அசுரன் 26

 

அசுரன் 26

அருணுக்கு உணவை ஊட்டி முடித்து… கீழே சென்று தண்ணீர் எடுத்து 
மேலே வந்தாள் மலர். அப்பொழுதுதான் ஆதியும், விக்ரமும் பேசிக் 
கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.. 

ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு விக்ரமிடம்… “அண்ணா அருண் 
சாருக்கு இன்னைக்கு டவல் பாத் எடுக்கணும் கொஞ்சம் ஹெல்ப் 
பண்றீங்களா” என்று கேட்டாள்.. 

நீ ஹாட் வாட்டர் ரெடி பண்ணி வை மலரு.. நான் வந்து பண்ணி விடுறேன் 
என்றான் விக்ரம். 

சரிங்க அண்ணா என்று கூறிவிட்டு, போகும்போது, சுத்தப்படுத்த 
தேவையான அனைத்தையும் எடுத்துக் கொடுத்துவிட்டு,  ஒருமுறை 
ஆதியை பார்த்துவிட்டு சென்று விட்டாள் மலர். 

தன் அறைக்குள் சென்றவள், 

அப்படி என்னதான் என் மேல கோவமோ!.. இந்த சாருக்கு!… எப்ப பாரு 
என்னை முறைச்சுக்கிட்டே இருக்காரு… இல்ல ஏதாவது சொல்லிக்கிட்டே 
இருக்காரு…  இவரும் பணக்காரர் தானே அதனால நம்மள பார்த்தா 
அவருக்கு ஏளனமா தெரியும். என்று மனதுக்குள்ளயே ஆதியை சலித்துக் 
கொண்டாள் மலர். 

பிரண்ட்ஸ் இவங்க இந்த வேலையெல்லாம் செஞ்சா நான் எதுக்கு 
செய்யப் போறேன்.. ஃப்ரெண்ட்ஸ்ன்னு சும்மா வந்து சோ 
காமிச்சிட்டு  போறது. 

எப்ப பாரு உர்ருன்னு மூஞ்சிய வச்சுக்கிட்டு குரலா அது கர்.. கர் ன்னு 
சிங்கம் உரும்புற மாதிரி…. எப்ப பாரு நான் செய்கிற வேலையில்  குறை 
சொல்லிக்கிட்டே… அன்னைக்கு அப்படித்தான் சாப்பாட்டு நல்லா 
இல்லையாமா…. அஞ்சு பூரிய முழுசா முழுங்கிட்டு நல்லா இல்லன்னு 
சொல்லிட்டு போயாச்சு… 

விக்ரம் அண்ணாவோட ஃப்ரெண்ட்… நாளே இப்படி அரை லூசா தான் 
இருப்பாங்க போல… 

அடியே மலரு!… எல்லாம் உன் நேரம்டி போறவன் வர்றவன் எல்லாம் 
பொழுது போகலன்னு உன்ன திட்டிட்டு போற மாதிரி ஆகிப்போச்சு… 
ஆளும் மண்டையும்… மண்டையில எவ்வளவு முடி… தனி ஹேர் ஆயில் 
யூஸ் பண்ணுவாரோ… ( ஏம்மா!.. உனக்கு இருக்கிற பிரச்சனைக்கு இந்த 
சந்தேகம் ரொம்ப முக்கியமா?) 

அன்று ஒரு நாள் அப்படித்தான் மலர் ஆசை ஆசையாய் குறுக்கு வலிக்க 
பெரிய கோலமாய் வாசலில் போட… 

அருகில் இருந்த தோட்டக்காரரை அழைத்து… இவ்ளோ பெரிய கோலம் 
போட்டு வச்சா மனுஷங்க எப்படி வீட்டுக்குள்ளேயும் வெளியேயும் நடக்க 
முடியும்… இந்த டஸ்ட் எல்லாம் வீட்டுக்குள்ள போகாதா ஏன் வாசலில் 
சின்னதா கோலம் போட்டா ஆகாதா.. என்ன…. நாளைல இருந்து கோலம் 
சின்னதா போடுங்க…. என்னோட ஷூ எல்லாம் பாருங்க அழுக்கா 
ஆயிடுச்சு என்று காலை கோலத்தின் மேல் உதறிவிட்டு திட்டி விட்டு 
சென்றான் ஆதி. 

அதைக் கேட்ட மலரின் முகம் சிறுத்து விட்டது. 

இதையெல்லாம் நினைத்து பார்த்து பெருமூச்சு விட்டுக் கொண்டாள் 
மலர். 

வெளியில் அருணின் அறையில் இருந்து விக்ரம் அழைக்கும் ஓசை 
கேட்க… 

அங்க போய் பார்த்தாள் மலர்… 

விக்ரமும், ஆதியும் சேர்ந்து அருணை சுத்தப்படுத்தி உடைமாற்றி தலை 
சீவி உட்கார வைத்திருந்தனர். 

“அவனுக்கு ஏதாவது ஜூஸ் எடுத்துட்டு வர சொல்லு விக்ரம்” என்றான் 
ஆதி. 

மலரும் எடுத்துக் கொண்டு வந்து அருணுக்கு புகட்டப் போக… 

ஆதி அதனை வாங்கி அருணுக்கு பருக கொடுத்தான்… 

ஃப்ரெண்ட்ஸ்ன்னு நம்ம சும்மா வந்து சோ காமிச்சுட்டு போறதா 
நினைச்சிடக்கூடாது விக்ரம்…. இனிமேல் நம்ம ரெண்டு பேரும் வீட்ல 
இருக்கும் போது அருணுக்கு தேவையானதை நம்மளே பாத்துக்கலாம்… 
உன் தங்கச்சிய சமைத்துக் கொண்டு வரதோட நிறுத்திக்க 
சொல்லு…என்று ஆதி கூற… விக்ரமும் வேகமாக சரி என்று 
தலையசைத்தான். 

கீழே குனிந்து இருந்த மலர் முட்டைக்கண்ணை விரித்து ஆச்சரியமாய் 
ஆதியை பார்த்தாள்… 
“என்ன மனசுக்குள்ள நினைச்சத டயலாக் மாறாம அப்படியே சொல்றாரு 
“என நினைத்தாள்.  

அவள் முழியை பார்த்த ஆதிக்கு ஒரு மெல்லிய சிரிப்பு எட்டிப் பார்த்தது… 
ஆனால் அதை சாமர்த்தியமாக தனது உதட்டுக்குள்ளேயே மறைத்து 
வைத்துக் கொண்டான். 

************** 

அகல்யா, விக்ரம் ஹாஸ்பிட்டலில் ரிப்போர்ட் வாங்க சென்றிருந்தனர்… 

மருத்துவர் அனைத்து ரிப்போர்ட் களையும் பார்த்துவிட்டு… உங்க ரெண்டு 
பேரோட ரிப்போர்ட்டும் நார்மலா தான் இருக்கு… கொஞ்ச நாள்ல 
உங்களுக்கு இயற்கையாகவே குழந்தை பிறந்திடும்… நம்ம இன்னும் 
கொஞ்ச நாள் வெயிட் பண்ணி பார்ப்போம்…  அப்படி இல்லன்னா நம்ம IVF 
மாதிரி முறைகள் எல்லாம் ட்ரை பண்ணி பார்க்கலாம் என்றார். 

எதுவும் பிரச்சனை இல்லை என்று கேட்ட பிறகே அகல்யாவின் மனம் 
நிம்மதி அடைந்தது… ஆனால் இப்போது ஏன் குழந்தை இன்னும் 
உருவாகவில்லை என்கிற கேள்வி குழப்பத்தை அதிகப்படுத்தியது. 

ஏதாவது பிரச்சனைகள் இருந்தால் கூட அதற்கான மருத்துவ முறைகளை 
எடுத்து சரி செய்து விடலாம்… 

ஆனால் பிரச்சனைகளே இல்லாமல் குழந்தை பிறப்பு தள்ளி போவதை 
எண்ணி அவளால் சந்தோஷப்பட முடியவில்லை… 

நல்ல ஹெல்தியா சாப்பிடுங்க.. ஓவலேசன் பீரியட மிஸ் பண்ணாதீங்க.. 
போன்ற பொதுவான அறிவுரைகளை சொல்லி சத்து மாத்திரைகளை 
எழுதி கொடுத்து இருவரையும் அனுப்பி வைத்தார் மருத்துவர். 

விக்ரமும் அகல்யாவும் மருத்துவருக்கு நன்றி சொல்லிவிட்டு வீட்டிற்கு 
திரும்பினர். 

அவர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே செல்லும் பொழுது, காரை 
பார்க் செய்துவிட்டு  மருத்துவமனைக்குள் நுழைந்தாள் ரதி மாதாந்திர 
செக்கப்பிற்காக. 

காரில் வரும்பொழுதே விக்ரம் கவனித்தான் அகல்யாவின் முகத்தை 
குழப்ப ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன.. 

என்னடி…! அதான் எந்த பிரச்சனையும் இல்லைன்னு 
சொல்லிட்டாங்களே!… அப்புறம் என்ன யோசனையாகவே இருக்க என்று 
கேட்டான் விக்ரம். 

இல்ல விக்ரம்.. ஒன்னும் இல்ல நான் நல்லாத்தான் இருக்கேன் என்று 
சமாளித்தாள்.. எங்கே தனது குழப்பத்தை சொல்லி… அவனையும் 
குழப்பத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று எண்ணி… 

காரை ஆள் அரவமற்ற சாலையின் ஓரமாக நிறுத்தி… 

நாம அடுத்தவங்களோட விருப்பத்துக்கு குழந்தை பெத்துக்க 
வேணாம்டி… 
நமக்கு என்ன 50 வயசா ஆயிடுச்சு, நமக்கு இன்னும் நிறைய நாள் இருக்கு… 

நாலு பேரு கூட்டத்துக்கு நடுவுல ஏதோ கேட்டுட்டாங்க அப்படின்னு 
சொல்லி நீ குழந்தை பெத்துக்க நினைக்காத அகி…… 

அமைதியாக இருந்தாள் அகல்யா… 

ஏய் அடாவடி!… நான் ஒன்னு சொன்னா கேட்பியா… என்றான் விக்ரம்.. 

ம்.. ம்… சொல்லு விக்கி!… என்று அவனை பார்க்க… 

அவளது கன்னத்தை தனது இரு கைகளாலும் பிடித்து அவள் கண்களைப் 
பார்த்துக் கொண்டே…  ஐ லவ் யூ டி அடாவடி… என்று கூறி அவள் இதழ் 
மேல் இதழ் பதித்துவிட்டு,  எனக்கு இயற்கையான முறையில் தான் 
குழந்தை வேணும்… நமக்கு தான் எந்த குறையும் இல்லன்னு 
சொல்லிட்டாங்களே!… கொஞ்சம் வருஷம் பொறுத்து கூட நம்ம காதலோட 
பரிசா இறைவன் கொடுத்த வரமா!… அந்த குழந்தை இருக்கணும்னு நான் 
ஆசைப்படுறேன் என்றான்…  எப்படி நீயும் நானும் காதலால ஒன்று 
இணைகிறோமோ அதே மாதிரி என்னோட ஸ்பெர்ம்.. உன்னோட 
கருமுட்டையும்(Ovum) இயற்கையா இணையனும்.. என்றான்  விக்ரம் 
கண்களில் காதல் நிரம்ப. 

சரி என்று இடவலமாக தலையாட்டினாள் அகல்யா. ஆனால் அவள் 
குழப்பம் சரியாகியதா என்று தெரியவில்லை. 

****************** 

இப்பொழுதெல்லாம் மலர் தனது அன்னைக்கு அதிகமாக 
அழைப்பதில்லை இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறை அழைத்து 
பேசுவாள் எங்கே அதிகமாக பேசினால் தனது மனக்குமுறலை கொட்டி 
விட நேருமோ என்று நினைத்துக் கொண்டாள்… 

இன்று தன் அன்னையிடம் பேச எண்ணி அழைத்திருந்தாள் மலர்… 

அந்தப் பக்கம் வாசுகி,  மலரு!.. நானே உனக்கு போன் பண்ணனும்னு 
நெனச்சேன் நல்ல வேலை நீயே பண்ணிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் 
என்றார்… 

என்னம்மா!…. என்று கேட்க… 

நம்ம கவி மாசமா இருக்காடி, போன் பண்ணி சொன்னா… நான் 
காலையில போய் ஒரு எட்டு பாத்துட்டு வரலாம்னு இருக்கேன் என்று 
மகிழ்ச்சியாக கூறினார் வாசுகி. 

மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள் மலர்… 
ஆனாலும் மகிழ்ச்சிய உடனே அவளுக்கு தனது தங்கையின் உடல்நிலை 
குறித்து ஒரு வருத்தம் இருந்தது. 
திருமணம் செய்ய 18 வயது போதுமானதாக இருக்கும் ஆனால் குழந்தை 
பெற்றுக் கொள்ள அவளது உடல்நிலை தாங்கிக் கொள்ளுமா? என்று 
மனதிற்குள் ஒரு ஆதங்கம்… 
அதை தன் தாயிடமும் தெரிவித்தாள்.. 

அதுக்குள்ள என்னம்மா.. அவசரம்… நீ அவ கிட்ட சொல்லி இருக்கலாம் 
இல்ல… இன்னும் ஒரு ரெண்டு வருஷம் போனதுக்கு அப்புறம் குழந்தை 
பெத்துக்கலாம்னு … இப்ப அவளோட உடம்பு சூழ்நிலை ஒத்துக் 
கொள்ளுமா?… என்றாள் ஆதங்கமாக… 

என்னடி மலரு!… உன்கிட்ட ஒரு சந்தோஷமான விஷயத்தை சொன்னா!… 
நீ இப்படி அபசகுணமா பேசுற.. 
உன்னால தான் கல்யாணம் பண்ணி போன இடத்துல சாமர்த்தியமா 
பொழைக்க முடியவில்லை…  அவளாவது சந்தோசமா சாமர்த்தியமா 
பொழைக்கட்டும்டி என்றார் ஏதோ மலர் பொறாமையில் சொல்லுவதை 
போல நினைத்து… 

என்னம்மா சொல்ற… இதுல என்னமா சாமர்த்தியம் இருக்கு…என்றாள். 

அவளோட கணவன்காவது  கவி மேல அக்கறை இருக்க வேண்டாமா!… 
அவ இன்னும் சின்ன பொண்ணுமா!… உனக்கு நான் சொல்றது புரியுதா!… 
புரியலையா!… என்றாள்  கோபமாக… 

தன்னைப் பற்றி எப்படி.. இப்படி… கீழ்த்தரமான எண்ணமெல்லாம் 
பெற்றவளுக்கு தோணுகிறது என்று ஆதங்கம்… 

நீ சொல்றபடி பார்த்தா உனக்கு தான் குழந்தை பெத்துக்கிற வயசு 
வந்துருச்சில்ல நீ ஒரு நல்ல செய்தி சொல்லு எனக்கு… என்று மடக்கினார் 
வாசுகி… 

அம்மா நான் எங்களுக்குள்ள என்ன பிரச்சனை நடந்துட்டு இருக்குன்னு 
உன்கிட்ட முன்னாடியே நான் சொல்லிட்டேன்… உனக்கு தான் அது 
புரியல…. என்றாள் மலர்… 

மடியாத புருஷனை உன்னோட வழிக்கு கொண்டு வந்து குடும்பம் நடத்தி 
சந்தோஷமா வாழ்வது பேர்தான் டி சாமர்த்தியம்…, அந்த விஷயத்துல 
கவி கெட்டிகாரி… என்றார் வாசுகி… 

இப்பொழுதெல்லாம் அருணை புருஷன் என்று வாய் வார்த்தைக்கு 
சொல்லுவதே வேப்பங்காயாய் கசந்தது மலருக்கு… 

இப்பயும் சொல்றேன் மலரு ஒரு குழந்தை பிறந்துட்டா உன்னோட 
வாழ்க்கை ரொம்ப சந்தோசமா இருக்கும்.. எல்லாரும் எல்லாத்தையும் 
மறந்துட்டு… உன்ன ஏத்துப்பாங்க… நீ முதல்ல அதுக்கான வேலையை 
பாரு… என்றார்.. 

சரி மா.. நான் போன வைக்கிறேன்… அத்த கூப்பிடுறாங்க… என்று 
கூறிவிட்டு போனை வைக்கப் போக… 

அவளுடைய அம்மா சொன்ன வார்த்தையை அவள் காதால் கூட கேட்க 
விரும்பவில்லை அதை நினைத்துப் பார்க்கவே அருவருப்பாக இருந்தது 
மலருக்கு… கருமம்… கருமம்… என்று போனை தலையில் அடித்துக் 
கொண்டாள்… 

மலர் நீயும் வாடி!… போயி… கவிய பாத்துட்டு வரலாம்!… உங்க மாமியார் 
கிட்ட அம்மா வீட்டுக்கு போறேன்னு கேட்டு பாரு, உன் மாமனார் கிட்ட 
ஏதாவது பேசி உங்க மாமியாரை சம்மதிக்க வைக்க சொல்லு என்று 
கூறினார்… 
கேட்கிறேன் மா… கேட்டு பார்க்கிறேன். அவங்க என்ன விட்டா நான் 
கண்டிப்பா வரேன் என்று கூறினாள் மலர். 

அது அம்மா வீடு…. இது மாமியார் வீடு… அப்ப மருமகளோட வீடு எது 
என்று… பெரும் புரட்சி சிந்தனை தோன்றியது இக்கணம் அவளுக்கு… 

அவளுக்கும் இந்த வீட்டில் இருந்து மன அழுத்தம் அதிகமானது போல் 
இருந்தது மூச்சு முட்டியது..  திருமணம் ஆகி வந்த நாளிலிருந்து இந்த 
வீட்டை விட்டு அவள் எங்கும் செல்வதில்லை… அப்படி அழைத்துச் 
செல்லவும் ஆளில்லை… அதனால் ருத்ராவிடம் மூன்று நாட்கள் 
அம்மாவின் வீட்டிற்கு சென்று வர அனுமதி கேட்கலாம் என்று 
எண்ணியிருந்தாள்… 

ஆனால் அருணின் நிலை பற்றி விக்ரமிடம் கலந்து ஆலோசித்து விட்டு 
பின் முடிவு செய்து கொள்ளலாம் என்று, 
சிந்தனையில் சுழன்று கொண்டு இருக்கும் பொழுதே…. 

ருத்ராவிடமிருந்து அழைப்பு வந்தது மலருக்கு… 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top