அசுரன் 25
வெகு நாட்களாக மலரின் தாலி மேல் வன்மம் வளர்த்து இருந்த ரதி இன்று
அதை பறிக்கும் பொருட்டு அதன் மேல் கையை வைக்க…
சக்கரவர்த்தியின் போன் அலறியது அதை எடுத்து காதில் வைத்தவர்…
மறுமுனையில் இருந்து பதட்டமான குரல் கேட்டது…
சார்… அருண் சாருக்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது சார்… A.H ஹாஸ்பிடல்ல
சேர்த்திருக்கோம் சீக்கிரம் வாங்க சார்… என்று அருணின் பிஏ மோகன்
கூற….
இதைக் கேட்ட சக்கரவர்த்தி, உறைந்து நின்றார்.
அவரின் பின்னால் ரதி, மலரிடம் கத்திக் கொண்டு இருக்க…
கொஞ்சம் அமைதியா இருக்கீங்களா!… என்று கத்திவிட்டு..
மோகனிடம் தன்னை நிதானித்துக் கொண்டு பேசத் தொடங்கினார்…
என்ன ஆச்சு…. இப்போ எப்படி இருக்கான்… மோகன் பதில் அளிக்க
தாமதிக்கும் ஒரு நொடி சக்கரவர்த்தியின் மனது கடவுளே!.. ஒன்றும் ஆகி
இருக்க கூடாது என்று மனது வேண்டிக்கொண்டே இருந்தது…
அருண் சார் கார்ல வந்துட்டு இருக்கும்போது… வளைவுல எதிரில் ஒரு
லாரி வந்து, அருண் சார் சடன் பிரேக் போடப்போகி, கார் கண்ட்ரோல்
மிஸ் ஆகி கவிழ்ந்திருச்சு சார்… அதனால அவரோட கையிலயும்,
கால்லையும் அடிபட்டு இருக்கு.. அருண் சார் என்கூட போன்ல கனெக்ட்
ஆகி இருந்ததுனால ஆக்சிடென்ட் எனக்கு உடனே தெரிஞ்சு அங்க
ஸ்பாட்டுக்கு போயிட்டேன் சார்… ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கோம்
சீக்கிரமா வாங்க சார்.. என்றார்.
சரி!… மோகன்…. நாங்க சீக்கிரமா வரோம்…. அதுவரைக்கும்
அருணை பாத்துக்கங்க… என்று கூறிவிட்டு போனை வைத்தார்
சக்கரவர்த்தி.
அவர் போனை பேசி முடித்து வைக்கும் வரை மூன்று பெண்களும், ஏதோ
ஒரு விபரீதம் என்று உணர்ந்து, அவரையே பார்த்துக் கொண்டு
இருந்தனர்.
ரதியின் பக்கம் திரும்பிய சக்கரவர்த்தி, உனக்கு இப்போ சந்தோசமமா?
என்று கேட்டார்…
ரதி என்ன என்று குழம்பியபடி முழித்தாள்..
இந்த தாலி மலர் கழுத்துல இருக்கக் கூடாதுன்னு.. கங்கணம் கட்டிக்கிட்டு
இருந்தியே… அது அறுத்து எரிய தயாரான இந்த நேரம் அங்க அருணுக்கு
ஆக்சிடென்ட் ஆயிடுச்சு… இப்ப தெரியுதா இதோட மகிமை என்னன்னு
உனக்கு என்று கோவமாய் கேட்டார் ரதியை பார்த்து…
இப்போ தெரியுதா மலர் அருணுக்கு எவ்வளவு முக்கியம் அப்படின்னு
என்று மீண்டும் கேட்க…
என்ன சொல்றீங்க!… என்ன ஆச்சு நம்ம பையனுக்கு… என்று பதறினார்
ருத்ரா…
அருணுக்கு ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடல் சேர்த்திருக்காங்களாம்
கையிலயும் காலையும் ரொம்ப அடிபட்டு இருக்கு.. சீக்கிரம் கிளம்பு
போலாம் என்று கூறிவிட்டு.. கார் சாவியை எடுக்க தனது அறைக்கு
சென்றார் சக்கரவர்த்தி…
இவ்வளவு பிரச்சனை செய்தும்… மலரின் தாலியை பறிக்க முடியாமல்
போனதால் கடுப்பாகி, தனது காரில் ஏறி ஹாஸ்பிடல் கிளம்பினாள் ரதி.
மலர் பூஜை அறைக்கு ஓடி சென்று மனதார அருணுக்காக பிராத்தித்து…
ஒரு பேப்பரில் திருநீரை மடித்துக் கொண்டு ஹாலிற்கு வர அங்கு
சக்கரவர்த்தியும் ருத்ராவும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வர அவர்களிடம்
இந்த திருநீரை நீட்டி அருணிற்கு பூசி விட கூறினாள் மலர்.
நீயும் வாம்மா!… என்று மலரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்
சக்கரவர்த்தி.
மருத்துவமனையில்…
மோகன் ஏற்கனவே விக்ரமிற்கும் ஆதிக்கும் போனில் அழைத்து தகவல்
சொல்லியிருந்தார் அதனால் அகல்யா உடன் சேர்த்து மூவரும்
மருத்துவமனையில் இருந்தனர்…
ரதி முதலில் வர, அடுத்த காரில் சக்கரவர்த்தி, ருத்ரா, மலர் மூவரும்
மருத்துவமனை வந்து சேர்ந்தனர்.
அருண் தலையில் சிறு பிலாஸ்டர் ஒட்டப்பட்டு கையிலும் காலிலும்
கட்டுகள் போடப்பட்டு மயக்கத்தில் படுத்திருந்தான்…
சார்… அவரோட கையிலயும் காலையும் சின்னதா பிராக்சர் ஆயிருக்கு…
அது சரியாகுறதுக்கு எப்படியும் ஒரு மாசம் எடுக்கும்.. அவரை கூட இருந்து
நல்ல கவனிச்சுக்கோங்க… எந்த வேலையும் செய்ய விடாதீங்க… வேற ஒரு
பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டு சென்றார் …
அருண் கண்விழிக்கவும், அனைவரும் சென்று பார்த்து வந்தனர். ரதி
அருணின் அருகில் இருந்தாள். மலரை அருணின் அறைக்குள்
அனுமதிக்கவில்லை ரதி.. மருத்துவமனையில் வீண் விவாதங்களை
தவிர்க்க சக்கரவர்த்தியும் அமைதியாக இருந்தார்.
மூன்று நாட்கள் கட்டாயம் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று
மருத்துவர் கூறிவிட்டார்…
இரவானது, முதல் ஆளாக ரதி அருணிடம் சென்று எனக்கு இந்த
அட்மோஸ்பியர் ஒத்துக்காது அருண்… வாமிட்டிங் சென்சேஷன் அதிகமா
இருக்கு… அதனால நான் வீட்டுக்கு போறேன்… என்று கூறிவிட்டு,
அவனுடைய கருத்தை எதிர்பார்க்காமல் தனது காரை
எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று விட்டாள்.
ரதி சென்றதும் மலரை அருணின் அறைக்கு அழைத்துச் சென்ற
சக்கரவர்த்தி அவள் வைத்திருந்த திருநீரை அருணின் நெற்றியில் பூசி
விட கூற..
அருணின் முகத்தை ஒரு நொடி பார்த்த மலர். இல்ல சார்… நீங்களே
யாராவது பூசி விடுங்க!… ப்ளீஸ்!… என்று கெஞ்சுதலாய் கேட்டாள்..
பூசி விடுமா!… உன் கையால!… பூசி விடு… என்று சக்கரவர்த்தி
வற்புறுத்த…
தயங்கியபடி தனது சேலை நுனியை சுழற்றிக்கொண்டு தரையை
பார்த்து யோசனையில் நின்றிருந்தாள் மலர்.
அப்பொழுது அங்கு வந்த ஆதி அவள் கையில் இருந்த திருநீரை எடுத்து
அருணின் நெற்றியில் பூசி விட்டான்.
இப்படியே… இங்கேயே நின்னு எவ்ளோ நேரம் பேசிக்கிட்டு இருக்க
போறீங்க அவன் ரெஸ்ட் எடுக்கட்டும் வெளியில் கிளம்புங்க!… என்று
கூறினான் கராறான மருத்துவர் போன்று…
இரவு ஆதியும், விக்ரமும் மருத்துவமனையில் தங்கி அருணை பார்த்துக்
கொள்ள முடிவு செய்தனர்.
அதனால் அகல்யா சக்கரவர்த்தி மலர் மூவரையும் வீட்டிற்கு அனுப்பி
வைத்தனர்.
இரவு அருணுக்கு உணவு வாங்கி வந்து ஊட்டி விட்டு அவனுடன் சிறிது
நேரம் பேசி, பின்ன அவனுக்கு மாத்திரைகளை கொடுத்து அந்த
அறையிலேயே உறங்கினர் ஆதியும் விக்ரமும்…
யார் வேலை தடைபட்டாலும் என்னுடைய வேலை தடைபடாது
என்று பொழுது விடிந்தது…
காலையில் சக்கரவர்த்தியும் மலரும் உணவு கூடையுடன் ஹாஸ்பிடல்
வந்து சேர்ந்தனர்…
இப்பொழுது அருணை யார் பார்த்துக் கொள்வது என்று குழப்பமாகியது…
ஆதியும் விக்ரமும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும்….
அருண் இல்லாத காரணத்தினால் சக்கரவர்த்தியும் அலுவலகத்திற்கு
செல்ல வேண்டும் என்ற நிலைமை வர…
ருத்ரா தனக்கும் லேடிஸ் கிளப்பில் மீட்டிங் இருப்பதாக கூறி
முன்னதாகவே சென்று விட்டார்.
ரதி ஹாஸ்பிடல் சூழ்நிலை ஒத்து வரவில்லை என்று மறுத்துவிட்டாள்.
வேறு வழியில்லாமல் மலர் அருணை பார்த்துக்கொள்ள சம்மதித்தாள்.
எந்த ஒரு பணியையும் கடமைக்காக செய்யாதவள்
ஆயிற்றே.. அனைத்திலும் நேர்த்தி நிறைந்து இருக்கும். அதுபோலவே
அருணையும் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டாள் மலர்.
அருணுக்கு விழுங்குவதற்கு இலகுவான உணவுகளாக தயாரித்து வந்து
அவளே ஊட்டி விட்டாள்.
நேரம் தவறாமல் மருந்துகளை கொடுத்து பார்த்துக் கொண்டாள்.
அருகில் இருக்கையில் அமர்ந்தபடி சுவற்றில் தலையை சாய்த்து சில
நேரங்களில் கண் அயர்ந்து விடுவாள்… அருண் திரும்பி படுக்கையில்…
ஸ்… என்று சிறு முணங்கல் வெளிப்பட்டாலும் வேகமாக கண்விழித்து
என்ன சார்…. வலிக்குதா… டாக்டரை கூட்டு வரவா… என்று அருகில் வந்து
கேட்டு… அவன் முறைப்பை மட்டும் பரிசாக பெற்றுக் கொண்டு
அமைதியாகி விடுவாள்.
ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஏதாவது ஒரு ஜூஸ் தயார் செய்து, தன்
கையாலேயே அவனை குடிக்க வைப்பாள்…
இதெல்லாம் பண்ணா உன் மேல அன்பு வந்து உன் கூட வாழ்வேன்னு
நினைச்சியா!.. என்று அருண் சில நேரங்களில் ஏளனமாக கேட்பான்…
இதெல்லாம் செஞ்சா அன்பு வருமானு தெரியாது சார்… ஆனா உடம்புக்கு
புது தெம்பு வரும்… சார்… உங்க உடம்பு சீக்கிரம் சரியாகி நீங்க எழுந்து
உங்க ஆபிசுக்கு போக முடியும்.. என்று கூறுவாள்.
இப்ப எல்லாம் ரொம்ப திமிரா பேசுற… எங்க வீட்டு சாப்பாட சாப்பிடற
இல்ல… அதனால இந்த திமிரு வரத்தான் செய்யும் என்பான் வாயில்
கொடுக்கை வைத்து…
மலர் அவனை ஒரு அடிபட்ட பார்வை பார்த்துவிட்டு, இதையெல்லாம்
கண்டு கொள்வது கிடையாது தனது கடமையே கண்ணாக இருப்பாள்.
அவனுக்கு சேவை செய்யும் நேரங்களைத் தவிர மீதி நேரங்களில்
அறையின் வெளியே வந்து அமர்ந்து கொள்வாள். அருண் போனுக்குள்
நுழைந்து கொள்வான்.
அடுத்த நாள் மருத்துவர் அவரோட உடம்ப ஹாட் வாட்டர் வைத்து
தொடச்சு விடுங்க… என்று சொல்லிவிட்டு செல்ல… ஹாஸ்பிடலில் இருந்து
சுடுநீரும் கொடுக்கப்பட்டது… ஆனால் என்ன செய்வது எப்படி செய்வது
என்று சங்கோஜமாய் யோசித்துக்கொண்டு இருந்தவளிடம்…
இதுக்குத்தானே ஆசைப்பட்ட… என்னோட உடம்ப தொட்டு பாக்க உனக்கு
ஒரு சான்ஸ் கிடைச்சிருக்கு என்று அருண் வன்மத்துடன் கூற…
தன் மேல் ஆயிரம் புழுக்கள் ஊர்வதைப் போல உணர்ந்தாள் மலர்.
வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறினாள் மலர்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த விக்ரம் உள்ளே நுழைந்து சுடுதண்ணீர்
வைத்து அருணின் உடம்பை துடைத்து விட்டு வேறு உடை மாற்றி
விட்டான்.
அருண் புரிந்து கொண்டான் மலர்தான், விக்ரமை வர வைத்திருப்பாள்
என்று. “அந்த பயம் நம்ம மேல இருக்கணும்… என்ன அடையனும்னு
என்னைக்கு நினைக்க கூடாது” என்று மனதிற்குள் நினைத்துக்
கொண்டான் அருண்.
மலர் அவனுக்கு உணவு ஊட்டி கொண்டிருக்கும் போதோ அல்லது
பிற உதவிகள் புரிந்து கொண்டிருக்கும் போதோ… அருண் ரதியிடம் தான்
போனில் பேசிக்கொண்டு இருப்பான்…
மலரை ஓர கண்ணில் பார்த்துக் கொண்டே ரதியிடம் குழைந்து குழைந்து
பேசிக்கொண்டு இருப்பான் அவனுக்கு அதில் ஒரு திருப்தி.
ரதிக்கு இந்த மருத்துவமனையில் அமர்ந்து சேவை செய்வது எல்லாம்
அவளுக்கு விருப்பம் இல்லை… அதனாலையே தனது கர்ப்பத்தை
காரணம் காட்டி அவள் மருத்துவமனை வரவில்லை ஆனால் மலர்
அருகில் இருப்பதினால் எங்கே அருனிடம் நெருங்கி விடுவாளோ என்ற
பயத்தில் அவனை ஃபோனிலேயே தனது கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருந்தாள்…
எது போலி எது உண்மை என்று அறியாத அருணோ ரதி சொல்வதை
எல்லாம் நம்பிக் கொண்டு இருந்தான்.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டான் அருண்.
இத்துடன் நான்கு தாதிகள் அருணுக்கு நியமிக்க பட்டு விட்டது
சக்கரவர்த்தியால்…
பெண் தாதிகள் வந்தால் ரதியின் பேச்சையும் எரிந்து விழுவதையும்
தாங்க முடியாமல் வந்த இரண்டு நாளில் ஓடி விடுகின்றனர். ஆண்
தாதிகள் வந்தால் அருணின் கோபத்தை தாங்க முடியாமல் ஓடி
விடுகிறார்கள் அதனால் அருணை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு
மீண்டும் மலரின் தலையில் விழுந்தது.
இப்பொழுதெல்லாம் தினமும் ரதி, தன் அலுவலகத்திற்கு கிளம்பி
விடுவாள்.. ருத்ராவும் பெற்ற மகனை கண்டு கொள்ளாமல் ஊருக்கு
சேவை செய்கிறேன் என்று கிளம்பி விடுவார்… சேவை மனப்பான்மை
எல்லாம் ஒன்றும் கிடையாது, அப்பொழுதுதான் அவருடைய பெயரும்
புகழையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற எண்ணம்.
ஆதியும் விக்ரமும் அன்று ஒரு நாள் அருணை பார்க்க அவன் அறைக்கு
வர மலர், அருணிற்கு உணவை ஸ்பூனில் எடுத்து ஊட்டி கொண்டு
இருந்தாள்.
ஆதியும், விக்ரமும் சோபாவில் அருனிடம் பேசிக்கொண்டு இருக்க… மலர்
பொறுமையாக ஸ்பூனில் உணவை எடுத்து ஊட்டி விடவும் பின்பு சிதறும்
படுக்கைகளை மெல்லிய காட்டன் துணி வைத்து துடைத்து விட்டாள் …
“பேசிக் கொண்டிருக்கும் போதே வாயில சோத்தை திணிப்பியா” என்று
அவன் எரிந்து விழுவதையும் பொறுப்பெடுத்தாமல் பொறுமையாக
அவனை கையாண்டு உணவை முழுவதும் ஊட்டி முடித்து பாத்திரத்தை
எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
வெளியில் வந்த விக்ரம் ஆதி இடம் அந்தப் பொண்ணு எவ்வளவு அன்பா
பார்த்துக்கிறது… இவன் எப்படி எறிஞ்சு விழுகிறான் என்று பாரு… ஏன்டா
இவன் மட்டும் இப்படி இருக்கான் என்றான் விக்ரம்…
அவன் என்ன எறிஞ்சு விழுந்தாலும், கழுவி கழுவி ஊத்துனாலும், உன்
தங்கச்சி ரொம்ப அன்பா பார்த்துக்கொள்வதை நினைக்கும் போது
உடம்பெல்லாம் புல்லரிக்குது மச்சான் என்ன…. ஒரு தெய்வீக காதல்…
இன்று உச்சிக்கொட்டி விட்டு திரும்பினான்….
அங்கே மலர் நின்று இருந்தாள்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️