அசுரன் 98

அசுரன் 98 

 

கடந்த ஒரு வாரத்தில் உண்மையில் நடந்தவைகள்….

 

முதல் இரவு நாள் அன்று… தூக்க மாத்திரையை கையில் எடுத்து பார்த்தவள்… அதை சிங்க்கில் போட்டுவிட்டு ஸ்பூனினால் பாலை கலந்த படி முதல் இரவு அறைக்குள் செல்ல… அவளை வேகமாக அணைத்த ஆதியை கட்டுக்குள் கொண்டு வந்து கட்டிலில் அமர வைத்து… பாலைக் குடிக்க வைத்தவள்… அவன் குடிக்க குடிக்க கையில் இருந்த கடிதத்தை அவனிடம் நீட்டினாள்… அவளுடைய சீரியஸான முகபாவணையை பார்த்தவன்…

 

அவனும் சீரியஸ் ஆக அதை எடுத்து படிக்க ஆரம்பிக்க…

 

சத்தம் போடாமல் இதை படிங்க… 

கொஞ்ச நாளா என்னை யாரோ ஃபாலோ பண்றாங்க… போன்ல மிரட்டுறான்… நம்ம பேசுறது அவனுக்கு எந்த வகையிலயோ கேக்குது… எப்படினு தெரில… அவன் சொல்றத கேக்கலனா… எங்க அப்பாவ கொன்ன மாதிரி உங்களையும் ஆக்சிடென்ட் பண்ணி கொன்றுவேன் மிரட்டுறான்… என்ன பண்றதுன்னு எனக்கு ஒன்னும் புரியல… நமக்கு நடந்த ஆக்சிடென்ட் கூட என்ன மிரட்டுவதற்காக அவன் ஏற்படுத்தியது தான்… இப்போ உங்கள பால்ல தூக்க மருந்து கலந்து தூங்க வைக்க சொல்லி இருக்கான்… முதல் இரவு நடக்க கூடாதுன்னு சொல்லி இருக்கான்… நடந்தால் நாளைக்கு காலைல நீங்க உயிரோடு இருக்க மாட்டீங்கன்னு சொல்லி இருக்கான்… அவன் இதுக்கு முன்னாடி பேசின கால் ரெகார்ட் பண்ணி வச்சிருக்கேன்… இயர்போன் போட்டு கேளுங்க… பயமா இருக்கு என்னால உங்களுக்கு எதுவும் ஆகிடுமோன்னு… 

 

ஆதி படித்து முடிக்க… போனில் கனெக்ட் பண்ண இயர் போனை எடுத்து அவனிடம் நீட்டினாள்…

 

முதல் கால் ரெக்கார்ட் 

 

( அருண் அலுவலகத்தில் சண்டை போட்டு சென்ற அந்த நாள்)

 

பிரைவேட் எண்ணில் இருந்து அழைப்பு வந்ததை பார்த்து சிறிது யோசனைக்குப் பின் போனை எடுத்தாள் மலர்..

 

ஹலோ… யார் பேசுறது…

 

எல்லாம் உங்களுக்கு வேண்டாதவங்க தான்…

 

புரியல யார் பேசுறீங்க… என்ன வேணும் உங்களுக்கு…

 

நான் யாருன்னு உனக்கு தேவையில்லை ஆனால் எனக்கு என்ன வேணும்னு நீ கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்…

உங்களோட  மறைமுக காதல உலகத்துக்கு டிக்ளர் பண்ணிட்டீங்க போல… அந்த காட்சியை பார்த்து ரசிச்சதுல நானும் ஒரு ஆள்… 

ரொம்ப அழகா டான்ஸ் ஆடினீங்க… மேட் ஃபார் ஈச் அதர் தான்… ஆனா எனக்கு பிடிக்கலையே… நான் ஸ்ட்ரைட்டா விஷயத்துக்கு வாரேன்… நீ ஆதிய விட்டு விலகனும்… எனக்கு தேவை அது மட்டும் தான்…

 

அது மட்டும் என்னால முடியாது… முதல்ல நீங்க யாரு நீங்க சொல்றது எல்லாம் நான் எதுக்கு கேக்கணும்… என்றாள் மலர்…

 

நான் கேட்டா நீ கண்டிப்பா செய்வ… நான் யாருன்னு தெரிஞ்சுக்கணுமா… உங்க அப்பா ஆக்சிடென்ட் ஆகி செத்தாருன்னு உனக்கு தெரியும். அந்த ஆக்சிடென்ட் யார் பண்ணாங்கன்னு உனக்கு தெரியுமா… அது நான்தான்…

 

கண்கள் அதிர்ச்சியில் விரிந்து… இதயம் இதைக் கேட்டு தூக்கி வாரி போட்டது மலருக்கு…

 

சுத்தி சுத்தி என் வட்டத்துக்குள்ளயே உன்னோட வாழ்க்கை வருது… உங்க அப்பாவை என்னவோ தெரியாம தான் ஆக்சிடென்ட் பண்ணேன்… ஆனா  உன்னோட தேவாதித்யன தெரிஞ்சே ஆக்சிடென்ட் பண்ணி கொள்ளுவேன்… அதுவும் உன் கண்ணு முன்னாடியே… ரத்தம் தெறிக்க தெறிக்க சாவான்… அந்தக் கொடூரத்தை எல்லாம் நீ பார்க்கணும்னா… நீ அவன் கூடயே இரு… இல்ல வேணாம்… எங்கேயாவது அவன் நிம்மதியா உயிரோட இருக்கட்டும் என்று நீ நினைச்சா காலையில  கிளம்பி போயிடு… இதுக்கு மேல அவன் வாழ்றதும் சாகுறதும் உன் கையில தான் இருக்கு… என்று அவன் மிரட்டும் தோணியில் கூற…

 

தொண்டையில் நீர் வற்ற எச்சி கூட்டி முழுங்கியவள்… யோசனையில் அமைதியாய் இருக்க…

 

நீ அமைதியா இருக்கிறத பார்த்தா நான் சொல்றத இன்னும் நீ நம்பல போல…

உங்க அப்பா ஆஃபீஸ விட்டு கொஞ்ச தூரம் வந்த உடனே அந்த ரோட்ல திரும்பும் போது தானே செத்தாரு என்று அவருடைய உடை வண்ணங்கள் முதற்கொண்டு அவர் எப்படி தூக்கி எறியப்பட்டு துடி துடித்து மயங்கினார்…  என்று அவன் அணுவாக விவரித்து கூற… நான் நினைச்சிருந்தா ஒரு நிமிஷம் கார நிப்பாட்டி அவர ஏத்திட்டு போய் இருக்கலாம்… பட் ஏன்னு தெரியல மனசு வரல அதனால அப்படியே விட்டுட்டு போயிட்டேன்… உனக்கே தெரியாத தகவல் எல்லாம் சொல்லி இருக்கேன்… வேணும்னா செக் பண்ணிக்கோ… என்று அவன் சைக்கோத்தனமாய் கூற…

 

மலருக்கு உலகமே இருண்டது போல் ஆனது தனது தந்தை அடிபட்டு துடித்ததை எண்ணி இந்த நிலை தன்னுடைய தேவாவிற்கு ஒருபோதும்  வரக்கூடாது என்று தான் அடுத்த நாள் காலையிலேயே ஆதியை விட்டு பிரிய முடிவு செய்து கிளம்பினாள் மலர்…

 

இதை கேட்ட ஆதியின் முகம் அதி தீவிரமாக மாறியது… அவனுடைய மூளை ஆட்டோமேட்டிக்காக யார் இதை செய்தது என்று தேட ஆரம்பித்தது… 

 

இரண்டாவது கால் ரெக்கார்ட்….

 

திருமணம் முடிந்து திரும்பி வரும் பொழுது..  ஆதிக்கும் மலருக்கும் ஆக்சிடென்ட் ஆனதில் மலர் மனம் குழம்பி போய் இருப்பாள்… ஒருவேளை அந்த மர்ம நபரின் வேலையாக இருக்குமோ என்று… அதற்கு ஏற்றார் போல் அவனும் போனில் மெசேஜ் அனுப்பி இருப்பான்… 

 

“கங்கிராஜுலேஷன்ஸ்… கொடூர முடிவுக்கு ஆரம்பம் இது ” என்று வந்திருக்க… 

 

ஆதியை அவன் அறைக்குள் அனுப்பிவிட்டு வீட்டிற்குள் வந்தவள்… அந்த மெசேஜை படித்து பார்த்துவிட்டு கலங்கி போய் நிற்க உடனே அவளுக்கு அந்த அழைப்பு வந்தது….

 

வாமா… கல்யாண பொண்ணு… நான் சொன்னதை எதுவுமே நீ சீரியஸா எடுத்துக்கல… இன்னைக்கு அந்த லாரி தெரியாம உங்க மேல மோத வரல… தெரிஞ்சுதான்….. உங்க காருனு தெரிஞ்சு தான் மோத வந்துச்சு… அனுப்புனது நான்தான்… சும்மா சாம்பிளுக்கு…

 

ஐயோ ப்ளீஸ் நிஜமா எனக்கு எதுவுமே தெரியாது… அவர் இந்த மாதிரி கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணுவாருன்னு…. நான் அவர விட்டு போயிடுறேன் அவர எதுவும் பண்ணிடாதீங்க… என்று அவள் கெஞ்ச…

 

உனக்கு தெரியாது அப்படிங்கறது எனக்கும் தெரியும் அதனால தான் அந்த லாரி மோதல….

 

இப்ப நீ அவனை விட்டு போக வேண்டாம்… அவன் கூடவே இரு…

 

ஒரு நிம்மதி பெருமூச்சு வந்தது மலருக்கு…

 

ஆனா இன்னைல இருந்து நீ எனக்கு அடிமை நான் சொல்றத தான் நீ செய்யணும்… நான் சொல்றதுல ஏதாவது ஒன்னு நீ செய்யலன்னாலும்… நான் நேரடியா உங்க வீட்டுக்கு வருவேன்… அப்படி வரும்போது உன்னோட தேவா உயிரோட இருக்க மாட்டான்… அவன முடிச்சுட்டு தான் நானே வருவேன்.. எப்படி வசதி.. 

 

ஐயோ.. எனக்கு தலையே வெடிக்குது… நீங்க யாரு எதுக்காக என்னை இப்படி எல்லாம் டார்ச்சர் பண்றீங்க… நான் உங்களுக்கு என்ன தான் பாவம் பண்ணேன்… ஏன் என்னோட வாழ்க்கையோட இப்படி விளையாடுறீங்க… உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையா…

 

மனசாட்சி இருக்கறதுனால தான் இப்போ நீங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கீங்க..  இல்லனா கொன்னு தூக்கி போட்டு போயிட்டே இருப்பேன்…

இந்த விஷயத்தைப் பற்றி உன் புருஷன் கிட்ட சொல்லலாம் அப்படின்னு நீ மனசுல நினைச்சா

கூட எனக்கு தெரிஞ்சுரும்… 

 

ஒரு சின்ன சாம்பிள் காட்டவா…

அந்தக் காருக்குள்ள நீயும் அவனும் மட்டும் தானே இருந்தீங்க.. அந்த வளையல் சவுண்டுக்கும்… மழை சவுண்ட்..  நீ பெருமூச்சு விடற சவுண்ட்… தேவான்னு அவன கூப்பிடுறியே அந்த சிணுங்கல்… ஐயோ…  அவன பைத்தியமாக்கல என்ன பைத்தியம் ஆக்கிடுச்சு… என்றான் ஒரு மார்க்கமான குரலில்.. 

 

ச்சீ.. என முகத்தை சுளித்து…  நீ எல்லாம் ஒரு மனுஷனா… என்று அருவருப்பு தாளாமல் கேட்டுவிட்டாள்….

 

( தங்களது அந்தரங்கத்தை பற்றி மூன்றாவது நபர் பேசுவதை கேட்ட ஆதியின் கண்கள் சிவந்து நரம்புகள் புடைத்து தங்கள் இருப்பை காட்டின…)

 

இதுவரைக்கும் நான் மனுஷனா தான் இருக்கேன் என்ன மிருகமாகறது உன் கையில தான் இருக்கு…

 

என்ன பண்ணனும் மட்டும் சொல்லு தேவையில்லாம பேசாத…

 

எப்ப கேட்டாலும் தருவியான்னு ரொம்ப ஏக்கமா கேட்டானே பையன்…

அவன் எப்ப கேட்டாலும் நீ தரக்கூடாது… அதுதான் நான் உனக்கு தர டாஸ்க்… நீ அவன் பக்கத்திலேயே கண்ணுக்கு முன்னாடி தான் இருக்கணும்… ஆனா அவன் கேட்கிற எதையும் நீ தரக்கூடாது…

 

நான் இதை செய்யறதுனால உனக்கென்ன கிடைக்கப் போகுது…

 

நிம்மதி… நான் பட்ட அவமானத்துக்கு ஒரு வடிகால்…. உன் மேல வச்சிருக்க அவனோட லவ் காணாம போகணும்… உன்ன அவன் வெறுக்கணும்… அவன் வெறுக்கிற மாதிரி நீ நடந்துக்கணும்… அவ்வளவுதான்…

நான் சொன்னபடி நீ செஞ்சா… கொஞ்ச நாள் அவனை ஏங்க விட்டுட்டு… உன் கூட போன்ல மட்டும் பேசிட்டு… உங்க ரெண்டு பேரையும் உயிரோடு விட்டுவிடுவேன்… இல்லனா… அவன கொன்னுட்டு..  உன்ன முழுசா எடுத்துக்கிறது எனக்கு ஒரு பெரிய விஷயமே இல்ல… காட் இட்… என்று மிருகக் குரலில் அவன் சொல்ல…

 

என்ன பதில் சொல்வதென்று மலருக்கே தெரியவில்லை…

 

ரொம்ப யோசிக்காத…. நீ யோசிக்கிற நிலைமைல இப்ப இல்ல… நான் சொல்றத செய்யற நிலைமையில மட்டும் தான் இருக்கே… முதல்ல இன்னைக்கு நான் சொல்றத செய்..  இன்னைக்கு முதலிரவு நடக்கக்கூடாது… அவனுக்கு பால்ல தூக்க மருந்து கலந்து கொடுத்து தூங்க வைச்சுட்டு எனக்கு போன் பண்ற… வேணாம் வேணாம்… நீ பண்ண வேணாம் எனக்கே தெரியும் நானே பண்ணுவேன் நீ அட்டென்ட் மட்டும் பண்ற… காட் இட்… என்று அவன் சொல்லிவிட்டு போனை வைத்தான்…

 

அவர்கள் பேசியது முழுவதையும் கேட்ட ஆதியின் முகம் இறுகி போய் இருந்தது… குரல் யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவு ஏஐ டெக்னாலஜி யூஸ் பண்ணி இருந்தான்… 

 

யாராயிருக்கும் என்று அவனுடைய மனது நபர்களை பட்டியலிட ஆரம்பித்தது… 

 

இவை அனைத்தையும் அவனிடம் சொல்லிய மலரின் முகம் பயங்கர குழப்பத்தில் இருந்தது… பயம் படபடப்பு எல்லாமே அவளை சூழ்ந்து இருந்தது… 

 

அவளது முகத்தைப் பார்த்தவன்… தங்களது அந்தரங்கத்தை யாரோ ஒருவன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதே அவளுக்கு எப்படிப்பட்ட மனநிலையை உருவாக்கி இருக்கும் என்பதை யோசித்துப் பார்த்தான்… அந்த தவிப்பு அவனுக்கு புரிந்தது… 

மெல்ல தன் சட்டை பட்டன்களை திறந்தவன் அவளை அள்ளி நெஞ்சில் சாய்த்து கொண்டான்… இப்பொழுது இந்த அரவணைப்பு அவளுக்கு மிகவும் தேவைப்பட்டது… அவளும் இறுக அவனை கட்டிக் கொண்டாள்… அவன் வேற்று மார்பில் மெல்லிய முடிகளுக்கு நடுவே படுத்திருந்தவள் மெதுவாய் அவனது முகத்தை ஏக்கப் பார்வையுடன் நிமிர்ந்து பார்க்க… 

 

என்னடி என்னும் விதமாக புருவத்தை உயர்த்தினான்…

 

சாரி ஏமாத்திட்டனா… என்று அவள் தனது குட்டி மூக்கை சுருக்கி வாயசைக்க…

 

அந்த குட்டி மூக்கை செல்லக்கடி கடித்தவன்… அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ தூங்கு… என்னும் விதமாக கண்ணை மூடி காண்பித்தான்… பின் அவள் உச்சந்தலையில் ஒரு முத்தம் வைத்து இதமாய் அணைத்துக் கொண்டான்… கோழிக்குஞ்சு போல் அவனுள் பதுங்கிக் கொண்டாள்…

 

தன்னைப் பழி வாங்குவதற்காக தான் அவளை பகடைக்காயாக உபயோகிக்க பார்க்கிறார்கள் என்று புரிந்து கொண்டான் ஆதி…

 

மார்பில் படுத்திருந்த பெண்ணவள், சிறிது நேரம் ஆதி இடம் சிரித்து சிரித்து பேசிவிட்டு பின் அவன் தூங்கி விட்டது போல் தனியே பேச்சு வார்த்தை நடத்த…

 

சிறிது நேரத்தில் அந்த நம்பரில் இருந்து அழைப்பு வர…

 

சொல்லு… நீ சொன்ன மாதிரி அவர தூங்க வச்சுட்டேன்… என்று கூறினாள் மலர்.

 

மறுமுனையில் “குட் குட்” என்ற ஒரு ஆண் குரல் கேட்டது…

இன்னைக்கு நீ டயர்டா இருப்ப… நாளையிலிருந்து உன்னோட டாஸ்க் ஸ்டார்ட் ஆகுது என்று கூறிவிட்டு போனை வைத்தான்.. போன் ஸ்பீக்கரில் இருந்தது… 

 

ஆதியின் முகம் முழுவதும் யோசனையும், ஆத்திரமும்… அவனை பலி கொடுக்கும் வெறியும் நிறைந்திருந்தது…

 

தலைவனின் தலையில் முழு பாரத்தையும் போட்டு விட்டு… அவன் மார்பை மஞ்சமாக்கி… நிம்மதியாய் உறங்கிப் போனாள் பெண்…

 

அவள் தோளை மெதுவாய் தட்டிக் கொடுத்துக் கொண்டே… அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் திட்டமிட்டு கொண்டிருந்தான் ஆதி.

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top