அத்தியாயம் -12

விதுரன் ரொம்பவே கொதிச்சுப் போனான். கிருத்திகாவும் சங்கரியும் பேசியதைக கேட்டு, அவ அவனை இவ்வளோ சீக்கிரம் பின்னுக்குத் தள்ளிக் கடந்துப் போயிடுவா-னு நம்பக்கூட முடியலே. ‘அவ எப்படி அப்படிப் பண்ணலாம்?’-னு சொல்ல முடியாத ஆத்திரம். அது ஏன்-னு ஒரு நிமிஷம் யோசிச்சிருந்தான்னா பல விஷயம் புரிஞ்சிருக்கும். ஆனா யோசிக்கலே. அவளையே கோபம் குறையாம புலி இரையை பார்க்கற மாதிரி பார்த்தான். “விதுரா… இதெல்லாம் ஒண்ணும் நல்லா இல்லை. நிச்சயம் இல்லை… அலையன்ஸ் டிராப் பண்றோம்-னு சொன்ன அப்புறம் கூட  அந்த பொண்ணையே பார்க்கறது, தேடிப்போய் பேசறது… ம்ம்ஹூம் சரியில்லைப்பா”-னு கடுமையா சொன்னார் வேதமூர்த்தி. அப்பா, “என்னை பத்தி என்னதான் நினைக்கிறீங்க?”-னு அடிக்குரல்லே சீறினான். “நான் என்ன நினைக்கணும்? எதுவுமே நினைக்கலே… நீ நட்பாவே பேசினாலும் உலகம் தப்பாத் தான் பார்க்கும். அதுலேயும் ரியாவுக்கு வேறு வரன் பார்க்கும் போது ரொம்ப தப்பாகும்”-னு சொல்லிட்டுப் போயிட்டார்.

விதுரன் கொதிச்சுப்போய், “உன் கல்யாணம் அந்த அபிஜித் கூட எப்படி நடக்குது-னு பார்க்கிறேன்”-னு மனசுலே சூளுரைச்சான் விதுரன். மதுரியாவை தேடினப்போ, அவ நிகேஷ் கூடவும் விவான் கூடவும் விளையாடிட்டு இருந்தா. அப்போதான் கவனிச்சான். சித்தியும் பையனும் ‘ட்வின்னிங்’-கா டிரெஸ் பண்ணிருக்கிறதை. அவ அழகுலே மெய் மறக்கறதுக்குள்ளே அவளோட கோந்து போட்டு ஒட்டி இருந்த அபிஜித்தை பார்த்தான். அவங்க ரெண்டுப் பேரும் குழந்தைகளோட விளையாடறது அவ்வளோ பாந்தமா இருந்துச்சு. விதுரன் ஒரு நாளும் அப்படியெல்லாம் செஞ்சது இல்லே. அவன் செய்யலேன்னு நினைக்கும் போதே, சுவாதியும் அப்படி இருந்தது அவனுக்கு எரிச்சல் வந்தது. அவனுக்குப் பெண்ணுக்கு ஆண் தான் முக்கியம்… அவ குடும்பம் தான் உலகமா இருக்கணும்-னு நினைச்சான். அவனோட அந்த எண்ணமே சுவாதியையும் நெருங்க விடலே. இங்கேயும் அங்கேயும் மனசளவுலே பேயா அலைஞ்சான். நல்லதையே யோசிக்க முடியாம, ‘கெடுக்கிறேன், அழிக்கிறேன்’-னு எதிர்மறையா யோசிச்சுக்கிட்டுத் திரிஞ்சான்.

ஒரு முடிவு எடுத்துட்டு அவங்களை நோக்கி போனான். “டேய், விவான். இங்கே இருக்கியா? எங்கே எல்லாம் தேடறதுடா உன்னை..”-னு கேட்டுட்டே பக்கத்திலே போனான். “தேட வேண்டாமே.. அவங்க அம்மா தான் ரியா கிட்ட விட்டுட்டு போனாங்க”-னு நமுட்டு சிரிப்போட அபிஜித் சொன்னான். விதுரனுக்கு அவன் மூஞ்சியிலே ஓங்கி குத்தணும்-னு தோணுச்சு. “ம்ம்ம்… நான் அவங்க அம்மாவை பார்க்கலே. எங்கம்மா சொன்னதை கேட்டு தேடினேன்”-னு எரிச்சல் குறையாம சொன்னான். “சங்கரிம்மாவா? அவங்க கிருத்தி அக்காவோடவே தானே இருக்காங்க?”-னு புரியாம கேட்டு அடுத்த ‘பல்ப்’ குடுத்தா மதுரியா. அபிஜித் இடமிருந்து நக்கலான சிரிப்பு சத்தம் வரவும் கோபமானான் விதுரன். மேற்கொண்டு எதுவும் பேசறதுக்கு முன்னாடி, “நிகேஷ் கேக் கட்டிங்குக்கு கூப்பிடறாங்க”-னு ரெண்டு பசங்களையும் கூட்டிட்டுப் போனா ரீனா. அவ போனதும், “என்ன பாஸ்… அட்டெம்ப்ட் வேஸ்டா போச்சு போல.. ரொம்ப கஷ்டப்படாதீங்க”-னு கிண்டலா சொல்லி இன்னும் வெறுப்பேத்தினான் அபிஜித். கொந்தளிக்கிற மனசுக்கு வடிகால் இல்லாம ‘ப்ரஷர் குக்கர்’ மாதிரி சுத்திட்டிருந்தான் விதுரன்.

அதுக்கப்புறம் அவன் கோபத்துக்காக எதுவும் நிக்காம பார்ட்டி நடந்துச்சு. அவளை கடிச்சு குதர்றதுக்கு விதுரனும் சந்தர்ப்பத்தைத் தேடிட்டு இருந்தான். ஒரு வழியா பார்ட்டி முடிஞ்சதுக்கு அப்புறம், ஒவ்வொருத்தரா கிளம்பும் போது, “ரியாம்மா ரிடர்ன் கிஃப்ட் காலி ஆயிடுச்சு. மேலே போய் கொண்டு வர்றியா ப்ளீஸ்?”-னு கேட்டா ஆனந்தியா. “சரி, இரு வரேன்”-னு போனா. இவ கிட்ட பேச சந்தர்ப்பம் பார்த்துட்டிருந்த விதுரனும் அவ பின்னாடி நழுவினான். அதை பார்த்துட்டே அண்ணன் காரனை இழுத்துட்டு ஓடினான் அபிஜித். “டேய் எதுக்குடா இழுக்கறே?”-னு சலிச்சுக்கிட்டான் பரத். “நான் பத்த வைச்சது வேலையை காட்டப் போகுது. அநேகமா இன்னிக்கு பார்ட்டியிலேயே நல்ல சேதி அனவுன்ஸ் பண்ண வேண்டி இருக்கும்”-னு காலரை தூக்கி விட்டுக்கிட்டான் அபிஜித். பரத் அவனை கேவலமா ஒரு பார்வை பார்த்து இடமும் வலமும் தலையாட்டவும், “ஏன் ப்ரோ?”-னு அலுத்துக்கிட்டான். “நீ நினைக்கற மாதிரி அவங்க ரெண்டு பேருமே இல்லேடா அபி. ரெண்டு பேரும் ரொம்ப ஸ்டிராங்”-னு சலிப்போட சொன்னான் பரத். “ஸ்டிராங்னா? லவ் ஃபீலிங் இருக்கு இல்லே? அது இல்லாமலா ரெண்டுப் பேரும் பார்வையிலேயே நூல் விட்டாங்க?”-னு பாய்ஞ்சான் அபிஜித்.

அந்த நேரத்துலேயும் சிரிச்சுட்டான் பரத். “நீ நடக்கறதைப் பாரு. உனக்கே புரியும்”-னு பரத் சொல்லவும், நடக்கறதை மறைஞ்சு இருந்து பார்த்தாங்க. கொஞ்ச நேரத்துலேயே திகில் பரவற மாதிரி இருந்துச்சு. மாடி ஹால்லே ரிடர்ன் கிஃப்ட் எல்லாம் ஒரு கவர்லே போட்டுட்டிருந்தா மதுரியா. அவளோட அழகு கூட அவளுக்கு எதிரான விஷயமா போச்சு விதுரனுக்கு. அவ பின்னாடி நின்னு, “அப்புறம் மேடம்… இவனுக்காகத்தான் என்னை விட்டுட்டியா?”-னு கேட்டான் விதுரன். அவனை அந்த நேரத்துலே அங்கே எதிர்பார்க்காததால அவன் பேச்சு மதுரியாவுக்குத் தூக்கிவாரி போட்டுது. “நீங்களா? சே..”-னு தலையை குலுக்கி, கையை உதறி படபடப்பை அடக்கினா. “நான் தான் விதுரன். நீ கழட்டிவிட்ட, பாவப்பட்ட எக்ஸ் பாய்-ஃப்ரெண்ட்.. நியாபகம் இருக்குல்லே?”-னு நக்கலும் ஏளனமும் வர கேட்டான் விதுரன்.

“எக்ஸ் பாய்-ஃப்ரெண்டு-னு சொன்னப்புறம் எதுக்கு ஞாபகம் வைச்சுக்கணும்? வெல்… நீங்க எக்ஸ் பாய்-ஃப்ரெண்ட் கூட கிடையாது. இன் ஃபாக்ட் எதுவுமே கிடையாது”-னு பதிலுக்கு ஏளனமா பேசினா மதுரியா. “அடேங்கப்பா… யாரும் கிடையாது-னு தான் தெரியுமே.. நான் தான் ஏதோ இருக்கு-னு நினைச்சு ஏமாந்துட்டேன்”-னு விதுரன் சொல்லவும், “அதுக்கென்ன பண்ண முடியும்? ஏமார்றவங்க இருக்கற வரைக்கும் ஏமாத்தறவங்களும் இருக்கத்தானே செய்வாங்க… எல்லாரும் மதுரியா மாதிரி முழுசும் ஏமார்றதுக்குள்ளே சுதாரிக்க முடியுமா?”-னு ஏட்டிட்யூட் கூட்டி பதில் சொன்னா. “ஸோ, ஏமாத்துக்காரின்னு ஒத்துக்கறே?”-னு கேட்கவும், அதை விட வேகமா, “நானா? நீங்களா?”-னு பதில் வந்துச்சு மதுரியா கிட்டே இருந்து. அபிஜித் தான் ‘பே’-ன்னு ஆயிட்டான்.

“என்ன ப்ரோ இது? பொசஸிவ்னெஸ் சேர்த்து வைக்கும்-னு பார்த்தா, கையிலே வாள் இல்லாத குறையா சண்டைப் போடறாங்க”-னு எச்சிலை முழுங்கினான் அபிஜித். “நீ தானே அந்த ஃபாரின் பார்ட்டிக்காக என்னை கழட்டிவிட்டே? இந்த எழவை முதல்லேயே வீட்டுலே சொல்லி இருக்கலாம்லே?”-னு விதுரன் கேட்கவும், “என்ன உளர்றீங்க?”னு சீறினா மதுரியா. “ஆமா அந்த அபியோ குபியோ அவனை கட்டிக்கிட்டு ஃபாரின் போறியாமே?அவனைத் தானே லவ் பண்றே? கர்மம்…. கர்மம்… ரெண்டுப் பேரும் ஃப்ரீ ஷோ காட்டறீங்களே? நீ எல்லாம் துரோகி”-னு விதுரன் வார்த்தைகளால கடிச்சு துப்பினான். மதுரியா அன்னிக்கு நிலைமையிலே கொதிச்சு போனா. அவன் கண்ணோட கண்ணு உத்துப் பார்த்து, அவன்கிட்ட போய் லேசா அவன் கன்னத்தை தட்டினா. ஆனா முகத்துலே எந்த உணர்வும் இல்லே. 

 

மூன்று ஆண்களுமே அவ செய்கையிலே குழம்பிப் போனாங்க. “என்ன?”ன்னு திமிரா ஒத்தப் புருவம் தூக்கினான் விதுரன். “லேசா தட்டினேனேன்-னு பார்த்தீங்களா? கன்னம் சிவக்க பொறி பறக்க அஞ்சு விரல் பதிய பேயறை அறைஞ்சதா நினைச்சுக்கோங்க”-னு சொல்லவும் மூணு பேர்லே யாருக்கு அதிர்ச்சி அதிகம்-னு தெரியலே. அறையே விழுந்திருந்தா கூட வலியும் அவமானமும் கம்மியா இருந்திருக்குமோ என்னமோ-னு நினைக்கறா போல இருந்துச்சு மதுரியாவோட செய்கை.

சீண்டிவிட்ட ஆண் சிங்கம் போல சீறினான் விதுரன். அவன் முகம் அவமானத்தாலும் கோபத்தாலும் கன்றி சிவந்து போச்சு. “ஏய்..”னு உறுமவும், “ஷ்ஷ்ஷ்…”னு பதிலுக்கு சீறினா மதுரியா. பெண் புலி ஆண் சிங்கத்துக்கு பயப்படாதே. “ஐ ஹர்ட்(heard) யுவர் நான்சென்ஸ் ரைட்? நவ் யூ ஹாவ் ஆல் தி ரைட் டு ரிமெயின் சைலண்ட்”-னு ஸ்டார்ட் பண்ணி, “மிஸ்டர் விதுரன். விட்டுட்டு போறது என் பழக்கமில்லே. உங்களோடப் பழக்கம்!! நம்ம ப்ரோபோசலை நான் நிறுத்தலே! நீங்க நிறுத்தினீங்க… ஆனா ரி-ஓபன் ஆனா நான் நிறுத்துவேன். ஒரு பொண்ணு யாரை வேணும்-னா கட்டிக்குவா. ஆனா நம்பிக்கை துரோகியை மட்டும் கட்ட மாட்டா. நானும் தான். நீங்க பச்சை துரோகி. அதனால தான் உங்க புத்தியும் அப்படி இருக்கு. யார் சொன்னா உங்களுக்கு நான் அபியை கட்டிக்கப் போறேன்-னு?” நேருக்கு நேரா மதுரியா கேட்டதும் தடுமாறிப் போனான் விதுரன். “யார் சொன்னா? யாரும் நேரடியா சொல்லலியே? அபியோட பேரே சொல்லப்படலியே? வேறே வரன்-னு தானே சொன்னாங்க? ஓ… வெயிட்… என்னை முகம் பார்த்து துரோகி-னு சொன்னா இல்லே? ஏன்?”-னு பல யோசனையிலே இருந்த விதுரன் பதிலே பேசலே. “யாரும் சொல்லி இருக்கமாட்டாங்க… ஏன்னா அல்ரெடி கல்யாணம் ஆனவனை இன்னொரு வாட்டி கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ல மாட்டாங்க”னு  அசராம குண்டைத்தூக்கி போட்டா மதுரியா.

“மது… நீ… நீ… என்ன சொல்றே?”-னு பேயடிச்ச மாதிரி ஆனான் விதுரன். “ம்ம்ம்… அவனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. உங்க புத்தி ஏன் விது இப்படி போகுது? நீங்களா சரி-னு சொன்னீங்க… அப்புறம் ஒன் இயர்லே வேண்டாம்-னு ப்ரேக் பண்ணீங்க. போகுது-னு பார்த்தா எந்நேரமும் கடிச்சு குதர்றீங்க. என்ன தான் உங்க பிரச்சினை? நீங்களே வேண்டாம்-னு முடிச்சுட்டீங்க. இனி நான் ஃபாரின் போனா என்ன? செவ்வாய் கிரகத்துக்கே போனாலும் என்ன? வை டு யூ ஹாவ் டு கேர் விது?”-னு அழுத்தமா ஆணித்தரமா கேட்டா மதுரியா. “ஏன்னா, நமக்கு கிடைக்காதது, நாம வேண்டாம்-னு சொன்னது எங்கேயும் சந்தோஷமா இருக்கக் கூடாதுங்கற ஆண்களுக்கே இருக்கற வக்கிர புத்தி. நீங்களா விதுரன் இப்படி? நான் கடந்த ஒரு வருஷத்துலே பார்த்த ஆள் இல்லே இது. ஏன் எப்படி மோசமா மாறினீங்க-னு புரியலே. கடந்து போறதுன்னா என்னன்னே தெரியவே தெரியாதா ஆம்பிளைகளுக்கெல்லாம்… இப்படி வைக்கோல் போர் நாயாத்தான் இருப்பீங்களா?”-னு கேட்ட கணம் விதுரன் அவளை ஓங்கி அறைஞ்சான்.

“என்ன திமிரா? யாரைப் பார்த்து பேசறே-னு நினைவிருக்கா?”-னு உறுமினான். நிலைமை கை மீறிப் போகுது-னு அவங்களை நோக்கி போக முற்பட்டான் அபிஜித். அவன் கையை பிடித்து தடுத்து நிறுத்தினான் பரத். “உங்களைப் பார்த்துத் தான் பேசறேன்! வருது இல்லே?? வார்த்தைகள் எல்லை மீறினா கை நீட்டற ஆத்திரம் வருது இல்லே? அதே மாதிரிதான் எங்களுக்கும்… ஏன்? எங்களை எல்லாம் மட்டும் இரும்புலே காய்ச்சு ஊத்தி இருக்கு-னு நினைச்சீங்களா?-னு கன்னத்துலே ஜிவ்வுனு இழுக்கற வலியை கூட பொருட்படுத்தாம சீறினா மதுரியா. “இப்போ கூட என்ன விது? எனக்கு வேறொருத்தர் கூட வாழ்க்கை அமையக் கூடாது. அதானே? அமையாது. அமையவே அமையாது. நீங்க எவ்வளோ பொண்ணு கூட சேர்ந்து இருந்தாலும், நான் இப்படித் தான் இருப்பேன். நீங்க என் மனசுலே ஏற்படுத்தின காயம் அப்படி”-னு விரக்தியா சொன்னா. 

ஒரு நிமிஷம் விதுரன் முகத்துலே மலர்ச்சி, கர்வம், திமிர் எல்லாம் கலந்த சிரிப்பு. “ஸோ… ஃபனல்லி தி கேட் ஈஸ் அவுட் அஃப் தி பேக். நீ என்னை இன்னும் லவ் பண்றே?”-னு அதே சிரிப்போட சொல்லவும் மதுரியா அவனைப் பார்த்து திமிர் சிரிப்பு சிரிச்சா. “பூனைக்கு சூடான பால் சாகிற வரைக்கு ஞாபகம் இருக்கும். அதே மாதிரி தெருவுலே நடக்கும் போது  மிதிக்கக் கூடாததை மிதிச்சாலும் நினைப்பிருக்கும். தலையிலே விழுந்த பறவை எச்சம், மேலே விழுந்த நெருப்பு பொறி… இதெல்லாம் நினைப்புலே இருந்தா அதுக்கு பேரு அன்பு இல்ல காதல்னா சொல்லுவாங்க?”-னு தோளைக் குலுக்கி அவனை அதிர வைச்சா.

“இதுக்கெல்லாம் பேரு வெறுப்பு, ஒதுக்கல், கோபம், இயலாமை.. அதான் உங்க மேலேயும் இருக்கு”-னு சொன்னா மதுரியா. ஒரு நிமிஷம் திகைச்சவன், அப்புறம் கடகடன்னு சிரிச்சான். “இதை நம்பறா மாதிரி பேசி இருக்கணும். ஆனா திமிர் மட்டும் போதும்-னு நினைச்சுட்டே போல. என்ன ஏறக் குறைய ஃபாலோ பண்றே நீ. உன்னை அல்மோஸ்ட் டெய்லி கண்ணால பார்க்கிறேன் நான்… அதை செய்யாம இருந்திருந்தா நம்பி இருக்கலாம்… அப்புறம் நானும் சுவாதியும் சேர்ந்திருக்கறதை பார்த்தா உன் கண்ணுலே ஒரு வலி தெரியுமே… அதுவும் இல்லாம இருந்தா நம்பியிருக்கலாம். அப்புறம் திடுதிப்-னு போன் பண்ணிட்டு ராங் கால்-னு வைக்காம இருந்து இருந்தாலும் நம்பி இருக்கலாம். ஆனா இதெல்லாம் பண்ணியே. அதான் நம்ப முடியலே. இதெல்லாம் கூட விட்டுடலாம்.. நம்ம பழகின ஒன் இயர்… அப்போ உன் கண்ணுலே பார்த்த அன்பு.. அதுக்கு அப்புறம் நம்பக் கஷ்டம் தான்”-னு பேசிட்டே அவன் அறைஞ்ச கன்னத்துலே ஒரு விரலால கோடு இழுத்தான். “அப்போ…. இதெல்லாம் தெரிஞ்சும் பிரியலாம்-னு முடிவு பண்ணீங்களா?”-னு கேட்டா. எவ்வளோ முயற்சி பண்ணியும் குரல் ஆதங்கமா ஒலிச்சுது.

“ம்ம்ம்… பார் மது! என் க்ரேஸ், சார்ம், ஏட்டிட்யூட், ஸ்டேடஸ் எல்லாம் பார்த்து நிறைய பேர் சுத்தலாம், பழகலாம்…. ஆனா எனக்கு ஒத்துவருமா-னு நான் யோசிக்கணும்லே?”-னு அலட்சியமா தோளை குலுக்கிட்டே சொன்னான் விதுரன். அது மதுரியாவோட தன்மானத்தை சீண்டி விட்டுச்சு. கண்ணுலே கனலோட, “ஓ… தேங்க்ஸ்… மிஸ்டர் விதுரன்… உங்க மனசுலே என்னைப் பத்தி இருக்கற நினைப்பை மாத்தவே நான் ஒண்ணு பண்ணப் போறேன். இனி உங்க முகத்துலே முழிக்கவே மாட்டேன்… நீங்க எவ்வளோ முயற்சி பண்ணாலும் உங்களால என்னை பார்க்கவே முடியாது.  அது நான் நினைச்சா மட்டுமே நடக்கும். ஆனா நான் நினைக்க வாய்ப்பே இல்லை. எனக்கு உங்களை மாதிரி ஒரு ஆளை பார்க்கவே வேண்டாம். தேவையில்லை! இந்த ஃபங்க்‌ஷன் தான் நம்ம கடைசி சந்திப்பு. ஸோ…. லாங்… மிஸ்டர் விதுரன்”-னு இறுகிப் போய் அந்த இடத்தை விட்டு நகர்ந்து போனா மதுரியா. “ஹேய், மது. நில்லு… சொல்றதைக் கேளு”…… விதுரனோட குரல் காத்துலே கரைஞ்சு போச்சு.

அபிஜித் ஆடியே போனான். “என்ன ப்ரோ… இவனெல்லாம் என்ன மேக்? லவ் பண்ற பொண்ணை இவ்வளோ நோகடிக்கறான்? அவமானப் படுத்தறான். சே… நல்லவேளை! ரியா இவனை கல்யாணம் பண்ணிக்கலே”-னு பொறிஞ்சு தள்ளினான் அபிஜித். “அவனுக்கு ரியாவோட வேல்யூ தெரியலே. அதுலே ரியா பேர்லேயும் தப்பு இருக்கு. அன்பை காட்டினாத்தான் அன்பு புரியும். இவ உள்ளே அடக்கிக்கிட்டா. ஆனா அவளுக்கு இவன் வேல்யூ தெரியும்”-னு சொன்னான் பரத். “என்ன வேல்யூ? இவன் வேல்யூ பூஜ்ஜியம் தான்”-னு கோபமா சொன்னான் அபிஜித். “இல்லே அபி, விதுரனும் ரியா பார்வையிலே ரொம்ப நல்லவன் தான். ஒருத்தர் மேலே அன்பு வைச்சா உண்மையா இருப்பான். பொறுமை கம்மின்னாலும் பொறுமையா இருக்கற தருணம் சொர்க்கம். அறிவாளி. பொறுப்பானவன்.. பொய் சொல்ல மாட்டான். இப்படி.. இதெல்லாம் ரியா சொன்னாலும், நானும் அக்செப்ட் பண்றேன்”-னு சொன்னான் பரத். “அண்ணா, உளறாதீங்க.. பார்ட்னருக்கு மரியாதை இல்லேன்னா அந்த லைஃபுக்கு எந்த வேல்யூவும் இல்லே. இவன் கிட்ட சிக்கினா ரியா லைஃப்லாங் கஷ்டப்பட வேண்டியது தான். நல்லா பார்த்தீங்களே வரன்-னு. இப்படி ஒரு அரை லூசுக்கு அந்த சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணி வைக்க”-னு தலையில் அடிச்சுக்கிட்டான் அபிஜித்.

பரத் ஒரு பெருமூச்சு விட்டு “ரியா மனசு முழுக்க அவன் மட்டும் தான் இருக்கான்…. அதனால காலம் பூரா தனிமை-னு ஒரு விபரீதமான முடிவை எடுத்திருக்கா.. அது மாறணும்! இல்லே இவன் மனசு மாறணும்! இல்லேன்னா ரியாவோட லைஃபை பத்தி நினைக்கவே பயமா இருக்கு அபி. இன் ஃபாக்ட் இவளோட மனசும் அது போற போக்கும் தான் பாட்டியோட ஹெல்த்தை பாதிச்சிருக்கு. கடைக்குட்டி-னு ரியான்னா பாட்டிக்கும் தாத்தாவுக்கும் உயிர். சுபா அத்தை ஒவ்வொரு நாளும் ரியாவை நினைச்சு அழறாங்க. மாமா ரியாவோட இந்த நிலைமைக்கு தான் தான் காரணம்-னு குற்ற உணர்வுலே தவிக்கறார்.. மொத்தத்துலே யாருமே நிம்மதியா இல்லே”-னு முடிச்சுட்டு ரெண்டுப் பேரும் போனாங்க. அதைத் தற்செயலாக் கேட்ட விதுரன் முகத்துலே ஆழ்ந்த யோசனை.

❤️ Loading reactions...
2 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top