அசுரன் 88

 

 அசுரன் 88

 

கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக மரத்தில் மோத போக…

 

இறுக கண்ணை மூடி காதை மூடி தேவாஆ.. ஆ.. ஆ .. என கத்தினாள் மலர்…

 

பெருத்த அமைதிக்கு பின் எதுவும் நேராமல் போனதால்… கண்ணை மூடி உடல் நடுங்கிக் கொண்டு இருந்தவள் மெல்ல நிமிர்ந்து எதிரே பார்க்க… சின்னஞ்சிறு இடைவெளியில்  மரத்தை மோதாமல் நிறுத்தப்பட்டிருந்தது கார்…

நெஞ்சில் கை வைத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியவள்..  வெளுத்து போன முகத்துடன் கண்கள் சிவந்து பக்கத்தில் இருந்த ஆடவனை பார்க்க..  அவனோ ஸ்டேரிங்கில் முழங்கையை முட்டுக்கொடுத்து தனது தலையை தாங்கியபடி… கூலாக இரு புருவத்தையும் உயர்த்தி “என்ன ” என்பதை போல் அவளை தான் பார்த்துக் கொண்டு இருந்தான்…

 

சாவு பயத்தில் மிரண்டு..  அதிர்ச்சியில் நா வரண்டு போய் அவனை பார்க்க…

 

போறேன் போறேன்னு சொல்றியே… வா ரெண்டு பேரும் ஒண்ணா போலாம் என்றான்….

வாழ்ந்தாலும் இரண்டு பேரும் சேர்ந்து வாழலாம் செத்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்து சாகலாம் உன்னையும் என்னையும் இந்த உலகத்தில் தேடுவதற்கு ஆளே இல்ல… என்ன சொல்ற… சேர்ந்து வாழலாமா… இல்ல… சேர்ந்து சாகலாமா… என்று அவன் வில்லத்தனமாய் கேட்க…

 

இந்த ஆதியின் முகம் மலருக்கு புதிதாய் தெரிந்தது…

 

ஆதிய பாத்துட்டே….  தேவாவை பாத்துட்ட… ஆதித்யன்அ பாக்கணும்னு  நினைக்காத… அவன் சொன்ன தோரணையே அவனை வேறொரு ஆளாய் அவளுக்கு காட்டியது… மிரண்டு எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டாள்..

 

பதில் சொல்லுடி… இப்படியே கார எடுத்து நேரா வீட்டுக்கு போலாமா இல்ல இப்படியே போய் எங்கேயாவது பள்ளத்துல விழுகலாமா… என்று கேட்க… 

 

வீ.. ட்..வீட்டுக்கு போலாம்… என்றாள் மிரண்டபடி…

 

தட்ஸ் குட்… என்று கன்னத்தை தட்டினான்…

 

சில கணங்கள் அவளின் குழப்ப முகத்தை ஆழ்ந்து பார்த்தவன்… நீண்ட மூச்செடுப்புக்கு பின்… கட்டாயமாய் வரவழைக்கப்பட்ட  பொறுமையுடன்…

 

உன்னோட பிரச்சனை என்ன, அருண் உன்ன தப்பா பேசிட்டான் அதானே…

தைரியமா இருக்க ஒரு பொண்ண சுக்குநூற உடைச்சு போட…. ஒரு ஆண் எடுக்குற கடைசி ஆயுதம் அவளோட கேரக்டர் அ கேவலமா பேசுறது தான்..  அதுக்கு மேல அவங்களால வேற எதுவும் பண்ண முடியாது… 

அப்படிப்பட்டவங்களுடைய எண்ணத்துக்கு மதிப்பு கொடுத்து.. நம்ம வாழ்க்கையை நாம கெடுத்துக்க முடியாது மலர்…

 

விக்ரம் உன்கிட்ட “உன்னால நாங்க பிரிஞ்சுட்டோம்”ன்னு கவலைப்பட்டானா… நம்ம விஷயத்தைப் பற்றி அவனுக்கு எதுவுமே தெரியாது… இப்ப நான் அவனுக்கு எல்லாத்தையும் புரிய வச்சிட்டேன்… இப்போ நம்ம சேர்ந்தா சந்தோஷப்படுற முதல் ஆள் அவன் தான்… 

எங்க மூணு பேரோட பிரண்ட்ஷிப் அவ்வளவு சீக்கிரத்தில் பிரியாது டி… பிரியவும் விடமாட்டோம்… கோவிச்சுட்டு போனவனை எப்படி சமாதானப்படுத்தி கூட்டிட்டு வர்றதுன்னு எனக்கு தெரியும்..  அவனோட லைஃப்ல ஏகப்பட்ட பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு..  அவனே கொஞ்சம் டிப்ரஷன்ல தான் சுத்திட்டு இருக்கான்..  

 

அடுத்து உன் பிரச்சனை என்ன? உங்க அம்மா தான… உங்க அம்மா கிட்ட நான் வந்து பேசுறேன்… 

 

எந்த பிரச்சனைனாலும் சேர்ந்து சமாளிக்கலாம் டி மனுஷனோட உயிரை வாங்காதே… காலையில என்ன மாதிரி மூடுல ஸ்டார்ட் ஆன டே… இப்படி சொதப்பி வச்சிருக்க…,

காலைல எல்லாம் முடிஞ்சு… நீ எங்கேயோ போய்… பேபி ஃபார்ம் ஆயிருந்தா என்ன பண்ணி இருப்ப… கல்யாணம் ஆகாம குழந்தையை பெத்து  வளக்கறது அவ்வளவு ஈஸி இல்ல மலர்… உன்னோட ஒரு நிமிஷம் அவசர முடிவு, மொத்த வாழ்க்கையும் கெடுத்துட்டு குட்டி சுவராக்கி இருக்கும்… 

 

சாரி… திரும்பத் திரும்ப அப்படி சொல்லாதீங்க காலைல நான் அப்படி பண்ணது தப்புன்னு நினைக்கிறீங்களா… என்றாள் மலர் சுருங்கிய முகத்துடன்…

 

ஸ்ஸ்.. ஸப்பா இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பேன்… என்று அலுத்துக் கொண்டவன்… அவள் பக்கமாக திரும்பி… 

இன்னும் நீ, நா சொல்றத புரிஞ்சுக்கலடி… நீ என்கிட்ட அப்படி நடந்துக்கிட்டது தப்புன்னு நான் சொல்லல… உன்கிட்ட எல்லாத்தையும் எடுக்க உரிமை எனக்கு இருக்கு.. என்கிட்ட இருக்கிறது எல்லாமே உனக்கு தான் உனக்கு மட்டும் தான்… தட்ஸ் நாட் மேட்டர்… 

என்னை விட்டுப் போக நினைச்ச பாரு அதைத்தான் தப்புனு நான் சொல்றேன்… உன்ன விட்டு நானோ… இல்ல என்ன விட்டு நீயோ… நிம்மதியா வாழ முடியாதுடி…

 

ஒரு வேல காலையில எல்லாமே நடந்து முடிஞ்சி இருந்தாலும்… நாளைக்கே உன்ன கூட்டிட்டு போயி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிடாவது வந்து இருப்பேன்… என்ன பொறுத்த வரைக்கும் நீ எப்பயோ என் உயிரோட கலந்துட்ட மலர்…

 

நீ கேட்ட கேள்வியை நானும் கேட்கிறேன் “நான் உனக்கு வேணாமா”… ஒருவேளை நான் இல்லாம உன்னால நிம்மதியா இருக்க முடியும்னா..  இப்பவே நீ கிளம்பி எங்க வேணா போ நான் உன்னை தேடி வர மாட்டேன்… காலம் முழுக்க உன்ன கட்டி போட்டு, மிரட்டி வாழ வைக்க முடியாது மலர்…. என்றான் விரக்தியாய் …

 

சில நிமிடம் யோசனைகளுக்கு பின்… மலருக்கு சில விஷயங்கள் நன்றாய் புரிந்தது… நேற்று இரவே அவனிடம் மனம் விட்டு பேசி இருந்தால்… ஆதி ஒரு நொடியில் அனைத்தையும் சரி செய்து இருப்பான்.. என்று தோன்றியது… முதலில் பூதாகரமாக தெரிந்த விஷயங்கள் அனைத்தும்..  இப்பொழுது ஒன்றும் இல்லாதது போல் தோன்றியது.. 

 

“சாரி ஏதோ குழப்பத்துல தெரியாம பண்ணிட்டேன் இனிமேல் அப்படி பண்ண மாட்டேன்”…

 

எப்படி?…

 

இனி… உங்கள விட்டு போக மாட்டேன்…

 

பச்சை குழந்தை போல் முகத்தை வைத்திருந்தவளை ஆழ்ந்து பார்த்தவன்… 

எப்படி… உன்ன நம்புறது?…

 

நீங்க நம்பறதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்லுங்க பண்றேன்… 

 

என்ன்ன்ன சொன்னாலும் பண்ணுவியா…

 

பண்றேன்…தலைகவிழ்ந்த படி தலையாட்டினாள்  

 

ப்ராமிஸ் என்று கைகளை நீட்ட…

 

கையில் அடித்து சத்தியம் செய்தாள்.. 

( வாண்டட் ஆக  வந்து வண்டியில் ஏறும்  கோழியை உறித்து சுக்கா போடுவது உறுதி)

 

சத்தியம் செய்த அவள் கையை எடுத்து குட்டி முத்தம் வைத்து காரின் கியரின் மேல் வைத்து காரை ஓட்ட ஆரம்பித்தான் ஆதி…

 

மெல்ல சீட்டில் தூங்கி விழுந்தவளை… ஒரு கை கொண்டு தனது தோளில் சாய்த்து கொண்டான்… உச்சி முகர்ந்து நெத்தியில் முத்தம் வைத்தவன்… தன் கன்னத்தை அவள் உச்சியில் சாய்த்தபடி  “உன் மேல கொலவெறியில் வந்தேன் டி”…. இந்த முகத்தை பார்த்தா… வர கோபம் கூட ஓடிடுது… ஒருநீண்டமூச்சுடன் என்ன பண்றது… என்ன அப்படி மயக்கி வச்சிருக்க…

என்று காதலுடன்… தூக்கத்தில் சிறுது பிளந்த படி இருக்கும் செம்மாதுளை இதழை கையில் அள்ளி ஒரு முத்தம் வைத்துக் கொண்டான்….

 

சிறுது நேரத்தில் கார் ஒரு இடத்தில் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கியதில் குலுங்கியது… என்னவென்று முழித்து பார்க்க..  கார் அவளின் ஊரின் எல்லைக்குள் நுழைந்து கொண்டு இருந்தது… தூக்க கலக்கத்தில் பார்த்த அவளுக்கு தூக்கி வாரி போட… அச்சச்சோ… தேவா..  எங்க போறீங்க… இது என்னோட ஊரு… போச்சு போச்சு யாராவது பாத்திர போறாங்க… என்று கூறியபடி அவனது தோளிலேயே முகத்தை மறைத்துக் கொண்டாள்…

கார் ஒரு இடத்தில் நின்றது..

உங்க வீட்டுக்கு போற வழி எந்த பக்கம்… என்று கேட்க…

 

ஐயோ எங்க வீட்டுக்கா.. வேணாம் பா எங்க அம்மா பாத்தா ஏதாவது சொல்லிடுவாங்க.. உங்க மனசு கஷ்டப்படும்… தாலி வேற கழுத்துல இல்ல ஊர்காரங்க பார்த்தா 1008 கேள்வி கேப்பாங்க…

 

பரவாயில்ல…  இவ்வளவு தூரம் வந்துட்டோம் உங்க அம்மாவ பாத்துட்டு போயிறலாம்…

 

ஐயோ தேவா வேணாமே… என் பட்டு குட்டி இல்ல.. என் செல்ல குட்டி இல்ல…  ப்ளீஸ்…என்று அவனது கன்னத்தை கிள்ளி முத்தம் வைத்து செல்லம் கொஞ்ச… அவளைத்தான் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்… தன்னவளிடம் கோபப்பட்டு கத்தி வறண்ட தனது இதழை தேனில் நனைக்க நினைத்தான் போலும்…

 

அவள் நாடியை ஒரு கையால் பிடித்து… தன் பெருவிரலால் அவனது இதழை வருட… பெண் அவள் ஏதுவாய் கண்ணை மூட… 

அவள் இதழை நோக்கி சென்றவனின் எண்ணம் தடைப்பட்டது… காரின் வெளியே தட்… தட்… என்று தட்டும் சத்தத்தால்…

 

யார் என பார்க்க… மலரின் பின்னால் ஜன்னலை இறக்குங்கள் எனும் விதமாய் ஒருவன் சைகை செய்ய…. உயர் ரக காரில் வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்கள் தெரிய வாய்ப்பு இல்லை…

 

ஆதி… ஜன்னல் கதவை இறக்க… “சார்… கோவில் தீர்த்த ஊர்வலம் வந்துட்டு இருக்கு… கார் அப்படி ஓரமா நகட்டுங்க இப்ப ஊருக்குள்ள போக முடியாது… கூட்டம் போனதுக்கு அப்புறம் நீங்க போங்க… என்று அந்த இளைஞன் சொல்லிக் கொண்டிருக்க… அப்பொழுதுதான் திரும்பி மலர் அவனை பார்த்தாள் …

 

மலரை பார்த்தவுடன் புன்னகைத்த இளைஞன்…

 

என்னா மதினி… நல்லா இருக்கீங்களா… திருவிழாக்கு வந்திருக்கீங்களா… என்று கேட்க…

 

வசமாய் மாட்டிக் கொண்டவள்… ஆமா… திருவிழாவுக்கு தான் வந்தோம்… என்று பொய் உரைக்க…

 

இந்த தடவை சகலைய கூட்டிட்டு வந்து இருக்கீங்க போல… 

 

அவள் திரு திருவென முழிக்க…

 

அவளின் பின்னால் இருந்த ஆதி,

என்னா சகலை…  கவி நல்லா இருக்கா என்று கையை தூக்கி நலம் விசாரித்தான்…

 

தூக்கி வாரி போட்டது மலருக்கு… முட்டைக்கண்ணை விரித்தபடியே பார்வையை ஆதியின் பக்கம் மெதுவாய் திரும்பியவள்… “யாருடா நீ” என்பது போல் பார்த்தாள்….

 

அவள் பாவனை பார்த்து ஆதிக்கு சிரிப்பு வந்தது…

 

பாத்தீங்களா… மதினி கூட இவ்வளவு அக்கறையா கேட்கல… சகலை கேட்கிறார் பாருங்க… என ஆதியை பாராட்டி விட்டு…

 

அடியே கவி… இங்க வந்து பாரு யார் வந்து இருக்கானு… உங்க அக்காவும் மாமாவும் ஊர்ல இருந்து வந்திருக்காங்க… தூரத்தில் இருந்தவளை இங்கிருந்த படியே கத்தி அழைக்க…

 

குழந்தையை மாமியாரிடம் கொடுத்து விட்டு… நடந்து வந்தவள்…

என்னங்க ஏன் ரோட்ல நின்னு இப்டி கத்திக்கிட்டு இருக்கீங்க…

 

காருக்குள்ள பாரு.. யாருன்னு 

 

குனிந்து பார்க்க… மலர் புன்னகைத்தாள் … அக்கா.. வாக்கா… எப்போ வந்த… எப்படி இருக்க… என்று கேட்டப்படி மலரின் அருகில் எட்டிப் பார்த்தவள்… யாருக்கா அது… என கேட்க… (கொஞ்சம் வயதான தொப்பை விழுந்த அல்லது தன் கணவனை விட அழகு குறைவான, இன்னும் வேறு என்னென்னமோ அக்காவின் கணவனை பற்றி கற்பனை செய்து வைத்திருந்ததால்… படு சூப்பரான ஆதியை திடீரென்று பார்க்க அக்காவின் கணவனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை )

 

இவ ஒரு கிறுக்கி… அக்கா கூட யார் வருவா மாமா தான் வருவாரு..  கேக்குறா பாருங்க கேள்வி… என்று அவள் கணவன் பிரபு சொல்ல…

 

மரியாதை நிமித்தம்..  ஆதியும், மலரும் காரை விட்டு இறங்கி கவியிடம் பேச… 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே… ஊரை சேர்ந்த நிறைய பேர்… மலரை சூழ்ந்து… என்ன மலர் எப்படி இருக்க… என்று நலம் விசாரிக்க ஆரம்பித்தனர்.. அனைவரும் கேட்ட அதிமுக்கிய கேள்வி..  இவர்தான் உங்க வீட்டுக்காரரா… ஆளு பார்க்க நல்லா ஹீரோ மாறி இருக்காரு… 

ஆக மொத்தம் திருவிழாவிற்கு தீர்த்தம் எடுக்க வந்த மொத்த கூட்டத்திற்கும்..  ஆதி, மலரின் கணவனாக அறிமுகமாகி விட்டான்…

 

ஒருசார் இளம்பெண் குழுக்கள் ஆதியை பார்த்து, அவர்களுக்குள்ளேயே ஏதோ சிரித்து பேசிக் கொண்டிருக்க… அவங்க எல்லாம் உனக்கு யாரு நம்மள பாத்து ஏதோ பேசிக்கிறாங்க என்று ஆதி சுட்டிக்காட்ட…

 

அவர்களை யார் என பார்த்துக் கொண்டிருந்தவனின் தலையை, கைகளால் தன் பக்கம் திருப்பி… அவங்க எல்லாம் என்னோட அத்தை மாமா பொண்ணுங்க உங்களுக்கு தங்கச்சி முறை வேணும்…என்றாள் கடுப்பாய்… 

 

ஆதியும்  மலரும், காரில் பொறுமையாக மலரின் வீட்டுக்கு.. பல நலம் விசாரிப்புக்கு பின் அழைத்து வரப்பட்டார்கள்… 

 

வீட்டு வாசலில் காரில் வந்து இறங்கியவர்கள் உள்ளே நுழைய… ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்தாள் கவி பிரியா…

 

மாமா.. ஆரத்தி தட்டில் காசு போடுங்க…

 

உனக்கு இல்லாததாமா… என கூறிவிட்டு… தன்னிடம் இருந்த இரு 500 தாள்களை எடுத்து தட்டில் போட்டான்…

 

தேங்க்ஸ் மாமா… என்றாள் புன்னகை முகமாய்…

 

புன்னகைத்தான்… ஆதி..

 

சகல மரியாதையுடன் மலரின் வீட்டில் கால் எடுத்து வைத்தான் மருமகன் ஆதி…

 

இதெல்லாம் நீங்க மறு வீட்டுக்கு வரும்போது தான் பண்ணி இருக்கணும்… நீங்க தான் மறு வீட்டுக்கே வரலையே… மதினி மட்டும் தான் ஒரு தடவை வந்துட்டு போனாங்க… அதனால ஆரத்தி எடுத்து இருக்க மாட்டாங்க… ரெண்டு பேரும் ஜோடியா முதல் தடவை வரும்போது கண்டிப்பா ஆரத்தி எடுக்கணும்… என்று கவியின் கணவர் பிரபு செய்த வேலை தான் இது…

 

பிரபு சொல்லியதை கேட்டு தனது நெற்றியை தேய்த்த ஆதி… அப்ப கொஞ்சம் வேலை அதிகமா இருந்தது அதனால நான் வர முடியல… என்று சொல்ல…

 

ஆதி நடந்து கொள்வதை பார்த்தும்… தொடர்ந்து நடக்கும் அதிர்ச்சியூட்டும்… திடுக்கிட்டும் நிகழ்வுகளால் மலரின் விரிந்த முட்டைகண் சுருங்ககவே இல்லை.. 

 

அம்மா தையல் பொருள் வாங்க வெளியே போய் இருக்கு அக்கா.. என்று கூறிவிட்டு மலரின் கையைப் பிடித்து கொண்டு அவள் அருகே பாசமாய் கவிப்ரியா அமர…

 

இங்கு நடப்பதெல்லாம் என்னவென்று மலருக்கே புரியவில்லை கனவு போல் இருந்தது… போன தடவை வந்த போது எடுத்தெறிந்து பேசிய தனது தங்கையா இது… தன்னை ஏற இறங்க… ஆராய்ச்சி பார்வை பார்த்த சொந்தங்களா இது என்று…

 

வெளியில் சென்ற வாசுகியிடம், உன் வீட்டுக்கு உன் மூத்த பொண்ணும், உன் மருமகனும் வந்திருக்காங்க என்று ஊர் மக்கள் தகவல் சொல்ல… மனதில் குழப்பத்துடன் வேகமாய் வந்த வாசுகி வீட்டுக்குள் அவசரமாய் நுழைய… அங்கு தேவாதித்யனும் தேன்மலரும் ஜோடியாக அமர்ந்திருப்பதை கண்டு…  திடுக்கிட்டு நின்றார்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top