அத்தியாயம் 14

சரோஜா பாக்கியம் இருவருக்கும் ஷிவானியை ருத்ரனிற்கு திருமணம் செய்து வைத்து விட ஆசை….இன்று ருத்ரனிடம் திருமண விசயத்தை பேசி விட வேண்டும் என உறுதியோடு இருந்தார்….. மதியின் வருகையால் மனதில் முளைத்த பயம்….சமீப நாட்களாக ருதரனின் கோப முகம் அவருக்கு ஏதோ தவறாக பட்டது…. அதனாலே ருத்ரன் ஷிவானி திருமணத்தை நடத்தி விட வேண்டும் என ஒரு தீவிரம் தெரிந்தது அவரிடத்தில்

சரோஜா  பாட்டி ஷிவானி இந்த வீட்டு மருமகள் என  அடிக்கடி பேசி கொள்வது ஏதோ கேலி பேச்சாகவே பட்டது ருத்ரனிற்கு….அதனால் அதை பெரிது படுத்தாமல் கண்டு கொள்ளாமல் சென்று விடுவான்….அவன் மனதில் எந்த பெண் மீதும் பெரிதாக ஈர்ப்பு ஏற்படவில்லை….ஷிவானி சிறுவயது முதல் தங்களுடன் வளர்ந்ததால் என்னவோ அவனுக்கு ஷிவானியை மகிழினி போல் தான் பார்க்கத்தான் தோன்றியது

ஆனால் ஷிவானிக்கு ருத்ரன் மீது ஒரு வித அன்பு இருக்க தான் செய்தது.…

ருத்ரனை திருமணம் செய்தால் தன் தாய் நணபர்களை பிரிய வேண்டியதில்லை…. யாருகாகவும் தன் சுபாவத்தை மாற்றி கொள்ளவும் தேவை இருக்காது என எண்ணியவள் ருத்ரனை திருமணம் செய்யலாம் என்ற மனநிலையில் தான் அவள் இருந்தால்…

ருத்ரன் வருவதை கண்ட சாந்தினிக்கு சமீப காலமாக மகனின் திருமணத்தை காண வெகு ஆசை கொண்டார் 

 மகிழினி போல ஷிவானியை  மகளாக  பார்த்தவரால் மருமகளாக பார்க்க முடியவில்லை 

வெண்மதியை பார்த்ததில் இருந்தே  அவருக்கு  மதியை பிடித்து போனது மருமகளாக வந்தால் நன்றாக இருக்குமே என்று கூட யோசித்தான் 

ஆனால் இது மட்டும் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று மனதில் தோன்றிய ஆசையை குழி தோண்டியே புதைத்து விட்டார் 

உள்ளே வந்த ருத்ரனிடம் 

“மாமா”என ஷிவானி அழைத்தால்

“ம்ம் என்ன” என்றான் ருத்ரன் ஏதோ யோசனையுடன்

“இன்னிக்கு வேலை அதிகமா….சாப்பிட வார்றீங்களா இல்ல நான் எடுத்துட்டு வரட்டுமா” என்றாள் சிரித்து கொண்டு 

அவள் செய்கையை வித்தியாசமாக பார்த்தவன் யோசனையயுடன் “அதுக்கு ஏன் இப்படி பல்லை காட்டி கிட்டு இருக்க” என்றான் 

“அது இல்லை மாமா….நீங்க ஒரு வாரமா ரொம்ப கோபமா இருந்தீங்க…அதான்” என இழுத்தவளை முறைத்தான்

“அதுக்கு” குரலில் கடினம் ஏறியது 

“அம்மாச்சி தான் உங்க கோபத்தை…”

கடவுளே இந்த அப்பத்தாவை என்ன செய்றது  என நெற்றியை நீவி கொண்டவன்  “வொர்க் டென்சன் அதான்…. நவ் ஐ ஆம்  ஓகே  நீ போ” என்றான் 

“அப்ப சாப்பிட வரலாமே” என்றாள் சினுங்கியயபடி

“ஷிவானி….  நீ போ நான் ஃப்ரஸாகிட்டு வர்றேன்” என அழுத்தமாக கூறி நகர போனவனை திரும்ப  “மாமாஆஆ” என ராகமாக அழைத்தாள் 

தலையை மட்டும் திருப்பி “என்ன்ன” என்றான் கடுப்புடன்

“நான் துண்டை…”

“ஸ்டாப் இட் ஷிவானி….இது என்ன புது பழக்கம்…. அவங்க சொன்னாங்க இவங்க சொன்னங்கன்னு என் பக்கத்துல வந்தேன்னு வை அவ்வளவு தான் பார்த்துக்க…நீ எப்பவும் உன் லிமிட்லயே  இரு” என கர்ஜித்து விட்டு மாடியேறி சென்று விட்டான் 

ஷிவானியோ தன் தாயிடம் கோபமாக சென்றவள் “எல்லாம் உங்களாள தான் எப்பவும் மாமா என்னை இந்த அளவு திட்டுனதே இல்லை… போங்க உங்க பேச்சை கேட்டு பேசுனேன் பாருங்க என்னை சொல்லனும்”என அழுதவளை

“திட்டிடானா”

“ம் ரொம்ம்ப”என்றாள்

“சரி விடு… உரிமை உள்ளவங்க மேல தான் கோபம் வரும்….நான் அவன் கிட்ட பேசறேன்” என சரோஜா ஷிவானியை சமதானபடுத்துவதை பார்த்த சந்தோஷ் 

“நல்ல குடும்பம்டா” என தலையை உலுக்கி கொண்டான் 

கிட்சனில் இருக்கும் தன் அன்னையிடம் சென்றவன் நீ  “எப்படிம்மா இங்க வந்து சிக்கின ”

“என்னடா என்ன ஆச்சு” என்றார் வேலை பார்த்து கொண்டே 

நடந்ததை கூறியவன் “எனக்கு என்ன ஜோசியமாடா தெரியும்….நானும் எல்லாரை போல தான் கல்யாணம் பண்ணி வந்தேன்….. என்ன பண்றது எல்லார் வீட்டிலும் நடப்பது தானே விடு” என்றார் பாக்கியத்தை பார்த்து கொண்டே 

“ஏன்ம்மா உங்களுக்கு ஷிவானி மருமகளா வருவதில் இஷ்டமில்லையா”என்று அவர் மனதில் இருப்பதை யூகித்தவனாக  மெதுவாக கேட்டான்

“ருத்ரனிற்கு ஓகேனா எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை வாழ போறது அவங்க தானே பிடிக்கலைனா கட்டாயப்படுத்த கூடாதுல இதை உன் அப்பத்தாவும் அத்தையும் புரிந்து கொள்ளனுமே”என்றார் கவலையான குரலில் 

சிறிது நேரத்தில் ருத்ரன் கீழே வந்து அனைவருடன் உணவு மேஜையில் அமர்ந்தான் 

பாக்கியம் தன் அன்னைக்கு ஜாடை காட்டவும் இருடி  அவன் இரண்டு வாய் சாப்பிடட்டும் என்றார் சைகையில் 

“என்ன அப்பத்தா என்ன விசயம்” என்றான் சாப்பிட்டு கொண்டே

“அது உன் கல்யாண விசயமா தான் ”

“அதுகுள்ள பொண்ணு பார்க்க ஆரம்பித்து விட்டீங்களா” என்றான் ஒன்றும் தெரியாதவனாக

சரோஜாவோ வாயேல்லாம் பல்லாக “எதுக்கு வெளியே பார்த்துகிட்டு அதான் ஷிவானி இருக்காலே ” என்றார்

“ஷிவானியா…. என்ன அப்பத்தா ஷிவானியும் மகிழினியையும் நான் வேறயா பார்த்தது இல்லை….எனக்கு மகிழினி எப்படியோ ஷிவானியும் அப்படி தான்” என்றான்

“அத்தை பெண் எப்படி தங்கை போல் தெரிவா” என கத்தினார் பாக்கியம்

“எனக்கு இஷ்டமில்லை…இதை பற்றி பேச வேண்டாம்” என்றதும் ஷிவானி நாற்காலியை தள்ளிவிட்டு கோபமாக அழுது கொண்டே அங்கிருந்து சென்று விட்டாள்

“அய்யோ என் பொண்ணு…. அப்பா இல்லாத பெண்ணை இப்படி தான் கஷ்டபடுத்துவியா ருத்ரா”என்றார் பாக்கியம் பெருங்குரலேடுத்து அழ ஆயுத்தமாக

“பாக்கியம் நீ போய் ஷிவானிக்கு சாப்பாடு கொண்டு போ” என்றார் கிருஷ்ணன்

“ஆமா இப்ப அவ சாப்பிடலன்னா என்ன செத்தா போய்டுவா எல்லாம் அந்த மதி…”என பேச வந்தவரை 

“பாக்கியா அமைதியா இரு” என்றார் சரோஜா

“இப்ப அவனை ஏன் அத்தை அவனை கப்பல் பண்றீங்க வாழ போறது அவங்க தானே அவங்களே முடிவு எடுக்கட்டும்”என்றான் சந்தோஷ் 

“வாயை மூடு சந்தோஷ்”என்றார் சரோஜா 

“வாயை மூடிகிட்டு எப்படி சாப்பிடறது அப்பு டார்லிங் சாப்பாடு வேற இன்னிக்கு டேஸ்ட் அள்ளுது அதனால…”

ஷப்பா இவன் வேற என சலித்து கொண்டான் ருத்ரன்

“இங்கே பாரு ருத்ரா யாரும் பிடிச்சா கல்யாணம் பண்றாங்க… நான்லாம் உங்க அப்பா பிறந்த பின்னாடி தான் உன் தாத்தா முகத்தையே பார்த்தேன்” என்றார் சரோஜா பாட்டி

ஹம்ம்….  அதனால தான் தாத்தா சீக்கிரமே சொர்க்கத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு எஸ்ஸாகிட்டார் என முனுமுனுக்க  அதை கேட்ட மகிழினியோ சிரிப்பை அடக்கி கொண்டாள் 

“என்னாடா அங்க முனுமுனுப்பு” என்றார் சரோஜா பாட்டி

“ஹிஹிஹி ஒன்னும் இல்லையே….  அது தாத்தா பாவம்னு தான் சொன்னேன்….. நீங்க பார்க்காம இருந்து இருக்கலாம்னு சொன்னேன் அப்பு டார்லிங்”என கூற 

“உன்னை அப்புறம் வச்சுகறேன் இரு” என்றவர் ருத்ரனிடம்

“உன் அம்மா உங்க அப்பாவை பிடித்தா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க நாங்களா பார்த்து தானே கல்யாணம் பண்ணி வைத்தோம்…… அதுபோல நீயும் கல்யாணம் பண்ணிக்க சந்தோஷமா இருப்ப ருத்ரா” என்றார் சரோஜா

“நான் ஒன்னும் கல்யாணம் வேணாம்னு சொல்லலியே அப்பத்தா ஷிவானி தான் வேணாம்னு சொல்றேன்” என்று சொல்லியபடி கை கழுவி கொண்டு எழுந்து நின்றான் 

“என்னால ஷிவானிய என் மனைவியா பொருத்தி பார்க்க முடியல…. அதனால இனி இதை பற்றி யாரும் பேச வேண்டாம்…. நீங்க இதை பற்றி எத்தனை தடவை கேட்டாலும் என்னோட பதில் நோ தான்” என உரக்க கூறி வேகமாக மாடியேறி சென்று விட்டான் ருத்ரன்

“அப்பத்தா நீங்க அந்த காலத்து ஆளுங்க… இந்த காலத்துல பிறந்து இருந்தா இப்படிலாம் நீ பேசமாட்ட இது ஜென்ரேஷன் கேப் பாட்டி உனக்கு சொன்னா புரியாது” என்றான் சந்தோஷ்

“அய்யோ நீ வாய மூடுடேன்டா”என்றார் சரோஜா

“நீங்களும் வாயை மூடு வாயை மூடுன்னு சொல்லிட்டுதான் இருக்கீங்க ஆனா பாருங்க அவன் வாய் மூடவே மாட்டேங்குது” என்றார் பாக்கியம் ஆத்திரம் மேலிட

“அவன் சொல்றதும் சரிதான்மா பிடிக்கலைன்னு சொல்றவங்கள கட்டாய படுத்த கூடாது…. ஷிவானிக்கு வேற மாப்பிள்ளை பார்க்கலாம்” என்றார் கிருஷ்ணன்

இதற்கு மேல் என்ன பேசுவது என அவரும் சாப்பிட்டு கை கழுவி சென்றார்.

பால்கனியில் அமர்ந்து இருந்த ருத்ரன் வலுகட்டாயமாக மதியை காரில் ஏற்றி அவளை வீட்டில் இறக்கி விட்டுட்டு தான் வீட்டிற்கு வந்தவன் மனதிலோ பலவித சஞ்சலம்… 

மதி மீது தனக்கு ஏறபடும் ஈர்ப்பு காதலா இல்லை அன்று அவள் அழுததினால் வந்த பரிதாபமா என்று யோசித்தவனுக்கு ஷிவானி கூட அழுது இருக்கிறாள் ஆனால் அவளிடம் ஆறுதலாக  பேசியது  இல்லையே

மதி மீது தனக்கு தோன்றும் உணர்வு…. தன் திருமணம் பற்றி பேசிய போது அவன் மனதில் மதி முகம் வந்து போனதில் தெளிவாக புரிந்தது டு யூ லவ் ஹேர் காதலிக்கிறியா ருத்ரா என தன்னையே கேட்டு கொண்டான் அவன் இதழ்கள் விரிந்து கொண்டது 

ஆனால் அவளை பற்றி தனக்கு எதுவுமே தெரியாதே கேட்ட மைன்ட் வாய்ஸிடம் தெரிஞ்சுகலாம் இப்ப என்ன கூறி கொண்டவன் அழைத்தது என்னவோ மதியை பற்றி விசாரிக்க சொன்ன தன் நண்பனுக்கு தான் அவன் இன்னும் சுற்றுலா முடிந்து வரவில்லை வந்ததும் விசாரிக்கிறேன் என சொன்னதும் 

போனை மேஜை மீது வைத்து விட்டு கட்டிலில் தலைக்கு அடியில் கைவைத்து படுத்து ஃபேனை பார்த்து கொண்டே படுத்து இருந்தான் ருத்ரன்

என்னை தாலாட்ட வருவாளோ

நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ

தங்க தேராட்டம் வருவாளோ

இல்லை ஏமாற்றம் தருவாளோ

தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா

மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா

கொஞ்சம் பொரு கொலுசொலி கேட்கிறதே

பாடி கொண்டே சந்தோஷ் வர இவன் தெரிஞ்சு பாடுறானா இல்லை தெரியாம பாடுறானா ஒன்னும் புரியலையே என மனதிற்குள் சலித்தவன் 

“இப்ப இந்த பாட்டு அவசியமா” என்றான் சிடுசிடுத்த குரலில்

“ஏன் இந்த பாட்டுக்கு என்ன நல்ல லவ் சாங் தானே இல்ல வேற பாட்டு பாடவா ”

“ஏன் நைட் டைம்ல நாய் நரிலாம் நம்ம வீட்டு வாசல்ல வந்து ஒப்பாரி வைக்கனுமா பேசாம தூங்கு வீட்ல வயசானவங்க இருக்காங்க”

“நீ யாரயாவது….என வார்த்தையை முடிக்காமல் இழுக்க

” என்னடா” என பதறி விட்டான் 

“யார் மேலேயோ கோபமா இருக்கியான்னு கேட்டேன் ப்ரதர்” 

“ஓஹ்..இல்லை ஏன் கேட்கிற” என்றான் அவனுக்கு எதுவும் சந்தேகம் வந்து இருக்குமா என கேட்டான் ருத்ரன்

“இல்ல சும்மா தான் கேட்டேன்… நீ இன்னும் தூங்கல எப்பவும் 10 மணிக்குலாம் தூங்கிடுவ….ஆமா உன் ஃபேஸ்ல என்ன ஏதோ…”

“லைட் ஆஃப் பண்ணிட்டு படுடா” என படுத்து விட்டான் ருத்ரன்

தொடரும்.…

 

 

 

 

❤️ Loading reactions...
0 Comments
Oldest
Newest Most Voted
error: Content is protected !!
Scroll to Top