அசுரன் 31

அசுரன் 31

இரவு அருண் வீட்டை வந்து அடைந்தவள் முதல் வேலையாக தனது 
அறைக்குள் சென்றவள், அம்மா வாங்கி கொடுத்த ஆடைகளை எடுத்து 
அலமாரியில் அடுக்கி வைத்தாள். அவளுடைய முதலிரவுக்காக 
பிரத்தியோகமாக அவளின் அம்மா கொடுத்து விட்ட அந்த பிரவுன் கலர் 
கவரை கையில் எடுத்து மெதுவாக அதன் மேலே வருடி ஒரு விரக்தி 
சிரிப்புடன்… எங்க அம்மாவ பொறுத்த வரைக்கும் எல்லா பிரச்சனைக்கும் 
ஒரே தீர்வு இதுதான்… என்று மனதில் நினைத்துக் கொண்டு, அதை 
பிரித்துப் பார்க்காமல் அலமாரியின் அடியில் பத்திரமாக வைத்தாள்.  

காலையில் வழக்கம் போல் அவளது வேலைகள் ஆரம்பமாகின… 

 இன்றும் வழக்கம்போல் விக்ரமே உணவு ஊட்டவர… சலித்துக் 
கொண்டான் அருண். 

ஆனால் ஒரு வாய் உணவை உண்டபின் அவனுக்கு புரிந்து விட்டது… 

என்னடா ஊருக்கு போனவ திரும்ப வந்துட்டா போல…. என்றான் அருண். 

ஏதோ யோசனைகள் இருந்தவன் ம்ம்… என்று மட்டும் பதில் அளித்தான் 
விக்ரம். 

மேடம் வந்து எனக்கு சாப்பாடு கொடுக்க மாட்டாங்களா…. ஆபீஸ்க்கு 
போற உன்ன கெடுத்து உட்கார வச்சிருக்கா…. அதைவிட அவளுக்கு என்ன 
பெரிய வேலை…. என்று எரிந்து விழுந்தான் அருண். 

யாரு உனக்கு சாப்பாடு கொடுத்தா என்னடா!… பேசாம சாப்பிடுடா… 
மனுஷன் இருக்க டென்ஷன்ல உயிரை வாங்கிட்டு!…. என்று விக்ரம் 
அலுத்து கொண்டான். 

எனக்கு அடிபட்டதனால எல்லோரும் ரொம்ப தான் சலிச்சுக்கிறீங்க… 
எனக்கு மட்டும் சரி ஆகட்டும் வைத்துக்கொள்கிறேன்..  என்றான் அருண் 
காட்டமாக.. 

அடுத்து ஆதி வந்து, அவனுக்கு தேவையான மாத்திரைகளை எடுத்துக் 
கொடுத்து… ஜூஸ் வர வைத்து பருக வைத்து, அவனை சுத்தம் செய்து 
படுக்க வைத்து விட்டு சென்றான். 

ஆனாலும் அவன் மனம் இந்த வேலைகளை எல்லாம் மலர் செய்ய 
வேண்டும் என எதிர்பார்த்தது என்னமோ உண்மைதான்… 

இன்டர் காமில் அழைத்து டீ கொண்டு வர சொன்னான்… சுமதி கொண்டு 
வந்து கொடுத்து விட்டு சென்றார்.. அதைக் குடிக்கவில்லை ஆடை மிதந்து 
ஆறி போய் டேபிளின் ஓரம் இருந்தது. இந்த வெறுமையை போக்கவே 
ரதிக்கு போனை போட்டான் அருண். மலர் மேல் இருந்த வன்மத்தில் 
ஹாஸ்பிடலில் இருந்த மூன்று நாட்களும் விடாமல் போனில் குடியிருந்த 
ரதி அருண் வீட்டுக்கு வந்ததும் கண்டுகொள்ளவே இல்லை… இதோ 
ரதியின் வீட்டிற்கு சென்று ஒரு வாரம் ஆகிவிட்டது இருப்பினும் ஒரு போன் 
செய்து அருணை பற்றி விசாரிக்க தோணவில்லை ரதிக்கு… அருண் தான் 
எப்பொழுதாவது பொழுது போகாமல் ரதிக்கு கூப்பிட பிஸியாக 
இருக்கிறேன் என்று கூறிவிட்டு வைத்துவிடுவாள். 

பேபி என்ன பண்ற.. 

ஆபீஸ்ல வொர்க்ல இருக்கேன் பேபி என்றாள் ரதி… 

உன்ன பாக்கணும் போல இருக்கு பேபி மா என்றான் அருண் குழைந்த 
குரலில்.. 

அதில் என்ன உணர்ந்தாலோ ரதி… “நைட் வீட்டுக்கு வாரேன் பேபி” 
என்றாள். 

படுத்த இடத்தில் பொழுதை ஓட்டவே வெகு சிரமமாக இருந்தது 
அருணுக்கு… 

மதிய வேலைகளில் சக்கரவர்த்தி வந்து சாப்பாடு ஊட்டி விட்டு 
சென்றார்… இரவு அகல்யா வந்து சாப்பாடு ஊட்டி விடுட்டாள்…. 

ரதிக்காக காத்திருந்து காத்திருந்து ஒரு கட்டத்தில் உறங்கி விட்டான் 
அருண்…. 

இரவு உறக்கத்தில் அவன் மேனியில் ஏதோ ஒன்று ஊறியது போல் இருக்க 
தனது கையை வைத்து வேகமாக தட்டி விட்டு எழுந்து அமர்ந்தான் 
அருண்… ரதிதான் அவன் இடையினுடனே கைவிட்டு படுத்திருந்தாள்.. ஒரு 
நிம்மதி பேரும் மூச்சுடன் அவள் பக்கம் திரும்பியவன் என்ன பேபி ? ஒர்க் 
முடியை இவ்வளவு நேரம் ஆயிடுச்சா? என்று கேட்க..  

ஆமா…ம் பே.. பி… என்று குளறலாக பதில் வந்தது… 

குடிச்சிருக்கியா பேபி என்றான்… 

என்னோட ஃப்ரெ..ண்ட் பர்த்…டே பார்..ட்டி பே…பி.. என்றாள்… 

உன்கிட்ட டாக்டர் சொல்லலையா… வயித்துல பாப்பா இருக்கும்போது 
குடிக்க கூடாது ரதி என்றான் காட்டமாக… 

எப்பவாவது குடிக்கலாம் தப்பு இல்ல பேபி ஓவர் டென்ஷன்… பாடி 
பெயின்… என்னால ஒன்னும் சமாளிக்க முடியல… ஒரே ஸ்ட்ரெஸ் அஹ 
இருக்கு… 

அருண் பதில் என்றும் கூறாமல் விட்டத்தை பார்த்து தலைக்கு ஒரு கையை 
வைத்து படுத்துக் கொண்டான். 

ரதியின் கை அவன் டி-ஷர்டில் உள்ளே வெற்று உடம்பில் ஊறியது… கை 
மெதுவாக இடுப்பின் கீழ் இறங்க… அவள் நோக்கம் புரிந்தவன்… அவள் 
கையை தடுத்து நிறுத்தினான்  அருண். 

பேபி என்ன பண்ற..  கொஞ்சம் கடுப்பாகத்தான் கேட்டான். 

நீதான பேபி… என்ன பாக்கணும்னு வீட்டுக்கு வர சொன்னா… என்றாள் 
குரலில் தாபத்தை ஏற்றி… 

ஒரு நிமிடம் அதிர்ந்தவன், பேபி நான் உன்ன மிஸ் பண்ணேன் அதனால 
பாக்க வர சொன்னேன்… அதுவும் இல்லாம என் கை, கால் ரெண்டுலயும், 
அடிப்பட்டு படுத்து இருக்கேன் இப்ப எப்படி முடியும்… 

நீ ஒன்னும் பண்ண வேணாம் பேபி… நான் பண்ணிக்கிறேன்… என்று 
அவள் கைகள் வேலையை தொடர…. 

அவள் கையை தட்டி விட்டு… வயித்துக்குள்ள பாப்பா இருக்கிறது ஏதாவது 
ஆகிட போகுது என்றான் குரலில் கடுப்புடன்.. அண்ட் மோர் ஓவர் எனக்கு 
இப்போ சுத்தமா மூட் இல்ல ரதி… பாடி ரொம்ப பெயின் அஹ இருக்க 
மாறி இருக்கு… என்றான் எரிச்சலாக… 

அதெல்லாம் ஒன்னும் ஆகாது பேபி. நான் பாத்துக்குறேன்… மூடு தானே 
அத நான் கிரியேட் பண்ற பாரு… என்று கூறிவிட்டு அருணின் உடம்பில் 
தனது வேலையை காட்ட தொடங்கினாள் ரதி. 

அவள் கை வித்தையிலும் வாய் வித்தையிலும் கண் சொக்கி கிடந்தான் 
அருண். 

தான் நினைத்த வேலை செய்து முடிந்ததும் விலகிப் படுத்தாள் ரதி. 

ஒரு மாதிரி இரிடேஷனா இருக்கு என்ன கொஞ்சம் பாத்ரூமுக்கு கூட்டிட்டு 
போ பேபி…. என்று அவன் கூற… 

காலைல எழுந்து போய்க்கலாம் பேபி…  எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு, 
நீ சும்மா தானே இருந்த நான் தானே எல்லா வேலையும் பார்த்தேன்… 
என்று கூறிவிட்டு படுத்து விட்டாள் ரதி. 

நள்ளிரவில் தூக்கம் கெட்டதால் அதற்கு மேல் உறக்கம் வரவில்லை 
அருணுக்கு உடம்பு வேறு கசகச என்று இருந்தது. புரண்டும் படுக்க 
முடியாது… ஒரு மணி நேரத்தை கழிப்பதே அவனுக்கு நரகமாய் இருந்தது. 

போனை எடுப்பதும் மணியைப் பார்ப்பதும் கீழே வைப்பதுமாய் 
இருந்தவன். அருகில் இருந்த இன்டர் காமில் அழைத்துப் பார்த்தான் 
யாராவது எடுப்பார்களா என்று… 
சரியாக அந்த நேரம்… தண்ணீர் எடுக்க வந்த மலர்… இந்த நேரத்தில் 
இன்டர் காம் அழைப்பதை பார்த்து வேகமாய் எடுத்தாள்… (பெரியவர்கள் 
இருக்கும் வீட்டில் யாருக்கும் ஏதாவது உதவி தேவைப்படுகிறதோ என்று 
பயந்து) 

ஹலோ… 

மலரின் குரலை எதிர்பார்க்காத அருண் சற்று திடுக்கிட்டு… அது… 
அது..  குடிக்க ஏதாவது சூடா கொண்டு வா… என்றான். 

என்ன வேணும் சார்… 

தெரியல ஏதாவது… 

பசிக்குதா சார்… 

அப்பொழுதுதான் யோசித்தான் வயிறு கொஞ்சம் கியா மியா என்றது… 
ஆமா…. 

கொண்டு வரேன் சார்…. என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள் 
மலர். 

இருக்கும், காய்கறிகளை வைத்து வெஜிடபிள் சூப் செய்து எடுத்துக் 
கொண்டு அருண் அறைக்கு  சென்றாள் மலர். 

அறையின் கதவை தட்ட திறந்து தான் இருக்கு உள்ள வா!… என்றான்… 

படுக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் மெல்ல நிமிர்ந்து 
உட்கார்ந்தான்… 

சூப் வாசனை நாசியை துளைத்தது. 

சிந்தாமல்… சிதறாமல்… அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்பூனில் 
எடுத்து புகட்டினால் கையில் ஒரு காட்டன் துணியை வைத்துக்கொண்டு.. 
உதட்டில் இருந்து தவறும் துளிகளை துடைத்து விட்டாள். 

இந்த நேரம் கிச்சனுக்குள்ள என்ன பண்ணிக்கிட்டு இருந்த… என்று 
கேட்டான் அருண். 

அது… தண்ணி எடுக்கறதுக்காக வந்தேன் சார்…  என்றாள் மலர். 

ஓ ஒ… 

அருணின் அருகில் ரதி உடலில் ஆடை இல்லாமல் மார்பு வரை 
போர்வையை போர்த்தி படுத்திருந்தாள்… 

மலரின் கண்கள் அருணின் முகத்தை தவிர வேறு எங்கும் 
திரும்பவில்லை…. 

சூப்பை ஊட்டி விட்டு திரும்ப சென்றவளை… அருண் அழைத்து ஏதோ 
சொல்ல வந்து நிறுத்தி விட்டான்…  
“சார் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க… பாத்ரூம் போகணுமா” 
என்று அவளாகவே கேட்டாள்… 

அவனும் சிறிது சங்கடத்தில் “ஆமாம்” என்று தலையசைத்தான்… 

ஒரு நிமிஷம் வந்துடுறேன் சார்… என்று கூறிவிட்டு குளியலறை ஹீட்டரை 
ஆன் செய்துவிட்டு, கிண்ணத்தை எடுத்துக் கொண்டு,  கீழே இறங்கினாள் 
மலர். 

சிறிது நேரத்தில் மேலே வந்த அவளின் கைகள் கிளவுஸினால் மூடப்பட்டு 
இருந்தன.  

என்ன இது என்பது போல் அவளை கண்களால் கேட்க… 

அது நான் உங்க உடம்ப தொட்ட உங்களுக்கு பிடிக்காதே சார்… அப்புறம் 
எப்படி கூட்டிட்டு போக முடியும்…, இப்போ என் கை உங்க மேல படாதே… 
என்றாள் அப்பாவியாக… 

பாருடா விவரத்த.. என்று மனதில் எண்ணிக்கொண்டு… 
அருண் ஒரு காலினால் தாங்கி தாங்கி நடக்க… தனது இரு கைகளாலும் 
அவனின் முழங்கையை இறுக்கமாக பற்றி குளியல் அறைக்கு அழைத்துச் 
சென்றாள் மலர். 

சார் பாத்ரூம் கதவுக்கு தாழ்ப்பாள்  போடாதீங்க என்றாள்… 

ஏன் என்பதைப் போல பார்க்க… ஒருவேளை பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ 
விழுந்துட்டீங்கன்னா தூக்கறதுக்கு உள்ள வரணுமே சார் என்றாள் 
அக்கறையாக… (ஆனால் இந்த வார்த்தையை சொல்லிவிட்டு போச்சு 
இதுக்கு எவ்வளவு கேவலமா பேச போறாரோ தெரியல… என்று 
மனதுக்குள்ளே நினைத்தும் கொண்டாள்) 

அவன் எதுவும் சொல்லாமல் அமைதியாக சரி… என்று தலையாட்டி விட்டு 
உள்ளே சென்றான்.  

உள்ளே அவனுக்கான சுடுதண்ணீர் தயாராக இருந்தது… அவனால் அதிக 
நேரம் நிற்க முடியாமல் இருப்பதால் உட்கார வசதியாக ஒரு இருக்கையும் 
அங்கே இருந்தது… தன்னை குனிந்து பார்க்க தனது ஆடை 
திட்டு திட்டாக ஈரமாக இருப்பதை கவனித்தான். அந்த நிமிடம் அவனுக்கு 
கொஞ்சம் அவமானமாகத்தான் இருந்தது… அறை இருந்த நிலை அருகில் 
இருந்தவளின் நிலை… தன் மேல் இருந்த ஈரம்.. நடந்தவைகளை 
சொல்லாமல் சொல்லியது… தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பாள் 
காம கொடூரன் என்று நினைத்திருப்பாளோ… திடீரென அவள் 
எண்ணத்தைப் பற்றிய கருத்து இவனுக்கு ஏன் வரவேண்டும் ஆனால் 
வந்தது. ஆனால் வெளியில் இருந்தவள் இதைப் பற்றி எல்லாம் கண்டு 
கொண்டதாய் தெரியவில்லை… நான் 100% சேவகி என்கிற எண்ணம் 
அவளுக்கு….  சுடு தண்ணீரால் தனது உடம்பை சுத்தம் செய்த பின்பு 
தான் அவனுக்கு ஒரு புத்துணர்ச்சி பிறந்தது. உடம்பையும் மனதையும் 
அழுத்திய ஒரு பெரும் பாரம் விலகியது போல் ஒரு நிம்மதி… 

தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியே வர இருந்தவனிடம், ஒரு 
மெல்லிய டி-ஷர்ட்டும், ட்ராக் பேண்டையும் நீட்டினாள். அதைக் கை 
கொடுத்து வாங்கிக் கொண்டவன். குளியல் அறைக்குள் இருக்கையில் அமர்ந்தவாறு மாற்று 
உடை அணிந்து கொண்டு வெளியில் வந்தவனை, வாசலில் வந்து 
கையைப் பிடித்து கூட்டு வந்து படுக்கையில் படுக்க வைத்து 
போர்வையை போர்த்தி விட்டு… இந்த பிளாஸ்க்ல சுடுதண்ணி 
வச்சிருக்கேன் சார் நைட்டு தேவைப்பட்டால் குடிச்சுக்கோங்க.. என்று 
அதை எடுத்து அவன் கையில் அருகில் இருக்கும் டேபிளில் மேல் 
வைத்துவிட்டு…  அவனின் அறைக்கதைவை சாத்திவிட்டு வெளியே 
சென்று விட்டாள் மலர். 

ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அருகில் படுத்திருந்தவளை பார்த்தான் 
அலங்கோலமாய் நெளிந்து உருண்டு போதையில் படுத்து கிடந்தாள் 
ரதி… 

சூடான சூப்பிற்கும், சுடுதண்ணி பக்குவத்திற்கும் உறக்கம் அவன் 
கண்ணை சுழற்றியது. 
நிம்மதியாய் உறங்கிப் போனான் அருண். 

இரவு தூக்கம் இன்மையால் காலையில் நேரம் கழித்தே  அருண் கண் 
விழித்தான். அப்போது ரதி அருகில் இல்லை…  அலுவலகம் 
கிளம்பிவிட்டாள் போலும் என்று நினைத்தான். 

சிறிது நேரத்தில் அகல்யா உணவு தட்டுடன் உள்ளே வர… மனதிற்குள் 
சலிப்பு உண்டானது… அவன் எதிர்பார்த்தது வேறு யாரையோ… 

ஏன் நீ சாப்பாடு கொண்டுவர… வீட்டுல வேலைக்காரங்க யாரும் 
இல்லையா… நீ ஆபீஸ் கிளம்பலையா… உனக்கும் விக்ரமுக்கும் ஆபீஸ்ல 
வேலையே இல்லையா…  என்று ஆயிரம் கேள்விகள் கேட்டான். 

உன்ன பாத்துக்கறதை விட எங்களுக்கு என்ன வேலை ண்ணா…. என்று 
அகல்யா சொல்லிவிட்டு உணவை ஊட்டி சென்று விட்ட பிறகு.. 

சிறிது நேரத்தில் ஆதியும் விக்ரமும் அறைக்குள் அவனை சுத்தப்படுத்த 
உள்ளே நுழைந்தனர்… (இவனுங்களும் இன்னும் ஆபீஸ் போகலையா 
என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு) அவர்களைப் பார்த்து 
சலிப்புடன் நீங்க ஏண்டா வரீங்க…. நீங்க ஆபீசுக்கு  போகலையா டா… 
வேலைக்காரங்க யாரையாவது வந்து பார்க்க சொல்லுங்கடா… என்று 
அவன் சலித்துக் கொள்ள.. 

ஆதியும்  விக்ரமம்  ஒருவரை ஒருவர் தங்களுக்குள் பார்த்துக் கொண்டு… 
அருணை பார்த்து *த்த, **மா, என்று ஒட்டுமொத்த கெட்ட 
வார்த்தைகளையும் திரட்டி திட்டினர். 
ஏண்டா வேலைக்கு வந்த எல்லா வேலைக்காரங்களையும் நீயும் உன் 
பொண்டாட்டியும் சேர்ந்து துரத்தி விட்டுட்டு, இப்ப வேலைக்காரர்களை 
வர சொல்லுன்னா எங்க இருந்துடா வருவாங்க… மூடிக்கிட்டு சொல்றத 
செய் டா… என்று கோவமாய் கத்த… 

திரு, திருவென விழித்துக் கொண்டு படுக்கையில் போர்வையை 
போர்த்தி படுத்து விட்டான் அருண்.. 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top