அசுரன் 45

அசுரன் 45
கடந்த ஒரு வாரமாக மலர்தான் குழந்தைக்காக மருத்துவமனையில் 
தங்கி பார்த்துக் கொண்டிருக்கிறாள்… குழந்தையை எவ்வாறு 
கையாள்வது என்று அவளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது மருத்துவமனை 
ஊழியர்களால்… 

குழந்தை பிறந்து மூன்று நாட்களில் ரதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவளது 
வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டாள்… 

ராஜேஷ் உடன் அருண் வீட்டிற்கு சென்று தனது தனக்கு தேவையான 
பொருட்களை எடுத்துக் கொண்டு மருத்துவமனை வந்து சேர்ந்தாள் மலர். 

ராஜேஷிற்கு அவளை விட்டு செல்லவே மனம் இல்லை… மிஸ் யூ 
மலர்..  கால் பண்ணு… டெக்ஸ்ட் பண்ணு… மறந்துடாத என்னை… 
பத்திரமா இரு… நான் ஊருக்கு போயிட்டு, நீ வீட்டுக்கு வரும்போது திரும்ப 
வரேன்… என்று கூறிவிட்டு சோர்ந்த முகத்துடன் கிளம்பி சென்றான் 
ராஜேஷ். 

அவன் கூறிய அனைத்திற்கும் சரி சரி என்று தலை ஆடியவள்.. பார்த்து 
போ ராஜு… போயிட்டு கால் பண்ணு என்றாள் மலர். 

அதைப் பார்த்து அருணுக்கு பற்றிக் கொண்டு வந்தது … 

மலரை மருத்துவமனையில் விட்டு கிளம்ப நினைத்தவன், அவளிடம் 
திரும்பி உன்னோட போன் நம்பர் சொல்லு… என்றான்… 

தலையை குனிந்த படி அமைதியாக நின்று இருந்தாள்… 

உன் கிட்ட தான் கேட்கிறேன் மலர் போன் நம்பர் சொல்லு… 

மீண்டும் அமைதி… 

அவன் புரிந்து கொண்டான் அவனுக்கு போன் நம்பர் தருவதற்கு அவள் 
விரும்பவில்லை என்று… 
அவள் கையில் இருந்த போனை வலுக்கட்டாயமாக பிடுங்கி, அதில் 
தன்னுடைய நம்பரை டயல் செய்து அவளுடைய நம்பரை எடுத்துக் 
கொண்டான். 

அவனுடைய நம்பரை அருண் என்று சேவ் பண்ணிக் கொடுத்தான்… 

எது வேணும்னாலும் எனக்கு கால் பண்ணு… குழந்தையை நல்லா 
பாத்துக்கோ… டெய்லி நான் வந்து பாத்துட்டு போறேன்… பாத்து இருங்க… 
உனக்கு தேவையான ஃபுட் எல்லாம் அவங்களே கொடுத்துடுவாங்க 
குழந்தைக்கு தேவையான ஆயில், சோப், டயபர் எல்லாமே இங்க 
ஹாஸ்பிடலுக்கு உள்ள இருந்து வந்துரும்… நீ எதுக்காகவும் வெளியில வர 
தேவையில்லை… என்றான். 

தலையை குனிந்த படி சரி என தலையசைத்தாள் மலர். 

அவளை ஒரு கணம் அமைதியாக பார்த்தவன். என்ன நிமிர்ந்து பார்க்க 
மாட்டியா மலர்… என்று மென்மையாக கேட்டான். உன் கண்ண 
பாக்கணும்னு ஆசைப்படுறேன்… ஒரு தடவை என்னை நிமிர்ந்து பாரு… 
என்று அவன் கேட்க… 

இப்படி கேட்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை அவள் இதயம் 
வேகமாக துடித்தது… 
இல்லை…. என தலையசைத்தவள்… குழந்தையை நல்லா பாத்துக்குறேன் 
சார்…. நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க… என்று கூறிவிட்டு 
குழந்தையின் அறைக்குள் நுழைந்து கொண்டாள் மலர். 

அந்த மூடிய அறையை ஒருகணம் பார்த்தவன் பின் ஒரு பெருமூச்சுடன் 
அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் அருண். 

இந்த ஒரு வாரமும் காலையில் குழந்தையை பார்த்து விட்டு 
அலுவலகத்திற்கு செல்வான்..  மறந்தும் வாயை திறந்து ஒரு வார்த்தை 
பேச மாட்டாள் மலர். 

அடுத்த வாரத்தில் இருந்து அருணை,  குழந்தையை பார்க்க 
அனுமதிக்கவில்லை மருத்துவமனையில்… மூன்றாவது நாள் அவனுக்கே 
கோபம் வந்துவிட்டது… ஏன் என்ன குழந்தையை பார்க்க அனுமதிக்க 
மாட்றீங்க.. என்று அவன் கோபமாய் கேட்க.. 

உங்க குழந்தையோட கேர் டேக்கர் தான் யாரையும் அலோவ் பண்ண 
வேணாம் அப்படின்னு சொல்லி இருக்காங்க சார்… என்று செவிலியர் 
கூறினார்.. 

ஓஹோ எல்லாம் அவ வேலை தானா… நம்ம கொஞ்சம் இறங்கி போன 
உடனே தலையில் ஏறி உட்கார ஆரம்பிச்சிட்டா போல… என்னோட 
குழந்தையை பார்க்க கூடாதுன்னு சொல்றதுக்கு அவ யாரு… இவள விட்டா 
நமக்கு குழந்தைய பாத்துக்க வேற ஆள் இல்ல அப்படின்னு நினைச்சுட்டா 
போல..  காச தூக்கி போட்டா ஆயிரம் பேர் கிடைப்பாங்க… ஏதோ 
அன்னைக்கு இருந்த சூழ்நிலையில இவகிட்ட ஒரு உதவியா கேட்டா 
ரொம்ப தான் பண்றா… என்று உச்சியில் ஏறிய கோபத்துடன் மலர் தங்கி 
இருந்த அறையின் கதவை டம்..டம்… என்று தட்டினான்.. 

அப்பொழுதும் அறை கதவு திறக்கப்படாததால் ஆத்திரத்தில்… ஏய் 
இடியட் என்ன பண்ற… இப்ப என் குழந்தை என்கிட்ட காமிக்க போறியா 
இல்லையா… என்று கத்த… 

அப்பொழுது அவசரமாக அவன் அருகே வந்த மற்றொரு செவிலியர்… 
சார்… இது ஹாஸ்பிடல் எதுக்காக இப்படி கத்துறீங்க… உங்களால மத்த 
பேஷண்ட் எல்லாருமே டிஸ்டர்பன்ஸ் ஆகுறாங்க… 

உள்ள இருக்கிறவள கதவை திறந்து என்னோட குழந்தையை காமிக்க 
சொல்லுங்க… அப்பதான் நான் இங்கிருந்து போவேன் என்று அருண் 
கத்த… 

சார் அவங்களால இப்ப கதவை திறந்து வெளியில வர முடியாது என்று 
செவிலியர் கூற… 

ஏன் அப்படி உள்ள என்ன பண்ணிட்டு இருக்கா?… என்று அருண் கேட்டான். 

குழந்தைக்கு… ஹியூமன் பாடி ஹீட் ட்ரான்ஸ்பர் பண்ணிக்கிட்டு 
இருக்காங்க சார்… என்று கூறினார் செவிலியர். 

அப்படின்னா…. 

குறைமாத குழந்தைங்க எல்லோருக்கும் ஒரு வெப்பமான சூழ்நிலை 
தேவைப்படும் சார்… அதனாலதான் அவங்கள இங்குபேட்டர் குள்ள 
வைக்கிறோம்… அதைவிட சீக்கிரம் ரெக்கவர் ஆகுறதுக்கு ஒரு வழி 
இருக்கு… அதாவது குழந்தையை நம்மளோட வெற்று உடம்பில் படுக்க 
வைத்து அரவணைக்கிறது மூலமா… நம்மளோட பாடி ஹீட்ட குழந்தைக்கு 
கடத்துவது மூலமா.. குழந்தைகள் சீக்கிரமா குணமாக அதிக வாய்ப்பு 
இருக்கு… அதுதான் அவங்க இப்ப பண்ணிக்கிட்டு இருக்காங்க… நீங்க 
கதவை தட்டின உடனே அவங்களால ஓடி வந்து திறக்க முடியாது… 
பொதுவா இது மாதிரி குழந்தைகளின் அம்மா பண்ணும் போது அவங்க 
அம்மாவோ இல்ல ஹஸ்பெண்டோ கூட ஹெல்ப்க்கு இருப்பாங்க..இவங்க 
உங்களோட கேர் டேக்கர் அப்படிங்கிறதுனால மூன்றாவது ஆள் 
யாரையும் உள்ள அனுமதிக்க மாட்டாங்க….  

அவங்க அதிகமான நேரம் ஒரே நிலையில் படுத்து இருக்கிறதுனால 
அவர்கள் கால்கள் மரத்துப் போயிடும்… முதுகும் இடுப்பும் அதிகமாக 
வலிக்கும்… நினைத்த நேரத்தில் தண்ணீர் குடிக்க முடியாது… திருப்தியா 
உணவு சாப்பிட முடியாது… சொல்லப்போனால் பாத்ரூம் கூட போக 
முடியாது… உங்க குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுத்து 
இருப்பாங்க… அதனால அசையாம அவங்க அப்படியே படுத்து 
இருக்கணும்… 
அதனால…  ப்ளீஸ்… சூழ்நிலையை புரிஞ்சுக்கிட்டு தயவு செஞ்சு உங்க 
குழந்தையோட உடல்நலனை கருதி அமைதியா போங்க.. என்று விளக்கம் 
அளித்தார் செவிலியர். 

இதைக் கேட்ட அருணின் மனது… என்ன உணர்வுக்கு ஆளானது என்று 
அவனுக்கு தெரியவில்லை… தான் இத்தனை நாள் மலரை மோசமாக 
நடத்தியதை நினைத்து வருந்துவதா?… இல்லை இவ்வளவு அவளுக்கு 
செய்த பின்னும் தன் குழந்தையின் மேல் அவள் காட்டும் அக்கறையை 
நினைத்து மனதிற்குள் சந்தோஷப்படுவதா என்று அவனுக்கு 
தெரியவில்லை… கொஞ்சம் வலி கொஞ்சம் மகிழ்ச்சி நிறைந்த 
கலவையான உணர்வு அவனை ஆட்கொண்டது… 

ஆனால் மலர் மீது இருந்த உரிமை அதிகரித்தது போல் ஒரு எண்ணம்.. 

குழந்தை பிறந்த சில தினங்களில் ரதி இத்தாலி நாட்டிற்கு சென்று 
விட்டாள் அவளுடைய அழகை மீட்டுக் கொண்டு வர… 

குழந்தையை பாக்காவிடினும் அவனது உடல்நிலை பற்றி மருத்துவமனை 
வந்து விசாரித்துவிட்டு செல்வான் அருண்.. மூடிய கதவையை ஒரு கணம் 
ஏக்கத்துடன் பார்த்துவிட்டு செல்வான் அருண்… அவன் ஏக்கத்தை பார்த்த 
செவிலியர் இன்னும் குழந்தை வயித்துகுள்ள இருக்குன்னு 
நினைச்சுக்கோங்க சார்.. என்று சமாதானம் சொல்லிவிட்டு செல்வார். 

அவனும் ஆமோதிப்பாக தலையை அசைத்து விட்டு செல்வான்.. 

மலருக்கு அழைத்துப் பேச முயற்சித்தால் போன் ரிங்காகும் ஆனால் 
எடுக்க மாட்டாள். 
மெசேஜ் செய்தால்… அது ப்ளூ டிக் காட்டாது.. 

இருவரையும் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அருணுக்கு 
அதிகமாகியது… 

ஒரு மாதம் பத்து நாள் கடந்திருக்கும்… மருத்துவமனையில் இருந்து 
அழைப்பு வந்திருந்தது அருணுக்கு… 

பதட்டத்துடன் அவன் போனை எடுக்க… நாங்க ஹாஸ்பிடல்ல இருந்து 
பேசுறோம் சார்.. உங்க சைல்டு கம்ப்ளிட்டா ரெக்கவர் ஆயிட்டாங்க 
அவங்கள நீங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்.. டாக்டர் உங்கள 
நேரடியா பார்க்கணும்னு சொன்னாங்க… நீங்க கொஞ்சம் ஹாஸ்பிடல் 
வர முடியுமா? என்று நற்செய்தி கூறினர். 

அருணுக்கு தலைகால் புரியவில்லை.. வேகமாக ஹாஸ்பிடல் கிளம்பி 
சென்றவன் நேராக மருத்துவர் அறையில் நுழைந்தான்… 

வாங்க மிஸ்டர் அருண்… 

உங்க சைல்டு சீக்கிரமா ரெக்கவர் ஆயிட்டாங்க… உங்க குழந்தையோட 
உடல் பகுதி எல்லாம் சரியா இயங்குது இப்போ… அவங்கள நீங்க வீட்டுக்கு 
அழைச்சுட்டு போயிட்டு நார்மல் குழந்தைகள் மாதிரி பாத்துக்கலாம் எந்த 
பிரச்சனையும் இல்லை… பொதுவா போதைப் பழக்கம் இருக்கிற 
தாய்மார்களுக்கு பிறக்கிற குழந்தை நிறைய பிரச்சனைகளுடன் 
பிறக்கும் ஆனால் உங்களுடைய குழந்தை தப்பித்து விட்டது அதுக்கு நீங்க 
கடவுளுக்கு தான் நன்றி சொல்லணும்… 

அப்புறம் உங்ககிட்ட இன்னொரு முக்கியமான விஷயத்தை பற்றி 
கேட்பதற்காக தான் நான் வர சொல்லி இருந்தேன்… 

என்ன? என்பது போல் பார்த்தான் அருண். 

பொதுவா  கேர் டேக்கர்ஸ் யாரும் குழந்தைகளுக்கு பாடி ஹீட் 
ட்ரான்ஸ்ஃபர் பண்ண ஒத்துக்க மாட்டாங்க… குழந்தையோட அம்மாவோ 
இல்ல அப்பாவோ தான் அதுக்கு பெரும்பாலும் ஒத்துப்பாங்க… பட் யூ ஆர் 
லக்கி… உங்க குழந்தையோட கேர் டேக்கர் பாடி ஹீட் ட்ரான்ஸ்ஃபர் 
பண்ண ஒத்துக்கிட்டாங்க அதுதான் இன்னைக்கு உங்க குழந்தை சீக்கிரம் 
குணமாவதற்கு ஒரு முக்கியமான காரணம்… 

அருண் முகத்தில் மலர்ச்சி இதழில் மென் புன்னகை. 

இந்த மாதிரி கேர் டேக்கர்ஸ் ஓட சேவை மத்த குழந்தைகளுக்கும் 
தேவைப்படுது… உங்க கேர் டேக்கரை பற்றி விசாரிக்கும் போது… 
அவங்க உங்க வீட்ல தான் பெர்மனெண்டா வீட்டு வேலையில இருக்கிறதா 
சொன்னாங்க… 

பொதுவா வீட்டு வேலைக்கு நிறைய ஆட்கள் கிடைப்பாங்க… அதனால 
நீங்க கொஞ்சம் அவங்களை ரிலீவ் பண்ணி விட்டீங்கன்னா நாங்க கேர் 
டேக்கர் வேலைக்கு அவங்கள அப்பாயிண்ட் பண்ணிடுவோம்… என்றார் 
மருத்துவர். 

சிறிது நேரத்திற்கு முன் மலர்ந்த முகம் இப்பொழுது சுருங்கி கோபத்தை 
தத்தெடுத்துக் கொண்டது. 

மருத்துவருக்கு என்ன பதில் அளிப்பது என்றே அவனுக்கு 
தெரியவில்லை… 

முதலில் என்றால் ஆமாம் என் வீட்டு வேலைக்காரி தான் என்று ஒரே 
வார்த்தையில் கூறியிருப்பான்… ஆனால் இப்பொழுது வேலைக்காரி 
என்று கூறவும் மனம் வரவில்லை… எனக்கு சொந்தக்காரி என்று கூறவும் 
வழியில்லை… மனம் முழுவதும் பாரம் சூழ்ந்து கொண்டது அருணுக்கு… 

இல்ல டாக்டர் என்னோட குழந்தையை இனி பாத்துக்க போறது அவங்க 
தான்… அதனால இந்த பேச்சை இதோட ஸ்டாப் பண்ணிடுங்க… என்று 
கூறிவிட்டு குழந்தையை பார்க்க போலாமா? என்று கிளம்பினான் அருண். 
மருத்துவரும் உடன் வந்தார்… 
ஒரு மாதம் கழித்து குழந்தையை பார்க்க போகும் சந்தோஷம் அருணை 
முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது… 

குழந்தையின் அறைக்கு சென்று, தொட்டிலில் படுக்க வைத்து இருந்த 
குழந்தையை கண்டவனுக்கு அதிர்ச்சி… இது தன் குழந்தை தானா என்று… 

இதோ தோலில் இருந்த சுருக்கங்கள் மறைந்து, குண்டு கன்னங்களுடன் 
திராட்சை விழிகளுடன்… வாயில் எச்சில் வடிய விரலை வாயில் வைத்து 
சப்பிக்கொண்டு… தன் கையையும் காலையும் டக்… டக்.. என்று 
ஆட்டிக்கொண்டு… பொக்கை வாய் புன்னகை முகமாய் வரவேற்றான் 
அருணின் மகன். குழந்தையை பார்த்தவுடன் அருணின் கண்கள் 
கலங்கிவிட்டன… உடனே தனது செல்போனில் எடுத்த அவனது முதல் நாள் 
புகைப்படத்தை எடுத்து இது தனது குழந்தை தானா என்று அவன் 
பார்க்க… ஆம் அவனேதான்… ஆனால் புகைப்படத்தில் இருப்பவனுக்கும் 
நேரில் இருப்பவனுக்கும் நூறு வித்தியாசம் கண்டுபிடிக்கலாம்… 

டாக்டர் நான் குழந்தையை தூக்கலாமா? என்று அருண் கேட்க… 

ஓ சூயர்… என்றார் மருத்துவர். 
நர்ஸ் இந்த குழந்தையை இவர்கிட்ட தூக்கி குடுங்க என்று உத்தரவிட… 

ஒரு குட்டி பெட்டில் படுக்க வைத்து குழந்தையை அவனிடம் தூக்கி 
கொடுத்தார் செவிலியர். 

குழந்தையை கையில் வாங்கியவன், முதன் முதலில் குழந்தையின் 
நெற்றியில் ஆழமாய் முத்தமிட்டான் அருண். முத்தமிடும் பொழுதே 
அவனுடைய நாசியில் குழந்தையின் வாசனையை முழுவதும் நிரப்பிக் 
கொண்டான். மகனின் ஸ்பரிசத்தை ஆழ்ந்து அனுபவித்தான். அவன் 
கண்களில் நீர் கசிந்தது. “மை சாம்ப்” என்று அவன் உதடுகள் 
முணுமுணுத்தன. 

நடப்பவை அனைத்தையும் அறையின் ஒரு ஓரத்தில் இருந்து மலர் 
பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். தனது போனை எடுத்து யாருக்கோ 
அழைத்தாள். 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top