அத்தியாயம் 02
அரசுவோ துத்துக்குடி துறைமுகத்தில் துரியோதனனுக்கு சொந்தமான ஒரு கண்டெய்னர் அறையில் மது அருந்திக் கொண்டே அச்சுதனிடம்
“டேய் அச்சு உங்க அண்ணி பக்கத்துல நான் கொஞ்சம் சுமாரா இருக்கேனோ?”
என்றதும் அச்சுதனோ, “எந்த அண்ணிய கேட்குற?” என்றதும் அரசுவோ,
“ப்ச் வேற எவ மூத்தாள கேக்குறேன்டா கொஞ்சம் கலரா வேற இருக்கா அதான்” என்றதும் அச்சுதனோ,
“அப்டி சொல்லிர முடியாதுடா நீ நல்லா அந்த காலத்து ராஜாவட்டம் கொஞ்சம் கருப்பா அழகா இருப்ப அண்ணி தான் கொஞ்சம் உன் பக்கத்துல சுமாரா இருக்கும்”
என்றதும் அரசுவோ, “ம்ம் உனக்கு தெரியுது அவளுக்கு புரியுதா பாரேன் இந்த மாதிரி புருஷன் கிடைக்க அவ கொடுத்து வச்சிருக்கனுமில்ல”
என்றவன் அத்துடன் நில்லாமல், “டேய் அச்சு நம்ம ஏசிபி மாப்பிள்ளை போலீஸ் ட்ரைனிங் தானே போனான்”
என்று அரசு குடிபோதையில் குழறியபடி கேட்க, “அதுல என்னடா சந்தேகம்? அதானே ஏ.சி.பியா உட்கார்ந்துக்கிட்டு நம்ம கழுத்தறுக்குறான்”
என்று அச்சுதன் சலிப்புடன் கூற, “ம்ம் ஆமால்ல ஆனா அவன் மட்டும் எப்பிடிடா கோதுமை நிறத்துல இருக்குறான்? நம்ம அத்தை குங்கும பூவா தின்னுருப்பாங்களோ”
அதற்கு துரியதனோ அரசுவிடம், “ப்ச், உனக்கு என்னடா பிரச்சனை ஏன் இப்போ அதெல்லாம் தேடுற?”
என்றதும் அரசுவோ சிப்பு சிப்பாக மதுவை அருந்தியபடி, “பாரு நீங்க ரெண்டு பேரும் கூட கொஞ்சம் கலரா இருக்கீங்க நான் தான் கருப்பா காட்டான் மாதிரி இருக்கேன் அதான் உங்க அண்ணிக்கு என்ன புடிக்கலையோ?”
என்றதும் அச்சுதனின் வாயிலிருந்த மதுவோ பீய்ச்சி அடிக்க இருமிக் கொண்டே,
“டேய் அரசு உன் கலரால அண்ணிக்கு உன்ன பிடிக்காம போச்சா? நல்லா யோசிச்சு பாரு நீ என்ன என்ன பண்ணுனன்னு அதுக்கு பிறகு பேசுடா”
என்றதும் அரசுவோ, “நான் என்னடா பண்ணுனேன்? அவ தான் பிரச்சனை பண்ணா ஆனா பாரு பிரச்சனையெல்லாம் மனசுல வச்சிக்காம வீட்டுக்கு வாடின்னு இறங்கி
போனா என்ன நாயா கூட மதிக்கமாட்டேங்குறா என்ன போல ஒரு உத்தம புருஷன் அவளுக்கு கிடைப்பானா சொல்லு? “
என்று துரியனை பார்த்துக் கேட்க அவனோ, “ஆமா உன்ன போல வருமாடா”
என்று மீண்டும் விஸ்கியை குவளையில் நிரப்ப அரசுவோ, “உனக்கு தெரியுது அவளுக்கு தெரியுதா பாரு,”
என்று குற்றபத்திரிகை வாசித்தவன் மீண்டும் துரியனிடம்,
“உன் பொஞ்சாதியாவது வீட்டுக்கு வந்தாளா? இல்ல இந்த அகம் புடிச்ச கழுதை மாதிரி வீஞ்சிக்கிட்டு திரியிறாளாடா?”
என்றதும் துரியோதனனோ, “எங்க? அதுக்கு உன் பொஞ்சாதியெல்லாம் தெய்வம் இவ பேயி நல்லா போந்தா கோழி மாறி இருந்துக்கிட்டு இப்ப தான் உலக அழகி
அளவுக்கு ஸீன் போடுறா ஏதோ ஒரே ஒரு முறை தெரியாம கொஞ்சம் சுருட்ட வச்சு சுட்டுப்புட்டேன் அதுக்கு இப்போ தான் ரொம்ப பண்ணுறா
அதுக்கு பிறகு இவளுக பின்னுக்கு நாய் மாதிரி அலையுறதெல்லாம் இவளுக கண்ணுக்கு தெரியாதுடா ஏதோ கொஞ்சம் தட்டினா குறைஞ்சு போற மாதிரி பிகு பண்ணுவாளுக”
என்று கூற அரசுவோ, “ஆமான்டா இந்த பொண்ணுங்களே இப்டி தான் நான் பாரு டைவர்ஸ் பண்ணதெல்லாம் மறந்துட்டு பெரிய மனசு பண்ணி வாழலாம்னு கூப்பிட்டா வரமாட்டேங்குறா சரியான திமிரு பிடிச்சவ”
என்று திட்ட அச்சுதனோ, “கேஷாவுக்கு மட்டும் தெரியணும்” என்றதும் அச்சுதனுக்கு ஒரு உதை விட்டவன்,
“என்னடா மரியாதை குறைவா பேசுற சின்ன அண்ணின்னு கூப்பிடு கேஷாவாம்ல கேஷா”
என்று விட்டு மீண்டும் குடித்தவன், “ஆனா சும்மா சொல்லக் கூடாது உன் பெரிய அண்ணிய அந்த ஆண்டவன் எனக்குன்னே படைச்சு விட்ருக்கான் என்ன அழகு? அப்டியே கடைஞ்செடுத்த வெண்ணையாட்டம் பளபளன்னு சொல்லும் போதே ஜிவு ஜிவுன்னு
ஏறுதுடா அழகிடா அப்டியே முறைக்கும் போது நுனி மூக்கு சிவக்கும் பாரு ஸ்ப்பா சான்ஸே இல்ல நாளைக்கு அவள பார்க்குற வரைக்கும் தெளியாத போதைடா அவ”
என்று அப்படியே விழுந்து உளறிக் கொண்டே அரசு உறங்கி போக துரியோதனோ,
“டேய் அச்சு உண்மையில இவன் ரெண்டு பொண்டாட்டி கூட வாழ போறானாடா?”
என்று கேட்க அச்சுதனோ, “எனக்கென்னடா தெரியும்? அவனா முடிவெடுப்பான் அவனா பண்ணுவான் எதையோ பண்ணி தொலையட்டும் பண்ணினதுக்கு பிறகு பார்ப்போம்”
என்று குடித்துக் கொண்டே அடுத்தநாள் வாங்க வேண்டிய வட்டி பார்க்க வேண்டிய கட்டப்பஞ்சாயத்தை பற்றி பேசலாயினர்.
ஆகமொத்தம் இவர்களை பொறுத்தவரை பெண்கள் இவர்களின் இஷ்டத்துக்கு ஆட்டுவித்து வைக்கும் பொம்மலாட்ட பொம்மைகள் மட்டுமே, அவர்களுக்கென்று சுயமரியாதையோ சுய சிந்தனையோ இருக்க கூடாது என நினைக்கும் காட்டுமிராண்டி கூட்டம் அவ்வளவே,
உலகமும் விஞ்ஞானமும் வளர்ச்சி அடைந்தும் இவர்களின் ஆணாதிக்க குணம் மட்டும் இன்னும் விடாமல் ஒட்டி பிறந்த இரட்டையர் போல் விட்டு போகாமல் இருப்பது விந்தையிலும் விந்தை தான்,
கதைத்துக் கொண்டிருந்த அரசுவும் நண்பர்களும் சரக்கு போதையில் உறங்கி போக
ஆனால் அகமேந்திக்கு தான் தூக்கம் சீர்கெட்டது., அவனது அழைப்பை துண்டித்து விட்டு அமர்ந்திருந்தவள் முதலில் அழுதாலும் பிறகு மனதுக்குள் அரசுவை கருவறுக்க வேண்டும் என்ற எண்ணம் வேர் விட்டு வளரத் தொடங்கியது.
அவன் மீதிருந்த கோபம் தீர்ந்தபாடில்லை., அதே கோபத்தில் அருகிலிருந்த பஞ்சணையை தூக்கி தூர வீசவும் செழியன் வீட்டிற்குள் நுழையவும் நேரம் சரியாக இருந்தது.
செழியனை கண்டது தான் தாமதம் இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த அழுகை எல்லாம் பீறிட்டுக் கொண்டு வெளியே வர தாயை கண்ட குழந்தை போல் தாய்ப் பசுவை தேடும் கன்றை போல ஓடி வந்து செழியனின் மார்புக்குள் தஞ்சம் புகுந்துக் கொண்டவள், குலுங்கி குலுங்கி அழுதபடி,
“அண்ணா என்னால முடியலண்ணா நம்ம இங்கேயிருந்து போயிருவோம் என்னால இந்த அசிங்கத்த தாங்க முடியல உடம்பெல்லாம் கூசுது”
என்று உதட்டை பிதுக்க செழியனின் உடலோ இறுகி தான் போனது. தன் தங்கையின் வாழ்க்கையை நாசம் செய்த அனைவர் மீதும் கோபம் வந்தது. முக்கியமாக தந்தை மற்றும் தாய் மீது தான், அரசு அடிப்பட்ட நாகம் என்று அறிந்தும் அவனை மணமுடித்து வைத்தவர்களை என்ன செய்ய?
இப்போது தங்கையை தேற்ற வேண்டுமென முடிவெடுத்தவனாக, “அகி இங்கே பாருடா இங்கே பாரும்மா”
என்று நிமிர்த்த அவளோ அவன் மார்ப்புக்குள் கோழிக்குஞ்சாய் அடைக்கலம் புகுந்தபடி,
“அண்ணா எனக்கு இந்த அவமானத்த ஜீரணிக்கவே முடியல அசிங்கமா இருக்கு செத்துரலாம் போல இருக்குண்ணா காலேஜ்ல எல்லாரும் இந்த வீடியோவ
பார்த்திருப்பாங்க இல்ல அன்னைக்கு என்ன கேரக்ட்டர்லஸ்ன்னு சொன்னான் இன்னைக்கு அதே மாதிரி மாத்திட்டானில்ல”
என்று அழ செழியனுக்கு உள்ளுக்குள் எரிமலை ஒன்று கொதித்தது. எப்படியாவது அரசுவை கொன்று புதைக்க வேண்டுமென்று சபதம் செய்தவன்,
“அகி குட்டி இங்கே பாரு நம்ம எதுக்கு வந்திருக்கோம் இவனுக முன்னுக்கு வாழ்ந்து காட்ட தானே நீ கண்டிப்பா இவனுக முன்னாடி தலை நிமிர்ந்து வாழ்ந்துக் காட்டனும் புரியுதா? இந்த உலகத்துல எவனும் எதையும் பேசட்டும் எனக்கு அதை பத்தி கவலையில்ல,
எனக்கு என் தங்கச்சிய பத்தி தெரியும் உனக்கு நல்ல எதிர்காலத்தை எனக்கு அமைச்சு தர முடியும் உன் கூட நானிருக்கேன் கவலைப்படாத உடைஞ்சிராத இந்த முறை அவனுகள நாம உடைக்கனும் அண்ணன் தம்பிய மண்ணோட மண்ணாக்கனும்”
என்று அவள் மனதுக்குள்ளும் வஞ்சத்தீயை பற்ற வைக்க கண்களில் கண்ணீரும் குரோதமும் வழிய அண்ணனை பார்த்தவள்,
“நிச்சயமா அண்ணா கண்டிப்பா ஆற்றலரசுங்குற பெயரையே இந்த தூத்துக்குடி மறக்கணும் அவன பார்த்து பயந்தவங்க எல்லாம் அவன கேலி பண்ணி சிரிக்கனும் இப்படி ஒருத்தன் வாழ்ந்தானுங்குறதுக்கு தடயமே இல்லாம போகனும்”
என்று வெறியுடன் பேசியவளை பார்த்து அகச் செழியனும் மனமார புன்னகைத்தான்.
இப்படியாக யாருக்கும் காத்திருக்காது அடுத்தநாள் பொழுதும் விடிந்திருக்க, சோம்பல் முறித்தபடி எழுந்துக் கொண்ட அரசுவோ, தலையை பிடித்துக் கொண்டு
“என்னத்த தரமான சரக்குன்னு சொல்லி கொடுத்தாலும் கலப்படம் தான் பண்றானுக, எம்.எல்.ஏ க்கே இப்படி சாதாரண குடிமகனுக்கு எப்படி நல்லது கிடைக்கும் சட்டமன்றம் போனதும் இதை பத்தி தான் பேசனும்”
என்றவன் புருவத்தை சுருக்கி விரித்து நெற்றியை நீவியபடி அமர அவனது அழைப்பேசிக்கு ப்ரியகேஷா என்ற எண்ணிலிருந்து அழைப்பு வர தாடியை சொறிந்தவன்,
“இவ ஒருத்தி எப்ப பாரு நொய்யு நொய்யுன்னு இவளுக்கு தென்னைக்கு வைக்குற உரத்த வைக்கணும் பெத்து விட்ருக்கான் பாரு புள்ளைய சொட்ட மண்ட”
என்று மானாவாரியாக வருங்கால மாமனாரையும் சேர்த்து வசைப்பாடி விட்டு,
“ஹலோ! சொல்லும்மா ப்ரியா என்ன விஷயம் காலங்காத்தால கால் பண்ணியிருக்க”
என்று கொஞ்சம் அமைதியாகவே கேட்க அவளோ, “இன்னைக்கு கல்யாண ஷாப்பிங் போகனும்ல அது தான்”
என்றாள் கேஷா தயங்கியபடி அவனோ, “சரி ரெடியாகி இரு உன் அக்காவ கூட்டிட்டு வாரேன்”
என்றதும் அவளோ, “அந்த வீடியோ” என்று இழுக்க அரசுவோ கொஞ்சம் கூட தயங்காது,
“ஆமா வீடியோ ஆடியோ எல்லாம் உண்மை தான் உங்க அப்பாக்கிட்ட இதை பத்தி நேத்தே சொல்லிட்டேனே அவருக்கு ஒன்னும் ஆட்சேபணை இருக்குற மாதிரி
தெரிலயே ஏன் உனக்கு ஏதும் ஆட்சேபணை இருக்கா? உன் வாழ்க்கைய பார்த்தா போதுமா? நான் வாழ வேணாமா?”
என்று வல்லென பாய கேஷாவோ எங்கே பின் வாங்கினால் அந்தர் பல்ட்டி அடித்து விடுவானோ என்ற பயத்தில், “அதெல்லாம் பிரச்சினையில்ல”
என்றதும் அவனோ, “நான் என்ன ஆடா மாடா அவ உனக்கு அக்கான்னா நான் யாரு?”
கேஷாவோ தயங்கியபடியே, “மாமா” என்றதும்
அவனோ, “வெரிகுட் கெட்டிக்காரி தான் உங்க அக்காவ
கூட்டிட்டு வாரேன் மூணு பேரும் ஒன்னா போகலாம்”
என்று வைத்துவிட ப்ரியகேஷாவுக்கு தான் தலை வலித்தது. இவனுடன் மூன்று மாதங்கள் அதுவும் சாதாரண அழைப்பேசி அழைப்பில் பேசுவதற்கே மூச்சு முட்டுகிறதே இவனுடன் ஒரு பெண் வாழ்ந்திருக்கிறாள்.
என்று நினைக்கும் போதே கேஷாவுக்கு தலை சுற்றியது. இவனை பகைத்துக் கொள்ள முடியாது பகைத்தால் முச்சந்தியில் முக்காடுடன் தான் நிற்க வேண்டும். என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.,
அவனுக்கு வேண்டியது கட்சி தலைவர் பதவி அவளுக்கு வேண்டியது இங்கிருந்து விடுதலை அதனால் அவன் பல்லவிக்கு ஆடி தானே ஆக வேண்டும்.
என்று நினைத்தவள் கிளம்பி தயாராக, இங்கு காலையில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று தனது உடற்பயிற்சிகளை முடித்துக் வீட்டிற்குள் நுழைய போன செழியனை வரவேற்றது என்னவோ கல்லூரிக்கு தயாராகாமல் கன்னத்தில் கைவைத்தபடி சிந்தனையுடன் அமர்ந்திருந்த தங்கை தான்,
ஆர்ம் கட்டில் வியர்வை சொட்ட சொட்ட நின்ற அகச் செழியனோ, துண்டால் வியர்வையை துடைத்தபடி,
“அகி இன்னைக்கு காலேஜ் போகலையா?” என்று வினவ அகமேந்தியோ,
“இல்லண்ணா இன்னைக்கு வேணாம்னு தோணுது இன்னைக்கு மட்டும் வீட்ல இருக்கட்டுமா?”
என்றதும் அகச் செழியனோ, “இங்கே பாரு நீ இப்போ காலேஜ் போகாம வீட்ல இருந்து அழுதா பிரச்சனை சரியாகிருமா? சொல்லு இல்லாட்டி கதைக்குறவங்க தான் பேசாம இருக்க போறாங்களா?”
என்றதும் அகமேந்தியோ இல்லை எனும் விதமாக தலையசைக்க செழியனோ,
“அதான் சொல்லுறேன் எதுவும் மாறாது நீ உனக்கு நடந்த அவமானத்த சுயமரியாதை சீண்டல தட்டி கேட்கணும் எதிர்த்து நிற்கனும் அது தான் நீ எதிரிக்கு கொடுக்க போற
பெரிய அடி உங்களோட சொற்களோ வசைகளோ என்ன எதுவும் செய்யாதுங்குறத காட்டனும் அதை விட்டுட்டு உடைய கூடாது”
என்று தைரியமூட்டியவன், “சரி வா கிளம்பு உன்ன காலேஜ்ல விட்டுட்டு நானும் ஸ்டேஷனுக்கு கிளம்புறேன்”
என்று கூறி தங்கையை கிளப்பியவனும் குளித்து தயாராகி வர நேரம் சரியாக இருந்தது தங்கையை கல்லூரி வாசலில் இறக்கி விட்டு ஜீப்பை கிளப்பியது தான் தாமதம் அவள் முன்னால் கருப்புநிற ஜாகுவார் ஒன்று புழுதி பறக்க நின்றது.
வேறு யார் தலைவலிக்கே தலைவலி கொடுக்கும் ஆற்றலரசு தான்
அரசு தான் இவ்வளவு நாட்கள் காவி வேட்டியில் சுற்றி வந்தவன்,
இன்று வித்தியாசமாக அடர் பச்சை நிற வேஷ்டியும் கருப்பு நிற
சட்டையும் அணிந்திருந்தான்.
காதலியை பார்க்க கிளம்பி வரும் விடலை பையன் போல் மணக்க மணக்க உயர் ரக நாளதம், முறுக்கி விட்ட மீசை என்று கிளம்பி வந்தவனை கண்டவளுடைய முகமோ ஒவ்வாமையில் சுருங்கி தான் போனது.
அவள் முகச் சுழிப்பை பார்த்ததும் இவனுக்கு தான் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அதே கோபத்துடன்,
“வாடி வண்டியில ஏறு கல்யாண ஷாப்பிங் போகனும்” என்றதும் அவளோ,
“போ அதுக்கு எதுக்கு நான்?” என்றவள் தோரணை ‘எங்கேயோ போ என்னவோ பண்ணு’ என்ற உடல் மொழியை பிரதிபலிக்க
அவனோ, “உன்ன வண்டில ஏற சொன்னேன்” என்று பற்களை கடித்துக் கொண்டு சீற அவளோ, “எனக்கு க்ளாஸ் இருக்கு சும்மா உன்னமாதிரி ரௌடி கூட கதைக்க என்கிட்ட டைம் இல்ல”
என்று விட்டு அவன் பதிலை எதிர்பாராது கிளம்பியவளை முறைத்து பார்த்தவன் கோபத்தில் அங்குமிங்கும் அசைந்தாடும் இடையை தொடும் சடையை கண்டதும் கண்கள் சிவந்து மோகமாக மாறி போக தலையை அழுந்தக் கோதியபடி,
“ச்சைக்! என்ன தான் கோபமிருந்தாலும் இவ கிட்ட எடுத்தெறிஞ்சு பேச முடியவே மாட்டேங்குது என்னவாயிருக்கும்”
என்றபடி எதையோ சிந்தித்தவன் இதழில் ஒரு வன்ம புன்னகை ‘வர முடியாதுனா சொன்ன இப்போ பாரு நீயா வருவ’ என்று நினைத்தபடி காரிலிருந்து இறங்கிய சமயம்,
பொலிஸ் தலைமையகத்துக்கு வந்தவன் தனது அறைக்குள் நுழைந்தவன் வெளியே நின்றிருந்த கான்ஸ்டபிளிடம், “கிருபா எனக்கு இங்க வர்க் பண்ற அத்தனை போலீஸ் ஆபிஸர்சோட டீடெயில்ஸும் வேணும் அடுத்து முடிக்க முடியாத கேஸ் பெரிய புள்ளிகள் சம்பந்தப்பட்ட கேஸ் டீடைல்ஸ்சும் வேணும் ஆனா இதெல்லாம் தோண்டுறேன்னு யாருக்கும் தெரிய கூடாது புரிஞ்சுதா?”
என்றவன் தனது இருக்கையில் சாய்ந்தமர்ந்திருந்தவன் முகத்தில் அத்தனை ரௌத்திரம் பொங்கியது. அதேசமயம் அவனது அறைக்குள் அனுமதி கேட்டுக் கொண்டு ஒரு பெண் நுழைய இருவரது விழிகளும் ஒரு கணம் மோதிக் கொண்டது.
அப்பெண்ணுடைய கண்கள் அவனை அங்குல அங்குலமாக ஒரு கணம் அளவிட்டது. சந்தன நிறம் தான் அவன் கண்களில் கூர்மை நேர்த்தியான க்ளீன் ஷேவ் செய்த முகம் ஆங்காங்கே முளைக்க தொடங்கியிருந்த தாடி மீசை தினசரி உடற்பயிற்சியால் முறுக்கேறி விரைத்த உடல்
‘கல்லூரி காலத்திலேயே எய்ட்பேக் வைத்திருந்தவன் இன்னும் மெயின்டெய்ன் செய்கிறான் போலும்’ என்று நினைத்தவள் சட்டெனெ சுதாரித்தாலும் இன்னும்
அவளது முகத்தில், ‘ஐயோ! இவனா?’ என்ற பாவனை அவன் முகத்தில், ‘மட்டுனியா இருடி உன்ன பீஸ் பீஸா பிச்சு போடுறேன் பாவனை’
அவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு, “சார் நான் பிறைமதி, மகாதேவா ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் காலேஜ்ல லெக்சரரா இருக்கேன்”
என்றதும் அவனோ, “அதுக்கு மாலை போட்டு மரியாதை பண்ணனுமா? இல்ல கிடா வெட்டி விருந்து வைக்கணுமா?”
என்றதும் அவளோ எரிச்சலுடன், ‘பிசாசுக்கு கொழுப்ப பார்த்தியா இவன்னு தெரிஞ்சிருந்தா கதைக்க வந்திருக்க மாட்டேன் பிசாசு பிசாசு’
என்று திட்ட அவனோ, “மனசுக்குள்ள திட்டுறத விட்டுட்டு வந்த விஷயத்த சொல்லுங்க மேடம்”
என்றதும் அவளோ தணிந்த குரலில், “எங்க காலேஜ் கல்ச்சுரல்சுக்கு நீங்க சீப் கெஸ்ட்டா வரணும்”
என்றதும் அவனோ சோம்பல் முறித்தபடி, “ஏன் இன்ஸ்ட்டாகிராம் இன்ப்ளூவென்சர்ஸ் யாரும் கிடைக்கலையா என்ன? எவனாச்சு கிறுக்கன கூப்பிட்டு தானே பேச சொல்லுவீங்க தர்பூஸ், ஆரேஞ்சுன்னு எந்த ஸ்டாரும் சிக்கலையா?”
என்று நக்கலாக கேட்க அவளோ, “சார் நாங்க அப்டி கிடையாது உங்கள மாதிரி யாராவது நல்ல நிலையில உள்ள ஆபிஸர்ஸ், டாக்டர்ஸ்னு நல்ல முன்னுதாரணமா விளங்க கூடிய ஒருத்தர தான் கூப்பிடுவோம்”
என்று அழுத்தம் திருத்தமாக கூற அவனோ, “ஓஹ்! வாவ் அப்ப என்ன நாய் லிஸ்டுல இருந்து மனுஷன் லிஸ்ட்டுக்கு அப்டேட் பண்ணிருக்கீங்க அதும் முன்னுதாரணமா,
மீ”
என்று தன்னையே சுட்டிக்காட்டியவன் வராத கண்ணீரை துடைப்பது போல் பாவ்லா செய்ய அவளோ, “எக்ஸ்கியூஸ் மீ வரமுடியுமா? முடியாதா? டைம் இருக்கா இல்லையா? அவ்ளோ தான் எனக்கு வேணும்”
என்றதும் அவனோ முகத்தை அழுத்தமாக வைத்துக் கொண்டு கண்களில் காதலையும் காமத்தையும் நிரப்பி, “எனக்கு அதுக்கும் மேல வேணுமே”
என்று இதழ்களை ஈரப்படுத்த அவளோ, “சைக் உனக்கு இன்னும் அந்த புத்தி விட்டு போகல இப்போ எனக்கு கல்யாணம் கூட ஆகியிருக்கலாம் அப்படி இருக்கும் போது”
அவனோ, ” பார்த்தா அப்டி தெரில ஆனா” என்று இழுத்தவன் குரலில் சுத்தமாக விளையாட்டுத்தனமில்லை.,
“அப்டி எவனாவது இருந்தா அவன கொன்னுட்டு உன்ன தூக்கிட்டு வருவேன்டி, என்னால முடியாதது எதுவும் இல்ல உனக்கே தெரியும் ஒழுங்கா மனசு மாறி என் கூட
வாழுற வழிய பாரு உனக்கு கொடுத்த கெடு இன்னையோட முடிஞ்சதுடி இனி நீயே நினைச்சாலும் தள்ளி போக முடியாது தள்ளாடுற வயசு மட்டும் நான் தான் உனக்கு புரிஞ்சுதா? “
என்றவன் அத்துடன் நில்லாது அவளது அழைப்பேசியை பறித்து அவளது எண்ணையும் தனது அழைப்பேசி எண்ணையும் வலுக்கட்டாயமாக பறிமாறிக் கொள்ள
அக்காரிகையோ கோபத்துடன்,”உன் கால ஜென்மத்துக்கும் எடுக்க மாட்டேன்”
என்று செல்ல அவனோ, “எடுக்காட்டி உன் வீட்டுக்குள்ள சுவரேறி குதிப்பேன்”
என்றதும் சந்திரிக்காவோ, “போலீஸ் போல பேசுங்க கிரிமினல் போல பேசாதீங்க”
என்று கடுகடுக்க, “நான்லாம் கிரிமினல் அதுக்கு பிறகு தான் போலீஸ் மேடம்”
என்று குரல் கொடுக்க அவளோ ஆளை விட்டால் போதுமென்று ஓடியே விட்டாள்.
இங்கு அரசுவோ விசிலடித்தபடி காரை லாவகமாக ஓட்ட அவன் பக்கத்தில் அமர்ந்திருந்த அகமேந்திக்கோ ஏக கடுப்பு அவன் செய்து வைத்த அலப்பறையில், கல்லூரியில் நுழைந்து கல்லூரி முதல்வரிடம்,
“என் பொண்டாட்டி என் கூட வர வரைக்கும் ஒரு பய பாடம் எடுக்க கூடாது புரிஞ்சுதாடா கொம்பேறிமூக்கா”
என்று முதல்வரின் மேசையில் அமர்ந்து கத்தியை சுழற்ற பிறகு என்ன செய்ய முடியும் கல்லூரியிலிருந்த பேராசிரியர்களும் முதல்வரும் கெஞ்சி கூத்தாடி அவனுடன் அனுப்பி வைக்க வேண்டியதாகி போயிற்று,
அவளுக்கு அவனுடனான பிரயாணம் ஒரு வித ஒவ்வாமையை தர அவளோ முகத்தில் எரிச்சலை காட்டியபடி, “இப்போ எதுக்கு என்ன இழுத்துட்டு போற?”
என்றதும் அவனோ, “கல்யாண ஷாப்பிங்டி” என்று நக்கலாக கூற அவளோ,
“உன்னோட கல்யாணத்துக்கு என்ன எதுக்குடா ஷாப்பிங் கூட்டிட்டு போற அந்த கேஷவர்தினி ஹேர் ஆயில் கூட போக வேண்டியது தானே?”
என்று வாய்க்குள் திட்ட அவனோ, “ஆமா முதல்ல நானும் அப்டி தான் யோசிச்சேன் ஆனா என்ன பண்ணுறது? உன் தங்கச்சி தான் உன்ன பார்க்கணும்னு ஆர்வமா
இருக்கா அவ முன்னாடி நீயும் என்ன மாமானு கூப்பிடு நம்ம லவ் லெங்க்வேஜ் தனியா இருக்கும் போது ஓகே இப்போ வேணாம்”
என்றதும் அவளோ, “உவாக் உன்ன போய் மாமானு கூப்பிடனுமா? ச்சைக் நினைக்கும் போதே டிஸ்கஸ்டிங்கா இருக்கு போடா காட்டான்”
என்றது தான் தாமதம் ஒரு மறைவான இடத்தில் காரை நிறுத்தியவன் அவள் திமிற திமிற வன்மையாக அவள் இதழை கொய்து இரத்தம் வரும் வரை விட்டானில்லை
அதை தவிர அவனது காட்டுக் கை அவள் உடலில் பயணிக்காத அத்துமீறாத இடமே இல்லை ஆனால் அவனது மோகமோ முடிந்தபாடில்லை.
அவள் வேண்டுமென மொத்த உடலும் ஆர்ப்பரிக்க, அகியோ அவனை பலம் கொண்ட மட்டும் நெஞ்சில் தன் காலை வைத்து உதைத்து தள்ளியிருக்க அவனோ மோகம் அறுப்பட்டதில் கோபத்துடன்,
“ஏய்!” என்று பல்லை கடிக்க அவளோ அடுத்து கூறிய வார்த்தையில் அவன் முகம் இறுகி போனது.,
“அப்பன் புத்தி தானே புள்ளைக்கும் வரும் அதான் சகு அத்தை உங்கள விட்டுட்டு எங்க கூட வந்துட்டாங்க”
என்று கூறி விட்டு அழ அரசுவோ இருக்கையில் கண்மூடி சாய்ந்து தன்னை சமன் செய்துக் கொண்டவன்,
“இங்கே பாரு நம்மள பத்தி பேசு என்ன பத்தி பேசு தேவையில்லாம அந்த தாய் கிழவிய பத்தி பேசி அறை வாங்கி சாகாத அப்பறோம் இந்த பட்டர் பன் கன்னம் புஸ்சுன்னு வீங்கிரும்”
என்றதும் அவளோ முகத்தை திருப்ப போக அவளது முழங்கையை வலிக்க பற்றியவன், “என்கிட்ட முகத்தை திருப்புற வேலை வச்சிக்காத அப்பறோம் பீல் பண்ணுவ”
என்றவன் வலுக்கட்டாயமாக முகம் பார்க்க வைத்து கண்ணிமைகளில் முத்தமிட்டவன் அதற்கு பிறகு நிறுத்தியது என்னவோ பிரபல ஆடையகம் ஒன்றின் முன்னால் காரை நிறுத்தியவன்,
“இறங்குடி” என்றதும் அவளோ, “முடியாது உன்னோட இஷ்டத்துக்கு என்னால ஆட முடியாது” என்றவள் விறு விறுவென பையை தூக்கிக் கொண்டு பஸ் தரிப்பிடம் நோக்கி செல்ல முற்பட அவளோ அவனது கைகளில் தான் இருந்தாள்.
“கீழ இறக்கி விடுறா காட்டான், பொறுக்கிப்பயலே” என்று மார்பில் அடிக்க அவனோ,
“இப்போ நான் எம்.எல்.ஏ கொஞ்சம் மரியாதையா நடந்துக்கோ இல்லாட்டி இப்பவே இங்கேயே கடிச்சு வச்சிருவேன்”
என்று இறக்கி விட்டவன் பட்டு புடவைகள் பகுதிக்கு அழைத்து செல்ல அங்கு தான் கேஷாவும் நின்றிருந்தாள். அங்கிருந்த சேல்ஸ் பெண்மணியிடம்,
“ஐம்பதாயிரத்துக்கு குறையாம நல்ல பட்டுபுடவையா எடுத்து போடுமா ஒரே விலையா இருக்கனும் ஆனா ஒரே மாதிரி இருக்க கூடாது”
என்றவனை பார்த்த அப்பெண்ணோ, “சார் இவங்க ரெண்டு பேரும் உங்களுக்கு என்ன வேணும்?”
என்றதும் அவனோ தாடியை நீவியபடி, “சொன்னா தான் சேலை எடுத்துக் காட்டுவியாம்மா?”
என்றதும் அப்பெண்ணோ அசடு வழிந்தபடி, “இல்ல சார் தெரிஞ்சா கொஞ்சம் ஈஸியா இருக்கும் அதான்”
என்று இழுக்க அவனோ, “ரெண்டும் பொண்டாட்டி தான் வெண்ணைக்கட்டி போல இருக்கிறாளே இவ மூத்த தாரம் இந்த பக்கம் உள்ளதோட இன்னும் ரெண்டு மாசத்துல கல்யாணம்”
என்றதும் அப்பெண்ணோ, “ஹான்!” என்று விழிக்க,
“ரெண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி சாரி காட்டு இல்லயில்ல வேணாம் இவளோட நிறத்துக்கு நல்லா மெரூன்,பிங்க், பரப்புள்னு நல்லா ரிச்சா காட்டு”
என்றவன் கேஷாவை ஏறிட்டு, “இவளுக்கு கொஞ்சம் மாநிறத்துக்கு பொருத்தமான மாதிரி சேலையா காட்டு ரெண்டும் ஒரே விலையா இருக்கனும் பிறகு அரசு பொண்டாட்டிக்குள்ள பாரபட்சம் பார்க்குறான்னு ஊர் சொன்னா நல்லவா இருக்கும்?”
என்றவனை பார்த்து கேஷாவோ, ‘இது திருந்தாத கேஸ்’ என்று நினைத்துக் கொள்ள,
அகமேந்தியோ, “ஏன் இப்டி மானத்த வாங்குற?” என்றவள் உதட்டை சுழித்து “காட்டான்”
என்று திட்ட அவனோ நெஞ்சில் கைவைத்தபடி, “இந்த உதட்டு சுழிப்பு தானே என்ன கொலையா கொல்லுது ப்பா சான்ஸே இல்ல”
என்று கண்ணடித்து சிரிக்க அவளுக்கு ‘இவன் என்ன மாதிரி மனிதன்’ என்று தான் தோன்றியது.
தொடரும்…