அசுரன் 68

 அசுரன் 68 

 

கீழே விழுந்து கிடந்த அவளை கண்டவன் அதிர்ச்சியில் உறைந்தான்….

 

வேகமாய் முழங்காலிட்டு அவளை தூக்கி மடியில் வைத்தவன்… அப்பொழுதுதான் கவனித்தான் அவள் உடல் காய்ச்சலில் தகிப்பதை…  

மலர்… மலர்… என்று கன்னத்தை தட்டினான்…

நெற்றியில் அடிபட்டு ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது.

தனது கைக்குட்டையை எடுத்து அவள் நெத்தியில் அழுத்தி பிடித்தான்…

பின் அவளை மெல்ல தரையில் படுக்க வைத்து விட்டு… கதவை திறந்தவன்… தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்து… சிட்டு… சிட்டு.. எந்திரி… மீண்டும் அவள் முகத்தை தட்ட… எந்த பலனும் இல்லை…. அசைவற்றுக் கிடந்தாள் பெண். துவண்ட கொடியாய் கிடந்தவளை கண்டு 

ஆடவனுக்கு உயிரை உருவி எடுப்பது போல் இருந்தது…

இரண்டு கைகளாலும் அவளை வேகமாக தூக்கிக் கொண்டவன்…

வேகமாக அறையை கடந்து வெளியே வந்து… “டிரைவர் காரை ஸ்டார்ட் பண்ணுங்க” என்று கத்திக் கொண்டே ஓடி வந்தான்… காரை ஸ்டார்ட் செய்து டிரைவர் அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தார்…

 

சீக்கிரம் பக்கத்துல இருக்க ஹாஸ்பிடல் எதுக்காவது போங்க… என்று கூறிவிட்டு பின்னால் அவளை மடியில் படுக்க வைத்து அமர்ந்து கொண்டான்… ஒரு கை அவள் கால் கீழே விழுந்து விடாமல் பிடித்திருந்தது. 

ஒற்றை கையால் அவளை நெஞ்சோடு அணைத்தபடியே…  அவளின் முன்நெற்றி அவன் வாயில் உரச….. அவள் உச்சந்தலையில் தன் கன்னத்தை வைத்து  கண்கள் கலங்க சிட்டு…  எந்திரி டி.. சிட்டு… என்று புலம்பி கொண்டே வந்தான்.. 

 

அவனின் தவிப்பை கண்முன் இருந்த கண்ணாடியில் டிரைவரும் கவனித்தார்.. 

சிறிது நேரத்திற்கு முன்பு சிங்கம் போல் தரை அதிர நடந்து வந்தவனா? இப்படி கலங்கி நிற்பது என்று ஆச்சரியமாக பார்த்தார்… அவன் எதற்குமே கலங்கி அவர் பார்த்ததில்லை… முதலில் அவன் காரில் பெண்களுக்கு அனுமதியே இல்லை…

 

இப்பொழுது ஆதிக்கு சுற்றி இருக்கும் யாரைப் பற்றியும் கவலை இல்லை… அவன் கவனம் முழுதும் அவனின் சிட்டு மட்டுமே… அடிக்கொருமுறை நெற்றியில் ரத்தம் கசியும் காயத்தை ஊப்ப்… ஊப்ப்… என்று ஊதிக்கொண்டே வந்தான்… சரியா போயிடும்..  சீக்கிரம் ஆறிடும்… என்று அவனுக்கு சமாதானம் சொன்னானோ… இல்லை மயக்கத்தில் இருக்கும் அவளுக்கு சமாதானம் சொன்னானோ தெரியவில்லை.

 

பக்கத்தில் இருந்த மருத்துவமனையில் கார் நிற்க… வேகமாய் காரை விட்டு அவளை தூக்கிக்கொண்டு கீழே இறங்கியவன்… 

“டாக்டர் எமர்ஜென்சி” என்று கத்திக் கொண்டே உள்ளே நுழைந்தான்… அவனின் குரலைக் கேட்டு… ஹாஸ்பிடலில் இருந்த அனைவரும் அலறிக் கொண்டு வந்தனர். டாக்டர் வர சிறிது தாமதமானது… அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு… மொத்த  ஹாஸ்பிடலையும் தரமட்டமா இடிச்சிடுவேன்… ஒருத்தரும் உயிரோட வீட்டுக்கு போக மாட்டீங்க… என்று கர்ஜித்தான்… 

அவளுக்கென அறை ஒதுக்கி… டாக்டர் வந்து, அவளின் கையை பிடித்துக் கொண்டு நின்றிருந்த அவனை வெளியே அனுப்பி மலரை சோதனை செய்வதற்குள் அந்த மருத்துவமனையை ஒரு வழி ஆக்கிவிட்டான்… முதன்மை மருத்துவரில் இருந்து கடைஊழியர் வார்டு பாய் வரை அனைவரும் அவனை சமாளிப்பதற்குள் போதும்.. போதும்… என்று ஆகிவிட்டனர்…. அவன் குரலைக் கேட்டு யாரும் பயப்படாமல் இருந்தால் தான் ஆச்சரியம்… 

 



 

 

அரை மணி நேர மருத்துவ உதவிக்கு பிறகு..

நைட் ஃபுல்லா  ஹை ஃபீவர்ல இருந்து இருக்காங்க… தட்டு தடுமாறி எழுந்திருக்கும் போது மயங்கி கீழே விழுந்ததில் நெத்தியில அடிபட்டு ரத்தம் வந்திருக்கும்… இன்னும் கொஞ்ச நேரத்துல கண்ணு முழிப்பாங்க… குளுக்கோஸ் இரண்டு டோஸ் ஏத்திட்டு, ரெண்டு நாளைக்கு மருந்து வாங்கிட்டு நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்… நெத்தில ரெண்டு ஸ்டிச் போட்டு இருக்கோம் மூணு நாள்ல அதுவே விழுந்துடும்…  என்று கூறியவர்… “இதுக்காடா எங்க எல்லாரையும் கூண்டோட  கொல்ல பார்த்த…” என்னும் ரீதியில் மருத்துவர் அவனை பார்த்து விட்டு சென்றார்.

 

இன்னும் மயக்கத்தில் தான் இருந்தாள் மலர்… ஆதிக்கு முக்கியமாக போன் தொடர்ந்து வர.. போனை அட்டென்ட் செய்து அறையின் வாசலுக்கு வந்தான்.

மயக்கத்திலிருந்து மெல்ல கண் விழித்தாள் மலர். தலை சுறுசுறு என்று வலித்தது… அருகில் செவிலியர் நின்றிருந்தார்… குளுக்கோஸ் ஏறிக்கொண்டு இருப்பதால் பெரிதாய் கிறக்கம் இல்லை… தெளிவாய் இருந்தாள்… 

 

வெளியில் போன் பேசிக்கொண்டு இருப்பவனை ஓர கண்ணால் பயந்தபடி பார்த்துக் கொண்டே தட்டு தடுமாறி மாத்திரைகளை எடுத்து வைத்து குளுக்கோஸில் மருந்துகளை  சேர்த்துக் கொண்டிருந்தார் செவிலியர்… அவரின் படபடப்பை பார்த்தவள்…

 

என்ன ஆச்சு ஏன் அவரை ஏன் அப்படி பாக்குறீங்க… என்று செவிலியரிடம் வினவினாள் மலர்.

 

அது ஒன்னும் இல்ல மேடம்… என்றார் பயந்தபடி…

 

ப்ளீஸ்… எதுவானாலும் சொல்லுங்க…என்றாள் மலர்… (அவளுக்குத்தான் உடல் நிலையில் ஏதோ சீரியஸான பிரச்சனை என்று நினைத்து விட்டாள்) 

 

உங்க ஹஸ்பண்டு தான்,  உங்கள மயக்க நிலையில தூக்கிட்டு வந்தார் மேடம்… அவர் உள்ள வந்த உடனே ஹாஸ்பிடலையே உண்டு இல்லைன்னு பண்ணிட்டாரு… அதுல டாக்டர் வேற டிராபிக்ல்ல சிக்கி வர்றதுக்கு பத்து நிமிஷம் லேட் ஆயிடுச்சு… அதுக்குள்ள இந்த ஹாஸ்பிடல்ல இருக்கிறவங்க எல்லாரையும் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டார்.  இந்த ஹாஸ்பிடலையே இடிச்சிடுவேன் அப்படின்னு மிரட்டினார் மேடம்…

எல்லாரும் கத்திய வச்சு தான் மிரட்டுவாங்க… ஆனா இவரு கத்தியே மிரட்டறாரு மேடம்…. என்று அந்த செவிலியர் பயந்து கொண்டே கூற..

 

இதைக் கேட்டதும் மலருக்கே சிரிப்பு வந்துவிட்டது..

 

அது மட்டும் இல்ல மேடம் நீங்க கண்ணு முழிக்கிற வரைக்கும் ஏன் இன்னும் முழிக்கல… எப்ப தான் முழிப்பா… என்னதான் ட்ரீட்மெண்ட் தரீங்க… உங்களுக்கெல்லாம் உயிரோடு வாழனும்னு ஆசை இல்லையா… அப்படின்னு கேக்குறாரு… மேடம்.

 

செவிலியர் பேசியதை கேட்டபடி,

வெளியே சீரியஸாக போன் பேசிக் கொண்டிருந்த அவனை தான் அவளது பார்வை வட்டமடித்துக் கொண்டு இருந்தது… தன் உயிர் அவனுக்கு அவ்வளவு முக்கியமானதா என்று தோன்றியது….

 

உங்க ஹஸ்பண்ட் கத்தினதுல Cheif டாக்டர்க்கு பிபி எகிறி பெட் ல அட்மிட் ஆகி இருக்கார்… ட்ரீட்மென்ட் பாக்க வந்த ரெண்டு பேஷன்ட்… உயிர் தான் முக்கியம், ட்ரீட்மென்ட் வேணா அப்படின்னு  ஓடிட்டாங்க…. திட்டுனதுல பயந்துகிட்டு ரெண்டு ட்ரெய்னிங் நர்ஸ் அந்த ரூம்ல அழுதுகிட்டு இருக்காங்க… நான்தான் சீனியர் அதனால கொஞ்சம் தைரியமா உங்களுக்கு ஊசி போட வந்தேன்…

இவ்வளவு நேரம் உங்க கைய புடிச்சிட்டு உங்க பக்கத்துல தான் கண் கலங்கி உட்கார்ந்து இருந்தாரு… அந்த பக்கம் இந்த பக்கம் நகர மாட்டேங்கிறார்… அவர பார்த்தாலே பயமா இருக்கு… அவர் குரல கேட்டாலே கை, கால் எல்லாம் நடுங்குது… என்றார் அவர் பாவமாக..

 

அந்த நேரத்தில் போனை பேசி முடித்துவிட்டு சரியாக ஆதி உள்ளே நுழைந்தான்… கண்கள் சிவந்து இருந்தது… தலை கலைந்து… சட்டை கசங்கி..  முகம் வேர்த்து… முகத்தில் படிந்த வேர்வையை தோள்களில் துடைத்திருப்பான் போலும்… அங்கும் வேர்வை படிந்திருந்தது… முகம் வாடிப்போய் இருந்தது… ஆனாலும் அழகும் கம்பீரமும் மட்டும் குறையவில்லை…  பார்வையிலேயே களவாடினாள் பெண்.

 

பீஜ் நிற சட்டையில் நெஞ்சு பகுதியிலும், ஆர்ம்ஸ் பகுதியிலும்… சிறிது ரத்த கறை ஒட்டி இருந்தது…  அதில் புரிந்து விட்டது மலருக்கு அவளுடைய முகம் அங்கு தான் இருந்திருக்க வேண்டும் என்று….  

 

அருகில் வந்தவன்.. இப்போ ஓகேவா என்றான் சாதாரணமாக…. 

 

அதைக் கேட்ட செவிலியருக்கே அதிர்ச்சி… கண்விழித்ததும் கண்ணே… மணியே… என்று உருகுவான், முத்தமிடுவான் என்று பார்த்தால்… ஒரு அடி தள்ளி நின்று நலம் விசாரிக்கிறானே… யாருடா நீ என்பது போல் பார்த்து வைத்தார் அந்த சீனியர் செவிலியர்.

 

அவர் பார்வையை பார்த்ததும் மலருக்கு, அவரின் மனநிலை புரிந்து சிரிப்பு தான் வந்தது.

 

ஓகேங்க… என்றாள்… (சார் காணாமல் போனது)

 

ஃபீவர் குறைஞ்சிடுச்சா என்று கேட்டபடி…

அருகினில் வந்து நெற்றியில் கை வைத்து காய்ச்சலை சோதிக்க வந்தான்.. 

 

கண்களை மெதுவாக மூடினாள் அவன் ஸ்பரிசத்திற்காக…

 

ஆனால் கை அவள் மேல் படவில்லை அரை இன்ச் இடைவெளியில் கையை நிறுத்தி இரு பக்கமும் கைகளை திருப்பி காய்ச்சலை சோதித்து விட்டு… ஓகே, ஃபீவர் இப்ப குறைஞ்சிருக்கு… என்றான் ஆதி.

 

கண்விழித்தவள் அவன் செயலை கண்டு கடுப்பானாள்… இவர் TRகே டஃப் கொடுப்பார் போல, நேர்ல தொடமாட்டார் ஆனால் கனவுல மட்டும்… எல்லாம்… என்று மனதிற்குள் சடைந்து கொண்டாள்…

இருந்தும் மனதில் அவளுக்கு ஒரு குற்ற உணர்ச்சியை இருந்தது…. கனவு கலைந்த வேளையில்… ஆதி சோபாவில் உறங்க சொல்ல அவள் பயந்து கொண்டு உள்ளே ஓடியது…  அவனுடைய கண்ணியத்தை சந்தேகித்து விட்டோமே என்ற குற்ற உணர்வு.

 

யோசனையில் இருந்தவளிடம் 

பசிக்குதா… ஏதாவது சாப்பிடறியா…. என்றான்..

 

ம்ம்…. ஒரு சான்விச்… ஒரு ஆப்பிள் ஜூஸ் வேணும் என்றாள் ஆள்காட்டி விரலை தூக்கி காண்பித்து…

 

பொதுவாக இதெல்லாம் விரும்புபவள் அல்ல அவள்…. அவளை சந்தேக கண்ணோடு பார்த்துக் கொண்டே ஸ்விக்கியில் ஆர்டர் செய்தான்…

 

வீட்டுக்கு எப்ப கிளம்புவோம் என்றாள்…

 

ட்ரிப் இறங்கினதும் கிளம்பலாம் என்றான்…

 

தேடிவந்த உணவை அவள் கையில் கொடுக்க… முதலில் ஜூசை வாங்கி வாய் அருகே கொண்டு சென்றவள்… குமட்டுவது போல் பாவனை செய்து வாயை மூடிக் கொண்டாள்…. பின் ஆதியின் கையிலேயே ஜூசை குடுத்து விட்டு….  வேணாம்…. வாமிட் வருது…. என்பது போல் சைகை செய்து…. கண்ணை மூடி இருந்தவள்… 

 

ப்ளீஸ் இதை நீங்களே சாப்பிடுங்களேன்… 

என்னால சாப்பிட முடியல…  ஒரே வாமிட்டா வருது… என்றாள் பாவமாக…

 

இடுப்பில் கை வைத்த படி அவள் செய்யும் அத்தனை அட்டூழியங்களையும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்…

 

அவன் கூர் பார்வையை கண்டவள்… ஒரு திருட்டு முழி முழிக்க… ஆடவன் கண்டு கொண்டான் சூட்சமத்தை…

 

சரி… பாதிய குடிச்சிட்டு குடு குடிக்கிறேன் என்றான்…

 

எச்சி பட்டுடும்… என்று அவள் சொல்ல… 

 

சொன்னதை மட்டும் செய்…

 



 

 

இதற்கு மேல் மறுவார்த்தை எங்கு பேச.. 

பாதி ஜூஸ் குடித்துவிட்டு அவனிடம் கொடுக்க… அந்த ஜூஸையும் சாண்ட்விஜையும் அவன் உண்டான்… கை கழுவி விட்டு அவளின் அருகில் இருந்த சேரில் அமர்ந்தவன்… “இப்போ சொல்லு உடம்புக்கு என்ன ஆச்சு” என்றான்…

 

நைட்டு ஃபுல்லா ஃபீவர்… காலைல எழுந்துக்கவே முடியல… நீங்க கதவை தட்டுற சத்தம் ரெம்ப நேரத்துக்கு பின்னாடி தான் கேட்டது… எழுந்து கதவை திறக்கலாம்னு போகும்போது மயக்கம் போட்டு கீழ விழுந்துட்டேன்… அப்போ நெத்தில அடிபட்டு இருக்கும் போல.. 

 

ம்ம்… எதனால  காய்ச்சல் வந்துச்சு….

 

நைட்டு கனவு கண்டு பயந்து எழுந்துட்டேன்…

 

அதுதான் தெரியுமே… என்ன கனவு அது…

 

திரு திருவென முழித்தாள் மலர். சொல்லத்தான் முடியுமா? அடிக்கடி நினைத்து பார்க்க தான் முடியுமா?… காது மடல் சிவந்தது அவளுக்கு…

 

கெட்ட கனவா என்றான்…

 

அது சரி…. அதை எப்படி அவள் வாயால் சொல்லுவாள்…. அவன் அவளை வலுக்கட்டாயமாக எடுத்து இருந்தால், கத்தி கதறி கெட்ட கனவாய் மாறி இருக்கும்…  தேவா…  தேவா…. என்று கண்கள் சொருக அவனுடன் இழைந்து விட்டு… கெட்ட கனவு என்று சொல்ல மனம் வரவில்லை…

“இல்லை” என்று தலையசைத்தாள்…  

 

பின்ன கனவுல பேய் எதுவும் வந்ததா… என்று ஆதி கேட்க…

 

மீண்டும் இல்லை என்று தலையசைத்தாள்…  

 

அவள் தலையசைப்பை கண்டு எரிச்சல் ஆனவன்… அப்டி என்னத்த பாத்து தான் இப்படி பயந்த… என்று அவன் கடுப்பாய் கேட்க…

 

அவன் குரலைக் கேட்டு, தொண்டையில் எச்சில் கூட்டி விழுங்கியவள்…

ஆதியை மேலிருந்து கீழ் வரை ஒரு முறை கண்களால் அளந்தாள் மலர்… அதில் ஒரு இடத்தில் மட்டும் கண்கள் ஒரு நொடி நின்று பின் திரும்ப மேலே ஏறியது…

 

பெண்ணின் கண்கள் பேசிய பாஷை… புரியும் அளவிற்கு இன்னும் ஆதிக்கு மனப்பக்குவம் வரவில்லை போலும்…

 

கேள்வி கேட்டவன் பதிலுக்காக அவள் முகத்தையே குறுகுறு என்று பார்த்து இருக்க….

 

அ…து…. சரியா…. ஞாபகம் இல்ல…. என்று திக்கித் திணறியவள்..

தல ரொம்ப வலிக்குது… என்று முன்நெற்றியில் கை வைத்தவள்…. ஒரு மாதிரி மயக்கம் வர மாதிரி இருக்கு நான் கொஞ்ச நேரம் தூங்கட்டுமா என்று… கேவலமான ஒரு நடிப்பை போட்டு விட்டு கண்ணை மூடி கட்டிலில் சாய்ந்தாள் மலர்.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

     

❤️ Loading reactions...
7 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top