அசுரன் 5

ஆமா..! நேத்து நமக்குள்ள ஏதாவது நடந்ததா? என்ன ஏதாவது பண்ணிட்டயா? 
உடம்பெல்லாம் அடிச்சி போட்ட மாறி வலிக்கிதே… (ஏன்டா கேள்வியா இருந்தாலும் 
ஒரு நியாயம் வேணாமா?) நேற்று மது போதையில், தன்னை தேடி வந்த மாதுவிடம் 
தலை, கால் புரியாமல் தாண்டவம் ஆடி, தன் உடல் சூட்டை முழுதும் இறக்கி விட்டு 
பின் வீடு வந்து சேர்ந்தது நியாபகம் இல்லை போலும். 

இதை கேட்டவள் அதிர்ந்து, ஐயோ…! என்று இரு கைகளையும் வைத்து வாயை 
மூடிக்கொண்டாள். இல்ல சார்…. என்ன, ரூம்-அ கிளீன் பண்ண சொல்லிட்டு நீங்க 
தூங்கிட்டீங்க.. நா கிளீன் பண்ணிட்டு போய்ட்டேன் சார்! என்றாள். 

அப்போது தான் அறையை கவனித்தான்.. நேத்து பூகம்பத்தில் சிக்கியது போல் இருந்த 
அறை இப்போது, சுத்தமாய் இருந்தது. உன்னைமாறி  பொண்ணயெல்லாம் நம்ப 
முடியாது, என்கூட வாழ நா போதைல இருக்கும் போது என்ன வேணா பண்ணுவீங்க… 
இனிமேல் நானே கூப்பிட்டாலும் நைட் நீ என் ரூம் பக்கம் வர கூடாது. 

கஷ்டத்தை மறைக்க ..உதட்டை கடித்து.. தலை குனிந்த வாரே… சரிங்க சார்..! 
என்றாள். 

ரொம்ப நல்லவ மாறி நடிக்காத ..! இப்டி அப்பாவியா மூஞ்ச வச்சிருக்கிறத 
பாத்தாலே… கடுப்பா இருக்கு.. மொத நீ இங்கிருந்து கிளம்பு… என்று கூறி தலையை 
திருப்பி பின் தலையை அழுத்த கோதி கொண்டான்.. சொன்னதெல்லாம் மனசுல 
வைச்சு நடந்துக்கோ..! என்று எச்சரித்து அனுப்பினான். 

சரி என்று தலை ஆட்டி விட்டு , விறுவிறுவென்று அந்த அறையை விட்டு ஓடி வந்து, தன் 
அறையில் அடைந்து கொண்டவள். என்ன வார்த்தை கேட்டு விட்டார் என்னை பார்த்து, 
என்ன பார்த்தா இவரை ஏதாவது பண்ற மாறியா இருக்கு. ஆள் பாக்க பல்கா இருந்தா 
மட்டும் போதுமா? கொஞ்சம் கூட அறிவு வேணாம், ஒரு பொண்ணு கிட்ட இப்டியா 
கேப்பார். சரியான லூசா இருப்பார் போல, பெரிய மன்மதன்னு மனசுக்குள் நினைப்பு, 
இனி கூப்பிட்டாலும் அவர் ரூம் பக்கம் போக கூடாது என நினைத்து கொண்டாள். 
அவன் போகும் வரை அவன் எதிரில் போக வேண்டாம் என்று தான் நினைத்தாள். 
ருத்ரா அழைக்க.. ஓடிப்போய் கிச்சனில் நுழைந்து, காலை உணவை டேபிள் மேல் 
எடுத்து வைத்து கொண்டிருந்தாள். 

—————————————– 

அடியே, அடாவடி, எந்திரி டி … ஆபீஸ் போக வேண்டாமா… என்றான் விக்ரம் , 
அகல்யாவின் காது மடலில் குட்டி, குட்டி, முத்தங்கள் வைத்து, கொண்டே 
கிசுகிசுப்பாக.. 

ப்ளீஸ்.. விக்கி, டுடே லீவு போட்டுகிறேனே !…. 

நோ, டுடே கண்டிப்பா நம்ம ஆபீஸ் போறோம் என்றான் அவள் இடுப்பை வளைத்து 
அணைத்து கொண்டே. “புது மாப்ள ஆபீஸ் கிளம்பிட்டான், உனக்கு என்ன லீவ் 
கேக்குது”. 

நைட் அவன் நல்லா தூங்கி எழுந்து போறான். நீங்க தான் என்னைய தூங்கவே 
விடலையே என்றாள் கண்ணை தொறக்காமலே. 

அடிப்பாவி, நைட் ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வந்த என்ன, அந்த சீன் பாருங்க, இந்த சாங் 
கேளுங்கன்ன, உசுப்பேத்தி விடுறதே நீ தாண்டி… என்று சொல்லி கொண்டே கழுத்து 
வளைவில் முகம் புதைத்தான். 

உடல் சிலிர்த்தது அகல்யாவிற்கு. சீன் பாருங்கனு சொன்னா, பாக்க மட்டும் தான் 
செய்யணும், அப்ளை பண்ணி பாக்க கூடாது. 

இன்னும் கொஞ்ச நேரம் நீ இப்டியே இருந்தா, நடக்க போற நிகழ்வுக்கு நா 
பொறுப்பில்லை என்றான். வாய் நல்ல பிள்ளையாக பதிலளித்தாலும், கைகளின் 
செயல் சரியில்லை. 

அகல்யா கூச்சத்தில் நெளிந்தாள். 

கூடல் செய்தே தூக்கத்தை கலைத்து, இருவரும் சேர்ந்து குளித்து முடித்து, கிளம்பி 
காலை உணவிற்கு டேபிளிலில் வந்து அமர்ந்தனர். 

சரியாக அருணும், கோட் சூட் சகிதம் கிளம்பி.. கீழிறங்கி வந்து டேபிளில் அமர்ந்தான்.  

மலர் அனைவர்க்கும் பரிமாறினாள். அருணுக்கு பரிமாறும் போது, கைகளால் தடுத்து, 
அவனே பரிமாறி கொண்டான். அவள் பக்கத்தில் வருவது பிடிக்காமல். 

அருண், நேத்து நைட் நீ ரொம்ப  லேட்டா வந்தது போல இருந்தது. கல்யாணத்துக்கு 
முன்னாடி இருந்தது போல இப்பவும் இருக்க முடியாது. இப்போ உனக்காக வீட்ல உன் 
பொண்டாட்டி காத்துகிட்டு இருப்பான்னு நியாபகம் வச்சிக்கோ!… என்றார் 
சக்ரவர்த்தி. 

அப்பா, கல்யாணம் பண்ணி வச்சதோட உங்க கடமை முடிஞ்சு. நா எப்படி வாழனும்னு 
நீங்க சொல்லாதீங்க. ஸ்டே ஆன் யுவர் லிமிட்ஸ்…. இந்த கல்யாணமே வேணாம்னு 
சொன்னேன்.. சொல்ல சொல்ல கேக்காம இத புடிச்சு என் தலைல கட்டி வச்சுடீங்க. 
புடிக்காத ஒன்ன வச்சு சந்தோசமா வாழுனு, பாடம் வேற நடத்துறீங்க. 

ஏன்டா..! அந்த பொண்ணுக்கு என்ன குறை. நல்ல குணமான பொண்ணா இருக்கா… 
கடைசி வரைக்கும் உன்ன நல்லா பாத்துபாடா… 

அப்ப்பா…! ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் டாக்..! என்ன பாத்துக்க எனக்கு தெரியும்.. இவ 
பெரிய மகாராணி என்ன பாத்துக்க… எங்க ரெண்டு பேரையும் பக்கத்துல நிக்க வச்சு 
பாருங்க என்று அவளுடைய கையை பிடித்து இழுத்து, தன் பக்கத்தில் நிறுத்தி 
காட்டினான். எப்படி இருக்கு…. ஆஹ் எப்படி இருகுக்குனு சொல்லுங்க….என்றான். 
என்னோட ஆபீஸ்-அ கிளீன் பண்ண வந்தவ மாறி இருக்காப்பா…. ஆறடியில் 
நின்றிருந்தவன் பக்கத்தில் கூனி குறுகி கோழிகுஞ்சு போல் நடுங்கி கொண்டு 
நின்றிருந்தாள் மலர். அதை பார்த்த ருத்ராதேவி முகத்தை சுழித்து திரும்பி கொள்ள. 
அதை பார்த்த அருண் மேலும் கோபம் கொண்டு, அம்மாவால கூட பாக்க 
முடியலப்பா… நா எப்படி ஏத்துக்கிட்டு வாழ முடியும்னு நினைக்கிறீங்க. நா 
எல்லாத்திலையும் பெஸ்ட் வேணும் னு நினைக்கிறேன் பா.. ஆனா நீங்க இப்டி ஒரு 
கல்யாணம் பண்ணி என்னோட வாழ்க்கையை மொத்தமா முடிச்சிடீங்க.. இவளை 
கல்யாணம் பண்ணி தான் நா உயிர் வாழனும் நா.. நா இப்பொவே சாக ரெடி ப்பா..  

அனைவரின் முன்னிலும், மலருக்கு பெருத்த அவமானமாகி போனது. கை,கால்கள் 
நடுங்கி, இதயம் படபடத்து, உள்ளங்கை சில்லிட்டு.. பின்தலை வின், வின் என்று 
வலித்தது.. இதழ் கடித்து, தலை குனிந்து நின்றிருந்தாள். அங்கிருக்கும் யாரையும் 
அவளால் நிமிர்ந்துகூட பாக்க முடியவில்லை. குனிந்துகொண்டே வேகமாக தனது 
அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக்கொண்டாள். 

விக்ரம், அருணை ஏதோ சொல்ல வர, அவனது கையை இறுக்கி பிடித்து, 
தலையசைத்து வேண்டாம் என்று சைகையில் தடுத்தாள் அகல்யா. 

கொஞ்சமாவது என்னோட பீலிங்-அ புரிஞ்சு கோங்க…. என்று கூறி தன் 
பின்னந்தலையை அழுத்த கோதி தன் கோவத்தை கட்டுபடுத்தி கொண்டு, சீரான 
மூச்சுடன்…இனி என் இஷ்டத்துக்கு தான் இந்த வீட்ல இருப்பேன், யாராவது ஏதாவது 
சொன்னீங்க, அப்புறம் நீங்க வேற அருண பார்க்க வேண்டி வரும் என்று 
சொல்லிவிட்டு, கை கழுவிவிட்டு, வேகமாக காரை எடுத்து கொண்டு, அலுவலகம் 
கிளம்பி விட்டான். அவன் பின்னால் மூவர் அலுவலகம் கிளம்ப, ருத்ரா லேடிஸ் கிளப் 
கிளம்பிவிட்டார். 

புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது வீடு. 

அறைக்குள் வந்து விட்டத்தை வெறித்து கொண்டிருந்தவள்… தன்னிலையை எண்ணி 
மனதுக்குள் நொந்து கொண்டிருந்தாள். ஒரு துளி கண்ணீர் வந்தாலும்.. மனம் 
கொஞ்சம் இலகுவாகும். ஆனால், அவளுக்கு அந்த பாக்கியம் வாய்க்கவில்லை. 

ஆம், அவளுக்கு துக்கத்திலும், வலியிலும், மனஅழுத்தத்தின் போதும் கண்ணீர் 
சுரப்பதில்லை. கண்ணீர் வரவில்லை என்பதினாலே இறைவன் “எவ்வளவு அடிச்சாலும் 
தாங்குவாள்” என்று நினைத்து விட்டார் போலும். இப்பொழுதெல்லாம் அவள் 
வாழ்க்கையில் வலிகள் மட்டுமே உணரப்படுகிறது. அவளும் ஒரு காலத்தில் 
சந்தோசத்தின் சிறகுகளோடு பறந்தவள் தான். அவள் தந்தை இருக்கும் வரையில்…. 
அப்பா..! நீங்க இருந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்குமாப்பா…. என்று 
புலம்பிய படியே… தன் தந்தையின் நினைவுகளில் மூழ்கினாள். 

சந்திரன், ஒரு அலுவலகத்தில் கிளெர்க்காக பணிபுரிந்தார். அம்மா வாசுகி குடும்ப 
தலைவி. தேன்மலர் வீட்டின் மூத்த பெண்பிள்ளை.. அப்பாவின் செல்லம்… அப்பா 
போல் நிதானம், இரக்க குணம், தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவி 
செய்வது, நம் உலக மொழியில் சொல்ல வேண்டும் என்றால் 
“பிழைக்கத்தெரியாதவர்கள்”. 

கவி பிரியா வீட்டின் ரெண்டாவது பெண் பிள்ளை..அம்மாவின் செல்லம்…. அம்மா 
போல் தன்னால் பேசி , பேசி அடுத்தவர்களிடம் காரியம் 
சாதிப்பவள்.  உலக மொழியில் சொல்ல வேண்டும் என்றால் 
“பிழைக்கத்தெரிந்தவர்கள்”. 

தேன்மலர் கல்லூரி படித்து கொண்டிருந்தாள். அப்போது இருந்த மலர்க்கும், இப்போது 
இருக்கும் மலருக்கும் ஆறென்ன, நூறு வித்தியாசங்கள் கண்டு பிடிக்கலாம். 
கோதுமை நிறத்தழகி, குண்டு கன்னங்கள், அடர்ந்த புருவம், பெரிய விழிகள், கூர் 
நாசி, பிங்க் நிற சிறிய உதடுகள். இடையை தாண்டி வளர்ந்த நீண்ட கூந்தல். பேரழகி 
என்று சொல்ல முடியாவிட்டாலும், எளிமையான, திருத்தமான அழகி. பெயருக்கேற்ற 
மென்மையானவள். அப்பாவின் உழைப்பின் அருமை அறிந்து எப்போதும் படிப்பில் 
முதன்மை அவள் தான். பேச்சு , எழுத்து , ஓவியம் , நடனம் அனைத்திலும் சிறந்தவள், 
அவளை நம்பி ஒரு வேலையை ஒப்படைத்தால் அது மிக நேர்த்தியாக இருக்கும். 
அதனாலேயே கல்லுரியில் ஆசிரியர்களின் செல்ல பிள்ளை அவள். பள்ளி , 
கல்லூரியில் திட்டு வாங்கியதாய் சரித்திரம் இல்லை. திட்டு வாங்கும் படி நடந்து 
கொண்டதும் இல்லை. பாராட்டு வாங்கியே சலித்து போகும் அவளுக்கு. அதனாலேயே 
வெற்றிகளை அவள் தலைக்கு ஏற்றி கொள்வதில்லை. நிதானமாக தான் எதையும் 
கையாளுவாள். சந்திரன், கல்லூரி பேருந்துக்கு பணம் கட்ட முன் வந்த போதும் 
வேண்டாம் வீண் செலவு என்று கூறி பஸ் பாஸ் எடுத்து வைத்திருந்தாள், தினமும் 
கல்லூரிக்கு அரசு பேருந்தில் தான் சென்று வருவாள். 

வீட்டிலும் தனது வேலைகளில் மிக சரியாக இருப்பாள். விவரம் தெரிந்த நாளிலிருந்து 
தனது வேலைகளை தானே செய்து கொள்வாள். வாசுகிக்கும் உதவியாக இருப்பாள். 

அம்மா!… என்னோட புது சுடிதார்-அ கவி போட்டுகிட்டா மா.. 

அம்மா..எனக்கு..காலேஜ் ல ஒரு பங்க்ஷன் இருக்கு மா… இன்னைக்கு ஒரு நாள் 
போட்டுட்டு தரேன்னு சொல்லுங்க… 

அம்மா…. போனவாரம்… அவளோட புது வளையலை நா ஒரு தடவ போட்டுட்டு தர 
கேட்டேனே குடுத்தாலாம…! இப்போ மட்டும் நா எப்படி குடுப்பேன். 

அம்மா ப்ளீஸ் மா…. குடுக்க சொல்லுங்க … என்று கண் கலங்க, 

அடியே…! மலரு, நீ தான் கொஞ்சம் விட்டு குடேன் டி.. பெரியவ நீ கொஞ்சம் அனுசரிச்சு 
போனா குறைஞ்சா போயிருவ… 

இது எப்போதும் வீட்டில் நடக்கும் நிகழ்வு தான். என்ன விவாதங்கள் நடந்தாலும் 
கடைசியில் கவியின் கண்ணீர் தான் ஜெயிக்கும். தனக்கு வேண்டியதை மலரிடம் 
இருந்து உரிமையாய் எடுத்துக்கொள்வாள் கவி. ஆனால் கொடுக்கும் மனம் வராது. 
அதை பெரிய விஷயமாக மலர் எடுத்து கொள்ள மாட்டாள். 

வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் இல்லை எனினும் சீரான, அமைதியான 
நாட்களாக நகர்ந்து கொண்டிருந்தது. 

வழக்கமாக கல்லூரி விட்டு வந்து, இன்றிலிருந்து தன் வாழ்க்கையில் படாத கஷ்டம் 
பட போகிறோம்… என்று தெரியாமல்..! தனக்கு புடித்த பாடல் ஒன்றை போட்டு, பரதம் 
பயின்று கொண்டிருந்தாள் மலர். 

போன் ஒலித்தது…. ட்ரிங்…ட்ரிங்… 

_—-_——–_—————- 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. நன்றி!

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top