அசுரன் 41
வீட்டில் ஜோசியருடன் கலந்து ஆலோசித்துக் கொண்டு இருந்தாள் ரதி…
குழந்தை எந்த நேரத்தில் எந்த நாளில் பிறந்தால் அவளுக்கு நன்மைகள்
தேடி வரும்… என்று ஜோதிடர் ஆருடம் பார்த்து கணித்துக்
கொண்டிருந்தார்.
அப்பொழுது உள்ளே நுழைந்த அருண் “என்ன பேபி எதுக்கு போன்
பண்ணி வர சொல்லி இருந்த” எதுவும் அவசரமா… ஹாஸ்பிடல்
போகலாமா? என்று பேசிக்கொண்டே அவள் அருகில் சோபாவில்
அமர்ந்தான் அருண்.
இல்ல பேபி… நான் எப்போ குழந்தை பெத்துக்கலாம்ன்னு… ஜோசியர்
கிட்ட டேம் அண்ட் டைம் வாங்குறதுக்காக வர சொல்லி இருந்தேன்… நீயும்
கூட இருக்கணும்னு நினைச்சேன் அதான் உன்னை கூப்பிட்டேன் என்றாள்
ரதி.
ஹேய்… என்ன சொல்ற பேபி.. அதெல்லாம் டாக்டர் தானே
சொல்லுவாங்க… நீ என்ன ஜோசியர் கிட்ட கேட்டுகிட்டு இருக்க..
என்ன பேபி எதுவும் தெரியாத மாதிரி கேக்குற நார்மல் பீப்பிள் தான்
டாக்டர் சொன்ன டேட்டுக்கு போயி குழந்தை பெத்துப்பாங்க.. நம்மள
மாதிரி தொழிலதிபர்கள் எல்லாம் நம்ம என்ன டேட் நினைக்கிறோமோ
அந்த டேட்ல போய் தான் பெத்துக்கணும்…
அப்படியா… என்பது போல் முழித்தான் அருண்..
சுதா வந்த அனைவருக்கும் ஜூஸ் கொடுத்து விட்டு செல்ல… ஒரு கணம்
அருணின் கண்கள் மலரின் அறையை தொட்டு மீண்டது.
ஜோசியரும் சில நிமிடங்கள் கணித்து பின் ஒரு தேதி மற்றும் நேரத்தை
குறித்து ரதியின் கையில் கொடுத்து… இந்த நேரத்துல உங்களுக்கு ஆண்
குழந்தை பிறந்தால் மிக அமோகமாக இருக்கும் உங்க தொழில்
சாம்ராஜ்யம் கொடிக்கட்டி பறக்கும்… என்று குறித்துக் கொடுத்தார்.
கருவில் இருக்கும் குழந்தை என்ன குழந்தை என்று தெரிந்து
கொள்வது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று.. ஆனால்
வெளிநாட்டிற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்… ரதியும் அப்படித்தான்
சென்று தெரிந்து கொண்டாள்.
அந்த தேதியை வாங்கி ரதி பார்த்துவிட்டு அருண் கையில் கொடுக்க…
அதைப் பார்த்து அருண் அதிர்ந்து விட்டான்..
என்ன பேபி சொல்ற… நம்ம குழந்தை பிறப்பதற்கு ஒன்றரை மாசத்துக்கு
முன்னாடி இருக்கு இந்த டேட்… அதுக்கு முன்னாடி எப்படி குழந்தை
பிறக்கும் என ஒன்றும் புரியாமல் கேட்க..
எஸ் அப் கோர்ஸ்… அந்த டேட்ல தான் நம்ம ஆபரேஷன் பண்ணி
குழந்தையை வெளியே எடுக்க போறோம்.. என்று ரதி கூற.
ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி வயிற்றில் இருக்க வேண்டிய
குழந்தையை ஆபரேட் பண்ணி வெளியே எடுத்தா அதனுடைய வளர்ச்சி
பாதிக்கும் ரதி..
எஸ் ஐ நோ… அதுக்கு தான் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ல
இன்குபேட்டர்ல வச்சு ஸ்பெஷலா கவனிச்சுப்பாங்க… நமக்கு நோ
இஸ்யூஸ்..
ஒன்றரை மாசம் ஹாஸ்பிடல்ல வச்சு பாத்துப்பாங்களா ? என்ன சொல்ற?
நம்ம குழந்தையை ஆபரேட் பண்ணி அவங்க கிட்ட கொடுத்துட்டு நம்ம 5
டேஸ்ல வீட்டுக்கு வந்துரலாம்.. அதுக்கப்புறம் நம்ம விருப்பப்பட்ட நேரம்
போய் அதுக்கு பால் கொடுத்துக்கலாம்… அவங்க ஒன்றரை மாசம்
வரைக்கும் இன்குபேட்டர்ல வச்சு ஸ்பெஷலா கவனிச்சிப்பாங்க…
குழந்தை பிறக்க வேண்டிய டேட் வந்த உடனே நம்மகிட்ட குழந்தையை
ஹெல்தியா ஒப்படச்சிடுவாங்க… என்று கூற…
தூக்கி வாரி போட்டது அருணுக்கு…
என்ன ரதி விளையாடுறியா? இதுக்கு நடுவுல நம்மளோட குழந்தைக்கு
ஏதாவது ஆச்சுன்னா என்ன பண்றது… இங்குபேட்டர்ல வச்சு வளக்குற
குழந்தை ஹெல்தியா இருக்கும்னு நினைக்கிறியா? என்று காட்டமாய்
கேட்க…
அருணை ஒரு தடவை முறைத்துவிட்டு… ஜோசியருக்கு தட்சணை
கொடுத்து வழி அனுப்பி வைத்தாள்.
ஜோசியர் சென்றதும் அருண் அறைக்குள் சென்று வாக்குவாதம்
தொடர்ந்தது…
ஏன் அருண் இவ்வளவு செல்ஃபிஸா நடந்துக்குற… என்று ரதி கோவமாய்
கேட்க.. எப்ப பாரு பாக்காத குழந்தையை பத்தி கவலைப்படுறியே என்ன
பத்தி கொஞ்சமாவது கவலைப்படுகிறயா அருண்…
யாரு நான் செல்ஃபிஷா நடந்துக்கிறேனா… உன்ன பத்தி கவலைப்பட
என்ன இருக்குது ரதி. உனக்கு ஏதாவது பிரச்சனைனா சொல்லு சால்வ்
பண்ணலாம்….
இதை என்னால் செமக்க முடியல… என்று அவள் வயிறை சுட்டி
காண்பிக்க..
ஒரு பெருமூச்சுடன் தலையை ஆட்டி சலித்துக் கொண்டான் அருண்.
ஒரு நார்மல் லைஃப் என்னால லீட் பண்ண முடியல… முதல்
மாதிரி லைப்பை என்ஜாய் பண்ண முடியல.. நீயும் நானும் பெட்ல
சேட்டிஸ்ஃபைடா இருந்து எத்தன மாசம் ஆச்சு.. வெரி டிஸ்டர்பன்ஸ் டு மீ..
உனக்கு ஏன் புரிய மாட்டேங்குதுனு எனக்கு தெரியல அருண்… என்று
கேட்க…
எல்லா பெண்களும், எவ்வளவோ பிரச்சனைகளை கடந்து பத்து மாசம்
சுமந்து தானே குழந்தையை பெத்து குடுக்குறாங்க உனக்கு என்ன
பிரச்சனை இதுல…
எல்லாரும் பண்றாங்க அப்படிங்கிறதுக்காக நானும் பண்ணணும்னு ஒரு
அவசியமும் இல்ல அருண்… எனக்கு சாய்ஸ் இருக்கு… இதை எப்ப வேணா
இறக்கி வைக்க எனக்கு உரிமை இருக்கு..
” அது” “இது ” என்று குழந்தையை வேண்டாத பொருள் போல்
வர்ணிப்பதை அருணுக்கு கடும் கோவமாய் வந்தது.
என்ன ஆனாலும் இந்த டேட்ல நான் ஆபரேட் பண்ணி குழந்தையை எடுக்க
தான் போறேன்… வேணும்னா உன் வயித்துல வாங்கி வச்சுக்கோ..
அப்படி மட்டும் ஒரு ஆப்ஷன் இருந்தா கண்டிப்பா நான் வாங்கி
வச்சுக்குவேன் ரதி.
அருணை மேலிருந்து கீழ் ஒரு பார்வை பார்த்தவள் அப்படி வச்சுக்கிட்டா
இந்த மாதிரி சிக்ஸ் பேக் வச்சிட்டு செக்ஸியா இருக்க முடியாது அருண்…
என்று கூற..
இடியட் மாதிரி பேசாத ரதி… குழந்தை முக்கியமா இல்ல அழகு முக்கியமா
என்று கேட்க…
இன்னைக்கு உனக்கு குழந்தை வேணும் அப்படிங்கறதுக்காக இத்தனை
நாள் என் கூட இருந்த அழகை இழக்க நான் தயாராக இல்லை அருண்.
இந்த அழகை பார்த்து தான் நீ என்ன கல்யாணம் பண்ணிகிட்ட இந்த
அழகுதான் எனக்கு பேரையும் புகழையும் வாங்கி கொடுக்குது என்ன
கம்பீரமா உணர வைக்குது.
உன்னோட குழந்தைக்கு ஆயா வேலை பாக்குற வயசு இன்னும் எனக்கு
வரல..
இந்த ஆபரேஷனுக்கு நான் சைன் பண்ண மாட்டேன் ரதி…
நோ நீட்.. என்னோட பேரன்ட்ஸ் சைன் பண்ணுவாங்க…
இந்த தேதிக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கு உன்னோட குழந்தையை
பார்க்க ரெடியாயிரு அப்படியே அதுக்கு ஒரு கேர் டெக்கரும் ரெடி
பண்ணிக்கோ…
தென் குழந்தைக்கு பெயர் செலக்ட் பண்ணிட்டேன்.
ரித்துன்..
ரதியிலிருந்து ஆர், ஐ எடுத்துக்கலாம் அருண்ல இருந்து யூ,என்
எடுத்துக்கலாம்.. தட்ஸ் ஆல்..
குழந்தை அஞ்சு வயசு வரைக்கும்.. வீட்ல கேர் டேக்கர் பாத்துப்பாங்க…
தென் டெல்லியில் இருக்கிற போர்டிங் ஸ்கூல்ல சேர்த்தரலாம்… தென் யூ
எஸ் ல ஹையர் ஸ்டடிஸ் முடிச்சிட்டு தான் அவன் வீட்டுக்கு வருவான்..
என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறி விட்டாள் ரதி.
ரதி சொன்னதை கேட்ட அருணுக்கு தலையே சுற்றியது காலுக்கு அடியில்
இருக்கும் பூமியை நழுவுவது போல் இருந்தது…
இன்னும் பூமியில் ஜனிக்காத தனது குழந்தையின் வாழ்க்கையை பற்றிய
கவலை அவனுக்கு இப்பொழுதே ஆரம்பித்து விட்டது…
கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து… அன்னைக்கு மட்டும் “ஒன்னே
ஒன்னு” யூஸ் பண்ணி இருந்தேனா இன்னைக்கு நீயும் கஷ்டப்பட
வேண்டியதில்லை உன் குழந்தையும் கஷ்டப்பட வேண்டியது இல்லை….
நல்ல அனுபவி… என்று கண்ணாடியை பார்த்து காரி துப்பி கொண்டான்.
†*************
அகல்யாவிற்கு இப்பொழுதெல்லாம் கடவுள் பக்தி அதிகமாகிவிட்டது…
நிறைய விரதங்கள் எடுக்க ஆரம்பித்தாள்…
அகி… வாரத்துல ஒரு நாள் மட்டும் விரதம் எடு போதும்… நாலு நாள் விரதம்
இருந்தேனா… உன்னோட உடம்பு கெட்டுப் போயிடும்.. அப்புறம் குழந்தை
பெத்துக்க தெம்பு இருக்காது… சுவர் இருந்தாதான் சித்திரம் வரைய
முடியும்… என்று கடிந்து கொள்வான் விக்ரம்.
சுற்றி இருப்பவர்கள் சொல்லும் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தாள்.
அகி… கிட்ட இருக்கிற கோவிலுக்கு போயிட்டு வா… இவ்வளவு தூரம்
உள்ள கோவிலுக்கு எல்லாம் கார்ல போயிட்டு வந்தா உன்னோட உடம்பு
ஹீட் ஆகும் சொன்னா புரிஞ்சுக்கோ… பாரு பேஸ்ல எவ்வளவு பிம்பிள்ஸ்
வர ஆரம்பிக்குதுன்னு.. உனக்கு வேணா குழந்தை முக்கியமா
இருக்கலாம் எனக்கு நீதாண்டி முக்கியம் சொன்னா புரிஞ்சுக்கோ டி…
என்று கெஞ்சலாய் கேட்பான்
ஜோசியத்தை நம்ப ஆரம்பித்தாள் ஜோசியர்கள் சொல்லும்
பரிகாரத்தையும் பின்பற்ற ஆரம்பித்தாள்.
பத்து ஜோசியர்கள் 10 விதமாய் சொல்வதினால்…மேலும் அவளுக்கு மன
உளைச்சல் தான் அதிகமானது… விக்ரமும் அவள் போகும் போக்கிலேயே
விட்டுவிட்டான்…
இரவில், நமக்கு குழந்தை இல்லன்னு உனக்கு கவலையாவே இல்லையா
விக்ரம் அதுக்காக நீ எந்த எஃபோர்ட் ம் போட மாட்டேங்கிறியே…
எல்லாரும் என்ன தானே கேள்வி கேக்குறாங்க…. அதனால நமக்கு என்ன
அப்படின்னு அசால்டா இருக்க… என்று விக்ரமையே கடிந்து கொள்வாள்.
இதெல்லாம் பண்ண குழந்தை பிறக்குமா அடாவடி…. டெய்லி நைட் நான்
ஹார்ட் வொர்க் பண்ணிக்கிட்டு தாண்டி இருக்கேன். உனக்கு
பத்தலையா? என்பான் அவளின் காது மடலை உரசியபடி…
அந்த ஆன்ட்டி சொன்னாங்க இந்த கோயிலுக்கு போயி இந்த பரிகாரம்
பண்ணதுக்கு அப்புறம் தான் அவங்க பொண்ணுக்கு குழந்தை
பிறந்துச்சாம். நம்மளும் ட்ரை பண்ணி பார்ப்போமே என்று அப்பாவியை
கேட்பாள்…
உனக்கு என்ன விருப்பமோ எல்லாமே பண்ணு உன் மனசுக்கு
சந்தோஷமா இருக்கிறதா பண்ணு நான் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்
எங்க வரணும் எப்ப வரணும் அப்படின்னு மட்டும் சொல்லு வந்துர்றேன்…
என்ன விக்கி இப்படி பட்டும்ப்படாம பேசுற… நமக்கு குழந்தை பிறக்கறது
எல்லாம் உனக்கு ஆர்வமே இல்லை என்று மூஞ்சியை தூக்கி வைத்து
படுக்கையில் திரும்பி அமர்ந்து கொண்டாள்.
என்னோட ஆர்வத்தை நான் காட்ட வேண்டிய இடத்துல காட்றேன் டி…
எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லடா… என்று கூறிக்கொண்டே
அவள் கைகளுக்கு இடையே புகுந்து அவள் மடியில் படுத்துக்கொண்டு
வயிற்றில் கிச்சுகிச்சு மூட்டினான் விக்ரம்.
ஆனா ரெண்டு பேரும் முழு மனசோட பண்ணா தானேப்பா பரிகாரம்
பலிக்கும் என்று அகல்யா விக்ரமை பார்த்து கேட்க..
அவளின் முகத்தை குறுகுறுவென்று பார்த்தவன்… பின் மென்
சிரிப்புடன்… நானும் அதை தாண்டி சொல்றேன் ரெண்டு பேரும் முழு
மனசோட “பண்ணா” தானே குழந்தை பிறக்கும்…
விக்ரம் கூறியதின் உள் அர்த்தம் புரியாதவள், என்ன நம்ம
சொன்னதையே நமக்கு திரும்ப சொல்றான் என்று முழித்தாள் அகல்யா.
இப்ப எல்லாம் நான் பண்ணும் போது உன்னோட கவனம் வேற எங்கேயோ
இருக்கு என்கிட்ட இல்ல… அதை என்னால உணர முடியுது அடாவடி…
என்று அவளது இடுப்பை கைகளால் சுற்றி வளைத்து அவளது வயிற்றின்
மத்திய புள்ளியில் முத்தம் வைத்தபடியே கூற…
நீ பண்ற விஷயத்தனால குழந்தை பிறக்குமா அப்படின்னு எனக்கு
தெரியாது? ஆனால் நான் பண்ற விஷயத்தனால கண்டிப்பா குழந்தை
பிறக்கும்.. என்று ஒரு மார்க்கமாய் கூறிக்கொண்டே அவளை
படுக்கையில் சாய்த்து மேலே சரிந்தான் விக்ரம்.
ஒரு தம்பதியருக்கு வயிற்றில் குழந்தை வந்தது கவலை… மற்றொரு
தம்பதியருக்கு வயிற்றில் குழந்தை வரவில்லை என்ற கவலை..
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️