங்கு யாரும்
நம்ப போறது இல்ல…
சுற்றிலும் பூக்களின் வாசம் கையில் பாலுடன் மங்கை… போதை மருந்து
இல்லாமலே கண்களில் போதை ஏறியது அருணுக்கு..
ரதியை அள்ளி எடுத்து கட்டிலில் கிடத்தப் போக…
அடுத்து ரதி செய்த செயலில் அருண் என்ன செய்வது என்று தெரியாமல்
அதிர்ந்து நின்றான்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!