அசுரன் 39

அசுரன் 39

வீட்டினுள் நுழைந்த அருண் முதலில் கண்டது ராஜேஷ்யும் மலரையும் 
தான். ராஜேஷ் இன்னும் அந்த இடத்தில் குங் பூ போசில் நின்று கொண்டு 
இருந்தான். மலர் அருணை கண்டதும் ஓடிவிட்டாள். இருவரும் நெருங்கி 
நின்று இருந்ததே அவனுக்கு கடுப்பாக இருந்தது… இதில் மலர் இவனை 
கண்டதும் பேயை கண்டது போல் அரண்டு அறைக்குள் ஓடி ஒளிந்தது 
இன்னும் கடுப்பை கிளப்பியது…. 

என்னடா பண்ணிக்கிட்டு இருக்க இங்க…. என்று அருண் கடுப்பாய் 
கேட்க… 

ரெஸ்ட் எடுக்கிறேன் ப்ரோ… 

ரெஸ்ட் எடுக்குற உனக்கு, இங்க என்னடா வேலை… 

இது குங்பூ  கலையில் ரெஸ்ட் எடுக்கிறது ப்ரோ…  என்று கூறி அவன் 
போஸ் கொடுக்க…. 

அடச்சீ நேரா நில்லு… 

சட்டென்று அட்டென்ஷனில் நின்றான் ராஜேஷ். 

மலரின் அறையை கண்களால் காண்பித்து அவ கூட உனக்கு என்னடா 
பேச்சு என்று பல்லை கடித்தப்படி கேட்க… 

அது ப்ரோ,  நான் எனக்கு தெரிஞ்ச வித்தை எல்லாம் அவங்க கிட்ட செஞ்சு 
காமிச்சுக்கிட்டு இருந்தேன்…. அப்போ கீழ விழுகப்போன என்ன, ஃப்ளவர் 
தான் தாங்கி பிடிச்சாங்க.. அவ்வளவுதான்…. என்று தோளை குலுக்கி 
கையை விரித்து காட்டினான். 

சரி நீங்க என்ன இந்த நேரம் வீட்டுக்கு வந்து இருக்கீங்க? என்று கேட்டான் 
ராஜேஷ். 

ஏன் இந்த டைம்ல வந்தது உனக்கு ரொம்ப டிஸ்டர்பன்ஸாக இருக்கா 
என்று கேட்டான்? அருண் நக்கலாய்…. 

நோ ப்ரோ… என்று கூற வந்தவன் லைட்டா… என்று தன் விரல்களை 
சைகை செய்து  கூறி முடித்தான். 

சரி நீ ரெஸ்ட் எடுத்தது போதும் ஒழுங்கா ஆஃபீஸ்க்கு கிளம்பு இப்பவே 
நான் கூட்டிட்டு போறேன்… நான் மேல போய் ஃபைலை எடுத்துட்டு 
வரேன்…. அதுக்குள்ள நீ கிளம்பி இருக்க…. என்று  அழுத்தமாய் கூறிவிட்டு 
மேலே சென்றான் அருண் 

தனது அறைக்குள் நுழைந்த அருண் அங்கும் இங்குமாய் நடந்த படியே 
புலம்பி கொண்டு இருந்தான்… 
வீட்ல யாரும் இல்லாதப்ப அவன் கூட சேர்ந்து ஆட்டம் போட்டுட்டு என்ன 
பார்த்த உடனே ரூமுக்குள் போய் ஒளிஞ்சிக்கிறா…. திமிரு திமிரு உடம்பு 
ஃபுல்லா திமிரு…. ஆள் முன்ன விட இப்ப பாக்க கும்முனு தான் இருக்கா…. 
அதனால பாக்குறவன் கண்ணுக்கு எல்லாம் அழகா தெரிவா போல…. 
இப்பல்லாம் மேடம் கழுத்துல தாலி கூட வெளியில தெரியிற மாதிரி 
போடறது இல்ல…. தன் பின்னந் தலையிலேயே  இரண்டு தடவை தட்டிக் 
கொண்டான்.. 

அவள, வெளியில் தாலி தெரியுற மாதிரி போட சொல்லலாம்… நீ வேணா 
அவளோட புருஷன்னு ஒத்துக்கிறியா..   என்று மனசாட்சி கேட்க அதை 
தலையில் இரண்டு தட்டு தட்டி அனுப்பி வைத்தான்…. 

இந்த ராஜேஷ் வேற வந்த அன்னைக்கே ஓவரா பண்றான்…. பொதுவா 
இவன் பொண்ணுங்க பின்னாடி சுத்த மாட்டானே…. கிழவிக பின்னாடி 
தான் சுத்திகிட்டு இருப்பான். 
இவனை இங்கேயே விட்டு வச்சா சரிவராது… வீட்ட நாசம் 
பண்ணிடுவான்… முதல்ல அவனை  கூட்டிட்டு ஆபீஸ் கிளம்புவோம்… 

அருண் கீழ இறங்கி வரும் பொழுது ராஜேஷ் தயாராகத்தான் இருந்தான்… 

வாடா… என்று அருண் அழைத்துக் கொண்டு முன்னே செல்ல ஒரு 
நிமிஷம் ப்ரோ… பொறுங்க வந்துடறேன்…. என்று கூறிவிட்டு மலரின் 
அறை கதவை தட்டினான்… 

ஃப்ளவர் ஃப்ளவர்… 

அவளும் சிறிது அரை கதவை திறந்து பார்க்க… 
நான் போய் எங்க ப்ரோக்கு கொஞ்சம் ஆபீஸ் வேலை எல்லாம் சொல்லிக் 
கொடுத்துட்டு வரேன் நீ என்ன தேடாத…. பாய்ய்… பத்திரமா 
இருந்துக்கோ… என்று கூறிவிட்டு திரும்ப…. 

அருண் முறைத்துக் கொண்டு நின்றிருந்தான். 

என்ன ப்ரோ இப்படி நின்னு வெறிக்க வெறிக்க பாக்குறீங்க…  அவ்வளவு 
அழகாவா இருக்கேன் நானு… வாங்க கிளம்பலாம் என்று அவன் முன்னே 
செல்ல அருள் பல்லை நரவென கடித்தபடியே பின்னே சென்றான். 

இருவரும் காரில் செல்ல…. 
அமைதியாக அமர முடியுமா? ராஜேஷால்… 

தனது போனில் பாட்டை ஒலிக்க விட்டான்… 

அவ கண்ண பாத்தா ஐய்யோ அம்மா…. 
அவ கன்னம் பாத்தா ஐய்யோ அம்மா  அவ உதட்ட சுழிச்சா ஐய்யோ 
அம்மா  அவ சிணுங்கி சிரிச்சா ஐய்யோ அம்மா  
அவ குதிக்கும் ஜடதான் ஐய்யோ அம்மா 
அவ கலக்கும் நடதான் ஐய்யோ அம்மா … 
கண்ணாடி பாக்கமாக நம்ம பொண்ணுங்க  அழகின்னு நினைப்பாங்க 
உன் ஆளு எப்படி… 

தலையை ஆட்டி  கொண்ட சேர்ந்து பாடிக் கொண்டிருந்தவன்… இந்த 
வரியில் பாட்டை நிப்பாட்டி ப்ரோ என் ஆளு எப்படினு நீங்க கேக்க 
மாட்டீங்களா? 

யார்ரா இவன் பைத்தியம் என்னும் ரேஞ்சில் பார்த்துக் கொண்டு 
இருந்தான் அருண்… 
ஓ… உனக்கு ஆள் எல்லாம் கூட இருக்கா?… (எப்படியோ இனி மலர் பக்கம் 
வரமாட்டான் என்று ஒரு நிம்மதி மனதில்) 

இருக்கு ப்ரோ…. இந்தப் பாட்டே அவளுக்காக தான் எழுதினதா 
இன்னைக்கு நான் பீல் பண்றேன் ப்ரோ… 

அடேங்கப்பா அவ்வளவு அழகா… 

பின்ன…. தேன் கலர்ல இருக்கும் ப்ரோ அவளோட அந்த முட்ட கண்ணு.. 
ஒரு தடவை அவ கண்ண பார்த்தா ப்ரோ…  தேன் கிண்ணத்தில் விழுந்த 
வண்டு மாதிரி எந்திரிக்கவே முடியாது… 

குட்டி மூக்கு அதுல ஒரு குட்டி கல்லு வச்ச மூக்குத்தி… 

அந்த ஜடை அதுக்கு ஏத்த மாதிரி நடக்கிற நட கண்டிப்பா அவளை 
படைக்கும் போது பிரம்மன் ஒரு கவிஞனா தான் இருக்க வேண்டும்… 

அவ சிரிச்சா கன்னத்துல குட்டியா குழி ஒன்னு விழுகுது 
பாருங்க…  அதுக்கு இந்த ஜென்மத்தையே நான் எழுதி வைப்பேன்… 

இதுக்கெல்லாம் மேல… அவ கை அவ்வளவு சாஃப்ட்… சும்மா இலவம் பஞ்சு 
மாதிரி… 

நீ பேசுறத பாத்தா மேட்டர முடிச்சிட்ட போல.. என்று காரின் ஸ்டியரிங்கை 
திருப்பி கொண்டு அருண் கேட்க… 

ப்ரோ இது தெய்வீக காதல் ப்ரோ…. ஒன்லி கண்ணும் கண்ணும் 
நோக்கியா…. 

சரி பொண்ணு யாருன்னு சொல்லு… சித்தி கிட்ட பேசி சம்மதம் வாங்கி 
கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என்று அருண் கூற… 

கண்டிப்பா உங்க தலைமையில தான் என்னோட கல்யாணமே… 
பொண்ணு வீட்டுக்காரரும் நீங்கதான் மாப்பிள்ளை வீட்டுக்காரரும் 
நீங்கதான் என்று சொல்ல.. 

அருண் குழம்பிப் போனான்… 

இவ்வளவு தூரம் சொல்லியும் நீங்க யாருன்னு கண்டு பிடிக்கலையா 
இன்னும்… 

இல்லையே என்னும் விதமாக தோளை குலுக்கினான் அருண். 

தேன் கலர் கண்ணு குட்டி மூக்கு நீளமான ஜடை… இத கேட்டு உங்களுக்கு 
யார் ஞாபகமும் வரலையா… 

டேய் வரலடா…. யாருன்னு நீயே சொல்லு… என்று சலித்துக் கொண்டான் 
அருண். 

ப்ரோ நீங்க ஒரு ரேர் ஜெம் ப்ரோ… 

( என்ன உளறிக்கிட்டு இருக்கான் என்பது போல் அருண் பார்க்க ) 

வீட்டுக்கு வேலைக்கு வர பொண்ணுங்க சுமாரா இருந்தாலே உத்து உத்து 
பாக்குற முதலாளிக்கு மத்தியில…. நீங்க ஒரு பொண்ணோட கண்ணை 
கூட பாக்காம இத்தனை நாளா இருந்து இருக்கீங்களே…. அப்ப நீங்க 
எப்படி ஒரு உத்தமர்னு இன்னைக்கு நான் புரிஞ்சுகிட்டேன்… என்று 
அவனுக்கு சல்யூட் அடிக்க… 

இல்ல புரியல…. 

ப்ரோ உங்க வீட்ல வேலை செய்றாங்களே மலர் அவங்கதான் நான் லவ் 
பண்ற பொண்ணு….  நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க போற 
பொண்ணு… என்று அவன் மெச்சிய தோரணையில் சொல்ல… 

நடு ரோட்டில் ஓடிக் கொண்டிருந்த வண்டியை சடன் பிரேக் போட்டு 
நிறுத்தினான் அருண்… 

அதான் சொன்னேனே நீங்கதான் பொண்ணு வீட்டுக்காரங்கனு… 

நான் பொண்ணு வீட்டுக்காரங்க இல்லடா பொண்ணோட 
வீட்டுக்காரன்டா… என மனதிற்குள் புலம்பியவாறு நர நரவென பல்லை 
கடித்தவன்… 
ராஜேஷை பிடித்து நான்கு சாத்து சாத்தும் வெறியில் இருக்க… 
சரியாக அந்த நேரம் அருணின் காருக்கு பின்னால் வந்த இருசக்கர 
வாகனம் ஹார்னை விடாமல் அழுத்த…. 

வேகமாக கார் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவன்… ஹாரன் 
அடித்தவனை  பிடித்து நாலு சாத்து சாத்தினான்… 

ரோட்ல தான் அவ்ளோ இடம் கிடக்குல நான் ஓட்டிட்டு போற வண்டிக்கு 
பின்னாடியே தான் நீ வருவியா…. இனிமேல் என் வண்டி பின்னாடி 
வருவியா… ஹாரன் அடிச்சு டார்ச்சர் பண்ணுவியா… என்று யார் மேலோ 
உள்ள கோவத்தை அவன் மேல் காட்ட.. 

ப்ரோ என்ன ஆச்சு? ஏன் அவனை போட்டு இந்த அடி அடிக்கிறீங்க விடுங்க 
செத்துட கித்துற போறான் ஒரு ஹாரன் அடிச்சதுக்கு இவ்ளோ கோவம் 
வரக்கூடாது ப்ரோ உங்களுக்கு… என்று தடுக்க வந்த ராஜேஷின் 
முதுகிலும் இரண்டு அடி விழுந்தது… ஆனால் ராஜேஷிற்கு தெரியவில்லை 
விழுக வேண்டிய மொத்த அடியும் அவனுக்கு தான் என்று… 

ஐயோ!… அம்மா… என்று முதுகை தேய்த்துக்கொண்டு அவன் விலகி 
நிற்க… 

விடுங்க ப்ரோ, இனிமேல் உங்க வண்டி பின்னாடி மட்டும் இல்ல இனி எந்த 
வண்டி பின்னாடியும் அவன் போக மாட்டான் எப்படியும் அவன் 
எந்திரிக்கவே ஒரு மாசம் ஆகும் போல… 

இனிமேல் வர மாட்டான் இல்ல… என்று அருண் ராஜேஷை பார்த்து 
அழுத்தமாய் கேட்க…. 

நீங்க இந்த வெளு வெளுத்த பிறகு வருவானா ப்ரோ… இன்று 
அப்பாவியாய் பதில் அளித்தான் ராஜேஷ். 

வரக்கூடாதுன்னு தான் இந்த அடி…  என்று மூச்சிரைக்க சொல்லிவிட்டு 
தனது பாக்கெட்டில் இருந்த கத்தை பணத்தை எடுத்து பைக் காரன் 
பாக்கெட்டில் வைத்துவிட்டு காரில் ஏறினான் அருண். 

காரை ஓரமாக நிறுத்தி அழுத்தமாக ஸ்டேரிங்கை பிடித்து மூச்சு 
வாங்கியவன் தண்ணீரை எடுத்து மடக்கு மடக்கு என்று குடித்தான்… ஏன் 
இவ்வளவு கோபம் என்று அவனுக்கே புரியவில்லை…  

என்ன ஆச்சு ப்ரோ… ஏன் இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க…. 

ராஜேஷ்… ஒழுங்கா தொழில் கத்துக்க வந்தா… வந்த வேலைய மட்டும் 
பாரு தேவையில்லாத வேலை எல்லாம் பார்க்காதே…. இப்படி நீ 
நடந்துகிட்டா உங்க அம்மா அப்பாவுக்கு போன் பண்ணி எங்க வீட்டு 
வேலைக்காரிய நீ லவ் பண்றேன்னு சொல்லி கொடுத்துடுவேன்… எங்க 
சித்தி பத்தி எனக்கு நல்லா தெரியும் எங்க அம்மா மாதிரி 
தான்…  வேலைக்காரியை எல்லாம் அவங்க மருமகளா ஏத்துக்க 
மாட்டாங்க… குடும்ப கவுரவத்துக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோ… என்று 
அருண் அட்வைஸ் மழை பொழிந்தான் அதில் எச்சரிக்கையும் 
அடங்கியிருந்தது. 

அதெல்லாம் நான் பாத்துக்குறேன் ப்ரோ… அம்மா எனக்கு இந்த 
பொண்ண கல்யாணம் பண்ணி வைக்கிறியா…. இல்ல, ஒரு நல்ல 
பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறியா…. அப்படின்னு 
கேட்பேன்…. 

உடனே எங்க அம்மா பொண்ணா மட்டும் இருந்தா போதும் அப்படின்னு 
ஒத்துக்குவாங்க… 

என்று சொல்லியவன் கண்ணை டிமி… டிமி…என்று அடித்துக் 
காண்பித்தான். 

அடப்பாவி என்னடா சொல்ற…. அவனா நீ… என்று அருண் மிரண்டு 
கேட்க… 

ச்சே.. ச்சே.. இதுவரைக்கும் அப்படி எல்லாம் இல்ல… எனக்கு மலர் வேணும் 
அதுக்காக நான் என்ன்ன்ன வேணாலும் செய்வேன்… என்ன என்ற 
வார்த்தையில் அழுத்தத்தை கூட்டி கூறினான்… 
நீங்கதான ப்ரோ சொன்னீங்க எந்த பொண்ணா இருந்தாலும் எனக்கு 
கல்யாணம் பண்ணி வைக்கிற அப்படின்னு… இப்போ பேச்ச மாத்தி 
பேசுறீங்க… 

எந்த பொண்ணா இருந்தாலும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்… 
ஆனா இவ உனக்கு வேணாம்… ஏன்? என்ன? அப்படின்னு காரணம் 
கேட்காதே…. வேணாம்னா வேணாம்… 

ஆனா எனக்கு மலர்தான் வேணும் ப்ரோ… ஒரு தடவை முடிவு 
பண்ணிட்டேனா என் பேச்சை நானே கேட்க மாட்டேன்… என்று கையில் 
குரளி வித்தை காட்டிக் கொண்டிருந்தான் ராஜேஷ். 

அதுக்கு மொத அவ சம்மதம் வேணுமே… அவ இதுக்கெல்லாம் 
சம்மதிக்கவே மாட்டா… என்று அருண்  திட்டவட்டமாய் கூற… 

சம்மதிக்க வைக்காம இங்கிருந்து போக மாட்டேன் என்று ராஜேஷும் 
அழுத்தமாய் கூறினான்… 

உச்சந்தலையில் சூடேறி உச்சி முடி நட்டுக்கொண்டு நின்றது 
அருணுக்கு…. 

இனி பார்ப்போம்…. 

அருண் – மலர்- ராஜேஷ் ( வடசென்னை டோனில் வாசிக்கவும் ) 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top