அத்தியாயம் 11
கதவைத் திறந்த நேத்ரா தனக்கு முன்னால் இருக்கும் பெண்ணைக் கேள்வியாகப் பார்த்தாள்.
அப்புதியவளோ இவளை பாவமாகப் பார்த்தாள்.
“யாரு நீங்க என்ன வேணும்”
அவளிடம் கேட்டாள்.
“அது கொஞ்சம் உள்ள வரலாமா உங்ககிட்ட பேசனும்”
அப்புதியவள் கூறினாள்.
“என்கிட்ட என்ன பேச இருக்கு நீங்க யாருன்னு கூட எனக்குத் தெரியாதே”
நேத்ரா உதட்டைப் பிதுக்க
“அது நா வந்து அக்ஷரனோட லவ்வர்”
அப்புதயவள் கூற இவள் அதிர்ந்துப் போய் அவளைப் பார்த்தாள்.
“எ..ன்ன சொ..ல்றி..ங்க”
வார்த்தைகள் வேறு திக்கியது அவளால் நம்பமுடியவில்லை.
“உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் உள்ள வரலாமா”
மீண்டும் அப்புதியவள் கெஞ்ச மறுக்க முடியவில்லை இவளால்.
“வாங்க உள்ள”
வழிவிட்டு நின்றாள் அவள் உள்ளே வர.
உள்ளே வந்தவளோ அவளைத் தயக்கமாகப் பார்க்க.
“என்ன பேசனும் சொல்லுங்க அதோட நீங்க அவரோட ல..வ்வ ரா..”
லவ்வர் என்ற வார்த்தையைக் கூட சொல்லப் பிடிக்கவில்லை போல்..!!
“ம்ம் ஆமா நாங்க ரெண்டு பேரும் லவ் பன்னோம் அதுக்கு சாட்சியா என்னோட வயித்துல இப்போ ரெண்டு மாச குழந்த வளருது”
அப்புதியவள் தனது வயிற்றைப் பிடித்துக் கொண்டுக் கூற இவளது தலையிலோ இடி விழாத குறை தான்.
“எ..ன்ன”
கண்கள் கலங்கி முன்னால் இருப்பவளது விம்பம் மறைந்தது ஆனாலும் விழிகளை அழுந்த துடைத்துக் கொண்டு அப்புதியவளைப் பார்த்தாள்.
“ம்ம் ஆமா என்னோட பெயரு ஶ்ரீஜா நானும் அக்ஷரனும் ஒரு வருஷமா லவ் பன்னினோம் இப்போ நா ப்ரக்னட் அதோட அவரு ஏதோ ஒரு சிட்டுவேஷன்ல தான் உங்கள கல்யாணம் பன்னிக்கிட்டாரு இதோ என்னோட ப்ரக்ன்ட்ட கன்ஃபோம் பன்னினது அதோட நானும் அவரும் லவ் பன்னுற நேரம் எடுத்துக்கிட்ட ஃபோட்டோ”
தனது கையில் இருந்த தான் கருவுற்றிருப்பதை உறுதிப்படுத்தும் வைத்தியர் வழங்கிய பத்திரத்தையும்
அக்ஷரன் ஶ்ரீஜாவின் தோளில் தலை சாய்த்து படுத்திருக்க இவள் புன்னகையுடன் அவனது தலை முடியைக் கோதிக் கொடுப்பது போன்ற புகைப்படத்தை நேத்ராவிடம் காட்ட உடைந்தே விட்டாள் அவள்.
இதயத்தினை வாள் கொண்டு வெட்டுவது போல் வலித்தது.
அழுகை அணைக்கட்டை உடைத்துக் கொண்டு வெளிவரும் வெள்ளத்தைப் போல் வெளிவரக் காத்திருக்க உதடுக் கடித்து அழுகையைக் கட்டுப்படுத்தினாலும் விழிகள் கலங்கி கன்னத்தைத் தொட்டது.
எது உண்மை எது பொய் எனத் தெரியவில்லை.
ஆனால் ஶ்ரீஜாவினது கையில் இருக்கும் புகைப்படத்தையே விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதை கையில் வாங்கவில்லை வாங்கத் தோன்றவுமில்லை.
தனக்கானது தன்னை விட்டுப் பிரிந்த உணர்வு.
“ப்ளீஸ் அவர் இப்போ என்கூட பேசுறது இல்ல எனக்காக இல்லன்னாலும் என்னோட குழந்தைக்காக நா அவர்கூட சேர்ந்து வாழனும் நீங்க தான் அதுக்கு ஹெல்ப் பன்னனும்”
கை கூப்பி ஶ்ரீஜா கெஞ்ச என்ன கூறுவதென்றுத் தெரியவில்லை.
அழுகையை தனக்குள் புதைத்துக் கொண்டவள் முகத்தைத் துடைத்துக் கொண்டு அவளைப் பார்த்தாள்.
இவளது பதிலுக்காக அவளும் ஆவலாக அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உண்மையாவே நீங்க அவ..ரோட குழ..ந்..தைய”
வார்த்தைகள் வெளிவரவில்லை கண்கள் வேறு கலங்கிக் கொண்டே இருந்தது.
அவளால் முழுதாகக் கேட்கக் கூட முடியவில்லை.
அவள் கேட்க நினைத்ததை ஶ்ரீஜா புரிந்துக் கொண்டு பேசலானாள்.
“ஆமா என் குழந்த மேல சத்தியமா நா சொல்றது உண்ம”
அவளும் அழுது கொண்டேக் கூற இவள் அவளது வயிற்றைப் பார்த்தாள்.
தனது கணவனது வாரிசு இன்னொரு பெண்ணின் வயிற்றில் நினைத்துக் கூடப் பார்க்கத் தோன்றவில்லை.
அவன் மேல் கோவம் கூட வரவில்லை.
தன் மேல் தான் கோவம் தேவையின்றி இருவரது வாழ்க்கைக்குமிடையில் வந்து அவர்களைப் பிரித்ததை எண்ணி.
“நா அவர்கிட்ட பேசுறேன்”
“உண்மையாவா”
அவள் ஆர்வமாகக் கேட்க தலையசைத்தாள் நேத்ரா.
இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க கதவுத் திறக்கப்படும் சத்தம் கேட்டது.
தனது கணவன் தான் வந்துள்ளான் என்பதை அவனது பிரத்யேக பர்ஃபியூம் வாசம் உணர்த்த விழிகளைத் துடைத்துக் கொண்டு திரும்பினாள்.
அவனும் அவளையும் ஶ்ரீஜாவையும் அழுத்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஶ்ரீஜாவின் கையைப் பிடித்துக் கொண்டு அக்ஷரனுக்கு அருகில் நெருங்கியவள்.
“இவங்க யாருன்னுத் தெரியுதா”
அக்ஷரனிடம் கேட்க அவன் அமைதியாக நேத்ராவைத் தான் பார்த்தான்.
‘நீயே சொல்’
என்பது போல் அவனது பார்வை இருக்க தொடர்ந்தாள் அவள்.
“இவங்க இனி இங்க தான் தங்குவாங்க உங்களுக்கு மனைவியா உங்க குழந்தைக்கு அம்மாவா”
நேத்ரா அக்ஷரனிடம் கூற அக்ஷரனோ கை முஷ்டியை இறுகப் பொத்தி விழிகளையும் ஒரு நொடி மூடித் திறக்க அவனது இப்பரிமாணத்தில் நேத்ரா ஶ்ரீஜாவின் கையை விட்டு விட்டு இரண்டடி பின்னால் நகர்ந்தாள்.
ஶ்ரீஜா தான் இருவரையும் பாவமாகப் பார்த்தாள்.
அக்ஷரன் தலையை ஶ்ரீஜாவின் பக்கம் திருப்பி அவளை அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே.
“நீங்க தான் என்னோட மனைவியா இல்ல என்னோட குழந்தையோட அம்மாவா”
புருவம் உயர்த்தி அவன் ராகமிழுத்து கேட்க அவன் கேட்கும் தோரணையில் ஶ்ரீஜாவிற்கு பதில் சொல்லும் திராணியற்றுப் போனது.
ஶ்ரீஜா நேத்ராவைப் பார்க்க.
“ஆமா”
கூறியது என்னவோ அக்ஷரனின் கையால் தாலி வரம்பெற்றவளே.
“ஆஹான்”
இடது பக்கம் தலை சாய்த்து மார்புக்குக் குறுக்காகக் கைகளைக் கட்டிக் கொண்டு இப்பொழுது நேத்ராவைப் பார்க்க.
எச்சில் விழுங்கிக் கொண்டே அவனது பார்வையை எதிர்க்கொள்ளும் சக்தியற்றவளாக தலையைக் குனித்துக் கொண்டாள்.
“ரைட் நீங்களே பேசி முடிவு பன்னுங்க என்னோட மனைவி யாரு என் குழந்தையோட அம்மா யாருன்னு”
கூறியவள் தோள்களை உலுக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்தான்.
நேத்ரா தான் போகும் அவனையே விசித்திரமாகப் பார்த்தாள்.
ஏதாவது கோவப்படுவான் அல்லது மன்னிப்பு கேட்பான் என எதிர்ப்பார்த்திருக்க அவனோ அவளது எதிர்ப்பார்ப்பிற்கு அப்பாற்பட்டவனாகல்லவா காணப்படுகிறான்..!!
“நா இங்கயே தங்கவா”
ஶ்ரீஜா கேட்க போகும் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள் அவளது கேள்வியில்’ஙே’என விழித்தாள்.
“இல்ல நா இங்கயே தங்குறேனே அப்போ தான் அவரோட மனசு மாறும் சீக்கிரம் என்னைய ஏத்துப்பாரு”
ஶ்ரீஜாக் கூற இவள் விழித்தாள்.
“இல்ல நா அவர்கிட்ட பேசுறேன் நீங்க கெளம்புங்க”
எனக் கூற முகத்தில் ஏமாற்றம் படிந்தாலும் அதை மறைத்து விட்டு புன்னகைத்துக் கொண்டே.
“ம்ம் ஓகே உங்கள தான் நம்பியிருக்கேன்”
நேத்ராவின் கையைப் பிடித்துக் கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேற இவள் என்ன செய்வது எனத் தெரியாமல் கையைப் பிசைந்தாள்.
“அவ வீட்டுல தங்குறன்னு சொன்னதையே உன்னால ஏத்துக்க முடியல நீ எப்பிடி அவங்க வாழ்க்கைல அவ இருக்குறத ஏத்துக்கப் போற இதுல நீயே அவகிட்ட சொல்லுற அவங்ககூட சேர்த்து வைக்குறேன்னு”
மனசாட்சி அவளிடம் எடுத்துக் கூற என்ன செய்வது எனத் தெரியாமல் கையை பிசைந்தாள்.
உண்மை தானே அவள் வீட்டில் தங்குவதாகக் கூறிய போது கூட இவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே.
அவனது வீட்டையே அவளுடன் பங்கு போட மறுக்கும் இதயம் அவனை அவளுடன் பங்குப் போட்டுக் கொள்வதை மாத்திரம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளும்.
பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அவள் அறைக்குள் செல்லவில்லை.
செல்ல தயக்கம் என்பதை விட அவனைப் பார்க்க பயம் என்று தான் கூற வேண்டும்.
ஸோபாவில் அமர்ந்தாலும் மனம் என்னவோ நிலையின்றி தவித்தது தான் உண்மை.
“அப்போ அவங்களும் அந்த பொண்ண காதலிக்குறாங்களா அதான் எதுவும் பேசல்ல போல அந்த பொண்ணோட வயித்துல வளர்ர குழந்தைக்கும் இவங்களா அப்பா”
யோசிக்கும் போதே தலையே வெடிக்கும் போல் தோன்றியது.
கைகளால் தலையைப் பிடித்துக் கொண்டு தலையைக் குனித்தாள்.
எவ்வளவு யோசித்தாலும் அவன் மேல் கோவம் வரவேயில்லை.
இதுவே வேறொரு பெண்ணாக இருந்தால் இவனது சட்டையைப் பிடித்து கேள்வி கேட்டிருக்கும் ‘ ஏன் என்னை ஏமாற்றினாய்’ என ஆனால் அவளால் அவ்வாறு நினைக்கக் கூட முடியவில்லை.
அவளாக தானே அவனிடம் கூறினாள் வேறொரு திருமணம் செய்து கொள் என்று அதற்காகவா??
அல்லது அவன் மேல் அவளறியாமல் வைத்திருக்கும் நம்பிக்கைக் காரணமாகவா??
ஏதோ ஒன்று..!!
“நா என்ன பன்னுவேன் என்னால அவர்கூட சேர்ந்து வாழவும் முடியாது அதுக்காக வேண்டி அவரோட வாழ்க்கையையும் வீணாக்க முடியாது”
இவளது எண்ணங்கள் இவ்வாறே இருந்தன.
சிறிது நேரம் கழித்து அறையில் இருந்து அவன் வெளியே வந்தான்.
நேராக சமயலறைக்குள் நுழைந்தான்.
இவளோ அவனையே விழியெடுக்காமல் பார்த்தாள்.
பார்த்தாளா? ரசித்தாளா? என்பது அவளுக்கே வெளிச்சம்.
அவனது ஒவ்வொரு செயலையும் தன்னையறியாமலோ அறிந்தோ விழிக்குள் நிரப்பிக் கொண்டாள்.
வெங்காயத்தை நீளமாக வெட்டும் அவனது நீண்ட விரல்களாக இருக்கட்டும்.
அவனைப் போல் அடங்காமல் அட்டகாசம் செய்யும் அவனது தலை முடியாக இருக்கட்டும்.
அளவாக ட்ரிம் செய்யப்பட்ட தாடியாக இருக்கட்டும்.
சிக்ரேட் என்பதை சிறிதளவும் புகைக்காத அவனது சிவந்த இதழாக இருக்கட்டும்.
பார்ப்பதற்கு அரிதாக சிரிக்கும் போது தோன்றி மறையும் அந்த கன்னக்குழியாக இருக்கட்டும்.
சிரிக்கும் போதும் முறைக்கும் போதும் விரிந்து சுருங்கும் அவனது விழிகளாக இருக்கட்டும்.
கோவத்தின் போது சிவந்து போகும் அவனது காதுமடலாக இருக்கட்டும்.
அனைத்தும் அவனை ஆணழகனாகவே காட்டியது.
குனிந்து தன்னைப் பார்த்தாள்.
கறுத்துப் போன தோலும், கொழுத்த உடற்வாகையும் கொண்ட தான் எங்கே அவன் எங்கே.
அந்த ஆணழகனுக்கு எவ்விதத்திலும் இந்த அசிங்கம் பொறுத்தமாகாது என எண்ணியவளோ விழிகளை மூடித் திறந்தாள்.
கணவன் மனைவிக்குள் வரக்கூடாத ஒப்பிடுதலைத் தான் அவள் கணக்கச்சிதமாக செய்துக் கொண்டிருந்தாள்.
உருவத்திலும் நிறத்திலும் படிப்பிலும் வசதியிலும் எப்பொழுது கணவன் மனைவிக்குள் ஒப்பிடுதல் வருகிறதோ அன்றே அவர்களது உறவிலும் முறிவு ஏற்பட ஆரம்பித்துவிடும்.
அன்பில் ஒப்பீடு செய்து அவள் அன்பை விட தன் அன்பை அதிகரிக்க வேண்டும் என கணவனும் அவன் அன்பை விட தன் அன்பை அதிகரிக்க வேண்டும் என மனைவியும் நினைத்தால் வாழ்க்கை நன்றாக இருக்குமே அதைத் தான் முக்கால்வாசி பேர் செய்ய மறக்கிறார்கள்.
தேவையற்ற ஒப்பீடுகள் தான் வாழ்க்கையை அழித்து விடும் என்பதை அப்பேதையவள் அறியவில்லையே??
அவள் தன்னைப் பார்த்ததும் குனிந்து அவளைப் பார்த்தது எல்லாம் அவனுக்கு விளங்கினாலும் எதுவும் பேசவில்லை.
அவன் சில மணித்துளிகளை சமைத்த சாப்பாட்டை டைனிங் டேபளில் கொண்டு வந்து வைத்து விட்டு அவளைப் பார்க்க அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இருவரது பார்வையும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க அவனது விழிகளோ அவளது விழிகளுடன் கலக்க விட்டு எதையோ காரிகையவளுக்கு உணர்த்தப் பார்க்க அதை அவள் புரிந்துக் கொண்டால் தானே??
“வந்து சாப்டு”
கூறி விட்டு டைனிங் டேபளில் அமர அவளும் அமைதியாக வந்து அமர்ந்து சாப்பிட்டாள்.
நான்கு வாய் சாப்பிட்டிருப்பாள்.
நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
அவனோ நிதானமாக சாப்பிட்டான்.
பின் தனது குரலை செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.
“நா என்ன சொல்றேன்னா நீங்க அவங்கள காத..லிச்சி..ரு..க்கிங்க அவங்க இப்போ உங்களோட குழ…ந்..தைய”
குரல் கமற தொண்டை அடைத்தது.
மீண்டும் பேச ஆரம்பித்தாள்.
“உங்க குழந்தைய சுமக்குறாங்க நீங்க என்னைய சந்தர்ப்ப சூழ்நிலையால தானே கல்யாணம் பன்னிக்கிட்டிங்க ஆனா உங்க மனசுக்கு விருப்பமான பொண்ணு அவங்க தானே நீங்க அவங்களையே கல்யாணம் பன்னிக்கோங்க”
கூறி விட்டு அவனைப் பார்க்க அவன் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அவள் பேசுவதற்கும் தனக்கும் இடையில் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்ற ரீதியில் இருந்தது அவனது செய்கை.
“அதோட அவங்க தான் உங்களுக்கு பொருத்தமா இருப்பாங்க எல்லா விதத்துலையும் அவங்க அழகும் சரி அவங்களப் பார்த்தா படிச்சிருக்காங்க போல அதனால உங்களுக்குப் பொருத்தமான உங்க மனசுக்கு புடிச்ச உங்க வாரிச சுமக்குற அந்த பொண்ணையே கல்யாணம் பன்னிக்கோங்க நா அத்த கிட்ட பேசுறேன்”
அவள் தலையைக் குனித்து கூறிக் கொண்டு சென்றதால் அவனது கை முஷ்டி இறுகியதைப் பார்க்கத் தவறினாள்.
அனைத்தையும் பேசிவிட்டு அவனைப் பார்க்க அவன் அப்பொழுதும் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு வேளை தான் சொன்னது அவருக்குக் கேட்கவில்லையோ எனக் கூடத் தோன்றியது ஆனால் அதுக்கு வாய்ப்பில்லையே அவனுக்குக் கேட்டிருக்கும் ஆனால் எதுவும் பேசாமல் அமைதி காக்கிறானே.
அவன் கோவப்பட்டிருந்தால் கூட பரவாயில்லை அவனது இந்த நிதானம் தான் பயத்தை வரவழைத்தது.
அவள் அவனது முகத்தையேப் பார்த்திருக்க அவனோ அவளை கண்டுக்காமல் சாப்பிட்டு முடித்து விட்டு எழுந்து சென்றான்.
இவளுக்குத் தான் உணவு உள்ளுக்குள் இறங்க மறுத்தது ஆனாலும் அவன் சாப்பாட்டை வீணாக்குவது விருப்பமில்லை எனக் கூறியதற்காக சாப்பாட்டை முழுவதுமாக சாப்பிட்டு முடித்தாள்.
அவன் அறைக்குள் இருக்க இவள் பல்கணியில் அமர்ந்திருந்தாள்.
பின் இரவும் அப்படியே சென்றது அமைதியாகச் சாப்பிட்டனர்.
இரவு தூங்குவதற்கும் தயங்கிக் கொண்டே அவனது அறைக்குள் நுழைந்தாள்.
அவன் எதுவும் கூறவில்லை.
அமைதியாக எழுந்து வந்தவன் அலுமாரியைத் திறந்தான்.
இவளோ உறங்குவதற்காக போர்வையை கையில் எடுத்துக் கொண்டு அவனைத் தான் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளை நெருங்கியவன் கையில் இருந்த பத்திரத்தை நீட்டினான் இவள் கேள்வியாக அவனைப் பார்க்க.
“இதுல சைன் பன்னு அப்போ தானே என்னோட மனைவியும் என்னோட குழந்தையோட அம்மாவையும் கல்யாணம் பன்னிக்கலாம் அதோட எனக்குப் பொருத்தமான என்னோட மனசுல இருக்குற பொண்ணும் அவ தானே”
கண்களில் கடுமைப் பரவியிருக்க முகமோ இறுகிப் போய் இருக்க விவாகரத்துப் பாத்திரத்தை அவளிடம் நீட்டிக் கொண்டிருந்தான்.
*********
தொடரும்..❤
💜அஷு💜
வித்தியாசமான காதல் கதை தான் இது…
கதை மெதுவாகத் தான் நகரும்..