அசுரன் 56
இன்றும் வழக்கம் போல் காலையில் ஆதியின் அறைக்குள் நுழைந்தாள் மலர்..
ஆதியும் ரவியும் இன்னும் வரவில்லை என்று தெரியவே…. தனது நண்பர்கள் குழுவில் போய் இணைந்து கொண்டாள்….
சிறிது நேரத்தில் அலுவலகத்தில் சிறிய சலசலப்பு… ஆஷாவும், ரூபாவும் பரபரப்பாக தங்கள் ஒப்பனைகளை சரிப்படுத்திக் கொண்டனர்… ஆண்கள் அனைவரும் அமைதியாக நிமிர்ந்து அவரவர்கள் வேலையை செய்ய தொடங்கினார்கள்… சிறிது நேரத்தில் அலுவலகமே அமைதியாக அவர்களது வேலைகளை நேர்த்தியாக செய்து கொண்டு இருந்தார்கள்…
என்ன ஆச்சு திடீர்னு எல்லாருக்கும் என்று அவள் நினைத்துக் கொண்டே….
என்ன ரூபா… நீங்க ரெண்டு பேரும் எங்க ரெடியா இருக்கீங்க என்று அவள் குழம்பி போய் கேட்க…
எங்களோட கிரஷ்ஷ பாக்கடி…
க்ரஷ்ஷா யாரு… அதுவும் ரெண்டு பேருக்கும் ஒரே க்ரஷ்ஷா…. என்று விழி விரித்தால் மலர்.
ஆமா… வருவார் பாரு… மார்னிங், ஈவ்னிங் மட்டும் தான் தரிசனம் கிடைக்கும் ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாத…. என்று கூறிவிட்டு ஆஷாவும், ரூபாவும் சைட் அடிப்பதற்கு மும்பரமாக களத்தில் இறங்கினார்கள்.
யார் என்பது போல் ஆவலாக மலர் வாயிலை பார்க்க…
உடலை இறுக்கிப் பிடித்த வெண்மை நிற சட்டையின் முன் இரண்டு பட்டன்கள் திறந்திருக்க… அந்த இடைவெளியில் அவனது இரும்பு புஜங்களின் மேல் பிளாட்டினம் செயின் துள்ள… அலை அலையாய் கேசத்துடன் அதை ஒற்றைக் கையால் கோதிக்கொண்டே … கண்ணில் கூலர் உடன்… டக் டக்க்கின்ற சத்தம் அலுவலகத்தை நிரப்ப… அனைவரின் வணக்கங்களைப் பெற்ற படி அலுவலகத்திற்குள் வந்து கொண்டிருந்தான் ஆதி…
என்னடி ஆஷா வர வர அழகாயிக்கிட்டே போறாரு…. இப்படியே போனால் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காது போலையே… என்று ரூபா முணுமுணுக்க…
வாய்ப்பு கிடைக்காட்டி கூட பரவால்ல டி… ஒரு ஸ்மைல், ஒரு லுக் எதுக்குமே வழி இல்லையே… என்றாள் ஆஷா பெருமூச்சுடன்…
ஆமாண்டி அந்த திறந்து இருக்கிற ரெண்டு பட்டனுக்கே என்னோட உயிர் போயிரும் போல செம ஹாட்.. எவளுக்கு கொடுத்து வச்சிருக்கோ… என்று ரூபா அப்பட்டமாய் வழிய…
ஆமாண்டி…. ஃபர்ஸ்ட் சிக்ஸ் பேக் மாதிரி தெரிஞ்சது… ஆனா இப்போ 8 பேக் மாதிரி தெரியுது… டுடே ஒயிட் ஷர்ட்ல…. ஹி ஸ்டோல் மை ஹார்ட்…. அவளது இதயத்தை தடவி காண்பிக்க…
ஏய்… ச்சீ… ஏண்டி இப்படி வழிகிறீங்க… ஆதிசார் தான் உங்க க்ர்ஷா… நான் கூட வேற யாரோ நினைச்சேன்… என்று மலர் அசால்ட்டாய் கூற…
ஏண்டி சொல்ல மாட்ட… ட்ரைனிங் என்ற பேருல அவர் கூடயே பாதி நாள் இருக்கறதுனால உனக்கு அவரோட அருமை தெரியல…
அவர் ஒரு கட்ட பிரம்மச்சாரி… என்று ஆஷா கூற…
ஆமா கட்ட தான்… செம கட்ட… என்றாள் ரூபா ஒரு மார்க்கமாய்…
ஏய்.. ச்சீ.. நான் அத சொல்லலடி… இதுவரைக்கும் அவரு ஒரு பொண்ண கூட திரும்பி பார்த்ததில்லை… சொல்லப்போனா அவருக்கு பொண்ணுங்களே பிடிக்காதாம்.. ஆபீஸ்ல கூட ரவி சார் தான் அவரோட ரூம்குள்ள அலோவ்டு… நாங்க எல்லாரும் ரவி சாருக்கு தான் ரிப்போர்ட் பண்ணுவோம்…
ஏன் அப்படி…
இடையில ஒரு பொண்ணோட என்கேஜ்மென்ட் வரைக்கும் போயிட்டு அதுக்கப்புறம் அந்த பொண்ணு புடிக்கலைன்னு சொல்லி என்கேஜ்மென்ட் ஸ்டாப் பண்ணி இப்ப வரைக்கும் சிங்கிளா தான் இருக்காரு… என்றாள் ஆஷா.
பொண்ணுங்கள பிடிக்காதா? இல்ல பொண்ணுங்கள பார்த்தா…. முடியாதா? அப்படின்னு தெரியல… என்று கிசுகிசுவென சொல்லி கிளுக்கி சிரித்தாள் ரூபா…
ஏய்… என்னடி… இப்படி எல்லாம் சொல்ற என்று மலர் அதிர்ச்சியாய் கேட்க…
தெரியலடி ஆபீஸ்ல தான் பேசிக்கிட்டாங்க… அவருக்கும் பொண்ணுங்களுக்கும் ஒத்து வராதுன்னு… யோசிச்சு பாத்தீங்களா இவ்வளவு அழகா இருக்கிறவர் ஏன் இவ்வளவு நாளும் ஒரு கேர்ள் ஃபிரண்ட் கூட இல்லாம இருக்காருன்னு…. (எல்லாம் அந்த சைத்ரா பைத்தியம் ஆளை வைத்து கிளப்பிவிட்டது தான்)
இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது … ரவி வந்து… காலையில யாரும் வேலை செய்ற எண்ணத்துல இல்லையா? எவ்வளவு நேரம் இங்கேயே நின்னு பேசிட்டு இருக்க போறீங்க?… போய் வேலையை பாருங்க… என்று கூறிவிட்டு மலரை பார்த்து… சார் ஸ் காலிங் யூ… என்று கூறிவிட்டு செல்ல…
ஆதியின் அறை நோக்கி சென்றாள் மலர்…
குட் மார்னிங் சார்… என்றாள் எப்போதும் போல்…
என்ன…. டுடே என்னோட குட்மார்னிங்… இவ்ளோ லேட்டா வந்திருக்கு…
இது ஒன்னும் இல்ல சார் என்னோட ஒர்க்குல ஒரு சின்ன டவுட் கேட்டேன் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க என்று அவள் அப்பட்டமாய் சமாளிக்க….
ஆஹான்…. என்பது போல் அவளை உருவத்தை உயர்த்தி பார்த்தான் ஆதி… அவள் அரட்டை அடித்துக் கொண்டிருந்ததை அவனும் கண்காணித்து கொண்டு தானே இருந்தான்.
சரி… வாங்க… இதே ஆர்வத்தோட நம்ம போயி சைட் விசிட் முடிச்சிட்டு வந்துடலாம்…. என்று கூறியபடி அவளை அழைத்துக் கொண்டு சென்றான் ஆதி…
எப்பொழுதும் போல் அவள் முன்னே நடக்க விட்டு … அவள் நடைக்கு ஏற்ப அசைந்தாடும் அவள் பின்னலிட்ட கூந்தலை பார்த்துக் கொண்டே இல்லை இல்லை ரசித்துக் கொண்டே பின்னால் நடந்தான் ஆதி… சிறிது நேரத்தில் அவனது கள்ள பார்வை அவளை குறுகுறுக்க செய்ய… அவள் நடை நின்று திரும்பி பார்க்க… போனை பார்த்தபடி வேகமாய் வந்த கள்வனின் மேல் மோதி நின்றாள்…
சாரி சார்…. தெரியாம …
தன் ரசனை தடைபட்ட கடுப்பில்…
“ஏதாவது கனவு கண்டுக்கிட்டே நடப்பீங்களா மலர்… தள்ளுங்க…” என்று அவளிடம் உறுமி விட்டு சென்றான்…
இப்ப என்ன தெரியாம தானே இடிச்சேன்… அதுக்கு எதுக்கு இப்படி கத்திட்டு போறாரு… சரியான உராங்கொட்டான்… என்று மனதிற்குள் திட்டிக் கொண்டாள்.
டிரைவர் காரை இயக்க… முன்னால் ஏற சென்ற மலரை “உன் கிட்ட கொஞ்சம் பேசணும் பின்னாடி ஏறு ” என்று கூறி இருவரும் பின்னால் ஏறி கொண்டார்கள்…
என்னோட “பர்சனல் செகரட்டரி ” இனிமேல் நீதான்.. நாளைக்கு உன்னோட அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ரெடியா இருக்கும்…
ஆனா சார்… அது நான் எப்படி… நான் இப்பதான் ஜாயின் பண்ணி இருக்கேன்… பிரஷர்… என்று அவள் ஏதேதோ கூற வர…
உன்னால முடியும் மலரும்… டூ இட்…. என்று போனை பார்த்துக் கொண்டே கூறி முடித்தான்.
இவர்களின் கார் இருசக்கர வாகனம் வாங்கும் இடத்தில் வந்து நின்றது.
உள்ள இறங்கி சென்றவன் ஒரு நேவி ப்ளூ கலர் இரு சக்கர வாகனத்தை தேர்வு செய்து, இந்த கலர் உனக்கு ஓகே வா என்று மலரை பார்த்து கேட்டான்…
சூப்பர் சார்… நேவி ப்ளூ தான் என்னோட ஃபேவரைட் கலர்… என்று கூற அப்போ ஓகே…. இதையே பில் பண்ணிருங்க என்று கூறினான் ஆதி.
அவள் வேண்டாம் என்பது போல் தடுக்க பார்க்க… ஆபீஸ்ல டூ வீலர் லோன் போட்டுக்கோங்க உங்க மந்த் சேலரியிலிருந்து நாங்க இத பிடிச்சு போம்.. என்று கூறியவுடன் தான் சம்மதித்தாள்…
மலரின் பெயரிலேயே பில் போடப்பட்டு அவளின் கையால் சாவி வாங்கி…
வண்டியை அவன் ஸ்டார்ட் செய்து தயாராக இருக்க… வண்டியில் ஏற தயங்கி படி நின்றிருந்தாள் மலர்…
திரும்பி ஒரு முறை தான் முறைத்தான்… மறுப்பேச்சு இல்லாமல் ஏறிவிட்டாள்…
கண்ணுலையே மிரட்டறாரு… உராங்குட்டான்…
அருகில் இருக்கும் கிரவுண்டிற்கு வந்தவர்கள்…
வண்டியில் இருந்தபடியே… வண்டியின் இயக்கங்களை பற்றி சொல்லிக் கொடுத்தவன்…
பின் வண்டியை விட்டு இறங்கி… சரி இந்தா இப்ப நீ ஓட்டு… என்று கூற…
ஐயோ நானா!… என்று அதிர்ந்தாள் மலர்…
உனக்குத்தான் இந்த வண்டி… இனிமேல் இந்த வண்டியில தான் நீ ஆபீஸ்க்கு வர்ற போற… என்று அவன் கட்டளை இட…
ஐயோ சார்!…. எனக்கு இதெல்லாம் ஓட்ட வராது என்று அவள் கூற..
இன்னைக்கு கத்துக்கோ…
அவள் தயக்கத்துடன், ஹான்பாரை பிடித்து இரு பக்கமும் கால் இட்டு பைக்கில் ஏறி அமர்ந்தபடி… சார் வேணாம் சார்… பயமா இருக்கு சார்… ப்ளீஸ் சார்… என்று அவள் கெஞ்ச…
டு வாட் ஐ சே… என்று அவன் மிரட்ட…
ம்ஹும்… அவள் நகரவில்லை… சார் உங்களுக்கு வேணாம்… எனக்கு வேணாம்… எனக்கு பின்னாடி நீங்க உட்கார்ந்து சொல்லி தரீங்களா… என்று அவள் பாவமாய் முகத்தை வைத்து கேட்க….
“கண்ணா லட்டு தின்ன ஆசையா?” என்று மெல்லிய குரல் ஒன்று… ஆதியின் மனதில் கேட்டது..
அதை மறைத்துக் கொண்டு ஒரு சலிப்புடன் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஏறியவன்… அவளை இடித்து விடாத படி… சீட்டின் நுனியில் சென்று அமர்ந்த படி தன் நீளமான கைகளை நீட்டி இப்படி பிரேக் பிடிங்க இப்படி பொறுமையா ரைஸ் பண்ணுங்க என்று அவளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு , நான் கால்ல பேலன்ஸ் பண்ணி இருக்கேன் “தைரியமா ஓட்டுங்க நான் இருக்கேன்” என்று சொல்லிவிட்டு…. தனது கைகளை எடுத்து பின்பக்கம் இருக்கும் சீட்டை பிடித்துக் கொண்டான்… அவளும் மெல்ல மெல்லமாய் நகர்த்தி பழகினாள்… அப்பொழுதுதான் கண்ணாடியில் ஆதியை பார்த்தாள்…. அவள் போடும் ஒவ்வொரு பிரேக்கிக்கும்… அவளை இடித்து விடாமல் இருக்க சிரமப்பட்டு… பின்வாக்கில் உடலை வளைத்தபடி அசௌகரியமாய் உட்கார்ந்திருந்தான்… அவன் செய்கைகளைப் பார்த்தவுடன் அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது… அவளுக்குள் இருந்த குறும்பு மலர் எட்டிப் பார்க்க….
ஓஹோ.. சார்.. கட்டபிரம்மசாரியா…. அதையும் இப்ப செக் பண்ணி பார்த்து விடுவோம்… என்று குறும்பாய்… வேண்டுமென்றே ரைஸ் செய்து ரைஸ் செய்து அவள் பிரேக் போட…. அவளை இடிக்காமல் இருக்க அவனும் போதுமான அளவு முயற்சி செய்தான்… அதை கண்ணாடியில் பார்த்த மலருக்கு ஒரே குதூகலம்…
ஆடவனின் நிலையோ “அந்தோ பரிதாபம்”… அவளை நெருங்கவும் முடியாமல் விலகவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தான்.
அவள் வாசனையே அவனை போதை ஏற்றும்.. இதோ வெயிலின் தாக்கத்தால் அவளின் பளிங்கு முதுகில், வியர்வை முத்து முத்தாக பூத்து பின் ஒன்று சேர்ந்து, தாமரை இலை நீர் போல் ஒட்டாமல் நழுவி நடுவில் இருக்கும் பள்ளத்தில் மொத்தமாக பயணிக்க… அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஆடவன் நெஞ்சில் நீர் வற்றிப் போனது… இதழினால் அந்த வியர்வையை உறிஞ்சி எடுக்க ஆசை தோன்றுகிறதே… “ஆதி வேணாண்டா அங்க பாக்காத”…. என்று மனதிற்கு கடிவாளம் போட்டாலும்… அவள் போடும் ஒவ்வொரு பிரேக்ம் அந்த கடிவாளத்தை தகர்த்து எறிகிறது… இல்ல இது சரிப்பட்டு வராது… என்று
“மலர் எதுக்காக இத்தனை தடவ பிரேக் போடுறீங்க… வண்டிய கொஞ்சம் கொஞ்சமா மூவ் பண்ணுங்க…” என்று அவன் எரிச்சலாய் குரல் கொடுக்க…
அந்தக் குரலில் அவளும் பயந்து அதிகமாய் ரைஸ் செய்து ஒரு சடன் பிரேக் போட… பின்னால் இருந்தவன் நிலை தடுமாறி அவளது மீது மோதி, இரு கைகளாலும் அவள் இடுப்பைச் “பசக்” என்று இறுக்கமாய் பிடித்து கொண்டான்… அதிலும் ஒரு கை சேலை விலகிய அவள் வெற்றிடையில் பதித்தது…..
வண்டி கட்டுப்பாட்டை இழந்ததால் இடித்து விட்டான் என்று அவள் நினைக்க.. அவன் கட்டுப்பாட்டை இழந்ததால் வந்து தொற்றிக் கொண்டான் என்பதே உண்மை….
உலுக்கி விழுந்தாள் மலர்… அவளுடைய குறும்பு அவளுக்கே வினையாய் முடிந்தது. இதயம் தாறுமாறாய் எகிறி துடித்தது… வயிற்றுக்குள் ஏதோ புதுவித உணர்வு… இதோ அவனின் இரும்பு தேகம் முழுதும் அவளது முதுகில் உரசி நின்றதை உணர முடிந்தது…. அவளது பதட்டம் அடங்கும் முன் அவள் இடுப்பில் இருந்து கையை எடுத்தவன் அவளது கையை உரசியபடியே அவளின் கை மேல் ஹேண்டில் பாரில் கை வைத்து, மெதுவாக ரைஸ் செய்து காண்பித்தான்… அவனின் உஷ்ண மூச்சு அடிக்கடி அவளது காது மடலை தீண்டி சென்று பெண்ணவளை கூச செய்தது… அவன் அணைப்பில் இருக்கும் பொழுது வெயில் கூட அவளை தீண்டவில்லை…. அவன் மார்பின் வெட்கையை அவளின் வெற்று முதுகு உணர்ந்தது… இங்கு ஒருவனுக்கோ சுட்டரிக்கும் கோடை வெயில் தெரியவில்லை போலும்… மலரின் வாசத்தில் கட்டுண்ட வண்டு போல் மைதானத்தை சுற்றிக்கொண்டு இருந்தான்…. அதே நிலையில் இருமுறை சுற்றி ஓட்டி காண்பித்தவன்… இப்போ நீ ஓட்டு இதே மாதிரி… என்று கூறி கையை எடுத்து விட்டு பின்னால் நகர்ந்து உட்கார்ந்தான் ஆழ்ந்த பெருமூச்சுடன்..
அவன் நகர்ந்த பின் தான் ஆசுவாசமாய் உணர்ந்தாள் மலர். அவனின் பிடியில் மெய்மறந்து அல்லவா இருந்தாள்.
பின்னே அவளும் மெல்ல இருசக்கர வாகனத்தை ஓட்ட பழகினாள்…
ஆனால் அந்த குறுகுறுப்பு, மெய் சிலிர்ப்பு இருவருக்குள்ளும் இன்னும் அடங்கவில்லை….
என்ன சந்தோஷமா இருக்கீங்களா?…. அப்படியெல்லாம் இருக்கக் கூடாதே என்று நினைத்தான் இறைவன். ( இறைவன் தான் சத்தியமா நான் இல்லை 😉)
அடுத்து வந்த நாட்களில் ஆதியின் அலுவலகத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் கன்னத்தில் கைவைத்தபடி அமர்ந்திருந்தான் அருண்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️