அசுரன் 87
இளங்காத்து வீசுதே..
இசை போல பேசுதே…
வளையாத மூங்கில்…
ராகம் வளைந்து ஓடுதே…
மேகம் முழிச்சு கேக்குதே…
என்ற பாடல் மிதமாய் ஓடிக்கொண்டிருக்க… ஜன்னலின் வழியே வீசிய காற்றில் அவள் கூந்தல் கலைந்து… அதை காதோரமாய் ஒதுக்கி விட்டுக் கொண்டே… நேற்றைய இரவை நினைத்துப் பார்த்தாள் மலர்..
இரவு முழுவதும் யோசித்தவள்… தான் ஆதியை விட்டு பிரிந்து இருப்பதே… இருவருக்கும் நல்லது என்று முடிவெடுத்தாள்…
அருண் பேசிய வார்த்தைகளை அவளால் ஜீரணிக்க முடியவில்லை… தன்னால் எந்த இடத்திலும் ஆதி அவமானப்பட்டு தலை குனிந்து நிற்பதை அவள் விரும்பவில்லை…
அவனின் இத்தனை வருட கால நட்பு அவளால் பிரிவதை ஏற்க முடியவில்லை … விக்ரம் முகத்தில் தெரிந்த அதிருப்தி… விரக்தி… எல்லாம் பெண்ணவளை கொன்று போட்டது… மனசாட்சி உறுத்தியது… தான் எந்த விதத்தில் ஆதிக்கு பொருத்தமானவள் என்று தனக்குத்தானே கேள்வி கேட்டுக் கொண்டவள்…
ஒருவேளை நான் அவன் வாழ்வில் வராமல் இருந்தால் அவன் நிம்மதியாய் இருப்பான் என்று பிரிந்து செல்ல முடிவெடுத்தாள்.. அவன் இல்லாத வாழ்வு அவளுக்கு நரகம் தான்.. ஆனால் அவனுடன் வாழ்ந்து நரகத்தை காட்ட விரும்பவில்லை… பல வாராய் மூளையை போட்டு குழப்பி மிக சரியான நேரத்தில் தவறான முடிவு எடுப்பதில் சில நேரம் பெண்கள் வல்லவர்கள்.. பேருந்து நகர நகர அவனுக்கும் அவளுக்குமான தொலைவு அதிகரித்தது.. அதை நினைக்கையில் தொண்டை அடைத்து.. விம்ம தோன்றியது..
அவன் கொடுத்த தூய காதலுக்கு பரிசாய்.. தன்னைக் கொடுத்து செல்ல நினைக்க… காலமோ call வடிவத்தில் வந்து அதை தடுத்து நிறுத்தியது…
போனில் மெசேஜ் டோன் கேட்டது…
அப்பொழுதுதான் ஆதி “எங்க இருக்க” மெசேஜ் அனுப்பி இருந்தான்… அதை படித்ததும் மூக்கு வாயெல்லாம் புடைத்து சிவந்து அழுகையில் மூக்கில் இருந்து தண்ணீர் வடிய…
அதை துடைத்துக்கொண்டே… “வீட்ல..” என்று பதிலளித்தாள்..
மீட்டிங் முடிந்து சிறிது நேரத்தில் அவன் போன் செய்வான் என்று அறிவாள் போனை சுவிட்ச் ஆப் செய்தால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வீட்டில் இருப்பான்… அடுத்த பத்தாவது நிமிடத்தில் தன்னை கண்டுபிடித்து விடுவான் என்று அவளுக்கு தெரியும்.. மாலை வரையில் அவனுக்கு சந்தேகம் வராமல் நடந்து கொண்டால்… ஓரளவு தூரம் போய்விடலாம், பின் கண்காணாத இடத்திற்கு சென்று விடலாம்… என்ற நம்பிக்கையில் மதிய உணவு கூட சமைத்துக் கொடுத்து விட்டாள்…
காலையில் தன்னை வீட்டில் விட்டு செல்லவே அவனுக்கு மனமில்லை அந்த காதல் முகத்தை பார்க்கும் பொழுது.. நெஞ்சம் விம்மி அடைத்தது… சாரி.. தேவா.. என்று அவனுக்கு தெரியாமல் அவனை ரசித்து எடுத்த போட்டோவை ஜூம் செய்து முத்தமிட்டாள்..
இனிமேல் காலமெல்லாம் தன்னை விட்டு இருப்பானா என்ற சந்தேகமும் வந்தது… காலம் அவனை மாற்றும் என்று நம்பினாள்…
இளையராஜா பாட்டு.. ஜன்னலோர சீட்டு… ( ஐயோ கவிதை கவிதை☹️).. நேற்று இரவு முழுவதும் அழுது களைத்த மனம் காற்றில் மயங்கி உறங்கியது….
சிறிது நேரத்தில் பஸ் சடன் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது.. தூக்கத்திலிருந்து படபடப்புடன் துலுக்கி விழுந்து எழுந்தாள் மலர்.. என்ன.. பஸ்ஸ இப்படி ஓட்டுறாங்க என்று அலுத்து கொண்டாள்..
பஸுக்குள் சலசலப்பு… மலர் என்னவென்று எட்டி எட்டி பார்க்க… முன்னாள் இருந்த பயணிகள் எழுந்து மறைத்துக் கொண்டதால் எதுவும் தெரியவில்லை… டிரைவர் கண்டக்டர் கத்திக் கொண்டிருந்தவர்கள் அமைதியானார்கள்… போங்கப்பா அவங்க அவங்க இடத்துல போய் உட்காருங்க ஒன்றும் இல்ல என்று நடத்துனர் சொல்ல… அனைவரும் அவரவர் சீட்டில் அமர்ந்தனர்…
மச்.. என்று சலித்தபடி குனிந்து தனது பையில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்தாள்…
அம்மா… தண்ணி குடிச்சு முடிச்சிட்டீங்கன்னா வாங்க போலாம் என்று ஒருவர் அழைத்தார்..
யார் என்று பக்கவாட்டாய் திரும்பிப் பார்க்க ஆதியின் டிரைவர்..
அதிர்ச்சியில் புரை ஏறியது அவளுக்கு..
சார்.. உங்களுக்காக தான் கார்ல காத்துகிட்டு இருக்காங்க கொஞ்சம் சீக்கிரம் வரீங்களா பஸ் எடுக்கணும் என்று அவர் பொறுமையாய் விளக்கி கூற…
என்னமா யோசிச்சுகிட்டே உட்கார்ந்து இருக்க நாங்க எல்லாம் கிளம்ப வேண்டாமா ? கிளம்பி போமா புருஷன் பொண்டாட்டி சண்டையில எங்க தலையை ஏம்மா போட்டு உருட்டுறீங்க… என்று சலித்துக் கொண்டார் நடத்துனர்…
இவர் எப்படி இங்கு வந்தார் என்று மனதிற்குள் நினைத்தவள்… இல்ல அண்ணா நான் வரல நீங்க போய் அவர்கிட்ட சொல்லிடுங்க என்று டிரைவரிடம்.. மலர் பதிலளிக்க.
அம்மா உங்களுக்கே சாரை பத்தி நல்லா தெரியும் நீங்க வராம அவர் வண்டிய ஒரு இன்ச் கூட நகர்த்த மாட்டார் ஆல்ரெடி இப்பயே டிராபிக் ஆயிடுச்சு இன்னும் கொஞ்ச நேரம் நின்னாலும் ரொம்ப பிரச்சனையாகும் ப்ளீஸ் வாங்க மா… என்று அவர் கெஞ்சி அழைத்தார்..
என்னது வண்டிய நகட்ட மாட்டாரா.. என்று நினைத்துக் கொண்டு எழுந்து பார்க்க.. பேருந்துக்கு எதிர் திசையில் நடுரோட்டில் காரை நிறுத்தி காரின் பொனட்டின் மீது ஏறி மொட்ட வெயிலில் ஸ்டைலாய் அமர்ந்து கண்ணில் கூலர்ஸ் உடன் டின் கோக்கை பொறுமையாய் குடித்துக் கொண்டிருந்தான் ஆதி.. பேருந்துக்குள் இருந்தவளே உணர்ந்தாள் அவனது பார்வை அவளைத்தான் துளைக்கிறது என்று.
அவளது பொறுமையை பார்த்து பஸ்ஸில் இருந்த அனைவரும் கத்த ஆரம்பிக்க வேறு வழியின்றி தனது பேக்கை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி காரின் அருகில் வர..
டிரைவர் இடம் பணத்தை கொடுத்து நீங்க கேப் புடிச்சிட்டு போயிருங்க.. என்று அனுப்பி வைத்தான்.
காருக்குள் ஏறியவன் அவளை திரும்பிப் பார்க்க காருக்குள் ஏறாமல் நின்றிருந்தாள்… அவனுடைய காரை.. உர்ர் ர்.. உர்ர் ர்..என உறும செய்தான்.. அவர் காரு கூட அவர மாதிரியே உறுமுது என்று நினைத்தவள்… ஹார்ன் சத்தத்தில் பயந்தவள் வேகமாய் காரில் ஏறிக் கொண்டாள்.. உச்சகட்ட கோபத்தில் கார் சீறி பாய்ந்தது சாலையில்…
விக்ரமிடம் பேசிக் கொண்டிருந்தவன் எப்பொழுதும் போல் அவள் நினைப்பில் எங்கே வந்து கொண்டு இருக்கிறாள் என்பதை ஆர்வமாய் பார்க்க லொகேஷனை செக் செய்தான்.. அது மாற்று வழியை காட்டும் பொழுதே காலையில் அவனுக்கு எழுந்த சந்தேகம் உறுதியானது.. தெரியும்டி இதுதான் நீ பண்ணுவேன்னு.. வில்லத்தனமான புன்னகையுடன்.. எங்க இருக்க என்று மெசேஜ் செய்தான்.. வீட்ல என்று பதிலளித்ததும்.. அவளின் திருட்டு வேலை உறுதியானது… காரை ஒட்டி வந்தானோ இல்லை பறந்து வந்தானோ அவனுக்கு தான் தெரியும்..
அது.. தேவா.. நா.. என்று அவள் ஏதோ ஒன்று சொல்ல வர காரின் வேகம் அதிகரித்தது..
தேவாதித்யனின் இந்த முகத்தை மங்கை இன்றுதான் பார்க்கிறாள்.. கோபத்தில் முகம் செந்தணலாய் இருந்தது.. காரின் வேகம் அவளுக்கு மரண பயத்தை காட்டியது.. உடல் முழுதும் வியர்த்து…
தேவா.. ப்ளீஸ் வேணா பயமா இருக்கு.. என்று அவள் சொல்ல காரின் வேகம் இன்னும் அதிகரித்தது.. இப்பொழுதுதான் ஒன்று அவளுக்கு புரிந்தது அவள் தேவா.. என்று கூறும் ஒவ்வொரு வார்த்தைக்கும் காரின் வேகம் தாறுமாறாய் அதிகரித்தது…
அவனின் அசுர வேகத்தில் பயந்தவள் எதுவும் கூறாமல் அவன் கையைப் பிடித்து தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.. அவள் உடலின் நடுக்கத்தை உணர்ந்தவன்… மெல்ல காரின் வேகத்தை குறைத்தான்.
எந்திரிடி.. பயந்தவ மாதிரி நடிக்காத.. எந்திரிடி முதல்ல.. என்று தோளை குலுக்கினான்.
மேடம் என்ன நினைச்சுட்டீங்க.. என் புள்ளையோட போய் வாழலாம்ன்னு பிளான் பண்ணீங்களா.. அது கிடைக்கலைன்னு உடனே என் நினைவோடு போய் வாழலாம்ன்னு பிளான் பண்ணி கிளம்பி இருப்பீங்க போல.. என்று கேலியாய் கேட்க..
அவனின் சரியான கணிப்பை நினைத்து அதிர்ந்து தலை குனிந்தாள் மலர்…
தேன்மலர் அப்படிங்கிற பெயரை மாத்திட்டு “தியாகச்செம்மல்”ன்னு வச்சுக்கங்க உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும்.. என்றான் நக்கலான தோரணையில்…
தேவா.. நான் சொல்றது ஒரு நிமிஷம் கேளு ப்ளீஸ்..
அந்த பேர சொல்லி கூப்பிடாத.. கண்ணை மூடி பல்லை நரநரவென கடித்தான்…
மனது வலித்தது.. ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க… ஆதி நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. நீங்க நல்லா யோசிச்சு பாருங்க இப்போ உங்களை சுத்தி நடக்குற எல்லா பிரச்சனையும் என்னால தான்.. அருண் சார் வந்து உங்கள எவ்வளவு கேவலமா பேசிட்டு போனாரு. விக்ரம் அண்ணா முகமே சரி இல்ல… எங்க அம்மா கிட்ட நம்மள பத்தி சொன்னாலும் உங்களை தான் தப்பா நினைப்பாங்க.. என்னால உங்களுக்கு எதுக்கு கெட்ட பேரு… உங்கள எங்கேயும் தலை குனிந்து நிக்கிற நிலைமையில நான் கொண்டு வந்து விட்ற கூடாது..
ஏண்டி உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா.. அருண பத்தி நினைச்சே… விக்ரம பத்தி நினைச்சே… உங்க அம்மாவ பத்தி நினைச்சே… உன்ன பத்தியும் நெனச்சே… ஆனா என்ன பத்தி கொஞ்சமாவது நினைச்சியா டி…
நீ இல்லாம நான் சட்டையை கிழிச்சிட்டு ரோட்ல பைத்தியக்காரன் மாதிரி அலையணுமா… என்னோட பீலிங்ஸ் உனக்கு புரியலையா… இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறியா மலர்… நீ என்ன விட்டுட்டு போனா அப்படியே தண்ணி தொளிச்சு விட்ருவேன்னு நினைச்சியா… எங்கிருந்தாலும் தேடி வருவேண்டி.. கர்ஜித்தான்…
கஷ்டத்துல உன் கண்ணுல கண்ணீர் வராதது உனக்கு ரொம்ப சாதகமா போச்சு இல்ல… அவள் தாடையை அழுத்தி பிடித்தவன்… இந்த முகம் வெட்கத்துல சிவக்குதா? அழுகையில செவக்குதா? இல்ல கோவத்துல சிவக்குதான்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாதுல..
காலையிலேயே நீ வேணும் வேணும்னு அடம் பிடிக்கும் போதே எனக்கு பொறி தட்டுச்சு.. முத்தம் கொடுத்ததற்கு மூஞ்சிய மூஞ்சூர் மாதிரி வச்சிருந்தாளே இன்னைக்கு என்ன ஆடு தானா வந்து தலையை கொடுக்குதுனு யோசிச்சேன்.. ரொம்ப நல்லா பெர்பார்ம் பண்ண… அதுவும் இடையில ஹா… தேவா… அப்படின்னு ஒரு சத்தம் ஒன்னு கொடுத்தியே அல்டிமேட்… நாடி நரம்பு எல்லாம் தீ பிடிச்ச மாதிரி சும்மா ஜிவ்வுனு இருந்துச்சு… என்றான் தோள்களை உயர்த்தி கீழ் இறக்கி….
அதைக் கேட்டு வெட்கத்தில் அவள் பாதம் வரை கூசியது…
இல்ல.. அது.. நா.. உண்மையா தான்… என்று கூச்சத்தில் திக்கி திணற..
பக்கவாட்டில் இருந்தவன் அவளை திரும்பி ஒருமுறை முறைக்க..
சங்கடமாய் தலையை குனிந்தாள் மலர்..
இந்த முகம் அழுகையில செவந்துச்சா வெக்கத்துல சிவந்துச்சானு என்னாலயும் கண்டுபிடிக்க முடியல.. என்றான்..
ஒருவேளை தேடி, நான் கிடைக்கலைன்னா உங்க மனசு மாறும் இல்ல… இந்த பதில் அவள் கூறியதற்கு…
காரின் ஸ்டேரிங் மாங்கு.. மாங்கு… என்று அடி வாங்கியது..
ஐயோ வேணாம்.. ஏற்கனவே கையில அடிபட்டு இருக்கு… ப்ளீஸ்…
ஹார்ன் சத்தத்தில் பயந்து..
பெண் அவள் காதை பொத்தி கீழே குனிந்து கொண்டாள்…
சென்ட் ஆப் கிஸ் கொடுத்து அனுப்புற… என்ன பாத்தா உனக்கு கேன புண்ணாக்கு மாதிரி தெரியுதாடி. அந்த கிஸ்ல என்கிட்ட சொல்லுச்சு.. உன்னோட தவிப்ப… அவ்வளவு வேகம் அதுல…
நான் இவ்வளவு நாள் கட்டி காப்பாத்தி வைச்சிருந்த கற்ப்ப ஒரு கிஸ் கொடுத்து திருடிட்டு போலாம்னு பார்த்திருக்க உன்னை எல்லாம் என்ன செய்யலாம்… ம்… சொல்லு…
உன்னை எல்லாம் ரேப் அட்டம்ப்ட் கேஸ் போட்டு உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி… தட்டணும்டி…
இதைக் கேட்டதும் அவளுக்கே சிரிப்பு வந்து விட்டது… அவன் கோபமாய் இருக்கும் பொழுது சிரித்தால் மேலும் கோபம் அதிகமாகும் என்பதால் சாலையை பார்த்த படி தலையை மெதுவாக திருப்பி உதட்டை கடித்து சிரிப்பை அடக்கி கொண்டாள்…
பாவம்… காரின் சைடு மிரரில் அவளுடைய முகம் தெரியும் என்பதை மறந்து விட்டாள்…
( ஒரு பொண்ணு வெட்கப்படுற மாதிரியும் சிரிக்கிற மாதிரியும் திட்டினது உலகத்திலேயே ஆதியா தான் இருப்பான்..)
சிரிக்காத டி… நீ பண்ண வேலைய நான் பண்ணிட்டு இப்படி விட்டுட்டு ஓடி போய் இருந்தா என்ன சொல்லி இருப்ப…
இன்னும் அவனின் தவிப்பு அந்த மரமண்டைக்கு புரியாமல்…
ஆதி… ப்ளீஸ்… புரிஞ்சிக்கோங்க… நான் இப்பவும் சொல்றேன் நான் எங்க வீட்டுக்கு போயிடுறேன்… கொஞ்ச நாள் அங்க தங்குறேன் அதுக்கப்புறம்.. என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே… சாலையில் அதி வேகமாய் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து… மணலில் சறுக்கி… புழுதியை கிளப்பி.. ரோட்டோரத்தில் இருந்த ஆலமரத்தில் மோத..
தேவாஆஆஆ ஆ … என்ற குரல் காற்றை கிழித்தது…
❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்..
ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .
நன்றி!❤️