அசுரன் 59
ஹாஸ்டலின் கீழே காரில் இருந்தபடி இரண்டு முறை அவளுக்கு அழைத்துப் பார்த்தான்… போனை எடுக்கவில்லை… உச்சகட்ட கோவத்துல இருப்பா போல… என்று புலம்பியபடியே… காரை விட்டு இறங்கி ஹாஸ்டலுக்குள் உள்நுழைந்தான்.
இரவு உடையுடன் தூங்கிக் கொண்டிருந்தாள் மலர்… அப்பொழுது கதவை தட்டி ஒரு பெண் உன்ன பாக்க உன்னோட கார்டியன் வந்து இருக்காரு… என்று கூறிவிட்டு சென்றாள்.
கார்டியன் என்றதும் புரிந்து விட்டது ஆதி தான் வந்திருக்கிறான் என்று..
வேகமாக முகத்தை கழுவி துண்டால் துடைத்து விட்டு படபடவென கீழ இறங்கி வந்தாள் மலர்.
படபடக்கும் இதயத்துடன் அவளுக்காக காத்துக் கொண்டு இருந்தான் ஆதி…
வேகமாய் இறங்கி வந்தவள்… ஆதியை கண்டதும்… என்ன சார் இந்த நேரம் இங்க வந்து இருக்கீங்க… எதுவும் பிரச்சனையா? என்று எதுவும் நடக்காதது போல் கேட்டாள்…
தன் மேல் உள்ள விரக்தியில் பேசுகிறாள் என்று நினைத்தான் ஆதி..
வெளில போய் பேசலாமா? காபி ஷாப் போகலாமா? என்றான் ஆதி.
காபி குடிக்கணும்னா காபி ஷாப் போலாம்… பேசணும்னா… இப்படி நடந்து பக்கத்துல ஒரு பார்க் இருக்கு அங்க போலாம்… என்றாள் மலர்.
அதிகமாக போக்குவரத்து இல்லாத சாலை…. வரிசையாய் மரங்கள் ஜில்லென்ற காத்து…
இருவரும் ஒன்றாய் நடைமேடையில் நடக்க தொடங்கினார்கள்… அமைதியான ரம்யமான சூழ்நிலை…
ஆதியே முதலில் பேச்சை துவங்கினான்….
என் மேல கோவமா இருப்பேன்னு தெரியும்…
எதுக்கு…
அது…. என்னோட ஃப்ரெண்டுக்காக தான் உனக்கு ஹெல்ப் பண்றேன் அப்படின்னு..
சொன்னாலும் சொல்லாட்டியும், அதுதானே உண்மை… என்றாள் மலர்.
அவன் நினைத்தது போலவே நினைத்து விட்டாள்… இப்பொழுது என்ன செய்ய…
பட்…. அது உண்மை இல்லை…
எது உண்மை இல்ல…
ப்ச்…. அவளின் இந்த வார்த்தை விளையாட்டை கேட்டு எரிச்சலானவன்… நான் அருணுக்காக பண்ணது உண்மை இல்லை… என்று கர்ஜித்தான்.
நீங்க அருணுக்காக பண்ணீங்கன்னு நான் சொல்லவே இல்லையே… என்று அதுவரை ரோட்டை பார்த்து நடந்து கொண்டே பேசியவள் இப்பொழுது நின்று அவன் முகத்தை பார்த்து கூறினாள்.
அவன் புரியாமல் அவள் முகத்தை பார்க்க…
உங்க பிரண்டுக்காக பண்ணீங்கனு தான நான் சொன்னேன்… அப்போ நான் உங்க பிரண்ட் இல்லையா… என்று அவள் இரு புருவத்தையும் உயர்த்தியபடி கேட்க…
ஆதியின் உலகம் அந்தப் புருவத்தின் மத்தியில் சிக்கிகொண்டது …
இப்ப நீ என்ன சொல்ற… என்றான்.
இது எதுவுமே நீங்க அருணுக்காக பண்ணல… அது மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும்… என்றாள் தலையசைத்தபடி…
ஊப்ப்… என்று பெருமூச்சுடன் சட்டையை இழுத்து விட்டவன்… அவளைத்தான் பார்த்தான்… புன்னகை முகமாய் அவளும் ஆதியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளைக் கண்ட முதல் நாள் பெருக்கெடுத்த காதலை விட இன்று தன்னை சொல்லாமல் புரிந்து கொண்டாளே… என்ற எண்ணத்தில் அவள் மேல் காதல் இன்னும் பெருக்கெடுத்தது… இறுக கட்டி அணைத்து முகம் எங்கும் முத்தமழை பொழிய ஆசை தோன்றியது…. ஆசைகள் அவனின் பெருமூச்சுடன் கலந்து காற்றில் பறந்து போனது…
பேசிக்கொண்டே அவர்கள் பார்க்கிற்குள் வந்து ஒரு பெஞ்சில் அமர்ந்தார்கள்…
எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற…
ஒருவேளை நீங்க அவருக்காக பண்ணியிருந்தா… அத பஸ்ட் நீங்க அவர்கிட்ட தானே சொல்லி இருக்கணும்… இத்தனை நாள் நான் எங்க இருந்தேன்னு அருணுக்கு தெரியாது, ஏன் விக்ரம் அண்ணாக்கு கூட தெரியாது…. சோ அப்ப நீங்க என்ன பத்தின விஷயத்தை யார் கிட்டயும் சொல்லல… நேத்து வரைக்கும் நீங்க அருண பத்தி என்கிட்டயும் பேசினதே இல்லை.. அவர் நல்லவரு… வல்லவரு… தெரியாம பண்ணிட்டாரு… நோ மோர் சமாளிபிகேஷன்….. சோ என்ன அருண் கூட சேர்த்து வைக்கிற எண்ணம் உங்களுக்கு இல்ல… இதையெல்லாம் யோசித்து பார்த்து தான் நான் கண்டுபிடிச்சேன் நீங்க இந்த விஷயத்தை அருணுக்காக பண்ணலனு…
ஆனா ஆபிஸ் விட்டு போகும்போது கண் கலங்கி போனியே…
சட்டுனு அருண் சார் அப்டி சொன்னதும் நானும் மொதல்ல அப்படித்தான் நினைச்சேன்… பட் ஹாஸ்டல் வந்து நிதானமா யோசித்து பார்த்ததும் புரிந்தது…
அப்புறம் ஏன் என்னோட போன் எடுக்கல…
அருண் சார் வந்து பேசினதுல எனக்கு தலை வலி வந்துருச்சு சார்…
அதனாலதான் போனை சைலன்ட்ல போட்டு தூங்கிட்டேன்.. சாரி… என்றாள் முகத்தை சுருக்கி தொண்டையில் கை வைத்த படி கெஞ்சுதலாய்…
இந்த பாவனைகளை பார்த்து, இப்படி எல்லாம் பண்ணாதடி நான் நைட்டு தூங்க வேணாமா?…. என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டான் ஆதி.
காட்டன் வெண்ணிற இரவு உடை அணிந்திருந்தாள்… வேறு எந்த அணிகலன்களும் இல்லை… நெற்றியில் பொட்டு கூட இல்லை… தனது நீண்ட கூந்தலை கொண்டையிட்டு இருந்தாள்… கூந்தலின் நுனி முடிகள் விசிறி போல் நீட்டிக் கொண்டிருந்தன… அதில் சில முடிகள் அவள் முகத்திலும், பக்கவாட்டிலும் தொங்கி கொண்டிருந்தன… அவளின் பின்னால் தெரிந்த நிலவுக்கு சமமான பொலிவான முகம்…. அவளைத்தான் ஆதி வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்… அவள் அங்கு விளையாண்டு கொண்டிருந்த சிறுவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்…
உனக்கு அருணை பிடிக்குமா…?
புடிக்கும் சார்… என்றாள் யோசிக்காமல்…
இதைக் கேட்டதும் சட்டென்று அவன் முகத்தில் இருந்த இலகுத் தன்மை மாறி இறுக்கத்தை தத்தெடுத்தான்…
அப்போ அருண் மனம் திருந்தி, நீதான் வேணும்னு வந்தா ஏத்துக்குவியா? என்றான்… நிலத்தைப் பார்த்துக் கொண்டே இறுகிய குரலில்…
ஐயோ சார்? நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டிங்க…
தன் மனதில் உள்ள எண்ண ஓட்டத்தை கூற ஆரம்பித்தாள் மலர்…
அவரை என்னோட கணவரா நான் எப்போதும் நினைச்சது இல்லை சார்… என்ன பொறுத்த வரைக்கும்
அவர் ஒரு நல்ல ஓனர்… என்ன தாலி கட்டிட்டு கூட்டிட்டு போன ஒரே காரணத்துக்காக என்கிட்ட அத்துமீறாம… கண்ணியமா நடந்துக்கிட்டார்… என்ன நிறைய திட்டி இருக்காரு அசிங்கப்படுத்தி இருக்கிறார்… ஆனா என்ன அவர் தப்பா பார்த்ததில்லை ஒருநாளும்… அதனால எனக்கு புடிக்கும்… என்ன பார்த்த முதல் நாளே நான் வேலைக்காரின்னு சொல்லி என்ன ஒதுக்கி வச்சார் அதே மாதிரி கடைசி வரைக்கும் நடந்துக்கிட்டார்… ஒருவேளை அவர் என்கிட்ட அப்போ தப்பா நடக்கணும்னு நினைச்சிருந்தா அதை யாராலும் தடுத்து இருக்க முடியாது என்னால கூட…. ஒரு கணம் நிதானித்து ஒருவேளை அப்படி ஒன்னு நடந்து இருந்தா…. அவரை பத்தி முழுசா தெரியும் போது நான் மனசளவுல ரொம்ப உடைஞ்சு போயிருப்பேன்… என்றாள் கரகரத்த குரலில்…
சொல்லப்போனா அவர் எனக்கு 100% உண்மையா தான் இருந்தார்… அதனாலதான் அவருக்கும் ரதிக்கும் ஆனா உறவு தெரியும் போது கூட என்னால அதிலிருந்து ஈஸியா வெளியே வர முடிஞ்சது. அதனாலதான் அவர பிடிக்கும்னு சொன்னேன். எனக்கு அவர் மேல வெறுப்பெல்லாம் ஒன்னும் இல்ல சார்… அவரோட திருமணத்தை பத்தி அவருக்கு ஏகப்பட்ட கனவுகள் இருந்திருக்கும்… அதையெல்லாம் உடைக்கிற மாதிரி… ஒரு கல்யாணத்த பண்ணி வச்சு ஏத்துக்க சொன்னா யாரால ஏத்துக்க முடியும்… அந்த வெறுப்பை தான் என் மேல காட்டினார்… நான் காட்டுன அன்பு அக்கறை எல்லாம் அந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பொதுவா தான் காட்டினேன்…
ஆனா…. இப்ப அவர் மனசுல இருக்க எண்ணம் தான் கேட்கவே அறுவெறுப்பா இருக்கு… என்று கூறிவிட்டு, இன்று மாலை அருண் பேசியதைப் பற்றி ஆதியிடம் இடம் கூறினாள் மலர்.
அவள் கூறியதைக் கேட்டதும், செந்தனலாய் கோபம் ஏறியது ஆதிக்கு… ஆனால் என்ன செய்துவிட முடியும் உயிர் நண்பன் ஆயிற்றே… அந்த இடத்தில் இப்பொழுது வேறு யாராவது இருந்தால் அவர்கள் இந்த நிமிடம் இந்த உலகத்தில் இருக்க மாட்டார்கள்… இங்கு நட்புக்கும் காதலுக்கும் இடையில் அல்லவா அவன் மாட்டிக் கொண்டு இருக்கிறான்.
அருண் கூறியதைக் கேட்டு சோர்ந்து இருந்த அவள் முகத்தை பார்த்தவன்… சரி விடு அதை நான் பாத்துக்குறேன்… பேச்சை மாற்றும் பொருட்டு நீ ஏதாவது சாப்பிடுறியா என்று கேட்டான் ஆதி…
ம்ம்… என்று வேகமாக கண்களை விரித்து தலையசைத்தவள்… என்ன வேண்டும் என்று கேட்டதற்கு… அங்கு குழந்தைகள் வாங்கிக் கொண்டிருக்கும் ஐஸ் வண்டியை கையை நீட்டி காண்பித்தாள்….
நோ…. நைட் டைம்….. த்ரோட் இன்பெக்சன் வந்துரும்…
ப்ளீஸ்… ப்ளீஸ்… அந்த குட்டி மூக்கை சுருக்கி அவள் கெஞ்சிய அழகை பார்த்தவனுக்கு… அவளை மடியில் தூக்கி வைத்து கொஞ்சலாம் போல இருந்தது…
தனது வாலட்டிலிருந்து பணத்தை எடுத்து அவளிடம் கொடுக்க… வாங்க தயங்கவில்லை…. அவளுக்கான உரிமையை அவளே அறியாமல் மனதில் பதிய வைத்திருந்தான்… பணத்தை பெற்று வேகமாக ஓடினாள்… ஓடிய வேகத்தில் காற்றில் அவளது கூந்தல் அவிழ்ந்து விழுந்தது…. துப்பட்டா மறைக்காத அவள் அழகின் பின்னையே ஆதியின் பார்வையும் ஓடியது…
இருவருக்கும் ஐஸ்கிரீமை வாங்கியவள்…. துள்ளலோடு அவன் முன்னே வந்து நின்று… பெஞ்சில் அமர்ந்திருக்கும் அவன் கையில் இரண்டு ஐஸ்கிரீமையும் கொடுத்துவிட்டு… என்ன செய்யப் போறா…. என்பது போல் அவன் அவளையே பார்த்து இருக்க… சட்டென அவிழ்ந்த கூந்தலை இரண்டு கைகளைக் கொண்டு எடுத்து கொண்டை முடிந்தாள்….மலர்
அவள் நின்றிருந்த அழகை, உட்கார்ந்து படி பார்த்தவனுக்கு… எடுப்பாய் நின்ற முன்னழகு அவனை மூச்சு முட்ட செய்தது.. அவள் கையை மேலே தூக்கிய உபயத்தில்… அவன் கண்முன்னே இடையின் குட்டி தரிசனம் வேறு கிட்டியது… அவன் தேவதையை இந்த கோணத்தில் பார்ப்பதற்கு ஆதிக்கு இரண்டு கண்கள் போதவில்லை…. பார்வையை விலக்க முடியாமல், மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க தொண்டையில் எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டான்… “சோதிக்கிறாளே”… என்ற படி தனது இரு கால்களையும் வேகமாய் ஆட்டி, தன்னை சமநிலைப்படுத்தியவன்…
இடைக்கு திரையிட்ட பின்னே தான் அவன் பார்வையை நகரத்தினான்….
அவன் கையில் இருந்த ஒரு ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டு அவன் பக்கத்தில் அமர்ந்தவள்… ஐஸ்கிரீமை உண்ண தொடங்கினாள்… அவள் ஐஸ்கிரீமை ரசித்து ருசித்து உண்ண…. உண்ண…
இங்கே ஆடவனின் எண்ணம் எக்கு தப்பாய் எகிறிது….
பேசி முடிச்சா… மூடிக்கிட்டு கிளம்ப வேண்டியது தானடா… உனக்கு நீயே ஆப்பு வச்சுக்கிட்ட… என்று மனதிற்குள் புலம்பி தீர்த்தான்.
ம்ம்ம்…. ம்… என்று இடையில் ரசித்து உண்ணும் சத்தம் வேறு…
இந்த சத்தத்தை கேட்டு ஆடவனின் மேனியே கூசியது…. உடலில் இருக்கும் பச்சை நரம்புகள் எல்லாம் புடைத்துக் கொண்டு நின்றன…
சாப்பிட்டுக் கொண்டிருந்தவள் பக்கத்தில் சாப்பிடாமல் இருப்பவனை பார்த்து…. அவன் தோளைத் தட்டி… சார்… சார்… சீக்கிரம் உருகிடும் சாப்பிடுங்க… என்று கூற…
அவன் கண்ணோ… அவள் உதட்டின் மேல் ஒட்டி இருக்கும் ஐஸ்கிரீமிலேயே நிலைத்து விட்டது… இடையிடையில் அவளது உதட்டை சுத்தம் செய்யும் அவள் நாக்கு…”வா சண்டைக்கு” என அவனை கூப்பிட… ஆதி அவன் பார்வையை நகர்த்த பார்க்க…
ஆதி… இவ உன்ன நல்லவனாவே இருக்க விடமாட்டா போல டா… என தனக்கு தானே சொல்லிக் கொண்டவன்.
எவ்வளவு தூரம் இழுத்தாலும் மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளும் ஸ்ப்ரிங் போல்…
பார்வையை நகர்த்த தான் நினைக்கிறான்… ஆனால் கண்கள் சொல் பேச்சு கேளாமல்… ஐஸ்கிரீமை சப்பு கொட்டி உண்ணும்… அவள் இதழ்களிலேயே நிலைத்து நின்றது… ஒரு மனமோ இதழ்களில் ஒட்டி இருக்கும் அந்த ஐஸ்கிரீமை டேஸ்ட் பண்ணி விடு என்று அவனை தூண்டி விட…. அவள் ஐஸ்கிரீமை உண்டு விழுங்க… அவன் கண்கள் அவளை உண்டு விழுங்கியது…
சார் உங்களுக்கு வேணாமா? அப்ப குடுங்க நான் சாப்பிடுறேன்… என்று கூறியவாறு அவனிடமிருந்து ஐஸ்கிரீமை அவள் வாங்க முயல…
என்னது செகண்ட் ரவுண்டா… என்று கைகள் நடுங்க ஐஸ்கிரீமை அவளிடம் கொடுத்த நிலையில் கீழே தவிற விட்டான் ஆதி.
அய்யய்யோ கீழ விழுந்துடுச்சு… சரி விடுங்க… ( அப்பாடா என்று… இடுப்பில் கை வைத்து பெருமூச்சு விட்டான் ஒருத்தன் ) நாளைக்கு வேற வாங்கி சாப்பிடலாம்… என்றவளை…
என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா… எனும்படி பார்த்து வைத்தான் ஆதி.
அப்பொழுதுதான் ஆதியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்… ஜில்லென்று காத்து வீசிக் கொண்டிருக்கும் அந்த சூழ்நிலையிலும், உடல் முழுவதும் வேர்த்து, முகம் முழுவதும் சிவந்து இருப்பவனை பார்த்து… சார்… உங்களுக்கு இந்த கிளைமேட் சேரல போல…. முகமெல்லாம் ஒரு மாதிரியா ஆயிடுச்சு பாருங்க… என்று அவள் மருண்டு விழித்து கவலையாய் கேட்க…
அமைதியாய் நின்றிருந்தான் ஆதி..
என்ன சார் ஆச்சு…. என்று பயந்து அவனுடைய கையை பிடிக்க வந்தவளை… ஒரு அடி முன்னையே தடுத்து நிறுத்தி இருந்தான் ஆடவன்.
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️