அசுரன் 22
காலையில் அனைவரையும் வழக்கம்போல் அலுவலகத்திற்கு
அனுப்பிவிட்டு சமையல் அறையில் தனது சுத்தம் செய்யும் பணிகளை
தொடங்கி இருந்தால் மலர் அப்போது அங்கு உள்ளே நுழைந்தாள் ரதி.
இன்னைக்கு வீட்ல ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன் என்னோட
பிரெண்ட்ஸ் எல்லாம் வருவாங்க ஒரு 20 பேருக்கு சாப்பாடு செஞ்சிடு
மெனு லிஸ்ட் கொடுக்கிறேன்..
என்று லிஸ்ட்டை நீட்டினாள் ரதி.
லிஸ்டில் இருக்கும் வகைகளை பார்த்து வாயில் கையை வைத்தார் சுதா.
அதுதான் ரெண்டு பேர் இருக்கீங்களே இது எல்லாத்தையும் ஈவினிங்
செஞ்சு வச்சுடுங்க என்றாள்.
என்னங்கம்மா… வகை அதிகமா இருக்கு, நாங்க ரெண்டு பேரும் மட்டும்
செய்யறது ரொம்ப கஷ்டம்… என்றார் சுதா.
அதெல்லாம் எனக்கு தெரியாது, இத்தனை நாள் சாயந்திரம் வேலை
செய்யாம தோட்டத்துல அரட்டை அடிச்சிட்டு தானே ஒக்காந்து இருந்தீங்க
இன்னைக்கு ஒரு நாள் வேலை செய்யுங்க ஒன்னும் ஆகிடாது…
எனக்கு ஈவினிங் எல்லாமே ரெடியா இருக்கணும்.. என்று மலரை பார்த்துக்
கொண்டே அதிகாரத்துடன் கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு ருத்ராவின்
அறைக்கு நகர்ந்தாள் ரதி.
என்ன மலரு… இப்படி சொல்லிட்டு போறாங்க…. இப்போ இதெல்லாம்
எப்படி சமைக்கிறது… என்றார் சுதா.
அதுதான் சொல்லிட்டு போயிட்டாங்களே சுதாம்மா… அப்போ செஞ்சு
தான் ஆகணும்…. என்றாள் மலர்.
நம்மளால செய்ய முடிஞ்சா அளவுக்கு மட்டும் செஞ்சு பாப்போம் அதுக்கு
மேல அவங்க ஏதோ பண்ணிட்டு போகட்டும்.
உடனே சமையல் செய்வதற்கான வேலையை ஆரம்பித்தாள் மலர்.
ருத்ராவின் அறையில்…
ஆன்ட்டி… என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க… என்றாள் ரதி.
ருத்ரா அப்பொழுது தான் தனது வெளிநாட்டு தோழிகளுடன் போனில்
உரையாடி விட்டு அமர்ந்திருந்தார்.
ஆன்ட்டி… இன்னைக்கு வீட்ல ஒரு பார்ட்டி அரேஞ்ச் பண்ணி இருக்கேன்…
என்னோட பிரண்ட்ஸ்காக அதுல நீங்களும் கண்டிப்பா கலந்துக்கணும்
என்றாள்.
சாரிடா ரதி.. டுடே எங்க கிளப்ல முக்கியமான மீட்டிங் இருக்கு நான்
போயே ஆகணும் என்றார் ருத்ரா.
ஓ காட்… என்ன ஆன்ட்டி… இப்படி சொல்றீங்க…. நீங்க வருவீங்கன்னு நான்
எதிர்பார்த்தேன்.
நீ… என்கிட்ட ஃபர்ஸ்டே இன்பார்ம் பண்ணி இருந்தா நான் மீட்டிங் தள்ளி
வச்சிருப்பேன் ரதி… என்றார் ருத்ரா.
இது சின்ன பார்ட்டி தான் ஆன்ட்டி… நீங்க உங்க மீட்டிங்க பாருங்க… என்று
கூறிவிட்டு, திரும்பியவள், ஆன்ட்டி உங்க கிட்ட ஒரு விஷயம்
சொல்லணும்னு நினைச்சேன்… மறந்துட்டேன்… இப்பதான் ஞாபகம்
வருது என்றாள்.
என்ன என்பது போல் பார்த்தார் ருத்ரா.
ஆன்ட்டி, அங்கிள்… அந்த வேலைக்கார பொண்ண மருமகளேன்னு
கூப்பிடறாரு அவரை கொஞ்சம் கண்டிச்சு வைங்க என்றாள்…
அவள் ஆதங்கத்தை புரிந்து கொண்ட ருத்ரா. “அவர் யார் சொன்னாலும்
கேட்க மாட்டாரு” ரதி அவருக்கு என்ன தோணுதோ அதைத்தான்
செய்வார்… அதை எல்லாம் நீ கண்டுக்காத… இந்த வீட்ட
பொருத்தவரைக்கும் நீ மட்டும் தான் என் மருமக… என்று கூறி
சமாதானப்படுத்த முயன்றார்.
தான் வந்த காரியம் நடக்காமல் போனதில் சிறிது ஏமாற்றத்துடன்
அறையை விட்டு வெளியே வந்தாள் ரதி.
மதிய உணவு கூட உண்ணாமல் வேலையை தொடர்ந்து கொண்டு
இருந்தாள் மலர் ஓர் அளவிற்கு லிஸ்டில் உள்ளவைகளை முடித்து
வைத்திருந்தாள்.
இன்று தனது நண்பனை பார்க்க வெளியூர் சென்று இருந்தார்
சக்கரவர்த்தி. நேற்று அவர் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது
அதை தெரிந்து கொண்ட ரதி அதன்பின் தான் இந்த பாட்டியை ஏற்பாடு
செய்ய நினைத்தாள்.
மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த ரதி… உணவு வகைகளை
பார்த்துவிட்டு, செய்யத் தவறிய உணவு வகைகளை கேட்டு
சண்டையிட்டுக் கொண்டு இருந்தாள்.
அப்போது உள்ளே நுழைந்தான் அருண்…
அருண் வாயிலில் கால் வைக்க ரதி அவன் பக்கம் தலையை திருப்ப அந்த
இடைவேளையில் வேகமாக நகர்ந்து தனது அறைக்குள் சென்று
கதவடைத்துக் கொண்டாள் மலர்.
இது பெரும்பாலும் நடப்பதே அருண் அந்த வீட்டில் இருந்தால் மலர்
அதிகபட்சம் வெளியே வர மாட்டாள்.
உள்ளே வந்த அருண் என்னாச்சு பேபி என்றான். நான் சொன்ன லிஸ்ட்ல
பாதி தான் சமைச்சு இருக்காங்க அருண்… என்றாள் கடுப்பாக..
வீட்ல ஏன் செய்ய சொன்ன? ஹோட்டல்ல ஆர்டர் பண்ணி வாங்கி
இருக்கலாமே? என்றான்.
வீட்ல வேலைக்காரிய வேலை வாங்காம.. சரிக்கு சமமா உட்கார வைத்து
டீ குடிச்சுகிட்டு கதை பேசிகிட்டு இருக்கார் உங்க அப்பா… அது தெரியுமா
உனக்கு.
என் கண்ணு முன்னாடியே வேலைக்காரிய மருமகளே….
மருமகளே… என்று கூப்பிடுகிறார் அதை ஏன்னு கேட்டா என்னையே
அவமானப் படுத்துறார்…
அவர்கிட்ட சொல்லி வை அருண். இனிமேல் அவளை மருமகளே னு
கூப்பிடக் கூடாது… என்றாள்.
நான் சொல்லி எல்லாம் அவர் கேட்க மாட்டாரு பேபி… அவர் என்ன
நினைக்கிறாரோ அதைத்தான் பண்ணுவாரு… என்றான்.
அம்மாவும் பையனும் சொல்லி வெச்ச மாதிரி ஒரே டயலாக்
சொல்றாங்க… என்று மனதில் நினைத்துக் கொண்டாள் ரதி.
தோட்டத்தில் அங்கங்கு தற்காலிக குடில் அமைக்கப்பட்டு பார்ட்டி
தொடங்கியது ….
அருணும் ரதியும் ஜோடியாக தங்களை அலங்கரித்துக் கொண்டு
கைகோர்த்தபடி தோட்டத்தை சுற்றி வந்து கொண்டு இருந்தனர் அதில்
இருவருக்குமே பெருமிதம்.
பார்ட்டியில் அதிக ஆண் நண்பர்களும் ஒரு சில பெண் நண்பர்களும்
கலந்து கொண்டிருந்தனர். சைத்ராவும் அதில் கலந்து கொண்டு
இருந்தாள்.
ஆண் அழகன்களாய் ஆதியும் விக்ரமும் வந்து சேர்ந்தனர். ஆனால்
சைத்ராவின் பார்வை ஆதியையே வலம் வந்தது..
“உன்கிட்ட அப்படி என்னதான் இருக்குதோ ஏண்டா என்ன இப்படி கட்டி
இழுக்கிற” என மனதுக்குள் நினைத்துக் கொண்டாள் சைத்ரா.
சைத்ராவின் பார்வையை உணர்ந்த ஆதி அவளை விட்டு தள்ளியே
நின்றான். ஒரு நாகரிகத்திற்கு கூட அவளிடம் பேசவில்லை .. அதை
விக்ரமும் கவனித்தான்…
என்னடா! மச்சான் விட்டா உன்னை பார்வையிலேயே முழுங்கிடுவா
போல… காம பார்வையால இருக்கு… இன்று விக்ரம் அவன் ஸ்டைலில்
ஆதியிடம் கேட்க…
எங்க போனாலும் இவ கூட எனக்கு தொல்லையா போச்சு டா மச்சான்…
என்றான் ஆதி.
அவதான் உன் பின்னாடி சுத்துறான்னு தெரியுது இல்ல… பாக்க ஆளும்
நல்லா தான் இருக்கிறா.. பேசாம இவளையே கல்யாணம் பண்ணிக்க
வேண்டியது தானடா… என்றான் விக்ரம்.
அவனை தீயாய் முறைத்தவன்… ஓ பாக்க நல்லா இருக்காளா… அப்போ
இவ்வளவு நேரம் அவளைத்தான் சைட் அடிச்சிட்டு இருந்தியா… பொறு…
இத அகல்யா கிட்ட நான் சொல்றேன்.. என்றான் ஆதி.
ஐயோ மச்சான்!.. அவன் என் தங்கச்சி மாதிரி டா என்று சரணடைந்தான்.
அப்படி என்னடா உங்களுக்குள்ள செட் ஆகல.. என்றான் விக்ரம்.
ஒரு கிஸ் குடுக்க முடியல போதுமா… என்றான் ஆதி பல்லை கடித்த படி…
கிஸ் கொடுக்க போனியா? இது எப்படா? என்றான் விக்ரம் அதிர்ச்சியாக.
அன்னைக்கு டேட்டிங் போனப்ப…
அன்று ஹோட்டல் அறையில் நடந்ததை இலைமறை காய்மறையாக ஆக
சொல்லி முடித்தான் ஆதி..
அடப்பாவி…. இதுக்குத்தான் நீ வெளிநாடு போனாயாடா… ஆனா
எதுக்குடா இடையிலே ஓடி வந்த… டேய் இது ரொம்ப சீரியஸான விஷயம்
மச்சான்… நம்ம நாளைக்கு டாக்டர்கிட்ட போய் பாக்கலாம் என்றான்
விக்ரம்… ஆதியை பார்த்து சீரியஸாக…
டேய்ய் ய்…. என்று பற்களின் நறநறவென கடித்தான்.
அவளைப் பார்த்து பீலிங்ஸ் வரலடா… என்றான் பற்களுக்கு இடையில்…
டேய் இவளை பார்த்தே வரலையா… அதுவும் அவ்வளவு தூரம் போய்
வரலையா… என்று விக்ரம் விலாவாரியாக கேள்வி கேட்டுக்
கொண்டிருக்க ஆதி முறைப்பை பரிசாக வழங்கி கொண்டு இருந்தான்.
அப்போது இடையில் அருண் வந்து இருவரையும் சாப்பிட அழைத்துச்
சென்றான்.
வீட்டில் சமைத்த உணவுகள் மேலும் விட்டுப் போன உணவுகளை
ஹோட்டலில் ஆர்டர் செய்து வைத்திருந்தனர் பார்ட்டியில்
மதுபானங்களும் இடம்பெற்று இருந்தன.
அருண் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டு பார்த்து புருவத்தை
உயர்த்தினான் “ம்ம் டேஸ்டி” என்று…
என்னடா மச்சான் நம்ம வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கு… எந்த
ஹோட்டல்ல ஆர்டர் பண்ண என்று விக்ரம் வினவ… அருண் உண்மையை
சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்ப இது எல்லாம் என் தங்கச்சி சமைச்சதா? அப்ப இன்னிக்கு ஒரு பிடி
புடிக்க வேண்டியது தான் என்றான் விக்ரம்.
இவன் என்னடா சாப்பாடையே… பார்க்காத மாதிரி நடந்துக்கிறான்..
என்று ஆதியும் அருணும் தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
அறைக்குள் முடங்கி இருந்த மலரை வேலையாட்களை விட்டு அழைத்து
வர சொன்னாள் ரதி.
தோட்டத்திற்குள் வந்த மலரிடம் இங்க நிறைய வேலை இருக்கு அங்க
என்ன ரூமுக்குள்ள போய் தூங்கிக்கிட்டு இருக்க போ… போய் வேலையை
பாரு… எல்லாத்துக்கும் சாப்பாடெல்லாம் பரிமாறு என்று அதட்டினாள்
ரதி.
தோட்டத்தின் முன்புறம் சில பேருடன் பேசிக்கொண்டிருந்த ஆதியும்
விக்ரமும் பின்புறமாக வந்த மலரை கவனிக்கவில்லை.
மலர் வந்திருந்தவர்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துக்
கொண்டு வந்து கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது மலரையே பார்த்துக் கொண்டிருந்த ரதியின் நண்பர்கள்
இருவர் அவளிடம் சீண்டலில் ஈடுபட தயாரானார்கள். அந்த வேலையை
அவர்களுக்கு கொடுத்ததே ரதிதான்.
துருதுருவென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த மலரின் பின்னழகை
பார்த்துக் கொண்டே கையை நீட்டியபடி அவள் அருகே வர,
தன் முதுகின் பின்னால் ஏதோ குறுகுறுக்க ஒரு உந்துதலில் சட்டென
பின்பக்கமாக திரும்பினாள் மலர்.
அவர்கள் கை தன் மேலே படும் முன்னே சட்டென அவர் அந்த இடத்தை
விட்டு நகர்ந்தாள் மலர்.
சட்டென்று அவளுடைய மணிக்கட்டை பிடித்து நிறுத்தினான் ஒருவன்.
சார்! ப்ளீஸ் கைய விடுங்க.. என்றாள் மலர் கைகளை உதறிய படியே…
வேலைக்காரியா இருந்தாலும் பாக்குறதுக்கு நல்லா தான் இருக்க…
எங்க கூட வந்து கொஞ்ச நேரம் இருந்துட்டு போ என்றனர்…
இவர்கள் ஒரு ஓரமாக வம்பு இழுத்துக் கொண்டு இருக்க அது
மற்றவர்களுக்கு அங்கு தெரியவில்லை… பாட்டு சத்தம் வேற அதிகமாக
இருந்ததால் மலரின் சத்தமும் அடுத்தவர்களுக்கு கேட்கவில்லை….
ஒரு கணம் நீண்ட பெருமூச்சை எடுத்துவிட்டு ப்ளீஸ்! கைய விடுங்க…
என்றாள் அழுத்தமாக… இதயம் எக்குதப்பாக படபடத்தது.
என்ன!… நாங்க கேட்டுகிட்டே இருக்கோம!… நீ சொன்னதையே
சொல்லிக்கிட்டு இருக்க… கழுத்துல தாலி இருக்கு ஆனா பாக்குறதுக்கு
கட்டு கலையாம இருக்க… எப்படியும் உன் புருஷன் ஒன்னும் பண்ணிருக்க
மாட்டான்… அதனால தான் சொல்றோம் எங்களுக்கு வந்து கொஞ்ச நேரம்
கம்பெனி கொடு நிறைய பணம் தருகிறோம்… என்றான்.
அவன் பேசும் போதே மலருக்கு புரிந்தது இருவரும் அளவுக்கு அதிகமாக
மது அருந்தி உள்ளார்கள் என்று.
அப்பொழுது அங்கே வந்தாள் ரதி.
ஹே கைஸ், இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க..
ஸ்வீட்டி… உன் வீட்டு வேலைக்காரி.. பார்க்க கொஞ்சம் நல்லா இருக்கா
அதனால கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ண சொன்னோம்.. என்னமோ ரொம்ப
ஓவரா பண்றா… என்று இருவரில் ஒருவன் கூறினான்.
ஃபர்ஸ்ட் அப்படித்தான்டா சொல்லுவாங்க… ஒரு தடவை பழகிடுச்சுனா
நீங்களே வேணாம்னு சொன்னாலும் உங்க பின்னாடியே வருவா பாரு
என்றாள் ரதி ஏளன சிரிப்புடன்…
கல்யாணம் ஆன அன்னைக்கே அவ புருஷன் விட்டுட்டு ஓடிட்டான்
தனியாலா தான் இருக்கா அவளுக்கும் இந்த மாதிரி தேவையெல்லாம்
இருக்கும்… அவகிட்ட கேட்டு வாங்குறதுக்கு என்னடா இருக்கு உங்களுக்கு
தேவைனா நீங்களே எடுத்துக்கோங்க என்றாள் ரதி வக்கிரத்தின்
உச்சமாக…
ஓ… நீ அப்படி சொல்றியா… எடுத்துக்கிட்டா போச்சு… புருஷன் வேற
இல்லையா அப்ப இன்னும் வசதியா இருக்கும் என்று….
அவன் கை இடையே நோக்கி முன்னேற போக…
அப்போது மற்றொரு கை அவனின் கையை பிடித்து தடுத்தது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️