அசுரன் 40
ராஜேஷ் ஆபீஸ்க்கு அழைத்து வந்த அருண்…. அவன் பி.எ விடம்
ராஜேஷுக்கு அலுவலகத்தை சுற்றி காண்பிக்கும் படியும் சில
விளக்கங்களை தரும் படியும் கூறி உடன் அனுப்பி வைத்தான்.
ராஜேஷ் சென்ற பிறகு அருணுக்கு மனம் நிலை கொள்ளவில்லை…
ராஜேஷ் சொன்ன வார்த்தைகளை எல்லாம் நினைத்து பார்த்தான்
மனதிற்குள்…
என்ன அவ கண்ணு தேன் கலர்ல இருக்குமா?… நான் பார்த்ததில்லையே
என்று மனதிற்குள் யோசித்துப் பார்த்தான்… ஒன்றும் ஞாபகத்திற்கு
வரவில்லை இருவரும் கண்ணோடு கண் பார்ப்பதெல்லாம் அரிதிலும்
அரிது… ஞாபகம் வராமல் தலையை சிலிப்பி கொண்டவன்…
வந்து ஒரே நாள்ல இவ்வளவு மயக்கிட்டாளா?… அணு அணுவா
வர்ணிக்கிறான்…. பெரிய வித்தைக்காரி தான் போல…. எவன்
கிடைப்பான் எப்போ… எப்போன்னு காத்துகிட்டு இருப்பா போல….
என்று மனதிற்குள் மலரை சரமாரியாக திட்டிக்கொண்டான்… (
இவனெல்லாம் இந்த ஜென்மத்துல திருந்த மாட்டான்)
முதல்ல சித்தி சித்தப்பா கிட்ட சொல்லி ராஜேஷ் வீட்டை விட்டு
அனுப்பனும்… வேணாம்… வேணாம்… நம்ம அவங்க கிட்ட சொல்ல போய்
அப்புறம் ராஜேஷ் ஏதாவது கிறுக்குத்தனமா செஞ்சு அவளையே
பொண்ணு கேட்டு வர வைத்து விடுவான்… இனிமேல் இந்த கிறுக்கு
பயலே அவ கிட்ட பேச விடாம பாத்துக்கணும்… அப்புறமா ஏதாவது பேசி
இந்த ஊரை விட்டு அனுப்பிடலாம்..
***********
டைனிங் டேபிள் முன் அனைத்து உணவுகளும் சுட சுட எடுத்து
வைக்கப்பட்டு இருக்க டேபிளின் மேல் கைகளை ஊன்றி இரு கைகளாலும்
கன்னத்தை தாங்கி கவலையில் அமர்ந்திருந்தான் ராஜேஷ்.
உணவைக் கண்டால் ஆளாய் பறப்பவன் இன்று உண்ண தயாராக
இல்லை…
சார் ஏன் சார் இப்படி பண்றீங்க…. அடம் பிடிக்காமல் சாப்பிடுங்க சார்….
என்றாள் மலர்.
நான் சொன்னதை நீ செய் அப்பதான் நீ சொல்றத நான் செய்வேன்…
சாரி சார்…. அதெல்லாம் என்னால செய்ய முடியாது நீங்க
சாப்பிடணும்னா சாப்பிடுங்க… இல்லனா இப்படியே பட்டினியா
கெடங்க…எனக்கு என்ன… என்று கூறிவிட்டு தனது அரைக்குள் சென்று
விட்டாள் மலர்.
இப்ப நான் என்ன கேட்டுடேன்னு இவ்ளோ கோவமா நீ உள்ள போற…
செய்ய முடியாத விஷயத்தை சொல்லக்கூடாது சார்…
சார்ன்னு கூப்பிடாத… என்னோட பேரை சொல்லி ராஜேஷ் னு கூப்பிடு
இல்ல ராஜுனு கூப்பிடு அப்படின்னு சொன்னது ஒரு தப்பா?…
பிளவர்… எனக்கு ரொம்ப பசிக்குது நீ எப்ப என்ன பேர சொல்லி
கூப்பிடுகிறாயோ அப்பதான் நான் சாப்பிடுவேன்… உன்னோட ப்ரெண்ட்
பட்டினியை கடந்தா பரவாயில்லையா…. என்று வயிறை தடவி
காண்பித்தான் ராஜேஷ் உதட்டை பிதுக்கிய படி அப்பாவியாய்…..
தாயுள்ளம் கொண்டவளுக்கு அந்த அப்பாவியின் முகத்தை பார்த்து
சிரிப்புதான் வந்தது…
மெல்லிய சிரிப்புடன்….சரி போங்க ராஜு…. போய் சாப்பிடுங்க என்று
கூறிவிட்டு அறைக்கு சென்று கதவை சாத்த போக….
போ..ராஜ்ன்னு சொல்லு… ப்ளீஸ்…
ஒரு பெருமூச்சுடன்… அவன் நினைத்ததை சொல்லாமல் அவன்
விடப்போவதில்லை என்று உணர்ந்த மலர்… சரி போ ராஜு… போய்
சாப்பிடு என்று கூறிவிட்டு கதவை சாத்தி விட்டாள்…
தேங்க்ஸ் ஃப்ளவர்…. என்று கூறியபடி காற்றிலேயே டூயட் டான்ஸ்
ஆடிவிட்டு… உணவை எடுத்து பரிமாறிக் கொண்டு உண்ண
ஆரம்பித்தான் ராஜேஷ்.
( அருணை ஏமாற்றிவிட்டு மலரிடம் பேசுவது எல்லாம் அவனுக்கு ஒரு
பெரிய வேலையே இல்லை, நம்ம பையன் வித்தைக்காரன்)
ஒரு வாரம் கழிந்து ராஜேஷ் உடன் சகஜமாக பேசிப் பழகும் நிலைக்கு
வந்திருந்தாள் மலர்.
இரவில் தோட்டத்தில் மரபெஞ்சில் அமைந்து இரு கால்களையும்
கைகளால் கட்டி அதில் தலையை சாய்த்து நிலவை வேடிக்கை பார்த்துக்
கொண்டிருந்தாள் மலர்.
இன்னும் எவ்வளவு நேரம் நிலாவே பார்த்துகிட்டு இருப்ப என்று குரல்
கேட்டது மலரின் அருகில்…
குரலுக்கு சொந்தக்காரனை திரும்பிப் பார்த்து மென் புன்னகை
செய்தவள்..
ராஜு…. நிலவும் தனிமையும் பிரிக்க முடியாத ஒன்னுல… இன்று அவள்
கேட்க…
மலரின் கண்களை உற்றுப் பார்த்தவனுக்கு என்ன புரிந்ததோ
தெரியவில்லை…
அவள் காலை கட்டி இருந்த கையை எடுத்து மெதுவாக தனது இரு
உள்ளங்கைக்குள் பொத்தி வைத்தான்… ஏனோ அவளும் கையை விலக்க
முயற்சிக்கவில்லை… அவளுக்கும் இப்படி ஒரு ஆறுதல் தேவைப்பட்டதோ
என்னவோ…
யாரு சொன்னா வானத்துல நிலவு தனியா இருக்குனு… அத சுத்தி நிறைய
நட்சத்திரங்கள் அதைப் பார்த்து கண்ணை சிமிட்டி சிரிச்சுக்கிட்டே
இருக்கு… அதுக்கெல்லாம் மேல அது கூட எப்பவுமே சூரியன் இருக்கும்…
அது கூட இருக்கும்போது இந்த நிலா எப்பவுமே பிரகாசமாகவே
இருக்கும்… பாக்குற நம்ம தான் நிலா தனியா இருக்கிறதா ரொம்ப
காலமா நினைச்சுக்கிட்டு இருக்கோம்…
மௌனமாக அவனின் முகத்தை பார்த்தவள்… ஏன் என் மேல மட்டும்
இப்படி ஒரு அன்பு… என்று கேட்க…
உன் மனசுல தேவையில்லாத எந்த ஆசையும்
வளர்த்துக்காம இருக்கிறதுதான் நல்லது என்று அவள் மறைமுகமாக
எதையோ கூற நினைக்க…
சிரிப்பு ஒன்றை உதித்தவன்… இந்த லவ்… லஸ்ட்… இதெல்லாம் இல்லாம
என்னோட அன்பை ஒரு புது பேரு வச்சு அப்படியே முழுசா
ஏத்துக்கோயேன்… என்று மலரின் கண்ணைப் பார்த்து தெளிவாக
பட்டென்று சொல்லி முடித்தான் ராஜேஷ்.
ம் ம்… நல்லா பேசுற…
நல்லா பேசுனதுக்கு பரிசாக ஒரு குட்டி சிரிப்பு சிரிக்கலாமே… ஸ்மைல்
ப்ளீஸ் இன்று அவன் கண்ணை சிமிட்டு கேட்க…
அவன் கேட்ட பரிசு தாராளமாகவே கிடைத்தது..
இதோ ராஜேஷ் வந்து பத்து நாட்கள் ஓடிவிட்டது….
மலரின் மனதில் நல்ல தோழன் என்ற அளவுக்கு நெருங்கி விட்டான்…
இவனை எப்படி வீட்ல விட்டு போனான் அருண் அப்படிங்கிற சந்தேகம்
எல்லாருக்கும் இருக்கும்…
அருண் இடம் விக்ரமின் ஆபீசுக்கு செல்வதாக கூறியவன் விக்ரமிடம்
அருணின் ஆபீஸ்க்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலேயே சுற்றி கொண்டு
இருக்கிறான்…
வீட்டின் லேண்ட்லைன் ஃபோன் ஒலித்தது…. சாப்பிட்டு முடித்து கை
கழுவியவன் வேகமாக சென்று அந்த போனை எடுத்தான்…
ஹலோ…
தெரியும்டா நீ வீட்லதான் இருப்பனு… இன்று அருணின் குரல் மிரட்டலாய்
வந்தது…
ஹலோ… யாருங்க வேணும்… என்று பெண் குரலில் ராஜேஷ் குரலை
மாற்றி கேட்க…
கேவலமா மிமிக்ரி பண்ணி அசிங்கப்படாத… மரியாதையா கிளம்பி
ஆபீஸ்க்கு வா இல்லனா நான் வீட்டுக்கு வந்து கழுத்து புடிச்சு இழுத்துட்டு
வருவேன் எப்படி வசதி என்று அவன் பல்லை கடித்துக் கொண்டு பேசியது
இங்கே அவனுக்கு தெரிந்தது….
ஹாய் ப்ரோ… எப்படி கண்டுபிடிச்சீங்க…
ஆபீஸ்ல எதாவது டவுட்டா ப்ரோ…. எதுக்காக திடீர்னு வர சொல்றீங்க
என்று ராஜேஷ் கேட்க….
செருப்பால அடிப்பேன்…. மரியாதையா ஆபீஸ்க்கு கிளம்பி வா…
இல்லையா ஊருக்கு கிளம்பி போ…. எப்படி வசதி என்று கேட்டான் அருண்.
கூல் ப்ரோ…. இப்படி அன்பா சொன்னா கேட்டுக்க போறேன்…. இதோ
கிளம்பிட்டேனே ஆபிஸ்க்கு… பிளவர் கிட்ட சொல்லிட்டு வரேன்
ப்ரோ…. என்று அவன் போனை வைக்கப் போக…
நீ ஒருத்தர் கிட்டயும் சொல்ல வேண்டாம்…. கிளம்பி மட்டும் வா… என்றான்
அருண் அழுத்தமாய்…
ஓகே கிளம்பிட்டேன்… 15 மினிட்ஸ்ல ஆபீஸ்ல இருப்பேன்… என்று கூறி
ஃபோனை வைத்தான் ராஜேஷ்.
டென்ஷன் பார்ட்டி… இவன்கிட்ட எல்லாம் எப்படித்தான் வேலை
பார்க்கிறார்களோ…. என்று கூறி ஆழ இழுத்து மூச்சுவிட்டு உடம்பை ஒரு
உலுக்கு உலுக்கி கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் ராஜேஷ்….
அருண் அலுவலகத்தில் மும்மூர்த்திகள் அமர்ந்திருந்தனர்…
உள்ளே நுழைந்த ராஜேஷ்…
ஓ மூன்று பேரும் இங்க தான் இருக்காங்களா? அதான் நம்மள
கண்டுபிடிச்சிட்டாங்க… என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்
கொண்டான்….
ஹாய் ப்ரோஸ்… இன்று மூவரையும் பார்த்து கையசைத்து விட்டு அருகில்
இருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தான் ராஜேஷ்.
என்கிட்ட என்னடா சொன்ன விக்ரம் ஆஃபீஸ்க்கு போறேன்னு
சொன்னல்லடா என்று அருண் கோவமாய் கேட்க…
என்கிட்ட அருண் கூட ஆபீஸ்க்கு போறேன்னு சொன்னான்டா… என்று
விக்ரம் கூற…
ஆக மொத்தம் இந்த பத்து நாளும் விதவிதமா பொய் சொல்லி வீட்டில்
தான் இருந்திருக்கான் அவன் எங்கேயும் போகல என்று அருண் பல்லை
கடித்துக் கொண்டு கூற…
அய்யய்யோ பச்சையா மாட்டிக்கிட்டமே… இப்ப என்னடா பண்றது
ராஜேஷ் என்று திரு திரு வென முழித்தான்… ராஜேஷ்
டேபிளில் கை ஊன்றி கன்னத்தில் கை வைத்தபடி…இவர்கள் இருவரும்
வரும் கூறும் புகார்களை கேட்டுக் கொண்டு ராஜேஷை மேலிருந்து கீழ்
வரை ஆராய்ந்து கொண்டு இருந்தான் ஆதி.
அது… அது… நான்…. வந்து… இப்ப நான் உங்ககிட்ட என்ன சொல்றது…
என்று தரையை பார்த்தபடி கண்களை அங்கும் இங்கும் உருட்டிக்
கொண்டு இருந்தான் ராஜேஷ்….
ஆதியின் ஆராய்ச்சி பார்வைக்கு பதில் சொல்லும் விதமாக ராஜேஷின்
செல் போன் ஒலித்தது….
மலரே நின்னை காணாதிருந்நால்மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன
போலே….
Lக்கென்று போனை எடுத்து ரிங்டோன்ஐ பாதியிலேயே கட் பண்ணினான்
ராஜேஷ்.
இந்த பாடல்வரிகளை கேட்டு மேலும் கடும் கோபத்திற்கு உள்ளானான்
அருண். கோபத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு தன் பின்னந்தலையை
அழுத்தி தேய்த்துக் கொண்டான்.
தன் இருக்கையில் இருந்து சிறிது முன் வந்த ஆதி…
இட்ஸ் ஓகே டா , ராஜேஷ்க்கு தொழில் தானே கத்துக்கணும்…. அவன
என்னோட வீட்டுக்கு நான் கூட்டிட்டு போறேன் டெய்லி ஆபீஸ் கூப்பிட்டு
வந்து எல்லா தொழிலையும் கத்து கொடுத்துடுறேன் என்று அவனைப்
பார்த்துக் கொண்டே கண்ணிமைக்காமல் அழுத்தமாய் கூற…
அய்யய்யோ… அப்படியெல்லாம் வர முடியாது ப்ரோ…. எங்க அம்மா
அப்பா திட்டுவாங்க அருண் வீட்ட விட்டு எங்கேயும் போக கூடாதுன்னு
அவங்க எனக்கு சொல்லி அனுப்பி இருக்காங்க… என்று குழந்தை போல்
தலையை ஆட்டி பாவனை செய்தான்.
ஏண்டா நீ எல்லாத்தையும் உங்க அம்மா அப்பாவை கேட்டு தான்
செய்றியா… என்றான் அருண்.
ஆனா இந்த விஷயத்துல கேட்கலாம்னு இருக்கேன் ப்ரோ என்றான்
ராஜேஷ்.
ஓஹோ அப்படியா விஷயம்…. என்று தன் தாடையை சொரிந்த
விக்ரம்… அப்ப மலர உன் வீட்டுக்கு கூட்டிட்டு போயிருடா ஆதி என்றான்.
இப்பொழுது விக்ரமைத் தவிர்த்து மற்ற மூவரும் அதிர்ந்தனர்.
அதற்கும் ஒரு படி மேல் அருணும் ராஜேஷும்…, “அதெல்லாம் சரிப்பட்டு
வராது”… என்று ஒன்று சேர்ந்தால் போல் கூறினார்கள்.
பின் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்துக் கொண்டனர்.
இப்ப என்ன டெய்லி நான் ஆபீஸ் வரணும் அவ்வளவுதானே… இனிமேல்
ஒழுக்கமா ஆபீஸ் வரேன் தொழிலை கத்துக்கறேன் உங்கள விட பெரிய
பிசினஸ் மேக்னட்டா ஆகி காட்டுறேன்… என்று தன் கையில் தானே
சத்தியம் செய்து வானத்தைப் பார்த்து ஊதினான்.
இல்ல…. உன்னை எல்லாம் நம்ப முடியாது… அதனால… நீ இப்ப உடனே
ஊருக்கு கிளம்பு.. என்றான் அருண்.
ராஜேஷின் போன் மீண்டும் ஒலிக்க… ரிங்டோன் கேட்டு வெறி ஆகியது
அருணுக்கு…
அருணை மேலிருந்து கீழ் ஒரு தரம் பார்த்தவன்…. நீங்க எதுக்கு ப்ரோ
சம்பந்தமே இல்லாம இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க….என்று ராஜேஷ்
கேட்க..
விக்ரம் பொங்கி கொண்டு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு இருந்தான்.
மீண்டும் ஒலித்தது ரிங்டோன்…
ஸ்ஸ்ஸ்ப்பா…..
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️