அசுரன் 69
மதியம் தாண்டிய வேளையில் மருத்துவமனையை விட்டு வீட்டுக்கு வந்திருந்தனர்… காலையில் உடைக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்கள் அவர்கள் வருவதற்கு முன் சரி செய்யப்பட்டு இருந்தது.
அறையும் மணி அண்ணாவால் சுத்தம் செய்யப்பட்டு இருந்தது…
அந்த நர்ஸ் பேசியதிலிருந்தே.. அவனைதான் ஆழமாய் ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள் மலர். அவர் சொல்லவில்லை என்றாலும் அவனின் தவிப்பு அவனின் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது… தனக்காக இவ்வளவு அலப்பறை செய்த அவன்… ஏன் என் அருகாமையை தவிர்க்கிறான்..
பெண்கள் கை கொடுத்தால் கற்பு போய்விடும் என்று நினைக்கும் பிற்போக்குவாதியா? இல்லையே.. அவனுடன் பல மீட்டிங் அவளும் சேர்ந்து சென்று இருக்கிறாள் அங்கெல்லாம் மற்ற பெண்களுடன் கைகுலுக்கி, அணைத்து விடுவிப்பானே…
சில ஆண்கள் மலரிடம் ஹாய் எனக்கூறி கைகளை நீட்டுவர்… அவளும் ஆதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, தயங்கியபடி கைகளை குலுக்குவாள்…
இப்ப எதுக்கு இப்படி ஆண்கள் கிட்ட தயங்கி தயங்கி கை நீட்டற… உன்னோட பயம் அவங்கள உன்கிட்ட சீக்கிரமா நெருங்க வைக்கும்… எப்ப கை கொடுக்கும் போதும் தைரியமா தன்னம்பிக்கையா திமிரா கை கொடுக்கணும்… உன் கண்ணுல தெரியுற தைரியம் தான் அவங்கள உன்கிட்ட இருந்து ஒரு அடி விலக்கி வைக்கும்… கைகுலுக்கும் போது ஆணா…பெண்ணா… பார்க்காத மனுஷங்க அப்படின்னு நினை…. என்று அவளுக்கு புரிய வைத்து அவள் கைகுலுக்குவதை முன்னெடுப்பான்…
ஆனால் அப்படிப்பட்டவன் என்னிடம் மட்டும் ஒரு கைகுலுக்கல் கொடுப்பதற்கு கூட முற்றிலும் தவிர்த்து விடுகிறான்.. ஏன்? என்று யோசித்துக் கொண்டிருக்கையில்…
உடை கூட மாற்றாமல்…
சிறிது அரிசியை மிக்ஸியில் உடைத்து கஞ்சி வைத்து எடுத்து வந்தான் ஆதி…
அவனைத்தான் பார்த்துக் கொண்டே… இருந்தாள். கஞ்சியை மிதமாக ஆற்றி.. ஸ்பூனுடன் அவள் கையில் கொடுத்தவன்… அருகில் இருந்த சேரை இழுத்து போட்டு அமர்ந்து கொண்டான். பெட்டின் மேல் கூட உட்காரவில்லை… ஒன்னு விடாமல் அனைத்தையும் கணக்கெடுத்துக் கொண்டாள். கஞ்சியையும் அவனையும் மாறி மாறி பார்க்க…
என்னம்மா… வேற ஏதாவது வேணுமா? என்று பரிவாக கேட்டான்…
குனிந்து கஞ்சியை குடித்துக்கொண்டே.. என்ன கேட்டாலும் தருவீங்களா? என்றாள் மலர்…
அவள் கேட்கும் தோரணையலேயே தெரிந்து விட்டது… ஏதோ ஏடாகூடமாக கேட்கப்போகிறாள் என்று. அவன் யோசித்துக் கொண்டிருக்கும் இடைவெளியிலேயே கேட்டுவிட்டாள்..
தனது இரண்டு கைகளையும் விரித்து விரல்களை வா எனும் விதமாய் அசைத்தபடி, மூக்கை சுருக்கி முகத்தை சாய்த்து, குழந்தை பாவணையில் “ஐ நீட் ஒன் friendly ஹக்”… என்று அவள் கேட்க…
குட்டி குழந்தை வெகு நாட்களுக்கு பின் அம்மாவை கண்டவுடன் தாவி தவழ்ந்து ஓடுவது போல… நான்கு கால் பாய்ச்சலில் ஓடி சென்று அவளை இறுக கட்டிக் கொண்டது அவனுடைய மனம். உடல் அப்படியே பார்த்துக் கொண்டே விரைப்பாய் இருந்தது..
ஆசையாய் கெஞ்சி கேட்கும் அவளது முகத்தை பார்த்து பாவமாய் போனது அவனுக்கு… இரு கைகளையும் தொடையில் ஊன்றி வேகமாய் எழுந்து நின்றவன்… ஒரு பெருமூச்சுடன் அவளை சோக கீதமாய் பார்த்துவிட்டு… வேற ஏதாவது வேணும்னா போன் பண்ணு நான் வரேன்… கஞ்சியை குடிச்சிட்டு நல்லா தூங்கு என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் ஆதி.
வாய் விட்டு கேட்ட பின்பும் மறுத்து செல்பவனை… என்ன செய்ய முடியும்… வேகம் மூச்சுகளுடன் கோவித்துக் கொண்டவள்… ஐ ஹேட் யூ… என்றாள் சத்தமாய்… அறையை விட்டு வெளியே சென்று கதவை அடைக்க சென்றவன்… பின் கதவின் இடைவெளியில் ஒரு கணம் உறுத்து அவளை பார்த்துவிட்டு “தேங்க்யூ,” என்று கூறிவிட்டு கதவை அடைந்து சென்றான்.
முகம் சிறுத்து விட்டது பெண் அவளுக்கு… அழுகை வேறு முட்டிக்கொண்டு வந்தது… இனிமேல் உங்க கிட்ட ஏதாவது கேட்டேனா பாருங்க… ஐ ஹேட் யூ சோ மச் என்று கூறியபடி கட்டிலில் குப்புற படுத்தாள்.
விட்ட யோசனையை மீண்டும், விட்ட இடத்தில் இருந்து தொடங்குவதில் பெண்கள் கெட்டிக்காரர்கள். அதன்படி
அன்று ஒரு நாள் ஒரு மீட்டிங்கு சென்று இருக்கும் பொழுது ஒரு விளம்பர மாடல் அழகி… அருணின் தோழி என்று அறிமுகமாகி, வேகமாய் அவனை அணைத்து விடுவித்து, “யூ ஆர் சோ மேன்லி” என்று மெலிதாய் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து விலக… அந்தப் பெண்ணை இறுகிய முகத்துடன் கல்லையும் மண்ணையும் பார்ப்பது போல் பார்த்து வைத்தான்…. “எச்சி பண்ணிட்டியா நாயே” என்பது போல் கடுமையாக முறைத்து விட்டு… அருகில் இருந்த டிஷுவை எடுத்து கன்னத்தை அழுத்தி துடைத்துவிட்டு கைகளை கழுவி விட்டு வந்து… சுற்றி இருந்தவர்களை ஆ… என வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்று இருந்த மலரிடம் வந்து,
எனக்கு என்ன நடந்தா உனக்கு என்ன நீ நல்லா வேடிக்கை பாரு… என்று உறுமி விட்டு சென்றான். (பெண்ணுக்கு எப்படி அநியாயம் நடக்கும் போது தன்னவன் வந்து தன்னை காக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ… அதுபோல்… தன்னவனுக்கு முன் எனக்கு ஒரு அநியாயம் நடக்கிறது, கண்டுகொள்ளாமல் இருக்கிறாளே என்ற ஆதங்கம்)
“நான் என்ன பண்ண முடியும்” என்று முணுமுணுத்துக் கொண்டே அவனை பின்தொடர்ந்தாள்.
இன்று இதையெல்லாம் சாவகாசமாக நினைத்து பார்த்தாள்…
மற்ற பெண்களிடம் காட்டும் வெறுப்பையும்… தன்னிடம் காட்டும் ஒதுக்கத்தையும்… ஒன்றாக சேர்த்துக் கொண்டாள் மலர். அன்று அவனிடம் தவறாக நடந்து கொண்ட பெண்ணை போல் என்னையும் நினைத்து இருப்பாரூ… அலையுறேன்னு நினைச்சிருப்பாரூ… என்று நினைக்கும் போதே நெஞ்சு விம்மியது…
ஆகமொத்தம் பொண்ணுங்களே பிடிக்காதுன்னு சொன்னது உண்மைதான் போல… இவருக்கு ஏன் பொண்ணுங்களை கண்டால் புடிக்க மாட்டேங்குது… ஏதாவது பெரிய காரணம் இருக்குமோ… ஏதாவது லவ் ஃபெயிலியர் ஆக இருக்குமோ… பொண்ணுங்கள கண்டா அலர்ஜியா இருக்குமோ… யாரோ ஒருத்தி ஏமாற்றிவிட்டு சென்றதற்காக ஒட்டுமொத்த பெண் இனத்தையே வெறுக்கும் அனைத்து ஆன்ட்டி ஹீரோ ஸ்டோரிகளும் ஞாபகத்திற்கு வந்து போனது… ஒருவேளை அப்படி இருக்குமோ… ஒருவேளை இப்படி இருக்குமோ… என்று ஆயிரம் காரணங்களால் தன்னையே குழப்பிக் கொண்டு… சரியான காரணத்தை கண்டுபிடிக்கிறேன்… என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்…
இதை எதுக்குமா நீ கண்டுபிடிக்கணும் வாய் விட்டு கேட்டா அவனே சொல்லுவான்… என்று மனசாட்சி எடுத்துரைக்க… ஒரு ஹக் கேட்டு கூட கிடைக்கல… கேள்விக்கு பதில் மட்டும் கிடைக்கவா போகுது… வேணாம்… நானே கண்டுபிடிக்கிறேன்… என்று உறுதி கொண்டவள்… மருந்தின் உபயத்தில் உறங்கிப் போனாள்…
இரவு உணவு உடன் ஆதி தான் வந்து அவளை எழுப்பினான்…
அவனிடம் எதுவும் பேசவில்லை.. ஏறெடுத்தும் அவன் முகத்தை பார்க்கவில்லை… மூஞ்சியை மூஞ்சூர் போல் வைத்திருந்தாள்… கோவித்துக் கொண்டிருப்பவளை பார்க்க அள்ளி முத்தமிட ஆசை வந்தது… முத்தமிட்டு முத்தமிட்டே அந்த கோவத்தை தணிக்க ஆசை… ஏக்கம் மூச்சாய் வெளிவந்து காற்றோடு கலந்து போனது… உணவுக்கு பின் மருந்துகளை கொடுக்க சமத்தாக வாங்கி முழுங்கினாள்… அனைத்தையும் கொடுத்த பின் அவன் அறைக்கு செல்லுவான் என்று எதிர்பார்க்க தலகாணியை எடுத்து சோபாவில் போட்டு படுத்தான் ஆதி.
என்ன நீங்க இங்க படுக்கிறீங்க…
அன்னைக்கே நான் பயமா இருந்தா சோபால படு நான் பாத்துக்குறேன்னு சொன்னேன் அதை கேட்காம ரூமுக்குள்ள வந்து போன் சைலன்ட்ல போட்டுட்டு கதவை தாழ்பாள் போட்டு உள்ள ஃபீவர் ஹை ஆகி மயங்கி விழுந்தா யார் வந்து பார்க்க முடியும்…
இல்ல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல நான் என்ன பார்த்துப்பேன் நீங்க உங்க ரூமுக்கு போங்க என்றாள் கோபமாய்…
நான் இங்கதான் படுப்பேன்… நீ போய் தூங்கு என்றான் மிரட்டலாய்…
அதற்கு மேல் அடம் பிடிப்பவனிடம் எதுவும் பேச முடியுமா என்ன… அவள் சென்று பெட்டில் படுத்துக் கொண்டாள்… மாலையில் உறங்கிய காரணத்தினால் தூக்கம் வருவனா என்றது… அவனும் தூங்கவில்லை என்று புரிந்தது அவனுடைய உயரத்திற்கு சோபா முழங்கால் வரைக்கும் மட்டுமே இருந்தது… புரண்டு புரண்டு படுத்து கொண்டு இருந்தான்… நேற்றைய இரவும் மீட்டிங் இருந்ததால் அவன் தூங்கவில்லை என்று தெரியும்… பாக்கவே பாவமாக இருந்தது எழுந்து அவன் அருகில் சென்றாள்…
பக்கத்தில் சென்று “க்கும்” என்று செரும…
தலைக்கு மேல் கைகளால் கண்ணை மறைத்திருந்தவன் விலக்கி என்ன என்பது போல் பார்த்தான்…
நீங்க பெட்ல படுத்துக்கோங்க நான் சோபால படுத்துகிறேன் என்றாள்…
ஏன் என்பது போல அவன் புருவத்தை தூக்க…
இல்ல இது என்னோட ஹைய்ட்டுக்கு கரெக்டா இருக்கும் உங்களுக்கு இது கம்ஃபர்ட்டபிளா இல்லனு நினைக்கிறேன் என்றாள்…
காய்ச்சல் உனக்கா? எனக்கா? என்றான்…
எனக்கு தான்… பட்.. என்னால நீங்க தூங்காம இருக்கும் போது நான் போய் பெட்ல படுத்து தூங்க மாட்டேன் என்று கையை கட்டிக்கொண்டு அவன் பக்கத்திலேயே அமைதியாக, அதே சமயம் பிடிவாதமாக நின்றாள்…
அவள் பிடிவாதம் அறிந்தவன், எழுந்து பெட்டின் அருகே சென்றான்… அதில் படுக்கத்தான் போகிறான் என்று நினைக்க அதிலிருந்து பெட்ஷீட் எடுத்து கீழே விரித்து தலகாணி ஒன்றை எடுத்து கீழே போட்டவன்… நீட்டி நிமிர்த்து தரையில் படுத்து விட்டான்…
அவனையும் அவன் செயலையும் பார்த்து கடுப்பானவள்… ஏன் கீழே படுக்குறீங்க…
கீழ படுக்குறவங்க எல்லாம் மனுஷங்களா தெரியலையா…
ஓஹோ என்றவள்… அடுத்த பெட்ஷீட்டையும் தலகாணியும் பெட்டின் மறுபக்கம் தரையில் விரித்து கீழே படுத்துக்கொண்டாள்… இப்பொழுது கட்டிலின் அடியில் உள்ள இடைவெளியில் இரண்டு பேரும் ஒருத்தர் முகம் ஒருவர் பார்க்கலாம்…
இப்ப நீ மேல படுக்க போறியா? இல்லையா? என்று அவன் உறும…
பெட்ல படுத்தா உருண்டு வந்து உங்க மேல தான் விழுவேன் பரவாயில்லையா? என்றாள் அவள்.
அவள் சொன்னதைக் கேட்டு உலுக்கி விழுந்தவன்… இவ்ளோ பெரிய பெட் ஒருத்தி உருள்றதுக்கு பத்தாதா…
ஆழ்ந்த தூக்கத்துல எந்த பக்கம் விழுவுன்னு எனக்கு எப்படி தெரியும் ஒருவேளை உங்க மேல விழுந்தா உங்களுக்கு ஓகேவா? என்றாள் பதிலுக்கு பதில்…
இப்பொழுது மட்டும் அவன் சரி என்று கூறினால் வீம்புக்கு என்றே உருண்டு வந்து மேலே விழுக வாய்ப்பு உண்டு… ஏற்கனவே அவன் மேல் ஏகபோக கடுப்பில் இருக்கிறாள்… அதனால் அமைதியாக நெற்றியின் மேல் ஒற்றை கையை வைத்து மற்றொரு கையை நெஞ்சின் மேல் வைத்து உறங்க தயாரானான் ஆதி.
மலர் தான் ஒருகளித்து படுத்து தூங்கும் ஆடவனை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள்… அவன் படுத்திருந்த நிலையில் அவனது மூக்கு எடுப்பாய் தெரிய… பென்சில் ஸ்கேல் வைத்து வரைஞ்ச மாதிரி மூக்கு என்ன இவ்வளவு ஷார்ப்பா இருக்கு… இதுக்காகவே இவரை சைட் அடிக்கலாம் போலயே… அவளின் கண் மெல்ல கீழே இறங்கி அவன் உதட்டுக்கு வர…
மலர்… தூங்கு… என்னையும் தூங்க விடு… ஐ அம் சோ டயர்ட்… என்று அவன் அதட்ட…
அய்யய்யோ… தூங்கிட்டாருனு தானே நினைச்சோம்…. கண்ண மூடி தானே படுத்திருந்தாரு நம்ம பார்க்கிறது எப்படி இவருக்கு தெரிஞ்சது… மாட்டிகிட்டே மலரு மானமே போச்சு… என்று புலம்பியபடி கண்ணை இறுக்க மூடி படுத்துக் கொண்டாள்…
அவள் செயலை கண் மூடியபடியே உணர்ந்தவன்… சிறிது நேரத்தில் அவள் தூங்கியதை சீரான மூச்சு எடுத்து காட்டியவுடன் தான்… நிம்மதி பெருமூச்சுடன் விரைப்பாய் இருந்த உடலை தளர்த்தி இயல்பிற்கு வந்தான் ஆதி… “மனுசன படுத்துறா” என்று முனங்கியபடி ஒரு சாய்ந்து படுத்து… அவளின் வதனத்தை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்… அவன் வருடங்களாய் தேடிய முகம் அவன் அருகில்… எழுந்து வந்தவன் பூ போல அவளை கைகளினால் மெல்ல தூக்கி பெட்டின் நடுவில் படுக்க வைத்தான்… தூக்கி வந்ததில் அவளது நைட் டிரஸ் கீழிறங்கி அங்கங்கள் காட்சியளிக்க… அதை சரி செய்து மேலே போர்வையை போர்த்தி விட்டு… அவள் அருகே படுத்து தலைக்கு ஒரு கை கொடுத்து நிறுத்தி அவளது முகத்தை தான் பார்த்துக் கொண்ண்டே…. இருந்தான்….
காலையில் இதே அறையில் ரத்தத்திற்கு நடுவே பார்க்கும் பொழுது ஒரு கணம் இதயம் நின்று துடித்தது… அவன் தவித்த பரிதவிப்பு அவனுக்கு மட்டுமே தெரியும்…. உயிர் போய் உயிர் வந்தது.
ஒரே ஹக்… அவள் கெஞ்சியது நினைவு வர… மெல்லிய சிரிப்பு அவன் இதழில், அது அவன் வாழ்நாள் கனவு என்று அவளுக்கு தெரியாதே… அவன் மொத்தமும் அவளுக்கு தானே கொஞ்ச நாள் காத்திரு சிட்டு… இப்பொழுதெல்லாம் அவளிடமும் ஒரு மாற்றம் தெரிவதை அவனும் கவனிக்கிறான்… ஆனால் அது எந்த வகையான மாற்றம் என்பதை அவன் தெரிந்து கொண்டு பின் தன் காதலை உரைக்க எண்ணி உள்ளான்….
ஒருவேளை அவனுக்கு தேவையான மாற்றம் அது இல்லாமல் இருந்தால் அதை ஆதியால் தாங்கிக் கொள்ள இயலுமா? இல்லை அவள் வேணாம் என்று தான் விட்டு விடுவானா… அதன் விளைவுகள் எப்படி இருக்கும்…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️