அசுரன் 46
குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தவனின் பக்கத்தில் நெருக்கமாக
நிழலாட… யார்? என்று திரும்பிப் பார்த்தான் அருண்.
விக்ரம் தான் நின்றிருந்தான்…
குழந்தையை எட்டிப் பார்த்த விக்ரம்…
டேய் மச்சான்.. என்னோட மருமகனாடா இது… ஆளே அடையாளம்
தெரியாம மாறிட்டாப்ல… என்று அருண் கையிலிருந்த குழந்தையின்
காலை பிடித்து முத்தமிட்டான்…
குழந்தை அவனைப் பார்த்து சிரித்தது…
டேய்… என்னைய பார்த்து சிரிக்கிறாண்டா… கியூட் குட்டி…
என்னடா டாக்டர் வீட்டுக்கு கிளம்ப சொல்லிட்டாங்களா… வா வீட்டுக்கு
போவோம் என்று கூறினான் விக்ரம்.
அருண் தலையை இரு பக்கமும் திருப்பி யாரையோ தேட…
யாரை தேடுற?
இல்லடா வந்ததிலிருந்து மலர பாக்கல அவ வந்த உடனே கிளம்பி
விடலாம் என்றான் அருண்.
அவ இப்ப தான்டா என்னோட கார்ல வீட்டுக்கு கிளம்பி போறா… என்றான்
விக்ரம்.
மலர் தான் எனக்கு போன் பண்ணுச்சு…குழந்தையோட உன்னைய
கூட்டிட்டு வர சொல்லுச்சு…
குழந்தையை எப்படி பார்த்துக்கணும்னு கேர் டேக்கர் கிட்ட நாங்க
இன்பார்ம் பண்ணி இருக்கோம்… உங்க குழந்தையோட கேர்
டேக்கர் குழந்தைக்கு ஒரு வருஷத்துக்கு தாய்ப்பால் கேட்டிருந்தாங்க…
அது மூணு நேரமும் உங்க வீடு தேடி வந்துரும்… அதை எப்படி
பக்குவப்படுத்தி குழந்தைக்கு கொடுக்கணும் அப்படின்னு உங்க
குழந்தையோட கேர் டேக்கருக்கு தெரியும்… போயிட்டு வாங்க.. உங்க
பையனோட மெடிக்கல் ஹிஸ்டரி அடுத்த செக்கப் பத்தின டீடைல்
எல்லாம் இந்த பைலில் இருக்கு.. என்று நல்லபடியாக வழி அனுப்பி
வைத்தார் மருத்துவர்…
மருத்துவமனையின் பில்லை கட்டி விட்டு… குழந்தையுடன் அருண் அவன்
காரில் ஏறிக்கொள்ள… விக்ரம் வண்டியை செலுத்தினான்…
அலுவலகத்தில் இருந்து கிளம்பும்போது… அருண் வண்டியை செலுத்தி
கொண்டு வர, அருகில் குழந்தையுடன் மலர் அமர்ந்திருப்பது போல்
கற்பனை செய்து கொண்டு வந்தான். அதனால்தான் யாரிடமும்
சொல்லாமல் யாரையும் உடன் அழைத்து வராமல் தனியே வந்திருந்தான்.
நான் வர்றதுக்குள்ள அவளுக்கு என்ன அப்படி ஒரு அவசரம் சொல்லாமல்
கூட கிளம்பி போயிட்டா என்றான் அருண்.
சீக்கிரமா போயி குழந்தைக்கு தேவையானதை ரெடி பண்ணி
வைக்கிறேன்… தொட்டில் ரெடி பண்ணனும்.. ஆரத்தி கரைக்கணும்
அப்படின்னு சொல்லிட்டு போச்சுடா… என்றான் விக்ரம்.
(அவளுக்கு ஒரு வேலையும் இல்லனாலும் என் கூட கார்ல வரமாட்டா…
என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன்…)
ஒரு பெருமூச்சுடன் என்னமோ சொல்ற… என்ற சலிப்புடன் கார் கதவின்
பக்கம் திரும்பிக் கொண்டான் அருண்.
கோவில் வாசலில் மாலையுடன் நின்றவளை… தன் காரில் ஏற்றாமல்
தனியே விட்டுவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது அருணுக்கு.
அருணின் வீடு வந்து சேர… குழந்தையுடன் அருண் வீட்டிற்குள் நுழைய
போக… அகல்யா ஆரத்தி தட்டுடன் நின்றிருந்தாள். இங்கேயும் மலரை
எதிர்பார்த்தான் அருண்.
ஆனந்தத்துடன் தன் மருமகனுக்கு ஆரத்தி எடுத்து நெத்தியில் திலகம்
இட்டவள்… அருணுக்கும் நெற்றியில் திலகம் வைத்து விட்டாள்… இன்று
தனியே குழந்தையுடன் நிற்கும் போது தான் உணர்ந்தான் அருண்.
மலரை திருமணம் செய்து அழைத்து வந்த போது மாலையுடன் வாசல்
படியில் அவள் தனியே நின்ற வலியை… எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு
பழி வாங்குவா போல… என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்
அருண்.
ஆரத்தி தட்டை விக்ரமிடம் கொடுத்து அனுப்பியவள் வேகமாக
குழந்தையை வாங்கினாள் அகல்யா..
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் குழந்தையை சூழ்ந்து கொண்டனர்.
குட்டியோட மூக்கை பாரேன் குட்டியா அண்ணி
மூக்கு மாதிரியே இருக்கு…. என்று அகல்யா வர்ணிக்க… ஏனோ
அருணுக்கு மலரின் மூக்கு நினைவு வந்து சென்றது. சோ க்யூட்.. என்று
குழந்தையின் கன்னத்தை வருடினாள் அகல்யா…
அவளைப் பார்த்தும் ஒரு புன்னகையை உதிர்த்தது அந்த குட்டி மொட்டு…
அதைப் பார்த்து அகல்யாவிற்கு பேரானந்தம். விக்கி பாரேன் என்ன
பார்த்து சிரிக்கிறான். என்றாள் குதூகலமாக.
ஆமா அகி… என்னையும் பார்த்து சிரித்தான்… ரொம்ப சமத்துப்பையனா
இருக்கான்… என்றான் விக்ரம்.
அனைவரின் பார்வையும் குழந்தையின் மேல் இருக்க… அருணின்
கண்கள் மட்டும் மலரை தேடியது… கண்ணில் அகப்படவில்லை…
வேகமாக தனது மொபைலை எடுத்து மலருக்கு கால் செய்தான்.
அது சமையலறையில் ஒலித்தது… வேகமாக அங்கு சென்று பார்த்தான்
போன் அங்கு தான் இருந்தது… Owner.Arun.sir… என்று அதில் பெயர்
பதியப்பட்டு இருந்தது.
அன்று அவன் தான் அவளுடைய மொபைலில் அவனது பெயரை அருண்
என்று சேவ் பண்ணி கொடுத்து இருந்தான்… அதன் பின் அவள் மாற்றி
இருப்பாள் போலும்…
அதைப் பார்த்து அருணின் மனது பாரமாகி போனது. அவன் தான் அவள்
மனதில் வேலைக்காரி… என்று நூறு முறை கூறி ஆழமாக பதிய
வைத்தவன்… ஆனால் இன்று ஏனோ போனில் ஓனர் என்று சேவ் பண்ணி
இருப்பதை ஏற்பதற்கு மனம் வரவில்லை…
அவன் போன் கட் ஆகிய சில நிமிடத்தில் மறுபடியும் போன் ஒலிக்க யார்
என்று அருண் பார்த்தான்…
Raju… என்று இருந்தது…
ராஜு.. ம்.. செல்லபேரு…என்று பல்லிடிக்கில் சொல்லியவன் பல்லை
கடித்தபடி சமையலறையை விட்டு வெளியே வந்தான்….
அருண், குழந்தை வீட்டுக்கு வந்துட்டான்… ரதியை எப்ப கூட்டிட்டு வர
போற… என்று கேட்டார் ருத்ரா…
அவ பாரின் போயிருந்தா திரும்ப வந்துட்டாலானு தெரியல… போன்
பண்ணி பாத்துட்டு… நீங்களே ஒருநாள் போய் கூட்டிட்டு வந்துருங்க
அம்மா.. என்று பட்டும்படாமல் கூறிவிட்டு, தனது அறைக்கு உடைமாற்ற
சென்றான் அருண்.
வீட்டில் இருந்த அனைவர் கையிலும் மாறி மாறி விளையாடிக்
கொண்டிருந்த குட்டி பையன் சிறிது நேரத்தில் அழுக ஆரம்பித்து
விட்டான்… குழந்தை ஆட்டோமேட்டிக்காக மலரின் கையை வந்து
அடைந்தது…
என்ன குட்டி ரொம்ப ஜாலியா இருக்கீங்க போல….
நம்ம ரெண்டு பேருமா இருந்தோம்… இப்போ இத்தனை பேர்
இருக்காங்கன்னு பாக்குறியா…
என்ன சிரிப்பு வேண்டி இருக்கு…
தங்ககுட்டிக்கு உங்கா வேணுமா?
உன்ன உங்க அத்தை, தாத்தா, மாமா எல்லாரும்… ரொம்ப சமத்து
பையனா இருக்கேன்னு சொல்றாங்க…
ஆனா எனக்கு தானே தெரியும்… உன்னோட சேட்டைகள்…
என்னோட பட்டு குட்டி பகல் ஃபுல்லா சிரிச்சு விளையாடுவாரு… நைட்
ஃபுல்லா என் கூட உட்கார்ந்து கதை பேசுவாரு… என்ன தூங்க விட
மாட்டாரு… ஊர்ல இருக்க எல்லா சேட்டையும் நைட்டு தான்
பண்ணுவாருன்னு எனக்கு மட்டும் தானே தெரியும்… என்று குழந்தைக்கு
பால் புட்டியில் பாலை கொடுத்துக் கொண்டே கொஞ்சி கொண்டு
இருந்தாள் மலர்…
பால் குடிக்கும் போது என்ன சிரிப்பு வேண்டி இருக்கு புரை போகும்
அமைதியா குடிக்கணும் சேட்டை பண்ண கூடாது…. பால் குடிச்சுக்கிட்டே
தூங்கணும் என்று தட்டிக் கொடுத்தாள்….
இவை அனைத்தையும் அறை வாசலில் இருந்து சிறு புன்னகையுடன்
அருண் கேட்டுக் கொண்டு இருந்தான். உடைமாற்றிவிட்டு குழந்தையை
தூக்கி செல்ல வந்தவன் மலரின் குரலை கேட்டதும் அங்கேயே நின்று
விட்டான்.
குழந்தை பால் குடித்துவிட்டு உறங்கட்டும் என்று தனது அறைக்கு செல்லப்
போக…
வாசலில் கார் வந்து நின்றது…
யார் என்று அவன் எட்டிப் பார்க்க.. வேறு யார்?.. அவன் பிபியை எகர
வைப்பவன்… அவன் கடுப்பிற்கு சொந்தக்காரன்… அருணை
கொந்தளிக்க விட்டு குளிர் காய்பவன். என்ற அடை மொழியுடன் வந்து
விட்டான் ராஜேஷ்.
ஹாய் ப்ரோ… எப்படி இருக்கீங்க… என்று கூறிவிட்டு, அருணின் பதிலுக்காக காத்திருக்காமல்,
மலரின் அறைக்குள் நுழைந்தான் ராஜேஷ்.
ஹாய் ஃப்ளவர்… குட்டி பையன் என்ன சொல்றான்… என்று கூறிக்
கொண்டே படுக்கையில் அவள் பக்கத்தில் சென்று அமர்ந்தான்.
டேய் எங்க அண்ணன் மவனே… போன்ல பார்த்ததைவிட இப்ப கொஞ்சம்
வளர்ந்து இருக்கான்ல.. என்று அவன் கன்னத்தை மெதுவாக கிள்ளினான்
ராஜேஷ்…
சோ… சாப்ட் பிளவர்… அப்படியே உன்னை மாதிரி… என்று சொல்லி
அவன் சிரிக்க…
வெளியில் நின்று இருந்த ஒருவனுக்கு அடுப்பில்லாமல் புகை வந்தது…
ஓஹோ… வீடியோ கால்ல எல்லாம் பேசி இருக்கீங்களா…. அப்போ மேடம்
என்னோட போனை தான் எடுக்கல போல… என்று நினைத்துக் கொண்டே
கடுப்பில் மலரின் அறை கதவை படக் என்று திறந்து உள்ளே வந்தான்
அருண்.
ப்ரோ… என்ன இது இன்டிசண்டா கதவை தட்டாம உள்ள வர்றீங்க…
ஏன்? நீ கதவ தட்டிட்டு தான் உள்ள வந்தியா…
கதவை திறந்து கொண்டு உள்ளே வரும்போதே… அது யார் என்று
மலருக்கு தெரியும் அதனால் அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை…
ப்ரோ அது நாங்க பிரண்ட்ஸ் ப்ரோ… என்று அவனையும் மலரையும் சுட்டி
காண்பித்தான்… அதனால நான் அப்படி வரலாம்… ஆனா ஓனர் நீங்க
அப்படி வரக்கூடாது…
பால் குடித்துக் கொண்டே தூங்கிய குழந்தையின் வாயை காட்டன்
துணியால் துடைத்து விட்டு… பின் தோளில் போட்டு தட்டிக் கொடுத்துக்
கொண்டிருந்தாள் மலர்.
ஏன்? நான் போன் பண்ணா அட்டென்ட் பண்ண மாட்டேங்குற… ஒரு மாசம்
ஹாஸ்பிடல்ல இருந்த உனக்கு ஒண்ணுமே தேவைப்படலையா.. எனக்கு
ஒரு நாள் கூட நீ போன் பண்ணல… என்று மலரை பார்த்து கேட்டான்
அருண்.
ப்ரோ உங்க வீட்ல தான் பத்து மாசமா இருக்கா… இத்தனை நாள்
அவளுக்கு தேவையானத உங்களுக்கு போன் பண்ணி கேட்டு தான்
வாங்குனாங்களா… அவங்கள பாத்துக்க அவங்களுக்கு தெரியும் ப்ரோ…
என்று மலரிடம் கேட்ட கேள்விக்கு ராஜேஷ் பதில் கூற..
மலர் நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல… முதல்ல இவனை இங்கு
இருந்து வெளியில் அனுப்பு, இல்லன்னா நடக்கறதே வேற… என்றான்
அருண்.
ப்ரோ நீங்க இங்க நிற்கிறது தான் நல்லா இல்ல… அண்ணி பார்த்தா
தப்பா நினைப்பாங்க ப்ரோ… நீங்க இங்க எவ்ளோ நேரம் நிக்கிறத
பார்த்தா வீட்ல அண்ணி இல்ல போல… என்று ராஜேஷ் கூற…
என்கிட்ட நீ அடி வாங்கியே சாகப்போறடா… நாயே… என்று கத்தினான்
அருண்.
உஸ்ஸ்… கத்தாதீங்க ப்ரோ… குழந்தை தூங்குறான் என்றான் ராஜேஷ்..
வாயில் விரலை வைத்து பொறுப்பாக…
குழந்தைகென தனது காட்டன் சேலையில் தொட்டில் ஒன்றை கட்டி
வைத்திருந்தாள் மலர்… அதில் குழந்தையை உறங்க வைத்தாள்…
பின் ஆண்கள் இருவரும் சண்டையிடுங்கள் நான் வெளியே செல்கிறேன்
என்னும் வகையில் அறையை விட்டு வெளியேறி விட்டாள் மலர்.
நான் இங்க நின்னு கத்திக்கிட்டு இருக்கேன் இவ என்ன கண்டுக்காம
போறா… என்று நினைத்துக் கொண்டு தன்னை கடந்து செல்பவளை
பார்வையால்
தொடர்ந்தான் அருண்.
அருண் அருகில் வந்த ராஜேஷ்… ப்ரோ நீங்க லன்ச் சாப்பிட்டீங்களா…
இல்லன்னு நினைக்கிறேன்… அதனாலதான் இவ்வளவு கோவப்படுறீங்க…
வாங்க பஸ்ட் போய் லஞ்ச் சாப்பிடலாம்… என்று அவனின் கையை
கோர்த்துக்கொண்டு இழுத்து சென்றான் வெளியில்..
“பசி வந்தா நீ நீயா இருக்க மாட்ட…” என்ற வசனத்தை சொல்லி
கொண்டே…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️