இப்பொழுதெல்லாம் விக்ரமும் ஒரு குழப்பமான மனநிலையுடன்
சுற்றிக்கொண்டு இருந்தான்.
எப்பொழுதும் அகல்யாவை விக்ரம் தான் முதல் ஆளாக நாடுவான்…
ஆனால் இப்பொழுது எல்லாம் அகல்யா தான் விக்ரமை முதலில்
நாடுகிறாள்.
ஒரு நாளும் விக்ரமை நாட தவறியதில்லை..
இன்னைக்கு வேணாம்டி டயர்டா இருக்கு என்று கூறி தவிர்த்தால்,…
ப்ளீஸ் டா!… இன்னைக்கு எனக்கு வேணும்… என்று அடம் பிடிப்பாள்.
ஆனால் முன்பு போல் அகல்யா இல்லை, அவள் முகத்தில் ஏதோ ஒன்று
குறைவதாக உணர்கிறான். உணர்ச்சி உச்சம் பெறும் நேரங்களில்
எல்லாம் அகல்யாவின் முகத்தில் எதையோ தேடி தேடி தோற்றுப்
போகிறான் விக்ரம்.
என்னடி ஏதாவது பிரச்சனையா… இன்று வாய் விட்டு கேட்டும்
பார்த்தான்…
ஒன்னும் இல்ல விக்கி!… என்று கூறி விடுவாள்…
என்னத்தடி…. யோசித்துக்கொண்டே இருக்கிற…
இல்ல ஆபீஸ் டீலிங் விஷயமா!… என்று மழுப்புவாள்…
ஆனால் விக்ரமிற்கு தெரியாதா அவனின் “அடாவடி”யின்
உணர்ச்சிகளைப் பற்றி…
குழப்பமான மனநிலையில் சுற்றிக்கொண்டு இருந்தவன் இரவு நேரத்தில்
தோட்டத்தில் வானத்தைப் பார்த்து கொண்டு இருந்தான் விக்ரம்.
என்ன அண்ணா இங்க நிக்கிறீங்க… என்று ஒரு குரல் கேட்க…
பார்க்காமலேயே அவனுக்கு தெரியுமே அது யார் என்று…
ஒன்னும் இல்ல மலரு… என்றான் குரல் தழுதழுத்து…
ஒரு விஷயமும் இல்லாம எங்க அண்ணா இங்க வந்து நிக்க மாட்டாரே…
இந்நேரம் அகல்யா மேடம் கூட வம்பு இழுத்துகிட்டு இருப்பீங்களே… என்று
சிரிக்க..
என்ன சொல்றதுன்னு தெரியல மலர்.. இப்ப எல்லாம் அகல்யா நார்மலா
இருக்க மாற்றா.. மனசுக்குள்ள எதையோ போட்டு குழப்பிக்கிட்டே
இருக்குறா… நான் என்ன பண்ணி அவளை சரி பண்றதுன்னு எனக்கு
தெரியல… வாயைத் திறந்து சொல்லவும் மாட்டேங்கறா… அவள அந்த
மாதிரி என்னால பாக்கவும் முடியல…
அவ ரொம்ப தைரியமான பொண்ணு அவ கிட்ட எனக்கு புடிச்சது அந்த
தைரியம் தான்… இப்ப எல்லாம் அவளோட முகத்துல தைரியம் இருக்க
மாட்டேங்குது ஒரு பயம் தான் தெரியுது… நானும் அவளுக்கு எல்லா
வகையிலையும், அறிவுரை சொல்லி பாத்துட்டேன், கோபப்பட்டு
பாத்துட்டேன்… ஆனா அவ அப்படியே தான் இருக்கா… சத்தியமா? என்ன
பண்றதுன்னு தெரியல..
சரி பண்ண முடியும் அண்ணா… உங்களால் மட்டும் தான் அவங்கள சரி
பண்ண முடியும்….
அவங்க கூட அதிக நேரம் நீங்க இருங்க அவங்க கிட்ட நிறைய பேசுங்கள்…
அவங்கள கூப்பிட்டு ஹில் ஸ்டேஷன் எங்கேயாவது போயிட்டு வாங்க…
கொஞ்ச நாள் அலுவலக வேலைக்கு லீவ் விடுங்க…. நீங்க காலேஜ்
படிக்கும்போது இருந்த விக்ரம் – அகல்யாவா மாறுங்க… கண்டிப்பா
அவங்களோட குழப்பம் போயிடும் அண்ணா…
இப்போ அவளை பார்க்கும்போது எனக்கே “நமக்கு குழந்தை பிறக்குமா…
இல்லை இப்படியே இருந்திடுமா ” அப்படின்னு ஒரு சந்தேகம் வர
ஆரம்பிச்சுடுச்சு மலரு…
அண்ணா முதல்ல குழந்தையை பத்தின கவலைய விடுங்க…
எங்க அண்ணனுக்கு நிறைய குழந்தைங்க பிறக்கும் அது எல்லாத்தையும்
நான் தான் வளர்க்க போறேன் என்றாள் சிரித்துக் கொண்டே…. அவள்
வார்த்தைகளில் தெரிந்த மகிழ்ச்சி அவள் கண்ணிலும் மின்னியது.
நெஜமாதான் சொல்றியா மலரு… இல்ல என்ன
சமாதானப்படுத்துறதுக்காக சொல்றியா… என்று கேட்டான் விக்ரம்..
கண்களில் வலியுடன்… யாரோ ஒருத்தர் சொல்லும் நம்பிக்கை
வார்த்தையை பற்றி கொண்டு நகர்ந்து விட அவனின் மனம் துடிக்கிறது.
அண்ணா நிஜமா சொல்றேன்… எங்க அம்மா சொல்லுவாங்க என்னோட
நாக்கு கருநாக்கு நான் சொன்னா பலிக்கும்… நிறைய குழந்தைங்க
பிறக்கும் அது எல்லாமே எங்க அண்ணன் விக்ரம் மாதிரியே இருக்கும்…
என்று அவள் கண் சிமிட்டி சொல்ல…
அவளை மென் புன்னகையுடன் பார்த்த விக்ரம்… அப்படி நடந்தா
என்னோட பையனுக்கு உன்னோட பொண்ணு தான் கட்டுவேன்… என்று
புன்னகையுடன் கூறினான் விக்ரம்…
என்னோட பொண்ணயா… என்று தன் நெஞ்சில் ஒரு விரல் வைத்து சுட்டி
காட்டியவள் … ம்.. ம்.. அப்படி ஒன்னு நடந்தா… என்னோட பொண்ணு
உங்க வீட்டு மருமக தான் சம்பந்தி என்றாள் மலர் கேலியாக…
மலர் இந்த வார்த்தையை சொல்லும்போது… விக்ரமிற்கு தேஜாவு போல்
ஏதோ தோன்றி மறைந்தது.. அவன் திடீரென்று ஏதோ யோசனைக்கு
செல்ல…
இப்ப போங்க… போய் நிம்மதியா தூங்குங்க… நீங்க குழப்பம் இல்லாம
நிம்மதியா இருந்தாதான் அகல்யா மேடத்தை சரி பண்ண முடியும்… சில
நல்ல விஷயங்கள் காலம் தள்ளி போகலாம்… ஆனால் அது கண்டிப்பா
நடந்தே தீரும் அதை யாராலும் தடுக்க முடியாது… என்று நம்பிக்கையுடன்
பேச…
அவளின் கண்ணைப் பார்த்து விக்ரமிற்கு அவனுக்குள்ளும் தீர்க்கமான
நம்பிக்கை உருவானது…
இருவரும் அந்த இடத்தை விட்டு நகர…
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததை… மேலே தங்களது
அறையில் இருந்து இரு உருவங்கள் பார்த்துக் கொண்டிருந்தன… ஒரு
உருவத்தின் இதழில் மென் புன்னகை தோன்றி மறைந்தது.
********************
சக்கரவர்த்தியின் திருமண நாள் கொண்டாட்டம் ஆரம்பமானது முதலில்
எளிமையாக செய்ய திட்டமிட்டு பின்பு சைத்ராவின் குடும்பத்தின்
அறிவுரையின் பேரில் ஆடம்பரமாக செய்ய திட்டமிடப்பட்டது.
தொழில் வட்டாரத்தில் முக்கியமானவர்களை எல்லாம்
அழைத்திருந்தார்கள்.
சைத்ரா அவளுக்கும், ஆதிக்கும் ஒரே மாதிரியான, ஆடம்பர நிச்சய
உடையை வடிவமைத்து வாங்கி இருந்தாள்.
ஆதியின் உடையை சக்கரவர்த்தியிடம் கொடுத்து ஆதியின் கைக்கு
கிடைக்கும் படி செய்து விட்டாள்…
உடையை விரித்துப் பார்த்தவன்.. எதுக்கு இவ்வளவு கிராண்டா எடுத்து
இருக்கீங்க… என்று கேள்வி கேட்க உனக்கு நல்லா இருக்கும்னு தோணுச்சு
ஆதி!.. அதனால எடுத்தேன்… என்று பதில் கூறினார் சக்கரவர்த்தி.
விழாவில் அருண் ஆதி விக்ரம் ஒரே போல் உடைய அணிய திட்டமிட்டு
இருந்தார்கள்.
மலருக்கும் சிவப்பு வண்ண மெல்லிய ஜரிகை வைத்த புடவை ஒன்றும்,
கழுத்தை ஒட்டிய ஒரு சிறு அட்டிகை ஒன்றும் எடுத்துக் கொடுத்து
இருந்தார் சக்கரவர்த்தி.
முதலில் வாங்க மறுத்தவள்… பின் உங்க அப்பாவுக்கு நீ கொடுக்கிற
மரியாதை இதுதானா? என்ற அவர் கேள்வியில் மறுபேச்சு பேசாமல்
வாங்கிக் கொண்டாள்.
அருண் வீட்டில் தோட்டத்திலேயே மேடை அமைக்கப்பட்டு விழாக்கான
ஏற்பாடுகள் செய்யப்பட்டன… வீடு எங்கும் வண்ண விளக்குகள்
மின்னின… மெல்லிய பாடல் ஒலிக்கப்பட்டு கொண்டு இருந்தது…
மற்றொரு பக்கம் ஏகப்பட்ட வகை உணவுப் பொருள்கள் பரிமாற தயார்
நிலையில் இருந்தன…
அன்று முழுவதும் உணவுகள் டீ கூல்டிரிங்ஸ் அனைத்து பொருட்களுக்கும்
பரிமாறுவதற்கு வேலையாட்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
அதனால் மலருக்கும் சுதாவிற்கும் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை..
அறைக்குள்ளேயே தான் இருந்தாள் மலர். அன்று போல் இன்றும் தான்
வெளியே வந்து ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சங்கடம் என்று வெளியில்
வருவதை தவிர்த்து விட்டாள்.
மும்மூர்த்திகள், ஒரே போல் உடை அணிந்து விழாவிற்கு வந்த
அனைவரையும் கவர்ந்து கொண்டு இருந்தார்கள்.
“என்ன ஆதி நான் வாங்கி கொடுத்த டிரஸ் போடலையா” என்று
சக்கரவர்த்தி கேட்க… “நான் தான் பா இந்த டிரஸ் வாங்கி கொடுத்தேன்
நம்ம மூணு பேரும் ஒரே மாதிரி போட்டுக்கலாம் அப்படின்னு
சொன்னேன்” என்று அருண் பதில் கூறினான்.
அந்த டிரஸ்ஸ உங்களுக்கு நான் அப்புறம் போட்டு காமிக்கிறேன் அங்கிள்
என்று பதில் கூறினான் ஆதி.
ரதியும் ஜொலி ஜொலிக்கும் பீச்சு நிற உடையில் அழகோவியமாய்
அருணுடன் சுற்றி வந்து கொண்டிருந்தாள்… இருவருக்கும் ஒருவரை
ஒருவர் “இவர் தான் என் கணவர்” “இவள் தான் என் மனைவி” என்று
அறிமுகப்படுத்துவதில் பெருமை தான்.
அமைதியாய், அடக்கமாய், டிசைனர் புடவையில் சுற்றி வந்த
அகல்யாவை வேண்டுமென்றே வம்பு இழுத்து சீண்டி சிரிக்க வைத்து
கொண்டு இருந்தான் விக்ரம். விக்ரமின் சேட்டையால்… வெள்ளை பால்
நிறத்தவள் மேனி குங்கும நிறமாய் மாறியது… கேட்பவர்களுக்கு
அவளால் பதில் சொல்ல முடியவில்லை…
ஆரவாரத்துடன் விழா ஆரம்பிக்க… கழுத்து நிறைய நகைகளுடன்
ஆடம்பரமான பட்டு சேலையுடன் சக்கரவர்த்தியின் அருகே ருத்ரா வந்து
நின்று ஆள் உயர கேக்கை வெட்டி அவர்களது திருமண நாளை
கொண்டாடினர்.
பின் அனைவரும் அவர்களது பரிசுப் பொருட்களை சக்கரவர்த்தி மற்றும்
ருத்ரதேவி தம்பதியினருக்கு வழங்க… மேடைக்கு வந்த ஆதி இடம்
எல்லாரும் நான் கேட்காமலே கிப்ட் கொடுத்தாங்க ஆனா நான் ஆதி கிட்ட
மட்டும் கிப்ட் கேட்டு வாங்க போறேன் என்று சக்கரவர்த்தி புதிர் போட…
என்ன வேணும் அங்கிள் சொல்லுங்க சிறப்பா பண்ணிடலாம்.. என்று ஆதி
உறுதிமொழி கொடுக்க…
பாட்டை நிறுத்திவிட்டு மைக்கை கையில் வாங்கினார் சக்கரவர்த்தி.
என்ன பேசப் போகிறார் என்று சக்கரவர்த்தியின் குடும்பத்தினர் முதல்
அனைவரும் அவரையே ஆர்வமாய் பார்த்துக் கொண்டு இருந்தனர்.
எல்லோரும் என்னோட திருமண நாள் விழாவிற்கு வந்ததற்கு மிகவும்
நன்றி!…
ஆனா இது என்னோட திருமண நாள் விழா மட்டும் இல்லாம இன்னொரு
ஸ்பெஷலான நாளா மாறப் போகுது… என்ற பீடிகை போட்டு ஆதியை
பார்க்க… புருவம் முடிச்சுகளுடன் பார்த்தான் ஆதி.
என்னோட வளர்ப்பு மகன் ஆதிக்கு… இன்னைக்கு என்கேஜ்மென்ட் என்று
அறிவித்தார்.
ஒட்டுமொத்த கூட்டமும் கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்தது…
குடும்பத்தில் ருத்ராவைத் தவிர மற்ற அனைவருக்கும் அதிர்ச்சி…
என்ன ஆதி அதிர்ச்சி ஆகிட்டியா ? நீ சொல்லலனா எனக்கு தெரியாதா
அதனாலதான் உனக்கு புடிச்ச பொண்ணயே கல்யாணம் பண்ணி
வைக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம் என்று கூற…
ஆதி தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அதிர்ச்சியில்
உறைந்து நின்று கொண்டிருந்தான்.
தி பிரைட்(Bride) இஸ் கமிங்… இன்று மைக்கில் கூற…
“பூக்களே சற்று ஓய்வெடுங்கள்… அவள் வந்து விட்டாள்… அவள் வந்து
விட்டாள்.”..
என்ற வரவேற்பு பாட்டு சத்தத்தின் நடுவே… சுற்றி பணி பெண்கள்
மலர்களை தூவ… வெள்ளை நிற ஜொலி ஜொலிக்கும் முழு நீல கவுனில்…
அழகு கலை நிபுணர்களின் கைவண்ணத்தில், பூமியில் உலா
வரும் தேவதையாக வந்து கொண்டிருந்தாள் சைத்ரா…
கூட்டத்தில் அனைவரது விழிகளும் அவளை கண்டு தான் வியந்தன…
மணமகனை தவிர… ஆம் ஆதி மட்டும் புருவம் முடிச்சுகளுடன்
வெறுமையாக அவளை ஏறிட்டான்…
அருணுக்கும், சைத்ரா மணப்பெண்ணாக வந்தது சந்தோஷமே.. ஆதிக்கு
மிகப் பொருத்தம் என எண்ணிக்கொண்டே கையைத் தட்டிக் கொண்டு
இருந்தான்…
விக்ரம் முகத்தில் குழப்ப ரேகைகளுடன் ஆதியைதான் பார்த்துக்
கொண்டிருந்தான்… என்ன செய்யப் போகிறான் என்று,
என்ன நடந்தது? எப்படி நடந்தது? இது என்று ஆதியின் மனதிற்குள்
ஆயிரம் கேள்விகள்…
மேடை ஏறி வந்த சைத்ராவை… கை கொடுத்து மேடைக்கு அழைக்குமாறு
சக்கரவர்த்தி ஆதியை கட்டளையிட… கை கொடுத்து மெதுவாக
மேடைக்கு அழைத்து வந்தான் ஆதி… சைத்ராவின் பெற்றோர்களும்
மேடை ஏறினர் இப்போது…
பின் அவனிடத்தில் வைரம் பதித்த பிளாட்டினம் மோதிரத்தை
சக்கரவர்த்தி நீட்ட…. நீ எனக்கு கொடுக்கப் போற கிப்ட் இதுதான் ஆதி
என்று அவர் கூற… அவரின் வார்த்தையை தட்ட முடியாமல் மோதிரத்தை
கையில் எடுத்தான். ஆதியின் முன் சைத்ரா தனது மோதிர விரலை நீட்ட….
தேவதை பெண்ணை ஒரு நிமிடம் கண்ணிமைக்காமல் பார்த்தவன்…
போடு… போடு… என்று ஆதியை சுற்றி இருந்தவர்கள் கரகோசத்துடன்
கூற… சிறிது யோசனைக்கு பின் அவளின் விரலை மென்மையாக பற்றி,
நிச்சய மோதிரத்தை அணிவித்து விட்டான்.
ருத்ரா மற்றும் மிதிலா ஒருவரை ஒருவர் அனைத்து தங்களுடைய
மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
சுற்றி இருந்த அனைவரும் கிஸ் பண்ணிக்கோங்க…. என்று
கோரசாய் குரல் எழுப்ப… வானில் பட்டாசுகள் வெடிக்க… மெல்லிய இசை
ஒலிக்க விடப்பட்டது.
முதலில் சிறிது தயங்கிய ஆதி… பின் சைத்ராவின் இடையுடனே கையிட்டு
தன் முன்னால் இழுத்து அவள் இதழில் தன் இதழை பதித்தான்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️