அசுரன் 34

அசுரன் 34

மலருக்கு வெளியில் போகவே விருப்பமில்லை, ஆனால் போய் தான் ஆக 
வேண்டிய சூழ்நிலை….. போகவில்லை என்றால் சக்கரவர்த்தி 
மனவருத்தப்படுவார்….”நான் உன்னை தேடுவேன் எங்கிருந்தாலும் 
சீக்கிரம் வந்து சேரு” என்று கட்டளை இட்டு இருந்தார்… வந்திருப்பவர்கள் 
அனைவரும் பெரிய செல்வந்தர்கள் இதற்கிடையில் எப்படி போய் நாம் 
நிற்பது என்று ஒரு சிறு தயக்கமும் இருந்தது மலருக்கு…. 

சக்கரவர்த்தி வாங்கி தந்த சேலைக்கு பொருத்தமாக தன்னிடம் இருந்த 
தங்க நிற ஜாக்கெட் அணிந்திருந்தாள்… கழுத்தில் சிறிய அட்டிகை… 
தனது நீள கூந்தலை விரித்துவிட்டு அதில் சிறிது முடி எடுத்து கிளிப் 
போட்டு இருந்தாள் கண்ணுக்கு மை இட்டு இருந்தாள் காதில் அவளுடைய 
அம்மா வாங்கி கொடுத்த ஒரு பெரிய ஜிமிக்கி அணிந்திருந்தாள்…. 
கையில் சேலைக்கு பொருத்தமான கண்ணாடி வளையல் 
அணிந்திருந்தாள். வெளியில் வந்த மலரை கண்டு சுதா வாயில் கையை 
வைத்து பார்த்தார்… தன் இரு கைகளாலும் சுற்றி திருஷ்டி எடுத்தார். 
பின்பு உள்ளே இருந்த மல்லிகை சரத்தை எடுத்து வந்து அவள் தலையில் 
வைத்து விட வர… அவள் வேணாம் என்று மறுக்கவே..  சும்மா வை மலரு 
இவ்வளவு பூவும் வேஸ்டா தான் போகப் போகுது என்று கூறி தனது 
தலையில் இருந்த ஹேர் பின்னை எடுத்து அவள் தலையில் பூவை 
வைத்துவிட்டார். தேவையில்லாமல் தாலியினால் பிரச்சனை வர 
வேண்டாம் என்று, கழுத்தில் இருந்த  மஞ்சள் தாலியை வெளியே 
தெரியாமல்  ஜாக்கெட்டினுள் மறைத்து வைத்திருந்தாள். 

சுதாவின் எதிரில் நிற்கும் மலரை பார்த்து இப்பதான் நீ கல்யாண 
பொண்ணு மாதிரி இருக்கிற மலரு என்று கூறினார் சுதா. இப்பதான் 
உன்னோட முகம் கொஞ்சம் தெளிச்சியா இருக்கு என்று கூற… 

“மனசு தெளிவா இருக்கறதுனால முகமும் தெளிவா இருக்கு சுதாமா, 
அவ்வளவுதான் என்று கூறினாள் மலர். 

பொதுவாக இந்த வீட்டிற்கு வந்த பிறகு அவள் பெரிதாக தன்னை 
அலங்கரித்துக் கொள்வது இல்லை…. ரசிக்க ஆளில்லாத இடத்தில் 
அலங்கரிக்க தேவை இல்லாமல் போனது…  

தயங்கி..  தயங்கி… விழா நடக்கும் இடத்திற்கு வந்தவளை… முதலில் 
கண்டது ஆதி தான்… 
அவளின் தயக்கத்தை பார்த்து விக்ரமை அழைத்தான்…. 

அங்க பாரு…. உன்னோட தங்கச்சி பதுங்கி பதுங்கி வருவதை… கூப்பிட்டு 
உன் பக்கத்துல நிக்க வச்சுக்க..  இல்லனா… இன்னைக்கும் எவனுக்காவது 
கையும், காலும் உடையும் என்று கேலியாக கூறினான். 

விக்ரம் மலரை அழைத்து வந்து, தனது பக்கத்தில் நிறுத்தி வைத்துக் 
கொண்டான். அவளும் சிறிது நேரம் நின்று பார்த்தாள் விக்ரம் தொழில் 
சார் நண்பர்களை பார்த்து பேசிக்கொண்டிருக்க… அவளுக்கு போர் 
அடிக்க… மெதுவாக அவன் அருகில் வந்தவள் அண்ணா…. நீங்க 
பேசிக்கிட்டு இருங்க… நான் அங்க குழந்தைங்க எல்லாம் 
விளையாண்டுகிட்டு இருக்காங்க… அவங்க பக்கத்துல போய் உட்கார்ந்து 
இருக்கேன் என்று கூறிவிட்டு… அருகே இருந்த வாட்டர் பால்ஸ் பக்கத்தில் 
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க அவர்கள் அருகில் இருந்த 
டேபிளில் அமர்ந்து அவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் மலர். 

தனியா இருந்த மலரின் மீது ஒரு ஆடவனின் பார்வை பட்டது… 

ஹாய் பியூட்டிஃபுல்… என்று கூறிக்கொண்டே அவளின் எதிரில் இருந்த 
இருக்கையில் அமர்ந்தான் ஒருவன். 

பேயை கண்டது போல் முழித்தாள் மலர்.. 

ஏன் இப்படி பயப்படுறீங்க.. நான் அருணோட கசின் ராஜேஷ்… நீங்க… 
என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு  வெகுளி புன்னகையுடன் 
கைகளை நீட்டினான்… 

அவனால் ஆபத்து இல்லை என்பதை அவனுடைய புன்னகையில் 
உணர்ந்தவள்… மென்புன்னகையுடன் கைகூப்பி “வணக்கம்” என்றாள்… 

நான் என் பெயரை சொல்லிட்டேன்… உங்க பேரு… 

தேன்மலர்… 

அவள் கண்களை உற்று நோக்கியவன்.. 

உங்க அப்பா ஒரு கவிஞரா என்று கேட்டான் மலரை பார்த்து… 

இல்லையே… எங்க அப்பாவ உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டாள் 
மலர். 

இல்ல ஒரு கவிதை புத்தகத்துக்கு எப்படி தலைப்பு வைக்கணும்னு உங்க 
அப்பாவுக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சிருக்கு அதனாலதான் கேட்டேன்… 
என்றான் அவளைப் பார்த்து புன்னகைத்தபடி. 

அவன் கூறியது புரியாமல் முழித்த மலரை பார்த்து… உங்களுக்கு அருண் 
சொந்தமா?… உங்களை இதுக்கு முன்னாடி நான் எங்கேயும் பார்த்தது 
இல்லையே? நீங்க யாரு? என்று கேட்க… 

அது…. அது… வந்து நான் இந்த வீட்டு….வே… என்று சொல்லத் தொடங்க… 

விக்ரமோட தங்கச்சி… என்ற சிங்க குரல் ஒன்று ராஜேஷின் பின்னால் 
இருந்து கேட்டது. 

ஹாய் ஆதி?..எப்படி இருக்க… 

யா… ஐ அம் பைன்.. 

ஆதி உன் கிட்ட பேசுறதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்க 
வேண்டியதாயிருக்கு… என்று ராஜேஷ் கூற.. 

சரி வா….  இப்ப பேசலாம் என்று அவன் கழுத்தில் கையை போட்டு… 
இழுத்து சென்றான் ஆதி. 

ராஜேஷிடம் தப்பி பெருமூச்சு விட்டவளுக்கு… திரும்பி நடக்க நினைக்க 
அங்கு அருண் நின்று இருந்தான். 

வெகு நாட்களுக்குப் பின் கண்ணில் பட்டவளை  ஒரு முறை ஆழ பார்வை 
பார்த்தான்.. அருண். உடல் கூசி தலை கவிழ்ந்தாள் மலர்..  கழுத்தில் தாலி 
இல்லாததை கண்டவனுக்கு கோபம் ஏறியது… 

கழுத்துல தாலி எங்க… 

அது… வந்து…  அன்னைக்கு என்று ஏதோ சொல்ல வர… அருணின் போன் 
அலறியது… சக்கரவர்த்தி தான் ஸ்டேஜ்க்கு வர சொல்லி அருணை 
அழைத்து இருந்தார். 

போன் பேசிவிட்டு திரும்பி பார்க்க மலர் அங்கு இருந்தால் தானே அவள் 
எப்போதோ நழுவி இருந்தாள். 

சக்கரவர்த்தி கேக் வெட்டி விட்டு மைக்கை வாங்கி ஆதியின் நிச்சய 
விழாவை அறிவிக்க… 

ஒரே செலவில் இரண்டு பங்க்ஷன் வச்சு காச மிச்சம் பண்ணிட்டாங்க… 
பரவாயில்லையே… என டிபிக்கல் மிடில் கிளாஸ் மைண்டில் 
யோசித்துக்கொண்டு இருந்தாள் மலர். 

************ 

சைத்ராவின் கையில் மோதிரத்தை போட்டு விட்டு அவள் இதழில் தன் 
இதழை பதித்தான் ஆதி. 

கரவொலி இடம் எங்கும் அதிர… 

அந்த சத்தத்தில் திடுக்கிட்டு சட்டென சைத்ரா கண்ணை திறக்க… 

எதிரில் ஆதி புருவம் முடிச்சுடன்…. கண்ணை மூடி கனவு கண்டுகொண்டு 
நின்று இருந்த  அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். மோதிரம் 
சக்கரவர்த்தியின் கையில் தான் இருந்தது. 

கனவா….. என்று சுற்றி முற்றி பார்த்தாள் சைத்ரா… பின் மனதிற்குள் 
மெல்லிய புன்னகையுடன்.. தன் கனவு அடுத்து பழிக்க போவதை எண்ணி 
மனதிற்குள் சிலிர்த்து கொண்டாள். 

என்ன ஆதி அங்கிளுக்கு என்ன கிப்ட் வேணும்னு கேட்ட இல்ல… 
உன்னோட என்கேஜ்மென்ட் தான் நீ இன்னைக்கு எனக்கு கொடுக்க போற 
கிப்ட் என்று ஆதிக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதாய் எண்ணி அவர் சிரித்துக் 
கொண்டே  கூற…. 

சைத்ரா ஆதியின் கண்களைப் பார்த்துக் கொண்டே அவளுடைய மோதிர 
விரலை நீட்டினாள்… 
கண்களில் இப்ப என்ன பண்ண போற ஆதி… என்ற பார்வையை சுமந்து 
கொண்டு, இதழ்களில் ஒரு கர்வ சிரிப்புடன்  நின்றிருந்தாள்… 

அவளைப் பார்த்துக் கொண்டே மோதிரத்தை எடுத்தவன்… சைத்ராவின் 
விரல் அருகே கொண்டு சென்று…. பின் ஒரு விஷம சிரிப்புடன்.. 
சக்கரவர்த்தியின் புறம் திரும்பி… 

சாரி அங்கிள்!… என்ன மன்னிச்சிடுங்க!… நீங்க என்ன சொன்னாலும் 
நான் செய்வேன்!… அதுல எந்த மாற்றமும் இல்லை!… ஆனால் 
கல்யாணம்…. தனது இரு விரலினால் நெற்றியை நீவியவன்…   இந்த 
பொண்ணு எனக்கு புடிக்கல!… நாங்க பழகிப் பார்த்தோம் எங்களுக்குள்ள 
எதுவும் செட் ஆகல… உங்களுக்காக இன்னைக்கு நான் கல்யாணம் 
பண்ணிக்கிட்டா… நாளைக்கு நான் வாழ போற வாழ்க்கையை பார்த்து 
நீங்க தான் ரொம்ப கஷ்டப்படுவீங்க… சாரி அங்கிள்…. என்று கூறிவிட்டு 
அவரின் கையைப் பிடித்து அதில் மோதிரத்தை வைத்துவிட்டு கட 
கடவென மேடையை விட்டு கீழே இறங்கப் போக…. 

யு ஆர் இன்செல்டிங் மீ அரௌண்ட் தி கிரௌட் ஆதி… என்ற வெறி 
பிடித்தவள் போல் கத்தினாள் சைத்ரா. அவள் கோபத்தில் அவளின் முகம் 
செந்தனலாய் சிவந்து இருந்தது … 

எஸ்… ஐ நோ… என்றான் தனது கையை உயர்த்தி காட்டி  சிங்க குரலில். 

ஐ ரிவில் யுவர் ட்ரூத்… ஆதி…என்று அவள் கத்த… 

வேகமாக நடந்தவன் அவளை திரும்பி பார்க்காமலேயே தனது தலை 
முடியை இழுத்து காட்டிவிட்டு சென்றான். 

ஆதி… நில்லு….ஆதி… என்று சுற்றி இருந்தவர்கள் அழைக்க அதெல்லாம் 
அவன் காதில் விழுந்தால் தானே… யாருக்கும் நின்று அவன் விளக்கம் 
கொடுக்க விரும்பவில்லை… 

போகும் ஆதியை பார்த்து வன்மமாக சிரித்துக் கொண்டாள் ரதி. 

என்ன ருத்ரா இது… எங்களை இன்சல்ட்  பண்ணிட்டு போறான்…. 
நீங்களும் பாத்துகிட்டு இருக்கீங்க..  இன்று காட்டமாக கேட்டார் மிதுலா. 

அருண் சக்கரவர்த்தியின் அருகில் வந்து “அப்பா நீங்க ஆதி கிட்ட 
கேட்காம எதுக்கு இந்த டிசிஷன் எடுத்தீங்க” என்றான். 

என்ன சைத்ரா…நீ தானே சொன்ன.. நீங்க ரெண்டு பேரும் லவ் பண்றீங்க 
அப்படின்னு… இப்போ ஏன் அவன் இப்படி சொல்லிட்டு போறான்… என்று 
சற்று அதட்டலாகவே கேட்டார் சக்கரவர்த்தி. 

அங்கிள்!… நாங்க லவ் பண்ணிட்டு தான் இருந்தோம்!… ஆனா என்னை 
இன்சல்ட் பண்றதுக்காகவே இப்படி பண்ணிட்டு போறான் என்று தனது 
பொய்யை ஆணித்தரமாக சொன்னாள் சைத்ரா. 

நீ லவ் பண்ணத கேட்கல சைத்ரா…. ஆதி லவ் பண்ணானா… என்றான் 
விக்ரம் அழுத்தமாய்… 

ஓஹோ… குடும்பமா சேர்ந்து எங்களை இன்சல்ட் பண்றீங்களா…. என்றாள் 
சைத்ரா. தனது தப்பை மறைக்கும் பொருட்டு,  இந்த நாளுக்காக நீங்க 
எல்லாரும் பதில் சொல்லியே ஆகணும்…. என்று கூறிவிட்டு தனது 
பெற்றோரை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். 

என்ன ஆன்ட்டி உங்க வெட்டிங் டே அதுவுமா இத்தனை பேர் முன்னாடி 
உங்கள சபைல நிக்க வச்சு அவமானப்படுத்திட்டு போறான் அந்த ஆதி… 
நீங்க பார்த்துகிட்டு இருக்கீங்க… என்று ஏற்கனவே 
எரிமலையாய்  பொங்கி கொண்டு இருந்த ருத்ராவை மேலும் 
பெட்ரோலை ஊற்றி ஏற்றி விட்டாள் ரதி. 

ஆதியை கேட்காமல் இந்த நிச்சய விழாவை ஏற்பாடு செய்ததற்காக 
நிஜமாகவே மனம் வருந்தினார் சக்கரவர்த்தி. 

இங்கு நடக்கும் அனைத்தையும் தாடையில் கை வைத்து ஏதோ சீரியல் 
பார்ப்பது போல சுவாரசியமாய் பார்த்துக்  கொண்டு இருந்தாள் மலர். 

இரு கண்கள் அவளின் அலங்காரத் தோற்றத்தை தான் பார்த்துக் 
கொண்டு இருந்தது. இல்லை… இல்லை.. ரசித்து கொண்டு இருந்தது. 

*†*********** 

மாதத்தின் முதல் நாளான  இன்று விக்ரமிற்கு முன்பே எழுந்து உலகில் 
உள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு பிரக்னன்சி 
டெஸ்ட் கிட்டில் இரண்டு கோடுகள் வரவேண்டும் என 
காத்திருந்தாள்  அகல்யா…. அவளது கண்களில் அவ்வளவு எதிர்பார்ப்பு 
அவளது இதயம் இந்த சில  நிமிடங்களில் அளவுக்கு அதிகமாக துடித்தது 

இமைகள் சிமிட்டாமல் பிரக்னன்சி டெஸ்ட் கிட்டை பார்த்துக் 
கொண்டிருந்தவளுக்கு சில நிமிடங்களிலேயே மனம் உடைந்து போனது 
காரணம் ஒரே ஒரு கோடு வந்திருந்தது உள்ளங்கையில் பவ்யமாக தங்கி 
இருந்த பிரக்னன்சி கிட்டை அழுத்தமாக பற்றிய படி கண்களில் கண்ணீர் 
ததும்ப அறையை விட்டு வெளியே வந்தாள் அகல்யா 

ஒவ்வொரு முறையும் அவள் ஆர்வமாக எதிர்பார்க்கும் ஒன்று கைக்கு 
கிட்டாமல் அவளுக்கு போக்கு காட்டியது தற்காலிகமாக இல்லாமல் 
நிரந்தரமாகவே இந்த ஏக்கம் நிலைத்து விடுமோ என்கிற பயம் 
இப்பொழுதெல்லாம்  அவளை பேயாய் ஆட்டி படைத்தது. 

கண்ணீர் ததும்ப எதையோ வெறித்து பார்த்து படுக்கையில் 
அமர்ந்திருப்பவளின் தோளை தொட்டான் விக்ரம். 

என்னடி இப்படி உட்கார்ந்து இருக்க… என்று அவன் கேட்க… 

கையில் உள்ள கிட்டை அவனிடம் காட்ட… 

ஒரு கோடுடன் இருந்த அந்த பிரக்னன்சி கிட்ட பார்த்து அவனும் “சரி 
விடுடி” அடுத்த மாசம் பாத்துக்கலாம்… இதுக்கு போய் ஏன் இப்படி 
உட்கார்ந்து இருக்க.. என அவள் தோலை பிடித்து அணைத்து சமாதான 
மொழிகள் உரைத்தான்.. 

அகல்யாவுக்கு இருந்த மன அழுத்தம் சக்கரவர்த்தியின் திருமண நாள் 
விழாவிற்கு பின் அதிகரித்து இருந்தது என்ன சொல்லலாம் …. விசேஷ 
தருணங்களில் புதுமண தம்பதியர் போல் சில்மிஷ சேட்டைகளுடன் 
சுற்றித் திரியும் விக்ரம் அகல்யாவை பார்த்து 

“கல்யாணம் ஆகி ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் குழந்தை பெத்துக்காம 
சுத்தி திரியுதுக” 

“இப்படி ஜாலியா இருக்கறதுக்கே குழந்தை பெத்துகிறது தள்ளி போட்டு 
இருக்கீங்களா ” 

” உனக்கு என்னப்பா நீ ஜாலியா இருப்ப குழந்தையா குட்டியா ” 

இம்மாதிரியான வார்த்தைகளை கேட்கும் பொழுது முழுக்க முழுக்க 
வயிற்றெரிச்சல் என்பது அகல்யாவுக்கு புரியத்தான் செய்தது. 
ஆரம்பத்தில் வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து பேசினாள் பிறகு 
சலிப்பாய் பார்த்தாள். 

அதிலும் குழந்தை தங்க…வேறு என்ன செய்யலாம்… என்று டிப்ஸ் 
கொடுப்பவர்களை காணும் பொழுது ஒரு கட்டையை எடுத்து அவர்கள் 
மண்டையை பொளக்கலாம் போல் தோன்றும்… 

இப்பொழுதெல்லாம் அமைதியாய் அம்மாதிரி ஆட்களை கடந்து 
வருகிறாள் மனதிற்குள் இவர்களிடம் எதற்காக தான் நின்று பதில் 
சொல்ல வேண்டும் என்கிற நியாயமான வாதம் இருந்தாலுமே காரணம் 
புரியாமல் அகல்யாவின் இதயம் கலங்கி தவித்தது. 

உறவு கொள்ளும் வேளையிலும் அகல்யாவின் கண்கள் எதையோ 
எதிர்பார்த்து  இறங்கியது மூளை தேவையற்றதை யோசனை செய்தது 
இதயம் கட்டிய கணவனை காதலோடு இணைத்துக்கொள்ளாமல் 
இன்னொரு உயிருக்காக பிரார்த்தனை செய்தது… இதை அவள் 
மணாளன் கவனிக்க தவறவில்லை… ஆணாக மட்டுமே இருந்திருந்தால் 
இச்சை தீர்ந்ததும் விலகி படுத்திருப்பான் விக்ரம் ஆனால் அவன் 
அகல்யாவின் உயிரோடு உணர்வோடு பின்னிப் பிணைந்து 
இருக்கிறானே  அதனாலயே அவளது உள்ளக் குமுறல்களை வாய்விட்டு 
கூறா விடினும் உள்ளத்தால் உணர்ந்து கொண்டான். 

அவளோடு அதிக நேரம் செலவிட ஆரம்பித்தான்… விக்ரம் அருகில் 
இருந்தால் அவளுடைய இதழில் எப்போதும் ஒரு மென்புன்னகை 
ஒட்டிக்கொண்டு இருக்கும். மெல்ல மெல்ல அவளோடு அதிக நேரம் 
செலவு செய்து அவளின் மென் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி 
செய்தான்.  வற்புறுத்தி அவளை வெளிநாட்டிற்கு  அழைத்து சென்று 
வந்தான். அகல்யா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினாள். அனைத்துமே 
சரியாகிவிட்டது என்று நம்பிக் கொண்டு இருக்கையில்… வந்தது ரதியின் 
வளைகாப்பு வைபோகம். 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top