அத்தியாயம் 12 (USAP)

அத்தியாயம் 12 

 

இங்கு இருட்டு அறைக்குள் அடைப்பட்டு கிடந்த சகுந்தலாவுக்கு வேளை தவறாது உணவு கிடைத்தது. மருந்துகளும் கிடைத்தது. ஆனால் அவரை கடத்தியது யாரென்று கடைசி வரை தெரியவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை,

 

அவ்வப்போது அவரை கடத்தி வைத்திருக்கும் நபர்களுக்கு யாரோ ஒரு பெண் அழைத்து தன் நலத்தை விசாரிக்கிறாள் என்று தெரியும் கடத்தியவர்களை பார்க்கும் போது ரௌடி கும்பல் போலவும் தெரியவில்லை நேர்த்தியான தலைமுடி நடையுடை பாவனை என்பதை பார்த்தவருக்கு இவர்கள் காவலர்களா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

 

இங்கு ராதிகாவுக்கு என்ன தான் பழைய நினைவுகள் கண் முன் தோன்றினாலும் அதை ஒதுக்கி வைத்தவள், “சயந்தா எங்க அப்பாவோட சாவுக்கு நீ கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும்”

 

என்று முனகி கொண்டவள் அவன் ஆழ்ந்த தூக்கத்திலிருக்கும் போது தான் தனக்கு தேவையானதை பெற்றுக் கொள்ள முடியும் என நினைத்தவல் அவர்களது அறையை ஒட்டியிருக்கும் சயந்தனின் அவனது கோப்புகளை பாதுகாப்பாக வைக்க அவன் பயன்படுத்தும் அறைக்குள்

 

மெதுவாக ஓசை எழுப்பாது மெல்ல மெல்ல அடிமேல் அடி வைத்து அவனது கட்டுப்பாட்டிலிருக்கும் பல கோப்புகளையும் பத்திரங்களையும் உள்ளடக்கிய லாக்கர் அறையிலிருக்கும் ஒவ்வொரு கோப்புகளாக புரட்ட,

 

அங்கிருந்த ஒவ்வொரு கோப்புகளையும் வாசித்து பார்த்தவளுக்கு அவள் தொடர்பான கோப்புகள் கூட கிடைத்தது ஆனால் அவள் தேடிய அரசு மற்றும் சயனை இணைக்கும் கோப்புகள் மட்டும் கிடைக்கவே இல்லை.

 

ஆனால் அவள் முயற்சியை கைவிட்டால் இல்லை இருந்தும் அவள் தேடிய கோப்பு மட்டும் கிடைக்கவேயில்லை அந்த அசல் பத்திரங்கள் கிடைத்தால் மட்டுமே அவனை நிரந்தரமாக தூக்கி சிறைக்குள் வைக்க முடியும் சாயந்தனை மட்டுமல்ல

 

அவளது அண்ணன் அரசு மற்றும் அவனது தந்தை சத்யசீலனையும் தான் அவளை பொறுத்த வரை அவர்கள் அத்தனை பேரும் அவளது இழி நிலைக்கு காரணம் தானே அவளது கண்களில் வன்மம் மின்னியது.

 

மனத்துக்குள்ளோ, ‘உங்க ஒருத்தனையும் விட மாட்டேன்டா’ என்று நினைத்தவளுக்கு என்ன செய்வதென்றே புரியாத நிலை கோபம் வந்தது வெறி வந்தது சயந்தனை எதிர்க்க வேண்டும் ஆனால் சமயம் சந்தர்ப்பம் என அத்தனையும் அவளுக்கு சாதகமாக அமைய வேண்டுமே

 

ஆனால் இப்போது அவள் இருப்பதோ அவனது கட்டுப்பாட்டில் அவள் செய்வது ஏதாவது தவறாகி போனால் சயந்தன் சற்றும் தயங்காது அவளை இங்கேயே உயிருடன் புதைத்து விடுவான். என்பதை அவளும் அறிவாள்.

 

அவனுக்கு ஈவிரக்கமில்லை பாசமில்லை காதலில்லை ஒரு மனிதனிடம் இருக்க கூடிய அடிப்படை மனிதாபிமானம் கூட இல்லை என்பது தான் நிதர்சனமான உண்மை,

 

அவனது சாம்ராஜ்ஜியத்தை அவன் உயிரை கொடுத்து கட்டியெழுப்பிய ராஜ்ஜியத்தை காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்வான் என்பதை இப்போது தான் தெளிவாக கூறினானே,

 

எதையெதையோ அலைப்புறுதலுடன் நினைத்தபடி கையில் அவள் தொடர்பான கோப்பை வைத்திருக்க அதை யாரோ பறித்தெடுப்பதை உணர்ந்தவள் சட்டென பின்னால் திரும்பி பார்க்க அங்கு நின்றிருந்தது என்னவோ சயந்தன் தான்

 

ஒற்றை புருவமுயர்த்தியபடி, “வாவ்! பொண்டாட்டி இத்தனை பைல்ஸ்ல உன் பைல கண்டுப்பிடிச்சிருக்க அமேஸிங் ஆனா பாரு நான்லாம் தூங்கும் போதே காலாட்டிக்கிட்டே தூங்குறவன் என்கிட்டயே விளையாட்டு காட்டுற பாரு ஐ லவ் இட்”

 

என்றதும் ராதியின் முகம் அஷ்டகோணலாக சுருங்க அவனோ மேலும் நக்கலாக சிரித்தபடி,

 

“இங்கே பாரு நான்லாம் பிழைப்புக்கு லண்டன் போனவன் உள்ளுக்குள்ள பக்கா பொறுக்கி என்ன கொண்டுப்போய் குழிக்குள்ள வைக்கணும்னா அதை நான் தான் முடிவு பண்ணனும்”

 

என்று கூறிவிட்டு கோப்புகளை உரிய இடத்தில் வைத்தவன், “வா போகலாம்” என்று அவள் தோளில் கைபோட்டவன் தன்னுடன் இறுக்கி அணைத்துக் கொண்டு அவள் காதுக்குள்,

 

“இனி இந்த ரூமுக்குள்ள வந்தா நீ பிணமா தான் திரும்புவ எனக்கு யாரை பத்தியும் எதைப்பத்தியும் கவலைக் கிடையாது”

 

என்று அழைத்துச் செல்ல ராதியின் மூளையோ அடுத்து என்ன செய்யலாம் என்ற சதி திட்டத்தை தீட்ட தொடங்கியது.

 

 

இப்போது கண்டிப்பாக ராதிக்கு ஒரு அழைப்பேசி தேவைப்பட்டது. அது அன்று அவளிடம் கதைத்த, சயந்தனை பழிவாங்க திட்டம் தீட்டிக் கொடுத்த அப் பெண்ணிடம் அவள் சயந்தனின் ஆய்வகத்தில் இருப்பதை கூற வேண்டுமென ராதிக்கு உள்ளுக்குள் ஒரு எண்ணம் துடி துடித்தது.

 

அதிலும் முக்கியமாக அந்த தொலைப்பேசியில் இணைய வசதி தேவை அவளுக்கோ தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் அவர்களுக்கான சந்தர்ப்பம், அதாவது அவர்களின் விடுதலைக்கான சந்தர்ப்பமாக அமையும் என்பதே பெரும் சவாலாக இருக்க எவ்வாறு தகவல் கொடுப்பது என்று யோசித்தபடி தவித்துக் கொண்டிருந்தாள்.

 

அவளுக்கு இந்த இடம் புதிது எல்லாம் கிடையாது ஆனால் சில சில இடங்கள் புதிதாக இணைக்கப்பட்டிருப்பதும் புதிய தொழிநுட்ப வசதிகளுடன் மெருகேற்றப்பட்டிருப்பதும் தெரிந்தது.

 

ஏன் இப்போது அவர்கள் தங்கியிருக்கும் அறையில் தான் சயந்தன் பல முறை அவளை மிரட்டி கூடி இருக்கிறான் இன்னும் பல சொல்லக் கூட முடியாத வெளியுலகத்துக்கு தெரிய கூடாத பல ஆய்வுகளையும் நடத்தி இருக்கிறான். அந்த அறைக்குள் வந்தாளே ராதிகாவின் உடல் பெரும்பாலும் மயக்கத்தில் இருக்கும்.

 

பல இடங்களில் ஊசி குத்திய அடையாளங்களும் இன்னும் மறையாமல் தழும்பாக அவள் உடலில் கிடக்கிறதே, பலமுறை ரத்த மாதிரி பரிசோதனை பலமுறை மருத்துவ பரிசோதனை என்று அவள் பெண்மை மென்மை விளையாட்டுத்தனம் என அனைத்தையுமே குழி தோண்டி புதைத்த இடம் இது தானே,

 

இங்கு சயந்தனின் ஆசை காதலியாக மனைவியாக வலம் வந்தாலும் சில இடங்களுக்கான அனுமதி சயந்தனுக்கு மட்டுமே உண்டு என்பது தான் நிதர்சனமான உண்மை அப்படியிருக்கையில் இவளோ அவனது குழந்தையின் தாய் முன்னாள் ஆராய்ச்சி பொருள் மட்டுமே அவளால் எப்படி பிரதான பாதுகாப்பு அறைகளுக்குள் நுழைய முடியும்.

 

ஆனால் எப்படியாவது நுழைய வேண்டும்., நுழைந்தே ஆகவேண்டும் ஆனால் எப்படி என்று தான் அவளுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. கிட்டத்தட்ட நாற்பத்தியெட்டு மணி நேரத்துக்குள் அத்தனையும் செய்தாக வேண்டும்.

 

அப்பெண் கூறியது போல் சயந்தன் வந்தான் அவளை சிறையும் பிடித்தான். இப்போது முழு காரியமும் அவள் கையில் தான் உள்ளது. எப்படியாவது சயந்தனை தன் பிடிக்குள் கொண்டு வர வேண்டும். ஆனால் எப்படி அவள் திடீர் மாற்றத்தை அவன் சந்தேகிக்க மாட்டானா?

 

கண்டிப்பாக சந்தேகிப்பான்., ஆனால் அவனிடம் கண்டிப்பாக ஒரு பலவீனம் உண்டு அது ராதிகாவின் உடல் என்று அவளது அழகு இளமை என்று ராதிகா கணக்கு போட்டாள். அதை எடுத்துக் கொள்ள தானே கடத்தி வந்தான்.

 

என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே சயந்தனோ அவள் கூந்தலை ஒதுக்கி கழுத்தில் முகம் புதைத்து வாரி வாரி முத்தங்களை வழங்கியபடி,

 

“என் உயிர் வேணுமா? எடுத்துக்கோ நான் ஜெயிலுக்கு போகனுமா? சந்தோஷமா போறேன் ஒரே ஒரு முறை பொய்யாவோ உண்மையாவோ அந்த கண்ணுல காதலை தேக்கி என் கூட அப்டி ஒரு கூடல் அப்டி ஒரு தாம்பத்தியம் வேணும் முடியுமா?”
 

என்று கேட்க ராதிகாவோ அவனை கோபமாக ரௌத்த்திரம் பொங்க பார்த்திருந்தாள்.

 

அகமேந்தியோ கண்களில் கண்ணீர் தடம் கோடாக வழிய அமர்ந்திருந்தாள். நேரங்கள் கடந்தது, மணித்தியாலங்கள் நொடிகளாக கரைந்தன கொஞ்சம் கொஞ்சமாக தான் அரசுவுக்கு மீண்டும் சொந்தமாக உடைமையாக மாறும் காலம் வருகிறதோ என்ற எண்ணம் அகமியை வாட்டியது.

 

அதே சமயம் அவளது அறைக்குள் நுழைந்த அகச் செழியனோ, “என்ன பண்ணிட்டு இருக்க? அகி உனக்கு ஏதும் பைத்தியம் பிடிச்சிருக்கா?”
 

என்றதும் அகமியோ, “ஆமானு தான் வச்சுக்கோயேன் அங்க அந்த ராட்சசன் கிட்ட ரெண்டு உயிர் படாத பாடு பட்டுட்டு இருக்கு அதை காப்பாத்துறதுக்கோ அவங்கள பத்தி துப்பு துலக்கவோ டீப்பார்ட்மெண்டில ஒருத்தரால கூட முடியல அதான் நான் இறங்கிட்டேன் இந்த முறை கண்டிப்பா சயந்தன் வருவான் அதும் ராதியோடையே வருவான் எனக்கு நம்பிக்கை இருக்கு”

 

என்று கூறியபடி அகமேந்தி புது மணப் பெண்ணாக காதில் ஜிமிக்கியை மாட்ட செழியனோ பெருமூச்செறிந்தபடி,

 

“சரி அப்டி வரலைன்னா என்ன பண்ணுறது? அதுக்கு பேக் அப் பிளான் ஏதும் வச்சிருக்கியா?”

 

என்றதும் நக்கலாக சிரித்த அகமியோ அவன் கையில் ஒரு சிவப்பு நிற கோப்பு மற்றும் சில பென்ட்ரைவ்களை கொடுத்து, “அப்படி அவன் வரலைன்னா அரெஸ்ட் வாரண்ட் இஷு பண்ணு தேவையான ஆதாரங்கள் இருக்கு மிஸ்டர் அரிச்சந்திரனும் சத்யசீலனும் அரெஸ்ட் பண்ணபட்டா கண்டிப்பா பதுங்கி இருக்க புலி கண்டிப்பா வெளிய வரும் ஐயம் டேம் ஸூர்”

 

என்றபடி வளையல்களை அணிந்துக் கொள்ள அகச்செழியன் அதற்கான வேலைகளை செய்ய தொடங்க இங்கு அரசுவோ மணமகன் அறையில் ஜவ்வாதும் மரிக்கொழுந்தும் மணக்க மணக்க வெள்ளை வேஷ்டி சட்டையில் தயாரானபடி

மீசை தாடியை அழகாக சீவி முறுக்கி விட அச்சுதனோ,

 

“நீ இப்டியே முறுக்கி விடுறதுல இரு என்னைக்கு எல்லாம் அப்படியே முறுக்கிட்டு போக போகுதோ?”

 

என்றான் ஒரு மாதிரியான குரலில் அதற்கு அரசோ, “இங்கே பாரு நான் வருங்கால முதல்வர் இன்னைக்கு ஜெயிலுக்குள்ள போனாலோ இல்ல என்னோட அப்பா போனாலோ அதை எப்படி ஓட்டா மாத்துறதுன்னு எனக்கு தெரியும் அடுத்த வருஷம்

 

வரப்போற எலெக்க்ஷன்ல கண்டிப்பா நான் ஜெயிப்பேன் சி.எம் உம் ஆவேன் ஏன் நீ உன் மச்சான் அப்பறோம் எனக்கு வேண்டப்பட்ட எல்லாரும் எனக்கு சல்யூட் அடிப்பீங்க”

 

என்று திமிராக கூற அச்சுதனோ, “நீ மட்டும் சி. எம் ஆனா என்ன உன் பாடி கார்ட்டா சேர்த்துக்குறீயா அண்ணா?”

 

என்று கொஞ்சி கெஞ்சி பார்க்க அரசோ, “ம்ம் முடியாது நீ என்ன என்னோட பொண்டாட்டியா கூட வச்சுக்கிட்டு சுத்த அப்டி முதல்வர் ஆனா கண்டிப்பா உன் அண்ணிய கூட்டிட்டு தான் சுத்துவேன்”

 

என்று கண்ணடித்து சிரிக்க அச்சுதன் தான் இப்போது குழம்பி போனான்.

 

                                     தொடரும்…

 

 

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top