அசுரன் 55
ஆதியின் அலுவலகத்தில் மலருக்கான பயிற்சி காலம் தொடங்கியது…
சக ஊழியர்களை அறிமுகப்படுத்தி வைத்தாள் நந்தினி.
நியூ ஜாயினி இன்னும் போஸ்ட் அலக்கேட் பண்ணல…. ஆஃப்டர் த்ரீ மந்த்ஸ் ட்ரைனிங், அவங்களுக்கு ரோல் அலகேட் பண்ணுவாங்க… சோ இப்போதைக்கு ஜஸ்ட் மலர்…
ஆஷா, சந்திப், விஷால், ரூபா… என்று ஒவ்வொருத்தரையும் கையை நீட்டி தனித்தனியாக அறிமுகப்படுத்த… அனைவருக்கும் “ஹாய் மலர்” என்று கை குலுக்கினார்கள்…
புதுசா வந்திருக்கீங்க உங்கள பத்தி சொல்லுங்க தெரிஞ்சுக்கிறோம் என்று சந்திப் கேட்டான்….
தன்னையும் தன் படிப்பினையும் அறிமுகம் செய்து கொண்டாள் மலர்…
நீங்க சொல்றத பார்த்தா நீங்க பெரிய படிப்ஸ் போலயே… என்று சந்திப் கேட்க…
கிட்டத்தட்ட அப்படித்தான்…
ஐயையோ, அப்ப ரொம்ப அமைதியா, இருப்பீங்களே…
வேலை வேற சின்சியரா பாப்பிங்களே…
மலர் சிரித்துக் கொண்டே….
அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல நிறைய பேசுவேன், சேட்டையும் செய்வேன்… ஆனா மாட்டிக்க மாட்டேன்… ஏன்னா என்னோட ஃபேஸ் அப்படி.. என்று கூறிவிட்டு கண்ணை சிமிட்டினால் மலர்..
அய்யய்யோ அப்ப நீங்க பண்ற சேட்டைக்கு நாங்க பலியாகனுமே…
கூட்டத்துக்கு அப்படி ஒரு பலியாடு வேணு ராசா…. அது இங்க நீ தான்…. என்று கூறி விஷால் சிரித்தான்..
சில தினங்களிலேயே நால்வருடனும் நெருங்கி பழகி விட்டாள் மலர்…
தினமும் காலையில், முதலில் அவள் நுழைவது ஆதியின் அறைக்குள் தான்…
கண் சிமிட்டிக்கொண்டே ஒரு பக்க தலையை சாய்த்து குட் மார்னிங் சார்… என்பாள் புன்னகை முகமாய்…
காலையில் அறைக்குள் நுழையும் போதும் அவனது பெயர் பலகையை அவளது உதடுகள் சத்தம் இல்லாமல் வாசிக்கும்… ஆர். தேவாதித்யன்…என்று இது அவள் வழக்கம்…
அரை நாள் தான் மலருக்கு வேலைக்கான ட்ரைனிங்… மதிய வேலையில் கேண்டினில் நண்பர்களுடன் உணவு அருந்திய பின்.. முழுக்க முழுக்க படிப்பு மட்டுமே.. அதுவும் ஆதியின் அறையில் அவன் இருக்கைக்கு எதிரே சோபாவில் அமர்ந்து பாடங்களை படிக்க வேண்டும்…
சார் நான் வெளியில கேபின்ல உக்காந்து படிக்க வா.. என்று ஒரு நாள் மலர் கேட்க…
அவளை முறைத்து பார்த்துவிட்டு, எதுக்கு…. அங்க உங்க கேங் கூட சேர்ந்து நீ அரட்டை அடிக்கிற சவுண்ட் இங்க வரைக்கும் கேக்குது ஒழுங்காக உட்கார்ந்து படி… என்று கூறிவிட்டு அவள் படிப்பதை கண்காணிக்கவும் செய்வான்… தெரியாத பாடங்களை விவரிக்கவும் செய்வான்…
சார்…. நீங்க ரொம்ப சூப்பரா சொல்லி தரீங்க… பேசாம நீங்க காலேஜுக்கு பாடம் சொல்லி தர போகலாம்…. என்ன பேச ஆரம்பித்து அவனைப் பற்றி பல விவரங்கள் தெரிந்து கொள்வாள் எந்த காலேஜ் படிச்சீங்க? என்ன படிச்சீங்க? எப்படி படிச்சீங்க? என்று அவர்கள் பேச்சு நீண்டு கொண்டே போகும்…. ஓரிடத்தில் ஆதியாக பேச்சை நிப்பாட்டி போதும் மலர் பேசுனது, படிங்க.. என்று கூறிவிட்டு நகர்ந்து விடுவான்…
சில நேரம் இந்த வார்த்தைகள் கடுமையாய் தெரியும் அவளுக்கு… படிப்பு விஷயத்துல சார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் போல… என மனதிற்குள் நினைத்துக் கொள்வாள்…
பேச்சின் நடுவே அருணின் பெயர் அடிபடாமல் பார்த்துக் கொள்வான்… அவளுக்கு எந்த விதத்திலும் சங்கடத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் அவன் உறுதியாக இருப்பான்.
சில நேரங்களில் புத்தகங்களை படித்த படி அப்படியே தன்னை அறியாமல் சோபாவில் உறங்கியும் போவாள் மலர். அவனின் அறைக்குள் மற்றவர் வருவதை தடுப்பதற்காகவே
அவளுக்கு அரை மணி நேரம் தனிமை தந்து, அவளின் மேல் எதையாவது எடுத்து போர்த்தி விட்டு, அறையை விட்டு வெளியேறி பேக்டரி விசிட் செய்வான்…
அவள் தூங்கி எழுந்ததும் அவளுக்கான காபி அறையை தேடி வரும்…
இதோ இன்று அவள் தூங்கி எழும்போதே அவனுடைய வாசனை தான் அவளது நாசியை நிரப்பி இருந்தது. அவனுடைய கோட் அவள் மேனியில் போர்த்தி இருக்க… அவன் வாசனையே அவள் உடலை சிலிர்க்க வைத்தது…. குளிரும்னு போர்த்தி விட்டு இருக்காரு போல… என நினைத்துக் கொண்டே எழுந்தவள்… “உராங்கொட்டானா இருந்தா கூட கொஞ்சம் நல்லவர் தான்” என தலையாட்டி தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்…
பொதுவாகவே அவளுக்கு ஒரு நாளைக்கு இருமுறையாவது ஏதாவது ஜூஸ் அவளை தேடி வந்து விடும்…
ஆனால் அவளுக்கு கிடைக்கும் இந்த அதிகப்படியான கவனிப்பு எதற்கு என்று மனதிற்குள் எப்போதும் ஒரு குழப்பம் உண்டு மலருக்கு….
பொதுவாகவே பெண்களுக்கு ஆண்களின் பார்வையை வைத்தே அவர்களின் எண்ணத்தை உணரும் திறன் உண்டு…
அப்படி பார்க்கையில் ஆதியின் பார்வையில் எந்த குற்றமும் இல்லை சொல்லப் போனால் அவன் அதிகப்படியாக மலரை பார்க்கவே மாட்டான்… குரலில் வழிச்சல் இருக்காது… கேட்ட கேள்விக்கு மட்டுமே பதில் சொல்வான் அதுவும் ரத்தின சுருக்கமாக… அவள் சொல்வது போல் கர்… கர்.. என்று கர்ஜிக்கும் குரலில்… ஒருவேளை விக்ரம் அண்ணா!… என்ன நல்ல பாத்துக்க சொல்லி இருப்பாரோ… வேறென்ன காரணமா இருக்கும் என்று அவ்வப்போது யோசிப்பாள் ஒன்றும் பிடிபடாது. அதையும் தாண்டி
அவள் மனதில் ஆதியின் கண்ணியம் ஆழமாய் பதிந்தது.
அவள் நினைத்தது போல் ஆதி கண்ணியவான் தான்… ஆனால் அது மற்றவர்களுக்கு….
ஆனால் இந்த மலர்கள்வனின் சேட்டைகளை பற்றி அவள் அறியாள்…
காலையில் அவள் வரும் முன்னே கிளம்பி அலுவலகம் வந்து அவள் சொல்லும், கண் சிமிட்டலுடன் கூடிய குட் மார்னிங் காக காத்திருப்பான்…
ஒவ்வொரு முறையும் அவளின் உதடுகள் அவனின் பெயரை வாசிக்கும் பொழுது… ஆதியின் மனதிற்குள் புத்துணர்ச்சி பொங்கியெழும்… அதை கொஞ்சம் சத்தமா தான் வாசியேண்டி… என்ன சொல்ல தோன்றும் இதழை அடக்கிக் கொள்வான்.
அவள் பாக்காத நேரம் வரை கண்கள் அவளைத்தான் நோட்டமிட்டு கொண்டிருக்கும்… அந்த முகத்தை எவ்வளவு நேரம் தான் பார்ப்பானோ அப்படி என்னத்தை தான் ரசித்து பார்ப்பானோ அது அவனுக்கே வெளிச்சம்…
காலையில் ஒரு பகுதி நேரம் அவளை கேபினில் உட்கார வைத்து ட்ரெயினிங் கொடுப்பது அவள் வேலை செய்வதற்காக அல்ல அவன் வேலை செய்வதற்காக….
அரை நாளுக்கு மேல் தாங்காது… அறைக்குள் கூட்டு வந்து எதிரே அமர வைத்து தாய் பறவை தனது சிறகுக்குள் பூட்டி வைத்துக் கொள்வது போல் தன் அறைக்குள்ளையே பூட்டி வைத்துக் கொள்வான் கள்வன்….
பல நேரங்களில் அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே கண்கள் அவள் தேனுறும் உதடுகளை களவாட.. ஆண்மை உணர்ச்சிகள் பெருக்கெடுக்கும் தன்னை கட்டுப்படுத்தவே “போதும் மலர் படிங்க” என்று சிங்கக்குரலில் கர்ஜித்து விட்டு நகன்று செல்வான்…. வெளியே சென்று நெஞ்சில் கை வைத்து இழுத்து மூச்சு விட்டு “கொல்றா ராட்சசி” என்று முனங்கி விட்டே செல்வான்…
படித்துக் கொண்டே அவள் உறங்கிவிட…. காற்றின் மகிமையில் அவள் ஆடைகள் தாறுமாறாய் விலக பெண்ணின் செழுமைகள் கண்களுக்கு விருந்தாக… இங்கு ஒருவனுக்கோ இதயத்துடிப்பு தாறுமாறாக ஏகிற… அறை சாத்திவிட்டு ஓடிவிடுவான் கம்பெனி விசிட்டிருக்கு…
இதோ இன்று.. சேலை விலகி அல்வா துண்டு இடுப்புடன் அவள் நாபிக்குழி காட்சி அளிக்க… அதைக் கண்டு அரும்பாடு பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு…. கைகள் நடுங்க தன் கோட்டை கழட்டி அவள் மேல் போர்த்தி விட்டு… குளிரூட்டப்பட்ட அறையிலும் வேர்த்து விறுவிறுத்து எடுத்தான் ஓட்டம்…
“இன்னும் என்ன எல்லாம் என்ன பண்ண காத்திருக்காளோ ஆண்டவா … இவகிட்ட இருந்து என் கற்ப காப்பாத்து ” என மனதிற்குள் வேண்டிக் கொண்டே…
என்ன? சார்… இப்படி டென்ஷனா போறாரு…. நம்ம சாரையே டென்ஷன் பண்ண அந்த அப்பாடக்கர் யாரு? என்று ஒன்றும் புரியாமல் ஆதியை பின் தொடர்வான் அவனின் காரியதரிசி ரவி.
ஆனாலும் அவ்வப்போது….. தூங்கும் அவளின் பாதுகாப்பை சிசிடிவி யில் உறுதி செய்வான்… அதன் உபயம் தான் அவள் கண் திறந்ததும் வரும் காபி….
அன்று ஒரு நாள் டாக்டர் சைலஜா விற்கு போன் செய்து… குண்டு கன்னங்கள் மெலிந்து விட்டன அதை பழைய நிலைமைக்கு கொண்டு வருவது எப்படி?…. என்று ஒரு மணி நேரமாக கலந்து ஆலோசித்து… மருத்துவர்… ப்ளீஸ் ஆதி, என்ன விட்டுடு… என்று அலறி அடித்து போனை கட் செய்யும் நிலைக்கு வந்தார்.
மருத்துவரின் ஆலோசனையின் படி தினமும் இரண்டு ஜூஸ் அவள் டேபிளை வந்து அடையும்… ஆனாலும் குண்டு கன்னங்கள் இன்னும் வரவில்லையே என்ற கவலை வேறு அவனுக்கு…
மற்றொரு நாள் மருத்துவருக்கு போன் செய்து நகம் நீளமா வளர மாட்டேங்குதே.. என்ன காரணமா இருக்கும்.. என்ன ட்ரீட்மென்ட் எடுக்கணும்… என்று வினவ…
டேய் யாருடா நீ… என கேட்க தோன்றும் மருத்துவருக்கு…
சார்…. இது கொஞ்சம் புரியல கொஞ்சம் சொல்லி கொடுங்களேன்…. என்று அருகில் வந்து நின்று புத்தகத்தை விரித்து காண்பித்து அதன் மேல் அவள் விரலை வைத்து அந்த வரிகள் ஒவ்வொன்றாக வாசிக்க… அவன் எங்கே வரிகளை கவனித்தான்… அவன் கண்கள் அந்த விரலையே தொடர்ந்து கொண்டே இருந்தது… தங்க நிறத்தில் வெண்டை பிஞ்சு போன்ற மென்மையான நீளமான விரல்கள்.. இளம் ரோஸ் நிற நகங்கள் வெட்டப்பட்டு நேர்த்தியாக இருந்தது. ஒவ்வொரு விரலாய் எடுத்து முத்தமிட தோன்றிய மனதை கட்டுப்படுத்தி வைத்தான். விரலைப் பார்த்து மேனி சூடாகுமா? ஆனால் ஆகிறதே… அவள் என்ன சந்தேகம் கேட்டாலோ தெரியவில்லை… ஆனால் அவன் ஒரு சந்தேகம் கேட்டான்…
ஏன் இப்ப எல்லாம் நகம் வளர்கிறது இல்ல?
ஙே.. என விழித்தவள்…
சார்… அது…. வந்து நீளமா நகம் வளர்க்கும் போது அது யாரையாவது காயப்படுத்திவிடுகிறது என்று கூறியபடியே ஏதோ ஞாபகத்தில் அவளது புறங்கையை அடிபட்டது போல் தேய்த்தால்..
அதைப் பார்த்தவன் தன் புறங்கையை திருப்பி ஒரு முறை பார்த்துக் கொண்டான்….
பாவம் அந்த பேதை அவனுடைய கேள்வியை சரியாக கவனிக்கவில்லை ஒருவேளை கவனித்திருந்தால் அவளுக்கு சில விஷயங்கள் புரிந்திருக்கும்…
சரி நீங்க போய் படிங்க…. நான் அப்புறம் வந்து உங்களோட டவுட் கிளியர் பண்றேன் என்று கூறி அவளை அனுப்பி விட்டான்…
அவள் யதார்த்தமாக அவன் அருகே வந்து நின்று விடுகிறாள்… குனிந்து அவள் மெல்ல பேச பேச… அவன் அல்லவா மூர்ச்சை ஆகி விடுகிறான்.. கண்ணை மூடி அவள் வாசனையை ஆள இழுத்து, “ஆள மயக்குறாளே ” என்ற அடைமொழியுடன் அதற்குள் விரும்பியே மூழ்கி போகிறான்…
சார்… சார்… என்று அழைத்தவுடன்…
பின், கண் திறந்து, தன் தொண்டையைக் கணைத்து நிகழ் உலகத்திற்கு வருவதற்குள் அரும்பாடு பட்டுப் போகிறான் இந்த ஆறடி ஆடவன்.
மலர் கொஞ்சம் கொஞ்சமாக தனது பழைய வாழ்க்கையில் தொலைத்த புத்துணர்வை மீட்டுக் கொண்டு வந்தாள். துருதுறுப்பு, குறும்பு, கண்ணில் ஒரு ஒளி முகத்தில் ஒரு பிரகாசம்… இதழில் எப்பொழுதும் ஒரு மெல்லிய சிரிப்பு… இப்பொழுது அனைவருக்கும் இப்படித்தான் மலர் காட்சியளிக்கிறாள்.. தலையை குனிந்த படி சொல்வதற்கெல்லாம் தலையாட்டும், சோகமலர் தொலைந்து போயிருந்தாள்…
அவளை இந்த நிலைக்கு மாற்றியவனோ.. இந்த உலகத்திலேயே இல்லை… மலரின் அருகாமையில் வானத்திலேயே மிதந்து கொண்டு இருந்தான். கங்காரு போல வயிற்றில் ஒரு பை அமைத்து அவளை சுமக்கவில்லை அது ஒன்று மட்டும் தான் குறை.. தன்னவளை மீட்டெடுத்து விட்டோம் என்ற சந்தோஷத்தில் அவன் திளைத்துக் கொண்டிருந்தான்..
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️