அசுரன் 73

அசுரன் 73 

 

மொத்த ஆண்களின் கூட்டமும் அவளை நெருக்க ஆரம்பிக்க மூச்சு முட்டியது மலருக்கு…

 

தன் முகத்தை இரு கைகளாலும் மூடி சுவரின் பக்கம் திரும்பியவள்…. பயத்தில் வியர்த்து வழிந்து நடுங்கியது அவளின் உடல்.

 

சில கணங்கள் கழித்து தனக்கு எதுவும் நேராமல் இருப்பதினால், என்ன ஆனது என்று தனது ஒரு கையை விலக்கி தலையை பக்கவாட்டில் திரும்பி பார்க்க… 

 

நரம்போடிய  இரும்பு கை ஒன்று அவளை அரணாய் தாங்கி நின்றது… பட்டென்று திரும்பி பார்க்க அவன் நெஞ்சிலேயே உரசி நின்றாள் மலர் அவ்வளவு நெருக்கம்…  மான்குட்டி போல் சிங்கத்தின் கைக்குள் அடங்கிக் கொண்டாள் மலர்.

 

சுற்றிலும் கூட்டம் அவனை நெருக்கி அழுத்தி தள்ள அவளின் இரு பக்கமும் இருக்கைகளை சுவரில் ஊன்றி… அவளின் மேல் பாரத்தை போடாமல் இந்த அளவு விலகி நிற்பதற்கெ பெரும்பாடு பட்டான் ஆடவன்….

 

திரும்பியவள் தனது முட்டை கண்ணை உருட்டி மேலே நிமிர்ந்து  ஆதியை பார்த்த நொடி… யோசிக்கவே இல்லை… தேவா… என்று அழைத்து… பட்டென்று அவன் மார்பில் முகத்தை புதைத்து இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.. இனி உன்னை விடவே மாட்டேன் எனும் விதமாய்… இரும்பு உடல் இறுகி விரைத்தது.. 

அவள் உடலில் இருந்த நடுக்கம் கூறியது அவள் எவ்வளவு பயந்திருக்கிறாள் என்று… அவ்வளவு எளிதில் அவளை விட்டு விடுவானா என்ன… அவளின் உயிர் அவளது அல்ல… அவனது… சிறிது நேரம் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு, சுயம் தெளிந்தது… அய்யய்யோ திட்ட போறாரு..  என்று பயந்தபடியே… அணைப்பை விடுவித்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

 

முகத்தில் டன் கண்கணக்காய் கடுகடுப்புடன் பக்கவாட்டில் முகத்தை திருப்பியபடி நின்று இருந்தான் ஆதி…. 

ஏன்டி…. என்னை இப்படி சித்திரவதை செய்கிறாய் என்ற ஆதங்கம் உன்னை தாண்டி செல்ல முடியவில்லை என்ற இயலாமை உன்னிடத்தில் மட்டுமே என்னை தொலைக்கிறேன் என்ற கோபம்… இதோ ஒற்றை அணைப்பிற்கே உடம்பில் உயிர் உருகி வழிந்து ஓடுவது போல் நின்றான் ஆறடி ஆடவன். அதுவும் அவளின் “தேவா” என்று அழைப்பு காதினுள் நுழைந்து இதயத்தை கீறி உள்ளே பாய்ந்தது… இந்த “ஆதி சார்” அவளின் “தேவா”வாக மாற இன்று தான் நேரம் கூடி வந்துள்ளது போலும்… அவளின் அன்பு ஒரு அளவுடன் நிற்கும்… அவனின் அன்பு ஆழிப்பேரலை போல் அவளைக் கண்டால்  பெருக்கெடுக்கும்.. அதை சொல்லால், செயலால் வெளிக்காட்டும் நேரம் அல்ல இது…

 

தேன் விழி அழகி இவ்வளவு நெருக்கத்தில் நிஜத்தில் அவள் கள்வனின் அருகில்… ரசித்தது கண்கள்… 

ஓடி வந்திருப்பான் போலும் தலைமுடி கலைந்து நெற்றியில் விழுந்து பரப்பி இருந்தது.

வேகம் மூச்சுகள் வாங்குகிறான் ஏன் என்று தெரியவில்லை அவனுடைய மூச்சுக்காற்று அவள் முகத்தில் படும்போது தீயாய் சுடுகிறது இவ்வளவு வெப்பமா? ஒருவேளை காய்ச்சலாக இருக்குமோ? அவளது ஆராய்ச்சி…

 

மனதுதான் யோசித்துக் கொண்டிருந்தது பார்வை அவன் முகத்தை விட்டு அகலவில்லை…. 

அவனின் உயர்ரக பெர்ஃப்யூம் வாசனை உடன் சேர்ந்த அவனின் ஆண் வாசனை அவளை ஏதோ செய்தது. அவன் வாசனை மட்டுமே உயிர் மூச்சில் கலந்து நுரையீரல் முழுவதும் நிரம்பி வழிந்தது..மலரின் வாசம் தான் மற்றவரை மயக்குமா?…  இதோ மலர் மயங்கி இருந்தது அவனின் வாசத்தில்….  

 

சிறிது நேரத்திலேயே கூட்டத்தின் நெரிசலாலும் காற்று பற்றா குறையினாலும்… இல்லை வேறு என்ன காரணமோ உடம்பு முழுக்க வியர்த்து ஊற்றியது ஆடவனுக்கு… அவனுடைய வெண்ணிற சட்டை வியர்வையில் நனைந்து உடம்புடன் உடம்பு ஒட்டியபடி இருக்க… கட்டுடல் கண்ணுக்கு விருந்தானது…

அவன் நெற்றியில் ஆரம்பித்து வியர்வை மெல்ல நழுவி வந்து அவன் கண்களுக்கு இடையே பயணித்து அவன் கூர் மூக்கு நுனியில் தேங்கி நிற்க…. அவளின் கண்கள் அங்கு தான் படம் எடுத்தது.. ஏற்கனவே அந்த கூர் மூக்கின் மீது ஓர் பேரார்வம்… வைரக்கல்லாய் உருண்டு வந்த வியர்வைத் துளி… பட்டென்று இவள் நெத்தியில் விழுந்தது… கூசி போனாள் மங்கை. அவளது வியர்வையும் அதனுடன் கலந்தது…. வியர்வையின் சங்கமத்திற்கே உடல் சிவக்குமோ? சிவந்தது பெண்ணவளுக்கு…

 

அவள் நெற்றியில் இரு வியர்வை துளிகளும் சங்கமித்து, வழிந்து ஓடி அவள் குட்டி மூக்கில் தேங்கும் போது தனது சேலை முந்தியால் அதற்கு முக்தி கொடுத்தாள் மலர்…

 



 

 

அவளைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் ஆடவனின் மூச்சுக்காற்று அவள் மேனியில் படும்பொழுது எல்லாம்… மயிர் கூச்சறிந்து உடல் சிலிர்த்து சிவந்தது…

 

ஆடவனின் நிலையோ அதைவிட படுமோசம்… பந்தய குதிரை போல் இதயம் ஓடி துடித்தது. வேகம் மூச்சுக்கள் வெப்பமாய் தகித்தன. பெண்ணவளின்  இவ்வளவு நெருக்கத்தை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை… அவளை நேர்கொண்டு பார்க்க சக்தி அற்று தோய்ந்து போய் நின்று இருந்தான்..

 

அவனின் இயலாமையை சோதிக்கவே..  இடப்பற்றாக்குறையால், மலர் ஒவ்வொரு முறையும் முகத்தை திருப்பும் போதெல்லாம் அவளுடைய மூக்கும் இதழும் அவன் நெஞ்சின் மேல் மெலிதாக உரசி செல்ல…  மார்பில் இருந்த முடி மட்டும் இல்ல அவன் உடலில் இருந்து அத்தனை முடிவுகளும் சிலுப்பிக் கொண்டு நின்றன… உடலில் ஓடிய ரத்தம் அனைத்தும் அவன் கண்களுக்குள் இறங்கியது போல் கண்கள் ரத்த சிவப்பாய் மாறின… வேண்டாம் என்று நினைத்து திரும்பினாலும் அவனின் கருவிழிகள் அவளின் தேன் விழியை தான் கொக்கி போட்டது…. அவளின் ஒவ்வொரு உதடு தீண்டலுக்கும்  ஆடவனின் தேகம் தீ பற்றி எரிய ஆரம்பித்தது.

 

இந்த நிலைமையை இன்னும் மோசமாக்க யாரோ ஒருவரின் போனில்  பாடல் ஒலித்தது….

தீண்ட தீண்ட மலர்ந்ததென்ன…

பார்வை பார்த்து கலந்ததென்ன…

எனது உதடுகள் உந்தன் மார்பில்…

போகும் ஊர்வலங்கள்…

நகங்கள் கீறியே முதுகில் எங்கும்…

நூறு ஒவியங்கள்…

இந்த வரிகளைக் கேட்டதும், அவளின் கனவின் நக காயங்கள் நினைவு வர  கோதுமை நிறத்தழகி முகம் முழுவதும் வெட்கத்தால் சிவந்து சிவப்பழகி ஆனாள். 

அவளின் முக சிவப்பு சொன்ன செய்தியில் ஆடவனின் ஹார்மோன் தறிக்கெட்டு ஓடியது…

 

ஆண் : எங்கு துவங்கி… எங்கு முடிக்க…

எதனை விடுத்து… எதனை எடுக்க…

என்ன செய்ய…. ஏது செய்ய… உரச உரச…

உடல் முழுதும் உரசி நிற்க…. தலைக்கு ஏறிய டன் கணக்கு மோகத்தில் எச்சில் வற்ற அதை கடினப்பட்டு விழுங்கிக் கொண்டான்.

பெண் : காதல் தீ எரிய…

கண்ணில் நீர் வழிய…

நான் நின்றேன்… அருகில் நின்றேன்…  

ஒன்று தலையில் ஓங்கி அடித்தது போல் தலை சுற்றி, மயக்கம்… இல்லை… இல்லை…, அதை ஒரு வித போதை என்று கூட சொல்லலாம்…. செல்போன் வெளிச்சத்தின் உபயத்தில்…  அவள் தங்க நிறமென ஜொலித்தாள். காதோரம் சுரண்டிருந்த முடி…. காதில் ஆடிய ஜிமிக்கி ஆடவனை மொத்தமாய் கவிழ்த்திருந்தது… முகம் முழுவதும் முத்து முத்தாய் வேர்வைத் துளிகள் மின்னின… முகம் கடந்து கழுத்தில் பயணித்து அவை சங்கமிக்கும் இடம் பொறாமை தீயை கொழுந்து விட்டு எரிய செய்தது…

 

ஆண் : மெல்ல நமது கால் விரல்…

ஒன்றை ஒன்று தீண்டிட…

உன் காது நுனியின் ஒரமாய்…

கொஞ்சம் கொஞ்சம் கூசிட…

 

கூச்சத்தில் பெண்ணவளின் கால் விரல்கள் அனைத்தும் பூமியில் அழுத்தமாய் பதிந்தது…

 

அவனின் மூச்சுக்காற்று படும் இடமெல்லாம் சிவந்த சிவப்புக்கள் அவனை முத்தமிட  வா… என்று அழைப்பது போல் இருந்தது.

 

அவள் இதழின் வரிகளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்… அவன் நெற்றியில் இருந்து வழிந்த வியர்வை இப்பொழுது விழுந்தது அவள் இதழின் மேல்..

அதைப் பார்த்ததும் ஆதியின் ஆண்மை நரம்புகள் புடைதெழுந்தன… 

“மலரிதழில் பனித்துளி” மனதிற்குள் கவிதை எழுதினான்…

 

பெண் : உன்னை கலந்துவிட என் உள்ளம் தவித்திட…

கால்கள் பூமியுடன் கல்லாகி கிடந்திட…

வார்த்தை உதடுகளில் வழுக்கி விழுந்திட…

உனக்குள் எனக்குள் நெருப்பு எரிந்திட…

இதற்கு மேலும் வியர்வைகளின் சங்கமம் அவளால் தாள முடியாமல்…

தனது சேலையால் , தனது இதழை ஒற்றி எடுத்தவள். மெல்ல கால்களை உயர்த்தி…. அவனது முகத்தில் இருந்த வியர்வை துளிகளை துடைத்து விட்டாள்…  கண்களை மூடி அந்த போதை கணத்தை அனுபவித்தான் ஆடவன்… தன்னவளின் சேலை வாசத்தில் மோட்சம் பெற்றது போல் ஓர் உணர்வு…. போதும்டா இந்த வாழ்க்கை இன்றே மரணித்தால் கூட தேவலாம்… என்று தோன்றியது அவனுக்கு…

ஆண் : காற்று கலைத்துவிடும் கேசம் தள்ளிவிட…

விரல் தீண்ட தீ தீண்ட…

ஆண் : என்னை தள்ளி விடுவது போல்…

உண்மையாக தீண்டுகிறாய்…

கண்கள் விழித்து பார்ததுதான்…

கனவு நடந்தது அறிகிறோம்…

வியர்வையை துடைத்து விட்டு கைகளை கீழே இறக்கி சென்றவள்… ஒரு கணம் நின்று அவனின் இதயத் துடிப்பை உணர்ந்தாலோ என்னவோ… தனது நடுங்கிக் கொண்டிருக்கும்  கையை அவனது இதயத்தின் மேல் மெதுவாய் வைக்க… அது அதிவேகமாய் துடித்துக் கொண்டிருந்தது… ஏன் இவ்வளவு வேகம் எதற்காக இந்த படபடப்பு… விட்டால் இதயம் குதித்து வெளியே வந்து விடும்.. அவ்வளவு வேகம்… ஆனால் ஏன் என்று கேள்வியாய் ஆடவனின் முகம் பார்க்க… அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்… கண்கள் இரண்டும் நேர் நோக்க… அந்த பார்வை சொன்னது “இப்பொழுது புரிகிறதா நான் ஏன் உன் அருகாமையை தவிர்க்கிறேன் என்று” சொல்லாமல் சொல்லியது.

 

அந்தப் பார்வை உச்சி முதல் உள்ளங்கால் வரை துடிதுடிக்க வைத்தது பெண் அவளை. தறிகிட்டு தான் ஓடுகிறது மூளையும் மனமும் அவனின் பின்னால்… கொஞ்சம் நெஞ்சு கூட வலிக்கிறது…

 

இதற்கு மேலும் தாங்காது என்று மெதுவாய் அவள் இதழ்களை நோக்கி கீழே குனிந்தான் ஆளை மயக்கும் ஆடவன்…  அவன் நோக்கமறிந்து கண்ணை மூடி கட்டுண்டாள்  பெண்.

 

மெல்ல இதழ் கடந்து, கன்னம் உரசி  அவள் காது மடலை அடைந்த அவன் இதழ்கள்… சொல்லியது.. ப்ப்…ளீஸ் சி..ட்டு… கையை எடு… I can’t.. ஒவ்வொரு வார்த்தையாய் பலத்த மூச்சுகளுக்கிடையே காதுக்குள் அவன் கிசுகிசுத்தது பெண் அவளை மொத்தமும் செயலிழக்க செய்தது.

உண்மையில் இந்த குரலில் உருகி தான் போனாள் பெண்ணவள். கர்ஜனை குரலை மட்டும் கேட்டவள்… முதன்முதலில் அவளுக்கான மயக்கும் குரலை உணர்ந்தாள்.  

  

உன் அருகாமை என்னை மூச்சடைக்க செய்கிறதே…  சிறுமூச்சுக்காற்றும் தீண்டலிலும் உடல் சிலிர்த்து சாகப் போகிறேன்…  காதலிக்கிறேன் என்று வார்த்தையால் கூறவில்லை…. ஆனால் அந்த காதலை அந்த வார்த்தைகளையும் தாண்டி உள்ளத்தில் உணர்த்தி இருந்தான்… பார்வையால் அவளுக்குள் கடத்தி இருந்தான் 

 

மார்பில் இருந்து கையை அவள் விலக்கிய பின் தான்… சிறிதெனினும் ஆசுவாசமடைந்தான்  அழகன் நிம்மதி மூச்சோடு.

 

கதவு திறக்க கூட்டம் கலைந்தது… இவ்வளவு நெருக்கம் இருவருக்கும் நரகம் எனும் தெரிந்தே… அதில் தொலைய தான் நினைக்கிறார்கள்  இருவரும். 

 

கூட்டம் கலைந்து போன பின்… ஆதி கை இரண்டையும் இறக்க… அவனைப் பார்த்துக் கொண்டே நகர்ந்து சென்றாள் மலர்.. நீ போ நான் வரேன் என்னும் படியாக அவன் கண் ஜாடை காட்ட… அவனை விட்டுப் பிரிய மனம் இல்லாமல்…

சேலை முந்தியை கசக்கியபடி அவனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நகர்ந்தாள்…

 

அவள் நகர்ந்ததும் ஸ்கூடி போட்டு இருந்த ஒருத்தனின் டி ஷர்ட் கொத்தாக பற்றி பின்னால் இழுத்தான் ஆதி..

 

நீதானே.. அந்த பாட்டு போட்டவன் என்று கேட்க…

 

Yes ஜி … அந்த சிச்சுவேஷனுக்கு அந்த சாங் கரெக்டா இருக்கும்னு தோணுச்சு அதனால போட்டேன் ஜி… என்றவன்.. நான் யார் தெரியுமா… வளர்ந்து வரும் Dj என்று கைகளால் குரளி வித்தை காட்டினான்… சீன் ஓகே ஜி… ஆனா கிளைமாக்ஸ் தான் நான் எதிர்பார்த்த மாதிரி நடக்கல ஜஸ்ட் மிஸ் என்றான் ஒரு கையை மடக்கி மற்றொரு கையில் குத்தியபடி..

 

மனுஷன் அவஸ்தை தெரியாம பாட்டு போட்டுக்கிட்டு… என்று முணுமுணுத்தவன்… எல்லாரும் உயிர் பயத்துல இருக்கும்போது உனக்கு  பாட்டு கேக்குதா என்றான்… ஆதி.

 

ஒரு கஷ்டமான சூழ்நிலைல ஒரு என்டர்டைன்மென்ட் வேணாமா ஜி அதுக்கு தான்… ஆனா உங்கள பாத்தா உயிர் பயத்துல இருந்த மாதிரி தெரியலையே ஜி… ஜாலியா இருந்தீங்க…என்றான் ஒரு மார்க்கமாய்…

 

போடா… அடி வாங்காம போயிரு… இப்ப நான் உன்ன அடிக்கிற மூடுல இல்ல என்று ஆதி… கண்ணை மூடி தன்னை சமன்படுத்திக்கொண்டு எச்சரிக்க… 

 

ஐ நோ ஜி… நீங்க என்ன்ன அடிக்கிற மூடுல இல்லன்னு எனக்கு தெரியும்… 

என்று ஆதியின் காதருகே வந்து கிசுகிசுத்தவன்… உங்க வெட்டிங் க்கு என்ன மறக்காம கூப்பிடுங்க… என்று ஆதியின் கையை பிடித்து வாழ்த்து கூறிவிட்டு ஏதோ ஒரு பாட்டுக்கு தன் போக்கில் நடனமாடிக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அவன்.

 

என்ன சோதிக்கிறதுக்குன்னு எங்க இருந்துடா வர்றீங்க..  எனும் படி அவனைப் பார்த்துவிட்டு மலரை தேடி சென்றான் ஆதி.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top