உண்மை நேசம் பொய்யாய் போகுமோ
நாயகன்: முரளி
நாயகி: சரணிகா
கலகலப்பா வெகுளியா இருக்கிற நாயகிக்கும், மேல் நாட்டு வாழ்கை மேல மோகம் இருக்கிற நாயகனுக்கும் நடக்கிற காதலும் அவங்களை சுத்தி நடக்கிற விஷயங்களைப் பற்றிய கதை. காதல் திருமணத்துல முடிஞ்சு குடும்பம் பெருகறது தான் அந்த அன்புக்கு மரியாதையென நம்பற நாயகியும், கல்யாணம் ஒரு பெரும் சுமை, அது காதலையே அழித்துவிடுமென நம்பற நாயகனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க. தன்னோட உண்மை மன நிலையை சொன்னால் நாயகி தன்னை பிரிஞ்சிடுவாளோயென நினைச்சு மறைச்சு பழகிறான். ஒரு நிலையில அவன் எண்ணம் புரிஞ்சு அவனை பிரியற நாயகி வேற கஷ்டங்களை சந்திக்க முற்பட்றா. அந்த கஷ்டங்களை நாயகி எப்படிக் கடந்து வந்தா? நாயகனும் நாயகியும் அவங்க பேதம் மறந்து இணைஞ்சாங்களா? அது தான் மீதிக் கதை!!
படித்து மறக்காமல் தங்கள் விமர்சனங்களைப் பகிர்ந்துக் கொள்ளுங்க!!
நன்றி!!