அசுரன் 30
தன்னுடைய நகை, பட்டுப்புடவை, போட்டோக்களை மலரிடம்
ஒவ்வொன்றாக காட்டிக் கொண்டு இருந்தாள் கவிப்பிரியா…
அதைக் கண்டு மலர் “ரொம்ப நல்லா இருக்கு… உனக்கு ரொம்ப அழகா
இருக்கு… நீ ரொம்ப கொடுத்து வச்சவ… உங்க ரெண்டு உங்க ரெண்டு
பேரையும் பாக்குறதுக்கு பொருத்தமா இருக்கு…” என்று வாய்
வார்த்தையால் அலங்கரித்து இருந்தால் கவியின் மனது சந்தோஷப்பட்டு
இருக்கும்…
பாவம் மலர் ஏதோ..யோசனையில் அமைதியாக அமர்ந்திருப்பதை
கவனித்த கவிப்பிரியா…
என்னக்கா!… உனக்கு இதெல்லாம் பார்த்தா பொறாமையா இருக்கா…
என்று மலரின் மனதெரியாமல் பட்டென்று கேட்டு விட்டாள்…
அந்த வார்த்தையை கேட்ட மலர்… மனம் உடைந்து போனாள்.. இதழ்களை
அழுத்த கடித்துக் கொண்டாள்…
இவளின் வாழ்க்கை பார்த்து நான் பொறாமைப்படுகிறேனா… நான்
இன்று இந்த சூழலில் திருமணம் செய்து கொண்டதற்கு.. இவள்
திருமணத்திற்கு பெற்ற கடனும் ஒரு காரணம் இன்றும் இந்த
வாழ்க்கையை நான் தொடர்வதற்கு தங்கையின் வாழ்க்கையும் ஒரு
காரணம்… அப்படி இருக்க நான் இவள் வாழ்க்கை பார்த்து
பொறாமைப்படுவதா? என்ன எண்ணம் இது… இவள் என்னை பற்றி
இத்தனை நாள் இப்படித்தான் புரிந்து வைத்து இருக்கிறாளா… என்று
மனதிற்குள் நினைத்துக் கொண்டு கண்களால் கவியை ஒரு அடிபட்ட
பார்வை பார்த்தாள் மலர்.
எப்பயும் படிப்பு தான் முக்கியம். நல்லா படி… அதுதான் உன்னோட
வாழ்க்கையை சந்தோசமா மாற்றும், அப்படின்னு சொல்லுவியே நீ நல்லா
தானே படிச்ச.. உன்னோட காலேஜ்ல நீ தான் முதல் மார்க்
எடுத்த, உன்னோட வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கு என்று
நேரடியாக காயப்படுத்தினால் கவி பிரியா.
இன்னும் சொல்லப்போனா… பிரபுவ நான் காதலிக்கும் போது
இதெல்லாம் உனக்கு தேவையில்லை இந்த பையன் எல்லாம் உனக்கு
வேணாம்… அப்படின்னு சொல்லி என் வாழ்க்கையை கெடுக்க பார்த்த…
என்னோட வாழ்க்கையை கெடுக்க பார்த்த உன்னோட வாழ்க்கை எப்படி
இருக்குன்னு உன்ன பார்த்தாலே எனக்கு தெரியுது… நேத்து உன்ன
பாத்துட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரங்க என்கிட்ட வந்து சொல்லிட்டு
தான் போனாங்க… கல்யாண வளையல் கூட உடையாமல், வெறும்
கழுத்தோட நடந்து வீட்டுக்கு வந்தயாமே…
நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்லி போட்டிக்கு அவசர
அவசரமா நீயும் கல்யாணம் பண்ணிக்கிட்ட… பாத்தியா உனக்கு
வாழ்க்கை எப்படி அமைஞ்சிருக்குன்னு…. நல்ல எண்ணம் இருந்தா தான்
க்கா… நல்ல வாழ்க்கை அமையும் என்று அவள் அடுக்கிக் கொண்டே
போக…
ரொம்ப சரியா சொன்ன கவி.. சில விஷயங்கள் எனக்கு அவ்வளவு
சீக்கிரத்தில புரிகிறது இல்ல… உன்ன மாதிரி சாமர்த்தியசாலிகள் தான்
எனக்கு பொடனில அடிச்சு புரிய வைக்கிறாங்க… இப்பதான்
வாழ்க்கையை பத்தி கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கிட்டு இருக்கேன்…
இனிமேல் என்னுடைய எண்ணத்தை நான் நல்ல விதமா மாத்திக்கிறேன்
கவி… என்று ஒரு விரக்தி சிரிப்புடன் “நீ கவனமா இரு உன் வயித்துல
வளர குழந்தையை நல்லா பாத்துக்கோ” என்று அவளுக்கு
சொல்லிவிட்டு… அறையை விட்டு வெளியேற போனவள்..
இப்பவும் சொல்றேன் கவி… ஒரு பொண்ணோட வாழ்க்கை சந்தோசமா
மாறனும்னா.. அதுக்கு படிப்பு ரொம்ப முக்கியம்… இத நேத்து உனக்கு
சொன்னேன்… நாளைக்கு என்னோட பொண்ணுக்கும் சொல்லுவேன்…
என்று கூறிவிட்டு சென்று விட்டாள் மலர்.
மலர் பேசி சென்ற அனைத்தும் கவிமேல் கொண்ட பொறாமையால்
பேசியது போலவே கவிக்கு தெரிந்தது.
இன்னைக்கு கண்டிப்பா அத்தை கிட்ட சொல்லி சுத்தி போட
சொல்லணும்.. இவளே கண்ணு வச்சிட்டு போயிருப்பா… என்று
மனதிற்குள் வசைப்பாடி கொண்டாள் கவி.
ஹாலில் வாசுகி உடன் ரங்கசாமி அமர்ந்து தங்களது பெருமைகளை
பேசிக்கொண்டு இருந்தார்… நம்ம மில்லு தான் இந்த ஏரியாவுலையே
பெரிய மில்லு… இப்பதான் மில்லு பேர்ல கொஞ்சம் கடன் வாங்கி உங்க
மருமகன் பெயரில் இடம் கூட வாங்கி போட்டு இருக்கான்…. அதெல்லாம்
உங்க பொண்ண கையில வச்சு தாங்குகிறான்…. இப்ப கூட பொறுப்பா
மில்லு வேலையா தான் வெளியில போய் இருக்கான் அதான் உடனே
வீட்டுக்கு வர முடியல… என்று தனது மகன் வீடு திரும்பாத காரணத்தை
விளக்கினார்.
அப்பொழுது தான் புரிந்தது மலருக்கு, இவர்களின் மில்லுடைய
டாக்குமெண்ட் ருத்ராவின் கைக்கு எப்படி வந்தது என்று.
கீழே வந்த மலரை அழைத்து வந்து வாசுகி உடன் அமர வைத்து மதிய
உணவு விருந்து பரிமாறப்பட்டது. சாப்பிட்டு முடிக்கும் வரையிலும் வாய்
ஓயாமல் பேசினார் ரங்கசாமி… கொஞ்ச நேரம் வாயை மூடுங்களேன்
என்று சடைந்து கொண்டார் கனகவல்லி.
பின் மலரின் தலையில் சிறிது பூவை வைத்துவிட்டு நெற்றியில்
குங்குமத்தை வைத்து, அடுத்த தடவை கண்டிப்பா வீட்டுக்காரரோட எங்க
வீட்ல வந்து ரெண்டு நாள் தங்கிட்டு தான் போகணும் என்று கட்டளையிட்டு
வழி அனுப்பி வைத்தனர் கனகவல்லி ரங்கசாமி தம்பதியினர்….
மலர் அந்த வாயிலை கடந்து செல்ல வீட்டிற்குள் இருந்த கவி பிரியா
வேகமாக வந்து மலரின் காலடி மண்ணை எடுத்து பத்திரப்படுத்தினாள்…
எதுக்குமா இது என்று கனகவல்லி கேட்க… அவகிட்ட என்ன மாதிரி நல்ல
எண்ணம் இல்ல அத்தை… இன்னைக்கு நைட்டு இந்த மண்ணை வைத்து
சுத்தி போடுங்க என்று ஒரு பேப்பரில் மடித்து அவரின் கையில் கொடுத்து
விட்டு உள்ளே செல்ல முயல…
அவளின் பின்னால் மலர் நின்றிருந்தாள், போனை மறந்துட்டு
போயிட்டேன் என்று அங்கு டேபிளின் மேல் இருந்த போனை எடுத்துக்
கொண்டு எதுவும் பேசாமல் விரு விரு என்று நடையை கட்டினாள் மலர்.
கவியின் வார்த்தைகளில் முற்றிலுமாக மனம் கலங்கி விட்டாள் மலர்.
தான் இங்கு வந்திருக்கவே கூடாது என எண்ணினாள்.
கவி பிரியா உடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது.. கனகவல்லி மலர்
கண்ணுக்கு நல்லவராகவே தெரிந்தார்.. மனதில் பட்டதை முகத்திற்கு
நேரே கேட்டு அந்த நிகழ்வை கடந்து விட்டார். பலா பழத்தைப் போல
வெளியே கடுகடு என்று பேசினாலும், மனதில் எதையும் வன்மமாக
வைத்துக் கொள்ளாதவராகவே தெரிந்தார். நான் இவளுக்காக செய்த
எதையும் இவள் உணரவில்லையா…. அருண் வீட்டார் தாழ்வாக
நினைக்கும் போது வராத எண்ணமெல்லாம் கவி பிரியா பேசிய
வார்த்தைகளில் மலருக்கு வந்தது…. என்னுடைய இந்த பரிதாப நிலைமை
தானா… என்னுடைய தங்கையே என்னை இவ்வளவு கீழ்த்தரமாக
நினைக்க வைக்கிறது… ஒருவேளை நான் நன்றாக இருந்திருந்தால்,
தங்கையும் நம்மளைப் பற்றி உன் உயர்வாக நினைத்து
இருப்பாள்… தனது நிலையை எண்ணி தானே கலிவிரக்கம் கொண்டாள்.
தனது வீட்டிற்கு வந்த மலரை பார்க்க மேலும் சில சொந்தக்காரர்கள்
வந்து செல்ல…
“இத்தனை நாள் எங்கடா இருந்தீங்க.. இப்ப எங்கடா கூட்டம் கூட்டமா
வரீங்க”.. மனுசன ஒரு ரெண்டு நாள் நிம்மதியா இருக்க விட
மாட்டாங்களே… என்று மலருக்கு தோன்றியது.
வருபவர்கள் அனைவரும் கேட்கும் கேள்வி அனைத்தும் ஒரே போல தான்
இருந்தது. மலருக்கு சலிப்பு தட்டியது. அவர்கள் பார்வையை
எதிர்கொள்ளவே அவமானமாக இருந்தது.
ஆக மொத்தம் இந்த பூமியில் நமக்கு எங்கு சென்றாலும் நிம்மதி இல்லை
என்பதை புரிந்து கொண்டாள் மலர்.
அம்மா தலை வலிக்குது…. நான் ரூம்ல போய் படுக்கிறேன் தயவு செஞ்சு
யார் வந்தாலும் எழுப்பாத என்று கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவை
சாத்தி கொண்டாள் மலர்.
வாசுகிக்கு அவளின் நிலைமை புரிந்தது. ஆனால் அவளின் புகுந்த வீட்டு
நிலைமை தான் அவருக்கு புரியவில்லை. அவர் இன்னும் நம்பிக்
கொண்டு இருந்தார். புகுந்த வீட்டில் தன்னுடைய மகளின் வாழ்க்கை
சிறக்கும் என்று.
அடுத்த நாள் காலையில் மகளுக்கு குடல் குழம்பும் இட்லியும் சமைத்துக்
கொடுத்து அவளுக்கு தேவையான சில உணவு பொருட்களை
கட்டிக்கொண்டு இருந்தார் புகுந்த வீட்டிற்கு கொடுத்து அனுப்ப..
அம்மாவின் கையால் சமைத்த உணவை அமிர்தமாக நினைத்து
உண்டவள்.. அருண் வீட்டிற்கு செல்ல தயாரானால்.. தலை நிறைய பூவை
வைத்து விட்டார்…
ஒரு கட்ட பை நிறைய உணவு பொருள்களை எடுத்து வைத்திருந்தார்
வாசுகி.
அம்மா இதெல்லாம் எதுக்கு மா… அங்க யாரும் சாப்பிட கூட மாட்டாங்க
என்று அவள் கூறிக்கொண்டு இருக்கும்போதே விக்ரமின் ஞாபகம்
அவளுக்கு வர… சரி கொடு கொஞ்சமா கொடு.. நிறைய அள்ளி
வைக்காத… யார் இத தூக்கிட்டு போறது… என்று அதில் பகுதியளவு
எடுத்துக் கொண்டு கிளம்பியவளின் முழங்கையை பிடித்து சோபாவில்
அமர வைத்த வாசுகி அவளின் கை மேல் தன் கையை வைத்து…
மலரு!… இப்படியே இருந்தா உன்னோட வாழ்க்கை மாறாது… அதை நீ
தான் மாற்ற முயற்சி பண்ணனும் என்று கூறி.. இதுல ஒரு புடவையும்
உனக்கு பிளவுஸ்ம் தைத்து வைத்திருக்கிறேன் என்று ஒரு பின்
செய்யப்பட்ட பிரவுன் கலர் கவரை அவளிடம் நீட்ட.. அவள் அதை பிரிக்க
போக…
இப்ப பிரிக்காத மலர், நீ கட்டும் போது பிரிச்சு பாரு…. முதல்ல உன்னோட
முதல் ராத்திரியை நடத்த பாரு…. குளிச்சிட்டு இந்த புடவையை
கட்டிக்கோ… தல நிறைய பூ வச்சுக்கோ… என்று அவர் பாடுன பல்லவியை
திரும்ப பாட….
அவள் ம்ச்… என்று சலித்துக் கொண்டாள்..
இந்த தடவை நா சொல்றது கேளுடி… முதல்ராத்திரி கண்டிப்பா நடக்கும்
என்று கூற… அவள் எப்படி? என்பதைப் போல் அவர் முகத்தை பார்க்க….
இந்த மருந்தை கையில வச்சுக்கோ… உங்க வீட்டுக்காரருக்கு பால்ல
கலந்து கொடு… அதுக்கப்புறம் பாரு உன்னையே
சுத்தி.. சுத்தி… வருவாரு… என்று ஒரு செம்பு குடுவையை அவள் கையில்
திணிக்க…
என்னமா இது… இதெல்லாம் எங்க இருந்து வாங்குன… என்று
கோலிகுண்டு விழியை விரித்து அவள் கேட்க…
எல்லாம் நாட்டு மருந்து கடையில் தாண்டி… நல்லா வேலை செய்யும்..
இந்தக் குடுவையை திறக்கிற வரைக்கும் எத்தனை வருஷம் ஆனாலும்
இந்த மருந்து கெட்டுப் போகாது… அவ்வளவு வீரியமானது…. உன்ன
பக்கத்துல வச்சுக்கிட்டு இத்தனை நாளும் உன் வீட்டுக்காரர் உன்
பக்கத்தில் வராமல் இருக்கிறார் என்றால் அவருக்கு ஏதோ
பிரச்சனைன்னு நினைக்கிறேன் உன்கிட்ட சொல்றதுக்கு தயங்குறார்
போல… இந்த மருந்து அதை சரி பண்ணி கொடுக்கும் மலரு….
ஒரு குழந்தை மட்டும் பிறந்துட்டா உன்னோட வாழ்க்கை சந்தோசமா
மாறிடும் மலரு. வீணா வீம்பு பண்ணிக்கிட்டு கெடச்ச வாழ்க்கையை
விட்டுட்டு, ஒன்னும் இல்லாம வந்து நிக்காத மலரு.. சொந்தக்காரங்க
முன்னாடி பெரிய அவமானமா போயிடும்… பொம்பள பாத்து அமைச்சு
கொடுத்த வாழ்க்கை உருப்படாமல் போயிடுச்சு அப்படின்னு வாய்க்கு
வந்தபடி பேசுவாங்க… சாமர்த்தியமா பொழைக்க பாரு… என்று வாசுகி
புலம்பி தள்ள..
ஐயோ!… என்றானது மலருக்கு… எங்கேயாவது போய் முட்டி கொள்ளலாம்
போல் இருந்தது… இப்பொழுது எல்லாம் புருஷன் என்ற வார்த்தையை
கேட்டு அருணின் முகம் கூட கண் முன் வருவதில்லை…
சரி மா… கொடு… என்று வாங்கி அந்த பொடியை தனது பைக்குள்
வைத்துக் கொண்டாள்.
என்னால அந்த வீட்ல இருக்கிற டார்ச்சர் கூட தாங்கிக்க முடியுது… இந்த
வீட்டுக்கு வந்தா தான் என்னால டார்ச்சர் தாங்கிக்க முடியல…. போதும்டா
சாமி என்ன விட்ருங்க… என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு….
அருண் வீட்டை நோக்கி பேருந்தில் பயணித்தாள் மலர்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️