அசுரன் 58

 அசுரன் 58 

 

மலர் வீட்ல இருந்த வரைக்கும் வேலைக்காரி வேலைக்காரின்னு சொல்லி ஒதுக்கி வெச்சிட்டு… அந்த பொண்ணு கண்ணு முன்னாடியே கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி குழந்தையும் பெத்துக்கிட்டு…. இப்போ திரும்ப எல்லா கோட்டையும் அழிங்க…. முதல்ல இருந்து நான் ஆரம்பிக்கிறேன் அவ தான் என் பொண்டாட்டி அப்படின்னு வந்து நிக்கிற… இதையெல்லாம் கேக்குறதுக்கு எங்களை பார்த்த கேன**** மாதிரி இருக்காடா… உன் தகுதிக்கு ஒத்து வரலைன்னு சொல்லித்தாண்டா அவளை விலக்கி வச்ச… இப்ப எதுக்குடா அவளை தேடிட்டு இருக்க…

என்று விக்ரம் கோவத்தில் சராசரியாக விலாசி தள்ளினான் அருணை….

 

ஆதி அமைதியாக ரவிக்கு மெசேஜ் டைப் செய்து கொண்டிருக்க…

 

ஆதி வந்து விட்டான் என்று தெரிந்ததும், அவனைக் காணும் ஆர்வத்தில் வேகமாய் 

கதவை திறந்து கொண்டு குட் ஆப்டர்நூன் சார்… என்று புத்துணர்ச்சியுடன் புன்னகை முகமாய் உள்ளே நுழைந்தாள் மலர்.

ஆதி முகம் சிவந்து கோவத்தில், உடல் இறுகி போய் உட்கார்ந்து இருக்க… 

 

ஏதோ சரி இல்லை என்று புரிந்தவள் பக்கவாட்டில் திரும்ப அப்பொழுதுதான் அங்கு உட்கார்ந்து இருக்கும் விக்ரமையும் அருணையும் கண்டாள் …..

 

அவளின் குரலைக் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்தான் அருண்… அவனே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி தான் இது … அவளின் தோற்றத்தை பார்த்தவன், ஒருவேளை கனவாக இருக்குமோ என்று தன் கையை தானே கிள்ளிப் பார்த்தான். நிஜம்தான்… தேடியவுடன் கண்ணில் கிடைத்து விட்டாள்…

 

மலரின் முகத்தில் இருந்த புத்துணர்ச்சி முழுதும் அருகில் இருந்த அருணை கண்டதும் துடைத்து எடுத்தது போலானது… அதை ஆதியும் கவனித்தான்..

 

ஹாய்… விக்ரம் அண்ணா… எப்படி இருக்கீங்க… அகி மேம் எப்படி இருக்காங்க…. சக்கரவர்த்தி சார் எப்படி இருக்காங்க.. பட்டுக்குட்டி எப்படி இருக்கான்… வளர்ந்துட்டானா…? தவக்குரானா?  நைட் அழுகாமல் இருக்கானா?… என்ற கேள்விகளை அடுக்கிக்கொண்டே செல்ல.. 

 

மலரை இங்கு எதிர்பாராமல் பார்த்த விக்ரமிற்கு இன்ப அதிர்ச்சி தான்…

போதும்.. போதும்… மலர் நாங்க எல்லாம் நல்லா இருக்கோம்… ரித்துவும் நல்லா இருக்கான்… குட்டி இப்ப தவக்குறான்… ஒரு ஆளால அவனை வச்சு சமாளிக்க முடியாது…. ( இதைக் கேட்கும் பொழுது அவள் முகத்தில் ஒரு ஏக்கம் ) அவன பாத்துக்க வீட்ல மூணு பேரு இருக்காங்க..   நீ எப்படி இருக்க?… என்றான் புன்னகை முகமாய்…

 

 

ஓ நல்லா இருக்கேண்ணா… என்று கூறிக்கொண்டே அருணின் பக்கம் பார்வையைத் திருப்ப….

 

கலைந்த தலை…  கலை இழந்த முகம்… சோக வடிவாய் உட்கார்ந்து இருந்தவன்… அவள் பார்வை பட்டதும் புத்துணர்வாகி, எப்படி இருக்க? என்று கேட்டான் அருண்…

 

நல்லா இருக்கேன் சார்… நீங்க சார்? என்று கேட்டாள் மலர்.

 

நேத்து வரைக்கும் நல்லா இல்ல… இப்போ உன்ன பார்த்த பிறகு தான் நல்லா இருக்கேன்… 

 

அலுவலகத்தை கண்களால் சுட்டி காண்பித்து, இங்க என்ன பண்ற?…

 

நான் இங்கதான் சார் ஒர்க் பண்றேன்.. என்று மலர் கூறிய நிமிடம்.

 

தேங்க்ஸ்டா ஆதி… நீ எனக்காக என்ன வேணா பண்ணுவேன்னு தெரியும்..  என் மனசு உனக்கு மட்டும் தான் டா புரியும் அதனால தான் நான் சொல்லாமலே அவளுக்கு வேலை கொடுத்து இருக்க… அதான் இவ்வளவு நேரம் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கியா…. எல்லாம் எனக்காக தானடா…

தேங்க்ஸ் ஆதி லவ் யூ சோ மச் டா… என்று கூறி ஆதியை அணைத்து விடுவித்தான் அருண்..  

 

அருண் சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மலர் வேகமாய் ஆதியின் பக்கம் திரும்ப… ஒன்றும் சொல்லாமல் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி… அவன் பார்வையை பார்த்ததும் மூக்கு விடைத்து உதடு கடித்தாள் மலர்… கட்டுப்படுத்த முடியாத அழுகை மனதிற்குள் மட்டும்… 

இத்தனை நாள் அவள் மனதிற்குள் ஒட்டாமல் இருந்த கேள்வி எதுக்காக இதெல்லாம் பண்றாரு?… இன்று பதில் கிடைத்து விட்டது…

 

அருணுக்காக.. என்று.

 

ஒரு நிமிடம் கண்ணை மூடிக் நின்றவள்… ஆழ்ந்த மூச்சுக்கு பின் நிதானித்துக் கொண்டு… ஆதியை பார்த்து, சார்… கொஞ்சம் தலைவலியா இருக்கு ஒரு அரை நாள் லீவ் வேணும் அத கேக்குறதுக்கு தான் வந்தேன்… என்று அவள் கூற…

 

கண்கள் சிவந்து உதடு கடித்து கேட்பவளை பார்க்கையில் அவனுக்கே பாவமாய் போனது… காலையில் இந்த முகத்தில் இருந்த மகிழ்ச்சியை அவனும் பார்த்தானே… இப்பொழுது அதற்கு முற்றிலும் மாறாய் ஒரு முகம்… அவள் மனதில் என்ன நினைப்பாள் என்று அவனுக்கு தெரியும்.

 

டேக் இட்… என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே…

 

வேகமாய் அறையை விட்டு வெளியேறியவள்… தனது ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு, ஹாஸ்டலுக்கு செல்ல நினைக்க… ஆபீஸ் கேப் அவளை தொடர… டிரைவர் அண்ணா நீங்க வரவேணாம்… என்று கூறிவிட்டு… ஆதிக்கு ஒரு மெசேஜ் ஒன்றை அனுப்பினாள்… 

 

“டிரைவர் அண்ணா என்ன ஃபாலோ பண்ணி வர வேணாம் உங்க கண்காணிப்பவிட்டு எங்கேயும் ஓடி போக மாட்டேன்”

 

காலையில் அவள் மீது கொண்ட அக்கறையாக தெரிந்த விஷயம் இப்பொழுது, தவறாக தெரிந்தது.

 

மலர் கிளம்பியதும் பின்னாலேயே நான் ஒரு நிமிஷம் வந்துரண்டா… என்று கூறிவிட்டு அருண் வேகமாக காரை எடுத்துக்கொண்டு  அவளை பின்தொடர்ந்தான்…

 

மலர் ஸ்கூட்டியில் சென்று ஹாஸ்டலில் இறங்க… அவளை மறித்து அருணின் கார் நின்றது.

 

மலர்… இங்க தான் தங்கி இருக்கியா? என்று கேட்டுக் கொண்டே காரில் இருந்து இறங்கினான் அருண்.

 

உன்கிட்ட கொஞ்சம் பேசணுமே… 

 

சொல்லுங்க சார்…

 

இங்க வேணாம் பக்கத்துல எதாவது காபி ஷாப் போகலாம்…

 

நமக்குள்ள பேசறதுக்கு இனி என்ன இருக்கு… என்பது போல்  சலிப்பாய் பார்த்தாள் மலர்.

 

சரி கார்ல ஏறு பேசிக்கலாம்…

 

அருணின் பின்னால் நின்றிருந்த 

காரை எட்டிப் பார்த்தவள்… உங்க கார்ல ஏறுற அளவுக்கு எனக்கு தகுதி இல்ல சார்… நீங்க சொல்ல வேண்டியதை இங்கேயே சொல்லுங்க சார்… ரொம்ப நேரம் நின்னு பேசினா வார்டன் திட்டுவாங்க… என்றாள் கரார் பேர்வழியாய்…

 

எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்து முன்நெற்றியை கைகளால் தேய்த்தவன்…

சரி..  வா… நம்ம வீட்டுக்கு போகலாம்… நம்ம பையன் உன்ன நினைச்சு அழுதுகிட்டே இருக்கான்… 

 

நம்ம வீடு என்றதில் 50% கண் விரித்து அதிர்ந்தவள்..  நம்ம பையன் என்றதில் 100% கண் விரித்து  அதிர்ச்சியின் உச்சிக்கே சென்று விட்டாள்….

 

அருண் சொன்னதைக் கேட்டு அவள் முட்ட கண் விரிவதை… பார்த்த அருணுக்கு குறும்பு சிரிப்பு எட்டிப் பார்த்தது.

 

ரித்து… உங்க பையன் மட்டும் தான் சார்… தென் அது உங்க வீடு மட்டும் தான்… என்று அழுத்தமாய் கைகளை கட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் சாய்ந்த படி அருணை பார்த்து கொண்டே கூறினாள் மலர்….

 

நீ என் மேல பயங்கர கோவத்துல இருப்பேன்னு எனக்கு தெரியும்… எனக் கூறிவிட்டு பின் தான் அவளை முழுமையாக கவனித்தான்….. 

ஏகத்துக்கும் அழகு கூடியிருந்தது அவனது பார்வையில்… சேலையை விட சுடிதார்ல ரொம்ப அழகா இருக்க…

( இந்த வார்த்தைகளை எல்லாம் அவள் வேறு ஒருவனின் வாயிலிருந்து அவள் எதிர்பார்த்தாள், இப்பொழுது அதை அருண் சொன்னதைக் கேட்டவுடன்  உண்மையில் ஏன்டா இன்று சுடிதார் போட்டோம் என்று அவளுக்கு கடுப்பாய் இருந்தது )

சொல்லப்போனா இந்த கோவத்துல தான் இன்னும் நீ எனக்கு அழகா தெரியிற… என்று அருண் சொல்ல…

 

ஒரு வெறுமை புன்னகை சிந்தியவள்… அழகா?… நானா?…

இது எப்போது இருந்து… வரவர உங்களுக்கு ரசனையே இல்லாம போயிடுச்சு சார்… வேற ஆளே கிடைக்கலையா உங்களுக்கு.. உங்க வீட்டு வேலைக்காரியா இருந்தவள போய் ரசிக்க ஆரம்பிச்சுட்டீங்க…. 

 

கையை கட்டி அவளை தான் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான் அருண் “இவ்வளவு பேசுவாயா நீ” என்று…

 

அப்புறம் சார் வீட்டுல பொண்டாட்டியை வச்சுட்டு இப்படி ரோட்டில் ஒரு பொண்ணு கூட நின்னு நீங்க கடலை போடுறது அவ்ளோ நல்லா இல்ல?… என்றாள் கிண்டல் தோணியில்..  

 

அப்ப நான் என்ன சொன்னாலும் நீ வீட்டுக்கு வர மாட்ட அப்படித்தானே….

 

இப்ப நீ என்ன லூசா… என்று தோன்றியது மலருக்கு…

 

நீங்க எனக்கு யார் சார்?….. நம்ம ரெண்டு பேருக்குள்ள என்ன சம்பந்தம்… நான் எதுக்கு உங்க வீட்டுக்கு வரணும்?….

 

நான் திரும்ப உன் கழுத்துல தாலி கட்டுறேன்… நம்ம ரெண்டு பேரும் தனி வீட்ல சேர்ந்து வாழலாம்…

 

திடுக்கிட்டு முழித்தவள்…. ( மீண்டும் மீண்டும் மா… என்று சலிப்பாய் போனது அவளுக்கு ) என்ன சார்… சின்ன வீடா வச்சுக்கலாம் பாக்குறீங்களா?…. என்றாள் நக்கலாய்… உருவங்களை உயர்த்தி.

 

நீ என்ன வேணா பேர் வச்சுக்கோ… ஐ டோன்ட் கேர்..  பட், எனக்கு நீ வேணும்… என்றான் அழுத்தமாய்…

 

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததை, அந்தப் பக்கமாக காரில் கடந்து சென்ற ரதி பார்க்க நேர்ந்தது.

ஓஹோ…. என்ன சீட் பண்ணி இந்த மாதிரி ரகசிய சந்திப்பு வேற நடக்குதா…. என மனதுக்குள் நினைத்துக் கொண்டே அந்த இடத்தை கடந்து சென்றாள் ரதி…

 

ஆக்சுவலி சார்… உங்க ஸ்டேட்டஸ்க்கு இங்க நின்னு நீங்க பேசுறதே உங்களுக்கு இழுக்கு… அதுவும் உங்க பக்கத்துல கூட நிக்க தகுதி இல்லாத என்ன மாதிரி ஒரு லோ கிளாஸ் பீப்பிள் ஓட ரோட்ல நின்னு பேசுறது இன்னும் அசிங்கம்…. ப்ளீஸ் உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க சார் … இனிமேல் என்ன தேடி வராதீங்க… இந்த மாதிரி தேவையில்லாமல் என்னை நிறுத்தி பேசாதீங்க…. நெக்ஸ்ட் டைம் போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியது வரும்..  என கோவ கண்களோடு எச்சரித்துவிட்டு,   ஹாஸ்டலுக்குள் நுழைய போனவள்… பின் அருண் பக்கம் திரும்பி…. உங்க மனைவி நம்ம ரெண்டு பேரும் பேசினத இப்பதான் பாத்துட்டு போறாங்க… போய் அவங்கள என்ன சொல்லி சமாளிக்கலாம்ன்னு யோசிங்க… என்று கூறிவிட்டு சென்று விட்டாள்.

 

அவள் பேசிய வார்த்தைகள் அருணின் நெஞ்சில் சுருக்கென்று தைத்தது… அவனுக்கு தான் தெரியுமே இவை அனைத்தும் அவன் பேசிய வார்த்தைகள் தான் என்று… மலர் அவன் வீட்டில் இருக்கும் பொழுது இவ்வளவு தூரத்தில் நின்று அவளை பேச கூட அனுமதித்தது இல்லை அவன். “போலீசுக்கு போவாளாமே  அதையும் பார்த்து விடுவோம்”… என்று நினைத்தபடி காரில் ஏறி கிளம்பினான் அருண். 

இரவு வரையில் அலுவலகத்தில் தான் இருந்தான் ஆதி… தனது இருக்கையில் அமர்ந்து கால் வட்டமாக சுழன்றபடி, இன்று நிகழ்ந்தவைகளைப் பற்றி  யோசித்துக் கொண்டு இருந்தான். அவளைக் காணும் ஆர்வத்தில் தான் வெளியில் இருக்கும் வேலைகளை புயல் வேகத்தில் முடித்துவிட்டு உள்ளே நுழைந்தான் ஆதி…. இதோ இருவரின் ஆர்வமும் ஒரு நொடியில் மண்ணாய் போனது….  

மலருக்கு மெசேஜ் செய்யவோ, கால் பண்ணவோ மனமில்லை… என்ன சொல்லி அவளுக்கு புரிய வைப்பது…  மனம் கலங்கி சென்ற அவளது முகத்தை அவனால் மறக்க முடியவில்லை கண்களுக்குள்ளேயே நின்றாள் பெண்…. 

 

அருணுடன் அவளை சேர்த்து வைப்பதற்காக இது அனைத்தும் செய்தேன் என்று நினைத்து இருப்பாள்…. அவனுக்காக பண்ணவில்லை என்று சொன்னால், பின் எதற்காக பண்ணினாய் என்று ஆணித்தரமாக கேட்பாளே?…

அவளுக்காக தான் அனைத்தும் பண்ணினேன் என்று தெரிந்தால், நண்பனின் மனைவி மீது சபலம் கொண்டதாய் நினைத்து விடுவாளோ?…. என அவனுக்குள்ளையே பல கேள்வி சுழலுக்குள் சுழன்று கொண்டு இருந்தான்.

 

ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு புரிந்தது இன்று அவளை பார்க்க வேண்டும்… பார்த்தே ஆக வேண்டும்…. 

ஏதோ ஒன்று பேசி சமாதானப்படுத்தலாம்… என்று எண்ணி காரை எடுத்துக் கொண்டு மலரின் ஹாஸ்டலை நோக்கி புறப்பட்டான் ஆதி….

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top