அசுரன் 20
ரதியை அள்ளி எடுத்து கட்டிலில் கிடத்தப் போக…
மல்லிகை பூவின் மனம் அதிகமாக இருந்தது அந்த அறையில்… அது
கர்ப்பவதியான ரதிக்கு ஒத்துக் கொள்ளாமல் அருண் மேலே வாந்தி
எடுத்து விட்டாள்…
அதைப் பார்த்து அதிர்ந்து விழித்தான் அருண்…
என்ன பேபி… இப்படி பண்ணிட்ட வாமிட் வந்தா சொல்ல மாட்டியா…
என்று சிறிதாய் கோபித்துக் கொண்டான்…
இல்ல அருண்… நானே எதிர்பார்க்காம வந்துருச்சு… எனக்கு ரொம்ப
தலை சுத்துற மாதிரி இருக்குது நிக்க முடியல… நா.. படுக்கிறேன் என்று
கூறிவிட்டு படுக்கையில் போய் படுத்துக் கொண்டாள் ரதி….
இப்ப நான் என்ன பண்ண?.. என்றான் அருண் கோபமாக…
நீ உன்னோட டிரெஸ் கிளீன் பண்ணிட்டு… இந்த இடத்தையும் கிளீன்
பண்ணிடு… கீழ இருந்து யாரையும் கூப்பிடாத… அப்புறம் நம்ம ஃபர்ஸ்ட்
நைட்ல இப்படி நடந்துச்சுன்னு சொல்லி நமக்கு ரொம்ப இன்சல்ட்டா
போயிரும்.. சோ… நீயே இதெல்லாம் கொஞ்சம் கிளீன் பண்ணிடு… என்று
கூறிவிட்டு படுத்து விட்டாள்…
எது நானா… என்ன பேபி சொல்ற .. எனக்கு இதெல்லாம் தெரியாது ரதி…
என்றான் அருண்.
இனிமேல் தெரிஞ்சுக்கோ அருண்.. உன்னோட குழந்தைக்காக தானே
பண்ற… சந்தோசமா கிளீன் பண்ணிட்டு சீக்கிரம் வந்து படு என்று
கட்டளையிட்டு விட்டு … அதற்கு மேல் அவள் எங்கு முழித்து இருந்தாள்
கண் அயர்ந்து விட்டாள்.
பின் அருணும், ரதி சொன்னது போலவே தன்னால் முடிந்த அளவு
அவனையும் சுத்தம் செய்து கொண்டு அறையையும் சுத்தம் செய்துவிட்டு
படுக்கையில் வந்து படுத்தான்.
தூக்கம் வரவில்லை தன் நிலையை நினைக்கும்போது அவனுக்கே
கடுப்பாக இருந்தது. எவ்வளவு ஆனந்தமாக காத்துக் கொண்டு
இருந்தான்… ஒருவேளை மலர் சாபம் விட்டு இருப்பாளோ என்றெல்லாம்
நினைத்தான். என்ன மாதிரி இன்ட்ரோ என்னோடது… அப்படிப்பட்ட
என்னோட பர்ஸ்ட் நைட் ல இப்டி ஒரு கல்லை தூக்கி போட்டாலே பாவி
என்று புலம்பிய படி…. நீண்ட பெருமூச்சு எடுத்து விட்டு.. இன்னைக்கு
நமக்கு இது தான் துணை என்று அங்கிருந்த தலையணை கடுப்பபுடன்
எடுத்து காலுக்கு இடையில் வைத்துக்கொண்டு உடலைக் குறுக்கி படுத்து
தூங்கி விட்டான். திருமணதிற்கு பிறகாவது ஒருத்தருக்கு ஒருத்தர்
உண்மையாய் இருக்கலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் , இன்று
சுகத்தை தேடி செல்ல தோன்ற வில்லை அருணுக்கு.
(மலர் சாபம் விடல பா நாங்க தான் சாபம் விட்டோம்😁)
******************
காலையில் புத்துணர்வுடன் உதயமானான் செங்கதிரோன்…
மலர், காலையில் சீக்கிரமே எழுந்து தலைக்கு குளித்து முடியை சிறு
கிளிப்புக்குள் அடக்கி இருந்தாள். எப்பொழுதும் சாமி அறைக்கு சென்று
பூஜையை முடித்து வருபவள் இன்று சாமி அறைக்குள் செல்லவில்லை
அரை வாசலிலே நின்று கையை மட்டும் எடுத்து கும்பிட்டு விட்டு திருநீறு
எடுத்து பூசிக்கொண்டு வந்துவிட்டாள்…
எப்பொழுதும் அருணின் அறைக்குள் சென்று அவனுக்கு
தேவையானவற்றை செய்பவள் இன்று அங்கு அவள் செல்லவில்லை…
அனைவரும் தங்களது வேலைகளை செய்து விட்டு அவர்களது
அலுவலகத்திற்கு கிளம்பி வெளியில் வந்து டைனிங் டேபிளில்
அமர்ந்தனர்.
ஆதி! ஆபிஸ் கிளம்பிட்டியா… என்றான் விக்ரம்..
ஆமாண்டா விக்ரம்… நாலு மாசத்துக்கு அப்புறம் ஆபீஸ் வர்றதால, இங்க
ஆபீஸ்ல நிறைய வேலை முடிக்க இருக்கிறது, இன்னைக்கு ஒரு
இன்டர்வியூ கூட வச்சிருக்கேன் என்றான் ஆதி.
நான் உனக்கு ஏதாவது ஹெல்ப்க்கு வரட்டுமாடா!.. என்றான் விக்ரம்.
உன்னோட ஆபீஸ்ல வேலை கெட்டுப் போயிடுமே டா என்றான் ஆதி.
இன்னைக்கு என்னோட ஆபீஸ் போக புடிக்கல டா!… நான் உன் கூட
வரேன்… என்று அகல்யாவை பார்த்துக்கொண்டே ஆதியிடம் சொன்னன்.
உனக்கு ஓகே நா வாடா… எனக்கு ரொம்ப ஹெல்ப் அ இருக்கும்… என்றான்
ஆதி.
மலர், அனைவருக்கும் உணவுகளை பரிமாறிக் கொண்டு இருந்தாள்.
என்ன மலர் இன்னைக்கி என்ன ஸ்பெஷல் என்று கேட்டான் விக்ரம்…
பூரி கிழங்கு கேசரி வடை.. அண்ணா! என்றாள்.
ஆதி!… நீ மலரோட சாப்பாட்ட சாப்பிட்டதில்லையே அற்புதமா இருக்கும்
இன்னைக்கு சாப்பிட்டு பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லு என்றான்
ஆதி இடம்…
மலர், ஆதிக்கு பரிமாறினாள். மலரின் கையை பார்த்துக்
கொண்டிருந்தான் ஆதி.
திருமணத்தன்று அணிந்திருந்த அதே கண்ணாடி வளையல் கொஞ்சம்
சாயம் போயி பளபளப்பு குறைந்து போய் இருந்தது. நகங்கள்
வெட்டப்பட்டு சுத்தமாக இருந்தது…
அமைதியாய் உண்டு முடித்து… எழுந்தான் ஆதி.
என்னடா என் தங்கச்சி சமையல் எப்படி…. என்றான் விக்ரம் புருவத்தை
மேல் உயர்த்தி…
அவனை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு நீ நல்ல
சாப்பாட உன் வாழ்க்கையில் சாப்பிட்டதே இல்லையாடா ? என்றான்
ஆதி.
ஏண்டா இப்படி கேட்கிற… இந்த சாப்பாட்டுக்கு என்ன குறை என்றான்
விக்ரம்.
பூரில ஆயில் கூட… கிழங்குல உப்பு பத்தல…. கேசரி ஓவர் இனிப்பு… வடை
கல்லு மாதிரி இருக்கு… என்று ஒவ்வொன்றிலும் குறையை கண்டுபிடித்து
சொல்லிவிட்டு மலரை ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பினான் ஆதி.
மலர் அமைதியாய் அந்த இடத்தில் நின்றிருந்தாள்..
டேய்… ஏ தங்கச்சி சமையலையே குறை சொல்றியா.. பொறுடா..
உனக்கெல்லாம் எங்களோட ராஜமாதாவை சமைக்க சொல்றேன்
அன்னைக்கு இருக்குடா உனக்கு… என்றான் விக்ரம்.
கொலை கேஸ்ல உள்ள போயிருவ பரவாயில்லையா!…என்றான் ஆதி..
இப்போ… நீ வரியா இல்ல.. நான் மட்டும் கிளம்பட்டுமா.. என்றான் ஆதி.
டேய் வரண்டா பொறுடா… என்று கூறிகொண்டே அவன் பின்னையே ஓடி
சென்று காரில் ஏறிக்கொண்டான் விக்ரம்.
போகும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள் அகல்யா தன் மேல்
உச்சபட்ச கோபத்தில் இருக்கிறான் என்று அவளால் உணர முடிந்தது.
பின் அவளும் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் கிளம்பி சென்றாள்.
எப்பொழுதும் அகல்யாவிடம் ஏதாவது ஒன்று வம்பு இழுத்துக் கொண்டே
இருப்பவன்… இன்று அவளை கண்டுகொள்ளாமல் செல்வதை மலரும்
கவனித்தாள்.
**********
காலையில் நேரம் கழித்தே கண்விழித்தான் அருண்…
அருகில் ரதி தூங்கிக் கொண்டு இருந்தாள்..
இன்டர் காமில் அழைத்து காபி கொண்டு வர சொன்னான்..
சுதா காபி கொண்டு வந்தார்…
அரைக்கதவை சிறியதாக திறந்து காபியை வாங்கிக் கொண்டு சுதாவை
அனுப்பி வைத்தான்..
இன்று காபியின் சுவை வித்தியாசமாக இருந்ததை உணர்ந்தான்.
குளித்து முடித்து வெளியில் வர என்றும் அவனுக்காக காத்திருக்கும்
அயன் செய்யப்பட்ட டிரஸ்களும் பாலிஷ் செய்யப்பட்ட ஷூக்களும்,
சுத்தம் செய்யப்பட்ட படுக்கையும் இன்று இல்லை…
அலுவலகத்திற்கு கிளம்பி டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான்..
சுதாவால் உணவு பரிமாறப்பட்டது…
உண்டு முடித்துவிட்டு அலுவலகம் கிளம்பி சென்று விட்டான் அருண்.
*************
ஆதியின் அலுவலகத்தில்…
ஹெச் ஆர் பதவிக்கான நேர்முகத் தேர்வு இன்று நடைபெறுகிறது..
தேர்வர்கள் அனைவரும் வரிசையாக இருக்கையில் காத்திருந்தனர்..
அப்பொழுது ஆதியும் விக்ரமும் அலுவலகத்திற்குள் நுழைந்தனர் அவன்
நடந்து வந்து தேர்வர்களை கடக்கையில் அனைவரும் எழுந்து அவனுக்கு
வணக்கம் வைத்தனர் ஒருவளைத் தவிர.. பேண்ட் சர்ட் அணிந்து, ஃப்ரீ
ஹேர் விட்டிருந்தால், அந்தப் பெண். கால் மேல் கால் போட்டு நிமிர்ந்து
அமர்ந்து எதையோ ஆர்வமாக படித்துக் கொண்டு இருந்தாள்.
ஆதியும் விக்ரமும்.. அவளின் நடவடிக்கைகளை கவனித்து விட்டு தான்
சென்றனர்.
பல கட்ட தேர்வு முறைகளுக்கு பின், குறிப்பிட்ட நான்கு நபர்கள் மட்டும்
நேர்முக தேர்வுக்கு அனுப்பப்பட்டனர்.
நான்காவது நபராக உள்ளே நுழைந்தாள் அந்தப் பெண்.
மே ஐ கம் இன் சார்…
எஸ் கம் இன்…… டேக் யுவர் சீட்…
தேங்க்யூ சார்… ( தனது சுயவிவரம் அடங்கிய பைலை ஆதியின் புறம்
நீட்டினாள்)
மிஸ்.நந்தினி..
எஸ் சார்…
சில தொழில் சம்பந்தமான கேள்விகளை கேட்டான் ஆதி..
சிறப்பாக பதில் அளித்தாள் நந்தினி.
எங்க கம்பெனில வேலையில சேரணும்னா கொஞ்சமாவது பேசிக்
ரெஸ்பெக்ட் தெரிஞ்சு இருக்கணும்னு நாங்க நினைக்கிறோம் நந்தினி!..
என்றான் விக்ரம்.
ஆக்சுவலி சார்.. நீங்க வரும்போது நான் ஒரு முக்கியமான ஆர்டிகல்
படிச்சிட்டு இருந்தேன்… எந்த வேலையும் செய்யும் போதும் என்னோட
முழு கவனமும் அதுல மட்டும் தான் இருக்கும்.. நீங்க கடந்து போகும்போது
நான் எழுந்து இருந்தா நான் அந்த ஆர்டிக்கல இப்ப ஃபுல்லா கம்ப்ளீட்
பண்ணி இருக்க முடியாது… அது என் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே
இருக்கும்… அடுத்த வேலைய செய்ய விடாது… அதனால எப்பவுமே நான்
எடுத்த வேலையை 100% கம்ப்ளிட்டா முடிச்சிடுவேன்.. நான் எழுந்து
நிக்காததை வச்சு மட்டும் நான் உங்க மேல மரியாதை வைக்கலைன்னு
நீங்க நினைக்க வேண்டாம்.
நீங்க எனக்கு இந்த வேலையை கொடுத்தா…. நான் உங்க மேல
வச்சிருக்கற மரியாதையை என்னோட லாயல்டி மூலமா உங்களுக்கு
நான் ப்ரூவ் பண்ற என்றாள் நந்தினி.
சாரி சார்.. மன்னிச்சிடுங்க சார்…. கவனிக்கல சார்… என்று மழுப்பி
பதில் கூறாமல் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய பக்க
விளக்கத்தை தெளிவாக விளக்கிய நந்தினியின் குணம் ஆதிக்கு மிகவும்
பிடித்து போனது..
இன்ட்ரஸ்டிங்… என்றான் மனதிற்குள்…
விக்ரம், மேலும் சில கேள்விகளைக் கேட்க…. அதற்கும் சிறப்பாக பதில்
அளித்தாள்.
பின் ஆதியும் விக்ரமும் முழு மனதுடன் நந்தினியை தேர்வு செய்தனர்.
யூ ஆர் அப்பாயிண்டெட்…
நீங்க வெளியில ரிசப்ஷன்ல வெயிட் பண்ணி உங்களோட
அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் வாங்கிட்டு போங்க… நாளைக்கு
வேலையில் வந்து ஜாயின் பண்ணிக்கோங்க… என்று கூறி அனுப்பி
வைத்தனர்.
தேங்க்யூ சார்…. இன்று கூறிவிட்டு மகிழ்வுடன் அந்த அறையை விட்டு
சென்றாள் நந்தினி.
*****************
கண்விழித்த ரதி அருகில் அருணை தேடினாள் அவன் இல்லை என்றவுடன்
மணியை பார்க்க அது மதிய நேரத்தை காட்டியது..
சோ டையர்ட்…. என்று கூறிவிட்டு இன்டர்காமில் காப்பியை வரவழைத்து
குடித்துவிட்டு, குளித்து முடித்து உடைமாற்றி கீழே வந்தாள் ரதி.
மலரும் சுதாவும் சமையலறையில் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
அவர்கள் அருகில் சென்று தொண்டையை செருமினாள்.
என்ன… காலையிலேயே என் புருஷனுக்கு காபி போட்டு கொடுத்து….
டிபன் எல்லாம் போட்டு…. மயக்கி அனுப்பி வச்சாச்சா என்றாள் ரதி.
இல்ல மேடம் நான் சார பார்க்கல… இன்று மலர் சொல்ல….
இன்னைக்கு அருண்ஐயாவுக்கு நான்தான் காபி கொண்டு போய்
கொடுத்தேன் மா… நான்தான் சாப்பாடு பரிமாறினேன் என்றார் சுதா.
ஓஹோ… சரி போய்.. எனக்கு லஞ்ச் எடுத்து வை… என்றாள் ரதி, மலரை
பார்த்து.
மலர் ரதிக்கு சாப்பாடு வைத்து கொண்டு இருக்க ரதி அவளை நிமிர்ந்து
பார்த்தால்… அவள் கழுத்தில் மஞ்சள் தாலி தொங்கிக்கொண்டு
இருந்தது.. அதையே சிறிது நேரம் உற்றுப் பார்த்த ரதி.
ஏகபோகமாய் கடுப்பாகியது ரதிக்கு என்னதான் கிராண்டாக திருமணம்
நடந்தாலும் தன் கழுத்தில் இந்த தாலி ஏறவில்லையே என்ற பெரும் குறை
இப்போது அவளுக்கு தோன்றியது.
அதுவும் தன் கழுத்தில் ஏற வேண்டிய இந்த தாலி ஒரு வேலைக்காரி
கழுத்தில் தொங்கிக்கொண்டு இருப்பதை பார்க்கும்போது அவளுடைய
மனம் குமுறியது.
அப்போது அங்கு வந்த சக்கரவர்த்தி செய்த செயலில் வெகுண்டு
எழுந்தாள் ரதி.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
எந்த ரியாக்ஷன் வேண்டுமானாலும் கொடுக்கலாம்
நன்றி!