அசுரன் 82
மலரின் உணர்வுகளை பார்த்து வெற்றிப் புன்னகை பூத்த சைத்ரா.. உன் ஆள் கிட்ட நான் பாக்காத இடமும் இல்லை தடமும் இல்லை… கழுத்து கிட்ட ஒரு மச்சம் இருக்கே அங்கு ஒரு நூறு முத்தம் வச்சிருப்பேன்.. ரெண்டு பக்க தோல் வெடைக்கும்போது நடுவுல ஒரு கோடு தெரியுமே அதுக்கு நடுவுல ஒரு மச்சம். அங்க ஒரு 100 முத்தம் வச்சிருப்பேன்.. என்று அவள் வருணித்துக் கொண்டே போக.. கிளைமாக்ஸ் ல லிப் ல ஒரு deep கிஸ் கொடுப்பான் பாரு.. இட்ஸ் ஹெவேன்.. என்று கண்ணை மூடி ரசித்து கூற… ( இங்கு ஒருவனின் உடலில் ஆயிரம் புழுக்கள் ஊர்வது போல அருவருத்தது )
ப்ளீஸ் சைத்ரா… என்ன போக விடுங்க…
(அனைவரையும் தள்ளிவிட்டு ஆதி மலர் அருகில் வர பார்க்க)
நீதான் ஆதியோட ஆள் ஆச்சே அப்போ உனக்கு இதெல்லாம் கண்டிப்பா தெரியனுமே… என்ன… இதெல்லாம் கேட்கும் போது கோபம் கோபமா வருதா… என்று அவள் இளக்காரமாய் கூற…
இல்லை என தலையசைத்தவள்… தலையை குனிந்த படி நீங்க சொல்ல சொல்ல வெக்க வெக்கமா வருது… என்றாள்.( பரபரப்பாக நகர்ந்து வந்தவன் இதைக் கேட்டதும் ஓரிடத்தில் சிலை போல் நின்றான்) சொல்லப்போனா நீங்க சொன்னா எந்த இடத்துலயும் அவருக்கு மச்சமே கிடையாது… நீங்க பொய் சொல்ல சொல்ல எனக்கு உண்மையான மச்சத்தோட நியாபகம் வருது.. என்று அவள் சிறு புன்னகையுடன் உதடு கடிக்க… அப்பொழுதுதான் சைத்ராவிற்கு புரிந்தது… இவ்வளவு நேரம் அவளின் முகம் கோவத்தில் சிவக்கவில்லை வெட்கத்தில் சிவந்தது என்று… ( அவனுக்கும் தான் )
நீங்க சொன்ன லிஸ்ட்ல அந்த கழுத்துல இருந்த மச்சம் மட்டும்தான் உண்மை… மத்தபடி வேற எங்கேயும் இல்லை.. அந்த கழுத்துல இருக்க மச்சமும் ஊர்ல இருக்க அத்தனை பொண்ணுங்களுக்கும் தெரியும்… அதான் மைனரு மாறி மூணு பட்டனை கழட்டிவிட்டு சிலுப்பிக்கிட்டு திரிவாரே… அப்புறம் பொண்ணுங்க எல்லாம் பாக்காம என்ன பண்ணுவாங்க.. அதனால தான் இப்போ எல்லாம் ஆபீஸ்க்கு டை கட்டி அனுப்பி வைக்கிறேன்… இனி அந்த மச்ச தரிசனம் யாருக்கும் கிடைக்காது.. என்று உதட்டை பிதுக்கி கூறினாள் மலர்… ( அடேங்கப்பா இந்த டைக்கு பின்னாடி இவ்வளவு விஷயம் இருக்கா.. விழி விரித்தான்)
ஆம்… சைத்ராவும் ஒரு நாள் அவன் காரில் செல்கையில் டை கட்டி இருப்பதை கவனித்தாள்… இவன் இப்படி எல்லாம் போற ஆள் இல்லையே.. ஓவர் ஆட்டிடியூட் ஆச்சே… என யோசிக்கவும் செய்தாள்… இப்பொழுது புரிந்தது அதற்கான காரணம்.. அவள் கூறிய பதிலில் கடுப்பான சைத்ரா அந்த இடத்தை விட்டு நகர போக… இப்பொழுது கையைப் பிடித்து நிறுத்துவது மலரின் முறையானது…
அவருக்கு மச்சம் முதுகில் தானே சொன்னீங்க… இல்ல.. இடது மார்புக்கும் ஒரு இன்ச்க்கு கீழ இருக்கு..
( அங்கு கேட்டுக் கொண்டிருந்தவன் கை மச்சம் இருந்த இடத்திற்கு தானாக சென்றது.. இன்ச் அளவு எல்லாம் கரெக்டா சொல்ற… எப்போ பார்த்தா?)
அப்புறம் இது…. எங்க ரெண்டு பேத்துக்குள்ள இருக்கிற ரகசியம் யார்கிட்டயும் சொல்லக்கூடாது.. என்று தன் போன் இருந்த கையை அவள் காதில் ரகசியம் கூற கொண்டு சென்றவள்…. ஆனா நீங்க தெரிஞ்சுக்கலாம்… நீங்கதான் அவர் கூட டேட்டிங் போனீங்களே.. ( ஆதிக்கு சுவாரஸ்யம் அதிகமானது )
அவருக்கு முக்கியமான இடத்தில ஒரு மச்சம் இருக்கு அதுவும் பெரிய சைஸ்ல.. என்று அவள் கிசுகிசுப்பாக கூற…
இப்பொழுது விழி விரிவது சைத்ராவின் முறை… ( ஐயோ.. இது எப்போ… என்று கால்கள் இரண்டையும் குறுக்கியவன் அருகில் இருந்த இருக்கையில் கால் மேல் கால் போட்டு கெத்தாக அமர்ந்தான்… தன் கூச்சத்தை மறைக்க)
அப்புறம் கிளைமாக்ஸ் பத்தி ஏதோ சொன்னீங்களே… ( இப்ப என்ன சொல்ல போறானு தெரியலையே.. சுவாரசியம் தலை தூக்கியது )
Deep kiss அஹ.. ஆக்சுவலி அது தான் தேவாவுக்கு ஸ்டார்டிங் பாய்ண்ட்…
( இதைக் கேட்டு வெக்கத்தில் சிவந்த முகத்தை ஒற்றை கை விரல்களை விரித்து முகத்தை மறைத்தான்.)
எண்டு ல உச்சத்துல கர்…ன்னு உறுமிட்டு அந்த தலையை மேல பார்த்து ஒரு சிலுப்பு சிலுப்புவார் பாருங்க… கீழ இருந்து பாக்குறவளுக்கு… லயன் கிங் மூவி ல simba கர்ஜிக்குமே… அப்படி இருக்கும்.. சும்மா புல்லரிக்கும்… என்று லயித்துக் கூறியதில் அவள் உடல் சிலிர்த்து அடங்கியது…
அதை சைத்ராவும் கண்டு கொண்டாள்… அவள் சொல்வதைப் பார்த்தால் ஒரு சதவீதம் கூட பொய் இருப்பது போல் சைத்ராவிற்கு தெரியவில்லை…
(இங்கே கேட்ட ஒருவனுக்கோ உடல் மட்டுமா சிலிர்த்தது உள்ளே இருந்த ஒருவனும் சிலிர்த்து எழுந்தான்… காது மடல் கூர் நாசி எல்லாம் சிவந்து… வெட்கம் கூச்சம் தாபம் மோகம் எல்லாம் ஒரே நேரத்தில் வந்து தொலைத்தது… இது ஆதிகே ஆச்சரியம் இவளுக்கு எப்படி தெரியும் என்று.. ஏனென்றால் அவளுடன் வாழ்ந்த கனவு நாட்களில் அதுதான் அவனின் முடிவுரையாக இருக்கும் )
அப்புறம் உங்களோட முக்கியமான கம்ப்ளைன்ட்… உங்களை கூட்டிட்டு போயி அவர் எதுவுமே செய்யல அப்படிங்கறதுதான்… கிடைக்கிற இடத்துல எல்லாம் வாய் வைக்கிறதுக்கு அவர் ஒன்னும் நாய் இல்ல.. ஹி இஸ் லயன்… என்று நிறுத்தியவள்…. ஒரு கணம் அமைதிக்கு பின் நான் என்ன சொல்ல வர்றேன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும்…
( தன்னவள் தனக்காய் பேசியதில் பெருமிதம் தலைக்கு ஏறியது… என் மேல் இவ்வளவு நம்பிக்கையா!… இவளுக்காய் இந்த ஜென்மம் முழுவதும் தவம் இருக்கலாம் என்று தோன்றியது அவனுக்கு )
இதுக்கு மேல அவர பத்தி தப்பு தப்பா ஊருக்குள்ள சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா…
சொன்னா என்னடி பண்ணுவ…
நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் அடுத்த வருஷம் என்னோட பையன் வந்து உண்மையை சொல்லுவான்.. பாய்… என்று சைத்ராவின் கன்னத்தை தட்டி விட்டு, கண்ணடித்து சென்றாள் மலர்..
( நீ கவலைப்படாத டி செல்லம் உன்னோட இந்த சபதத்தை நான் நிறைவேத்துறேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டான் ஆடவன்😆🫣 )
செல்லப் போனவளை அருகில் இருந்த பெண்கள் நிறுத்த.. சரியா எந்த நேரத்தில் ஆதி போனை கட் செய்துவிட்டு மீண்டும் ஃபோன் செய்தான்… மலர் அதைப் பார்த்து கட் செய்ய போக… பெண்களின் ஒருத்தி அதை ஆன் செய்து ஸ்பீக்கரில் போட்டாள் … ( ஐயோ…மாட்ட போறோம் )
எடுத்தவுடன்… காருக்கு வா என்றான்…
எதுக்கு.. என்றாள் பவ்வியமாய்…
சொன்னாதான் வருவியா… காருக்கு வாடி.. என்றான் அதட்டலாய்…
சரி என்று வைத்துவிட்டு… அவர்களிடம் சமாளிப்பாய் ஒரு புன்னகைத்து விட்டு கார் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள் மலர்…
கோபமா கூப்பிட்ட மாதிரி இருந்ததே… என்னவா இருக்கும்.. என்று யோசித்துக் கொண்டே காருக்குள் வந்து அமர்ந்தாள்…
என்னவென்று ஆதியை கேட்க…
ஒன்றுமில்லை என்பது போல் தலையசைத்து அமைதியாய் இருந்தான்.. தன்னைப் பற்றி யோசிக்காமல் அவனுக்காய் பேசியது அவனை என்னவோ செய்தது.. உணர்ச்சி குவியலாய் முகம் சிவந்து அமர்ந்திருந்தான் ஆதி… அவளின் மேல் காதல் பெருக்கெடுத்து எக்குத்தப்பாய் ஓடியது… காலநிலையும் அவனுக்கு சாதகமாய் கவிதை எழுதியது…
வெளியே இரவிற்கும் பகலுக்கும் இடையில் ஒரு மயக்கமான மாலை வேளை… எப்பொழுது வேண்டுமானாலும் தண்ணீரை சிந்துவேன் என்று கனத்த மழைத்துளிகளை சுமந்து கொண்டு கனமான கருமேகம் அலைந்து கொண்டிருந்தது… மண்வாசத்தை சுமந்து கொண்டு வாடைக்காற்று அடித்துக் கொண்டிருக்க… மரங்களிலிருந்து இலைகளும் பூக்களும் மிதமாக உதிர்ந்து கொண்டிருந்தது… காற்றின் ஈரப்பதத்தை ஜில் என்று தேகங்கள் உணர்ந்தன…
அவள் வந்து அவன் முகத்தையே வெறித்து பார்த்தபடி இருக்க அவன் அமைதியாகவே இருந்தான்… அந்த அமைதியை குறைக்க அவள் ஸ்டீரியோவை ஆன் செய்தாள்..
வானம் மேக மூட்டத்துடன் காண படும்
விட்டு விட்டு மின்னல் வெட்டும்
சத்தம் இன்றி இடி இடிக்கும்
இருவர் மட்டும் நனையும் மழை அடிக்கும்
இது கால மழை அல்ல காதல் மழை…
பாடலைக் கேட்டபடி கைகளில் தாளம் தட்டிக் கொண்டே ஜன்னல் வழி மரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள் மலர்.
இதற்கு மேலும் பொறுக்க முடியாது என… தனது மேல் கோட்டை கழட்டி வைத்தான் ஆடவன்…
மெல்ல மலரின் அருகில் வந்தவன்… அவள் இதழின் அருகில் செல்ல… என்ன வேணும் இவருக்கு… என்பது போல்… கண்ணை உருட்டி உருட்டி முழித்தாள் பெண்ணவள்…
அதைப் பார்த்த ஆடவன்… கண்ணை மூடு எனும் விதமாய் கண்ணில் ஜாடை செய்ய…
மாட்டேன் எனும் விதமாய் தலையசைத்தாள் பெண்…
ஏன் என்று அவன் புருவத்தை தூக்கி வினவ…
காது கிட்ட வந்து ஹஸ்கி வாய்ஸ்ல “சீட் பெல்ட் போடுன்னு சொல்ல போறீங்க “அதுக்கு எதுக்கு நான் கண்ண மூடணும் என்று அவனை பார்த்தபடி அவள் கேட்க..
அவள் சொன்ன தோரணையில் ஆடவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது.. அவனது ஒரு கையை அவளது பின் தலையில் கொடுத்து கட்டை விரலால் கன்னங்களை தாங்கி… அவள் காதருகே சென்று… ”Let this be our first kiss.” என்று கூற.. பெண்ணவளின் விழி விரிய…
பெண்ணவளின் இதலோ அவன் இதழால் சிறைப்பட்டுக் கொண்டது… மிக மிக மெல்லிய முத்தம்… பன்னீர் ரோஜா இதழில் முத்தம் பதிப்பது போல… ஆனால் அளவு கடந்த மின்சாரம் இருவர் உடலிலும் பாய்ந்தது… ஆதியின் மென்மையில் கரைந்தே போனால் பெண்… மெல்ல மங்கையின் கண்கள் மூடின… அவள் உதடுகள் கூட அசையவில்லை.. அவன் உதடு தான் அசைந்தது
ஆடவன் வானில் இருந்து கடவுள் வந்து முக்தி கொடுத்த பரவசத்தில் இருந்தான்… இதோ இந்த இதழ், இந்த வாசம் , இந்த ஸ்பரிசம்… அவனுள் ஊனும் உயிர்மாய் கலந்தது… அந்த ஒரு நொடியில், சுற்றியிருந்த உலகம் நிசப்தமானது. இதயத் துடிப்பு மட்டும் செவிகளில் பேரிரைச்சலாய் ஒலிக்க, அவனின் சுவாசக் காற்று அவள் குழல் இழைகளை வருடிச் சென்றது. இது வெறும் ஒரு முத்தமல்ல… என் வாழ்வின் ஜென்ம பயன்.. ஆயிரம் இரவுகளின் ஏக்கம் இது…. தித்தித்த முத்தம் இப்பொழுது உப்பு கரித்தது… மங்கையவள் வலுக்கட்டாயமாய் தன் இதழை பிரித்து பார்க்க… ஆதி அதே மெய் மறந்த நிலையில் கண்ணை மூடி இருந்தான் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது…
எந்த பெண்ணிடம் ஒரு ஆண் தன் கண்ணீரை மறைக்க விரும்பவில்லையோ.. அந்தப் பெண்ணிடம் அவன் சரணாகதி அடைகிறான்… ஆண் என்ற கர்வத்தை உடைப்பது அந்த கண்ணீர்…
ஏன் அழறீங்க… குழப்பமாய் பார்த்தாள்…
ஒன்னும் இல்லை என்னும் விதமாய் தலையசைத்தான்…
சிட்டுவ நெனச்சா… என்றாள் தயங்கியபடி…
நீ என் பக்கத்துல இருக்கும்போது நான் யாரை பத்தியும் நினைக்க மாட்டேன்….
அன்னைக்கு நீ மீட்டிங் முடிச்சுட்டு ஏன் அழுத என்று கேட்டான்… கண்ணீரை டிஸ்யூ வால் துடைத்துக் கொண்டு…
அது… நம்மளோட ஆசை கனவு எல்லாம் நிறைவேறாம அப்படியே போயிடுமோ… நம்ம நெனச்ச வாழ்க்கை நம்ம கையில கிடைக்கவே கிடைக்காது அப்படின்னு நினைக்கும் போது… கடவுள் வரம் கொடுத்த மாதிரி.. நம்ம ஆசைப்பட்டது ஒரு நாள் நம்ம கைக்கு கெடைச்சதாள… வந்த ஆனந்தக் கண்ணீர்…
அவளை ஓரக்கண்ணால் பார்த்து… தன் இரு கைகளையும் டிஷ்யூவால் துடைத்து கொண்டே… திஸ் ஆல்சோ சேம் என கூறி முடித்தவன்… அவள் மேற்கொண்டு யோசிக்கும் முன்னே… உனக்கு பிரீதிங் பிராப்ளம் எதுவும் இருக்கா என்று கேட்டான்… இல்லையென்றால் மலர்…
Take deep breath… என்றான்….
சொல் பேச்சு கேட்கும் கிளிப்பிள்ளை போல்… அவளும் ஆழ்ந்து மூச்சு எடுத்து விட்டாள்…
மூச்சை இழுத்து விட்ட மறு நொடி…அவள் சுதாரிப்பதற்கு முன்பே ஆவேசமாய் இழுத்து… மலர் இதழை அழுத்தமாய் கவ்வினான் தேவா…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️