அத்தியாயம் 11
ராதியின் தூக்கத்தை கெடுத்தவன் நிம்மதியாக உறங்கி போக, ராதிகா எதை நினைக்க கூடாது எதைப்பற்றிய எண்ணம் வரக் கூடாது என நினைத்தாளோ அந்த எண்ணம் தான் அவள் மனதை வியாபித்தது. மகனை கட்டிக் கொண்டு உறங்கும் சயந்தனை பார்த்தவளுக்கு எரிச்சல் தான் வந்தது.
அவனருகே வந்தவள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் மகனை சட்டென பிரித்தெடுக்க முற்பட சயந்தனின் வலிய கரம் அவளது மணிக்கட்டை வலிக்க வலிக்க பற்றி இருந்தது. அவனோ பார்வையில் கனலுடன்,
“ஏய்! என்ன பைத்தியமாகிட்டியா? எதுக்கு இப்போ தூக்கத்த கெடுக்குற? குழந்தை முழிச்சுக்க போறான்” என்று தூக்கம் அறுபட்ட எரிச்சலில் தன்னை மறந்து கத்த அவன் போட்ட சத்தத்தில் விழித்துக் கொண்ட ருக்கனோ,
“அம்மா ஆ அம்மா தூக்கு தூக்கு இந்த சூனிய கிழவன்கிட்ட இருந்து காப்பாத்து”
என்று அழ இங்கு சயந்தனுக்கோ கோபம் தான் வந்தது., “டேய் குட்டி சாத்தான் ஒழுங்கா அப்பான்னு கூப்பிடு இல்ல தலைகீழா கட்டி தொங்க விட்ருவேன்”
என்று மிரட்ட அவன் மிரட்டியதும் பயந்து நடுங்கி அடங்க ராதிகாவா? இல்லையெனில் அவனுக்கு கீழே வேலை பார்க்கும் உத்தியோகத்தர்களா? அவனது ரத்தமும் ஓடுகிறதல்லவா உடலை வளைத்து நெளித்து முறுக்கிக் கொண்டு,
“ஹே ஆஆ ம்மாஆ” என்று அவன் முகத்தில் பிராண்டி வேறு வைக்க சயந்தனோ உறுத்து விழித்தபடி ராதிகாவிடம் குழந்தையை கொடுக்க உடனே அழுகையை நிறுத்தி இருந்தான் ருக்கன்,
அதை அவதானித்த சயந்தனோ, “என்ன புள்ளடி வளர்த்து வச்சிருக்க? உங்க அப்பன் ஒரு ராட்சஸன் அவன்கிட்ட போக கூடாதுன்னு பத்துமாசம் உள்ள இருந்த சமயத்திலாயிருந்து ட்ரெயினிங் கொடுத்தியா?”
என்றதும் ராதிகாவோ, “அப்டி தான்னு வச்சிக்கங்களேன் உங்க மூச்சு காத்து என் புள்ள மேல பட்டா கூட நஞ்சு”
என்று முகத்தை திருப்ப அவனோ தாடியை நீவியவன் கழுத்தளவு வளர்ந்திருந்த முடியை தூக்கி பேண்டில் அடக்கியவன், “ஓஹோ! அப்டியா? நாம ஏதும் ஐ வி எப் பண்ணி குழந்தை பெத்த மாதிரி எனக்கு நினைவில்லையே ஆதாம் ஏவாள் காலம் தொட்டு எப்படியெல்லாம் இயற்கையா”
என்று ஆரம்பித்தவனை அவளோ, “ச்சீ வாய மூடுங்க குழந்தைக்கு முன்னாடி என்ன கதைக்குறீங்க?” என்று முகத்தை சுளிக்க அவனோ தோளை அலட்சியமாக குலுக்கியபடி,
“இந்த நஞ்சு உன்ன தொடாம இந்த பிஞ்சு உன் கையில வரலன்னு சொல்லுறேன் அவ்ளோ தான்” என்றவன் ஒற்றை புருவத்தை நடுவிரல் கொண்டு நீவியபடி
“நீ சொன்னா தான் உன் மகன் என்ன அப்பான்னு கூப்பிடுவானாம் சொல்லிக்கொடு இவர் தான் உன் அப்பா இடையில இடையில மானே தேனே பொன்மானே மாதிரி நல்லவரு வல்லவரு நாலும் தெரிஞ்சவரு உங்க அம்மாவுக்கு தாடி மீசை
விருப்பம்னால வளர்த்திருக்காரு மத்தபடி சூனிய கிழவன் கிடையாதுன்னு சொல்லிக் கொடு இல்லன்னு வை இன்னொரு தரம் கத்தினான் சப்புன்னு பின்னுக்கு ரெண்டு அடி போட்ருவேன்”
என்று கூறியவனை பார்த்து, “ஓ அப்படி வாரீங்க சரி நான் கேட்ட ஒரு கேள்விக்காவது உருப்படியா பதில் சொல்லிருங்க சொன்னதுக்கு பிறகு இவர் தான் உங்க அப்பானு நான் சொல்லுறேன்”
என்றதும் அவனோ மௌனமாக அவளை பார்த்திருந்தவன் பெருமூச்செறிந்தபடி,
“இங்கே பாரு ராதிகா நான் நல்லவனில்ல என்ன பொறுத்தவரைக்கும் என்னோட ஆராய்ச்சி, என்னோட மெடிசினல் ப்ராடெக்ட், என் கம்பெனி என் பெயர் இதெல்லாம் ரொம்ப முக்கியம் அதுக்காக எதையும் செஞ்சவன் தான் இனியும் செய்ய போறவன் தான்
நான் இப்படி தான் அன்னைக்கு என்ன பத்தி மட்டுமில்ல உன்ன பத்தியும் யோசிச்சு தான் இந்த குழந்தை வேணாம்னு சொன்னேன்”
என்றதும் அவளோ, “ஓஹோ! அப்படியா? அப்படிப்பட்ட உத்தமர் அப்பறோம் ஏன் சார் ப்ரோபோசர் வேலை பார்க்காம கண்டதும் பண்ணுனீங்க என்ன உங்க ஆராய்ச்சி பொருளா பயன்ப்படுத்துனீங்க?”
என்றதும் அவனோ, “ஆமா பண்ணேன் இல்லன்னு சொல்லலையே அன்னைக்கு நீ நான் சொன்னத கேட்டதால தான் இன்னைக்கு இல்லீகலாவும் லீகலாவும் என்னோட
கம்பெனி மெடிசின்ஸ் கொடி கட்டி பறக்குது கண்டிப்பா இன்னைக்கு குழந்தை இல்லாட்டியும் நான் உனக்கு செட்டில் பண்ண வேண்டிய காச செட்டில் பண்ணி இருப்பேன் நீ சைன் பண்ண அக்ரீமெண்ட் படி”
என்று கதைப்பவனை பார்த்து ராதிகாவுக்கு ஐயறவு தாங்கவில்லை. என்ன மனிதன் இவன்? தான் செய்த அத்தனை பிழைகளையும் நியாயப்படுத்தி அதே தப்பை மீண்டும் செய்வேன் என்று கூறுபவனிடம் தன் குழந்தை வளர்ந்தால் கண்டிப்பாக
இவனை போல் மிருகமாகி விடும் குழந்தைக்கு தகப்பன் பெயர் தெரியாது என்று கூறினாலும் பரவாயில்லை இவனிடம் மட்டும் வளர விடவே கூடாது.
என்று நினைத்தவள் சட்டென அவனை எப்படியாவது திசை திருப்பி தங்களிடமிருந்து பிரிக்கும் பொருட்டு,
“இங்கே பாருங்க சார் இந்த குழந்தைய பத்தின கவலையோ குற்றவுணர்வோ உங்களுக்கு தேவையில்ல இந்த குழந்தைய என்னோட சுய விருப்பத்துல மட்டும் தான் பெத்துக்கிட்டேன் எதிர்காலத்துல இந்த குழந்தை உங்க வாரிசுன்னோ
இல்லாட்டி உங்க சொத்துல பங்கோ கேட்குறபடி நான் வளர்க்கமாட்டேன் நீங்க என்ன நம்பலாம், நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கிறதுன்னா பண்ணிக்கோங்க வேணும்னா அக்ரீமெண்ட் போடுங்க நான் சைன் பண்ணி தாரேன்”
என்று தணிவாக கூற அவனோ அவளை கபில நிற கண்களால் உறுத்து விழித்தவன் சட்டெனெ கடவாய்பல் தெரிய சத்தமாக சிரிக்க தொடங்கினான்.
அவ் அசுர சிரிப்பில் சற்று ஆசுவாசமடைந்து தூங்கிய குழந்தை மீண்டும் எழுந்துக்
கொண்டு அவன் சிரிப்பை பார்த்து உதட்டை பிதுக்க அவனோ, “உஷ் சும்மா சும்மா அழுத நாலு போட்ருவேன்”
என்று விரல் நீட்டி மிரட்டியவன் சட்டென குழந்தையை வாங்கி கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, “என் டெக்ணிக்க என்கிட்டயே யூஸ் பண்ணுற பார்த்தியா? ப்ரில்லியண்ட்” என்று விட்டு மீண்டும் சிரிக்க சத்ருக்கனோ,
‘ஐயோ அம்மா இந்த கிறுக்கன்ட்ட இருந்து யாராவது என்ன காப்பாத்துங்கடா’ மனநிலையில் தான் இருந்தான். குழந்தையை கூர்ந்து கவனித்த சயனோ,
“குட்டி பையா என்னடா உன் அம்மாக்காரி மாதிரி எப்படி தப்பிக்கலாம்னு யோசிக்கிறியா? அதெல்லாம் முடியாத காரியம் நீங்க ரெண்டு பேரும் எனக்கு வேணாம்னா எப்பயோ ரெண்டு பேருக்கும் சொர்க்கத்துக்கு டிக்கெட் போட்ருப்பேன்”
என்று சிரிக்க குழந்தையோ ராதிகாவிடம் தாவ முயன்றபடி, “ம்மா ம்மா சூனிய கிழவன் ம்மா காப்பாத்துங்க ம்மா ம்மாட்ட போகனும்”
என்றதும் சயனோ, “இங்கே பாரு குட்டிபையா ஒழுங்கா என் கிட்ட இருந்தா உனக்கும் உன் அம்மாவுக்கும் நல்லது இல்லன்னா உன் அம்மாவ கண் காணாத இடத்துல வச்சுட்டு உன்ன என்கூட வச்சுப்பேன்”
என்று கூற குழந்தையோ, “போ நீட்டுமூக்கா” என்றபடி சயனின் நீள மூக்கை கடித்து விட்டு அன்னையின் கைகளுக்கு தாவி கழுத்தை கட்டிக் கொள்ள ராதிகாவோ எரிச்சலுடன்,
“பொண்ணுங்க கிட்ட தான் எப்படி பழகனும்னு தெரியாது குழந்தைக்கிட்ட கூடவா உங்க புத்திய காண்பிப்பீங்க கொஞ்சம் அன்பா கதைச்சா தான் என்னவாம் அடுத்து சின்ன பிள்ளைக்கிட்ட போய் சாவபத்தி கதைக்குறீங்க கொஞ்சம் கூட அறிவில்லையா?”
என்றபடி சத்ருக்கனிடம், “சரிடா கண்ணா சரி யாரும் உன்ன ஒன்னும் சொல்லமாட்டாங்க அங்கிள் விளையாட்டுக்கு சொல்றாரு” என்றவள் அங்கிளில் அழுத்தம் கூட்ட சயனோ,
“அங்கிள் இல்ல அப்பானு சொல்லிக் கொடுடி இல்லன்னா மனுஷனா இருக்கமாட்டேன் அடுத்து நீ சொன்னா தான் அப்பான்னு கூப்பிடுவான் ஒழுங்கா சொல்லு”
என்று அரட்ட அவளோ, “இதுக்கு மட்டும் நான் தேவையா? உங்க புள்ள தானே முடிஞ்சா கூப்பிட வச்சு காட்டுங்க இதுல உங்க ஆண்பிள்ளை தனத்தை நிருபீங்க ஒத்துக்குறேன் நீங்க சரியான ஆண்பிள்ளைனு,
அவனுக்கு நல்ல அப்பாவா அரட்டாம மிரட்டாம மூணு நாளைக்குள்ள நீங்க தான் அப்பான்னு சொல்லி புரிய வைங்க பார்க்கலாம் அப்படி அவன் அப்பான்னு சொல்லிட்டா
இன்னையில இருந்து மூணாம் நாள் ஊரறிய உலகறிய நான் உங்க பொண்டாட்டி இவன் உங்க பிள்ளை அப்படி முடியலைன்னா நானும் நீங்களும் இனி சந்திக்கவே கூடாது இவன உங்க குழந்தைனு எந்த இடத்துலயும் உரிமை கொண்டாடவே கூடாது”
என்று சத்தியம் வாங்கிக் கொள்ள அவனோ மனதுக்குள்,
‘சத்தியம் சக்கரைக்கட்டின்னு என்ன பத்தி தெரியாம இவ வேற விளையாடிக்கிட்டு சரி தான் நடத்தி காட்டிரணும், இல்லாட்டி இவகிட்ட தோத்த அவமானம் காலம்பூரா இருக்கும்’
என்று நினைத்தவன், “ஓகே சேலஞ் அக்ஸப்ட்டட் அப்படி நான் ஜெயிச்சா எனக்கு அடுத்து ஒரு குட்டி பொண்ணு வேணும் அவளும் நானும் சேர்ந்து உன்னயும் உன் அன்பு மகனையும் கார்னர் பண்ணி விளையாடுவோம் மகனா இருந்தா நீயே வச்சுக்கோ மகளா இருந்தா என் கட்சி தான்”
என்று கூறியவனை தலையிலடித்துக் கொண்டவள், “ஒரு பிள்ளைக்கே இங்கே ஒழுங்கா வழி இல்லையாம் இதுல இன்னொன்னு இப்ப தான் ரூட் போடுறான் இந்த வாத்தி”
என்று முனக சயனோ அவள் கையிலிருந்த குழந்தையை வாங்கி தன்னருகே கிடத்தியவன், “நீயே கங்காரு மாதிரி தூக்கிட்டு சுத்துனா நான் எப்படி அவன் மனசுல இடம் பிடிக்க”
என்று குழந்தையை அணைத்தபடி உறங்கி போக இங்கு உறக்கம் கெட்டு அலைந்தது என்னவோ ராதிகா தான்,
இதே சமயம் அன்று இரவு வைத்தியசாலையில் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த சதீஷுக்கோ வீட்டில் ஒரு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவு முன்னால் ஒரு பெட்டி அவனது பெயருடன் இருக்க,
அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவன், “யாரு அனுப்பினானு தெரியலையே?” என்று தனக்கு தானே பேசிக் கொண்டே உள்ளே நுழைந்தவன் பெட்டியை பிரிக்க,
அதில் கண்ணீர் அஞ்சலி மற்றும் மரண அறிவித்தல் என பெரிய சுவரொட்டி மற்றும் ஒரு செய்தி அறிவிப்பும் இருக்க அதில் இருந்த உருவத்தையும் தோற்றம் மறைவையும் பார்த்தவனுக்கு வியர்த்துக் கொட்டியது.
செய்தி தாளில் ‘சோப்பு நுரையால் பிரிந்த இளம் வைத்தியரின் உயிர்’ என்று இடப்பட்டிருக்க அதனை தொடர்ந்து
‘சதீஷ் எனும் இளம் வாலிபர் குளிக்கும் போது சவர்க்கார நுரையில் வழுக்கி பின்னந்தலை அடிப்பட விழுந்து அதிக ரத்தக் கசிவின் விளைவால் வழுக்கி விழுந்த இடத்திலேயே மார்க்கயா சாலா ஆகியுள்ளார்.’
என்று எழுதப்பட்டிருக்க சதீஷோ, “யாருக்குடா என் மேல இவ்வளவு வன்மம்?!! எதுக்காகடா என்ன கொல்ல பார்க்குறீங்க? நானே மனுஷன பார்த்து பயந்ததால தான் மாட்டு டாக்டர் ஆனேன் என்ன போய் ஏன்டா கொல்ல பார்க்குறீங்க?”
என்று புலம்ப, “ஏன்னா மச்சி நீ எனக்கு சக்களத்தனா வரப்பார்க்குற பாரு அதனால தான் அடுத்து அது மாட்டு டாக்டர் இல்ல வேட்டினரி டாக்டர்”
என்ற பரிட்சயமான குரல் ஒன்று பின்னாலிருந்து ஒலிக்க திரும்பி பார்த்த சதீஷோ,
“மச்சான் நீயாடா என்ன கொலை பண்ண பார்க்குறது? ஏன்டா ஏன்?” என்றதும் செழியனோ,
“நீ என் ஆள கல்யாணம் பண்ண போற இல்ல அதான்” என்றதும் சதீஷோ,
“யாரு மதி உன் லவ்வரா? அவ என்கிட்ட சொல்லவே இல்லடா நான் தெரிஞ்சே செய்யவனாடா? உன்னபத்தி எனக்கு தெரியாதா மச்சி”
என்றதும் சதீஷின் தோளில் கைப்போட்டுக் கொண்டு, “உன்ன பத்தி எனக்கும் தெரியாதா?” என்று கூறிய அகச் செழியன்
வேறு யாருமல்ல சதீஷின் பால்ய கால சிநேகிதனே தான் இருவரும் அயல் வீட்டினர் ஒன்றாக பிறந்து வளர்ந்து ஒரே பள்ளியில் பயின்றவர்கள் ஆனால் சதீஷ் மென்மையானவன் செழியன் அடிதடி ரௌடித்தனத்தில் ஊறி போனவன்,
அடித்து விட்டு தான் விசாரிக்கவே தொடங்குவான். அப்படிப்பட்டவனுக்கு பிறைமதி போன்ற மென்மையான பெண் மீது காதலா? என்று சதீஷால் நம்பவே முடியவில்லை.
இருவரின் கதையை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்ட சதீஷோ, “உனக்கு கொஞ்சம் கூட வெட்கமாயில்லையாடா? ஒரு பொண்ண அவ்ளோ சீப்பா நடத்திட்டு இப்போ போய் ச்சை சரி இதெல்லாம் என்கிட்ட சொல்லனும்னு கூட தோணல இல்ல உனக்கு அவ்வளவு தான் நம்ம பிரெண்ட்ஷிப்பாடா?”
என்று எரிச்சலுடன் கடுகடுத்தவன், “அடுத்து என்னடா பண்ண போற? கல்யாணத்த நான் நிறுத்துறேன்”
என்றதும் செழியனோ சட்டென, “கல்யாணத்த நிறுத்த வேணாம்டா என்கிட்ட வேற பிளான் இருக்கு” என்று மர்மமாக புன்னகைக்க சதீஷுக்கோ ஒன்றும் புரியாத நிலை,
“என்னடா என்ன பிளான்?” என்ற சதீஷுக்கு செழியன் கூறிய திட்டத்தில் தூக்கிவாரிப் போட்டது. நெற்றியில் வியர்வை வடிய சதீஷோ,
“இதெல்லாம் பாவம்டா அந்த பொண்ணு வீட்டுல என்ன செருப்பால அடிப்பாங்கடா ஏன்டா இப்டி பண்ணுற?”
என்று விழிக்க செழியனோ, “என்னடா எனக்காக செருப்படி கூட வாங்க மாட்டியா?”
என்று கேட்டபடி விஸ்கியை அருந்தியவனை பாவமாக பார்த்த சதீஷோ, “பேயோட நட்பு வச்ச நாய் என்னைக்கு உருப்பட்டு இருக்கு? சரி என் விதி நாளைக்கு பட்டுப்புடவை எடுக்க போகனும் என்கூட வா”
என்று கூற செழியனோ, “பிறை வருவாளா?” என்றதும் சதீஷோ, “வருவாளா இருக்கும்” என்று கூற செழியனோ,
“என்னடா இப்டி பொறுப்பில்லாம இருக்க நீங்க ரெண்டு பேரும் கதைச்சுக்குறதே இல்லையா? அப்பறோம் எப்பிடிடா கல்யாணம் மட்டும் போனீங்க”
என்று செழியன் தூண்டி துருவ சதீஷோ, “ப்ச், அவளும் நானும் கதைச்சுக்குறது இல்ல எப்பயாவது தேவைன்னா ஒரு மெசேஜ் அவ்ளோ தான் பொண்ணு பார்க்க போன நேரத்துலயே சொல்லிட்டா கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம்
அதுக்கு முன்னாடி பேசி ஹார்ட் பிரேக் ஆகி எதுக்கு தேவையில்லாத மனஸ்தாபம்னு அவ பேசுறதே இல்ல இப்போ தானே புரியுது அவளோட விலகலுக்கு காரணம் என்னன்னு”
என்றதும் செழியனோ அசால்ட்டாக, “ஏதோ புரியாத வயசுல ஒரு சின்ன தப்பு பண்ணிட்டேன் அதுக்கு போய் இன்னும் திருப்பிட்டு திரியுறா
முதல்ல அவங்க அப்பா அம்மா முன்னாடி அம்பி மாதிரி பெர்போர்மன்ஸ் பண்ணி நல்ல பெயரு வாங்கிட்டு அதுக்கு பிறகு இவளை கரும்பா பிழியுறேன்”
என்றதும் சதீஷோ சலிப்பாக, “கொஞ்சமாவது திருந்துடா இன்னும் மேன் ஹேண்ட்லிங் பண்ணுவேன் அந்த பொண்ணு தான் இறங்கி வரணும்ங்குறது ஓவரா இல்ல”
என்று தலையை நீவ செழியனோ, “சத்தியமா இல்ல என்ன மாதிரி பையன் அவளுக்கு கிடைப்பானா சொல்லு”
சதீஷோ, “கிடைப்பான் கட்டாயம் கிடைப்பான் கீழ்ப்பாக்கத்துல தேடினா கிடைச்சே தீருவான்”
என்று கூற செழியன் தான் நண்பனை முறைத்திருந்தான்.
பானுமதியோ தனது பொருட்களையெல்லாம் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருக்க அவளது தாயோ, “பானு மறுபடியும் அவன்கிட்ட போகணுமா? பேசாம வேற ஏதாவது ட்ரை பண்ணி டைவர்ஸ் வாங்கினா என்னடி?”
என்று கேட்க பானுமதியோ, “இவ்வளவு நாள் ட்ரை பண்ணோம் ஏதாவது கிடைச்சதா? இப்போ அவனே இறங்கி வாரான் இதை விட்டா வழியில்ல பார்த்துக்கலாம் ஆறுமாசம் தானே”
என்று பொருட்களை அடுக்க அதே சமயம் அவளது அழைப்பேசி விடாமல் ஒலிக்க அதையேற்றவளுக்கு அப்பக்கம் என்ன கூறப்பட்டதோ முகம் கருத்து போனது.
எல்லோர் முன்னிலையிலும் காட்சி பொருளாக விரும்பாதவள் துரியனிடம்,
“வாங்க கிளம்பலாம்” என்று உடைப்பெட்டியுடன் வந்து நிற்க அதை கையிலிருந்து வாங்கிக் கொண்டவன், “மாமா அத்தை நாங்க கிளம்புறோம்”
என்றபடி அவர்களின் பதிலை எதிர்பாராது வெளியே செல்ல பானுமதி சற்று நெகிழ்வுடன் தான் விடைபெற்றுக் கொண்டாள். காரிலேறியவள்,
“துரியோதன் என்ன இதெல்லாம்? எதுக்காக இப்டி பண்ணுனீங்க?” என்று காட்டமாக கேட்க அவனோ வேண்டுமென்றே,
“என்ன பண்ணுனேன்? நான் ஒன்னும் பண்ணலையே” என்றான் நக்கலாக அவளோ கடுப்புடன்,
“எதுக்காக என் வேலையில கை வைச்சீங்கனு கேட்குறேன்? என்னோட தனி மனித சுதந்திரத்துல தலையிட நீங்க யாரு?” என்று முகம் சிவந்து கேட்க,
துரியோதனனோ நக்கலாக, “என் கூட அதாவது கடத்தல் பண்ணுற என் கூட ஒரு பத்திரிகைக்காரிய வச்சுட்டு வாழுற அளவுக்கு முட்டாள் நானில்ல
சரி உனக்கு வேலை தானே வேணும் என் ஆபிஸ்ல என்னோட பி.ஏவா வேலை செய் என் கூடவே இருக்கலாம் வேவு பார்க்குறேன் பேர்வழின்னு ஐஸ் பெட்டிக்குள்ள விழவும் தேவையில்ல நான் உன்ன காப்பாத்துறேன்னு”
என்று ஆரம்பித்தவன் அவள் காதுக்குள் பச்சையாக எதையோ பேசி வைக்க அவளோ,
“பொறுக்கி எப்படி இப்படியெல்லாம் பேசுற? அசிங்கமா இல்ல உனக்கு” என்று அவள் கொதிக்க அவனோ,
“எதுக்குடி அசிங்கப்படணும் பொண்டாட்டி கிட்ட தானே பேசுறேன் ஊருல போறவ வாரவகிட்டையா பேசுறேன் உரிமையுள்ள உன்கிட்ட தான் பேசுறேன்”
என்றதும் அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு பேசாது அமர்ந்திருக்க அவன் தொடர்ந்து,
“மேடம் சாதாரண புருஷன் பொண்டாட்டியா வாழவோம்னு காண்ட்ரேக்ட் சைன் பண்ணி இருக்கோம் புரிஞ்சுதா? சாதாரண புருஷன் பொண்டாட்டி எப்படியெல்லாம் பேசுவாங்களோ என்னெல்லாம் பண்ணுவாங்களோ,
அதெல்லாம் பண்ணி தான் வாழ போறோம் அதனால சும்மா பிகு பண்ணாம நான் பேசுறத கேட்டு வெட்கப்பட்டு சூடாகி சிவங்க அப்போ தான் வீட்டுக்கு போனதும் ஸ்டார்ட் பண்ணலாம்”
என்றதும் பானுமதியின் முகம் அவனது பேச்சில் அரண்டு போனது. பயத்திலும் கூச்சத்திலும் சிவந்து போனது அவளுக்கும் அவனுக்கும் தாம்பத்தியம் ஒன்றும் புதிதல்ல ஆனால் இரண்டு வருடங்களாக எதிரும் புதிருமாக நீதிமன்றத்தில் வழக்காடியவர்கள் இன்று மீண்டும் மனமொத்த தம்பதிகளாக ஒரேநாளில் மாறுவது எப்படி?
என்ற கேள்வி தான் பானுமதியின் மனதை அரித்தது. என்றால்
சயன் விட்டு சென்ற நிலையில் வேரோடியது போல் நின்றிருந்த ராதிகாவுக்கோ சயந்தன் அருகாமையில் இருப்பது கூட மூச்சடைப்பதை போல் தோன்ற, அங்கிருந்த
சோபாவில் படுத்துக் கொண்டு மகனையும் அவனருகே உறங்குபவனையும் மாறி மாறி பார்த்தபடி இருந்தவளுடைய எண்ணங்கள் பல வருடங்கள் பின்னோக்கி நகரத் தொடங்கியது.
தொடரும்…