அசுரன் 81
சில நாட்களில் மலரின் படிப்பிற்கான தேர்வுகள் வர அவை அனைத்தையும் வெற்றிகரமாக எழுதி முடித்தாள்..
படிப்பது ஒன்றும் அவளுக்கு சிரமமான காரியம் இல்லை கற்றுக்கொள்வது தான் அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று… அதுவும் காதலனே ஆசிரியனாய் மாறி கற்றுக் கொடுக்கும் பொழுது கசக்கவா போகிறது…
அவன அழகாய் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது… அவள் அவன் முகத்தை விடாமல் பார்க்க… “மலர் கொஞ்சம் பாடத்தை கவனிக்கிறியா”… என்பான் கரார் குரலில்…
அவள் பாடம் படித்துக் கொண்டிருக்கும் போது அவன் பார்வை விடாமல் தொடர… “கொஞ்சம் ஆபீஸ் வேலையையும் பாக்கறீங்களா”… என்பாள் கரார் பேர் வழியாய் பழிக்குப் பழி ..
நாளும் பொழுதும்… ஒருத்தரை ஒருத்தர் கண்களால் களவாடி கொண்டும் .. சொற்களால் செல்ல தீண்டல் சீண்டி கொண்டும்… வெட்கமும் பூரிப்புமாக நாட்கள் மிக அழகாக நகர்ந்தன…
அன்று ஆதிக்கு ஒரு young பிசினஸ் மேன் கெட் டுகெதர் பார்ட்டிக்கான அழைப்பு வந்திருந்தது… போய் ஆக வேண்டிய கட்டாயம்.. அவன் தொழில் சார்ந்த நிறைய நண்பர்கள் அங்கு கூடுவர்… இந்த முறை மலரையும் அழைத்துச் செல்ல முடிவெடுத்து இருந்தான்… இருவருக்கும் தேவையான ஆடைகளை… பொட்டிக்கில் ஆர்டர் கொடுத்து வாங்கிகொண்டு… அதற்குப் பொருத்தமான அணிகலன்கள் மற்றும் சில மேக்கப் ஐட்டங்களையும் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்தவன்… அவளுக்கென வாங்கிய பொருள்களை அவளிடம் ஒப்படைத்து தயாராக சொன்னான்…. அவனும் சென்று தயாராகி வந்தான்..
அவன் கிளம்பி வந்து சோபாவில் காத்திருக்க… “போலாமா” என்றபடி பெண்ணவள் அழகு பதுமையாய் அவன் எதிரே வந்து நின்றாள்…
“எஸ் கம் குவிக்” என்று அவசரமாக எழப்போனவன் ஒரு நிமிடம் நின்று அவளை பார்க்க…
வைத்த கண் எடுக்க முடியவில்லை, அவனால்…

ஜிமிக்கி வேலைப்பாடுகள் நிறைந்த கருப்பு நிற சேலையும் கருப்பு நிற கை இல்லா ஜாக்கெட்டும் வாங்கி வந்திருந்தான்…
சேலை அழகாய் இருந்தது… அதனால்தான் தேர்ந்தெடுத்து வாங்கி வந்திருந்தான்… ஆனால் அவள் கட்டியதும் பேரழகாய் மாறியதன் அதிசயத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான்… மிதமான ஒப்பனையில் அலை அலையாய் தேசத்தை முன்னே படர விட்டு.. வந்து நின்றாள்.. இரண்டு கண் போதவில்லை ஆடவனுக்கு…
இமைக்காமல் you look stunning… என்றான்.
அந்தப் பார்வையே அவளை கூச்சமடைய செய்தது.
because I’m reflected in your eyes… என்றாள்.
பின் அவன் பணிவாய் குனிந்து வாசலை நோக்கி கை நீட்ட… சிரித்தபடியே இருவரும் காரில் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். தன்னிடம் பேச முனைந்த அனைவருக்கும் மலரை அறிமுகம் செய்து வைத்தான்..

அங்கு இருந்த இளம் பெண்கள் மத்தியில்.. ஆதி அவன் கேர்ள் பிரண்டுடன் வந்தது தான் ஹாட் டாபிக்… ஏனென்றால் அங்கிருந்த பலர் ஆதிக்கு பெண்களை பிடிக்காது என்று நினைத்திருக்க இத்தனை வருடம் முரட்டு சிங்கிளாக வாழ்ந்தவன் இன்று புதிதாய் ஒரு பெண்ணுடன் வந்ததனால் அது ஹாட் டாபிக்காக மாறி போனது…
ஏய் கேர்ள்… ஆதிய பார்த்தியா… எத்தனை வருஷம் ஆனாலும் எப்படி பிசிக் மெயின்டைன் பண்றான்… செம்ம்ம ஹாண்ட்சம்மா இருக்கான்ல…
நான் லாஸ்ட் டைம் அவன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணலாம் அப்படின்னு சொன்னேன்… நீங்க தான் அவனுக்கு பொண்ணுங்களே பிடிக்காது gay னு சொல்லிட்டீங்க… இப்ப பாரு அவன்
ஒரு கேர்ள் பிரண்டோட வந்திருக்கான்…
கேர்ள் பிரண்ட் இருந்து என்னடி பண்ண…
என்ன சொல்ற…
உனக்கு விஷயமே தெரியாதா.. ஹி இஸ் இம்போட்டண்ட்… என்று பெண்ணொருத்தி கூட…
இவை அனைத்தையும் பின் சீட்டில் அமர்ந்திருந்த மலர்… தன் முட்டை கண் விரிய… அதிர்ச்சியில் வாய் பொத்தி கேட்டுக் கொண்டுதான் இருந்தாள்..
ஆதியை ஆண்கள் குழுக்கள் சூழ்ந்து கொண்டதால்… அவர்களுக்கு நடுவே தொந்தரவாக இருக்க வேண்டாம் என மெதுவாக தனியே நகர்ந்து பெண்கள் பக்கம் வந்தவள் இந்த பேச்சைக் கேட்க தூக்கி வாரி போட்டது, ச்சீ…. என்ன இப்படி எல்லாம் பேசுறாளுங்க… இவளுங்க எல்லாம் பொண்ணுங்க தானா… என்று நினைத்துக் கொண்டிருக்கையில்..
என்ன சொல்ற… அவன பார்த்தா உனக்கு அப்படியா தெரியுது… பாக்கவே எவ்வளவு மேன்லியா இருக்கான்… என்றால் ஒரு பெண் கண்ணில் கிறக்கமாக…
இருந்து என்ன பண்ண… இப்படி நம்பி தான் நம்ம சைத்ரா… அவன் கூட டேட்டிங் போய் இருக்கா… கூட்டு போய் கடைசில ஒண்ணுமே பண்ணாம திருப்பி அனுப்பி இருக்கான்… அவள டிரஸ் இல்லாம பார்த்தும் ஒருத்தன் ஒண்ணுமே பண்ணாம அனுப்புறான் அப்படின்னா அவனோட ஆண்மை எப்படி இருக்கும்னு நீயே யோசி… என்று மற்றொரு பெண் பதிலளித்தால்… இன்னும் பல கட்டுக் கதைகளை பேசினர்…
இந்த பெண்கள் ஆதியை பற்றி பேச பேச ஆத்திரம் மேலோங்கியது மலருக்கு… ஆவேசமாய் எழுந்து யாரும் பார்க்காத வண்ணம் அங்கிருந்த மரத்தின் பின் சென்றவள்… தன் கழுத்து வளைவிலும், இடுப்பிலும் நறுக்கென்று வேகமாய் கிள்ளி வைத்தாள் … ஸ்ஸ்… அஹ… வலியில் தேய்த்து விட்டுக் கொண்டாள்…
சிறிது நேரத்திலேயே மலரை காணாமல் தேடிய ஆதி மரத்தின் பின் அவள் செய்யும் வேலைகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தான்…
என்ன பண்ணிட்டு இருக்கா… என்று அவளை பார்த்தபடியே அவளுக்கு போன் செய்தான்…
கட் செய்து விட்டாள்…
இயர் பட்ஸ் அணிந்திருந்தான்.. அருகில் இருந்தவர்களிடம் பேசிக்கொண்டே… மீண்டும் மீண்டும் அவளுக்கு போன் செய்தான்…
நேராய் பெண்ணவள் அங்கு புரணி பேசிக் கொண்டிருந்த பெண்கள் குழுவுக்கு வந்தாள்..
ஹாய் அம் மலர்… என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்..
பெண்களும் போலி புன்னகையுடன் பொறாமை கண்ணுடனும் ஹாய் என்று விளிந்தனர்…
மலரைப் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ஒரு பெண் தானாய் பேச்செடுத்தாள்… ஆதிக்கு நீங்க என்ன வேணும்… என்று கேட்க..
பதில் சொல்லப் போனவள் ஆதி மீண்டும் போன் செய்ய… எதுக்கு திரும்ப திரும்ப கூப்பிடுறாரு பேச வந்ததை மறந்துடுவேன் போல… என்று வேகமாய் காலை பதட்டத்தில் கட் செய்வதற்கு பதிலாக அட்டென்ட் செய்து கையில் வைத்தாள்..
என்ன கேட்டீங்க…
ஆதிக்கு நீங்க என்ன வேணும் ஃப்ரண்டா? என்று கேட்டாள் அந்த பெண்…
காதலி என்று கூறி இருந்தாலும் பரவாயில்லை…லாஸ்ட் ஒன் இயர் we are in living… என்று பதில் அளிக்க… அதிர்ந்தது பெண்கள் கூட்டம் மட்டுமல்ல லைனில் இருந்த ஆதியும் தான்…
இன்னொரு பெண் முந்தி கொண்டு வந்து… நிஜமா சொல்றியா… அப்போ உங்களுக்குள்ள எல்லாம் நார்மலா இருக்கா… அதி முக்கிய சந்தேகத்தை கேட்டாள்…
ஆதியின் காதுகள் கூர்மையானது..
என்ன நார்மலா இருக்கா புரியலையே என்று அவள் ஒன்றும் தெரியாதவள் போல் கேட்க… இல்ல ஆதி ஒரு guy அப்படின்னு நாங்க கேள்விப்பட்டோம்… என்று அந்தப் பெண் தயங்கியபடியே கூற…
வாயில் கை வைத்து… ஹா.. ஹா.. ஹா… என்று சிரித்தவள்.. யாரோ உங்களை ஏமாற்றுவதற்கு நல்ல கிளப்பி விட்டு இருக்காங்க… அவர பார்த்தா உங்களுக்கு அப்படியா தெரியுது என்று அவள் கேட்க…
இல்லை என்ற தலையசைத்தனர் அங்கு இருந்த பெண்கள் அனைவரும்…
ரகசியமாய் குனிந்து இப்படி சொன்னா அவங்க போட்டியே இல்லாம தேவாவ நெருங்கலாம்… சிம்பிள் ட்ரிக் இது…
தேவா யாரு என்று ஒரு பெண் கேட்க..
அவர்தான்.. தேவாதித்யன்… ஒன் அண்ட் ஒன்லி மை தேவா.. என்று கூறி அவள் கண்ணடிக்க… (அவன் முகத்தில் ஒரு சிறு புன்னகை.. புன்னகைத்தவாரே அருகில் இருந்த ஒயினை எடுத்து ரசித்து குடித்துக் கொண்டிருக்க…)
பெண்கள் அனைவரும் அவளை ஒரு குழப்ப பார்வை பார்க்க…
“இப்ப பாருங்கடி என்னோட பிட்ட” என மனதிற்குள் நினைத்த மலர்..
அனைவரையும் நெருங்கி வர வைத்து கிசுகிசுப்பான குரலில்… ” சொல்லப்போனா அவரு அந்த விஷயத்துல ரொம்ப “ம்ம்ம்” “ம்ம்ம்ம்” என்று புருவத்தை உயர்த்தி இழுத்துக் கொண்டே போக பெண்களுக்கு புரிந்துவிட்டது… ( இங்கு ஒருத்தனுக்கு குடித்துக் கொண்டிருந்த ஒயின் புரை ஏறியது )
இந்த ஒரு வருஷத்துல என்ன ஒரு நாள் கூட என்ன நிம்மதியா தூங்க விடல… என்று ஒரு ஆர்வத்தில் பொய் உரைக்க.. ( ஏறிய புரை இறங்குவேனா என்றது )
பீரியட்ஸ் டயத்துல கூடவா..
திருத்திருவென விளித்தவள்.. ஒரு வழியாய் சமாளித்து.. மெயின் கோர்ஸ் தவிர மத்ததெல்லாம் வேணும்னு ஒரே அடம்.. சொல்ல போனா என்ன்ன கனவுல கூட விட்டு வைக்கிறது இல்ல…..
He is a beast in the sheets. என்று அவள் விளிக்க… ( ஐயோ.. இதெல்லாம் எங்க படிச்சானு தெரில)
ஆ…. என்ற பெண்களின் முகத்தில் ஈயாடவில்லை…
என்னோட lower லிப்ஸ் எப்படி இருக்கு என்று மலர் கேட்க.
பெண்கள் அனைவரும் அதை பார்த்து Plumpy அஹ இருக்கு என்றனர்…
ஒரு பெண் முந்திக்கொண்டு லிப் பில்லிங் பண்ணியா? என்று கேட்டாள்…
No, its Crafted by Deva… என்றாள் வெட்கத்துடன்… (ஆஹான்.. எனும் விதமாய் முழித்தவன்… செதுக்கிடுவோம்.. என்றான்)
Really.. என்று ஒரு பெண் வாயை பிளக்க..
இத… கூட விடுங்க.. இது வீட்ல… இப்போ கார்ல வரும்போது… கொஞ்ச நேரம் சும்மா இருக்க கூடாதா… அதுக்குள்ள குட்டியா ஒன்னு வேணும்னு அடம் புடிச்சு… ச்சே.. ச்சே… கழுத்துல கடிச்சு இடுப்புல கிள்ளி… ஊப்ப்… அவர சமாளிச்சு வர்றதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு எனக்கு.. என்று அவள் வெக்கப்பட்டுக் கொண்டே சலிப்பாய் கூற…
( இதுக்குத்தான் மரத்துக்கு பின்னாடி கிள்ளிட்டு போனாளா.. மார்க் வேணும்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்.. நானே ரெடி பண்ணி இருப்பேன் எதுக்கு பொய் சொல்லணும்.. பெருமூச்சு வெளியானது )
பெண்கள் அனைவரையும் பார்வையும் அவள் கழுத்தையும் இடுப்பையும் நோட்டமிட்டது… அங்கு அவளால் ஏற்படுத்தப்பட்ட காயங்களால் சிவந்த தடம் இருக்க.. பெண்கள் தங்களுக்குள்ளேயே கண்களால் பேசிக் கொண்டனர் “அங்க பாரு” என்னும் விதமாய்…
ஆதிக்கு பொண்ணுங்களே பிடிக்காது… ஹி இஸ் இம்போர்ட்டண்ட்னு சொன்னாங்க.. என்று பெண் ஒருவள் கூற.. ( இதைக் கேட்டு உண்மையில் ஆதியின் முகம் சுணங்கியது… அவன் புரளிகளைப் பற்றி கவலைப்படவில்லை என்றாலும், பெண்களின் வாயால் கேட்கும் பொழுது மனதில் ஒரு வலி வந்து சென்றது உண்மை )
யாரோ உங்களை நல்ல ஏமாத்தி இருக்காங்க… இப்படி எல்லாம் யாரு சொன்னா… என்று மலர் கேட்க…
நான் தான் சொன்னேன்.. என்று மலரின் பின்னாடி இருந்து குரல் கேட்டது..
மலர் திரும்பிப் பார்க்க சைத்ரா தான் கைகளைக் கட்டியபடி நின்று இருந்தாள்…
நீதான் ஆதியோட புது கேர்ள் ஃபிரண்டா என்று நக்கலாய் கேட்டாள் சைத்ரா.. உன்னை எங்கேயோ பார்த்திருக்கேனே… வேலைக்காரியாய் பார்த்தவளை இந்த இடத்தில் அவள் மனம் எதிர்பார்த்து இருக்காது.. அதனால் உடனே மலரை அடையாளம் தெரியவில்லை… அப்புறம் நீ சொன்ன பொய் எல்லாம் நல்லா இருந்துச்சு… அப்படியே தத்ரூபமா உண்மை மாதிரியே பொய் சொன்ன.. என்று இளக்காரமாய் சொன்னவள். அவளின் இடுப்பு காயத்தை ஒரு முறை பார்த்து மீண்டாள்..
நீயும் ஆதியும் ஒன்யரா லிவிங் ல இருக்கீங்களா…
அப்போ என்ன பத்தி முழுசா உனக்கு தெரிஞ்சி இருக்கணுமே…
மலர் அமைதியாய் நிற்க…
அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டாள் சைத்ரா… நான் யாருன்னு ஆதி உன் கிட்ட சொன்னாரா… சாரி… சாரி… உன்னோட தே..வா..
நாங்க ஒரு வருஷமா லவ் பண்ணோம்… பல தடவை டேட்டிங் கூட போனோம்.. அப்படிதான் நான் அவர பத்தின உண்மைய தெரிஞ்சுகிட்டேன்… அப்படி இருந்தும் நான் காதலிச்சதுக்காக நிச்சயதார்த்தம் வரைக்கும் கொண்டு வந்தேன்… என்ன கல்யாணம் பண்ணிக்க அவருக்கு தகுதி இல்லைன்னு சொல்லிட்டு நிச்சயத்தை ஸ்டாப் பண்ணிட்டு போயிட்டாரு… என்று நம்பும் படியான பல பொய்களை சைத்ரா எடுத்து விட… ( இன்னும் என்னென்ன பொய் சொல்றான்னு நானும் பார்க்கிறேன்..)
இந்த செய்திகள் எல்லாம் மலருக்கே புதிது… அவர்களின் நிச்சயத்தை ஆதி நிறுத்தி விட்டு சென்றது மட்டும் மலருக்கு தெரியும்… மற்ற எந்த விஷயமும் மலருக்கு தெரியாது… இவை அனைத்தையும் மலர் மனதில் போட்டு குழப்பி கொண்டு இருக்க…
அவளின் குழப்ப முகம் சைத்ராவிற்கு குதூகலத்தை அளித்தது… ( ஆதிக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணியது)
நாங்க எந்த அளவுக்கு டேட்டிங் போனோம் அப்படின்னு உனக்கு சொல்லனுமே… அதுவும் ஆதி கூட லிவிங் ல இருக்க பொண்ணு கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்… எனக் கூறிவிட்டு.. தங்களுக்குள் நடந்ததாய்
பல அந்தரங்க விஷயங்களை அவள் இட்டுக்கட்டி கூற… ( சைத்ராவின் பொய்களை கேட்டு ஆதிக்கு ரத்தம் கொதித்தெழுந்தது )
அதைக் கேட்டு மலர் நொந்தே போனாள்… முகம் முழுவதும் சிவந்து… உதடு கடித்து விரல்களை இறுக்கமாய் மூடியபடி நிற்க…
அவளின் இந்த நிலையை பார்த்து ஆதியின் அந்தரங்க அங்க அடையாளங்களை வர்ணித்து கூற…
மலருக்கு பொத்துக் கொண்டு வந்தது… ( இதற்கு மேலும் சைத்ராவின் பேச்சை கேட்க முடியாத ஆதி)
தூரத்தில் இருந்து மலரின் முகத்தை பார்த்த ஆதிக்கு சூழ்நிலையின் தீவிரம் புரிய.. அவள் அருகில் வர பார்க்க… ஆண்கள் கூட்டம் அவனை தடுத்து நிறுத்தியது..
இங்கு வேகமாய் அந்த இடத்தை விட்டு மலர் நகர போக… சைத்ரா மலரின் கையைப் பிடித்து நிறுத்தினாள்.. முழுசா கேட்டுப் போ… என்னும் விதமாக..
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️