அசுரன் 74

அசுரன் 74 

 

காரில் வரும் பொழுது மலரின் சிந்தனையில்… ஒரு பெரிய சந்தேகம் வந்தது…

ஒருவேளை இவருக்கு கிஸ் கொடுக்க தெரியாதோ? நல்ல வேளை சிந்தனையை அதோடு நிறுத்திவிட்டாள்… அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல நினைக்கவில்லை…

பாவி பையன்… அவளை இவ்வளவு தூரம் நினைக்க வைத்திருந்தான்… 

 

மனதில் எதையோ நினைத்துக் கொண்டிருந்தவள் திடீரென்று கார் ஓட்டிக்கொண்டு இருந்தவனிடம்…

 

நீங்க எத்தனை வருஷமா சிங்கிளா இருக்கீங்க என்று கேட்டாள்…

 

அவளின் கேள்வியால்… திடுக்கிட்டவன்… அவள் ஏதோ ஒரு யோசனைகள் குழம்பி இருப்பதை தெரிந்து… அவளை மேலும் குழப்ப விரும்பாமல்..

 

பிறந்ததிலிருந்து… என்று பதில் அளித்தான் கார் ஓட்டிக்கொண்டே…

 

ஓகோ… என்று தலையாட்டியவள் சிறிது யோசித்து விட்டு… நீங்க இந்த மூவி எல்லாம் பார்க்க மாட்டீங்களா.. என்று கேட்க…

 

எதுக்கு இப்போ இதெல்லாம் கேக்குற…

 

இல்ல நான் வீட்டுக்கு வந்ததிலிருந்து நீங்க மூவி பார்த்து நான் பார்த்ததில்லை, அதனால கேட்டேன் என்றாள் ஒரு கேவலமான சமாளிப்பாக…

 

ஹாலிவுட் ஆக்சன் மூவிஸ் எல்லாம் புடிக்கும் அப்பப்ப பார்ப்பேன் இப்போ டைம் இல்ல என்றான்.. அவன்…

 

ஹாலிவுட் ஆக்சன் மூவிஸ் ல.. நிறைய கிஸ் சீன் இருக்குமே… அத பாத்து கூடவா கத்துக்கல… ஒருவேளை படத்த ஓட்டிவிட்டு பார்ப்பாரோ… என்று தனது விரல் நகத்தை தனது நுனி பல்லால் கடித்தபடி யோசித்துக் கொண்டிருந்தாள் மலர்…

 

காருக்குள் வந்து அமார்ந்தவளை ஒரு முறை இழுத்து வைத்து அழுத்தமாய் முத்தமிட்டு விடலாமா? என்றுதான் அவனும் யோசித்தான்… அவன் உடலும் மனமும் பேயாட்டம் போட்டுக் கொண்டிருந்தது… அவள் ஸ்பரிசம் கேட்டு…  ஆரம்பிப்பதில் அவனுக்கு எந்த தயக்கமும் இல்லை…  ஆனால் அதை முடித்து விடுவானா என்பதில் தான் சந்தேகமே… அகோர பசியில் இருக்கும் ராட்சசனிடம்  மாட்டிக்கொண்ட நொறுக்கு தீனி போல் ஆகிவிடும் அவளது நிலைமை… இப்பொழுதும் அதே யோசனையில் தான் இருமனதாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான் ஆதி… உணர்வுகள் அடங்கு வேணா என்று உள்ளுக்குள் ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தது… அவள் யோசனை செய்யும் தோரணையிலேயே தெரிந்தது ஏதோ ஏடாகூடமாகத்தான் யோசிக்கிறாள் என்று…

 

என்ன பலமான யோசனைல இருக்க என்று ஆதி கேட்க…

 

அது யாரு சிட்டு… என்று கேட்டாள் தனது அடுத்த சந்தேகத்தை…

 

யாருன்னு கேட்டா எனக்கு என்ன தெரியும்..  என்றபடி  தோள்களை ஏற்றி இறக்கினான் அவள் கள்வன்.

 

அது நீங்க தான் சி..ட்டு கைய.. எடு அப்படின்னு சொன்னீங்க… என்றாள் பக்கவாட்டாய் முகத்தை திருப்பி  தயங்கியபடி….

 

இல்லையே நான் ப்ளீஸ்.. சீக்கிரம்.. கைய..எடுனு தானே சொன்னேன்… என்றான் நம்பும்படியாக… இருந்தாலும் அந்த போதை கணத்தை நினைக்கும் போது..  இருவரின் உடலும் ஒரு முறை சிலிர்த்து அடங்கியது…

 

அவனின் சீரியஸான  முகபாவணையை கவனித்தவள்… 

அப்படித்தான் சொல்லி இருப்பாரோ… நமக்குத்தான் சிட்டுன்னு கேட்டு இருக்குமா?… எல்லாம் அந்த டிஸார்டர் பண்ற வேலை.. என்று எண்ணிக் கொண்டாள்…

 

என்ன… என்ன சொன்னாலும் நம்புறா… சந்தேகமே படமாட்றா… இவ இப்படியே இருந்தா லைஃப்ல சண்டையே வராது போலவே.. என்று நினைத்தவன்..

சரி… அது யாரு தேவா… தெரியாதது போலவே கேட்டான் அவன்… 

 

அது… அது… என்று தடுமாற்றத்துடன் முழித்தவள்… யாரு அது… எனக்கு தெரியாதே… என்று அவன் பிட்டை அவனுக்கே போட்டாள்…

 

ஓஹோ… தெரியாது… ஹ்ம்ம்… சரிதான்… அப்போ கூடிய சீக்கிரம் இந்த தேவா யார்னு தெரிய வைக்கிறேன்… என்றான்.. சூட்சமமாக…

 

அவன் வார்த்தையின் அர்த்தம் புரிந்தவள்..  காரின் கதவு பக்கம் திரும்பி புன்னகைத்துக் கொண்டாள்.

 

அடுத்த நாள் காலையில் ஆதி அலுவலகம் கிளம்பும்போதே கழுத்தில் டை கட்டி தான் அனுப்பப்பட்டான்… எனக்கு டை கட்ட தெரியாது மா… என்று அவன் சலிப்பாய் கூற…

 

உடலோடு ஒட்டி உரசி நின்று… அவன் கண்கள் அவளை தின்ன… அவள் கண்கள் பேசும் ஆயிரம் பாவனைகளுக்கு நடுவே தனது கழுத்தில் டை கட்டி வழியனுப்புவாள் என அவன் எதிர்பார்த்து நிற்க…

 

நாயகி தன் கழுத்திலேயே டையை கட்டி… அவன் கழுத்தில் மாலையாக போட்டு இறுக்கி விட்டாள்… அதைக் கண்டு ஏமாந்து போனான் ஆதி… உங்களுக்கு கிட்ட வந்து டை கட்டினால் பிடிக்காதுன்னு தான் இப்படி கட்டிட்டு வந்தேன்..  என்று அதற்கான பழியையும் தூக்கி அவன் தலையிலயே போட்டாள் அவள்…

நான் எப்ப அப்படி சொன்னேன் என்பது போல் பார்த்து வைத்தான் ஆதி.. ஏனென்றால் டை வாங்கும் போது இந்த காதல் காட்சியை மனதில் வைத்தே அதை வாங்குவதற்கு ஒப்புக்கொண்டான்… இப்பொழுது அதுவும் இல்லாமல் போனதால் பெருத்த ஏமாற்றம் ஆடவனுக்கு…

 

சரி இன்னைக்கு கிடைச்சது அவ்வளவுதான் என்றான் சலிப்பாய்…

தன் காதல் லீலை நடக்கவில்லை என்ற காரணத்தினாலோ என்னவோ… கழுத்தில் இருக்கும் டை மேல் கோபம் கோபமாக வந்தது… அழுத்தி கீழ் இறக்கி விட்டுக் கொண்டான்…

 

டை கட்டும் பொருட்டு சட்டையின் அனைத்து பட்டன்களும் பூட்டப்பட்டது… அதைப் பார்த்தவுடன் தான் பெரும் நிம்மதி பெண் அவளுக்கு… இனி எப்படி சைட் அடிக்கிறீங்கன்னு நானும் பாக்கறேன் டி… சோ ஹாட் அண்ட் செக்ஸி… என்று உஷா போல் மிமிக்ரி குரலில் பேசியவள்.. 

ஹாட் அஹ இருக்காரா?… இருப்பார் இருப்பார்… இன்னைக்கு இருப்பார்… பழைய பட வில்லிகளை போல் மனதிற்குள் வில்லத்தனமாய் புன்னகைத்துக் கொண்டாள் மலர். 

 

இங்கு ஒருவன்  தன்னையே சுற்றி சுற்றி பலமுறை கண்ணாடியில் பார்த்தவன் ஸ்கூல் பையன் மாதிரி இருக்கு… கட்டாயம் இதை கட்டிக்கிட்டு தான் போகணுமா… எவனோ பொடனிய அழுத்தி புடிக்கிற மாதிரி இருக்கு… கோவம் கோவமா வருது… யாரையாவது இழுத்து போட்டு சாத்தலாம் போல இருக்கு… தேவையா இது… என் மேல் கொஞ்சம் இரக்கம் காட்டேன் எனும் படியாக அவளை பார்த்து வைக்க…

 

நோ… எக்ஸ்கியூஸ்… கண்டிப்பா கட்டிட்டு தான் போகணும்.. ப்ராமிஸ்

பண்ணி இருக்கீங்க மறந்துடாதீங்க…

 

ஒரு ஹக் தான் கேட்டாள்… அப்பவே கொடுத்திருந்தால் உனக்கு இந்த நிலைமை வந்திருக்குமாடா ஆதி… என்று மனதிற்குள் நொந்து கொண்டான்.. 

 

அவன் சுருங்கி இருக்கும் முகத்தை கண்டு… பரிதாப பட்டவள்… வேணும்னா ஒன்னும் பண்ணலாம்.. ஆபீஸ்ல உங்க ரூமுக்குள்ள போயிட்டு இதை கழட்டி வைத்துடுங்கள் திரும்ப நீங்க ரூமை விட்டு வெளியே வரும்போது போட்டுட்டு வந்துடுங்க… என்று அவள் ஆலோசனை வழங்க… எப்படி என் புத்திசாலித்தனம் என்னும் விதமாய் அவள் இரு புருவங்களையும் ஏற்றி இறக்க…

 

இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே எனும்படி ஆதி அவளை இருக்கைகளையும் இடுப்பில் வைத்த படி பார்க்க….

 

ப்ளீஸ்… ப்ளீஸ்..  என்று அவள் மூக்கை சுருக்கி கெஞ்ச… 

 

அதற்கு மேலும் செய்யாமல் இருப்பானா அவளின் காதல் கள்வன்…

 

ஆனாலும் சுருங்கி போன முகத்துடன் தான் காரில் ஏறினான்… அவனின் பாவணையை பார்த்து இரண்டு கைகளாலும் சுற்றி வளைத்து “அழகு புள்ள என் தேவா” என்று அவள் காற்றில் முத்தமிட கள்வன் இதை கண்டு கொண்டான் கண்ணாடியில்… இந்த நாளை புத்துணர்வுடன் வைத்திருக்க இந்த நிகழ்வு போதும் என்று..  வெட்கமுகத்துடன் புன்னகைத்தபடியே காரை ஸ்டார்ட் செய்து இருந்தான்.

 

டை-யை சரி செய்து கொண்டே அலுவலகத்தில் உள்ளே நுழைய… அழகிலும் கம்பிரத்திலும் எந்த குறையும் இல்லை… ஏனோ இன்று சமத்துப் பிள்ளையாகவே தோற்றம் அளித்தான்… இன்று இரண்டு பட்டன்கள் பூட்டப்பட்டிருப்பதால்  சட்டையை கிழித்துக்கொண்டு வெளியே தெரிய போகிறேன் பார்… என்னும் விதமாய் அவனது புஜங்கள் சட்டையை இழுத்து பிடித்துக் கொண்டிருந்தது.. அதுவே அவன் வசீகரத்தை மேலும் அதிகரித்தது… ஃபார்மல் ட்ரெஸ்ஸில் வந்தவனை ஆஷாவும்… ரூபாவும்… போதும் போதும் என்ற அளவுக்கு சைட் அடித்து தள்ளினர்… எப்படி பார்த்தாலும் அழகா தாண்டி இருக்காரு… என்று பெருமூச்சு விட்டு விட்டு தங்களது வேலையை தொடங்கினர்…

 

கட்டிலில் உட்கார்ந்து… புதிதாக வாங்கிய உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மலர்… மனமெல்லாம் அந்த உடைகளை பார்க்கும் பொழுது அன்று மாலில் நடந்த தருணங்கள் ஞாபகம் வந்தன… கன்னங்கள் வெட்கத்தில் சிவந்தன… வெட்க சிவப்புடனே… அவளது அலமாரியில் துணிகளை வைக்க போக… அது ஏற்கனவே முழுதாய் நிரம்பியிருந்தது…

 

பக்கத்தில் இருக்கும் அலமாரியை திறக்க போக.. அது பூட்டி இருந்தது.. இதோட சாவியை எங்கையோ பார்த்தேனே என்று நினைவுகளை திருப்பியவள்… ஸ்டடி டேபிள் டிராவில் இருந்த நினைவு வர.. எடுத்து ஒரு பக்க கதவை திறக்க அதில் ஆதியின் டி ஷர்ட் அண்ட் பாண்ட் அடுக்கி வைக்க பட்டிருந்தது… கொஞ்சம் பழைய உடைகள் போலும்… சமீபமாக அவன் இதெல்லாம் அணிந்து பார்த்ததில்லை… மேலிருந்து கீழ்வரை விரல்களால் தடவி கண்கள் மூடி அவன் ஸ்பரிசத்தை உணர்ந்தாள்… பின் நுனி மூக்கை உரசி அவன் வாசத்தை உணர்ந்தாள்..  அவன் வாசமே புல்லரிக்க செய்து உடம்புக்குள் பூகம்பத்தை விளைவித்தது.. என் தேவா என்று கொஞ்சி அந்த ஆடைக்கு ஒரு முத்தம் வைத்தாள்.. 

 

அதே பொங்கி வழியும் காதலுடன்… பின் மறுபக்க கதவை திறக்க… அது முழுதும் பெண்ணின் உடைகள் அடுக்கி வைக்க பட்டு இருந்தது… அதை கண்டவளின் கண் விழி பெரிதாய் விரிய… முகத்தில் இருந்த மகிழ்ச்சி ஒரு கணத்தில் வடிந்து,  இதயம் தன் படபடப்பை அதிகரித்து கொண்டே சென்றது… வாய் வழியே வெளிய வராதது தான் குறை… அனைத்தும் ஒரு இளம் பெண்ணின் உடைகள்… அவளுக்குத் தெரிந்து ஆதிக்கு அக்கா, தங்கை, தோழிகள் என்று யாரும் இல்லை.. அப்படி இருக்கும்போது அவனது தனிப்பட்ட அறையில் அவனது அலமாரிக்குள் அவனது உடைகளுக்கு அருகில் இளம் பெண்ணின் உடைகள் இருக்கும் பொழுதே அவளுக்கு புரிந்து விட்டது… அதுவே மனம் கலங்கி போக போதுமானதாக இருந்தது…  ஏனோ இதயத்தில் இனம் புரியாத ஏமாற்றம் பரவ.. கைகளில் நடுக்கம்… முகம் சிவந்து உதடு கடித்தாள்…. அதில் திறக்க படாத பரிசு பெட்டியிருந்தது…

 

என் கனவெல்லாம் நிறைந்தவளே… சொல்லாத வார்த்தைகளும், காதலும் உனக்காகத் தான்… 

என் சிட்டுவிற்காக காத்திருக்கிறேன்… 

 

என்று அதன் மேல் எழுதி இருக்க… தட்டு தடுமாறி வாசித்தவள்… தொண்டையில் ஏதோ அடைத்தது..  மூச்சு விடவே சிரமமாக இருந்தது.. தலையில் பாரம் கூடியது. உண்மையில் அதைப் பார்த்து மனம் உடைந்து போனாள் பேதை… இதோ ஐந்து நிமிடத்திற்கு முன் அவனை நினைத்து வெட்கத்துடன் வந்த அனைத்து அறிகுறிகளும் இப்பொழுது ஏமாற்றத்தால் வந்து கண்ணை நிறைத்தது… சிட்டு என்று பெயரைப் படித்தவள் புரிந்து கொண்டால் ஆதி தன்னிடம் வேண்டுமென்றே இதைப்பற்றி மறைக்கிறான் என்று…

 

நேத்து தானே கேட்டாள் சிட்டு யார்? என்று மனதில் எதுவும் இல்லாதவன்… இதைப் பற்றி சொல்லி இருக்கலாமே… இவ்வளவு ஏமாற்றம் இருந்திருக்காதே… இப்பொழுது உயிருக்குள் வேரூன்றிய ஆலமரத்தை கையோடு பிடுங்கி எறிவது போல் வலி.. 

 

மனபாரத்தால் அலுவலகம் செல்லாமல் அங்கேயே கல்லாய் அமர்ந்திருந்தவளின் போன் ஒலித்தது…

ஆதி தான் அழைத்திருந்தான்…

 

எங்க இருக்க… ஏன் இன்னும் ஆஃபீஸ் வரல… என்று கேட்க..

 

இன்னைக்கு நான் லீவ் மெயில் அனுப்பி விடுறேன்… என்று அவள் சுரத்தையே இல்லாமல் பதிலளிக்க…

 

ஏன் என்ன ஆச்சு?… குரல் ஏன் ஒரு மாதிரி இருக்கு… 

 

ஒன்னும் இல்ல. எனக்கென்ன நான் நல்லாத்தான் இருக்கேன்… அவளிடம் இருந்து விரக்தியாய் பதில் வந்தது…

 

என்னன்னு சொல்லப் போறியா இல்லையா… என்று மிரட்டல் தோணிகள் கேட்க…

 

நீங்க என்கிட்ட எல்லாத்தையும் சொல்றீங்களா?… நான் ஏன் உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லணும் என்றாள் பதிலுக்கு பதில்…

 

நான் என்னடி உன் கிட்ட சொல்லணும்… என்றான் கோபமாய்…

 

சிட்டு யாரு?…

 

ஆதியின் பக்கம் பலத்த அமைதி… அமைதியா இரு… வந்து சொல்றேன்… எனக் கூறிவிட்டு போனை கட் செய்தான். 

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

❤️ Loading reactions...
4 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top