அசுரன் 21

அசுரன் 21
என்னமா மருமகளே.. சாப்டியா..  உன்னோட புருஷன் லேட்டா தான் 
ஆபீஸ்க்கு போனான் போல…. என்றார் சக்ரவர்த்தி. 

சாப்பிட்டுக் கொண்டிருந்த ரதி நிமிர்ந்து பார்த்து… எனக்கு தெரியல 
அங்கிள்… நான் இப்பதான் எழுந்து வந்தேன்… என்றாள். 

ரதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் பார்வையை மலரின் பக்கம் 
திருப்பி… மருமகளே!… மாமாவுக்கு ஒரு காபி போட்டு எடுத்துட்டு வா… 
இன்னைக்கு உன்கிட்ட சொல்றதுக்கு நிறைய கதை ரெடி பண்ணி 
வச்சிருக்கேன் என்றார். 

அப்பொழுதுதான் ரதிக்குப் புரிந்தது அவர் கேள்வி கேட்டது மலரை 
என்று… தன்னை அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தாள்.. 

என்ன அங்கிள் இது!.. நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியில்லை.. 
அவ வேலைக்காரி…. வேலைக்காரிய, வேலைக்காரி மாதிரி நடத்துங்க… 
என்றாள் ரதி. 

அவ இந்த வீட்டு வேலைக்காரின்னு யாரு சொன்னா? நான் தான் அவளை 
இந்த வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டு வந்தேன்… என் பையன் கட்டிய தாலி 
அவ கழுத்துல இருக்குது பாரு? அது போதும் அவளோட உரிமை 
என்னவென்று இந்த வீட்டில இருக்கிறவங்களுக்கு சொல்ல என்று 
கூறினார் சக்கரவர்த்தி. 

ஆனால் அருண் அவள பொண்டாட்டியா ஏத்துக்களையே? என்றாள் ரதி. 

அவன் ஏத்துக்கிட்டாலும் ஏத்துக்காவிட்டாலும் மலர் என்னோட மருமகள் 
என்பதை யாராலும் மாற்ற முடியாது என்றார் உறுதியாக… 

தன்னை ரதி என்று பெயர் சொல்லி அழைப்பதையும் மலரை மருமகளே.. 
மருமகளே… என்று உரிமையாக கூப்பிடுவதையும் கண்டு ரதி வைகுண்டு 
எழுந்தாள். 
இன்றே அருண் வந்தவுடன் இதற்கு ஓர் முடிவு கட்ட வேண்டும் என்று 
நினைத்தாள். 

************** 

ஆதியின் அலுவலகத்தில்… 

டேய் மச்சான் காபி சாப்பிட்டு வரலாம் வாடா!… என்றான் விக்ரம். 

பொறுடா ரூமுக்கு வர சொல்றேன் என்று போனை எடுத்து காதில் 
வைத்தான் ஆதி. 

இல்லடா…. வீட்டில் போய் சாப்பிட்டு வரலாம் வா… என்றான் விக்ரம். 

ஏண்டா… ஒரு காபி குடிக்கிறதுக்கு வீடு வரைக்கும் போவாங்களா… 
என்றான் ஆதி. 

ஒர்த்தான காபி குடிக்கணும்னா கண்டிப்பா போலாம்… இன்னைக்கு சூடா 
பஜ்ஜி ஓட காபி குடிக்க போறோம்… நீயும் வர… என்றான் விக்ரம். 

அப்படி என்னடா ஸ்பெஷல் அந்த காபில.. 

என் தங்கச்சி போடுறதே ஸ்பெஷல் தான் டா.. 

எது காலைல உப்பு இல்லாத கிழங்கு மசால் சாப்பிட்டியா அது மாதிரியா.. 
என்று கோப்புகளில் கையெழுத்திட்டு கொண்டே பேசிக் 
கொண்டிருந்தான் ஆதி. 

டேய் மனசாட்சியை தொட்டு சொல்லுடா காலையில சாப்பாடு எவ்வளவு 
சூப்பரா இருந்தது ஏன்டா அந்த பொண்ணு கிட்ட போய் அப்படி 
நடந்துக்கிறீங்க என்றான் விக்ரம். 

ஏன் இந்த விஷயத்தை உன்னோட தங்கச்சி வாயை திறந்து கேட்க 
மாட்டாங்களா ? என்றான் ஆதி. 

அவ ஒரு வாயில்லா பூச்சி டா என்றான் விக்ரம். 

நான் வரல டா நீ போய் குடிச்சிட்டு வா என்றான் ஆதி. 

ரொம்ப பண்ணாதடா வாடா!.. என்று கையைப் பிடித்து இழுத்து 
சென்றான் விக்ரம். 

************** 

மாலையில் காபி கப்புடன் மலரும் சக்கரவர்த்தியும் தோட்டத்தில் 
அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். 

ஏன் சார்… மதியம்,… அவங்க முன்னாடி அப்படி சொன்னீங்க என்று 
கேட்டாள் மலர். 

என்னமா… சொன்னேன்.. என்றார் சக்கரவர்த்தி. 

அருண் சார் என்னோட…. என்று ஏதோ சொல்ல வந்து மென்று 
முழுங்கினால் மலர். 

அவன உன்னோட புருஷன்னு சொல்லக்கூட உனக்கு வாய் 
வரமாட்டேங்குது இல்ல… என்றார். 

சிறிது நேரம் மௌனமாக இருந்தவள்… சார்… நாம ஏற்கனவே இதை பத்தி 
நிறைய பேசிட்டோம்…. இதுக்கு மேல எதுவும் பேச வேணாம் சார்.. 
ப்ளீஸ்…  இதை இப்படியே விட்டு விடுவோம்…  என்றாள் மலர். 

நானும் அப்படியே விட்டுடலாம் தான் நினைக்கிறேன்.. ஆனா… இவங்க 
ரெண்டு பேரும் பண்ற அட்டூழியத்தை பார்க்கும் போது… தான் 
கடுப்பாகுது எனக்கு கொஞ்சம் கூட உனக்கு துரோகம் 
பண்ணிட்டோமேன்னு.. அவங்களுக்கு மனசாட்சியே உறுத்தவே இல்ல 
பாத்தியா… உன்கிட்டயே வந்து எவ்வளவு அதிகாரமும் திமிராவும் அந்த 
பொண்ணு பேசுது என்றார் சக்கரவர்த்தி. 

தான் இந்த வீட்டில் ஒரு வேலைக்காரி தான் என்பதை இவருக்கு எப்படி 
புரிய வைப்பது என்று தெரியாமல் பெருமூச்சுடன் அமைதியானால் மலர். 

சரியாக அந்த நேரத்தில் விக்ரமும் ஆதியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். 

அவர்களை கண்டதும் நேராக சமையலறைக்கு சென்று சுடச்சுட பஜ்ஜியும் 
காப்பியும் எடுத்து வந்து பரிமாறினாள் மலர். 

பஜ்ஜியை ஒரு கடி கடித்து விட்டு புருவத்தை உயர்த்திய ஆதி… காபியை ஒரு 
மிடறு விழுங்கிவிட்டு… 
ஏன்டா…விக்ரம்… உன்னோட தங்கச்சி ரொம்ப நல்லா பாட்டு 
பாடுவாங்கன்னு கேள்விப்பட்டேன் உண்மையா ? என்றான் ஆதி மலரை 
பார்க்காமலே. 

என்னடா சொல்ற எனக்கே தெரியாது… மலர் நீ நல்லா பாடுவியா.. 
அப்போ ஒரு பாட்டு பாடு எங்களுக்கு என்று கேட்டான் விக்ரம். 

என்னோட மருமக பாடுவா… ஆடுவா… கவிதை சொல்லுவா… 
எல்லாத்துலையுமே கெட்டிக்காரி என்றார்… சக்கரவர்த்தி பெருமிதமாக…. 

சாரி அண்ணா.. பாட்டு பாடுவதற்கு ஒரு நல்ல மனநிலையில 
இருக்கணும் இப்போ அந்த மாதிரி ஒரு மனநிலையில நான் இல்ல 
மன்னிச்சிடுங்க… எனக்கா பாடணும்னு தோணும்போது கண்டிப்பா.. 
நானே பாடுறேன் என்றாள் மலர். 

அவள் இவ்வளவு தூரம் விலக்கி கூறிய பிறகு யாரும் அவளை வற்புறுத்த 
வில்லை. 

அப்பொழுது விக்ரமிற்கு ஃபோன் வர அதில் “அகல்யா” என்ற பெயர் 
தெரிந்தவுடன் வேகமாக அதை கட் செய்து விட்டான். 

இதையெல்லாம் பால்கனியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்தாள் 
ரதி. விக்ரமும் சக்கரவர்த்தியும் மலரிடம் உரிமையாக பழகுவதை 
முதலில் தடுத்து நிறுத்த வேண்டும் என்று எண்ணி கொண்டாள் ரதி. 
ஆனால் அதை கடந்து ஆதியிடம் கண்கள் செல்லும் போது அதில் ஒரு 
வன்மம் படிந்து இருந்தது. 

****************** 

இரவு விக்ரமின் அறையில்… 

சாரி.. விக்கி… உன்னை கஷ்டப்படுத்தணும்னு நான் சொல்லல… என்றாள் 
அகல்யா. 

அவனது லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தவன் அவளை 
நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு பின் தன் பணியை தொடர்ந்தான் 
விக்ரம். 

அன்னைக்கு கல்யாணத்துக்கு வந்தவங்க… ரெண்டு..மூணு பேரு என்கிட்ட 
குழந்தையை பத்தி கேட்டாங்க விக்கி… அதனால தான் கொஞ்சம் 
எமோஷனல் ஆகிட்டேன் என்றாள். 

அவனிடமிருந்து மீண்டும் அமைதி. 

ப்ளீஸ் விக்கி என்கிட்ட பேசு என்னைய ரெண்டு திட்டு கூட திட்டு ஆனா 
பேசாம மட்டும் இருக்காதடா… ப்ளீஸ் டா… என்று கண்கள் கலங்கினாள் 
அகல்யா. 

அதைப் பார்த்த விக்ரமின் கோபம் எங்கே போனது என்றே 
தெரியவில்லை… 

ஆனாலும் இழுத்துப் பிடித்துக் கொண்டு ஆர்வமாக லேப்டாப்பில் வேலை 
செய்து கொண்டு இருக்க… 

டேய் விக்கி… நான் இங்க உன் கிட்ட இவ்வளவு நேரம் பேசிக்கிட்டு 
இருக்கேன் அங்க என்ன லேப்டாப்ல கிழிச்சுட்டு இருக்க… என்று 
லேப்டாப்பை பறிக்கப் பார்க்க… 
அப்பொழுதுதான் அதில் ஓடிக் கொண்டு இருந்த ஆங்கில படத்தை 
அகல்யா பார்க்க நேர்ந்தது… 

டேய்… என்னடா பண்ணிட்டு இருக்க… என்றாள் அகல்யா கடுப்பாக… 

ரெஃபரன்ஸ் பிக்சர் பார்த்துகிட்டு இருக்கேன் டி… என்றான் விக்ரம் 
தோளை குலுக்கியபடி.. 

அவனை முறைத்தாள் அகல்யா. 

பொண்டாட்டி கூட சண்டை போட்டு பேசாம பிரிஞ்சிருந்தா குழந்தை 
எப்பிடி பிறக்கும் அதுக்கு தான் டுடே ஹார்ட் வொர்க் பண்ண ரெஃபரன்ஸ் 
பிக்சர் பார்த்துகிட்டு இருந்தேன் அதுக்குள்ள வந்து நீ லேப்டாப்பை 
புடிங்கிட்ட என்றான் கண்ணடித்த படி. 

அப்போ என் மேல கோபம் இல்லையா… என்றாள் அகல்யா. 

உன் மேல கோபப்பட்டு நான் எங்கடி போ போறேன்….. அடியே அடாவடி… 
என்னுடைய உலகம் மொத்தமுமே நீதாண்டி… என்றான் அவளை 
பின்னால் இருந்து அணைத்த படி…. 

அதைக் கேட்டு அகல்யாவின் மனம் இறக்கை இல்லாமல் பறந்தது. காதல் 
கணவனின் காதல் மொழிகளை கேட்க எந்த மனைவிக்கு தான் சலிக்கும். 

அப்போ நாளைக்கு ஹாஸ்பிடல் செக்கப்  போலாமா? என்றாள் அகல்யா. 

போலாம் டி…. அப்பாயின்மென்ட் கூட வாங்கிட்டேன் போதுமா… 
ஆனா ஒரு கண்டிஷன்… என்றான். 

என்ன என்பது போல் தலையை மட்டும் திருப்பி அவன் முகத்தைப் 
பார்த்தாள். 

அங்க பாசிட்டிவா நியூஸ் சொன்னாலும்…. நெகட்டிவா நியூஸ் 
சொன்னாலும்…. நீ அதை பத்தி பெருசா கவலை பட கூடாது… 
அப்படின்னா சொல்லு ஹாஸ்பிடல் போலாம்!… என்றான். 

இல்ல கவலைப்பட மாட்டேன் ப்ராமிஸ்.. என்றாள் அப்பாவியாக முகத்தை 
வைத்துக்கொண்டு… 
தொண்டைக் குழியை பிடித்தபடி… 

அதைப் பார்த்து ரசித்து சிரித்து உச்சந்தலையில் முத்தம் வைத்தான் 
விக்ரம். 

***************** 
இரவு தாமதமாக வீட்டுக்கு வந்தான் அருண்… வீட்டின் நிசப்தம் 
சொல்லியது யாரும் அவனுக்காக காத்திருக்கவில்லை என்று… ஆனால் 
டேபிளின் மேல் உணவு அவனுக்காக காத்திருந்தது… அதை 
பார்த்துவிட்டு.. 
மேலே தனது அறைக்கு சென்றான்… 
ரதி தனக்காக காத்திருப்பாள் என்று நினைத்துக் கொண்டே… 

அவன் நினைப்பை பொய்யாக்காமல் ரதி படுக்கையில் அமர்ந்து 
போனை நோண்டிக் கொண்டு இருந்தாள்… 

உள்ளே நுழைந்த அருணை பார்த்தவள் ஹாய் பேபி… என்றாள்… 

ஹாய் பேபிஇ இ இ… என்று இழுத்துக் கொண்டே அவளை அணைக்க 
சென்றான் அருண்… 

பேபி ஒரே ஸ்வட்டா இருக்கும் பஸ்ட் போய் குளிச்சிட்டு வா…. என்றாள் 
ரதி. 

அதில் சிறிது சங்கடப்பட்டவன் ஓ சாரி பேபி… இந்தா வந்துடுறேன்…. 
என்று கூறிவிட்டு குளியலறை சென்று தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு 
வெளியே வந்தான். 

வா பேபி போய் சாப்பிட்டு வரலாம்… என்றான் அருண். 

நான் அப்பவே சூடா சாப்பிட்டேன் பேபி… நீ போய் சாப்பிட்டு வா… என்று 
போனிலிருந்து தலையை நிமிர்ந்து பார்க்காமலே பதில் கூற.. 

ஒரு கணம் அவளை நின்று பார்த்துவிட்டு சரி பேபி… என்று கூறிவிட்டு 
கீழே சென்றான் அருண். 

கீழே சென்று தனக்கான உணவை சாப்பிட்டு கொண்டு மேலே வர 
மனதில் ஒரு வெறுமை நிறைந்திருந்தது அருணுக்கு… 

மேலே வந்த அருண் படுக்கையில் படுத்து இருந்த ரதியை பார்த்தான். 

மறுபுறம் அவனும் சென்று படுத்துக்கொண்டான். 

சிறிது நேரத்தில் ரதியின் கை மெல்ல அருணின் இடுப்பில் அவனது டி-
ஷர்ட் விலக்கிவிட்டு வெற்று உடம்பில் ஊறியது.. அவளது மூக்கும் உதடும் 
அருணின் முதுகில் கோலம் போட்டு கொண்டு இருந்தன… 

நேத்து மிஸ் பண்ண டேவ… இன்னிக்கி செலிப்ரேட் பண்ணலாமா பேபி… 
என்றாள் ரதி கிசுகிசுப்பாக அருணின் காதில்… 

அவளது கையை தனது உடம்பிலிருந்து மெதுவாக விலக்கிய அருண். 

இவ்வளவு நேரம் எதுக்காக முழிச்சிருந்த பேபி? என்றான்  எதையோ 
எதிர்பார்த்து… 

பப்…பார்ட்டி… அப்படின்னு லேட் நைட் தூங்கி பழக்கமாயிருச்சு பேபி.. 
சீக்கிரமா தூக்கம் வர மாட்டேங்குது வெரி போர்… எப்படித்தான் இந்த 
பொண்ணுங்க எல்லாம் வாழ் நாள் முழுக்க வீட்ல இருக்காங்களோ 
புல்ஷீட்.. என்றாள் ரதி. 

ஆனால் அருண் எதிர்பார்த்த பதிலோ உனக்காக தான் காத்துகிட்டு 
இருந்தேன்…  என்பது போன்றவற்றை… 

அப்புறம் பேபி, உன்கிட்ட ஒன்னு சொல்லணும்னு நினைச்சேன்.. 
என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் ட்ரீட் கேட்டு இருக்காங்க… நம்ம வீட்ல 
சின்னதா ஒரு பார்ட்டி வச்சுக்கலாமா? என்றாள் ரதி… 

வீட்ல எதுக்கு ஏதாவது பைவ் ஸ்டார் ஹோட்டல்ல அரேஞ்ச் பண்ணலாம் 
என்றான் அருண்… 

ஹோட்டல் எல்லாம் வெரி போர் பேபி… நான் நம்ம வீட்டிலேயே 
வச்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன் என்றாள் ரதி. 

முடிவு பண்ணிட்டு என்கிட்ட எதுக்கு கேட்கணும்? என்றான் அருண். 

உன்னோட பிரண்ட்ஸ்சையும் வர சொல்லுன்னு சொல்றதுக்கு…. என்றாள் 
ரதி. 

பெருமூச்சுடன் தலையை உலுக்கியவன்… ஆதியும் விக்ரமும்  மட்டும் 
வருவாங்க நான் வேற யார்கிட்டயும் சொல்லல… என்றான் அருண். 

யுவர் விஷ்… என்றாள். 

அந்த பார்ட்டியில் மலருக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருப்பதாக நினைத்து 
வன்மமாக சிரித்துக் கொண்டாள் ரதி. 

நாளை நடக்கப்போவது தெரியாமல் தனது அறையில் நிம்மதியாக 
உறங்கிக் கொண்டு இருந்தாள் மலர். 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      எந்த ரியாக்ஷன் வேண்டுமானாலும் கொடுக்கலாம் 

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top