அசுரன் 99

 

 

 அசுரன் 99

 

தன் மீது தூங்கிக் கொண்டிருக்கும் தன் மனையாளை மெல்ல நகர்த்தி அருகில் படுக்க வைத்து விட்டு… தூங்கும் இதழில் குட்டி முத்தம் ஒன்றை வைத்துவிட்டு… இருவரது ஃபோனையும் அந்த அறைக்குள் வைத்து விட்டு கதவை பூட்டிவிட்டு வெளியே வந்தவன்.. வீட்டில் லேண்ட்லைனில் இருந்து… விக்ரமிற்கு அழைத்தான் ஆதி.

 

ஆதியின் வீட்டு எண்ணை பார்த்ததும் குழப்பத்துடன் போனை அட்டென்ட் செய்தான் விக்ரம்…

 

என்னடா மச்சான்… இந்த நேரத்துல கூப்பிட்டு இருக்க எதுவும் சந்தேகமா என்றான் விக்ரம்…

 

( முதல் இரவில் இடையில் நடுசாமத்தில் போன் பண்ணி அழைத்தால் அப்படித்தானே நினைக்கத் தோன்றும் )

 

அடி வாங்க போற… நீயும் ராஜேஷ்ம் பத்து நிமிஷத்துல என் வீட்ல இருக்கணும்… முன்பக்கம் வர வேணாம் பின் பக்கம் வந்துருங்க என்று கூறி விட்டு போனை வைத்தான்…

 

என்ன விஷயம்னு சொல்லாம உடனே வாங்கன்னு சொல்லிட்டு வைக்கிறான்..  குழம்பியபடியே ராஜேஷ் அழைத்துக்கொண்டு கிளம்பினான்…

 

விக்ரமின் வீடு ஆதியின் வீடும் அருகருகே தான்..  சொல்லப்போனால் விக்ரமின் வீட்டின் அருகில் இருப்பதால்தான் இந்த வில்லாவையே ஆதி வாங்கினான்… திருமணத்திற்கு வந்த ராஜேஷ் விக்ரமின் வீட்டில் தான் தங்கி இருந்தான்.. அதனால அவனை அழைத்துக் கொண்டு உடனடியாக ஆதியின் பின்பக்க வாசல் வழியாக உள்ளே நுழைந்தனர்.. 

 

எதுவும் பேசாதே என்று சைகை காண்பித்து விட்டு அவனது அலுவலக அறைக்கு  அழைத்து சென்றான்.

 

ஆதியின்  பட்டு வேட்டி சட்டையையும் கழண்டு இருந்த பட்டனையும் அவன் முகத்தில் தெரிந்த குழப்பத்தையும்  கண்டு,

 

என்னடா மச்சான்!… எதுவும் பெரிய பிரச்சனையா… டாக்டர் கிட்ட போவோமா… எதுனாலும் சொல்லு வெக்கப்படாத… என்றான் விக்ரம் கிசுகிசுப்பாக… 

 

அவனைத் தீயாய் முறைத்த பின் 

நடந்த அனைத்தையும், அவன் போனில் கேட்ட விஷயங்களையும் அவர்களுக்கு விவரித்தான்…

 

உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயம் என்பதால்.. ராஜேஷ் தனது அறைக்கு சென்று  பக் டிடெக்டர் (Bug Detector) எடுத்து வந்து ஆதியின் வீடு முழுவதும் சோதனை செய்தான்… எதுவும் தவறாக கிடைக்கவில்லை.. 

 

இப்பொழுது நிம்மதி பெருமூச்சுடன் நார்மலாக பேச தொடங்கினார்கள்… 

 

ஆதி தனது போனையும் மலரின் போனையும் எடுத்து ராஜேஷிடம் கொடுக்க… அவன் அதை முழுதாக ஆராய்ந்தான்… அந்த இரண்டு போன்களும் அந்நியநபரால்  ட்ராக் செய்யப்படுவது தெரியவந்தது…

ஆனால் அதை டிஆக்டிவேட் செய்தால் அந்த மர்ம நபர் யார் என்று தெரிவதற்கு முன்பே சுதாரித்து விடுவான்… அதை அப்படியே விட்டுவிட்டார்கள்… 

 

இப்பொழுது அடுத்த கட்டமாக… அந்த நபரை அழைத்த போன் நம்பரை டிராக் செய்யப்பட்டது.. அதன் லொகேஷனை கண்டுபிடிக்க முடியவில்லை வாய்சும் AI டெக்னாலஜி மூலம் வெளிவந்ததால் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை… இந்த ஐடியாவை அவர்களும் பின்பற்ற முடிவு செய்தார்கள்…

 

மலர் போனில் பேசிய குரலை மையமாக வைத்து… ஆதியின் குரலை… மலர் குரல் போல் பிரதிபலிக்க முடிவு செய்தார்கள்.. 

 

சிங்க குரல் எப்படி தேன் குரலாய் மாறும்… ஆப் அலறிவிட்டது…. திக்கி திணறியது…

 

அடுத்து விக்ரம் குரலை மாற்றலாம் என்று எண்ணி முயற்சி செய்ய… இறுதியாக ராஜேஷின் குரல் மிகச் சரியாக மலரின் குரலில் பொருந்தியது…

 

மலரின் போன் ராஜேஷ் இடம் ஒப்படைக்கப்பட்டது… இனி அந்த மர்ம நபரிடம் இருந்து வரும் அழைப்புகளை ராஜேஷ் தான் எடுத்து  பேசுவதாய் முடிவு செய்யப்பட்டது… அவன் வழியிலேயே சென்று அவனுக்கு சந்தேகம் வராமல் அவனை பிடிப்பதற்கு ஏற்பாடுகள் நடந்தேறின…  அவர்கள் பேசுவது எப்படி அவனுக்கு கேட்கிறது என்று மட்டும் இன்னும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை..  பக் டிடெக்டர்  வீடு முழுவதும் ஆராய்ந்தும் எதுவும் கண்டுபிடிக்கவில்லை…

 

அடுத்த நாள் காலையில்… முதலிரவு நடக்காததால்… சலிப்பாய் ஆபீஸ் கிளம்புவது போல் நாடகத்தைப் போட்டு ஆதியின் போனை அவன் காரில் அனுப்பினான்… அது என் போனை ட்ராக் செய்தவன் ஆதி கிளம்பி விட்டான் என நினைத்தது போல் அந்த கருப்பு ஆடு போன் செய்தது…

 

ராஜேஷ் எடுத்தான்…

 

முதலில் ஆதியை பற்றி விசாரித்து… அவளுக்கு ஆர்டர் போட்டுக் கொண்டிருந்தவன்… திடீரென முத்தம் கேட்க… தூக்கி வாரி போட்டது ராஜேஷிற்கு… போனை மியூட் போட்டுவிட்டு… 

 

ப்ரோ என்ன ப்ரோ…  முத்தமெல்லாம் கேட்கிறான்… என்னோட முதல் முத்தத்தை என்னோட காதலிக்காக சேர்த்து வச்சிருக்கேன்… இவனுக்கெல்லாம் என்னால கொடுக்க முடியாது என்று ராஜேஷ் அடம்பிடிக்க….

 

கொடுத்து தொலைடா அவனுக்கு சந்தேகம் வரப்போகுது என்று விக்ரம் கூற…

 

அவர்களின் அமைதியை பார்த்த நபர்… போன்ல கொடுக்க விருப்பம் இல்லனா நான் நேர்ல வரட்டுமா என்று கேட்க… ( நேரில் வா என்று இவர்கள் கூறினால், அவனுக்கு சந்தேகம் வந்துவிடும் அதனாலயே )

 

அய்யய்யோ… இல்ல நான் போன்லயே கொடுக்கிறேன்… கூறிவிட்டு  வேண்டா வெறுப்பாக இச் இச் என்று சத்தம் எழுப்பினான்…

 

வேண்டா வெறுப்பா கொடுக்குற மாதிரி இருக்கு நல்லா அழுத்தமா கொடு என்று கேட்க…

 

யோவ்.. அதெல்லாம் என்னால முடியாது என்று விக்ரமை பார்த்து ராஜேஷ் கண்ணை உருட்டி தலையசைக்க…

 

இப்ப நீ குடுப்ப பாருடா… என்று போனை எடுத்து அவன் வாயில் அழுத்தி வைத்தான்… அந்த இச்ச் ச்… என்ற சத்தத்தை கேட்டு அந்தப் பக்கம் இருந்த நபர் ரசித்து சிலாகித்து…

 

போன்ல வாங்கும் போதே இவ்வளவு கிக்கா இருக்கே நேர்ல வாங்குனா எப்படி இருக்கும் என்று கேட்க…

 

கெரகம் இது வேறயா… என நினைத்தவன்… நாசமா போச்சு… என்று பதில் கூறினான்…

 

என்ன?

 

எச்சி பட்டு என்னோட போன் நாசமா போச்சு… என்றான் எரிச்சலாய்  போனை துடைத்துக் கொண்டே…

 

இவர்கள் இருவருக்கும் இது காமெடியாய் தெரிய…  இது முழுவதும் மலருக்கு நடக்க இருந்ததை எண்ணி…ஆதிக்கு உடல் முழுவதும் பற்றி எரிவது போல் இருந்தது..

 

நீ எனக்கு முத்தம் கொடுத்தேனு உன் புருஷனுக்கு தெரிஞ்சா எப்படி இருக்கும் என்று கேட்க…

 

ஆதியின் முகத்துக்கு நேரே வந்து  அவருகிட்ட மட்டும் சொல்லிடாதீங்க… இந்த விஷயம் தேவாவுக்கு  எப்பவுமே தெரியக்கூடாது… தெரிஞ்சா அவர் தாங்கவே மாட்டார்… என்று… சரோஜா தேவியின் “கோபால் வேணாம் கோபால்” என்ற முகபாவணையில்  செய்து காண்பித்துக் கொண்டு இருந்தான் ராஜேஷ்.. 

 

டேய் கம்முனு இருடா … ஆதி இருக்கிற கோவத்துல உன்ன போட்டு பொளக்க போறான்… என்று ராஜேஷை கட்டுப்படுத்தினான் விக்ரம்…

 

நேற்று இரவு அணிந்திருந்த அதே கருப்பு நிற உடையில் தான் ராஜேஷ் இருந்தான்… அதே சமயம் அந்த மர்ம நபர்…

 

கருப்பு கலர் டிரஸ்ல நிஜமாவே நீ ரொம்ப அழகா இருக்க என்று வர்ணிக்க…

 

தன்னை கீழே குனிந்து பார்த்தவன்…

 

யாரு நானா? என்று கேட்க…

 

எஸ்….  நீயே தான்… 

 

அட கருமம் புடிச்சவனே… என்று தலையில் அடித்துக் கொண்டான் விக்ரம்.

 

அதுவும் அந்த ஒயின் கலர்ல சிவந்து இருக்க லிப்ஸ் வாவ், என்ன சொக்கி இழுக்குது… கடிச்சு வைக்க தோணுது என்று வர்ணிக்க…

 

ராஜேஷ் தனது உதட்டை இரு கைகளாலும் மூடிக்கொண்டவன்… சரியான காஜி புடிச்சவனா இருக்கான் ப்ரோ.. என்று விக்ரமிடம் கூறிவிட்டு…

 

கேட்கவே ரொம்ப கொடுமையா இருக்கு… என்று பதில் அளித்தான் போனில்…

(அவன் கூறியதை பார்த்து விக்ரம், வயிற்றை பிடித்துக் கொண்டு  குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தான்… )

 

( பல்லை நரநர என கடித்துக்கொண்டு இரும்பென இறுகி உட்கார்ந்திருந்தான் ஒருவன்… அவன புடிச்சு மட்டும் என் கையில் கொடுங்கடா… வாய் இருந்த இடமே தெரியாம அழிச்சிடுறேன்… என்று மனதிற்குள்ளேயே உறுமி கொண்டு உட்கார்ந்திருந்தான் ஆதி)

 

இதுக்கு மேல பேசிட்டு இருந்தா என்ன போன்லயே ரேப் பண்ணிடுவான் போல ப்ரோ… என்று கூறிவிட்டு…

 

நான் ஆபீஸ் கிளம்பட்டுமா நான் போகலைன்னா சந்தேகம் வரும் என்றான் பவ்யமாக… 

 

கல்யாணத்துக்கு முன்னாடி நீ பேசினதை விட கல்யாணத்துக்கு அப்புறம் உன்னோட குரல் ரொம்ப இனிமையா இருக்கு ஐ லைக் இட்… என்று அவன் கூற…

 

( கல்யாணத்துக்கு முன்னாடி பேசுனது மலர்… கல்யாணத்துக்கு பின்னாடி இப்பொழுது பேசுவது ராஜேஷ்…)

 

தன் குரலை ஒருவன் பாராட்டுவதை நினைத்து பெருமையாக… 

நிஜமாவா என்றான் ராஜேஷ்… விக்ரமின் முன் தன் காலரை பெருமையாக தூக்கி விட்டுக் கொண்டு நின்றான்.

 

மூடிக்கிட்டு பேசு என்னும் விதமாக கையில் சைகை செய்தான் விக்ரம்…

 

இந்த குரலுக்காக என்னோட சொத்தையே எழுதி வைப்பேன்…

 

ப்ரோ இவன் எனக்கு தெரிஞ்சு முன்ன பின்ன பொண்ணுங்களே பார்த்திருக்க மாட்டான்னு நினைக்கிறேன்.. என்று விக்ரமிடம் கூறிவிட்டு…

 

ஹா… ஹா ஹா… என்று கோவை சரளாவின் சிரிப்பை போட…

 

சிரிக்காதே சிம்பனி மாதிரி இருக்கு..

 

(அட ரசனை கெட்டவனே… இது என்னடா சிம்பனிக்கு வந்த கேடுகாலம்)

 

ஒரு ஐ லவ் யூ மட்டும் சொல்லு என்று  போனில் இருந்தவன்  கூற…

 

கருமம்…  ப்ரோ இதெல்லாம் என்னால முடியாது… என்று முகத்தை திருப்பிய படி ராஜேஷ் விடாப்பிடியாக நிற்க…. 

 

கண்ண மூடிட்டு சொல்லி தொலைடா… பக்கி… அவனுக்கு சந்தேகம் வரப்போகுது… உனக்கு புடிச்ச ஹீரோயினி யாரு… என்றான் விக்ரம்.

 

ராஷ்மிகா…

 

நெட்டில் இருந்து ராஷ்மிகாவின்  புகைப்படத்தை எடுத்து  ராஜேஷின் கண் முன்னே காட்ட… அதை பார்த்துக் கொண்டே..  ஐ… லவ்..  யூ… என்றான் அழுத்தமாக…

 

றெக்கையில்லாமல் வானத்தில் பறந்தது போல் உணர்ந்தான் ஒரு பரதேசி,…

 

இங்கு நடக்கும் அனைத்தையும் பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு… தனது இரு விரல்களை உரசியப்படியே யோசித்து கொண்டு இருந்தான் ஆதி… 

 

யோசனையில் இருந்த ஆதியின் முகத்தை பார்த்த ராஜேஷ்… ஒருவேளை இது அருணா இருக்குமோ என்று தனது சந்தேகத்தை கேட்க…

 

விக்ரமும்.. ஆதியும் அவனை தீயாய் முறைத்தனர்…

 

என்னோட பொண்டாட்டி னு தெரிஞ்சதுக்கு அப்புறமும் அவன் இந்த மாதிரி கேவலமான விஷயம் பண்ற அளவுக்கு அவன் கீழ்த்தரமானவன் இல்லை… இது வேற எவனோ… செமத்தியா என்கிட்ட வாங்கிட்டு போன எவனோ திரும்ப கொடுக்கணும்னு வந்து இருக்கான்…

 

விக்ரமும் ஆமோதிப்பாக தலையசைத்தான்… 

 

மலரோட அப்பாவுக்கு ஆக்சிடென்ட் ஆன கேஸ பத்தி விசாரிக்க சொல்லி இருக்கேன்… அதுக்கு பின்னாடி யார் இருக்கான்னு தெரிஞ்சா ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்… என்றான் ஆதி.

 

புதுப்புது பிரச்சனையா வந்து உங்களுடைய கல்யாணம்தான் தள்ளிப் போகும்னு நினைச்சேன்… ஆனா இப்படி ஃபஸ்ட் நைட் தள்ளி போக வச்சிட்டாங்களே ப்ரோ…

“லட்டுல வச்சேன்னு நெனச்சியா தாஸ்… நட்டுல வச்சேன்” அப்படிங்கற கதையா ஆயிப்போச்சே…  என்று  கலாய்க்கும் தோணியில் ராஜேஷ் வருத்தப்பட…

 

ஆதி வேகமாய் தனது சட்டையை மடித்துக் கொண்டு எந்திரிக்க… அவன் எழுந்த தோரணையிலேயே தெரிந்துவிட்டது ராஜேஷ்க்கு… எடுத்தான் ஓட்டம்… 

வீடுன்னு கூட பாக்கலையே அப்படி ஒரு ஓட்டம்…

 

அடுத்த ஒரு வாரமும் மலரின் குரலில் பேசியது ராஜேஷ் தான்…

 

போனில் இருந்தவன் சிரிக்க சொல்லி, சினுங்க சொல்லி, பாட சொல்லி என விதவிதமாக இம்சித்தான் ராஜேஷை… இவன் படுத்தும் பாட்டுக்காகவே முத்த சத்தத்தை போனில் டவுன்லோட் செய்து வைத்திருக்கிறான்… அவன் கேட்கும் பொழுதெல்லாம் அதை ஆன் செய்து விடுவான்.. இப்பொழுதெல்லாம் பல அந்தரங்க கதைக்குள்ளும் செல்ல ஆரம்பித்து விட்டான் அந்த கருப்பு ஆடு… 

( அதை மட்டும் நான் ஒரு எபிசோடா போட்டு இருந்தேன்… எல்லாம் என்ன ரவுண்டு கட்டி இருப்பீங்க 😆)

இப்படி பேசி மயக்கி மலரை தேவாவிடம் இருந்து கவர்ந்து செல்ல எண்ணம் அந்த கருப்பு ஆடுக்கு… ( மனசுக்குள்ள பெரிய ராவணன்னு நினைப்பு)

 

ஒன்று கேட்டால் 10 ரியாக்ஷன் கொடுத்து போனை கட் செய்வான் ராஜேஷ்…

 

அப்பாடா ஒரு வழியா வச்சுட்டான் என்று நிம்மதி பெருமூச்சு விட்டவன்… உன்கிட்ட இருந்து என் கற்ப நான் காப்பாத்திக்கிறதுக்காகவே உன்ன சீக்கிரம் கண்டுபிடிக்கணும் டா… பொண்ணு குரலை கேட்டே… இப்படி வழிகிறானே… நிஜத்துல பொண்ண பாத்தா என்ன பண்ணுவான்… இவன் பேசுற பேச்சுக்கு என்னோட போனே குட்டி போடும் போலயே… சரியான காஜி பையன்… என்று மனதுக்குள் வறுத்து எடுத்தான் ராஜேஷ்…

 

❤️ கொடுத்தால் தினமும் இரண்டு எபிசோடு போடுகிறேன்.. 

      ஊக்கபடுத்த கருத்துகளையும் பகிருங்கள் .

      நன்றி!❤️

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top