அத்தியாயம் 10
அகமியோ அரசுவின் வீட்டிலும் சரி அவனது அறையிலும் சரி எல்லா மறைவான இடங்களிலும் கேட்டல் பொறிகளை பொருத்தி விட்டு அதை சரிபார்த்தபடி இருந்தவளுக்கோ அவனது அழைப்பேசிகளை மீண்டும் ஒரு முறை பரிசோதித்தால் என்ன என்ற யோசனை தோன்ற
அவற்றை பரிசோதிக்கும் நிமித்தம் அரசுவின் அறைக்குள் மீண்டும் நுழைய முற்பட்டவளின் நடை தடைப்பட்டது காரணம் அரசு தூக்கத்திலிருந்து விழித்திருந்தான்.
கதவில் கைவைக்க போனவள் அவன் போட்ட சத்தத்தில் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள். அப்பக்கம் யாரென்று அகமியால் கணிக்க முடியவில்லை.
ஆனால் அது ஒரு பெண் அதுவும் கட்டாயமாக வயதில் மூத்த பெண்ணாக தான் இருக்க வேண்டும். நினைத்தவள் உடனடியாக தனது அழைப்பேசியையும் அவனது அழைப்பேசியையும் ஒன்றிணைக்க கூடிய ஒரு செயலியை உயிர்ப்பித்தபடி ஒட்டு கேட்க தொடங்கியிருக்க,
இதையறியாத அரசுவோ, “என்ன சித்தி சொல்லுறீங்க? என்ன சொல்லுறீங்க? அந்த சயந்தன் உங்க வீட்டுக்கு வந்து ராதிய தூக்கிட்டு போக மட்டும் ஏன் என்கிட்ட சொல்லல?”
என்று கோபமாக கத்த மாதங்கியோ, “பயத்துல அப்படியே உறைஞ்சு போயிட்டேன் அப்பு அவன் ராட்சசன் மாதிரி வந்து அப்டியே பிள்ளைய தூக்கிட்டு போயிட்டான்”
என்று கூற அகமியோ இப்பக்கம் அரசுவின் அழைப்பேசி அழைப்பை அவனுக்கே தெரியாமல் முழுதாக ஒட்டுக் கேட்க தொடங்கியிருந்தாள்.
அவனது உரையாடலால் சயந்தனை பழிவாங்க தன்னை பலிக்கடாவாக்கி திருமணம் செய்துக் கொண்டான் என்பது தெள்ளத் தெளிவாக புரிய, அதற்கு காரணம் அவன் தங்கை மீது கொண்ட அன்பு தான் என்று தெரிந்துக் கொண்டாள்.
கிட்டத்தட்ட மொத்த உரையாடலையும் ஒட்டுக் கேட்டவளுக்கு என்ன மாதிரியான மன நிலை என்று புரியவில்லை. ஒரு வித குழப்பம் ஒருவித அழுத்தம் ஒரு வித சோகம்
என அத்தனையும் ஒரு சேர தாக்கம் இருந்தும் அவற்றையெல்லாம் முகத்திரையிட்டு மறைத்துக் கொண்டாள். ஆனால் ஒரு விடயத்தை மட்டும் அவளால் கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.
தான் பசியில் அழுத போது பாலை சூடாக்குகிறேன் என்று ஆற்ற தெரியாது ஆற்றி தன் கையில் சூடான பால் ஊற்றிய போதும் கூட அதை பொருட்டாக மதிக்காது தங்கைக்கு பால் கொடுத்த நண்ணா இப்போது இல்லை.
தங்கையின் உடலில் சிறு தூசு பட்டால் கூட அதை தாங்க முடியாது துடித்த சயந்தன் இப்போது இல்லை.,
அப்படியிருந்திருந்தால் தன் மகவை சுமந்த பெண்ணை நட்டாற்றில் விட்டிருப்பானா?,
சத்தியமாக இல்லை, அகமியை பொறுத்த வரை அவளது நண்ணா இறந்து போனான்.
இப்போது அவர்கள் முன் உயிரும் உடலுமாக நின்றிருப்பது யாரோ ஓர் அந்நியன், என்று கூட சொல்ல முடியாத ராட்சச மிருகம் மட்டுமே தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள்,
அறைக்குள் நுழைந்த சமயம் அரசு தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்தான். முகத்தில் கோபத்தின் சுவடுகள் அப்பட்டமாக தெரிந்தது. கடத்தப்பட்ட தங்கையை மீட்க தன்னை வைத்து சதி வலை பின்னப் போகிறான் என்பது தெள்ளத் தெளிவாக புரிந்தது.
இம்முறை விரும்பியே பலிக்கடாவாக முன் வந்தாள் அகமேந்தி காரணம் ராதிகாவுக்காக மட்டுமே அரசு மீதும் சயந்தன் மீதும் உள்ள கொஞ்சநஞ்ச நேசமும் பாசமும் சுத்தமாக துடைத்து எறியப்பட்டிருந்தது.
கண்களில் ஒருவித குரோத கனல் மினுங்க அகமியை ஏறிட்டவன், “நமக்கு இன்னையில இருந்து மூணு நாள்ல கல்யாணம்”
என்றான் அரசு அறிவிப்பாக அவளோ நக்கலாக புன்னகை புரிந்தவள் மனதுக்குள் ஆயிரம் ஊசி குத்திய உணர்வு, ஒரு காலத்தில் அவனை உயிருக்கு நிகராக நேசித்தவள் ஆயிற்றே வலிக்குமல்லவா ஒவ்வொரு முறையும் தன்னை உணர்வுள்ள பெண்ணாக காதலியாக மதிக்காது அவனது தேவைக்கு ஆட்டிப் படைக்கும் பொம்மையாக பார்த்தால் கண்டிப்பாக வலிக்கும் தானே
இருந்தும் அதைக் காட்டிக்கொள்ளாது, “எனக்கு தான் உன்ன கல்யாணம் பண்ணிக்கவோ உன்னோட வாழவோ இஷ்டமில்லையே எதுக்காக அரசு இப்டி தொல்லை பண்ணுற? என்னோட விருப்பம் தேவை இதெல்லாம் என்னன்னு கூட உனக்கு தெரிஞ்சிக்க விருப்பமில்லைல அரசு?”
என்றதும் அரசோ, “ஆமாடி உன்னோட விருப்ப கூந்தலெல்லாம் பார்த்தா என்னோட வேலை நடக்குமா சொல்லு? எனக்கு ஒன்னு தேவை அதை அடைய எந்த எல்லைக்கும் நான் போவேன் நான் இப்படி தான் உனக்காக எல்லாம் என்னால மாற முடியாது சகிச்சுக்கிட்டு வாழ வேண்டியது நீ தான்”
என்று தாடையை பிடித்து சுவற்றில் சாய்க்க அவளுடைய பார்வை அவனை கூரு கூராக கிழித்தது. அப்பார்வையில் அத்தனை கேள்வி ‘அவ்வளவு தானில்ல அரசு உன் உலகத்துல உன்னோட மனசுல நான் யாரு?’ என்பது போல் தான் அவளது பார்வை கேட்டது.
அதற்கு பதில் சொல்ல விருப்பமில்லையா? இல்லை சந்தர்ப்பம் இது இல்லையா? என்பதை அரசு தான் சொல்ல வேண்டும்.
ஆனால் பெருமூச்செறிந்த அகமியோ அங்கிருந்து நகர போக அவளது கையை இறுக பற்றியவன், “கல்யாணம் கண்டிப்பா நடக்கும் சும்மா முரண்டு பிடிக்காத”
என்று கூறி விட்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைந்துக் கொள்ள அகமியோ அதே ஏமாற்றத்துடன் தன் வீடு நோக்கி புறப்பட்டு விட்டாள்.
இங்கு சகுந்தலாவை கடத்தியவர்களோ யாருக்கோ அழைப்பையேற்படுத்தி, “மேடம் நீங்க சொன்ன மாதிரியே விட்னச சேவ் பண்ணிட்டோம்”
என்றதும் அப்பக்கம் அழைப்பேசியில் கதைத்த பெண்ணோ, “குட் நான் சொல்லும் போது விட்னச மெஜேஸ்ட்ரேட் முன்னால சப்மிட் பண்ணுனா போதும் ஏன்னா அவங்க லைஃப்க்கு த்ரெட் இருக்கு”
என்று கூற அந் நெடிய நபரோ, “ஓகே மேம்” என்று அழைப்பை துண்டித்திருந்தான்.
இங்கு அகமியின் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவளால் எவ்வளவு கட்டுப்படுத்தியும் அழுகையை அடக்க முடியவில்லை. யாரோ உயிரை வேரோடு பிடுங்கி எறிவது போல் வேதனை அவளுக்கு அழுது அழுது ஓய்ந்தவள் அப்படியே சோபாவில் விழுந்து உறங்கி போக,
இங்கு அகச் செழியனோ சதீஷின் புகைப்படத்தை பார்த்தவனுக்கு, ‘மாட்டினியா? இருடா உனக்கிருக்கு’ என்று நினைத்துக் கொண்டிருந்த சமயம் அவனுக்கு அழைப்பு வர அதையேற்றவனோ,
“ஹலோ!” என்றது தான் தாமதம் அப்பக்கம் என்ன சொல்லப்பட்டதோ தீவிர முக பாவனையுடன்,
“இன்னும் த்ரீ டேய்ஸ்ல கண்டிப்பா எல்லாரையும் அரெஸ்ட் பண்ணிரலாம் சார்” என்று உறுதியுடன் கூற
அரசுவோ கையில் ஒரு கோப்பை வைத்து பார்த்தபடி, “டேடி எதுக்கு ஆப்போசிஷன்ல சேர்ந்து வாழ்க்கைய வீணடிக்கிறன்னு கேட்ட இல்ல அதுக்கான பதில் இன்னும் கொஞ்ச நாள்ல தெரியும்”
என்று சிரிக்க, சயந்தானோ தனது ஆய்வகத்தில் ராதிகாவை ஆவேசமாக பார்த்தபடி உடலெல்லாம் விறைக்க கோபத்தில் சிவந்திருந்தான். ராதிகா முதலில் அவனுக்கு பயந்தாலும் பிறகு இவனிடம் இன்னுமிழக்க என்ன இருக்கிறது என்று நினைத்தாளோ என்னவோ எதிர்த்து நிற்க துணிந்து விட்டாள்.
எப்போது ஏன் குழந்தையை ஈன்றெடுத்தாய் என்று கேட்டானோ அப்போதே முடிவெடுத்து விட்டாள் இவனுடன் வாழவே மாட்டேன் என்று அதற்கு பிறகு சாண் போனால் என்ன முழம் போனால் என்ன என்ற எண்ணம் வர துணிந்து விட்டாள்.,
மிஞ்சி மிஞ்சி போனால் உயிரை எடுப்பானா? எடுத்துக் கொள்ளட்டுமே என்ற எண்ணமும் வந்து விட அசாத்திய துணிச்சலும் இலவச இணைப்பாக வந்தது.
இறுகிய முகத்துடன் நின்றிருந்தவன் முன் சொடக்கிட்ட பெண்ணவளோ,
“என்ன மிஸ்டர் சயந்தன் பேச்சையே காணோம்” என்றதும் அவனோ அவளது கழுத்தை இறுக பற்றி சுவரில் சாய்த்து தூக்கியபடி,
“என்னடி திமிரா? ஹான்! திமிரா? கொன்னு இங்கேயே உன்ன புதைக்க ஐஞ்சு நிமிஷம் ஆகாது ஏதோ என் பிள்ளைக்கு தாயில்லாம போயிரும்னு யோசிக்கிறேன்”
என்றதும் கொஞ்சம் கொஞ்சமாக மூர்ச்சை நிலை அடைந்துக் கொண்டிருந்தவள் தன்னை மீறி சிரிக்க சயந்தனோ அவளது சிரிப்பை பார்த்து கழுத்தை விட்டதும் ராதி தரையில் விழுந்தபடி கழுத்தை தடவிக் கொண்டே இரும அவனோ,
“என்னடி இப்போ எதுக்கு சிரிக்கிற?” என்று எரிச்சலாக கேட்க அவளோ,
“ம்ம் இது உங்க குழந்தைனு எப்படி இவ்ளோ உறுதியா சொல்லுறீங்க?, நான் தான் பொய்க்காரி ஏமாத்துக்காரி ஆச்சே எவனோ கொடுத்த பிள்ளைக்கு உங்க இனிஷியல கொடுக்க நீங்க என்ன தியாகியா?” என்று கேட்க
சயந்தனுக்கு கண் மண் தெரியாமல் கோபம் வந்தது. ஓங்கி ராதியின் கன்னத்தில் அறைந்திருந்தான். “என்ன பேச்சுடி பேசுற? என் குழந்தைய அப்படி பேச உனக்கு எவ்வளவு திண்ணக்கம் வேணும்”
என்றதும் கன்னத்தில் பதிந்திருந்த அவன் விரல் தடத்தை ஸ்பரிசித்தவள்,
“சயந்தன் சார் இதை நானா முதல்ல சொன்னேன் நீங்க தானே நான் அன்னைக்கு ப்ரெக்னன்ட்டா இருக்கேன்னு சொன்னதும் என்ன மாதிரி எத்தனை பேர் கூட”
என்று அவள் பொறுமையாக சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ஏய்ய்ய்!” என அலறியே விட்டான் அவளோ,
“நான் சொல்லும் போது வலிக்கிறது நீங்க சொல்லும் போது இனிச்சதோ?” என்று ஒற்றை புருவமுயர்த்த அவனோ கோபத்துடனேயே அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தவன்,
அவளது தாடையை அழுந்த பற்றி, “ஆயிரம் குட்டி இருந்தாலும் சிங்கத்துக்கு அதோட குட்டிய அடையாளம் தெரியும் அதேமாதிரி தான் எனக்கும் என் புள்ளைய எனக்கு தெரியாது சும்மா என்ன அசிங்கப்படுத்துறேன்னு என் குழந்தையோட பிறப்பை தப்பா கதைச்ச நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்”
என்று அவளது தாடையை விடுவிக்க அவளோ, “நான் எங்க அசிங்கபடுத்தினேன் என் குழந்தைக்கு நீங்க அப்பா இல்லை உங்க இனிஷியல் என் பிள்ளைக்கு தேவை இல்லன்னு தானே சொன்னேன் இதுல என்ன அசிங்கமிருக்கு என்ன உங்க ஆண்மை அடிப்பட்டு போச்சா? நான் சொல்லனும் நீங்க ஆண்பிள்ளைனு”
என்றதும் சயந்தனின் பொறுமை காதா தூரம் சென்றிருந்தது அவளது கைசந்துகளை பற்றி தூக்கியவன், “இப்பயும் என்னால நிரூபிக்க முடியும்டி நான் ஆண்பிள்ளைனு”
படுக்கையை சுட்டிக் காட்டி விட்டு, “ஆனா முறையா தாலி கட்ட மட்டும் வேணாம்னு பார்க்குறேன் என் கோபத்தை தூண்டாத அப்பறோம் நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது”
என்று மிரட்ட அவளோ அசந்தாளில்லை., கலகலவென நகைத்து விட்டு, “எது இந்த நாலு சுவத்துக்குள்ள நீங்க என்கிட்ட காட்டுற வீரத்துக்கு பெயர் ஆண்மையா? எது ஆண்மை தெரியுமா அன்னைக்கு நான் சமூகத்துக்கு முன்னாடி அவமானப்பட்டு கூனி குறுகி நின்னப்போ இது என் பொண்டாட்டி என் குழந்தைன்னு வரிஞ்சு கட்டிட்டு நின்னு பேசுனவன் வாய அடைச்சிருந்தா நீங்க சரியான ஆண்பிள்ளை,
என் மேல தான் தப்பு பரவால்ல குழந்தைய பெத்துக்கலாம் அதுக்கு பிறகு உன்னோட கரியர கவனிக்கலாம்னு சொல்லியிருந்தா ஆண்பிள்ளை நீங்க என்ன பண்ணுனீங்க கையில காசை கொடுத்து சொந்த புள்ளை உயிருக்கே பேரம் பேசுனீங்க நீங்க ஆண்பிள்ளைன்னா
பத்து ரூபாக்கு வேலை செஞ்சாவது தன் குழந்தை குட்டிய சந்தோஷமா பார்த்துக்குறானே அவன் யாரு அவன் தான்யா உண்மையான ஆண்மகன் எந்த சூழ்நிலையிலயும் தன்னை நம்பி வந்த பெண்ணையும் பிள்ளையையும் கண் கலங்காமல் வச்சு காப்பாத்துறானே அது தான் உண்மையான ஆண்மை”
என்றவள் அவன் அடித்ததில் கிழிந்திருந்த உதட்டில் வழிந்த ரத்தத்தை துடைத்தபடி,
“உன்ன மாதிரி நாலு சுவத்துக்குள்ள வீரத்த காட்டி பெத்து போடுறவன் ஆண்பிள்ளைன்னா நாயும் நரியும் கூட தான் பெத்து போடுது, அதுக்கும் உனக்கும் ஒரே வித்யாசம் தான் அதுக்கு நாலு காலிருக்கு உனக்கு ரெண்டு காலிருக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்குறேன் என் உடம்புல தெம்பிருக்கு உரமிருக்கு என் குழந்தைய நானே பார்த்துக்கிறேன்”
என்றதும் அவனோ அவளை உறுத்து விழித்தவன், “இன்னும் மூணு நாள் கழிச்சு உன் கழுத்துல தாலி ஏறினதும் இதுக்கான பதில விளக்கமா சொல்லுறேன் இவ்ளோ நேரம் மூச்சு பிடிச்சு பேசி டயர்டா இருப்ப தூங்கி ரெஸ்ட் எடு நாளைக்கு பேசலாம்”
என்று அமைதியாக சென்றவன், கையில் மகனை ஏந்தியபடி உள்ளே வந்தவன் தூங்கும் மகனை இறுக்கி அணைத்தபடி தானும் உறங்கி போனான். இங்கு புரியாமல் ஒன்றும் விளங்காது நின்றது ராதி தான்
தொடரும்…